Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாலு சத்யாபழைய சோறு

News

பழைய சோறு ( விகடன் )

காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்... `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று  `பழைய சோறு, கம்பங் களிதான்... வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது.  

`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’ `ஐஸ் பிரியாணி’... என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உணவு, அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. `மதியம் வடித்து, மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றிவிடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும்’ என்று இதன் எளிய செய்முறையை விளக்கலாம்தான். `இதுகூடத் தெரியாதா எங்களுக்கு?’ என்று சிலர் கோபப்படவும்கூடும். ஆனால், எதைச் சொன்னாலும் செய்முறை விளக்கம் கேட்கும் இளைய தலைமுறைக்கு, பீட்சா, பர்கரிலேயே காலம் தள்ளிக்கொண்டிருக்கும் இளைய பட்டாளத்துக்காகவாவது இதைச் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது. பழைய சோறு கிடக்கட்டும்... சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது. 

கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி...’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’, `நீராகாரம்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி, நீராகாரத்தை மெள்ள மெள்ள ஓரங்கட்டிவிட்டது. அதோடு, இந்தப் பழைய சோற்றுத் தண்ணீர், மற்ற பானங்கள்போல அல்ல. பழச்சாறுகள், இளநீர், டீயைப்போல இதை பாட்டிலில் அடைத்துக் கையோடு எடுத்துப்போக முடியாது. சாதம் கலந்திருக்கும் என்பதால், புட்டிகள் ஏற்றவை அல்ல. இதுவும் தமிழர்கள் நீராகரத்தை மறந்துபோக ஒரு காரணம்.

தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டவேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. அடுக்களையில் ஓர் ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில், குளிரக் குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்திருப்பது கூடுதல் சிறப்பு. தமிழகத்தில் மட்டும் அல்ல கேரளாவிலும் பாரம்பர்யம் மிக்க உணவு இது. தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது ஊறுகாய் போதும். 

பழைய சோற்றில் லேசாக புளிப்புச் சுவை ஏற்படக் காரணமும் உண்டு. சாதத்தில் உருவாகும் லேக்டிக் ஆசிட் பாக்டீரியாதான் (Lactic Acid Bacteria) புளிப்புச் சுவையைத் தருகிறது. அதோடு, மிக அதிக அளவில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை அள்ளி அள்ளித் தருகிறது இந்த அட்டகாசமான சாதம். உதாரணத்துக்கு ஒரே ஒரு விஷயம்... வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதுவே, பழைய சாதமாகும்போது, இரும்புச்சத்தின் அளவு 73.91 மி.கிராமாக இருக்கும். ஆக, காலையில் சாப்பிட ஏற்ற சத்தான உணவு பழைய சோறு. 

அதே நேரத்தில், எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு... இல்லையா? அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். `அதிகபட்சம் பழைய சாதம் ஆக வேண்டும் என்பதற்காக, நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல; இது, எல்லா உணவுகளுக்குமே பொருந்தக்கூடியது. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம். 

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்... 

* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன. 

* காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும். 

* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும். 

* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும். 

* முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும். 

* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும். 

* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம். 

* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். 

* வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். 

பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சோறு. பாரம்பர்யத்தைப் போற்றுவோம்! 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழஞ்சோறு அது ஒரு அமிர்தம்.....நான் மாதத்தில் 3,4 முறை சாப்பிடுவதுண்டு......!

பழஞ்சோற்றைப் பிழிந்து நீரை ஒரு கிளாசில் வைத்துக் கொண்டு பின் சோற்றுக்குள் சிறிது தயிரும் மற்றும் தேனும் (விரும்பினால்) போட்டுக் குழைத்து அருகில் ப.மிளகாய் ,சின்னவெங்காயத்துடன்  ஊறுகாயும் தொட்டுக்கொண்டு நீரையும் அருந்தி  சாப்பிட அந்தமாதிரி இருக்கும் .......!  👍 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, suvy said:

பழஞ்சோறு அது ஒரு அமிர்தம்.....நான் மாதத்தில் 3,4 முறை சாப்பிடுவதுண்டு......!

பழஞ்சோற்றைப் பிழிந்து நீரை ஒரு கிளாசில் வைத்துக் கொண்டு பின் சோற்றுக்குள் சிறிது தயிரும் மற்றும் தேனும் (விரும்பினால்) போட்டுக் குழைத்து அருகில் ப.மிளகாய் ,சின்னவெங்காயத்துடன்  ஊறுகாயும் தொட்டுக்கொண்டு நீரையும் அருந்தி  சாப்பிட அந்தமாதிரி இருக்கும் .......!  👍 

சர்க்கரை வியாதி ஆரம்ப நிலையில் (எல்லைக் கோட்டில்) இருப்பவர்கள் தேன் சாப்பிடலாமா?
பிற்குறிப்பு:  எனக்கு இல்லை. பக்கத்து வீட்டு ஜேர்மன்காரன் கேட்டு சொல்லச் சொன்னவன். 🙂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

சர்க்கரை வியாதி ஆரம்ப நிலையில் (எல்லைக் கோட்டில்) இருப்பவர்கள் தேன் சாப்பிடலாமா?
பிற்குறிப்பு:  எனக்கு இல்லை. பக்கத்து வீட்டு ஜேர்மன்காரன் கேட்டு சொல்லச் சொன்னவன். 🙂

அது பற்றி எனக்குத் தெரியாது......ஆனால் நான் தேன் சாப்பிடுவதுண்டு......வயிற்றில் மந்தமாய் இருந்தால் தேனீருக்குள் தேன் (ஒரு மேசைக்கரண்டி) விட்டு சாப்பிடுவேன், சுடுதண்ணீருக்குள் புதினா இலை கிள்ளிப் போட்டு (monthe  தோட்டத்தில் நிக்குது) தேன் ,கறுவா துண்டு போட்டு சாதாரணமாய் குடிப்பதுண்டு........!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

சர்க்கரை வியாதி ஆரம்ப நிலையில் (எல்லைக் கோட்டில்) இருப்பவர்கள் தேன் சாப்பிடலாமா?
பிற்குறிப்பு:  எனக்கு இல்லை. பக்கத்து வீட்டு ஜேர்மன்காரன் கேட்டு சொல்லச் சொன்னவன். 🙂

என்ன கொடுமை    !!!!ஜேர்மன்காரன்  சோறு சாப்பிடுகிறானா.?? அது தான்   அரிசி விலையேறி விட்டது   😂🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

என்ன கொடுமை    !!!!ஜேர்மன்காரன்  சோறு சாப்பிடுகிறானா.?? அது தான்   அரிசி விலையேறி விட்டது   😂🤣🤣

 ஜேர்மன்காரர் சோறு சாப்பிடுவதில்லையா? எந்த நாட்டில் வசிக்கின்றீர்கள் ஐயா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

 ஜேர்மன்காரர் சோறு சாப்பிடுவதில்லையா? எந்த நாட்டில் வசிக்கின்றீர்கள் ஐயா? 😎

நான் பல ஆண்டுகள் சீனா உணவகங்களில் வேலை செய்தேன்  ஜேர்மன்காரன். சோறு சாப்பிடுவது மிகவும் குறைவு   கொடுக்கும் சோறு இரண்டு கரண்டி எடுத்த பின்   அப்படியே திரும்ப வரும் அவர்களுக்கு சோறு பிரதான உணவு இல்லை   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Kandiah57 said:

நான் பல ஆண்டுகள் சீனா உணவகங்களில் வேலை செய்தேன்  ஜேர்மன்காரன். சோறு சாப்பிடுவது மிகவும் குறைவு   கொடுக்கும் சோறு இரண்டு கரண்டி எடுத்த பின்   அப்படியே திரும்ப வரும் அவர்களுக்கு சோறு பிரதான உணவு இல்லை   

ஜெர்மன்காரர் சோறு எங்களைப்போல் சாப்பிடுவதில்லை. ஆனால் அவர்கள் சோறே சாப்பிடுவதில்லை என்பது போல் உங்கள் முதல் கருத்து இருக்கின்றது.

இதெல்லாம் ஜேர்மன்காரரின் முக்கிய உணவு.

milchreis-rezept.jpg

huehnerfrikassee-2c4915e0a3daa7a9f200f95

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

ஜெர்மன்காரர் சோறு எங்களைப்போல் சாப்பிடுவதில்லை. ஆனால் அவர்கள் சோறே சாப்பிடுவதில்லை என்பது போல் உங்கள் முதல் கருத்து இருக்கின்றது.

இதெல்லாம் ஜேர்மன்காரரின் முக்கிய உணவு.

milchreis-rezept.jpg

huehnerfrikassee-2c4915e0a3daa7a9f200f95

முதல் கருத்து பிழை தான்  .... சாப்பட்டை. பார்க்க சாப்பிட வேணும் போல்  உள்ளது     🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

பழஞ்சோறு அது ஒரு அமிர்தம்.....நான் மாதத்தில் 3,4 முறை சாப்பிடுவதுண்டு......!

பழஞ்சோற்றைப் பிழிந்து நீரை ஒரு கிளாசில் வைத்துக் கொண்டு பின் சோற்றுக்குள் சிறிது தயிரும் மற்றும் தேனும் (விரும்பினால்) போட்டுக் குழைத்து அருகில் ப.மிளகாய் ,சின்னவெங்காயத்துடன்  ஊறுகாயும் தொட்டுக்கொண்டு நீரையும் அருந்தி  சாப்பிட அந்தமாதிரி இருக்கும் .......!  👍 

பழையதை ஊறவிட்டு..... காலையில், தயிர், கொஞ்சம் தண்ணி, தேவையான பச்சை மிளகாய், உப்பு, சின்ன வெங்காயம், ஊறுகாய், இரண்டு, மூன்று கருவேற்பிலை போட்டு மிக்சியில் அடித்து நல்லா கரைந்ததும், அரைவாசி பழையதை போட்டு, ஒரு சின்ன அடி. அதனை, மிச்ச அரைவாசியில் ஊத்தி, கலந்து குடிச்சுப் பாருங்கோ... 🤪😍

1 hour ago, Kandiah57 said:

நான் பல ஆண்டுகள் சீனா உணவகங்களில் வேலை செய்தேன்  ஜேர்மன்காரன். சோறு சாப்பிடுவது மிகவும் குறைவு   கொடுக்கும் சோறு இரண்டு கரண்டி எடுத்த பின்   அப்படியே திரும்ப வரும் அவர்களுக்கு சோறு பிரதான உணவு இல்லை   

சீனா உணவகங்களில் சமையல் காரர் சரியில்லை. 🤦‍♂️

பிரியாணி முதல், லாம்பரிஸ் எண்டு உங்கை வெள்ளையள் லைனிலே நிண்டு வாங்கி தின்னுகினம். வெள்ளிக்கிழமை எண்டால், 5 கறியே, அந்தக் கடையில 6 கறி... என்ன சுத்தபார்க்கிறியா எண்டு நிக்கிற சோத்து வெள்ளையளோடை உங்களுக்கு பகிடிதான்... 🤣😁

1 hour ago, குமாரசாமி said:

ஜெர்மன்காரர் சோறு எங்களைப்போல் சாப்பிடுவதில்லை. ஆனால் அவர்கள் சோறே சாப்பிடுவதில்லை என்பது போல் உங்கள் முதல் கருத்து இருக்கின்றது.

இதெல்லாம் ஜேர்மன்காரரின் முக்கிய உணவு.

milchreis-rezept.jpg

huehnerfrikassee-2c4915e0a3daa7a9f200f95

முதலாவது எங்களது கஞ்சி மாதிரி இருக்கே...

Posted

எனக்கு மிகப் பிடித்த உணவு இது. ஆனால், இங்கு இரண்டு நாட்கள் வைத்தாலும் கூட சோறு புளித்து பழம்சோறாக மாறுகின்றது இல்லை. தோசை மாவுக்கும் இதே கதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த உணவு இது. ஆனால், இங்கு இரண்டு நாட்கள் வைத்தாலும் கூட சோறு புளித்து பழம்சோறாக மாறுகின்றது இல்லை. தோசை மாவுக்கும் இதே கதை தான்.

உந்தக் குளிருக்கை... ???

ஹீட்டருக்கு பக்கத்தில வையுங்கோ... அலுவல் அந்தமாதிரி நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, நிழலி said:

எனக்கு மிகப் பிடித்த உணவு இது. ஆனால், இங்கு இரண்டு நாட்கள் வைத்தாலும் கூட சோறு புளித்து பழம்சோறாக மாறுகின்றது இல்லை. தோசை மாவுக்கும் இதே கதை தான்.

5 minutes ago, Nathamuni said:

உந்தக் குளிருக்கை... ???

ஹீட்டருக்கு பக்கத்தில வையுங்கோ... அலுவல் அந்தமாதிரி நடக்கும்.

அதுகும்….  🥶 கனடா குளிர் கண்டியளோ…  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

முதலாவது எங்களது கஞ்சி மாதிரி இருக்கே...

எங்கடை வெள்ளை பொங்கல் மாதிரி இருக்கும். கறுவா தூள் போட்டு சாப்பிட நல்லாய் இருக்கும்.
வயோதிபர்கள்,சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மாட்டுப்பால்,சீனி கலந்து சமைப்பார்கள்.

14 minutes ago, Nathamuni said:

ஹீட்டருக்கு பக்கத்தில வையுங்கோ... அலுவல் அந்தமாதிரி நடக்கும்.

சார்! உங்களுக்கு அடுப்படி விசயங்கள் அத்துப்படி போல.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

எங்கடை வெள்ளை பொங்கல் மாதிரி இருக்கும். கறுவா தூள் போட்டு சாப்பிட நல்லாய் இருக்கும்.
வயோதிபர்கள்,சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மாட்டுப்பால்,சீனி கலந்து சமைப்பார்கள்.

கிரிபத். பாற்சோறு.

மாட்டுப்பாலுக்கு பதிலா, தேங்காய்ப்பாலும் சீனியும் அந்த மாதிரி...

இதன் ஜேர்மன் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Nathamuni said:

இதன் ஜேர்மன் பெயர் என்ன?

milch reis

பால் புக்கை(சோறு)

  • Thanks 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.