Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எங்கள் தந்தை இருதய பரிசோதனை செய்திருந்தால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார், நீங்கள் அந்த தவறை செய்யாதீர்கள் - சேன் வோர்னின் பிள்ளைகள் அவுஸ்திரேலிய மக்களிற்கு வேண்டுகோள்

Published By: RAJEEBAN  28 NOV, 2023 | 12:23 PM

image

தாய்லாந்திற்கான அந்த துரதிஸ்டம் மிக்க பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர்  அவுஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் இருதய பரிசோதனையை மேற்கொண்டிருந்தால் அவர் இன்றும் எங்களுடன் இருந்திருப்பார் என சேன்வோர்னின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சேர்ன்வோன் கடந்த வருடம் மார்ச் மாதம் தாய்லாந்தில் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.

இந்த துயரம் அவுஸ்திரேலியாவிற்கு மீள முடியாத வேதனையை கொடுத்துள்ள அதேவேளை சேன்வோர்னின் மரணம் அவுஸ்திரேலியர்கள் தங்களை இருதய சோதனைக்கு உட்படுத்தி தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என சேர்ன்வோர்னின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நியுஸ்கோர்ப்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சேர்ன்வோர்னின் பிள்ளைகள் அவுஸ்திரேலியர்கள் தொடர்ச்சியாக  இருதய சோதனையை மேற்கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் அதிக உயிரிழப்புகளிற்கு இருதயநோய்களே காரணமாக உள்ளன - 12 வீதமானவர்கள் இதனால் உயிரிழக்கின்றனர்.

shane_warne_childrens.jpg

ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்களிற்கு இலவச இருதய சோதனை வழங்குவதன் மூலம் அவர்களை காப்பாற்றும் சேன்வோர்ன் பாரம்பரிய திட்டத்தை உருவாக்குவதற்கு தனது தந்தையை நேசித்த மக்கள் எப்படி ஊக்குவித்தார்கள் என்பதை  சுழற்பந்து ஜாம்பவான் சேன் வோர்னின் மகன்  ஜக்சன் வோர்ன்  தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் சேன் வோர்ன் மாரடைப்பினால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இருதய நோய் குறித்த அக்கறை அவுஸ்திரேலியர்கள் மத்தியில் திடீர் என அதிகரித்தது - இது சேன்வோர்ன் பாதிப்பு என அழைக்கப்படுகின்றது.

தனது தந்தையின் மரணத்தின் பின்னர் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் இருதயநோய் குறித்த அக்கறை அதிகரித்ததை தான் நேரடியாக பார்த்ததாக சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.

ஜிம்மிலும் வீதியிலும் மக்கள் என்னிடம் வந்து உங்கள் தந்தை எங்கள் கதாநாயகன், ஆனால் அவர் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தவேளை நான் அழுதேன். ஆனால் அதன் பின்னர் என்னை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் என தீர்மானித்தேன் என தெரிவித்தனர் என சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.

எங்கள் இதயத்தை சோதனைக்கு உட்படுத்தாவிட்டால்  நாங்கள் இங்கிருக்கமாட்டோம் எனவும் சிலர் தெரிவித்தனர் என சேன்வோர்னின் மகன் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை எனது தந்தை ஒரு மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச்சென்றுள்ளார். அது அவுஸ்திரேலியர்களை பெருமைப்பட வைத்துள்ளது என நான் நினைத்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து நிமிடங்களிற்குள் இருதய சோதனையை வழங்கும் திட்டத்தை தனது சகோதரர்களுடன் இணைந்து ஆரம்பித்து வைத்த பின்னர் சேன்வோர்னின் மகன் இதனை தெரிவித்துள்ளார்.

சில வாரங்களிற்கு முன்னர் துரித இருதய பரிசோதனையை மேற்கொண்டுள்ள அவர் அவுஸ்திரேலியர்களையும் அவ்வாறான சோதனைகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் இளமையாக ஆரோக்கியமாக இருக்கின்றேன் என நினைத்தேன் பிழையாக எதுவும் நடக்காது என நினைத்தேன் ஆனால் பலரை போல கொவிட்டிற்கு பின்னர் சிறிய கரிசனையும் காணப்பட்டது என தெரிவித்துள்ள அவர் நான் அந்த சோதனையை செய்து முடித்ததும் பெரும் நிம்மதியடைந்தேன் அனைவரும் அந்த நிம்மதியை பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.'

shane_warnee_memo.jpg

அப்பா எப்போதும் ஏனையவர்களின் முகத்தில் சிரிப்பை புன்னகையை விதைப்பதற்காக தனது சக்தி நேரத்தை செலவிட்டார் ஆகவே மக்களின் உயிர்களை காப்பாற்றி அவரது பாரம்பரியத்தை எங்களால் காப்பாற்ற முடிந்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என ஜக்சன் வோர்ன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/170444

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லது!

ஆனால் அவரது மரணத்தை விளைவித்த இதயத் தாக்குதலுக்கான காரணமே வேறு!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Nathamuni said:

நல்லது!

ஆனால் அவரது மரணத்தை விளைவித்த இதயத் தாக்குதலுக்கான காரணமே வேறு!!

ந(வ)யகராவா?!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, ஏராளன் said:

ந(வ)யகராவா?!

உடான்ஸ் சாமியாரிடம் கேட்கவேண்டியதை எல்லாம், இப்பத்தான் ஆசிரமத்தில சேர்ந்திருக்கும் அடியேனிடம் கேட்கக்கூடாது. 🥰🥰

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, ஏராளன் said:

ந(வ)யகராவா?!

மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாது இது போன்ற மருந்துகளை பாவிக்கக் கூடாதெல்லோ?
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, ஏராளன் said:

மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாது இது போன்ற மருந்துகளை பாவிக்கக் கூடாதெல்லோ?
 

மருத்துவரின் அறிவுறுத்தல் தேவையில்லை. இதை இங்கே over the counter medicine என்பார்கள். அதாவது, ஆணுறை வாங்குவது போலவே யாரும் வாங்கிக்கொண்டு போகலாம்.

ஆனால், எல்லா மருந்துகள் போலவே, இதுவும் அளவோடு பாவிக்கப்படவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

இவர், இறந்த அறைக்கு, முதல் நாள் இரவு பல பெண்கள் போனார்கள் என்று, போலீஸ் விசாரணையின் முடிவை, வெளியே பெரிதாக வெளியிடவில்லை. 

அப்புறம் தாய்லாந்து மரியாதையை காப்பாத்த ஏலாது தானே.

பிறகு... தாய்லாந்து விடுமுறை ஐடியா இருக்குது எண்டியலே... எப்ப பயணம் 🤪

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

45 வயதிற்கு மேல் நிச்சயமாக செய்து கொள்ள வேண்டும். கடந்த எனக்கு தெரிந்த ஒருவர் (49 வயது) 3 மாதங்களுக்கு முன் இறந்த் போனார். இவர் ஒரு சிறந்த யோகா ஆசிரியர். சாதரண நெஞ்செரிச்சல் என்று கவனிக்காமல் இருந்தார்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, colomban said:

45 வயதிற்கு மேல் நிச்சயமாக செய்து கொள்ள வேண்டும். கடந்த எனக்கு தெரிந்த ஒருவர் (49 வயது) 3 மாதங்களுக்கு முன் இறந்த் போனார். இவர் ஒரு சிறந்த யோகா ஆசிரியர். சாதரண நெஞ்செரிச்சல் என்று கவனிக்காமல் இருந்தார்.  

45 வயதுக்கு முதலே இதயப் பரிசோதனை ஆரம்பிப்பது நல்லது.

50 வயதில் குடற் புற்று நோய் பற்றிய பரிசோதனைகளை செய்வது நல்லது.

50 தாண்டும் போது ப்றொஸ்ரேற் சோதனையை PSA இரத்தப் பரிசோதனை மூலமாகவாவது ஆரம்பிப்பது நல்லது.

இவையெல்லாம், மருத்துவர்கள் காசு பார்க்க திணிக்கும் பரிசோதனைகள் என எங்கள் புலம்பெயர் தமிழ் சமூகத்தினரில் பலர் நம்புவதை அவதானித்திருக்கிறேன். ஆனால், இவை உயிர்காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 30/11/2023 at 16:00, Nathamuni said:

நல்லது!

ஆனால் அவரது மரணத்தை விளைவித்த இதயத் தாக்குதலுக்கான காரணமே வேறு!!

சேன்வ‌ர்ன்  2003 உல‌க‌ கோப்பை கிரிக்கேட்டில்  த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ போதை பொருல் பாவித்து அந்த‌ உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏற்ற‌ ப‌ட்டார்...........இவ‌ர் பெண்க‌ளுட‌ன் குடி போதையில் உட‌ல் உற‌வு செய்வ‌து அதிக‌ம் நாதா.........த‌ண்ணீர் ஒரு நாளுக்கு இர‌ண்டு லீட்ட‌ர் குடிச்சாலே உட‌லில் இருக்கும் அழுக்குக‌ளை வெளி ஏற்றும்..........மெதுவான‌ உட‌ல் ப‌ய‌ற்ச்சி கிமிக்க‌ள் இல்லாத‌ ச‌த்து உண‌வு ஒரு நாளைக்கு குறைந்த‌து 8ம‌ணித்தியால‌ம் தூங்க‌னும் .............இதுக‌ளை செய்தால் 77 வ‌ய‌து ம‌ட்டும் ஆரோக்கிய‌மாய் இருக்க‌லாம்.........டென்மார்க் நாட்டை சேர்ந்த‌ 80வ‌ய‌து கிழ‌வ‌ன் இப்ப‌வும் வேலை செய்கிறார்..........68வ‌ய‌துக்கு பிற‌க்கு பென்ச‌ன் ஆனால் அவ‌ர் ஒரு மாத‌த்தில் 137ம‌ணித்தியால‌த்துக்கு மேல‌ வேலை  செய்வார்............. 

Edited by பையன்26


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.