Jump to content

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதை வென்ற வைத்திய கலாநிதி டி.கோபிசங்கர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதை வென்ற வைத்திய கலாநிதி டி.கோபிசங்கர்!

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்ற நிலையில் “வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்” பற்றி 2020 ம் ஆண்டு எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைக்காக வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தேசிய ஆராய்ச்சி சபையால் வருடாந்தம் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது.

https://onlinekathir.com/archives/52034

இவர் @நிழலியின் நண்பர் என நினைக்கின்றேன்.

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

54 minutes ago, தமிழ் சிறி said:

 

இவர் @நிழலியின் நண்பர் என நினைக்கின்றேன்.

ஓம் தமிழ் சிறி 

பொதுவாக எம் சமூகத்தில் ஒருவர் கற்று உயர் நிலைக்கு சென்ற பின்,  தன்னுடன் படித்த, ஆனால் அவரைப் போன்று கல்வியில் உயர் நிலைக்கு செல்லாதவர்களை மதிப்பதும் இல்லை, நண்பர் என்று சொல்லிக் கொள்ள விரும்புவதும் இல்லை. ஆனாக் கோபி சங்கர் இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர்.  இன்றும் அன்றும் அதே கோபி தான்!

நான் பழகியவர்களில் ஒரு நல்ல (human being) மனுசர்களில் ஒருவர்.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு டு கோபிசங்கருக்கு எனது வாழ்த்துக்கள்.

இருப்பினும் ஒரு மனவேதனை, வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள் பற்றிய ஆய்வறிக்கை வந்து மூன்றுவருடங்களை நிறைவுசெய்தும் இன்னமும் வடக்கில் விபத்துக்களில் விகிதம் கூடிக்கொண்டே போகின்றது.

இதைவிட மோசம் நான் வாழும் நாட்டில் வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் வதிவிட உரிமை பெற்றவுடன் தனது சொந்த நாட்டின் வாகன அனுமதிப்பத்திரத்தை இரண்டு இந்த நாட்டி குடியுரிமை உள்ளவர்கள் சான்றிதள் கொடுத்தால் இந்த நாட்டின் வாகன அனுமதிப்பத்திரத்தை எந்தவித பரீட்சைகளும் இன்றிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

இப்படி கள்ளமாகக் காசுகொடுத்து இலங்கையில் பெற்றுக்கொண்ட அனுமதிப்பத்திரத்தில் வாகனம் ஓடி தான் விபத்தில் சிக்கியது மட்டுமல்லாது அவரது பதிண்ம வயது ஒரே ஒரு மகனையும் சாகக்கொடுத்துவிட்டார்.

நாட்டில் வகை தொகை இல்லாது முறையான அனுமதிப்பத்திரம் பெறப்படாது வாகனமோட்டுபவர்கள் சாதாரணமாகவே உலாவுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் கோபிசங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.