Jump to content

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 DEC, 2023 | 09:04 AM
image
 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இரு படகுகளுடன் 25 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171352

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கைதான 06 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்

Published By: DIGITAL DESK 3   14 DEC, 2023 | 05:09 PM

image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 06 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது நேற்று புதன்கிழமை (13) கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுத்த பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டதை அடுத்து, கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/171717

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் நாட்டுக்க போய் கடல்கொள்ளை, இதுக்க ஆதித்யா சூரியனை ஆய்வுசெய்ய விண்ணில் பாய்ந்ததாம்!😂😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

அடுத்தவன் நாட்டுக்க போய் கடல்கொள்ளை, இதுக்க ஆதித்யா சூரியனை ஆய்வுசெய்ய விண்ணில் பாய்ந்ததாம்!😂😂😂😂

கீழேயும் கொள்ளை

மேலேயும் கொள்ளை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகரில் கைதான 14 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

19 DEC, 2023 | 10:26 AM
image
 

யாழ். காரைநகர் கோவளம் கடற்கரையில் கைதுசெய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி வந்து யாழ்ப்பாணம் - காரைநகர்- கோவளம் கடற்பரப்பில் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால், ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பதின்நான்கு பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்தில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் 14பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் 12 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரு மீனவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/172024

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பருத்தித்துறை கடலில் கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை!

Published By: DIGITAL DESK 3  13 JAN, 2024 | 09:02 AM

image

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான பன்னிரண்டு இந்திய மீனவர்களும் நிபந்தனையின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். 

டிசம்பர் 9 ஆம் திகதி கைதாகிய இந்திய மீனவர்களின் நேற்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த அரச சட்டவாளர் நிஷாந் நாகரட்ணம் மன்றில் முன்னிலையாகி படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக சேர்க்க முடியும். இது 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய கடற்றொழில், வெளிநாட்டு படகுகளுக்கான சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மன்றுரைத்திருந்தார்.

சட்டமா அதிபர் திணைக்கள அரச சட்டத்தரணி நிஷாந் நாகரட்ணம் 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் தொடர்பில் மன்றுரைத்த விடயதானங்களை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் குறித்த விண்ணப்பத்தை இன்று கட்டளையாக்கி உத்தரவிட்டார்.

 இதன் போது படகின் உரிமையாளரை முதலாவது சந்தேக நபராக குறிப்பிடப்பட்டு அவருக்கான அழைப்பாணை இலங்கை நீதித்துறை ஊடாக அனுப்புவதற்கும் கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார் நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை. 

நீரியல் வளத்துறையால் 12 மீனவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 மூன்று குற்றச்சாட்டுகளையும் மீனவர்கள் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் மூன்று குற்றச்சாட்டுக்கும் தலா ஆறுமாத சாதாரண சிறை தண்டனை என்னும் அடிப்படையில், 18 மாத சாதாரண சிறை தண்டனை விதித்த பருத்துத்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை அதனை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார்.

https://www.virakesari.lk/article/173830

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது 

14 JAN, 2024 | 09:44 AM
image

யாழ்ப்பாணம் காரைநகர்  கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 3 இழுவை படகுகளையும்  இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படையினர்  மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடற்படையினர் கைப்பற்றிய 3 மீன்பிடி இழுவை படகுகளையும் கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையையும்  மேற்கொண்டனர் . 

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்  மற்றும் மீன்பிடி இழுவை படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/173901

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது

17 JAN, 2024 | 09:43 AM
image
 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை  (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு ரோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 இந்திய மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு ரோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுப்பாடு  கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்பின்னர் 18 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில்  நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்  இன்று (17) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து குஞ்சு மீன்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-01-17_at_6.58.13_AM.

WhatsApp_Image_2024-01-17_at_6.58.12_AM.

https://www.virakesari.lk/article/174119

Link to comment
Share on other sites

  • மோகன் changed the title to இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது

17 JAN, 2024 | 09:43 AM
image
 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை  (16) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு ரோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 இந்திய மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு ரோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுப்பாடு  கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்பின்னர் 18 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில்  நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்  இன்று (17) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து குஞ்சு மீன்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2024-01-17_at_6.58.13_AM.

WhatsApp_Image_2024-01-17_at_6.58.12_AM.

https://www.virakesari.lk/article/174119

இனி என்ன, அடுத்த செய்தி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுதான்.

இவர்கள் மீன் பிடித்து விட்டு போனால் பரவாயில்லை. கடலில் உள்ள மீன் உட்பத்தியாகும் அடித்தட்டுகளையெல்லாம் பெயர்த்து எறிகிறார்கள். இதனால் மீன் உட்பத்தி பாதிக்கப்படுகின்றது. இது அந்த இந்திய மர மண்டைகளுக்கு எடுத்து சொன்னாலும் பண ஆசையினால் ஒன்றயும் கேட்பதில்லை.

கஞ்சா அடைக்கலத்துக்கு இந்தியாவில் சொத்துக்கள் இருப்பதால் இது பற்றி  ஒன்றும் பேசுவதுமில்லை. 

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நெடுந்தீவில் 06 தமிழக மீனவர்கள் கைது

Published By: DIGITAL DESK 3   23 JAN, 2024 | 10:01 AM

image

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 தமிழக  மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (23) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர், இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்டு இருந்த தமிழக  மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டு இருந்தனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/174577

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

24 நாட்களில் 46 இந்திய மீனவர்கள் கைது

கடந்த 24 நாட்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 46 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 8 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/289342

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18 இந்திய மீனவர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை

Published By: DIGITAL DESK 3   01 FEB, 2024 | 10:03 AM

image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் புதன்கிழமை (31) மன்னார் நீதி மன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் மன்றில் இன்றைய தினம் 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது.

பணிப்பாளரின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டமை, இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டமை மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழில் முன்னெடுத்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டு 5   வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டு இவர்களை நிபந்தனையின் அடிப்படையில்   விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், படகிற்கு குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது.

இதன்போது அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஊடாக மிரிஹான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 18 பேர் கடந்த 16ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 கடற் தொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு  டோலர்    படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு  கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 கடற் தொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள்  17 ஆம் திகதி   புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175284

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டி மீன் பிடித்த மேலும் பல தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

04 FEB, 2024 | 10:04 AM
image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன

இது தொடர்பில் தமிழக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.  கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றது இலங்கைக் கடற்படை.இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல  வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை 

இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளளனர்..நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுக்காட்டு துறையில் இருந்து இரண்டு பைபர் படகுகளில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்பரப்பிலிருந்து வந்தவர்கள்  திடீரென இவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து உடனடியாக கரை திரும்பிய மீனவர்கள் இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றானர்.

https://www.virakesari.lk/article/175494

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்  

04 FEB, 2024 | 05:54 PM
image

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 23 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில்  நேற்று சனிக்கிழமை (03) இரவு 23 இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் அம்மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 2 படகுகளை கைப்பற்றினர்.

கைதான இந்திய மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்து நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் 23 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். 

இதன்போதே அவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175558

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜனவரி 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியதற்காக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கக் கூடாது, தவறினால் சிறையில் அடைக்கப்படும் என்ற நிபந்தனையுடன் அவர்களை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்களின் மீன்பிடி கைவினைப்பொருட்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை தேசியமயமாக்க நீதிபதி உத்தரவிட்டார்.

https://thinakkural.lk/article/290901

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோதமாக மீன்பிடித்த 19 இந்திய மீனவர்கள் கைது!

08 FEB, 2024 | 11:18 AM
image
 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 19 இந்திய மீனவர்கள் 2 மீன்பிடி படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

awsdf.gif

நேற்று (7) இரவு கடற்படை மற்றும்  கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரால்  மேற்கொள்ளப்பட்ட  விசேட ரோந்து நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

sedg.gif

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

esddws.gif

2024 ஆம் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பில் 88 இந்திய மீனவர்கள் 12 இந்திய மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

https://www.virakesari.lk/article/175867

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களில் 20 பேர் விடுதலை

நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்குஅண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்கு இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 20பேர் இன்றையதினம், 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களில் 20 பேர் விடுதலை | Bail For 20 Indian Fisherman

ஒரு வருட கால சிறைத் தண்டனை

மேலும் இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

அத்துடன் ஒரு கடற்றொழிலாளர் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுற்ற பின்னர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.  

https://tamilwin.com/article/bail-for-20-indian-fisherman-1708067147

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பானி குறூப் இலங்கையை பிடிப்பதை ஒப்பந்தம் என சொல்லி கண்டு கொள்ளாத 
   உத்தமர்கள்..
அப்பாவி மீனவர்கள் மீன்பிடிச்சா எல்லை பிரச்சனை என போர் கொடி .........
வெகு விரைவில் இலங்கை கடற் பரப்பில் யாரும் மீன்பிடிக்கலாம் என்ற சட்டத்தை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அறிவிக்க வேண்டிய நிலமை ஏற்படலாம்...

சீனாவின் ஆய்வுக்கப்பல் இலங்கையினுள் வரலாம்
இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கையைனுள் வரலாம்
அமெரிக்காவின் விமான படை திடிர் விஜயம் செய்லாம்

இப்படி பல நாடுகள் சொல்லமல் கொள்ளாமல் வந்து தங்கன்ட நலன் களை பெறும் பொழுது 

ஏன் இந்த அப்பாவிகள் மீ பிடித்து தங்கள் பிழைப்பை கவ்னிக்க முடியாது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை

Published By: DIGITAL DESK 3   22 FEB, 2024 | 12:11 PM

image

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 7 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அந்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, IND /TN/10/MM/925 இலக்கத்தினை கொண்ட படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகு அரசுடமையாக்கப்பட்டது.

 IND /TN/10/MM/324 என்ற இலக்கத்தை கொண்ட படகில் பயணித்த 11 நபர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன், படகின் ஓட்டுனருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177023

On 18/2/2024 at 00:56, putthan said:

ஏன் இந்த அப்பாவிகள் மீ பிடித்து தங்கள் பிழைப்பை கவ்னிக்க முடியாது.....

அவர்கள் அப்பாவிகள் அல்ல அண்ணை, தமது முதலாளிகளின் பேராசையால் தமிழக மீன் வளங்களை அழித்து தற்போது எமது கடலில் உள்ள மீன் வளங்களைத் தேடி வருகிறார்கள்.

லைலா வலை போன்ற சிறிய மீன்களையும் விட்டு வைக்காத மீன்பிடி முறைகளைக் கைவிடாத வரை எங்களுக்கும் நிம்மதி இல்லை, அவர்களுக்கும் மீட்சி இல்லை.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

எல்லை தாண்டி மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களுக்கு விடுதலை; ஒருவருக்கு சிறை

Published By: DIGITAL DESK 3   22 FEB, 2024 | 12:11 PM

image

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 7 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். அந்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, IND /TN/10/MM/925 இலக்கத்தினை கொண்ட படகில் பயணித்த 7 இந்திய மீனவர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன் படகு அரசுடமையாக்கப்பட்டது.

 IND /TN/10/MM/324 என்ற இலக்கத்தை கொண்ட படகில் பயணித்த 11 நபர்களும், ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டதுடன், படகின் ஓட்டுனருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/177023

அவர்கள் அப்பாவிகள் அல்ல அண்ணை, தமது முதலாளிகளின் பேராசையால் தமிழக மீன் வளங்களை அழித்து தற்போது எமது கடலில் உள்ள மீன் வளங்களைத் தேடி வருகிறார்கள்.

லைலா வலை போன்ற சிறிய மீன்களையும் விட்டு வைக்காத மீன்பிடி முறைகளைக் கைவிடாத வரை எங்களுக்கும் நிம்மதி இல்லை, அவர்களுக்கும் மீட்சி இல்லை.

தகவலுக்கு நன்றி ...இரு நாட்டு கடற்படையும் தக்க நடவடிக்கை  எடுக்க வேணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2024 at 00:56, putthan said:

 

ஏன் இந்த அப்பாவிகள் மீ பிடித்து தங்கள் பிழைப்பை கவ்னிக்க முடியாது.....

ஒன்று இலங்கை கடடபரப்பில் வந்து மீன் பிடிப்பது தவறு. அதை விடுவம்.

இரண்டாவது இங்குள்ள மீன்  உட்பதியாகும் வளங்களை அழித்து நாசமாக்குவது. அவர்கள் சாதாரண அனுமதிக்கப்படட வலைகளை பாவித்தால் பிரச்சினை இல்லை. அதனை இங்குள்ள மீனவர்கள் விட்டுக்கொடுப்புடன் செய்வார்கள்.

அங்குள்ள மீன் உடபதியாகும் வளங்களை அழித்தொழித்ததால்தான் அவர்களது கடடபகுதியில் மீன் வளம் அழிந்து போனது. எனவே அவர்களது தடை செய்யப்படட மீன் பிடிப்பு முறைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Cruso said:

ஒன்று இலங்கை கடடபரப்பில் வந்து மீன் பிடிப்பது தவறு. அதை விடுவம்.

இரண்டாவது இங்குள்ள மீன்  உட்பதியாகும் வளங்களை அழித்து நாசமாக்குவது. அவர்கள் சாதாரண அனுமதிக்கப்படட வலைகளை பாவித்தால் பிரச்சினை இல்லை. அதனை இங்குள்ள மீனவர்கள் விட்டுக்கொடுப்புடன் செய்வார்கள்.

அங்குள்ள மீன் உடபதியாகும் வளங்களை அழித்தொழித்ததால்தான் அவர்களது கடடபகுதியில் மீன் வளம் அழிந்து போனது. எனவே அவர்களது தடை செய்யப்படட மீன் பிடிப்பு முறைதான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூல காரணம். 

அரசியல் தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி... பணம் தான் குறியாக முதலாளிமார் இருப்பார்கள் ...பாவம் தொழிலாளிகள்.
அரசியல்வாதிகளுக்கு பொது நலம் இல்லாத மாதிரி இந்த மீனவர்களுக்கும் அது இல்லை..

வெளிநாடுகளில் மீன் பிடிக்கும் இடங்களில் சில அறிவிப்புக்கள் செய்துள்ளனர்  சிறிய மீன் பிடித்தால் தயவு செய்து மீண்டும் கடலில் விடவும் ...
நான் நேரில் கண்ட சம்பவம்    ஒருவர் சிறிய் மீனை தூண்டிலில் பிடித்து விட்டு அதை தனது தனது சேகரிப்பு பைக்குள் போடும் பொழுது ஒரு வய்து போனவரொடிச்சென்று இந்த மீனை உடனே கட்லில் விடு இது சின்ன மீன என அறிவுரை சொல்ல அந்த நபர் மீண்டும் அதை கட்லில் விட்டிட்டார்...கிழவி சென்ற பின்பு திட்டினார் ஆனால் மீன் தப்பிவிட்டது ...

ஏன் சொல்லுகின்றேன் என்றால்  விழிப்புனர்வு மீனவர்களுக்கு வேண்டும் ,அரச படையினருக்கு வேணும்...பொதுமக்களுக்கும் வேணும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அரசியல் தலைவர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழி... பணம் தான் குறியாக முதலாளிமார் இருப்பார்கள் ...பாவம் தொழிலாளிகள்.
அரசியல்வாதிகளுக்கு பொது நலம் இல்லாத மாதிரி இந்த மீனவர்களுக்கும் அது இல்லை..

வெளிநாடுகளில் மீன் பிடிக்கும் இடங்களில் சில அறிவிப்புக்கள் செய்துள்ளனர்  சிறிய மீன் பிடித்தால் தயவு செய்து மீண்டும் கடலில் விடவும் ...
நான் நேரில் கண்ட சம்பவம்    ஒருவர் சிறிய் மீனை தூண்டிலில் பிடித்து விட்டு அதை தனது தனது சேகரிப்பு பைக்குள் போடும் பொழுது ஒரு வய்து போனவரொடிச்சென்று இந்த மீனை உடனே கட்லில் விடு இது சின்ன மீன என அறிவுரை சொல்ல அந்த நபர் மீண்டும் அதை கட்லில் விட்டிட்டார்...கிழவி சென்ற பின்பு திட்டினார் ஆனால் மீன் தப்பிவிட்டது ...

ஏன் சொல்லுகின்றேன் என்றால்  விழிப்புனர்வு மீனவர்களுக்கு வேண்டும் ,அரச படையினருக்கு வேணும்...பொதுமக்களுக்கும் வேணும் ...

உண்மை. எம்மைவிட அந்த மீனவர்களுக்குத்தான் அது தெரிந்திருக்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் அதுவும்தமிழ் நாட்டில் இரண்டு மாதங்களுக்கு மீன் பிடிக்க அனுமதிக்க படுவதில்லை. மீன் உட்பதியாகும் காலம் என்று அறிவித்து அதை சடடமாகவே செயல் படுத்துகிறார்கள். இருந்தாலும் தடை  செய்யப்படட மீன்பிடி முறையை என் தொடர அனுமதிக்க படுகின்றது என்பதும் பிரச்சினை. மீனவர்கள் அமர்ந்து இதட்கு முடிவு கட்டினாலே ஒழிய கடட்படையோ, அரசியல்வாதிகளோ, இரு நாட்டு அரசுகளோ தீர்க்க போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது; நாட்டின் சட்டத்துக்கமையவே கைதுகள் இடம்பெறுகின்றன - கடற்படைத் தளபதி

Published By: DIGITAL DESK 3   24 FEB, 2024 | 06:22 PM

image
 

(இராஜதுரை ஹஷான்)

மீனவர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சனிக்கிழமை (24) நிறைவடைந்தது. திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. இனம், மதம், மொழி என்ற அடிப்படையில்  எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வருடாந்த திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய மீனவர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் சட்டத்துக்கு அமையவே கைதுகள் இடம்பெறுகின்றன. சட்டத்தை மீறும்போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். அடுத்த திருவிழாவுக்கு முன்னர் முரண்பாடற்ற தீர்வு ஒன்று காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் வழமை போல் திருவிழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/177207

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.