Jump to content

மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

அண்ணைமாரே சொல்லுறன் என்று கோபிக்க வேண்டாம்....இப்போதய தமிழக சூழ்நிலையில் சீமானை ஆதரிப்பதே சிறந்தவழி...ந்ல்லதோ கெட்டதோ எமக்கு கைகொடுத்து தூக்கிவிடக் கூடிய தமிழகத் தமிழனென்றால் சீமாந்தான்...நான் சீமான் பக்தனுமல்ல சீமான் தொன்டனுமல்ல...இது உண்மை?>....அண்மைக்கால தமிழக் நடப்புக்களை பார்ஹ்த்தால் இது புரியும்...உதாரண்ம்..அசானி...இதுவடிவேல் சுரேசு எம்பிமூலம் போட்டிக்கு அனுப்பப் பட்டவர். இது ஒருகுழந்தைகளுக்கான் பாட்டுப் போட்டி....இதி அசானி  பாட்டைவிட அழுகைமூலமே புள்ளி பெற்கிறார்...இங்குதான் டீவிஸ்ட்...இலங்கை அரசியல் ...அதில் மலையக தமிழர்... இந்த மலையகத் தமிழர் யார்...இந்திய தமிழரின் இரத்தம் ..இதுதான் அங்கு பரவலாக விதைக்கப் படுகிறது...அதாவது யாழ் தமிழர் உமக்கு அந்நியர் என்பதே மெயின்...இதன் பரிசாக சுரெஸ்  எம்பிக்கு சனாதிபதி ஆலோசகர் ப்தவி வழங்கப்பட்டிருக்கு.....முத்தயா முரளீ கடைசிப் பேட்டியொன்றீல் சொன்னது...தமிழக் அரசியல் வாதிகளூக்கு அறிவு கிடையாது ..மலைய தமிழர்வேறு ..வடகிழக்கு தமிழர்வேறு...இதற்குப் பல காரணங்கள் கூறினாலும் ...மெயினாக நாம்தான் உம் சொந்தம் ..வடகிழக்கார் ...வேற்றினம் ...எம்மைப் பற்றி கதயுங்கள்...ஆதரவு தாருங்கள் என்பதே...இப்போ சொல்லுங்கள் ..சீமான் ஆதரவு எமக்கு வேண்டுமா...சீமனை ஆதரிக்க வேண்டுமா...என்பதில் சீமான் எமக்கு  வேண்டும்....

ஓம் அல்வாயன் உங்கள் பார்வை இந்த விடயத்தில் மிக சரியானதே.

இப்போ ஈழத்தமிழர் ஒரு பக்கம், தமிழக+மலையக தமிழர் ஒரு பக்கம் என்ற மாயப்பகுப்பு ஒன்று தமிழகத்தில் வலிந்து உருவாக்கப்படுகிறது.

ஆனால் நீங்கள் ஒரு நச்சு செடியின் ஒரு கிளை வெளி வருவதை இப்போ கண்டு கொண்டீர்கள்.

ஆனால் இந்த நச்சு செடியின் விதை 2009 இல் தலைவர் இறந்த போதே தமிழ் நாட்டில் ஊன்றப்பட்டு விட்டது.

மேலே நீங்கள் சுட்டிய இந்த பிரித்தாளும் சூழ்சியின் ஆரம்ப புள்ளியே - திராவிட சாதிகள்/கட்சிகள் தமிழனுக்கு, குறிப்பாக ஈழத்தமிழனுக்கு எதிரானவை என்று தமிழ் நாட்டில் கட்டி அமைக்கப்பட்ட கருத்து நிலைதான்.

கட்சி அரசியல் தாண்டி, ஒட்டு மொத்த தமிழ் நாடும் ஈழ ஆதரவுதான் என்ற நிலையில் இருந்து, ஒரு பகுதி மட்டுமே ஈழ ஆதரவு மறுபகுதி (ஒட்டு மொத்தமாக சில சாதியை சேர்ந்தோர்) ஈழத்தமிழரின் துரோகிகள் என கட்டமைக்கப்பட்டதும், அதன் தொடர்சியாக ஒரு பகுதி கருணாநிதி பிறந்த நாளில் அவரை அசிங்கபடுத்த, மறுபகுதி தலைவர் பிறந்த நாளில் அவரை உருவக் கேலி செய்ய வழி சமைத்ததும் இந்த நச்சு செடியின் விதைதான். 

கடந்த 14 வருடங்களில், தமிழ் நாட்டு தமிழர்கள், வாக்காளர் மத்தியில் நாதக புலிகளை எடுத்து சென்றது எவ்வளவு உண்மையோ அதேபோல் மிக பெரும் ஈழ/ விடுதலை புலிகள் மீதான வெறுப்பும் அங்கே குறித்த சாரார் மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

2009 ற்கு முன்னர் இருந்த புலிகள்/ஈழ பிரச்சனை கட்சிக்கு அப்பாற்பட்ட விடயம் என்ற நிலை இப்போ அங்கு இல்லை.

இன்று புலிகள்/ஈழத்தமிழர் என்றால் அது ஒரு கட்சி சார்ந்தோர் மட்டுமே என்ற நிலை அங்கே உருவாக்கப்பட்டு, எமக்கு செயற்கையாக பல இலட்சம் எதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் சொன்ன விடயம் இந்த நச்சு செடியின் ஒரு கிளைதான். விதையை பற்றி நானும் பலரும் இங்கே பல வருடங்களாக எழுதி வருகிறோம்.

இந்த செடியின்…விதையின் கருவூலம்…சாட்சாத்….அ றோ ஹராவேதான்.

றோ இலங்கையிலும், மாலை தீவிலும் மூக்குடை படலாம். ஆனால் அது முயலாமல் இருப்பதில்லை. அண்மைய போலி நாடகம் அவர்கள் இன்னும் இதில் முழு மூச்சாக இருப்பதையே காட்டுகிறது.

றோ எல்லாம் ஒரு மேட்டரே இல்லை…என சொல்பவர்கள்….அதன் செயல்களை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கவே அப்படி சொல்கிறார்கள் என்பது என் கருத்து.

  • Like 4
Link to comment
Share on other sites

  • Replies 154
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

நான் இந்த 3 வருடங்களில் பார்த்து கலந்து கொண்டு அனுபவித்த ஒன்று, தமிழகத்து இளைஞர்கள் எங்களவர்களை விடவும் மிக ஆழமாக, உணர்வுபூர்வாமாக எங்கள் போராட்ட ஞாயங்கள், சம்பவங்கள், போராட்ட வரலாறுகளை கற்று தெளிந்து

பாலபத்ர ஓணாண்டி

நான் நாம்தமிழருக்கு மட்டும் இல்லை திராவிடர் கழகமோ திமுகவோ அதிமுகவோ விசிகவோ மே17 ஓ யாராய் இருந்தாலும் அவர்களில்..   யார்  ஈழப்போராட்டத்தின் நியாயங்களையும் அதன் வரலாறையும் எம் வலிகளையும் எம் த

நிழலி

அடிச்ச காசும், சுருட்டின சொத்தும் காணாது என்று மேலும் கொள்ளை அடிக்க, தம் மக்களின் விடிவுக்காக தம் உயிரை தியாகம் செய்த தலைவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கிளப்பி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஓம் அல்வாயன் உங்கள் பார்வை இந்த விடயத்தில் மிக சரியானதே.

இப்போ ஈழத்தமிழர் ஒரு பக்கம், தமிழக+மலையக தமிழர் ஒரு பக்கம் என்ற மாயப்பகுப்பு ஒன்று தமிழகத்தில் வலிந்து உருவாக்கப்படுகிறது.

ஆனால் நீங்கள் ஒரு நச்சு செடியின் ஒரு கிளை வெளி வருவதை இப்போ கண்டு கொண்டீர்கள்.

ஆனால் இந்த நச்சு செடியின் விதை 2009 இல் தலைவர் இறந்த போதே தமிழ் நாட்டில் ஊன்றப்பட்டு விட்டது.

மேலே நீங்கள் சுட்டிய இந்த பிரித்தாளும் சூழ்சியின் ஆரம்ப புள்ளியே - திராவிட சாதிகள்/கட்சிகள் தமிழனுக்கு, குறிப்பாக ஈழத்தமிழனுக்கு எதிரானவை என்று தமிழ் நாட்டில் கட்டி அமைக்கப்பட்ட கருத்து நிலைதான்.

கட்சி அரசியல் தாண்டி, ஒட்டு மொத்த தமிழ் நாடும் ஈழ ஆதரவுதான் என்ற நிலையில் இருந்து, ஒரு பகுதி மட்டுமே ஈழ ஆதரவு மறுபகுதி (ஒட்டு மொத்தமாக சில சாதியை சேர்ந்தோர்) ஈழத்தமிழரின் துரோகிகள் என கட்டமைக்கப்பட்டதும், அதன் தொடர்சியாக ஒரு பகுதி கருணாநிதி பிறந்த நாளில் அவரை அசிங்கபடுத்த, மறுபகுதி தலைவர் பிறந்த நாளில் அவரை உருவக் கேலி செய்ய வழி சமைத்ததும் இந்த நச்சு செடியின் விதைதான். 

கடந்த 14 வருடங்களில், தமிழ் நாட்டு தமிழர்கள், வாக்காளர் மத்தியில் நாதக புலிகளை எடுத்து சென்றது எவ்வளவு உண்மையோ அதேபோல் மிக பெரும் ஈழ/ விடுதலை புலிகள் மீதான வெறுப்பும் அங்கே குறித்த சாரார் மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

2009 ற்கு முன்னர் இருந்த புலிகள்/ஈழ பிரச்சனை கட்சிக்கு அப்பாற்பட்ட விடயம் என்ற நிலை இப்போ அங்கு இல்லை.

இன்று புலிகள்/ஈழத்தமிழர் என்றால் அது ஒரு கட்சி சார்ந்தோர் மட்டுமே என்ற நிலை அங்கே உருவாக்கப்பட்டு, எமக்கு செயற்கையாக பல இலட்சம் எதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் சொன்ன விடயம் இந்த நச்சு செடியின் ஒரு கிளைதான். விதையை பற்றி நானும் பலரும் இங்கே பல வருடங்களாக எழுதி வருகிறோம்.

இந்த செடியின்…விதையின் கருவூலம்…சாட்சாத்….அ றோ ஹராவேதான்.

றோ இலங்கையிலும், மாலை தீவிலும் மூக்குடை படலாம். ஆனால் அது முயலாமல் இருப்பதில்லை. அண்மைய போலி நாடகம் அவர்கள் இன்னும் இதில் முழு மூச்சாக இருப்பதையே காட்டுகிறது.

றோ எல்லாம் ஒரு மேட்டரே இல்லை…என சொல்பவர்கள்….அதன் செயல்களை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கவே அப்படி சொல்கிறார்கள் என்பது என் கருத்து.

கோசான் ஜி...இங்கு கனடாவிலும் மெல்லத்தெளிக்கப் படுகிறது...பட்டவர்த்தனம்...தெருக்கூத்தில்...அசனிக்கு பூத்திறந்து..காசு சேர்த்ததும்...தமிழ்க்கடைவழிய உண்டியல் வைத்தும் நடைபெறுகிறது...அதனைவிட மனோகணேசன் மேடையேறியதும்....தமிழ் அழகிப்போட்டியொன்றிற்கு இலங்கை இராசாங்க அமைச்சர் வருகைதந்து முடிசூட்டியதும் சும்மா செயலல்ல...இந்த் வருட தெருக்கூத்தில் பங்கும் கேட்பினம் ...அதனைவிட என் இனம் (கதைபெட்டியில் எனக்கு இட்டபெயர்😁🙃)நாம்தான் இலங்கையில் தமிழில் மூத்தகுடி என்று 2வது வருசம் வந்து புத்தகம் வித்து...மெல்ல மெல்ல செருகுகினம் நாளைக்கு  அவையும் அரை ரோட்டை பங்கு கேட்பினம் ...என்ன நடக்குதோ பாப்ப்பம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நீங்கள் தான் மாஞ்சு மாஞ்சு பாராட்டுறியள்.

கனடாவில் மாட்டிக்கிற மாதிரி வேலை.

அமேரிக்காவில் வேலை தொடங்க முதலே கைது.

மாலைதீவில் மெகா சொதப்பல்.

துவாரகா மேற்றர் சொதப்பலோ சொதப்பல்- சொன்னது உடான்சர்.

இலங்கையில், ஓரமா இரு என்று, கூப்பில இருத்திப் போட்டு கோத்தாவை, இறக்கி ரணில ஏத்தீற்றுது அமேரிக்கன் கவுண்டர் பார்ட்.

நீங்கள், பாவம், இரவிரவா, தண்ணீல வட சுடுறியள்!!

நாங்கள் என்ன வைச்சுக் கொண்டு வஞ்சணையே செய்யிறம். நல்லா இயங்கினா பராட்டிட்டுப் போறம்!!

அவ்வளவு தானே!!

Edited by Nathamuni

இப்பா யாரு மலையக தமிழர்கள் இலங்கையில் பாதி கேட்கப் போராப்ல?

மனோ கணேசனன் கனடா வர‌ கூடாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஓம் அல்வாயன் உங்கள் பார்வை இந்த விடயத்தில் மிக சரியானதே.

இப்போ ஈழத்தமிழர் ஒரு பக்கம், தமிழக+மலையக தமிழர் ஒரு பக்கம் என்ற மாயப்பகுப்பு ஒன்று தமிழகத்தில் வலிந்து உருவாக்கப்படுகிறது.

ஆனால் நீங்கள் ஒரு நச்சு செடியின் ஒரு கிளை வெளி வருவதை இப்போ கண்டு கொண்டீர்கள்.

ஆனால் இந்த நச்சு செடியின் விதை 2009 இல் தலைவர் இறந்த போதே தமிழ் நாட்டில் ஊன்றப்பட்டு விட்டது.

மேலே நீங்கள் சுட்டிய இந்த பிரித்தாளும் சூழ்சியின் ஆரம்ப புள்ளியே - திராவிட சாதிகள்/கட்சிகள் தமிழனுக்கு, குறிப்பாக ஈழத்தமிழனுக்கு எதிரானவை என்று தமிழ் நாட்டில் கட்டி அமைக்கப்பட்ட கருத்து நிலைதான்.

கட்சி அரசியல் தாண்டி, ஒட்டு மொத்த தமிழ் நாடும் ஈழ ஆதரவுதான் என்ற நிலையில் இருந்து, ஒரு பகுதி மட்டுமே ஈழ ஆதரவு மறுபகுதி (ஒட்டு மொத்தமாக சில சாதியை சேர்ந்தோர்) ஈழத்தமிழரின் துரோகிகள் என கட்டமைக்கப்பட்டதும், அதன் தொடர்சியாக ஒரு பகுதி கருணாநிதி பிறந்த நாளில் அவரை அசிங்கபடுத்த, மறுபகுதி தலைவர் பிறந்த நாளில் அவரை உருவக் கேலி செய்ய வழி சமைத்ததும் இந்த நச்சு செடியின் விதைதான். 

கடந்த 14 வருடங்களில், தமிழ் நாட்டு தமிழர்கள், வாக்காளர் மத்தியில் நாதக புலிகளை எடுத்து சென்றது எவ்வளவு உண்மையோ அதேபோல் மிக பெரும் ஈழ/ விடுதலை புலிகள் மீதான வெறுப்பும் அங்கே குறித்த சாரார் மத்தியில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

2009 ற்கு முன்னர் இருந்த புலிகள்/ஈழ பிரச்சனை கட்சிக்கு அப்பாற்பட்ட விடயம் என்ற நிலை இப்போ அங்கு இல்லை.

இன்று புலிகள்/ஈழத்தமிழர் என்றால் அது ஒரு கட்சி சார்ந்தோர் மட்டுமே என்ற நிலை அங்கே உருவாக்கப்பட்டு, எமக்கு செயற்கையாக பல இலட்சம் எதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

நீங்கள் சொன்ன விடயம் இந்த நச்சு செடியின் ஒரு கிளைதான். விதையை பற்றி நானும் பலரும் இங்கே பல வருடங்களாக எழுதி வருகிறோம்.

இப்ப உங்கள் கருத்தின் மேற்பகுதிக்கு:

உங்கள் கவனிப்பும், அவதானிப்பும் ஒரு சதத்துக்கு கூட பிரயோசனம் இல்லை.

இலங்கைத் தமிழர் நலன் என்றுமே இந்தியாவின் முன்னுரிமையாக இருந்ததுமில்லை. இருக்கப் போவதுமில்லை.

நீங்கள் சொன்ன விச செடி 2009ல் அல்ல, 1991ல் இராஜிவ் கொலையுடன் ஊன்றப்பட்டது என்பது நிசமில்லையா என்ன?

புலிகள் எதிர்ப்பும், புலி ஆதரவாளர்கள் கைதும் நடந்தது.

அப்போதிருந்தே காங்கிரஸ் கருவறுக்க தருணம் பார்த்திருந்தது.

ஆக, 2009ல் இந்தியா கருவறுத்தல் முடிய, சத்தமில்லாமல் பூந்து விட்ட சீனனைப் பார்த்து மிரள்கிறது.

இன்றைய நிலையில் எமக்கு இழக்க எதுவுமே இல்லை. இந்தியாவுக்கு இழக்க பல உண்டு.

அதற்கு ஈழத்தமிழர் தேவை, எமக்கு தேவையில்லை. காரணம் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு முதுகில் குத்தப் பட்டுள்ளோம்.

தமிழகமோ, இந்தியாவோ ஏதாவது செய்யும் நிலையிலும் இல்லை. காத்திரமாக ஏதும் செய்யாது துவாரகா விசயம் போல குழப்பம் விளைவிக்கிறது.

நான் முன்னரே சொல்லிவிட்டேன். பந்து டெல்லியில் இல்லை. அது பீகீங், வாசிங்டன் பக்கம் போய் நீண்ட காலம்.

அதன் காரணமாக தமிழக அரசியல் குறித்த உங்கள் ஈழ அரசியல் ஊடான பார்வை தேவையற்றதும், முக்கியமானதும் அல்ல. அதை ஈழ அரசியலுடன் குழப்பாது அதன் போக்கிலேயே பார்ப்பதே சிறப்பு!

நீங்களும் குழம்பி, இங்கே எங்களையும் குழப்புகிறீர்கள்!!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

கோசான் ஜி...இங்கு கனடாவிலும் மெல்லத்தெளிக்கப் படுகிறது...பட்டவர்த்தனம்...தெருக்கூத்தில்...அசனிக்கு பூத்திறந்து..காசு சேர்த்ததும்...தமிழ்க்கடைவழிய உண்டியல் வைத்தும் நடைபெறுகிறது...அதனைவிட மனோகணேசன் மேடையேறியதும்....தமிழ் அழகிப்போட்டியொன்றிற்கு இலங்கை இராசாங்க அமைச்சர் வருகைதந்து முடிசூட்டியதும் சும்மா செயலல்ல...இந்த் வருட தெருக்கூத்தில் பங்கும் கேட்பினம் ...அதனைவிட என் இனம் (கதைபெட்டியில் எனக்கு இட்டபெயர்😁🙃)நாம்தான் இலங்கையில் தமிழில் மூத்தகுடி என்று 2வது வருசம் வந்து புத்தகம் வித்து...மெல்ல மெல்ல செருகுகினம் நாளைக்கு  அவையும் அரை ரோட்டை பங்கு கேட்பினம் ...என்ன நடக்குதோ பாப்ப்பம்..

உங்களின் கருத்தில் இருப்பது பச்சை இனவாதம். மலையகத் தமிழர்களை இன்னொரு இனமாக தமிழர்களில் இருந்து வேறுபடுத்தி பார்க்கும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

தொடர்ச்சியாக மலையகத் தமிழர்களை எழுனப்படுத்தும் குறுகிய பார்வை.

ஆசாணி வெல்வதை பொறுக்க முடியாமல் உங்கள் யாழ்ப்பாண மைய வாதம் அதனை எதிர்கின்றது.

மனோ கணேசன் கனடா வருவதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? வடிவேல் சுரேஷ் தமிழகம் செல்வதால் என்ன பிரச்சனை? தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் சொத்துக்களை சேர்த்து அங்கு சென்று வருவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா, அல்லது கனடாவுக்கு உண்டியல் குலுக்க வருவது தெரியாதா?

யாழ் இணையமும் உங்களின் மலையக தமிழர்களுக்கு எதிரான அயோக்கியத்தனமான கருத்துகளுக்கு இடம் அளிப்பது வருத்தம் அளிக்கிறது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வைரவன் said:

வைரவரே...என்னுடைய கருத்தை ஊன்றீ  வாசித்தால் தெரியும் அதன் உட்கரு.....சிங்கள   அரசின் மறைமுக ஊடுருவல்  எப்படி நடக்கிறது என்பதே தவிர...உடைப்பை செய்வதற்கு ...கருவி அவர்களே  தவிர...மலையக அதுவேசத்தை நான் கக்கவில்லை ..கக்கவும் மாட்டேன்...இது விளங்காமல் வரிந்து கட்டிக்கொண்டு வந்து...யாழ்களத்தையும் வம்புக்கிழுத்து ...வருகின்றீர்கள்..  சரிகம  நிகழ்வில் யாழ்ப்பாண   குழந்தைக்கு நான் சப்போர்ட் பண்ணினேனா...கோமாளீக்கூத்துக்கள்  நான் பார்ப்பதில்லை...கரு விடஐயம் என்ன வென்று பாராம கருத்து எழுதவேண்டாமே..

3 hours ago, colomban said:

இப்பா யாரு மலையக தமிழர்கள் இலங்கையில் பாதி கேட்கப் போராப்ல?

மனோ கணேசனன் கனடா வர‌ கூடாதா? 

ஆரு சொன்னது வரவேண்டாமென்று...இவ்வளவுகாலமும் எங்கை போனவர் என்பதுதான் ..கேள்வி ..நல்லாட்சியில் நமக்கு செய்தது நன்றாகத் தெரியுமே....அய்யா பலஸ்தீனத்து கொடிபிடியுங்க...கூட்டம் போடுங்க அது உங்களுக்கு  ..காணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

நீங்கள் தான் மாஞ்சு மாஞ்சு பாராட்டுறியள்.

கனடாவில் மாட்டிக்கிற மாதிரி வேலை.

அமேரிக்காவில் வேலை தொடங்க முதலே கைது.

மாலைதீவில் மெகா சொதப்பல்.

துவாரகா மேற்றர் சொதப்பலோ சொதப்பல்- சொன்னது உடான்சர்.

இலங்கையில், ஓரமா இரு என்று, கூப்பில இருத்திப் போட்டு கோத்தாவை, இறக்கி ரணில ஏத்தீற்றுது அமேரிக்கன் கவுண்டர் பார்ட்.

நீங்கள், பாவம், இரவிரவா, தண்ணீல வட சுடுறியள்!!

நாங்கள் என்ன வைச்சுக் கொண்டு வஞ்சணையே செய்யிறம். நல்லா இயங்கினா பராட்டிட்டுப் போறம்!!

அவ்வளவு தானே!!

நான் ரோவை பாராட்டவில்லை.

அவர்கள் என்ன நகர்வு செய்கிறார்கள் என எனக்கு படுவதை எழுதுகிறேன்.

ரோ கனடா முதல் போலி-கா வரை சொதப்புகிறது என்பது உண்மை ஆனால், தொடர்ந்தும் எமது விடயத்தில் இந்தியாவை நிலை நிறுத்த முயல்கிறது.

இந்த முயற்சியை நாம் இனம் காண வேண்டும்.

அதைத்தான் நான் செய்கிறேன்.

நான் எனது வாழ்வின் முடிவு மட்டும் ரோவை இட்டு விழிப்பாக இருக்குமாறு என் மக்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருப்பேன்.

ரோவை நாம் ஏன் பாராட்ட வேணும்?

ஆனால் ரோ எமது விடயத்தில் செல்லாக்காசு என மக்களை கண்மூட வைப்பது ஆபத்தானது. அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்.

1 hour ago, Nathamuni said:

இப்ப உங்கள் கருத்தின் மேற்பகுதிக்கு:

உங்கள் கவனிப்பும், அவதானிப்பும் ஒரு சதத்துக்கு கூட பிரயோசனம் இல்லை.

இலங்கைத் தமிழர் நலன் என்றுமே இந்தியாவின் முன்னுரிமையாக இருந்ததுமில்லை. இருக்கப் போவதுமில்லை.

நீங்கள் சொன்ன விச செடி 2009ல் அல்ல, 1991ல் இராஜிவ் கொலையுடன் ஊன்றப்பட்டது என்பது நிசமில்லையா என்ன?

புலிகள் எதிர்ப்பும், புலி ஆதரவாளர்கள் கைதும் நடந்தது.

அப்போதிருந்தே காங்கிரஸ் கருவறுக்க தருணம் பார்த்திருந்தது.

ஆக, 2009ல் இந்தியா கருவறுத்தல் முடிய, சத்தமில்லாமல் பூந்து விட்ட சீனனைப் பார்த்து மிரள்கிறது.

இன்றைய நிலையில் எமக்கு இழக்க எதுவுமே இல்லை. இந்தியாவுக்கு இழக்க பல உண்டு.

அதற்கு ஈழத்தமிழர் தேவை, எமக்கு தேவையில்லை. காரணம் நம்பிக்கை வைக்க முடியாத அளவுக்கு முதுகில் குத்தப் பட்டுள்ளோம்.

தமிழகமோ, இந்தியாவோ ஏதாவது செய்யும் நிலையிலும் இல்லை. காத்திரமாக ஏதும் செய்யாது துவாரகா விசயம் போல குழப்பம் விளைவிக்கிறது.

நான் முன்னரே சொல்லிவிட்டேன். பந்து டெல்லியில் இல்லை. அது பீகீங், வாசிங்டன் பக்கம் போய் நீண்ட காலம்.

அதன் காரணமாக தமிழக அரசியல் குறித்த உங்கள் ஈழ அரசியல் ஊடான பார்வை தேவையற்றதும், முக்கியமானதும் அல்ல. அதை ஈழ அரசியலுடன் குழப்பாது அதன் போக்கிலேயே பார்ப்பதே சிறப்பு!

நீங்களும் குழம்பி, இங்கே எங்களையும் குழப்புகிறீர்கள்!!

ஒரு குழப்பமும் இல்லை.

ரஜீவ் கொலையின் பின் பிராமணர், காங்கிரசார், வட இந்திய வம்சாவழியினர், இந்து, ஜெ, போன்றோர்தான் புலிகளை எதிர்த்தனர். சாதாரண மக்கள் எதிர்க்கவில்லை. வெளியில் வந்து ஆதரிக்கும் நிலை இருக்க இல்லை.

ஆனால் தமிழ்நாட்டின் சாமன்ய மக்கள் புலிகளையோ, ஈழ தமிழரையோ எதிர்க்கவில்லை.

ஆனால் 2009 க்கு பின் தமிழ் நாட்டில் திமுக தொண்டகள், அதிமுக தொண்டர்கள், பல ஒட்டு மொத்த சாதியினர் என பலர் புலிகள்/ஈழத்தமிழருக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளனர்.

இது நிச்சயம் றோவின் grand scheme இன் ஒரு அங்கம்தான். இதை நடத்துவதில் முக்கிய பங்காற்றியவர், ஆற்றுபவர் சீமான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

நான் ரோவை பாராட்டவில்லை.

அவர்கள் என்ன நகர்வு செய்கிறார்கள் என எனக்கு படுவதை எழுதுகிறேன்.

ரோ கனடா முதல் போலி-கா வரை சொதப்புகிறது என்பது உண்மை ஆனால், தொடர்ந்தும் எமது விடயத்தில் இந்தியாவை நிலை நிறுத்த முயல்கிறது.

இந்த முயற்சியை நாம் இனம் காண வேண்டும்.

அதைத்தான் நான் செய்கிறேன்.

நான் எனது வாழ்வின் முடிவு மட்டும் ரோவை இட்டு விழிப்பாக இருக்குமாறு என் மக்களுக்கு நினைவு படுத்தி கொண்டே இருப்பேன்.

ரோவை நாம் ஏன் பாராட்ட வேணும்?

ஆனால் ரோ எமது விடயத்தில் செல்லாக்காசு என மக்களை கண்மூட வைப்பது ஆபத்தானது. அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்.

ஒரு குழப்பமும் இல்லை.

ரஜீவ் கொலையின் பின் பிராமணர், காங்கிரசார், வட இந்திய வம்சாவழியினர், இந்து, ஜெ, போன்றோர்தான் புலிகளை எதிர்த்தனர். சாதாரண மக்கள் எதிர்க்கவில்லை. வெளியில் வந்து ஆதரிக்கும் நிலை இருக்க இல்லை.

ஆனால் தமிழ்நாட்டின் சாமன்ய மக்கள் புலிகளையோ, ஈழ தமிழரையோ எதிர்க்கவில்லை.

ஆனால் 2009 க்கு பின் தமிழ் நாட்டில் திமுக தொண்டகள், அதிமுக தொண்டர்கள், பல ஒட்டு மொத்த சாதியினர் என பலர் புலிகள்/ஈழத்தமிழருக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளனர்.

இது நிச்சயம் றோவின் grand scheme இன் ஒரு அங்கம்தான். இதை நடத்துவதில் முக்கிய பங்காற்றியவர், ஆற்றுபவர் சீமான்.

அது உஙகள் அவதானிப்பு.

எனது அவதானிப்பு வேறு.

அது உங்களினதிலும் வேறானது. அது குறித்து பல முறை சொல்லி விட்டதால், மீண்டும் சொல்வது தேவையற்றது.

ஆனால் நான் சொல்வது, உங்கள் தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடு குறித்த கவலை தேவையற்றதும், காலம்கடந்த காலாவதியான ஒன்றுமாகும்.

சீமான் தனது அரசியலை செய்யட்டும். அதனை இழுத்து எமதரசியலுடன் குழப்பாதிருப்பது தான் உசிதம்.

புரியாது என நிணைக்கிறேன்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஈனால் நான் சொல்வது, உங்கள் தமிழகத்தின் ஈழத்தமிழர் ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடு குறித்த கவலை தேவையற்றதும், காலம்கடந்த காலாவதியான ஒன்றுமாகும்.

இல்லை. 

எமக்கு தனி நாடு அமைந்தாலே கூட, அதன் பின்னும் ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவு எமக்கு தேவைபட்டு கொண்டே இருக்கும்.

தமிழகத்தின் பலப்பு - எமக்கு ஒரு போதும் காலாவதியாக முடியாது. அதை நாம் தொலைக்கவும் கூடாது.

3 minutes ago, Nathamuni said:

சீமான் தனது அரசியலை செய்யட்டும். அதனை இழுத்து எமதரசியலுடன் குழப்பாதிருப்பது தான் உசிதம்.

நான் மேலே சொன்னதை ஏற்போருக்கு - எமது அரசியலுடன் இது எப்படி பின்னி, பிணைந்துள்ளது என்பது புரியும்.

ஈழதமிழர் அனைவரும் சீமானின் பின் இல்லை என ஏனைய தமிழக மக்களுக்கு எடுத்து காட்டுவதே, நாம் அனைவரையும் தக்க வைக்க, இப்போ உள்ள ஒரே வழி. 

இதை சிலர் புரியாதது போல் நடிப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

இல்லை. 

எமக்கு தனி நாடு அமைந்தாலே கூட, அதன் பின்னும் ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவு எமக்கு தேவைபட்டு கொண்டே இருக்கும்.

தமிழகத்தின் பலப்பு - எமக்கு ஒரு போதும் காலாவதியாக முடியாது. அதை நாம் தொலைக்கவும் கூடாது.

நான் சொல்வதை கவனிக்க மறுக்கிறீர்களா - பிடிவாதமாக.

தமிழீழத்துக்கு முழு எதிர்ப்பு இந்தியாவிடம் இருந்து தான் வந்தது, வரும்.

அது ஒரு போதுமே எங்கள் நலனில் அக்கறைப்படவும் இல்லை. படப் போவதும் இல்லை.

இத்தனை பட்டறிவுக்குப் பிறகும் இதனை உணராவிடில் என்னதான் சொல்வது?

இப்போதும் இந்திய முயல்வுகள் அக்கறையால் அல்ல, சீனாவின் நகர்வால்.

என்னைப் பொறுத்தவரை, சாட்சிக்காரனால் நாசமறுந்தது போதும். சண்டைக் காரனுடன் பார்த்துக் கொள்வோம்.

தமிழ் நாட்டை தனித்தே அதன் அரசியலை மட்டுமே கவனிப்பதால் அலட்டிக் கொள்வதில்லை.

தமிழ்நாட்டில் யாருமே, சரத் வீரசேகர என்ன சொல்கிறார், டக்ளஸ் சொல்வதென்ன, மகிந்த இன்று என்ன செய்தார் என்று அங்கலாய்பதில்லை.

நாமோ, அண்ணாமலை முதல்.... எச்ச ராசா குடியாத்தம் குமரன், ED , IT raids வரை பூந்து பார்த்து தமிழக அரசியலை பார்த்து வெட்டியா கவலைப்படுகிறோம் இல்லையா?

கேட்டால், அழகான காரணம்வேற வைத்திருக்கிறோம். அது...அவர்கள் அரசியலானது எமக்கு முக்கியம் என்று!

மாலைதீவு போலவே இந்தியா இலங்கையை கோட்டை விடும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

அது சீனாவா, மேற்கா என்பதே உங்கள் பார்வையாக இருக்க வேண்டும்.

அப்புறம் உங்கள் விருப்பம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

தமிழீழத்துக்கு முழு எதிர்ப்பு இந்தியாவிடம் இருந்து தான் வந்தது, வரும்.

அது ஒரு போதுமே எங்கள் நலனில் அக்கறைப்படவும் இல்லை. படப் போவதும் இல்லை.

இத்தனை பட்டறிவுக்குப் பிறகும் இதனை உணராவிடில் என்னதான் சொல்வது?

இதை நான் எங்கே மறுத்தேன்.

இதை உங்களை விட அதிகமாக யாழில் நான் எழுதியுள்ளேன்.

1 hour ago, Nathamuni said:

இப்போதும் இந்திய முயல்வுகள் அக்கறையால் அல்ல, சீனாவின் நகர்வால்.

ஆம் இதிலும் 100% உடன்பாடே.
ஆனால் இந்த நகர்வுகளை/முயல்வுகளை இட்டு நாம் அசிரத்தையாக இருக்க கூடாது.

1 hour ago, Nathamuni said:

என்னைப் பொறுத்தவரை, சாட்சிக்காரனால் நாசமறுந்தது போதும். சண்டைக் காரனுடன் பார்த்துக் கொள்வோம்.

சண்டைகாரன் = இலங்கை?

இது ஈழத்தமிழர் தற்கொலை செய்வதற்கு ஒப்பானது.

தனியே எம்மோடு சிங்களம் டீல் பண்ணினால் - எமக்கு நாமம் கரண்டீட்.

1 hour ago, Nathamuni said:

தமிழ் நாட்டை தனித்தே அதன் அரசியலை மட்டுமே கவனிப்பதால் அலட்டிக் கொள்வதில்லை

நான் அதை ஈழத்தமிழர் நீண்ட கால நலனோடு பார்கிறேன். அதுதான் சரி.

1 hour ago, Nathamuni said:

தமிழ்நாட்டில் யாருமே, சரத் வீரசேகர என்ன சொல்கிறார், டக்ளஸ் சொல்வதென்ன, மகிந்த இன்று என்ன செய்தார் என்று அங்கலாய்பதில்லை.

ஒரு போதும் இல்லை. இனியும் இல்லை.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நாமோ, அண்ணாமலை முதல்.... எச்ச ராசா குடியாத்தம் குமரன், ED , IT raids வரை பூந்து பார்த்து தமிழக அரசியலை பார்த்து வெட்டியா கவலைப்படுகிறோம் இல்லையா?

நீங்கள் சீமான் அரசியலை எதிர்பதையும், தமிழ் நாட்டு, இந்திய, அமேரிக்க, அரசியல் மீது வரும் ஆர்வத்தையும் போட்டு குழப்புகிறீர்கள்.

தமிழக அரசியலை பொழுதுபோக்காக பார்பது வேறு.

ஈழதமிழரின் நீண்டகால நலனை முன் வைத்து சீமானை எதிர்ப்பது வேறு.

1 hour ago, Nathamuni said:

கேட்டால், அழகான காரணம்வேற வைத்திருக்கிறோம். அது...அவர்கள் அரசியலானது எமக்கு முக்கியம் என்று!

நிச்சயம் தமிழக ஆதரவு எமக்கு எப்போதும் இன்றி அமையாதது. ஆகவே அவர்கள் அரசியலில் நாம் பேசுபொருளாக்க படும் போது அதையிட்டு நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும்.

இல்லை என்றால் எமக்கு தெரியாமலே அங்கே பல எதிர்களை உருவாக்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மாலைதீவு போலவே இந்தியா இலங்கையை கோட்டை விடும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

முன்பே சொன்னேன். எனக்கு பூகோள சாத்திரிகளில் நம்பிக்கை இல்லை.

மாலைதீவை இப்போ கோட்டை விடும், அடுத்த ஐந்து வருடத்தில் ஆட்சியை மாற்றி பிடிக்கும், பிடிக்காமல் போகும்—-ஆனால் இந்தியா முயன்று கொண்டே இருக்கும்.

இலங்கை, நேபாளம், மாலதீவு எங்கும்.

இந்தியா முயலும் வரை - அது எமக்கு ஒரு risk factor - அது வரை அதன் நகர்வுகளை இட்டு நாம் அவதானமாக இருக்க வேண்டும். மேலதிகமாக risk mitigation நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

@பாலபத்ர ஓணாண்டி சொல்வது போல் வார்டனை போட்டு வெளுப்பது - இந்த ரோ/இந்திய முயல்வுக்கு எதிரான ஒரு சின்ன என்னாலான risk mitigation நடவடிக்கை.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

நீங்கள் எத்தணை பதில்கள் போட்டாலும் என் கருத்து ஒன்றே!

தமிழக ஆதரவு நிலை வருவதற்கு முன்பே எமக்கு ஓர் தீர்வு வரும். அது இந்தியாவால் அல்ல.

உங்களைப் போல கற்பணை உலகில் நான் இருக்கப் போவதில்லை - பட்டறிவு அப்படி.

நாம் தமிழகத்துக்கு அந்நியராக, வெளிநாட்டவராக இருப்போம்.

அவர்கள் தமது அரசியலுக்கு பிரபாகரனைக் கொண்டு சென்றால் மகிழ்ச்சி.

அதனால் எமக்கு நன்மை அல்லது தீங்கு என்னும் உங்கள் ஆய்வு பிரயோசனமற்றதும், தேவையற்றதும் என்பதே எனது பார்வை.

சாதாரண மீன்பிடி பிரச்சணை. தமிழகம் தனது நலனையே பார்க்கும். எமது நலனை அல்ல.

இது புரிந்தால், உங்கள் கவலைகள் தேவையற்றது என்பது புரியும்.

இந்தியா, இலங்கை விசயத்தில் கோட்டையை எப்போதோ விட்டு விட்டது.

இன்று இலங்கை மேற்கு -சீன ஆடுகளம்.

நேற்று மாலை பிரித்தானிய பாரளுமன்ற தெரிவுக்குழு விவாதத்தை பாருங்கள். பேசிய எம்பீக்கள் நமது வரலாறை, அவலத்தை புட்டு, புட்டு வைத்தார்கள்.

சீனாவின் பிடிக்குள் இலங்கை செல்வது தடுக்கப்படவேண்டுமாம்.

இப்படி நிலைமை இருக்க, நீங்கள், டீம்கா, நாதக என்று தமிழக லோக்கல் அரசியலுக்குள் நின்று சிரிப்பு காட்டுகிறீர்களோ என்று தோன்றுகிறது.

வெளீல வாங்கோ, உடான்சரே!!

https://parliamentlive.tv/Event/Index/5dc6a704-327f-48a7-b6ca-022348fc6458

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

நீங்கள் எவ்வளவுதான் குத்தி முறிந்தாலும் கூட, எனது நிலைப்பாடும் மாறாது. 

தமிழக மக்களிடம் இருந்து எம்மை அந்நியபடுத்த முயலும் சக்திகளின் முகவர்களை வச்சு செய்வதும் நிற்காது 🤣.

இந்தியா-மேற்கின் உறவு நிலை என்ன என்பதை கூட சிந்திக்காமல், ஏதோ இந்தியாவும் மேற்கும் எதிரிகள் என்பதை போல நீங்கள் ஆரூடம் கூறி கொண்டு இருப்பதை எல்லாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

இப்போ இந்தியாவுக்கும் மேற்குக்கும் இடையே நடப்பது ஆட்புலம் வரையறுக்கும் செல்ல சண்டை அல்லது ஊடல்.

சீனா எதிர் மேற்கு என நிலமை இறுகும் போது - நிச்சயம் மேற்கின் கூட்டணியில் பிராந்தியந்தின் கண்காணியாக அமையப்போவது இந்தியாவே.

ஆகவே நாம் ஒட்டுமொத்தமாக இந்தியாவை தவிர்த்து மேற்கை அணுகுவது என்பது சாத்தியமே இல்லாத கற்பனை.

2009 ற்கு முன்பே கூட ஒவ்வொரு மேற்கு இராதந்திரியும் டெல்லி போய்த்தான், இலங்கை வந்தார்கள்.

அப்போதைக்கு விட இப்போ இந்தியாவின் உலக வகிபாகமும், இந்தியாவுக்கான மேற்கின் தேவையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது (அண்மைய மூக்குடைவுகள் இருப்பினும்).

ஆப்பிள் உட்பட பல அமெரிக்க கம்பெனிகள் சீனாவில் இருந்து தயாரிப்பை இந்தியா நோக்கி நகர்த்துகிறன.

இந்தியாவின் நிபந்தனைகள் பலதை ஏற்று ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய தவமாய், தவமிருக்கிறது பிரிட்டன்.

தனியே ரோவின் கோமாளித்தனம் மட்டும் இந்தியா அல்ல. மேற்குக்கு தேவைப்படும், எம்மிடம் இல்லாத பல விசயங்கள் இந்தியா வசம் உள்ளது.

ஆகவே நாம் மேற்கை தனியே அணுகினாலும், மேற்கு இந்தியா ஊடாகவெ எம்மை அணுகும்.

இதை புரிந்து கொண்டால், தமிழகம் எமக்கு ஏன் முக்கியம் என்பதை புரியலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

உங்கள் கருத்தை மாத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.

அதே போல் அடுத்தவர் கருத்தை மாத்த வேண்டிய தேவையும் யாருக்கும் இல்லையே.

மேற்கு இந்திய உறவு நிலையை அமெரிக்கா - கனடாவில் நடப்பதை வைத்தே பார்க்கலாம்.

அடுத்து இலங்கையில் நடந்ததை வைத்தும் சொல்லலாம்.

ஆப்பிள் சீனாவிலிருந்து இந்தியா மட்டுமல்ல, வியட்னாமுக்கும் நகர்த்துகிறது.

இந்தியாவின் பெரும் பிரச்சணையே புரையோடியுள்ள ஊழல்.

சீனாவில் ஊழல் இல்லை. செய்தால் வெடி விழும்.

இந்தியா அயலில் ஒரு நட்பான நேச நாட்டை கொண்டிருக்கவில்லை. இருக்கப்போவதும் இல்லை.

துவாரகா விடயத்தில் நான் ஆரம்பித்த திரியில், இலங்கையில் இன மத பேதமின்றி மக்கள் இந்தியாமேல் எக்காலமும் நம்பிக்கைவைக்க மாட்டார்கள் என்றேன்.

நீங்கள் மறுதலிக்கவில்லை. நல்ல பதிவு என்று வேறு சொன்னீர்கள்,

மேற்கு இந்தியா ஊடாகவே எம்மை அணுகும் என்கிறீர்கள். அப்படியாயின் கோத்தாவை இறக்கி இந்தியா விரும்பாத ரணிலை ஏத்தியது எப்படி?

2009 நிலை 2023ல இல்லை. அப்போது சீனா களத்தில் இல்லை. இந்தியா போரை முடித்து சாகவாசமாக வர, மகிந்தவை வைத்து உள்ள இறங்கிவிட்டது சீனா.

இனி, சீனாவை, இந்தியா அசைக்க முடியாது. 

ஆக உங்கள் கற்பணையில் இல்லை, நிதர்சணம்.

சீனாவை இந்தியாவால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் தான், இம்ரான் கானும், கோத்தாவும் இறக்கப்பட்டனர்.

இலங்கையிலும், பாகிஸ்தானிலும் இராணுவம் அமெரிக்க சொல் கேட்க்கும் தயார் நிலையிலே வைக்கப்பட்டுள்ளது.

புரிந்தால், இந்திய புகழ் பாடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

சித்தப்பருக்கு மீசை விழுந்தால் அத்தை என்று கூப்பிடுவோம்.

அதுவரை சில்லறையை சிதறாமல் இருப்போமா, உடான்சரே! 😂🤣

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

துவாரகா விடயத்தில் நான் ஆரம்பித்த திரியில், இலங்கையில் இன மத பேதமின்றி மக்கள் இந்தியாமேல் எக்காலமும் நம்பிக்கைவைக்க மாட்டார்கள் என்றேன்.

நீங்கள் மறுதலிக்கவில்லை. நல்ல பதிவு என்று வேறு சொன்னீர்கள்,

🤣 நீங்கள் பூகோள அரசியலை ஏதோ புருசன் பெஞ்சாதி சண்டை போல அணுகுகிறீர்கள்.

இலங்கையில் சிங்களவர், முஸ்லிம் ஒரு போதும் இந்தியாவை நம்பவில்லை. தமிழர் 87/2009 பாடத்தின் பின் நம்ப போவதில்லை.

இது உண்மையே.

ஆனால் யார் இந்தியாவை நம்புங்கோ எண்டு இப்ப சொன்னது?

ஒருவரை நம்பி பழகுவது என்பது வேறு, அவர்களோடு ஒரு professional dealing வைத்திருப்பது வேறு.

நாம் தலைகீழாக நின்றாலும் இந்தியாவோடு டீல் பண்ணாமல் மேற்கு எம்மோடு டீல் பண்ணாது.

9 minutes ago, Nathamuni said:

மேற்கு இந்தியா ஊடாகவே எம்மை அணுகும் என்கிறீர்கள். அப்படியாயின் கோத்தாவை இறக்கி இந்தாயா விரும்பாத ரணிலை ஏத்தியது எப்படி?

இந்தியாவின் தெரிவு அல்லாத ஒருவரை இலங்கையில் ஏத்த கூடிய வல்லமை எமக்கு உண்டு என இந்தியாவுக்கு காட்ட.

இதைத்தான் ஊடல் என்றேன். மேற்கும் இந்தியாவும் இப்போ testing the waters. யாருக்கு என்ன வகிபாகம் என்பதை, முடிவு செய்யும் ஊடல் இது.

2 உலக யுத்தத்தின் முடிவு- 1960 வரை பிரிட்டனும், அமெரிக்காவும் இப்படி ஒரு ஊடல் நாடகத்தை ஆடின. அதன் முடிவில் இதுவரை ராஜாவாக இருந்த பிரிட்டன் இனி கூஜா, அமெரிக்காதான் ராஜா என பிரிட்டன் ஏற்கும் நிலைக்கு அமெரிக்காவால் தள்ளப்பட்டது.

இப்போ இந்தியா-மேற்கு உறவில் இந்தியாவின் வகிபாகம் என்ன என்பதை தீர்மானிக்கும் ஊடல் நிகழ்கிறது. அதன் ஒரு சிறு அங்கமே இலங்கை நிகழ்வுகள்.

19 minutes ago, Nathamuni said:

சீனாவை இந்தியாவால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் தான், இம்ரான் கானும், கோத்தாவும் இறக்கப்பட்டனர்.

இலங்கையிலும், பாகிஸ்தானிலும் இராணுவம் அமெரிக்க சொல் கேட்க்கும் தயார் நிலையிலே வைக்கப்பட்டுள்ளது.

ஓம். ஆனால் இதற்காக இந்தியாவை மேற்கு புறம் தள்ளி நடக்காது.

தெற்காசியாவில் - சில நகர்வுகளை மேற்கு செய்கிறது - ஆனால் எவருக்காகவும் இந்தியாவை புறம் தள்ளும் முடிவை மேற்கு எடாது. அது மேற்கின் பார்வையில் மிக மோசமான முடிவாக இருக்கும்.

எமக்காக அல்ல, இலங்கைக்காக கூட அல்ல, பாகிஸ்தானுக்காக கூட மேற்கு இந்தியாவை புறம் தள்ளாது.

22 minutes ago, Nathamuni said:

புரிந்தால், இந்திய புகழ் பாடிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

நீங்கள் சகலதையும், ஆதரவு, எதிர்ப்பு, புகழ் பாடல் என்ற குறுகிய வட்டத்துள் பார்ப்பதாக படுகிறது.

எதையும் எமது ஆசாபாசங்களை தள்ளி வைத்து விட்டு, objective ஆக அணுக வேண்டும்.

உலகில் மேற்கு நாடுகள், ஜப்பானுக்கு அடுத்து, அமெரிக்காவுக்கு அதிகம் தேவைப்படும் நாடு இந்தியா. அவர்கள் மீது எமக்கு வெறுப்பு இருக்கிறது. அதற்காக அவர்கள் சுண்டங்காய் என நாம் குறைமதிப்பீடு செய்வது எமது மடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

🤣 நீங்கள் பூகோள அரசியலை ஏதோ புருசன் பெஞ்சாதி சண்டை போல அணுகுகிறீர்கள்.

இலங்கையில் சிங்களவர், முஸ்லிம் ஒரு போதும் இந்தியாவை நம்பவில்லை. தமிழர் 87/2009 பாடத்தின் பின் நம்ப போவதில்லை.

இது உண்மையே.

ஆனால் யார் இந்தியாவை நம்புங்கோ எண்டு இப்ப சொன்னது?

ஒருவரை நம்பி பழகுவது என்பது வேறு, அவர்களோடு ஒரு professional dealing வைத்திருப்பது வேறு.

நாம் தலைகீழாக நின்றாலும் இந்தியாவோடு டீல் பண்ணாமல் மேற்கு எம்மோடு டீல் பண்ணாது.

இந்தியாவின் தெரிவு அல்லாத ஒருவரை இலங்கையில் ஏத்த கூடிய வல்லமை எமக்கு உண்டு என இந்தியாவுக்கு காட்ட.

இதைத்தான் ஊடல் என்றேன். மேற்கும் இந்தியாவும் இப்போ testing the waters. யாருக்கு என்ன வகிபாகம் என்பதை, முடிவு செய்யும் ஊடல் இது.

2 உலக யுத்தத்தின் முடிவு- 1960 வரை பிரிட்டனும், அமெரிக்காவும் இப்படி ஒரு ஊடல் நாடகத்தை ஆடின. அதன் முடிவில் இதுவரை ராஜாவாக இருந்த பிரிட்டன் இனி கூஜா, அமெரிக்காதான் ராஜா என பிரிட்டன் ஏற்கும் நிலைக்கு அமெரிக்காவால் தள்ளப்பட்டது.

இப்போ இந்தியா-மேற்கு உறவில் இந்தியாவின் வகிபாகம் என்ன என்பதை தீர்மானிக்கும் ஊடல் நிகழ்கிறது. அதன் ஒரு சிறு அங்கமே இலங்கை நிகழ்வுகள்.

ஓம். ஆனால் இதற்காக இந்தியாவை மேற்கு புறம் தள்ளி நடக்காது.

தெற்காசியாவில் - சில நகர்வுகளை மேற்கு செய்கிறது - ஆனால் எவருக்காகவும் இந்தியாவை புறம் தள்ளும் முடிவை மேற்கு எடாது. அது மேற்கின் பார்வையில் மிக மோசமான முடிவாக இருக்கும்.

எமக்காக அல்ல, இலங்கைக்காக கூட அல்ல, பாகிஸ்தானுக்காக கூட மேற்கு இந்தியாவை புறம் தள்ளாது.

நீங்கள் சகலதையும், ஆதரவு, எதிர்ப்பு, புகழ் பாடல் என்ற குறுகிய வட்டத்துள் பார்ப்பதாக படுகிறது.

எதையும் எமது ஆசாபாசங்களை தள்ளி வைத்து விட்டு, objective ஆக அணுக வேண்டும்.

உலகில் மேற்கு நாடுகள், ஜப்பானுக்கு அடுத்து, அமெரிக்காவுக்கு அதிகம் தேவைப்படும் நாடு இந்தியா. அவர்கள் மீது எமக்கு வெறுப்பு இருக்கிறது. அதற்காக அவர்கள் சுண்டங்காய் என நாம் குறைமதிப்பீடு செய்வது எமது மடமை.

இந்தியா, இந்துத்துவாவுக்குள் போய் உடையும் என்பதும் உங்கள் கருத்து தானே.

இந்தியாவுடன் மேற்கு செய்வது பக்கா வியாபாரம். IT ஆட்களுக்குவேலை கொடுப்பது ஒரு புறம என்றால், இந்தியர்களின் purchasing power இணைக் கூட்டி தமது பொருட்களை விற்பது மறுபுறம். இந்த வகையில் இருபக்க சந்தையும் ஒவ்வொரு பக்கத்துக்கும் முக்கியமானது.

அது வேறு, பாதுகாப்பு கரிசணைவேறு.

இந்து சமுத்திரத்தில் எமது பாதுகாப்பு தொடர்பில் கரிசணைகள் உண்டு என பிரான்ஸ் தூதர் கருத்து இன்னமும் டெயிலி மிரர் hard talk பகுதியில் உள்ளது.

ஆகவே வியாபார நலன்கள் வேறு, பாதுகாப்பு நலன்கள் வேறு என்பதை புரிந்து கொள்வோம்.

அந்த பாதுகாப்பு நலன்கள் தொடர்பில் சீனாவின் ஆட்டத்தை சமாளிக்கும் திறன் இந்தியாவிடம் இல்லை என்பதை கண்டறிந்தே மேற்கு களம் இறங்கிவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆகவே வியாபார நலன்கள் வேறு, பாதுகாப்பு நலன்கள் வேறு என்பதை புரிந்து கொள்வோம்.

வல்லரசுகளின் அடிப்படையையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை இந்த கூற்று உணர்த்துகிறது. வியாபார நலனே, சகலதினும் அடிப்படை.

சவுதியில் அமெரிக்காவுக்கு என்ன பாதுகாப்பு நலன் ? வியாபார (எண்ணை) நலனை தக்க வைக்கவேண்டும். அதற்கு சவுதி மன்னரை பாதுகாக்க, அமெரிக்க தளத்தை அமைக்க வேண்டும்.

தய்வானை சீனா பிடித்தால், அமெரிக்காவுக்கு என்ன பாதுகாப்பு சிக்கல்? எதுவுமில்லை. ஆனால் பல வர்த்தக பின்னடைவுகள் வரும். ஆகவே அங்கும் பாதுகாப்பு நலன் உருவாக்கப்பட்டுள்ளது.

எது பாதுகாப்பு நலன் என்பதை தீர்மானிக்கும் அடிப்படை காரணியே - வியாபார நலந்தான்.

இது பூகோள அரசியலில் மிக அடிப்படையான பாலபாடம்.

8 minutes ago, Nathamuni said:

இந்தியா, இந்துத்துவாவுக்குள் போய் உடையும் என்பதும் உங்கள் கருத்து தானே.

சீச்சி அப்படி சாத்திரம் சொல்ல நான் என்ன நாதமுனியா🤣.

இந்துதுவா முழுமையாக அமல் படுத்த படின் இந்தியா உடைய வாய்பிருக்கு.

அப்படி உடையும் போது தமிழ் நாடு ஒரு பிராந்திய சக்தியாக வரும். 

அப்போ, இப்போ மேற்குக்கு தேவைப்படும் இடத்தில் இந்தியா இருப்பது போல், தமிழ்நாடு, ஏனைய பெரு மாநிலங்கள் இருக்கும்.

இது ஈழத்தமிழருக்கு ஒரு வரப்பிரசாதமான நிலையாக இருக்கும்.

இது எதிர்வுகூறலும் அல்ல, சாத்திரமும் அல்ல. இந்துதுவா இறுக்கி பிடித்து இந்தியா உடைந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றிய ஒரு educated guess.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

வல்லரசுகளின் அடிப்படையையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை இந்த கூற்று உணர்த்துகிறது. வியாபார நலனே, சகலதினும் அடிப்படை.

சவுதியில் அமெரிக்காவுக்கு என்ன பாதுகாப்பு நலன் ? வியாபார (எண்ணை) நலனை தக்க வைக்கவேண்டும். அதற்கு சவுதி மன்னரை பாதுகாக்க, அமெரிக்க தளத்தை அமைக்க வேண்டும்.

தய்வானை சீனா பிடித்தால், அமெரிக்காவுக்கு என்ன பாதுகாப்பு சிக்கல்? எதுவுமில்லை. ஆனால் பல வர்த்தக பின்னடைவுகள் வரும். ஆகவே அங்கும் பாதுகாப்பு நலன் உருவாக்கப்பட்டுள்ளது.

எது பாதுகாப்பு நலன் என்பதை தீர்மானிக்கும் அடிப்படை காரணியே - வியாபார நலந்தான்.

இது பூகோள அரசியலில் மிக அடிப்படையான பாலபாடம்.

ம்... என்னவொரு உடான்ஸ் விளக்கம்.

சவூதிக்குள் சீனா புகுந்து அமைதியாக அதகளம் செய்கிறது.

அமேசன் ஊடாக அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் சீனா வர்த்தக நலன்களைப் பேணுகிறது.

அதன் காரணமாக சீன பொருளாதாரம் உலகின் இரண்டாம் நிலையில்.

இது வேறு, பாதுகாப்பு கரிசணை வேறு.

இரண்டும் ஒன்றல்ல.

ஜேர்மனி மேற்கின் நண்பன் தான். ஆனால் அதனுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் அதன் இராணுவ செலவுகளை மட்டுப்படுத்தி வைத்துள்ளது.

காரணம் இரண்டு போர்களின் பட்டறிவு.

உங்கள் இந்தியா தொடர்பான பார்வை அப்படியே இருக்கட்டும்.

தமக்குள் ஓயாமல் மோதிக் கொண்டிருந்த நாடுகளை ஒடுக்கி ஒன்றாக்கியது பிரிட்டன். அதனால் தமக்குள் சண்டையிடாத ஓரளவு அமைதியான நாடானது.

அது பிரியாமல் இருப்பதே அதற்கு நல்லது.

அதற்கு பலமான எதிர்கட்சி தேவை.

காங்கிரஸ் சரிவராது. அதே வேளை எம்க்கான தீர்வோ, தமக்கான பாதுகாப்புக்கான கரிசணையோ டெல்லியிடம் இல்லை!

அதுவே அதன் பலவீனம்.

அவர்களுக்கு தமிழர் ராவண வம்சம், சிங்களவன் ராமனின் வம்சம் என்ற இந்துத்வா நிலைப்பாடு.

ஆனால் விபீஸ்னன், சீனா பக்கம் 😂🤣

புரியக்கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

அமெரிக்கா மட்டும் அல்ல - நீங்கள் சொன்னபடி சீனா சவுதியில் இறங்கவும் பொருளாதர நலந்தான் அடிப்படை.

பட்டுபாதை, கடல் சங்கிலி என சீனா தனது எல்லையை விட்டு மிக வெளியே வந்து பாதுகாப்பு அரண்களை அமைக்க என்ன காரணம்?

ஆபிரிக்காவில் சீனாவின் பாதுகாப்புக்கு என்ன அக்கறை?

சீனாவின் இந்த பாய்சலின் அடிப்படையும் இயற்கை வளம், அதை காசாக்கும் பொருளாதார அடிப்படையே.

எந்த நாடும் மேஜிக்கில் வல்லரசாவதில்லை- ஏரிபொருள், கனிமம், வர்த்தக பாதைகள், இப்படி பலதை அமைத்து கொண்டு பொருளாதாரத்தை வளர்ப்பதன் மூலமே வல்லரசாகிறன.

வல்லரசாகிய பின் இவற்றை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும்.

அப்படி தக்க வைக்க தேவைபடுவதே பாதுகாப்பு.

ஆகவே பாதுகாப்பு நலன் என்பதே, பொருளாதார மேலாண்மையை பாதுகாக்க தேவைப்படும் பொருளாதார நலந்தான்.

இவையிரண்டும் ஒன்றே.

பிரித்து வைத்தல் நியாயம் இல்லை, பிரித்துப்பார்த்தால் பொருளும் இல்லை🤣.

உண்மையில் இந்த அடிப்படையை நீங்கள் விளங்காதது மட்டும் அல்லாமல் இதை ஏதோ நான் கண்டுபிடித்த விடயம் போல கதைப்பது, ஆச்சரியமாக உள்ளது.

இது மிக அடிப்படையான விடயம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

உங்கள் புரிதலில் எனக்கு பெரிய ஆச்சரியங்கள் உண்டு.

பிரெக்ஸிட் காரணம் என்ன?

பாதுகாப்பா, வணிக நலனா?

ரசியா இரண்டாண்டுகளாக சண்டை செய்கிறது உக்கிரேனுடன். வணிகத்தினை இழந்தும்... காரணம் பாதுகாப்பா, வணிக நலனா?

Falkland தீவுகளை பிரிட்டன் மீண்டும் பிடித்தது, வணிகமா, பாதுகாப்பா?

Gibeltar இன்னும் பிரிட்டன் வைத்திருப்பது ஏன்? வணிகமா, பாதுகாப்பா?

ஆகவே ஒவ்வொரு நாட்டுக்கும், அதன் வணிகம், பாதுகாப்பு தொடர்பான புரிதல் வித்தியாசமானது.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம், மேற்கு கண்ணை உறுத்துவதால், அதனை சீனாவின் பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ள துடிக்கிறது. இந்தியா சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து விட்டது.

ஆகவே, நாம் ஆரம்பித்த இடத்துக்கு போய், முடித்துக்கொள்ளலாம்.

இந்தியாவை நீங்கள் நம்பலாம். ஆனால் 1980 முதல், அடைந்த பட்டறிவால் நம்ப ஒரு முகாந்திரமும் இல்லை. எமக்கு பேரழிவினை தந்த ஒரு நாட்டினை நம்ப தயாரில்லை.

சினிமாவில், பாலியல் பலாத்காரம் செய்தவரை முன்னர் கட்டியே வைத்து விடுவார்கள். அதுபோல இப்போது எமக்கு நிலை இல்லை. இந்தியாவை கட்டிக்கொண்டு அழவேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் எமக்கு வேறு தெரிவுகள் உண்டு,

இல்லாவிடினும் பரவாயில்லை, 500 வருசமா அடிமையாக இருந்து வருகிறோம். இன்னும் இருந்து விட்டு போறோம். பரவாயில்லை அதுக்காக, முதுகுள் குத்தியவர்கள் காலில் விழ வேண்டியதில்லை.

அதனால் தான் சண்டைக்காரன் மேல் என்றேன். சண்டைக்காரன் அப்படித்தானே என்ற பட்டறிவுடன் வாழ்ந்து தொலைக்கலாம். அதுக்காக, தெரிந்துகொண்டே, அடுத்தவனை, நம்பமுடியாதவர்ககளை, நம்புவது பேதைமை.  

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Nathamuni said:

பிரெக்ஸிட் காரணம் என்ன?

பாதுகாப்பா, வணிக நலனா?

இரெண்டும் இல்லை. பிரித்தானிய establishment வணிக நலனை கருதி பிரெக்சிற் எதிர் வாக்கை விரும்பியது. ஆனால் - சில தனிப்பட்ட வணிகர்கள், அரசியல்வாதிகள் தமது சுயநலனை முன்னிறுத்தி, populist அரசியல் செய்ததால் பிரெக்சிற் நடந்தது.

இதனால்…இப்போ பிரித்தானியாவின் வணிக நலன் அடி வாங்குது. படகு அகதிகள் வருகை தொடர்ந்தால் பாதுகாப்பு நலனும் அடிவாங்கும்.

42 minutes ago, Nathamuni said:

ரசியா இரண்டாண்டுகளாக சண்டை செய்கிறது உக்கிரேனுடன். வணிகத்தினை இழந்தும்... காரணம் பாதுகாப்பா, வணிக நலனா?

அடிப்படை வணிக நலனே. அமெரிக்காவுக்கு சவாலான ஒரு வணிக மையமாக, ஜேர்மனி உடன் பொருளாதார பங்குதாரார் ஆகி, ஈயுவினை கட்டுப்படுத்தி, ஐரோப்பாவின் முதன்மை வர்தக வல்லரசாக தான் வர எண்ணிய ரஸ்யாவின் முனைப்பே அடிப்படை.

42 minutes ago, Nathamuni said:

Falkland தீவுகளை பிரிட்டன் மீண்டும் பிடித்தது, வணிகமா, பாதுகாப்பா?

100% வணிகம். அந்தாத்திக்காவில் நிலப்பிரிப்புக்கு, அதன் அருகே நில உரிமை வேணும். ஆகவே அந்த தீவுகள்.

ஏன் அந்தாதிக்காவில் பிரிட்டனுக்கு நிலை உரிமை வேணும்? அதில் இருக்க கூடிய வளங்களை எடுக்க = பொருளாதார நலன். 

இல்லாமல் தென்னமரிக்காவின் கோடியில் ஒரு சிறிய தீவை வைத்திருப்பதால் ஐரோப்பாவில் இருக்கும் பிரித்தானிய நிலத்துக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?

42 minutes ago, Nathamuni said:

Gibeltar இன்னும் பிரிட்டன் வைத்திருப்பது ஏன்? வணிகமா, பாதுகாப்பா?

வணிகம். அத்லாந்திக் சமுத்திரத்தில் இருந்து கிழக்கே போக மத்திய தரை கடலை அடையும் உலகின் மிக பெரும் கப்பல் வழி வழி இதனூடு போகிறது. 

42 minutes ago, Nathamuni said:

இந்தியாவை நீங்கள் நம்பலாம். ஆனால் 1980 முதல், அடைந்த பட்டறிவால் நம்ப ஒரு முகாந்திரமும் இல்லை. எமக்கு பேரழிவினை தந்த ஒரு நாட்டினை நம்ப தயாரில்லை.

பழையபடி நீங்கள் புரிசன் பெண்டாட்டி ரேஞ்சுக்கு இறங்கி விட்டீர்கள். இது பூகோள அரசியல்.

இங்கே நிரந்தர எதிரியும் இல்லை, பகைவரும் இல்லை.

நிரந்தர நலன்கள் மட்டுமே.

நம்பிக்கை எல்லாம் ஒரு கருதுபொருளே இல்லை.

42 minutes ago, Nathamuni said:

சினிமாவில், பாலியல் பலாத்காரம் செய்தவரை முன்னர் கட்டியே வைத்து விடுவார்கள். அதுபோல இப்போது எமக்கு நிலை இல்லை. இந்தியாவை கட்டிக்கொண்டு அழவேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் எமக்கு வேறு தெரிவுகள் உண்டு,

இல்லாவிடினும் பரவாயில்லை, 500 வருசமா அடிமையாக இருந்து வருகிறோம். இன்னும் இருந்து விட்டு போறோம். பரவாயில்லை அதுக்காக, முதுகுள் குத்தியவர்கள் காலில் விழ வேண்டியதில்லை.

அதனால் தான் சண்டைக்காரன் மேல் என்றேன். சண்டைக்காரன் அப்படித்தானே என்ற பட்டறிவுடன் வாழ்ந்து தொலைக்கலாம். அதுக்காக, தெரிந்துகொண்டே, அடுத்தவனை, நம்பமுடியாதவர்ககளை, நம்புவது பேதைமை.  

மறுபடியும் அதே emotional arguments.

நாங்கள் கதைப்பது டிவோஸ் பற்றி அல்ல, பூகோள அரசியல் பற்றி.

Geopolitics has no place for emotions.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்லாத ஒன்றை நீங்கள் நான் சொல்வதாக திரும்ப திரும்ப சொல்வதால்…..

நான் இந்தியாவை மட்டும் அல்ல எவரையும் நம்ப சொல்லவில்லை.

நம்புவதுதான் தோல்வியின் முதல் படி.

ஆனால் இந்தியாவை மேற்கு புறம்தள்ளி எமக்கு தீர்வை தரும் என்பது கற்பனாவாதம்.

ஆகவே மேற்கு, சீனா, போல நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்தியா எமக்கு ஒரு stakeholder தான்.

You have to deal with them. That’s the hard part. 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூன் 2024, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் என்பது இயல்பான ஒன்றாகி வருகின்றன. கத்துக்குட்டி அணிகளின் சவால் தரும் ஆட்டத்தால் முன்னணி அணிகள் பலவும் தொடரை விட்டே வெளியேறியுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய 3 அணிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன. பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இங்கிலாந்து தகுதி பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் 3.611 ஆக இருக்கிறது. இங்கிலாந்துடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிட்ட ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து தோற்றுப் போனதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் கடும் போட்டி டி பிரிவில் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்திற்கு வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய நிலையில் வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ, அல்லது ஆட்டம் தடைபட்டாலோ கூட வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும் மறுபுறம், நெதர்லாந்து அணியோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வெல்ல வேண்டும். அதேநேரத்தில், வங்கதேச அணி தனது கடைசி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோற்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை வெளியேற்றம் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தானும், பி பிரிவில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியும், டி பிரிவில் இலங்கை அணியும் கத்துக்குட்டிகளின் சவாலை சமாளிக்க முடியாமல் டி20 உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளன. நிகர ரன் ரேட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ரன்-ரேட் என்பது ஒரு அணி தனது முழு இன்னிங்ஸிலும் ஒரு ஓவருக்கு அடித்த சராசரி ரன்களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக, 20 ஓவர்களில் 140 ரன்கள் என்பது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கு சமம். மற்ற அணியின் ரன் ரேட்டிலிருந்து எதிரணியின் ரன் ரேட்டைக் கழிப்பதன் மூலம் நிகர ரன் ரேட் கணக்கிடப்படுகிறது. எனவே வெற்றி பெறும் அணி நேர்மறை நிகர ரன் ரேட்டையும், தோல்வியுற்ற அணி எதிர்மறை நிகர ரன் ரேட்டையும் கொண்டிருக்கும். ஒரு அணி 20 ஓவர்களையும் முழுமையாக ஆடாமல் முன்கூட்டியே ஆட்டமிழந்தால், அந்த அணியின் ரன் ரேட் 20 ஓவர் அடிப்படையிலேயே கணக்கிடப்படும். இவ்வாறு, ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் நிகர ரன்ரேட் அடிப்படையிலேயே லீக் சுற்றில் அந்த அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட் கணக்கிடப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்லுமா? இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c4nn55n21rwo
    • படக்குறிப்பு,சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் இருந்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டு. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 25 நிமிடங்களுக்கு முன்னர் "நான் மறைந்த பிறகு என் உடல் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள்'' என்று புத்தகங்கள் மீதான தன் தீரா வேட்கையை வெளிப்படுத்தியவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. உலகில் புத்தகங்களுக்கு எத்தனை சிறப்பு இருக்கிறதோ, அத்தனை பெருமை கொண்டது நூலகங்கள். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாகவும் நூலகங்கள் திகழ்கின்றன. இத்தகைய சிறப்புப் பெற்ற நூலகங்கள் தமிழ்நாட்டில் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அந்த காலத்தில் நூலகங்கள் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், சிதம்பரத்தில் 850 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் ஆட்சி காலத்தில் செயல்பட்ட 'சரஸ்வதி பண்டாரம்' குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். சரஸ்வதி பண்டாரம் எனும் நூலகம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் செயல்பட்டு வந்த சரஸ்வதி பண்டாரம் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் விவரித்தார். "சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரை பிரித்து பொருள் கொண்டால் சரஸ்வதி என்பதற்கு கல்விக்கடவுள் என்றும் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றும் பொருளாகும். இதை கல்வி கடவுளின் கருவூலம் என்று குறிப்பிட முடியும் . இதற்கு கலைமகளின் பொக்கிஷம், ஞான பீடம், சரஸ்வதி நூலகம், நூல் நிலையம், புத்தக ஆலயம், புத்தகச்சாலை முதலிய பொருளும் உண்டு. சரஸ்வதி பண்டாரத்தில் வரலாற்று காலத்தைச் சார்ந்த ஓலைச்சுவடிகளை சேகரித்தும் தொகுத்தும், நகலெடுத்து எழுதியும், பாதுகாத்து பராமரித்தும், வந்துள்ளனர். இதைப் பற்றி சிதம்பரம் கல்வெட்டுகள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்" என்றார் அவர். படக்குறிப்பு,சிதம்பரம் நடராஜர் கோவில் சரஸ்வதி பண்டாரத்தில் வரலாற்று காலத்தைச் சார்ந்த ஓலைச்சுவடிகளை சேகரித்தும் தொகுத்தும், நகலெடுத்து எழுதியும், பாதுகாத்து பராமரித்தும், வந்துள்ளனர். என்ன மொழியில், எந்தெந்த நூல்கள் இருந்தன? சிதம்பரம் கோவிலில் சோழ மன்னர் இரண்டாம் ராசாதிராசரின் காலம் (கிபி 1163 -1178) "ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு … "எனத் தொடங்கும் கல்வெட்டு ஒன்றில் சரஸ்வதி பண்டாரம் இருந்துள்ளதை குறிப்பிடுகிறது. அந்த கல்வெட்டு குறித்து விவரித்த முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், "சரஸ்வதி பண்டாரத்தில் சுவாமி தேவர் (அரச குரு) எழுதிய புத்தகங்கள் மற்றும் சித்தானந்தகாரா என்ற கிரந்த புத்தகங்களும் (சமஸ்கிருதம்) வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த நூல் நிலையத்தில் ஓலைச்சுவடிகளை நகலெடுத்து எழுதுவதற்கும் அவற்றை அவிழ்த்து கட்டுவதற்கும், கோர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் மெய் காப்பாளர்கள் உள்ளிட்ட பலநிலை பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை தமிழிலும் கிரந்தத்திலும் பிரிதொரு நகலெடுத்து அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து விக்கிரமச் சோழரின் மாளிகையில் உள்ள நகல் பாதுகாக்கும் இடத்தில் வைத்திருந்துள்ளனர். இங்கு பணியாற்றியுள்ள சரஸ்வதி பண்டாரர்கள் அதாவது நூலகர்கள் மற்றும் திருக்கோயில்களில் திருமுறை ஓதுகின்ற திருக்கை ஓட்டிகள் முதலானவர்கள் செய்கின்ற பணிகளுக்கு (பார்வைக்காக) முதலாக வைக்க வேண்டியுள்ள நூல்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன." என்று தெரிவித்தார்.   பணியாளர்கள் விவரம் சிதம்பரம் கோவிலில் பாண்டிய மன்னர் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியன் காலத்து (கி.பி. 1251-1270) கல்வெட்டில் சரஸ்வதி பண்டாரத்தை பற்றியும் இதில் பணியாற்றியுள்ள பணியாளர்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுகுறித்து குறிப்பிட்ட வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், "இதில் பல கிரந்தங்களை படிப்பதற்கும், பார்ப்பதற்கும், எழுதுவதற்கும், நகலெடுப்பதற்கும், அவிழ்த்து கட்டுவதற்கும், ஓலைச்சுவடிகளை படிக்கவும், நகலெடுத்த ஓலைச்சுவடிகளை வாய்விட்டு படித்து ஒப்பிட்டு பார்க்கவும் முறையாக அடுக்கி கோர்த்து பாதுகாத்து வைப்பதற்கும் 20 பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த கிரந்தங்களை எழுதி சேர்க்கும் பணியில் இச்சரசுவதி பண்டாரத்தில் பணியாற்றியுள்ள 10 பணியாளர்களுடன் புதிதாக 10 பணியாளர்களை பணியமர்த்தவும் செய்துள்ளனர். இவர்கள் ஓலைச்சுவடிகளை புதிய நகலெடுத்து எழுத வேண்டும் என்று அவர்களின் பணி விவரமும் கூறப்பட்டுள்ளது" தெரிவித்தார்.   படக்குறிப்பு,தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் நூலகத்திற்காக நிலதானம் சிதம்பரம் நடராஜர் கோவிலின் முதல் பிரகாரத்தின் தெற்கு பக்கம் சுவற்றில் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியரின் 13-ஆம் ஆட்சி ஆண்டில் (கிபி 1264) பொறிக்கப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டிலும் சரஸ்வதி பண்டாரம் பற்றிய செய்தி வந்துள்ளது. இதில் ராசாதி ராச வளநாட்டில் அமைந்திருந்த தனியூர் பெரும்பற்ற புலியூரில் நாயனார் பெயரால் அகரம் விக்கிரம பாண்டிய சதுரவதி மங்களம் ஒன்றை வேதமும் சாஸ்திரமும் நன்கு அறிந்திருந்த 108 பிராமணர்களுக்கு இம்மன்னர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இங்கு அமைந்திருந்த சரஸ்வதி பண்டாரத்தில் பணியாற்றியுள்ள சரஸ்வதி பண்டாரத்தருக்கும் நிலக்கொடை கொடுத்துள்ளார். மேலும் அந்த நிலங்களையும் நிர்வாகம் செய்துள்ளனர் என்பது பற்றிய கல்வெட்டு தகவலை பன்னீர்செல்வம் விளக்கினார். நூலகம் அமைந்திருந்த இடம் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்ட நூலகம் இருந்த இடம் குறித்தும் கல்வெட்டு தகவல் அடிப்படையில் அவர் விளக்கினார். "சிதம்பரம் நடராசர் கோவில் மேற்கு கோபுரம் அமைந்துள்ள பகுதியில் சுப்பிரமணிய பிள்ளையார் கோவிலின் வடக்குப் பக்கத்தில் காணப்படுகின்ற மண்டபத்தின் அடிப்பகுதியில் சோழ மன்னர் இரண்டாம் ராசாதி ராஜனின் கால (கி.பி. 1163- 1178) கல்வெட்டு ஒன்றில் ராசாதி ராசரின் மாளிகையின் மேற்கு பக்கத்தில் உள்ள சுப்பிரமணிய பிள்ளையார் கோவிலின் வடக்கு பக்கத்தில் உள்ள மண்டபத்தில் சரஸ்வதி பண்டாரம் அமைந்திருந்தது. இதில் சுவாமி தேவர் எழுதிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நூல் நிலையத்தில் பலர் பணியாற்றியுள்ளனர் என்பது குறித்த விவரமும் உள்ளன." என்றார் அவர்.   பணியாளர்கள் பெயர் மற்றும் ஊதியம் - கல்வெட்டு தகவல் சிதம்பரம் கோவில் சரஸ்வதி பண்டாரத்தில் உள்ள பணிகளை நின்மை ஆட்கொண்டான் பட்டன், கௌதமன் உய்யக்கொண்டான் பட்டன், மணலூர் கிழவன் திருஞானசம்பந்தம் திருச்சிற்றம்பலம் உடையான், புல்லூருடையான் திருநீலகண்டன், ஆரியன் இராமப்பட்டன் ஆகியோர் செய்துள்ளனர். இவர்களுக்கு நாள் கூலிக்கும், சீருடைகளுக்கும் ஆண்டுக்கு ஒன்று நெல்லாகவும், காசாகவும் ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. நகலெடுத்து எழுதுபவர்கள் நாள் ஒன்றுக்கு நெல் தூணியும் (ஆண்டுக்கு 365 தூணி (2பதக்கு = ஒரு தூணி நெல்லும்) மற்றும் நான்கு காசுகளும் கொடுக்கப்பட்டது. மெய் காப்பாளர்கள் மற்றும் கோர்ப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்குநாழியும் (ஆண்டுக்கு 365,பதக்கு நாழி ( 2குருணி= ஒரு பதக்கு, 4- உழக்கு= ஒரு நாழி) ஆண்டுக்கு 3 1/2 காசுகளும் கொடுக்கப்பட்டன. நூலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக சிதம்பரம் அருகே விஸ்வாதிக்க விவேகமங்கலம் என்ற ஊரில் 27- வேலி, (6.17 ஏக்கர் = ஒரு வேலி) 2மா (1குழி = 12 அடி *12 அடி144 சதுர அடி,100 குழி = ஒரு மா) , அரைக்காணி முந்திரிகை (3/320 – அரைக்காணி முந்திரி) நிலத்தை ராசாதி ராசர் இறையிலியாக (தானமாக) கொடுத்துள்ளார். இந்த நிலத்திலிருந்து வருகின்ற 820 -கலம் நெல்லையும் மூன்று கூறிட்டு (ஒரு கூறு 273.3 கலம்) நூலகத்திற்கு கொடுக்கச் சொல்லி உள்ளார். https://www.bbc.com/tamil/articles/c4nn7zgv626o
    • Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 09:56 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமையாக முறிவடைந்துள்ளதாக சிறுபான்மையினக் கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த இணைப்பு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் சஜித் பிரேமதாச தரப்பில் பங்கேற்றிருந்த அவர் தன்னை முழுமையாக அடையாளப்படுத்துவதற்கு விரும்பாத நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் இணைத்து ஒரே அணியாக்குவதற்காக இருதரப்பிலும் உள்ள முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட குழுவினருக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று குறித்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விட்டுக்கொடுப்புக்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமாக உரையாடப்பட்டது. எனினும், இருதரப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகள் விட்டுக்கொடுப்புக்களுக்கு தயாரில்லாத நிலையில் தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் தொடர்ச்சியாக இணக்கப்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தபோதும் தலைவர்களின் விட்டுக்கொடுப்பற்ற நிலைமை நீடித்தமையால் தொடர்ந்து அந்த விடயத்தினை முன்னெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவ்விதமான பேச்சுக்களை முன்னெடுப்பதில் சிக்கலான நிலைமைகளே ஏற்பட்டள்ளது. ஆகவே, அப்பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதால் பயனில்லை. எனவே அந்த முயற்சி தற்போது கைவிடப்பட்டுள்ளது” என்றார். இதேவேளை, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சஜித் பிரேமதாசவிடத்தில், ஜனாதிபதி ரணிலுடன் மீண்டும் இணைவு பற்றி கேள்வி எழுப்பபட்டது. அப்போது அவர் “ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் பாதுகாவலனாக உள்ளார். அத்துடன் அவர் புதிய லிபரல் வாதத்தினைப் பின்பற்றுகிறார். அது தனவந்தர்களை போசிப்பதாகும். ஆகவே அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் முரண்பட்டுள்ளவருடன் எப்படி ‘டீல்’ போட முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/186170
    • Published By: DIGITAL DESK 7 16 JUN, 2024 | 09:34 AM   ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார். அத்துடன், ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்றார்கள் என்றால் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வாக எவ்விதமான விடயங்களையும் கருமங்களையும் முன்வைக்கப்போகின்றார்கள் என்பதை தமது விஞ்ஞாபனங்களில் வெளிப்படுத்த வேண்டும்.  அதன் பின்னர் எமது மக்களின் நிலைப்பாடுகளை புரிந்து நாம் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/186169
    • 16 JUN, 2024 | 07:26 AM   ஆர்.ராம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் காலை 10மணிக்கு வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு மாவை.சோ.சேனாதிராஜா தலைமை தாங்கவுள்ளதோடு, தமிழரசுக்கட்சி முகங்கொடுத்த வழக்கின் சமகால நிலைமைரூபவ் தமிழ் பொதுவேட்பாளர் மற்றும் கட்சியின் பவள விழா சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186168
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.