Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் - இந்திய உயர்ஸ்தானிகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN     11 DEC, 2023 | 10:25 AM

image
 
இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்ட இந்தியா வேறு எந்த நாட்டிற்கும் நெருக்கடி விடயத்தில் உதவவில்லை என  இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சீனா கப்பல்கள் கொழும்பிற்கு வருவது குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளன கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும்கூட்டு பொறுப்பு கடப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

உருவாகின்ற கடல்சார் சவால்களி;ற்கு இணைந்து தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பும் ஸ்திரதன்மையும் காணப்பட்டால் அமைதியும் வளமும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் எங்கள் நாடுகள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கூட்டு பொறுப்பாகும் இந்த அர்த்தத்தில் இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது பரஸ்பரம் ஒன்றிணைந்தது  எனவும்  குறிப்பி;ட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/171428

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானும் சீனாவும் பக்கத்திலை இருக்க பயமேன்? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

பாகிஸ்தானும் சீனாவும் பக்கத்திலை இருக்க பயமேன்? 🤣

அதைத்தான் அவர் சொல்லாமல் சொல்லுகிறார். அதாவது பக்கத்தில் இருக்கிற இரண்டு பேரையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள் எண்டு.

இந்த பயமுறுத்தல்கள் எல்லாம் ஸ்ரீலங்கா தேசத்தை ஒன்றுமே செய்யாது. நாம் ஒரு இறைமையுள்ள , வளர்ச்சியடைந்த நாடு. 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Cruso said:

நாம் ஒரு இறைமையுள்ள , வளர்ச்சியடைந்த நாடு. 😜

ஓமோம் உள்ள இடம் முழுக்க,காடு கரம்பையெல்லாம் விகாரைகள் கட்டேக்கையே சிரிலங்கா வளர்ச்சி அடைஞ்சுட்டுது எண்டு....யோசிச்சனான் 😋

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

ஓமோம் உள்ள இடம் முழுக்க,காடு கரம்பையெல்லாம் விகாரைகள் கட்டேக்கையே சிரிலங்கா வளர்ச்சி அடைஞ்சுட்டுது எண்டு....யோசிச்சனான் 😋

அது வந்து பாருங்கோ புத்தரின் போதனைகளை முன்னெடுத்து மக்களை நல்வழி படுத்த வேண்டிய தேவை இருக்குது. எறும்புக்கு கூட தீங்கு செய்யக்கூடாது என்பது எவ்வளவு மேன்மையான போதனை. இலங்கை இப்போது சிங்கப்பூரை போல முன்னேறி வருவதால் மக்களை நல்வழி படுத்தி ஒழுக்க சீலர்களாக மற்ற வேண்டி அப்படி செய்கிறார்கள். நீங்கள் பிழையாக விளங்கி கொள்ள வேண்டாம். விளங்கினால் சரி. 😜

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சொன்னதை தலை கீழா சொல்லுற நிலைமைக்கு வந்தாச்சு!

தமிழர் நிலம் இறைமையோட இருந்தா இந்தியாவுக்கு பாதுகாப்பு என்றார் தலைவர்.

இப்ப, இந்தியா பாதுகாப்புடன் இருந்தா, பாருங்கோ, இலங்கைக்கே பாதுகாப்பு என்று பூ வைக்கிறார் காதிலை.

சீனாக்காரனிட்டை கேட்டுட்டு சொல்லுறம்.

அதெல்லாம் இருக்க, மாலைதீவில என்ன நடந்தது? 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2023 at 03:30, Cruso said:

அதைத்தான் அவர் சொல்லாமல் சொல்லுகிறார். அதாவது பக்கத்தில் இருக்கிற இரண்டு பேரையும் கொஞ்சம் தள்ளி வையுங்கள் எண்டு.

இந்த பயமுறுத்தல்கள் எல்லாம் ஸ்ரீலங்கா தேசத்தை ஒன்றுமே செய்யாது. நாம் ஒரு இறைமையுள்ள , வளர்ச்சியடைந்த நாடு. 😜

சரிதான் போங்க சார் உங்க ஊரில அதுதான் டெல்கியில நாடாளுமன்றக்கட்டிடத்துக்குள்ள நுலம்புத்தொல்லை எண்டு யாரோ புகையடிச்சிட்டாங்களாம் அதுவும் சங்கிக்கூட்டமாம் போய் அதைப்பாருங்க. 
உக்க்ரேனின் ஒரு பகுதிய ஆக்கிரமிச்சிருக்கு ரஸ்யா ரஸ்யாவுடன் நீண்ட தூரத்துக்கு எலையைப் பங்கிட்டுகொள்ளும் நாடு பின்லாந்து, எதிர்காலத்தில் எப்போது வேண்டுமாகிலும் யுத்தம் வரலாம் ஆனால் பின்லாந்து நாட்டின் அரசாங்கமோ அல்லது உங்களைப்போன்ற இராஜங்க அதிகாரிகளோ எங்கேயும் இப்படிக் கேனைத்தனமாகக் கதைப்பதில்லை.

பின்லாந்து நாட்டின் பொதுமக்களோ அல்லது அரசியல் பிரமுகர்களோ, ஐயோ யுத்தம் வரப்போகுதே என வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கொண்டு மத்தவங்களுக்குப் பீதியேத்துவதில்லை எதிர்வரும் கிறிஸ்துமத்தை கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பல இலட்சம் படைவலு, ஏவுகணைகள் அணு ஆயுதம் விமானம் தாங்கிக்கப்பல்கள் அனைத்தையும் வைத்துக்கொண்டு குத்துதே குடையுதே என அலறுகிறியள்.

உங்களது சாதாரண மக்களோ நயனதார நாப்கின் கொடுக்கிறா என இடுப்பளவு தண்ணிக்க நிண்டு ஜெயகோ கோசம் போடுகினம்.

யாழ் குடாநாட்டிலும் ஏனைய தமிழர் பகுதியிலும் அங்கிங்கெண்ணாதபடி உங்களது உளவுத்துறையை இறக்கிவிட்டு அனைவரையும் மிரட்டல் உருட்டல் செய்கிறீர்கள். யாழில் உள்ள யூ ரியூப்பர் உமாகரைனையும் வளைச்சுப்போட்டுள்ளீர்கள். 

அப்போ புலம்பெயர் தேசங்களிலிருந்து இயங்கும் இணயத்தள ஊடகங்களையும் கண்காணிப்பீர்கள் அதற்காக சில அல்லக்கைகளை நீங்கள் அஞ்சோ பத்தோ கொடுத்து ஏவி விட்டிருப்பீர்கள் 

யாழ் இணையத்தளத்தில் என்ன சொல்லுறாங்கள் என அறியவும் யாரையாவது ஏவி விட்டிருப்பியள் 

காரணம் யாழ்கழத்தில் எவரும் வந்து தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் அதனால்தான்.

ஆகவே இங்கு யாழ் கலத்தில்  "தழர் விரோத தேசமாகிய"  இந்தியாவின் அல்லக்கை எவராவது இருந்தால் உங்களுக்கு எலும்பு எறிகிற எஜமானுக்கு இதைப்போய் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Elugnajiru said:

நம்மட பெரியண்ணனுடன் சரியான கடுப்பில் இருக்கிறீர்கள் போல இருக்குது 😛

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2023 at 06:45, ஏராளன் said:

இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது பரஸ்பரம் ஒன்றிணைந்தது  எனவும்  குறிப்பி;ட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/171428

இது இலங்கை தமிழருக்கு சொல்லப்பட்டது   அதாவது இலங்கையை  பிரிக்க. முயல வேண்டாம்   நாங்கள் விடமாட்டோம். இவர்களிடம் போய்  எங்கள் தலைவர்கள் என்ன பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்?? 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த வரை இந்தியாவுக்கு தெற்குப் பகுதியில் எந்த நாட்டுக்கப்பல்களினதும் நடமாட்டம் இருந்திருக்க வில்லை.இந்தியாவின் ஒரே பாதுகாப்பு அரணாக இருந்த தமிழர்களையும் பகைத்துக் கொண்டு காரியம் முடிந்ததும் கழற்றி வி;டு சீனாவுடன் உறவாடும்  சிறிலங்காவை பக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றி வர பகை நாடுகளை வைத்துக் கொண்டு இந்தியா எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?இறைமை மிக்க தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பானது. ஆனால் இந்தியா அதை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. இனி இநைமை மிக்க தமிழர் தேசம் உருவானாலும் அது இந்தியாவுக்கு ஆதரவாக மனத்தளவில் இருக்குமா என்பதும் சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2023 at 02:40, Cruso said:

நம்மட பெரியண்ணனுடன் சரியான கடுப்பில் இருக்கிறீர்கள் போல இருக்குது 😛

முள்ளிவாய்காலுக்குப் பின்பு ஒரு சிலர் என்ன பலர் இவையள் ஒரு தீர்வுக்குப் போயிருந்தால் இப்படி நடந்திருக்கது எனச் சொன்னவையள் ஆனால் அவர்கள் கள யதார்த்தம் அறியாது இப்படிப்பேசியவர்கள்.  காரணம் விடுதலைப் புலிகளுடன் எந்தவித சமரசத்துக்கும் இடம்கொடுக்கக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இப்போதும் இருக்கின்றது.

அதேபோல் இப்போது இலங்கைத் தமிழர் மத்தியில் இந்தியா எம்மை நிம்மதியாக வாழ விடாது எனும் எண்ணம் மெல்லமெல்ல ஏற்படத்தொடங்கிவிட்டது, இது வலுவானதாக மாறும், இப்போது துவாரகா விடையத்தில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.

துவரகா விடையம் பிழைச்சுப்போகுமாகில் அடுத்து என்ன செய்ய வேண்டும் எனும்  திட்டம் இரண்டை அவர்கள் ஏற்கனவே சமகாலத்தில் நடைமுறைப்படுத்திவிட்டார்கள் 

அதன் ஒரு பகுதிதான் 

நேசக்கரம் சாந்தியினது காணொளிகள்,

தேசியத்தலைவரும் பொட்டம்மானும் இந்திய அரசினால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கு. அப்படி இருக்கையில் காசியரும் நெடுமாறனும் வெளியில வந்து மிக நிதானமாக தலைவர் இருக்கிறார் என அறிவிக்கிறார்கள் எனில் தேடப்படும் குற்றவாளியைப்பற்றிய தகவலை அறிந்திருக்கிறார்கள் எனும் முகதாவில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள் ஆனால் இதுவரை எப்படி இவர்கள் எதுவித பிரச்சனையும் இல்லாது அங்கு வாழ்கிறார்கள்?

ஆகவே நான் கூறியதுபோல்
இந்தியா எக்காரணம் கொண்டும் எமை வாழ விடாது எனும் தமிழர்களது எண்ணம் இன்னமும் பலமடங்காகவே அதிகரிக்கும் அப்போது வேறி ஒரு புதிய முயற்சியுடன் இந்தியா எம்மத்தியில் வரும். அதுவும் அடிபட்டுப்போகும்.

அதன்பின்பு எதிர்காலத்தில்.

இப்போது தொலைதூரத்திலுள்ள அமெரிக்கா பின்லாந்து நாட்டின் பதினைந்து இராணுவ முகாம்களில் தனது இராணுவத் தளபாடங்களையும் அதிப்பராமரிப்பதற்கான துருப்புக்களையும் வைத்திருக்கலாம் எனும் நேற்றைய தினம் முடிவுசெய்யப்பட்ட  ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க பின்லாந்துக்குள் இராணுவ நடவடிக்கையை ஆரம்மிக்கப்போகின்றதோ 

அதேபோல் சீனா இலங்கைத் தீவின் பல பகுதிகளில் தனது படைகளையும் போர்த்தளபாடங்களையும் உள்நுழைக்கும் நேரம் விரைவில் வரும்.
அப்போது வடை போச்சே எனும் வடிவேலுவாக இந்தியா இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.