Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-9-10.jpg?resize=650,375&ssl=1

பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை.

வடக்கு சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்குமொன்று ஏற்பட்டுள்ளதால் இலங்கையின் கடற்பரப்பை அண்டிவாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு சுமாத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், சுமாத்திரா தீவுகளை அண்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எவ்வித எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை.

இதேவேளை, நேற்று இரவு மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இருந்து சுமார் 208 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் இரவு 10.01 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. அத்துடன், கடந்த 26ஆம் திகதி சத்தீஸ்கர் மற்றும் 27ஆம் திகதி அசாம் மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்தன. இருந்தாலும் வேறு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1364520

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போகுது வரப்போகுது என்று சொல்லி ஒரு நாள் திரும்ப வரப்போகுது என்று வைப்போம். எச்சரிக்கை கொடுப்பது சரி. இன்னோர் சுனாமி அழிவின் பாதிப்புக்களை தடுக்க/குறைக்க எப்படியான முன்னேற்பாடுகள் தற்போது உள்ளன?

எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் அந்த எச்சரிக்கையை மக்கள் செவிமடுத்து கேட்டு தம்மை பாதுகாக்கும் ஏற்பாடுகளில் இறங்குவார்களா?

இயற்கை அழிவுகளுக்கான ஆபத்துக்கள் நிறையவே உள்ளன. இதற்கான தயார்ப்படுத்தல் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நியாயம் said:

அழிவை தடுக்க என்று யார் சொன்னார்கள்??

நாங்கள் சொன்னோமில்ல??

காசு தாங்க புனருத்தாரணம் செய்ய?

இந்த கடன்களில் இருந்து மீள வேற வழி??

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நியாயம் said:

இல்லை என்றே நினைக்கிறேன். 

நான் முதலில் சுனாமி என்ற சொல்லை கேட்டது ஜனவரி 2003 இல் அன்பே சிவம் படத்தில். அதில் தன் தந்தை இராட்சத அலையில் அள்ளுண்டு போனார் என கூறும் கமல் பாத்திரம், ஜப்பானில் 50 அடிக்கெல்லாம் அலைவரும், சுனாமி என்பார்கள் என சொல்லுவார்.

அதன்பின் கூகிளை நோண்டி என்னெவென்று அறிந்தேன். அண்ணளவாக இரு வருடத்தில் எல்லார் வாயிலும் சுனாமி, சுனாமி என்பதே பேச்சாக இருந்தது.

ஆனால் இதுதான் தமிழர் தேசத்தின் முதல் சுனாமி அல்ல. ஐரோப்பிய ஆட்சியில் கூட அடித்ததாம்.

ஆனால் நூற்றாண்டுக்களுக்கு பின் வருவதால், பொது பிரக்ஞையில் சுனாமி மீதான பயம், அக்கறை இருப்பதில்லை.

2010 வரை கூட கரையோத்தில் இருந்து குறித அளவு தூரத்தில் கட்டுமானானம் கட்ட யோசித்தார்கள்.

ஆனால் இப்போ? துறைமுக நகரம்….தெஹிவளை, கல்கிசையில் கடலுக்குள் உணவங்கள் கட்டாத குறை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அழிவை தடுக்க என்று யார் சொன்னார்கள்??

நாங்கள் சொன்னோமில்ல??

காசு தாங்க புனருத்தாரணம் செய்ய?

இந்த கடன்களில் இருந்து மீள வேற வழி??

இதுவே இலங்கை அரசினதும் ,பெரும்பான்மை இனத்தினதும் இலகு வழி...பாவத்துக்கு இரங்கிப்போட்டதை..பக்கெடில் நிரப்பிவிட்டு..ஆடம்பரமும் அதிகாரமும்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

அழிவை தடுக்க என்று யார் சொன்னார்கள்??

நாங்கள் சொன்னோமில்ல??

காசு தாங்க புனருத்தாரணம் செய்ய?

இந்த கடன்களில் இருந்து மீள வேற வழி??

இலங்கைக்கு நமது ஆயுள் காலத்தில் மீண்டும் இன்னோர் சுனாமி வரக்கூடாது. 

19 hours ago, goshan_che said:

இல்லை என்றே நினைக்கிறேன். 

நான் முதலில் சுனாமி என்ற சொல்லை கேட்டது ஜனவரி 2003 இல் அன்பே சிவம் படத்தில். அதில் தன் தந்தை இராட்சத அலையில் அள்ளுண்டு போனார் என கூறும் கமல் பாத்திரம், ஜப்பானில் 50 அடிக்கெல்லாம் அலைவரும், சுனாமி என்பார்கள் என சொல்லுவார்.

அதன்பின் கூகிளை நோண்டி என்னெவென்று அறிந்தேன். அண்ணளவாக இரு வருடத்தில் எல்லார் வாயிலும் சுனாமி, சுனாமி என்பதே பேச்சாக இருந்தது.

ஆனால் இதுதான் தமிழர் தேசத்தின் முதல் சுனாமி அல்ல. ஐரோப்பிய ஆட்சியில் கூட அடித்ததாம்.

ஆனால் நூற்றாண்டுக்களுக்கு பின் வருவதால், பொது பிரக்ஞையில் சுனாமி மீதான பயம், அக்கறை இருப்பதில்லை.

2010 வரை கூட கரையோத்தில் இருந்து குறித அளவு தூரத்தில் கட்டுமானானம் கட்ட யோசித்தார்கள்.

ஆனால் இப்போ? துறைமுக நகரம்….தெஹிவளை, கல்கிசையில் கடலுக்குள் உணவங்கள் கட்டாத குறை.

பெரிய பிரச்சனை என்ன என்றால் நம்மட சனம் இருக்கும் இடத்தைவிட்டு மசியாது. ஆட்களை குண்டுக்கட்டாக தூக்கித்தான் அப்புறப்படுத்த பேண்டும். எச்சரிக்கை கொடுக்கப்பட்டதும் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்வதற்கு உதுகள் சொல்வழி கேட்கும் சனங்களா. 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நியாயம் said:

பெரிய பிரச்சனை என்ன என்றால் நம்மட சனம் இருக்கும் இடத்தைவிட்டு மசியாது. ஆட்களை குண்டுக்கட்டாக தூக்கித்தான் அப்புறப்படுத்த பேண்டும். எச்சரிக்கை கொடுக்கப்பட்டதும் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்வதற்கு உதுகள் சொல்வழி கேட்கும் சனங்களா. 

ஒப்பரேசன் லிபரேசன் பட்டபாடு நினைவுக்கு வந்து தொலைக்குது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒப்பரேசன் லிபரேசன் பட்டபாடு நினைவுக்கு வந்து தொலைக்குது .

அட...இதிலை நீங்களும்..அம்புட்டா..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அட...இதிலை நீங்களும்..அம்புட்டா..

வயதானவர்கள் வீடு காணியை விட்டு வரமாட்டம் என்று அடம் பிடித்தது இப்பவும் நினைவில் உள்ளது . சுனாமி வரமுன் கடல் நீர் வற்றியது போல் காணப்படும் அதுக்குள் நிண்டு செல்பி எடுத்து விளயாடுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வயதானவர்கள் வீடு காணியை விட்டு வரமாட்டம் என்று அடம் பிடித்தது இப்பவும் நினைவில் உள்ளது . சுனாமி வரமுன் கடல் நீர் வற்றியது போல் காணப்படும் அதுக்குள் நிண்டு செல்பி எடுத்து விளயாடுங்கள் .

நான் சொன்னது..இந்த லிபரேசனில் நீங்களும் அகப்பட்டீர்களா  ஏன்பதைத்தான்..எனெனில் எனக்கு அதில் நிறைய அனுபவம் இரூக்கு...சும்ம ஒரு தகவலக்குத்தான்...நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.