Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸாவில் சண்டை நிறுத்தம், 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க உடன்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 நிமிடங்களுக்கு முன்னர்

ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியக் குடிமக்களில் 50 பேர் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், இந்த காலகட்டத்தில் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் 50 பிணைக் கைதிகளை விடுப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலத்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் சம்மதித்திருப்பதாக ஹமாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அமைச்சரவை இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு பிரதமர் அலுவலகம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில், "அனைத்து பணயக் கைதிகளையும் மீட்க இஸ்ரேல் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்கான முதல் கட்ட திட்டத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50 பணயக்கைதிகள் நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள். அப்போது சண்டை நிறுத்தப்படும்."

“பிணைக் கைதிகள் அனைவரும் தாயகம் திரும்பும் வரை, ஹமாஸ் முற்றிலுமாக அகற்றப்படும் வரை இஸ்ரேலிய அரசாங்கம், இஸ்ரேலிய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் போரைத் தொடரும். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்கு புதிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்படும்.” என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

 
காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

முதலில் விடுவிக்கப்படும் முதல் 50 பேரில் பெரும்பாலானோர் இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய குடிமக்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இப்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஹமாஸ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மனிதாபிமான உதவி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான டிரக்குகள் காஸாவுக்குள் நுழையும்.

நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேல் எந்தத் தாக்குதலையும் நடத்தாது, யாரையும் கைது செய்யாது என்று ஹமாஸின் அறிக்கை கூறுகிறது.

“நான்கு நாள் தற்காலிக போர்நிறுத்தத்தின் போது, தெற்கு காஸாவில் விமானங்கள் பறக்க முற்றிலுமாகத் தடை இருக்கும். வடக்கு காஸாவில் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.” என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காசாவின் வான்வெளி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 240 இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இவர்களில் நான்கு பணயக்கைதிகள் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 
இஸ்ரேலிய பிணைக் கைதிகள்

பட மூலாதாரம்,IDF

"கத்தாருக்கு நன்றி"

இந்த உடன்பாடு தொடர்பாக ஹமாஸ் டெலிகிராமில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் “மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் எகிப்துக்கு ஹமாஸ் நன்றி தெரிவித்துள்ளது.

பல வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அக்டோபர் 7 முதல் ஹமாஸின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டும் தருவாயில் இருப்பதாக இஸ்ரேலும் ஹமாஸும் சமீபத்தில் கூறின.

செவ்வாய்கிழமை ராய்ட்டர்ஸிடம் பேசிய ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹமாஸ் இஸ்ரேலுடனான 'போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு' மிக அருகில் இருப்பதாக கூறினார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விரைவில் "நல்ல செய்தியை" பகிர்ந்து கொள்வதாகக் கூறியிருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cw42w4zm93jo

  • Replies 61
  • Views 4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் - இஸ்ரேல் தெரிவித்துள்ளது என ஹமாஸ் அறிவிப்பு

Published By: RAJEEBAN    22 NOV, 2023 | 11:47 AM

image

50 பணயக்கைதிகள் விடுதலைக்கு பதில் இஸ்ரேலிய சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்யவுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் 150 பாலஸ்தீன பெண்கள் சிறுவர்களை விடுதலை செய்யும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பாலஸ்தீன உடன்படிக்கையின் கீழ் மனிதாபிமான உதவிகள் மருந்துகள் எரிபொருட்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட டிரக்குகள் காசாவிற்குள் நுழையவுள்ளன என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

யுத்தஇடைநிறுத்த காலப்பகுதியில் காசாவில் எந்த தாக்குதலையும் மேற்கொள்ளப்போவதில்லை எவரையும் கைதுசெய்யப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/169942

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமைவரை கைதிகள் பரிமாற்றம் இல்லை என இஸ்ரேல் கூறி உள்ளது. யுத்த நிறுத்தம் செயல்பாட்டில் உள்ளதா இல்லையா என்பது இன்னும் சரியாக வெளிப்படுத்தப்படவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: இருதரப்பு உடன்பாடு என்ன?

பாலத்தீன சிறைக் கைதிகள்

பட மூலாதாரம்,BBC SPORT

22 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேலுடனான நான்கு நாள் போர் நிறுத்தம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் அமலுக்கு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. எனினும், போர் நிறுத்தம் தொடங்குவது குறித்து இஸ்ரேலிடம் இருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், பணயக்கைதிகளின் முதல் குழு வியாழனன்று விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஒப்பந்தத்தின்படி, காஸாவில் இருந்து ஹமாஸ் 50 பணயக்கைதிகளை விடுவிப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 150 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள். 300 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இவர்களில் 121 பேர் சிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர், ஆனால் சில தலைவர்கள் இன்னும் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் ஒவ்வொரு பணயக்கைதிகளும் வீடு திரும்ப வேண்டும் என்றும் ஒவ்வொரு மணி நேரமும் கணக்கிடப்படும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் சில வீடியோ காட்சிகளைப் பகிர்ந்துள்ளதோடு, இதுவரை காஸாவில் ஹமாஸின் 400 சுரங்கப்பாதைகளை அழித்துள்ளதாகக் கூறியுள்ளது.

புதன்கிழமை காலை, இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் அதன் தரை மற்றும் வான் நடவடிக்கைகள் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு மட்டுமே நிறுத்தப்படும் என்று உறுதிப்படுத்தியது.

பிணைக் கைதிகளாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிப்பதே முதல் முன்னுரிமை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆலோசகர் மார்க் ரெகெவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

  • இந்தப் போர் நிறுத்தத்தின் கீழ் பரிமாறிக்கொள்ளப்படும் பணயக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளைத் தவிர, விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக்கைதிகளுக்கும் ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்.
  • நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் டாங்கிகள் காஸாவில் இருக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் யாரையும் தாக்காது அல்லது கைது செய்யாது என்று ஹமாஸின் அறிக்கை கூறுகிறது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 200 டிரக்குகள், நான்கு எரிபொருள் டேங்கர்கள் மற்றும் நான்கு எரிவாயு லாரிகள் எகிப்தின் ரஃபா கடவுப்பாதை வழியாக தினமும் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும்.
  • இஸ்ரேலிய பணயக் கைதிகள் மற்றும் காஸாவில் வசிப்பவர்களின் குடும்பத்தினருடன் போப் பிரான்சிஸ் அவர்கள் தனித்தனியாக ரோமில் சந்தித்து, 'இது போர் அல்ல, பயங்கரவாதம்' என்று கூறினார்.
 
காஸா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

முதலில் விடுவிக்கப்படும் முதல் 50 பேரில் பெரும்பாலானோர் இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய குடிமக்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இப்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஹமாஸ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மனிதாபிமான உதவி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான டிரக்குகள் காஸாவுக்குள் நுழையும்.

நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேல் எந்தத் தாக்குதலையும் நடத்தாது, யாரையும் கைது செய்யாது என்று ஹமாஸின் அறிக்கை கூறுகிறது.

“நான்கு நாள் தற்காலிக போர்நிறுத்தத்தின் போது, தெற்கு காஸாவில் விமானங்கள் பறக்க முற்றிலுமாகத் தடை இருக்கும். வடக்கு காஸாவில் ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்.” என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காசாவின் வான்வெளி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 240 இஸ்ரேலியர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இவர்களில் நான்கு பணயக்கைதிகள் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 
இஸ்ரேலிய பிணைக் கைதிகள்

பட மூலாதாரம்,IDF

300 பாலத்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு

ஹமாஸுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி இஸ்ரேல் விடுவிக்கப் போகும் 300 பாலத்தீன சிறைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய நீதித்துறையின் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 274 பேர் ஆண்கள். பெரும்பாலும் 17 -18 வயதுடையவர்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் இஸ்ரேலின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் முதலில் 150 பேர் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரியவருகிறது.

கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி

கத்தார் நம்புவது என்ன?

நான்கு நாள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் 'போரை முடிவுக்கு கொண்டுவர' வழிவகுக்கும் என்று கத்தார் நம்புகிறது.

காஸாவில் சண்டை நிறுத்தம் செய்ய உதவிய அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் "போர் மற்றும் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்" என்றும் ஒரு "விரிவான மற்றும் நிலையான ஒப்பந்தத்தை" உருவாக்கும் என்றும் நம்புவதாகக் அவர் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் "ஒரு விரிவான, நியாயமான அமைதி செயல்முறைக்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும்" என்று தான் நம்புவதாகவும் பிரதமர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cw42w4zm93jo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமதமாகின்றது காசா மோதல் இடைநிறுத்தம்

23 NOV, 2023 | 10:31 AM
image

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான மோதல் இடைநிறுத்தம் தாமதமாகியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

ஹமாஸ் வியாழக்கிழமை மோதல் இடைநிறுத்தம் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என தெரிவித்திருந்தது எனினும் இந்த விடயத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என இஸ்ரேலிய வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன.

காசாவில் உள்ள பணயக்கைதிகள் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என இஸ்ரேலின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/170026

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமதமாகும் போர் நிறுத்தம்: பிணைக்கைதிகள் விடுவிப்பு 25 ஆம் திகதி தொடங்கும் என எதிர்பார்ப்பு

இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உட்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கியது.

இதற்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஒன்றரை மாதங்களாக நடந்து வரும் போரில் காசா பகுதி சின்னாபின்னமாகி விட்டது. இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கட்டார்,எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன பெண்கள், சிறுவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என கட்டார் தெரிவித்தது. இன்று காலை முதல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணி தொடங்கலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் புதிய தகவலை வெளியிட்டது.

இது தொடர்பாக இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனேஜிபி கூறும்போது, “போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. பிணைக்கைதிகள் விடுதலை வெள்ளிக்கிழமைக்கு முன்பாக நடைபெறாது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையேயான ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் அது நாளைக்கு முன்பாக நடைபெறவாய்ப்பு இல்லை” என தெரிவித்தார்.

இஸ்ரேல் சிறையில் உள்ளவர்களை நாளைக்கு முன்னதாக விடுவிக்க இயலாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலை இஸ்ரேல் கேட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கு ஹமாஸ் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பது பின்னர்தான் தெரியும்.

ஆனால், பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர், பேச்சுவார்த்தையில் அரசின் குறைபாடே காலதாமதத்திற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.\

போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு தாமதத்துக்கான காரணம் குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த அறிவிப்பால் பிணைக்கைதிகள் விடுவிப்பு நாளை வரை தாமதம் ஆகி உள்ளது. இதனால் பிணைக்கைதிகள் விடுவிப்பு 25 ஆம் திகதி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்தம் எப்போது தொடங்கும் என இன்னும் தெளிவாக தெரியாத நிலையில் நேற்று இரவு காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுஸ் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டன. அதேபோல் வடக்கு காசாவில் அபு இஸ்கந்தர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.

https://thinakkural.lk/article/282186

  • கருத்துக்கள உறவுகள்

காஸாவில் தற்காலிக போர் நிறுத்தம் ஆரம்பம்!

இஸ்ரேல் – காஸா இடையில் 46 நாட்களை தாண்டி போர் நடைபெற்று வந்த நிலையில், அங்கு தற்போது தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து, காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

தாக்குதல் 46 நாட்களை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், பிணைக்கைதிகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இஸ்ரேல் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. ஹமாஸ் அமைப்பினரும் பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். கட்டார் இதற்கான ஏற்பாட்டை செய்தது.

விடுவிக்கப்படும் பிணைக்கைதிகளின் பட்டியல் இஸ்ரேலுக்கு கிடைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியில் இருந்து நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தாது.

அதன்பின் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படு இருக்கிறார்கள்.

முதலில் பெண்கள் அவர்களின் குழந்தைகள் என்ற அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிணைக்கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல், தங்களது சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இருக்கிறது.

 

 

http://www.samakalam.com/காஸாவில்-தற்காலிக-போர்-ந/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடைமுறைக்கு வந்தது நான்கு நாள் மோதல் நிறுத்தம்

Published By: RAJEEBAN    24 NOV, 2023 | 12:25 PM

image

ஹமாசிற்கும்  இஸ்ரேலிற்கும் இடையிலான நான்கு மோதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதே வேளை யுத்தம் முடிவிற்கு வரவில்லை என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான இடைநிறுத்தம் என்பது தற்காலிகமானது காசாவின் வடபகுதி என்பது ஆபத்தான யுத்த களம் அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது உங்கள் பாதுகாப்பிற்காக நீங்கள் தென்பகுதியின் மனிதாபிமான வலயத்தில் தங்கியிருங்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/170141

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சும்மா இரு தரப்பினரும் அப்பாவி மக்களை கொல்லுவதைவிட பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதுதான் நல்லது.......!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில மணித்தியாலங்களில் கமாஸ் 13 பேரை (பெண்கள், குழந்தைகள்) விடுவிக்க உள்ளது.
இஸ்ரேலும் 50 பேரை விடுவிக்க உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

இன்னும் சில மணித்தியாலங்களில் கமாஸ் 13 பேரை (பெண்கள், குழந்தைகள்) விடுவிக்க உள்ளது.
இஸ்ரேலும் 50 பேரை விடுவிக்க உள்ளது.

கூடுதலாக தாய்லாந்து நாடடவரை விடுதலை செய்ததாக அறிய கிடைக்கிறது. இது சம்பந்தமாக தாய்லாந்து ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

கூடுதலாக தாய்லாந்து நாடடவரை விடுதலை செய்ததாக அறிய கிடைக்கிறது. இது சம்பந்தமாக தாய்லாந்து ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தது. 

ஆம். 13 இஸ்ரேலியர்கள், 10 தாய்லாந்து நாட்டவர்கள், ஒரு பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர்கள் மொத்தம் 24 பேர் விடுதலையாகி உள்ளார்கள். எதிர்பார்த்த அமெரிக்கர்கள் விடுதலை ஆகவில்லை. இன்று விடுதலையாக சந்தர்ப்பம் உண்டு. தாய்லாந்து, பிலிப்பைனை சேர்ந்தர்களி இஸ்ரேலில்  விவசாயம் செய்ய உதவிக்கு வந்தவர்கள் என அறியக்கிடக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தது இஸ்ரேல்

Published By: RAJEEBAN

25 NOV, 2023 | 09:09 AM
image

இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது.

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக இஸ்ரேல் இவர்களை விடுதலை செய்துள்ளது.

கல்வீச்சில் ஈடுபட்டனர் கொலை முயற்சி  உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களையே இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

24 பெண்களையும் 15 பதின்மவயது இளைஞர்களையும் இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.

மேற்குகரையின் பெட்டுனியா பகுதியில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என இஸ்ரேலின் சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலினால் தயாரிக்கப்பட்ட 300 பெண்கள் சிறுவர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/170193

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - ஹமாஸ்: விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள், பாலத்தீன கைதிகளின் நிலை என்ன?

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக் கைதிகள் விடுதலை
படக்குறிப்பு,

இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவுக்கு அருகே பெய்துனியா சோதனைச் சாவடியில் விடுவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழு 13 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளது. அவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலை அடைந்துள்ளனர்.

நான்கு நாட்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின் பேரில், 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும் 150 பாலத்தீன சிறைவாசிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை கத்தார் மத்தியஸ்தம் செய்தது.

சிறையில் இருந்த பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் வெள்ளிக்கிழமை வடக்கு இஸ்ரேலில் உள்ள இரண்டு சிறைகளில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருக்கும் ராணுவ நீதிமன்ற கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர்.

வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலிய பணயக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கும்போது, அடுத்த நாள் விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் கொடுக்கும் என நம்பப்பட்டது.

கைதிகள் பரிமாற்றத்திற்காக தோஹாவில் ஒரு செயல்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் பாதுகாப்பான சூழலில் இந்தப் பரிமாற்றம் நடைபெறுவதை உறுதி செய்வதாகவும் கத்தார் தெரிவித்துள்ளது.

எப்படி இருப்பினும், போர் நிறுத்தம் மற்றும் முதல் தொகுதி பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும், விஷயங்கள் தவறான திசையில் திரும்பக்கூடும் என்ற அச்சம் இன்னும் உள்ளது. எனவே, அனைவரின் கண்களும் இரு தரப்பில் இருந்து விடுவிப்பு மற்றும் அடுத்த செயல்முறையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

காஸா பகுதியில் 13 இஸ்ரேலிய குடிமக்கள் உட்பட ஹமாஸ் பிடியில் இருந்த 24 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய குடிமக்கள் 13 பேர், தாய்லாந்து குடிமக்கள் 10 பேர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகன் விடுவிக்கப்பட்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை கத்தார் மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளது.

 

அழுத்தம் மிகுந்த தருணம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக் கைதிகள் விடுதலை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

24 பணயக் கைதிகள் ரஃபா வழியாக எகிப்துக்குள் வந்தனர்.

ஹமாஸ், இஸ்ரேல் இடையே ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், 13 இஸ்ரேலிய பணயக் கைதிகள் மற்றும் 39 பாலத்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தருணம் மிகவும் பதற்றமான தருணமாக இருந்தது.

ஹமாஸ் சார்பில் விடுவிக்கப்பட்ட 24 பணயக் கைதிகள் செஞ்சிலுவை சங்கக் கொடிகளை ஏந்திய வாகனங்களில் காஸாவில் இருந்து புறப்பட்டு, அதன் எல்லையில் அமைந்துள்ள ரஃபா வழியாக எகிப்துக்குள் வந்தனர். அவர்கள் பாதுகாப்பாக வந்தடைந்தபோது அங்கிருந்த மக்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை வீசியதைக் காண முடிந்தது.

இந்தப் பணயக் கைதிகள் டெல் அவிவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையில் மேற்குக் கரையில் ரமல்லாவுக்கு அருகிலுள்ள பெத்துனியா சோதனைச் சாவடியில் ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் திரண்டனர். அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

மேற்குக் கரையில் இருந்த பிபிசி செய்தியாளர் லூசி வில்லியம்சன் கூற்றுப்படி, சோதனைச் சாவடியில் செஞ்சிலுவை சங்க வாகனத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

பாலத்தீன கைதிகளை இஸ்ரேலில் இருந்து விடுவிப்பதில் தாமதம் ஏன் என்று பாலத்தீனியர்கள் கேள்வியெழுப்பினர்.

செஞ்சிலுவை சங்க வாகனம் அருகே திரண்டிருந்த மக்கள், “கைதிகள் எங்கே? கைதிகள் எங்கே?” என்று கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். சோதனைச் சாவடி அருகே சாலையில் இஸ்ரேல் படைகளுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

பாலத்தீனியர்களின் குழுவை பின்னுக்குத் தள்ள, இஸ்ரேலிய ராணுவம் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தியது.

பாலத்தீன கைதிகளை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், சோதனைச் சாவடியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாகவே தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

விடுவிக்கப்பட வேண்டிய இஸ்ரேலிய குடிமக்கள்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக் கைதிகள் விடுதலை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

13 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்களில் 70 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்களும் ஒரு தாயும் அவரது ஏழு வயது மகளும் அடக்கம்.

அவர்களில் ஒருவர் 78 வயதான மார்கலிட் மோசஸ். புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர். அக்டோபர் 7ஆம் தேதி கிப்புட்ஸ் நிர் ஓஸில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டார்.

கிப்புட்ஸ் நிர் ஓஸில் இருந்து 72 வயதான அடினா மோஷே கடத்தப்பட்டார்.ஹமாஸ் தனது கணவர் சைட் மோஷேவை கொலை செய்ததாகக் கூறினார். ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு வெளியான வீடியோ காட்சிகளில் இருந்து அவரது குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

அதில், இரண்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு இடையில் அவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்துகொண்டிருந்தார்.

அவருக்கு மாயா, ஹேல், சாசன், அமோஸ் என நான்கு குழந்தைகள் உள்ளனர். ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளில் டேனியல் அலோனி மற்றும் அவரது ஐந்து வயது மகளான எமிலியாவும் அடங்குவர்.

கிப்புட்ஸ் நிர் ஓஸில் இருந்து அவர்கள் கடத்தப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலின்போது அவர்கள் தம் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக கிப்புட்ஸ் பகுதிக்கு வந்திருந்தனர்.

“பயங்கரவாதிகள் வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். இனி தான் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை,” என்பதே டேனியலின் கடைசி செய்தியாக இருந்தது.

 

பணயக் கைதிகளின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக் கைதிகள் விடுதலை

பட மூலாதாரம்,YONI ASHER

படக்குறிப்பு,

கடத்தப்பட்டவர்களில் கடைசி நபரும் திரும்பும் வரை கொண்டாட மாட்டேன்

இன்று விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளில் யோனி ஆஷரின் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் அடக்கம். அவர் இதுகுறித்துப் பேசியபோது, “கடத்தப்பட்டவர்களில் கடைசி நபரும் வீடு திரும்பும் வரை இதைக் கொண்டாட மாட்டேன்,” என்று கூறினார்.

ஆஷர் தனது மனைவி டோரன் மற்றும் மகள்கள் ராஸ், அவிவ் ஆகியோர் மற்ற பணயக் கைதிகளுடன் ஒரு டிரக்கில் ஏற்றப்படும் வீடியோவை பார்த்தார். அப்போது அவர்கள் காஸா எல்லைக்கு அருகில் உறவினர்களுடன் காத்திருந்தனர்.

இதுகுறித்து இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் அவர், “எனது குடும்பத்தை மீட்டுக் கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது என்னை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது, என்னைக் கண்ணீர்விட வைத்துள்ளது. ஆனால், நான் இதைக் கொண்டாட மாட்டேன். கடத்தப்பட்டவர்களில் கடைசி நபரும் திரும்பும் வரை கொண்டாட மாட்டேன்,” என்று கூறியுள்ளார்.

“எங்கள் குழந்தைகள், எங்கள் தந்தைகள், எங்கள் தாய்மார்கள், எங்கள் சகோதரிகள் இந்தத் தருணத்தில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். மக்கள் இதயம் உடைந்துள்ளனர். கடத்தப்பட்ட ஒவ்வொரு பணயக் கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்ய விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.

 

விடுவிக்கப்பட்ட பாலத்தீனிய கைதிகள் கூறுவது என்ன?

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக் கைதிகள் விடுதலை
படக்குறிப்பு,

சிறை எங்களுக்கு மகிழ்ச்சியற்றதாகவும் சங்கடமாகவும் இருந்தது

இஸ்ரேல் தரப்பால் விடுவிக்கப்பட்ட பாலத்தீனிய கைதிகளில் ஒருவரான மாரா பகீர், சமீபத்தில் ஜெருசலேமில் உள்ள பெய்ட் ஹனினாவில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்தார்.

அவர் 2015இல் 16 வயதாக இருந்தபோது கைது செய்யப்பட்டார். எல்லை போலீஸ் அதிகாரி மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதற்காக எட்டரை ஆண்டுகள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மாரா பகீர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்த ஒப்பந்தம் பலரின் மரணத்தைத் தொடர்ந்து வந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியற்றதாகவும் சங்கடமாகவும் இருக்கிறது,” என்று தெரிவித்தார்.

தான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும், “வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்ததாகவும் காஸாவின் நிலைமை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை,” என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த ஒப்பந்தம் தனக்கு ஆச்சரியம் அளிக்கும் செய்தியாக இருந்தது என்றும் மாயா பகீர் கூறினார்.

 

போர் நிறுத்தம் இருந்தும் பாலத்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா?

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: பணயக் கைதிகள் விடுதலை

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

"இது ஒரு செயல்முறைக்கான தொடக்கம்” என்று விவரித்துள்ளார் ஜோ பைடன்

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கு இடையே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடந்து வரும் உக்கிரமான சண்டையில் தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

இன்று காலை நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு முதல் தொகுதி இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காஸாவில் ஹமாஸா சிறைபிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஏழு வாரங்கள் கழித்து விடுவிக்கப்பட்ட எட்டு இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் பெட்டா திக்வாவில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்ததைக் காண மக்கள் கூடியிருந்தனர். அது கொண்டாட்டத்தின் ஓர் அரிய காட்சியாக இருந்தது.

மருத்துவப் பொருட்கள், எரிபொருள், உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 137 வாகனங்கள் எகிப்தில் இருந்து காஸாவுக்குள் நுழைந்தனர். மோதலின் தொடக்கத்தில் இருந்து இது மிகப்பெரிய அளவிலான விநியோகமாகக் கருதப்படுகிறது. ஆனால், இது போதுமானதாக இருக்காது என்று ஆக்ஸ்பாம் சுட்டிக்காட்டியது.

போர் நிறுத்தம் இருந்தபோதிலும், காஸாவின் தெற்கில் இருந்து வடக்கே பாலத்தீனியர்கள் செல்ல முயன்றபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இந்நிலையில், “மனிதாபிமான இடைநிறுத்தம் என்பது தற்காலிகமானதுதான். காஸாவின் வடக்குப் பகுதி ஒரு போர் மண்டலமாகவே உள்ளது,” என்று கூறி, வடக்கு நோக்கிச் செல்ல வேண்டாம் என்று இஸ்ரேலிய ராணுவம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், காஸா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ‘பேரழிவு’ நிலமை தொடர்வதாக அங்குள்ள அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மருத்துவமனையில் இருந்து செயல்படுவதாகக் கூறி இஸ்ரேலிய படைகள் கடந்த வாரம் அதன் உள்ளே நுழைந்தனர். ஆனால், ஹமாஸ் இதை மறுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டதை “ஒரு செயல்முறைக்கான தொடக்கம்” என்று விவரித்துள்ளார். ஹமாஸ் விடுவிக்கப்படவுள்ள மேலும் 13 பணயக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதியன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது ஒரு தாக்குதலைத் தொடங்கியது. அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 240 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.

அதற்குப் பழிவாங்க இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அதில் 14,500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c518q800y02o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை: ஆனந்த கண்ணீர், வாணவேடிக்கையுடன் வரவேற்ற பாலஸ்தீனர்கள்

ஹமாஸ்- இஸ்ரேல் இடையில் நான்கு நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பிணைக்கைதிகளில் 50 பேர் விடுதலை செய்ய வேண்டும். அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 150 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக ஹமாஸ்- இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக போர் நிறுத்தம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று தாய்லாந்தை சேர்ந்த 12 பேர், இஸ்ரேலைச் சேர்ந்த 13 பேர் என 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்தனர்.

Capture-1-7.jpg

அதேவேளையில் இஸ்ரேல் சிறையில் உள்ள 39 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 25 பேர் பெண்கள், 14 பேர் இளைஞர்கள். கத்திக்குத்து, இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் ஆகிய குற்றத்திற்காக 25 பெண்களும் கைது செய்யப்பட்டவர்கள். இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள்.

33 பேர் மேற்கு கரையில் உள்ள சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் ஜெருசலேமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் குழு தெரிவித்துள்ளது.

Capture-2-12.jpg

விடுதலை செய்யப்பட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்த பெண்களை தங்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். அப்போது, ஆனந்த கண்ணீருடன் அவர்களை வரவேற்றனர். இளைஞர்களை தோளில் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி வாணவேடிக்கை நிகழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அப்போது பலர் தங்கள் கைகளில் பாலஸ்தீன கொடிகளையும், சிலர் ஹமாஸ் கொடியையும் வைத்திருந்தனர்.

Capture-4-8.jpg

இஸ்ரேல் சிறையில் இருந்து மொத்தம் 150 பேர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். 250 பிணைக்கைதிகளை ஹமாஸ் ரிலீஸ செய்யும்போது சுமார் ஆயிரம் பேர் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

https://thinakkural.lk/article/282369

  • கருத்துக்கள உறவுகள்

ஒலி இல்லை. 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ஆவது பட்டியல் இஸ்ரேலிடம் ஒப்படைப்பு: மேலும் பிணைக்கைதிகள் இன்று விடுவிப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து வெளிநாட்டினர் உட்பட 250-க்கு மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக்கைதிகளை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

Capture-5-8.jpg

இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று போர் நிறுத்தம் தொடங்கியது.

இதில் முதல் கட்டமாக ஹமாஸ் அமைப்பிடம் பிணைக்கைதிகளாக இருந்த 13 இஸ்ரேலியர்கள் மற்றும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்லாந்தை சேர்ந்த 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களை ஹமாஸ் அமைப்பினர், செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் ராபா எல்லை வழியாக எகிப்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து இஸ்ரேலுக்கு சென்றடைந்தனர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு குடும்பத்தினரிடம் இணைவார்கள் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேபோல் சிறைக்காவலில் இருந்து 24 பெண்கள் உட்பட 39 பேரை இஸ்ரேல் விடுதலை செய்தது. அவர்கள் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதியை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தப்படி 2-வது நாளாக இன்று மேலும் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவுள்ளது.

காசாவில் இருந்து 2 ஆவது கட்டமாக விடுவிக்கப்பட உள்ள பிணைக்கைதிகளின் பட்டியலை இஸ்ரேலிடம் ஹமாஸ் அமைப்பு அளித்து உள்ளது. அந்த பட்டியலை இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.

இன்று விடுவிக்கப்படும் பிணைக்கைதிகள் எத்தனை பேர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

நேற்றைப்போலவே இன்றும் 20-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று 196 டிரக்குகளில் உணவு பொருட்கள், தண்ணீர், மருத்துவ பொருட்கள் ஆகியவை ராபா எல்லை வழியாக காசாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.

https://thinakkural.lk/article/282382

  • கருத்துக்கள உறவுகள்

பணயக் கைதிகளை கமாஸ் நன்றாகவே கவனித்துள்ளது போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பணயக் கைதிகளை கமாஸ் நன்றாகவே கவனித்துள்ளது போல தெரிகிறது.

இதே சிங்கள ஆமியாக இருந்தால்..........?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இதே சிங்கள ஆமியாக இருந்தால்..........?

க‌ற்ப‌ழிப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அதிக‌ம் ந‌ட‌ந்து இருக்கும்.............முர‌ட்டு சிங்க‌ள‌வ‌ன் க‌ற்ப‌ழிப்பு செய்தும் காம‌ம் அட‌ங்க‌ வில்லை என்றால் பெண் பிள்ளைக‌ளை உடுப்பில்லாம‌ காணொளி பிடிச்சு உல‌க‌த்துக்கே போட்டு காட்டி இருப்பாங்க‌ள் ...............இதெல்லாம் ந‌ம் க‌ண் முன்னே ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எல்லோ தாத்தா😢.............

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இதே சிங்கள ஆமியாக இருந்தால்..........?

ஹ‌மாஸ் போராளிக‌ள் எங்க‌ட‌ போராளிக‌ள் போல் ஒழுக்க‌த்தில் சிற‌ந்த‌வ‌ர்க‌ள்..........ஹ‌மாஸ் வ‌ய‌து போன‌வ‌ர்க‌ளை ப‌த்திர‌மாய் வாக‌ன‌த்தில் ஏற்றி விடும் காட்சிய‌ பார்க்க‌ சொல்ல‌ வார்த்தை இல்லை................தாய்லாந் நாட்ட‌வ‌ர்க‌ளும் ப‌த்திர‌மாய் நாடு போய் சேர்ந்து விடுவின‌ம் ............எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியா போகுது...........உல‌க‌ நாடுக‌ள் ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை த‌னி நாடாக‌ அங்கிக‌ரித்தால் வீன் பிர‌ச்ச‌னைக‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ராது...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

ஹ‌மாஸ் போராளிக‌ள் எங்க‌ட‌ போராளிக‌ள் போல் ஒழுக்க‌த்தில் சிற‌ந்த‌வ‌ர்க‌ள்..........ஹ‌மாஸ் வ‌ய‌து போன‌வ‌ர்க‌ளை ப‌த்திர‌மாய் வாக‌ன‌த்தில் ஏற்றி விடும் காட்சிய‌ பார்க்க‌ சொல்ல‌ வார்த்தை இல்லை................தாய்லாந் நாட்ட‌வ‌ர்க‌ளும் ப‌த்திர‌மாய் நாடு போய் சேர்ந்து விடுவின‌ம் ............எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியா போகுது...........உல‌க‌ நாடுக‌ள் ப‌ல‌ஸ்தீன‌ நாட்டை த‌னி நாடாக‌ அங்கிக‌ரித்தால் வீன் பிர‌ச்ச‌னைக‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ராது...............

பையா எம்மவரையும் ஏனையோரையும் ஒப்பிட வேண்டாம். தாழ்மையான வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

பையா எம்மவரையும் ஏனையோரையும் ஒப்பிட வேண்டாம். தாழ்மையான வேண்டுகோள்.

ச‌ரியான‌ விள‌க்க‌த்தை த‌ந்தால் எழுதுவ‌தை த‌விர்க்கிறேன் அண்ணா...........

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் தங்களை நல்லவர்களாக காட்டுவதற்கு உலகம் முழுவதும் பொய்பரப்புரைகளை நடத்தி வருகின்றது. இம் மாத ஆரம்பத்தில்  பொதுமக்கள் பெரியவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அங்கே இருந்த விலங்குகள் என்று சுட்டுகொன்றும்  பலரை கடத்தியும் சென்றனர்.  கடத்தி கொண்டு சென்ற குழந்தைகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் கைகளில் தூக்கிவைத்து படம் காட்டுவதை பார்த்திருப்பீர்கள். ஹமாசுக்கு தமிழில் வெள்ளை அடிக்கும் முயற்சி தான் இங்கே நடை பெறுகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்னை ப‌ற்றி எப்ப‌டியும் நினைத்து விட்டு போக‌ட்டும் அதை ப‌ற்றி என‌க்கு க‌வ‌லை இல்லை.........வெள்ளை அடிக்கிற‌து ஜால்ரா அடிக்கிற‌து என் வேலையும் இல்லை என் பிழைப்பும் அது அல்ல‌...........சட்டிக்குள் இருப்ப‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும்.........ம‌ன‌சில் ஒன்றை வைத்து வெளியில் போலி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்ல‌வே இல்லை  

Game Over 😁🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.