Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Fixtures revealed for ICC Men’s T20 World Cup 2024

 
  

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

T20 உலகக்கிண்ணத்தின் போட்டி அட்டவணையின்படி அமெரிக்காவின் 3 மைதானங்களிலும், மேற்கிந்திய தீவுகளின் 6 மைதானங்களிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

 

அதன்படி இலங்கை அணி D குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் தங்களுடைய முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஜூன் 3ம் திகதி நியூ யோர்க்கில் எதிர்கொள்கின்றது. 

அதனைத்தொடர்ந்து ஜூன் 7ம் திகதி பங்களாதேஷ் அணியையும், ஜூன் 11ம் திகதி நேபாளம் அணியையும், ஜூன் 16ம் திகதி நெதர்லாந்து அணியையும் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. 

மொத்தமாக விளையாடவுள்ள 20 அணிகளில் 10 அணிகள் முதல் 29 நாட்கள் அமெரிக்காவில் போட்டியிடுகின்றன. அதன் அடிப்படையில் 16 போட்டிகள் டளாஸ், லவுடர்ஹில் மற்றும் நியூ யோர்க் மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியா  பாகிஸ்தான் போட்டி நியூ யோர்க்கில் ஜூன் 9ம் திகதி நடைபெறவுள்ளது. 

அதேநேரம் மேற்கிந்திய தீவுகளின் ஆறு வெவ்வேறு மைதானங்களில் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் அரையிறுதிப்போட்டிகள் ட்ரினிடட் மற்றும் டொபேகோ மற்றும் கயானாவில் நடைபெறவுள்ளதுடன், இறுதிப்போட்டி ஜூன் 29ம் திகதி பார்படோஸில் நடைபெறவுள்ளது. 

போட்டி அட்டவணை 

  • ஜூன் 1 அமெரிக்கா எதிர் கனடா (டளாஸ்) 
  • ஜூன் 2  மே.தீவுகள் எதிர் பப்புவா நியூ கினியா (கயானா) 
  • ஜூன் 2  நமீபியா எதிர் ஓமான் (பார்படோஸ்) 
  • ஜூன் 3  இலங்கை எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) 
  • ஜூன் 3 ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 4  இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (பார்படோஸ்) 
  • ஜூன் 4  நெதர்லாந்து எதிர் நேபாளம் (டளாஸ்) 
  • ஜூன் 5  இந்தியா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) 
  • ஜூன் 5  பப்புவா நியூ கினியா எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 5  அவுஸ்திரேலியா எதிர் ஓமான் (பார்படோஸ்) 
  • ஜூன் 6  அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் (டளாஸ்) 
  • ஜூன் 6  நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து (டளாஸ்) 
  • ஜூன் 7  கனடா எதிர் அயர்லாந்து (நியூ யோர்க்) 
  • ஜூன் 7 நியூசிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் (கயானா) 
  • ஜூன் 7  இலங்கை எதிர் பங்களாதேஷ் (டளாஸ்) 
  • ஜூன் 8  நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா (நியூ யோர்க்) 
  • ஜூன் 8  அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (பார்படோஸ்) 
  • ஜூன் 8  மே.தீவுகள் எதிர் உகண்டா (கயானா) 
  • ஜூன் 9  இந்தியா எதிர் பாகிஸ்தான் (நியூ யோர்க்) 
  • ஜூன் 9  ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து (ஆண்டிகா) 
  • ஜூன் 10  தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் (நியூ யோர்க்) 
  • ஜூன் 11  பாகிஸ்தான் எதிர் கனடா (நியூ யோர்க்) 
  • ஜூன் 11  இலங்கை எதிர் நேபாளம் (ப்ளோரிடா) 
  • ஜூன் 11  அவுஸ்திரேலியா எதிர் நமீபியா (ஆண்டிகா) 
  • ஜூன் 12  அமெரிக்கா எதிர் இந்தியா (நியூ யோர்க்) 
  • ஜூன் 12  மே.தீவுகள் எதிர் நியூசிலாந்து (ட்ரினிடட்) 
  • ஜூன் 13  இங்கிலாந்து எதிர் ஓமான் (ஆண்டிகா) 
  • ஜூன் 13  பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து (சென். வின்செண்ட்) 
  • ஜூன் 13  ஆப்கானிஸ்தான் எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) 
  • ஜூன் 14  அமெரிக்கா எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) 
  • ஜூன் 14  தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் (சென். வின்செண்ட்) 
  • ஜூன் 14  நியூசிலாந்து எதிர் உகண்டா (ட்ரினிடட்) 
  • ஜூன் 15  இந்தியா எதிர் கனடா (ப்ளோரிடா) 
  • ஜூன் 15  நமீபியா எதிர் இங்கிலாந்து (ஆண்டிகா) 
  • ஜூன் 15  அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து (சென்.லூசியா) 
  • ஜூன் 16  பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து (ப்ளோரிடா) 
  • ஜூன் 16  பங்களாதேஷ் எதிர் நேபாளம் (சென்.வின்செண்ட்) 
  • ஜூன் 16  இலங்கை எதிர் நெதர்லாந்து (சென்.லூசியா) 
  • ஜூன் 17  நியூசிலாந்து எதிர் பப்புவா நியூ கினியா (ட்ரினிடட்) 
  • ஜூன் 17  மே.தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் (சென்.லூசியா) 
  • ஜூன் 19 – A2 v D1, ஆண்டிகா 
  • ஜூன் 19– B1 v C2, சென். லூசியா 
  • ஜூன் 20 – C1 v A1, பார்படோஸ் 
  • ஜூன் 20 – B2 v D2, ஆண்டிகா 
  • ஜூன் 21 – B1 v D1, சென். லூசியா 
  • ஜூன் 21 – A2 v C2, பார்படோஸ் 
  • ஜூன் 22 – A1 v D2, ஆண்டிகா 
  • ஜூன் 22 – C1 v B2, சென்.வின்செண்ட் 
  • ஜூன் 23 – A2 v B1, பார்படோஸ் 
  • ஜூன் 23 – C2 v D1, ஆண்டிகா 
  • ஜூன் 24 – B2 v A1, சென். லூசியா 
  • ஜூன் 24– C1 v D2, சென். வின்செண்ட் 
  • ஜூன் 26 – Semi-Final 1, கயானா 
  • ஜூன் 27 – Semi-Final 2, ட்ரினிடட் 
  • ஜூன் 29 – Final, பார்படோஸ் 
  • https://www.thepapare.com/fixtures-revealed-for-icc-mens-t20-world-cup-2024-tamil/
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது.

வணக்கம் @கிருபன்

அப்புறம் என்ன .

போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள்.

முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள்.

போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, ஈழப்பிரியன் said:

இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது.

வணக்கம் @கிருபன்

அப்புறம் என்ன .

போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள்.

முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள்.

போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.

விடுங்க பாஸ் ....."காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளட்டும்".......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/1/2024 at 16:41, ஈழப்பிரியன் said:

இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது.

வணக்கம் @கிருபன்

அப்புறம் என்ன .

போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள்.

முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள்.

போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இந்த‌ முறை ப‌ல‌ நாடுக‌ள் க‌ல‌ந்து கொள்ளுகின‌ம்............க‌ர்விய‌ன் தீவில் உல‌க‌ கோப்பை ந‌ட‌ந்தால் ப‌ல‌ சின்ன‌ அணிக‌ளும் க‌ல‌ந்து கொள்ள‌ வாய்ப்பு கொடுப்பின‌ம்🤲🙏...............

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடுவதில் என்ன சிக்கல்?

விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 நிமிடங்களுக்கு முன்னர்

விராட் கோலி தான் ஆடும் ஆட்டங்களின் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் ஆடுவது அவரது பலம் என்று பலராலும் பாராட்டப்படுகிறார். ஆனால் இப்போது அவர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவாரா என்பது ஒரு பெரும் கேள்வியாகியிருக்கிறது. விராட் கோலிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன?

“விராட் கோலியின் பலமே சூழலுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்வதுதான். போட்டி குறித்த அவரது விழிப்புணர்வு அற்புதமானது. 4 ஓவர்களுக்குப்பின், 6 ஓவர்களுக்குப்பின் ஆட்டத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் அவரது பார்வை மகத்தானது. சேஸிங்கின்போது, தேவைப்படும் ரன்ரேட்டை கணக்கிட்டு பேட்டிங் செய்வதில் வல்லவர்”

இந்த வார்த்தைகள் விராட் கோலி குறித்து இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய வீரர்களுள் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கூறியது. ஆனால், கோலி வரும் ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் வலம் வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில நாளேடுகள், இணையதளங்கள் வெளியிட்ட செய்தியில் “2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை,” என்று தெரிவித்திருந்தன. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, விராட் கோலியின் பெயர் ட்ரெண்டாகியது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டியில் 14 மாதங்களாக விளையாடவில்லை. அதன்பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், விராட் கோலி சொந்தப் பணி காரணமாக அந்தத் தொடரிலிருந்து விலகினார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் கோலி விலகிக் கொண்டார்.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கோலி ஆடுவாரா?

பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சமீபத்தில் கூறுகையில் “வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கரீபியன் தீவுகளில் நடக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு ரோகித் சர்மாதான் இந்திய அணியை வழி நடத்துவார்,” என்று உறுதி செய்தார். ஆனால் விராட் கோலி குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை, அவர் உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் தெரியாது.

இந்நிலையில், ஆங்கில இணையதளங்கள், நாளேடுகள் ஆகியவை ‘பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக’ வெளியிட்ட செய்தியில் “மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் ‘ஸ்லோ விக்கெட்டைக்’ கொண்டவை. இங்கு பந்து மெதுவாக, தாழ்வாக பேட்ஸ்மேனை நோக்கி வரும், அதனால் பொறுமையாக பேட் செய்ய வேண்டும். பவர் ஹிட்டராக இருக்க வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்கள் விராட் கோலி பேட்டிங் ஸ்டைலுக்கு உகந்ததாக இருக்காது. பவர் ஹிட்டர் வீரர்களுக்குத்தான் இந்த ஆடுகளம் பொருந்தும். ஆதலால், இந்திய அணியிலிருந்து கோலி நீக்கப்பட வாய்ப்புள்ளது,” என்று தெரிவித்திருந்தன.

மேலும், “விராட் கோலியை உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்காமல் அவரை நீக்குவது தேர்வாளர்களுக்கு கடினமான முடிவாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை. எதிர்காலத்தில் அணியை வழிநடத்திச் செல்லவும், இளம் வீரர்களை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும். சர்வதேச அரங்கில் இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினால்தான் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். ஆதலால் விராட் கோலி அணியிலிருந்து நீக்கப்படலாம்,” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடினமான செய்தியை தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர்தான், விராட் கோலிக்கு தெரிவித்து அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

டி20 உலகக் கோப்பை போட்டிகள் எப்போது நடக்கின்றன?

மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 1-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதிவரை நடக்கவுள்ளது. 2022-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 20 அணிகள் போட்டியிடுகின்றன.

மொத்தம் 55 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகளும், அமெரிக்காவும் சேர்ந்து நடத்துகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் தவிர, நியூயார்க், டெக்ஸாஸ், புளோரிடா ஆகிய அமெரிக்க மாநிலங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளிட்ட தரவரிசையில் உள்ள 8 அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன. முதல் முறையாக கனடா, உகாண்டா, போட்டியை நடத்தும் அமெரிக்கா ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன.

சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம்,TWITTER/ SURYA KUMAR YADAV

படக்குறிப்பு,

விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு சூர்யகுமார் யாதவ், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது.

விராட் கோலிக்கு பதிலாக யார்?

விராட் கோலி இல்லாவிட்டால் அவரின் இடத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது?

சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரவீந்திர ஜடேஜா,திலக் வர்மா, இஷான் கிஷன், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் அய்யர், போன்ற இளம் வீரர்கள் பட்டியல் நீள்கிறது.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரிந்து வீழ்ந்தபோது, விராட் கோலி என்ற ஒற்றை பேட்டர்தான் இந்திய அணியைத் தூக்கி நிறுத்தினார். அவரை நீக்குவது எந்த விதத்தில் நியாயம், கோலி போன்ற அனுபவமான பேட்டர் அணிக்கு அவசியம் என்று சமூக வலைத்தளத்தில் கோலியின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், டி20 போட்டியில் விராட் கோலியின் புள்ளிவிவரங்கள், அவரது பேட்டிங் ஸ்டைல் போன்றவை அவருக்கே தெரியாமல் அவருக்கு பாதகமாக அமைந்துவிட்டன என்றும் விமர்சனங்கள் இருக்கின்றன.

விராட் கோலியின் பேட்டிங் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் போன்றவை இன்றுள்ள அதிவேக டி20 போட்டிக்கு எதிர்பார்ப்பைவிட குறைவாக இருக்கிறது என்று கிரிக்கெட் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார்

கோலியின் பலவீனங்கள் என்ன?

விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 37 அரைச் சதங்கள் ஆகியவையும் அடங்கும். சராசரி 51.75, ஸ்ட்ரைக் ரேட் 138 என்று வைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் விராட் கோலி 361 பவுண்டரிகள், 117 சிக்ஸர்கள் அடித்துள்ளார். பவுண்டரி எடுத்துக் கொண்டால் விராட் கோலி இன்னிங்ஸ் ஒன்றுக்கு 3.30 பவுண்டரியும், சிக்ஸராக 1.07 மட்டுமே அடிக்கிறார். ரன்கள் வீதம் கணக்கிட்டால், பவுண்டரிகள் வாயிலாக 19 முதல் 20 ரன்கள் வரை சராசரியாக கோலி சேர்க்கிறார்.

விராட் கோலி டி20 போட்டியில்கூட விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்கள் எடுப்பதற்குதான் முன்னுரிமை அளிக்கிறாரே தவிர, பவுண்டரிகள், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் ஹிட்டராக மாறத் தயங்குகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

விராட் கோலியின் டி20 போட்டிகளில் இன்னிங்ஸ் ஒன்றுக்கு பேட்டிங் சராசரி 27.1 பந்துகளில் அவர் 37.5 ரன்களை அணிக்காக எடுக்கிறார்.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி 117 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,037 ரன்கள் குவித்துள்ளார்

டி20 ஆட்டத்துக்கு தேவை என்ன?

கசப்பான உண்மை என்னவென்றால், ‘டி20 கிரிக்கெட் போட்டி என்பது நிதானமான ஸ்ட்ரைக்ரேட்டுடன், சூழலுக்கு ஏற்ப பேட்டிங் செய்யும் போட்டி அல்ல, அதிரடியாக, பேய்த்தனமாக பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் ஆட்டம் என்பதை உணர வேண்டும்,’ என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

டி20 போட்டியில் மொத்தம் 10 பேட்டர்களும் சந்திக்கப் போவது 120 பந்துகளைத்தான். சராசரியாக ஒரு விக்கெட் 12 பந்துகளை மட்டுமே சந்திக்க முடியும். இது ஒரு நாள் போட்டியில் 30 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்றால், டெஸ்ட் போட்டியில் 62 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என எடுக்கலாம்.

ஆதலால், டி20 போட்டிகளில் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் களத்தில் இருக்கும் நேரம், சந்திக்கும் பந்துகள் குறைவு. இந்த முதல் 12 பந்துகளுக்குள் ஒரு விக்கெட் அல்லது பேட்டர் தனது விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. அதற்காக களத்தில் நிற்க வேண்டுமே என்பதற்காக பந்துகளை வீணடித்து ஸ்ட்ரைக் ரேட்டையும், ரன்ரேட்டையும் குறைத்துவிடக்கூடாது.

அதனால்தான் டி20 போட்டியில் ஒரு பேட்டர் களமிறங்கும்போது சந்திக்கும் ஒவ்வொரு பந்துக்கும் எதிர்பார்க்கும் ரன் என்ற கணக்கீடு வைக்கப்பட்டுள்ளது. இதை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். தோல்வி(ஃபெய்லியர்), கேமியோஸ், சக்சஸ்(வெற்றி), அன்டர் பார்(சராசரிக்கும் கீழ்)

தோல்வி: டி20 இன்னிங்ஸில் ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாக எடுத்தால் அது தோல்வியாகும்.

கேமியோஸ்: ஒரு பேட்டர் 12 பந்துகளுக்குள் ஆட்டமிழந்தாலும், சந்தித்த பந்துகளில் இருந்த எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்த்தால்அது கேமியோஸ்.

வெற்றி: ஒரு பேட்டர் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்ப்பது.

சரிசரிக்கும் குறைவு: ஒரு பேட்டர் குறைந்தபட்சம் 12 பந்துகளைச் சந்தித்து, சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்ப்பதாகும்.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,TREVOR COLLENS

படக்குறிப்பு,

கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார்

கோலி ‘அன்டர் பார்’ பேட்டரா?

இந்த வகையில் பார்த்தால், டி20 போட்டிகளில் இந்திய அணியில் இப்போதுள்ள இளம் வீரர்களுடன் ஒப்பிடும்போது, விராட் கோலி சராசரிக்கும் குறைவான ‘அன்டர் பார்’ ஆட்டங்களைத்தான் அதிகமாக விளையாடியுள்ளார்.

அதாவது கோலி சந்தித்த பந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் ரன்களைவிட குறைவாகச் சேர்த்துள்ளார். அதேபோல கேமியோஸ் எனப்படும் அதிரடியான ஆட்டங்கள் வரிசையில் கோலி தனது 107இன்னிங்ஸ்களில் வெறும் 8.7% மட்டுமே ஆடியுள்ளார்.

ஆனால், சந்தித்த பந்துகளில் எதிர்பார்க்கும் ரன்களைவிட அதிகமாக சேர்க்கும் வெற்றியாளர் பேட்டர்கள் சராசரியில் 30.8% வைத்துள்ளார். இது சிறப்பானது என்றாலும் டி20 போன்ற வேகமான ஆட்டத்துக்கு இது பொருந்தாது.

விராட் கோலியின் ரன்சேர்க்கும் வேகம், ரோகித் சர்மாவுடன் ஒப்பிடும்போது 5.7% மெதுவாகவும், கே.எல்.ராகுலுடன் ஒப்பிடும்போது 5.2% மெதுவாகவும், சூர்யகுமாருடன் ஒப்பிடும்போது 27% சதவீதம் மெதுவாகவும் இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி தான்சந்திக்கும் முதல் 100 பந்துகளில் 128 ரன்களைச் சேர்க்கிறார். ரோகித் சர்மா 139 ரன்களாகவும், கே.எல்.ராகுல் 134 ரன்களாக சேர்க்கிறார்கள். ஆனால், முதல் 20 பந்துகளைச் சந்திக்கும் வகையில் ரோகித் சர்மா 127 ரன்கள் என கோலியைவிடப் பின்தங்கினாலும், போட்டியில் ரன்ரேட்டை வேகப்படுத்துவதில் கோலியைவிட சிறந்தவராக திகழ்கிறார் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர்

கோலியைப் போன்ற பிற வீரர்கள் யார்?

இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டி20 போட்டியில் விராட் கோலி மெதுவாக ரன்சேர்க்கும் வீரர். இதனால் 120 பந்துகளைக் கொண்ட போட்டியில் கோலியின் ஆங்கர் ஆட்டத்தால் அடுத்தார்போல் காத்திருக்கும் பேட்டர்கள் பல போட்டிகளில் பேட் செய்யாமல்கூட போகலாம்.

பாகிஸ்தானின் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் போன்றோரில் ஆட்டம் கூட கூட கோலி போன்றதுதான். இதே சிக்கல்தான் நியூசிலாந்தில் கேன் வில்லியம்ஸனிடமும் இருக்கிறது. இதனால்தான் அதிவேகமான ஆட்டத்தைக் கொண்ட டி20 போட்டிகளில் வில்லியம்ஸனால் ஈடுகொடுக்க முடியவில்லை.

கரீபியனில் கோலியின் பேட்டிங் எப்படி?

கரீபியன் ஆடுகளங்களில் கோலி 7 இன்னிங்ஸ்களில் 229 ரன்களும், அமெரிக்காவில் 3 போட்டிகளில் 63 ரன்களும் சேர்த்துள்ளார்.

கோலியின் சராசரி இந்த மைதானங்களில் 29 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 120.66 என இருக்கிறது. இங்கு கோலி 30 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவரின் ஒட்டுமொத்த ரன்களில் 49% பவுண்டரி அடங்கும். 100 டி20 போட்டிகளுக்கு மேல் அனுபவம் கொண்டவராக இருந்தாலும் கரீபியன், அமெரிக்க ஆடுகளங்களில் அவருக்கு பெரிதாக அனுபவம் இல்லை, அங்கு அவர் பவர்ஹிட்டராக இல்லை, அன்டர்பார் பேட்டராகவே இருக்கிறார் என்பது தெரிகிறது.

 
விராட் கோலியின் எதிர்காலம் என்ன

பட மூலாதாரம்,BCCI/IPL

படக்குறிப்பு,

கோலி டி20 ஏற்றார்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது

ஐபிஎல் தொடரில் கோலிக்கு என்ன வாய்ப்பு?

விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கோலி விளையாடவில்லை.

வரும் 22-ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் டி20 தொடரில் 3 மாதங்களுக்குப்பின் கோலி கிரிக்கெட் விளையாட உள்ளார். முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியை எதிர்த்து விராட் கோலி இருக்கும் ஆர்சிபி அணி மோதுகிறது. இந்தத் தொடரின் முதல் பாதியில் விராட் கோலியின் பேட்டிங் திறமை சிறப்பாக இருந்தால், கடைசி நேரத்தில்கூட தேர்வாளர்கள் இந்திய அணிக்குள் கோலியைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது பாராமுகமாகவும் இருக்கலாம்.

கோலியின் மனநிலை என்ன?

விராட் கோலி உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் இருக்க 3 காரணங்கள் இருக்கலாம் என்று மூத்த விளையாட்டுத்துறை பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி செய்திகளிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் “ஐபிஎல் மூலம் புதிய இளம் வீரர்கள் அறிமுகமாகிறார்கள் இந்திய அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக கோலி நீக்கப்படலாம். அடுத்ததாக கோலியின் மனநிலை. எந்தெந்த போட்டியில் தான் விளையாட வேண்டும் என்பதை கோலிதான் முடிவு செய்கிறாரே தவிர, தேர்வுக்குழுவினர் அல்ல. தான் விரும்பினால், டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார், பிடிக்கவில்லையென்றால், டி20 தொடரில்கூட விளையாடுவதில்லை. இதுபோன்ற கோலியின் மனநிலை, இப்போதுள்ள தேர்வாளர்கள் சகிக்கமாட்டார்கள்,” என்றார்.

அவர் மேலும் பேசுகையில், “14 மாதங்களாக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாத கோலியை, திடீரென டி20 உலகக் கோப்பைக்கு மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மற்ற வீரர்களின் திறமையை, மனநிலையை பாதிக்கும். அணியின் ஓய்வு அறையில் ஒற்றுமையைப் பாதிக்கும். அது மட்டுமல்லாமல் இளம் வீரர்கள் பலர் புதிதாக அணிக்குள் வரும்போது, கோலியால் அவர்களுடன் உடனடியாக ஒத்துப்போவது கடினம். அணிக்குள் தொடர்ந்து இருக்கும்போதுதான் சகவீரர்களுடன் புரிதல், ஒற்றுமை, உத்வேகம், ஸ்பிரிட் போன்றவை உருவாகும்,” என்றார்.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘மாற்றுவீரர் இல்லாமல் கோலியை நீக்குவது தவறு’

முத்துக்குமார் மேலும் பேசுகையில், “கோலிக்குப் பதிலாக வலிமையான பேட்டரை உருவாக்கிவிட்டுத்தான் அவரை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் கோலி இல்லாதது எதிரணிக்கு மனரீதியாக வலிமையைக் கொடுத்துவிடும். ஆதலால், கோலியும் அணியில் இருக்க வேண்டும், அவரை முக்கியமான ஆட்டங்களுக்குப் பயன்படுத்திவிட்டு, முக்கியமற்ற ஆட்டங்களில் அவருக்குப்பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்,” எனத் தெரிவித்தார்.

கோலி டி20 போட்டிகளுக்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து முத்துக்குமார் பதில் அளிக்கையில் “ஒரு நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் புஜாரா மெதுவாக விளையாடுகிறார் என்று குற்றம்சாட்டிய விராட் கோலி மீது, இப்போது டி20 போட்டியில் மெதுவாக ஆடுகிறார் என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. இது ஏறக்குறைய உண்மைதான் என்றாலும், ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடும்போது இதுபோன்றுதான் விளையாட முடியும்,” என்றார்.

மேலும், “மற்றவகையில், 190 ரன்கள் அடிக்க வேண்டிய ஆட்டத்தில் கோலி கடைசிவரை நிலைத்து நின்றால் 170 ரன்கள்தான் வந்தது என்ற குற்றச்சாட்டு ஏற்கக்கூடியதுதான். தொடக்கத்தில் நிதானமாக, மெதுவாக பேட் செய்தாலும், ஸ்ட்ரைக் ரேட்டை பராமரித்து கோலி கொண்டு செல்கிறார், கடைசி நேரத்தில் கேமியோ ஆடுகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங்கில் பெரிய மாற்றம் இருந்தது. வரும் ஐபிஎல் தொடரில் கோலியின் பேட்டிங் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cn0e4e16llwo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/1/2024 at 16:41, ஈழப்பிரியன் said:

இதில் எத்தனை பேர் அமெரிக்கா,கனடாவில் காணாமல் போகிறார்களோ தெரியாது.

வணக்கம் @கிருபன்

அப்புறம் என்ன .

போட்டியை நடாத்த வேண்டியதை கவனமெடுங்கள்.

முக்கியமாக ஒரு கேள்வியை சேருங்கள்.

போட்டியின் முடிவில் எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பதே.

அந்த‌க் கால‌ம் ம‌லை ஏறி போய் விட்ட‌து...........சின்ன‌ நாட்டு அணி வீர‌ர்க‌ள் எல்லாம் ப‌ண‌ ம‌ழையில் மித‌க்கின‌ம்...............திற‌மை இருந்தா விளையாட்டில் எந்த‌ உச்சிக்கும் போக‌லாம்................

  • இணையவன் changed the title to டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2024 ரி - 20 உலகக் கிண்ணத்திலிருந்து சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிறுத்தக் கடிகார முறைமை நிரந்தரம்

15 MAR, 2024 | 05:39 PM
image

(நெவில் அன்தனி)

இந்த வருடம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து வெள்ளைப் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நிறுத்தக் கடிகாரம் (Stop clock) முறைமை நிரந்தரமாக்கப்படவுள்ளது.

இந்த முடிவு வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) வருடாந்த சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஜூன் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியிலிருந்து அனைத்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ரி20 சர்வதேச போட்டிகளிலும் நிறுத்தக் கடிகாரம் நிரந்தரமாக்கப்படும்.

ஆடவருக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் சர்வதேச போட்டிகளில் 2023 டிசம்பரில் பரீட்சார்த்த அடிப்படையில் நிறுத்தக் கடிகாரத்தை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த பரீட்சார்த்த செயற்பாடு 2024 ஏப்ரல் வரை தொடர்வதாக இருந்தது. ஆனால், இந்த பரீச்சார்த்த செயற்பாடானது போட்டிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவு செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பரீட்சார்த்த செயற்பாட்டின் மூலம் ஒவ்வொரு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் 20 நிமிடங்களை மீதப்படுத்தலாம் என பிரதம நிறைவேற்று அதிகாரிகள் குழுவிடம் எடுத்துக்கூறப்பட்டது.

இதற்கு அமைய சகல முழு அந்தஸ்துடைய நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்த முறைமை 2024 ஜூன் 1ஆம் திகதயிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்திலிருந்துதான் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

நிறுத்தக் கடிகார விதிக்கு அமைய வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் களத்தடுப்பில் ஈடுபடும் அணியினர் ஒரு ஓவர் முடிவடைந்து 60 செக்கன்களுக்குள் அடுத்த ஓவரை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 செக்கன்களிலிருந்து பூஜ்ஜியம் வரை பின்னோக்கி நகரும் மின்னியல் கடிகாரம் மைதானத்தில் காட்சிப்படுத்தப்படும். கடிகாரத்தின் தொடக்கத்தை தீர்மானிப்பது மூன்றாவது மத்தியஸ்தரின் பொறுப்பில் இருக்கும்.

களத்தடுப்பில் ஈடுபடும் அணி முந்தைய ஓவர் முடிவடைந்து குறிப்பிட்ட 60 செக்கன்களுக்குள் அடுத்த ஓவரின் முதலாவது பந்தை வீச தவறினால் 2 எச்சரிக்கைகளுக்கு உள்ளாகும். தொடர்ச்சியாக மீறல்கள் இடம்பெற்றால் ஒவ்வொரு மீறல்களுக்கும் 5 ஓட்டங்கள் வீதம் அபாராதம் விதிக்கப்படும். அதாவது மற்றைய அணியின் மொத்த எண்ணிக்கைக்கு 5 ஓட்டங்கள் வீதம் சேரும்.

இந்த விதியில் சில விதிவிலக்குகள் உள்ளன, மேலும் கடிகாரம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அது ரத்து செய்யப்படலாம்.

ஓவர்களுக்கு இடையில் ஒரு புதிய துடுப்பாட்ட வீரர் களம் நுழையும்போது,

உத்தியோகபூர்வ தாகசாந்தி இடைவெளி அறிவிக்கப்படும்போது,

துடுபாட்ட வீரர் அல்லது களத்தடுப்பாளருக்கு உபாதை ஏற்பட்டு சிகிச்சைக்கு கள மத்தியஸ்தர் ஒப்புதல் வழங்கும்போது,

களத்தடுப்பில் ஈடுபடும் அணியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட எந்த சூழ்நிலையிலும் நேரம் இழக்கப்படும்போது இந்த விதியில் விதிவிலக்களிக்கப்படும்.

https://www.virakesari.lk/article/178815

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா, இலங்கையில் கூட்டாக 2026 ரி20 உலகக் கிண்ணம்; 2024 ரி20 உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கு இருப்பு நாட்கள்

Published By: VISHNU   15 MAR, 2024 | 08:15 PM

image
 

(நெவில் அன்தனி)

ஐசிசியினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தும் என்பதை ஐசிசி மீண்டும் உறுதிசெய்துள்ளது.

2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 20 அணிகள் பங்குபற்றும்.

2026 ரி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி அங்கீகரித்துள்ளது.

இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட்டாக நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பெறும் நாடுகள், வரவேற்பு நாடுகளான இந்தியாவுடனும் இலங்கையுடனும் இயல்பாகவே 2026 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.

வரவேற்பு நாடுகளின் நிரல்படுத்தல்களைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு வரையான மற்றைய அணிகள் தீர்மானிக்கப்படும்.

எஞ்சிய 8 நாடுகள் பிராந்திய தகுதிகாண் சுற்றுகள் மூலம் ரி20 உலகக் கிண்ணத்தில் இணையும்.

இது இவ்வாறிருக்க, இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இருப்பு (ரிசேர்வ்) நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்றைய ஐசிசி சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் குழு நிலைப் போட்டிகள் (லீக் சுற்று) மற்றும் சுப்பர் 8 சுற்று  போட்டிகளின்போது ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும அணிக்கு குறைந்தது ஐந்து ஓவர்கள் வீசப்பட வேண்டும் என  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் நொக் அவுட் போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி மேலும் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/178827

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ர‌ன் மிசின் கோலிய‌ உல‌க‌ கோப்பைக்கு தெரிவு செய்ய‌ மாட்டோம் என்று தேர்வுக் குழுவின‌ர் அட‌ம் பிடிக்கின‌ம்.............ந‌ட‌ந்து முடிந்த‌ 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை ம‌ற்றும் 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் கோலி ந‌ல்லா விளையாடி அணிக்கு ப‌ல‌ம் சேர்த்தார்...........கோலி அடிச்சு ஆட‌ வில்லை என்று பொய் குற்ற‌ சாட்டு சொல்லுவ‌து ஏற்க்க‌ முடியாது..............ரோகித் ச‌ர்மா த‌ல‌மையில் இந்தியா இர‌ண்டு வ‌கையான‌ உல‌க‌ கோப்பையும் தூக்க‌ வில்லை..............டோனி க‌ப்ட‌னாய் இருந்த‌ போது எல்லா கோப்பையும் இந்தியா தூக்கி விட்ட‌து..........ம‌ற்ற‌ க‌ப்ட‌ன் மாருக்கும் கோப்பைக்கும் ராசி இல்லை............ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் முக்கிய‌மான‌ ம‌ச்சின் கோட்ட‌ விடுகின‌ம்...............இந்திய‌ர்க‌ளுக்கு தேசிய‌ விளையாட்டை விட‌ ஜ‌பிஎல் தான் அவைக்கு முக்கிய‌ம் ஹா ஹா..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ரோகித், கோலி இடம் பெறுவதில் என்ன பிரச்னை? கோலியால் பிசிசிஐ-க்கு என்ன சவால்?

ரோகித், கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விமல் குமார்
  • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி
  • 26 மார்ச் 2024

“டி20 கிரிக்கெட் என்று வரும்போது, அதனை பிரபலப்படுத்த என் பெயர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். என்னுள் இன்னும் கிரிக்கெட் (டி20) இருப்பதாக உணர்கிறேன்.”

விராட் கோலியின் இந்த கருத்து எதிர்பார்த்தது போலவே, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக கோலி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கூட அவர் விளையாடவில்லை.

இதற்கிடையில், ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலி தேர்வு செய்யப்படுவது கடினம் என்பது போன்ற ஊகங்கள் தொடர்ந்து எழுந்தன.

மனம் திறந்து பேசிய விராட் கோலி

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா இருப்பார் என்பதை சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார். அதே நேரம், உலகக் கோப்பை தொடரில் கோலி விளையாடுவது குறித்த கேள்வியை அவர் தவிர்த்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள், உலகக் கோப்பை தொடருக்கான அணியில் கோலி இடம்பெற மாட்டார் என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக செய்திகளை வெளியிட்டன.

இதற்கெல்லாம் மேலாக, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கோலிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படுபவருமான ரவி சாஸ்திரியும், குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் இடையேனான ஐபிஎல் போட்டியின் வர்ணனையின்போது, வரவிருக்கும் உலகக் கோப்பையில், இளம் வீரர்கள் மற்றும் ஃபார்முக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கோலியின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், கோலி குறித்துதான் அவர் கூறினார் என்பது தெளிவானது. காரணம், இதே போட்டியில் சக வர்ணனையாளராக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட்டின் பரவலை விரிவுபடுத்துவதற்காக கிரிக்கெட்டின் உச்ச அமைப்பான ஐசிசி, கோலி போன்ற ஜாம்பவான்களையும் அவரது பிராண்டையும் பயன்படுத்துகிறது. அப்படியிருக்கும் போது, உலகக் கோப்பையில் கோலி இல்லாத இந்திய அணியை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்" என்று பேசியிருந்தார்.

கோலி

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

கோலி

 

மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்த கோலி அணியின் வெற்றிக்கு உதவியதோடு ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்கு பின்னர், ஹர்ஷா போக்லேவுக்கு விராட் கோலி அளித்த பேட்டியில் மனம் திறந்துபேசினார்.

அவரது இந்த பேச்சு ரசிகர்களுக்கு சென்றடைய பேசப்பட்டவை அல்ல, மாறாக பிசிசிஐ தேர்வாளர்களை சென்றடைவதற்காக பேசப்பட்டவை.

இந்த பேட்டிக்கு பின்னர், இந்திய அணியின் தேர்வாளரான அஜித் அகர்கர் மற்றும் அவரது குழுவினர் பக்கம் பந்தை கோலி திருப்பிவிட்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடர்பான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் திட்டங்களுடன் தான் தற்போதும் பொருந்தி போவதை கோலி நன்கு அறிந்துள்ளார். ஆனால், இதில் தேர்வாளர்களுக்கு சில தயக்கங்கள் உள்ளன.

டிராவிட்- அஜித் அகத்கர்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

டிராவிட்- அஜித் அகத்கர்

ரோகித், கோலி இருவரும் ஒருசேர இடம் பெறுவதில் என்ன பிரச்னை?

2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இந்தியாவின் டாப் ஆர்டர் மூவரும்தான் (ரோகித்-கே.எல். ராகுல்-கோலி) காரணம் என்பதில் சந்தேகமில்லை.

ஆங்கர் ரோலில் மூவரும் ஒரே மாதிரி பேட் செய்கிறார்கள். ஒருநாள் உலகக் கோப்பையின் போது, கேப்டன் ரோஹித் முற்றிலும் ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 50 ஓவர் கிரிக்கெட்டில் டி20 போட்டி போன்ற அதிரடியை வெளிப்படுத்தினார்.

கே.எல். ராகுலை விட இடது கை ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறந்த தேர்வாகத் தெரிகிறார். இப்போது தேர்வாளர்கள் முன் இருக்கும் கேள்வி மூன்றாவது இடத்துக்கு கோலியை தேர்வு செய்வதா அல்லது சுப்மன் கில்லை தேர்வு செய்வதா என்பதுதான்.

ஏனெனில் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் இடம் உறுதியாகி இருக்கிறது.

கோலி அல்லது கில் விளையாடினால், ரிங்கு சிங்கை ஆறாவது இடத்தில் பினிஷராக பயன்படுத்த முடியாது.

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி - ரோகித் சர்மா

அத்தகைய சூழ்நிலையில், தேவைப்பட்டால், விளையாடும் 11 பேர் பேர் கொண்ட அணியில் கில்லை தேர்வு செய்யாமல் இருக்கலாம். ஆனால், விராட் கோலியை அப்படி செய்ய முடியாது. கோலி அணியில் நீடிக்கலாமா என்ற விவாதம் இங்கிருந்து தொடங்கியது.

அனுபவம் மிக்க தற்போதைய கேப்டனை மேட்ச் வின்னராக கருதும்போது, முன்னாள் கேப்டனிடம் ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை என்று கோலியின் ஆதரவாளர்களும் ரோகித் சர்மாவின் விமர்சகர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் இரண்டிலும் ரோகித்தை விட கோலி சிறப்பான நிலையில் இருக்கிறார்.

ஆனால், ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்டியா காயமடையாமல் இருந்திருந்தால் ரோகித் இந்த அணியில் இருந்திருக்க மாட்டார் என்றும், ரோகித் தனது ஆட்டத்தில் திடீரென்று இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்க மாட்டார் என்றும் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் கருதுகின்றனர்.

ரோகித், கோலி ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் ஆடும் லெவனில் ஒருசேர வைத்திருப்பது அணியின் சமநிலையை பாதிக்கக் கூடும் என்ற சிக்கலும் உள்ளது.

 

கோலியால் பிசிசிஐ-க்கு புதிய சவால்

ரோகித் உலகக் கோப்பையின் ஒரு அங்கமாக இருந்தால், அவரை யாரும் அணியில் இருந்து நீக்க முடியாது என்பது கோலிக்கு தெரியும்.

காரணம், ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் மற்ற எந்த வீரரையும் விட மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்களை அவர் அதிகம் விளையாடியுள்ளார் என்பதற்கு வரலாறு சாட்சி.

எல்லாவற்றிற்கும் மேலாக, மெல்போர்னில் 2022 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிரான அவரது வரலாற்று இன்னிங்ஸை ஒருவரால் எப்படி மறக்க முடியும்?

ஒட்டுமொத்தமாக, தற்போது சிறப்பான இன்னிங்ஸை விளையாடியதன் மூலம் அணி தேர்வாளர்களுக்கு கோலி சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக கோலி விளையாடி வருவதால், ரோகித்துடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என்பதும் அவரது வாதமாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த இரண்டு வீரர்களும் தொடக்க ஜோடியாக இணைந்து சில போட்டிகளில் மட்டுமே விளையாடியிருப்பது தேர்வாளர்களுக்குப் பிரச்னையாக இருக்கும்.

வரும் வாரங்களில் கோலி மீண்டும் சிறப்பான ஸ்கோர்களை குவித்தால், தேர்வாளர்களின் வாதம் முறியடிக்கப்படலாம்.

ரோஹித் சர்மா - டிராவிட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோகித் சர்மா - டிராவிட்

ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதால்தான் கோலி ரன்களை குவிக்கிறார், ஃபார்மில் இருக்கிறார். மாறாக, இந்திய அணியில் அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்குகிறார் என்றும் தேர்வாளர்கள் கூறக் கூடும்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கோலியின் தேர்வு தொடர்பான விசயத்தில் பிரச்னை தீர்க்கப்படுவதற்கு பதிலாக தற்போது தேர்வாளர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

கோலியின் சமீபத்திய கருத்துகளால் தேர்வாளர்களின் பிரச்னை மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், டி-20 போட்டிகளுக்கு கோலிக்கு பதிலாக இளம் வீரரை தேர்வு செய்யுமாறு பிசிசிஐ, அணி தேர்வாளர்களுக்கு (மறைமுகமாக) செய்தி கொடுத்திருந்தால், இந்த கடினமான முடிவை எடுப்பதில் அகர்கர் சற்று ஆறுதல் அடையக் கூடும்.

ஆனால், பதினோரு பேர் கொண்ட அணியில் கோலிக்கு இடம் இல்லை என்பதை பயிற்சியாளர் டிராவிட்டும் கேப்டன் ரோகித் சர்மாவும் ரசிகர்கள் முன் எப்படி நியாயப்படுத்த முடியும்?

ஒட்டுமொத்தமாக, இந்த விஷயம் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரின் சில வாரங்கள் கோலியின் பேட்டிங்கிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கக் கூடும்.

https://www.bbc.com/tamil/articles/cz4z8wl831no

  • கருத்துக்கள உறவுகள்
Posted

434368650_744039747843092_79826386832622

  • கருத்துக்கள உறவுகள்
Posted

T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

ben-stokes.jpg

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது.

முழு உடற்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருவதாகவும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை தியாகம் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

சிறப்பான சகலதுறை வீரராக எதிர்காலத்தில் விளையாட இந்த தீர்மானம் உதவும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/297897

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான விளம்பரத் தூதுவராக உசேன் போல்ட்!

06-3.jpg

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான விளம்பரத் தூதுவராக தடகள வீரர் உசேன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள குறித்த தொடரானது ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் மொத்தமாக 55 போட்டிகள் இடம்பெறவுள்ளன

அத்துடன் இதன் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/300191

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

இதன்படி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள குறித்த தொடரானது ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

   வணக்கம்   @கிருபன் இந்தப் போட்டிக்கான ஆயத்தங்கள் நடக்குதா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
36 minutes ago, ஈழப்பிரியன் said:

   வணக்கம்   @கிருபன் இந்தப் போட்டிக்கான ஆயத்தங்கள் நடக்குதா?

அடுத்த வாரம் பார்ப்போம். ஜூன் 2 ஆரம்பம்!

  • Like 2
  • Thanks 1
Posted

கோலிக்கு பதில் சூரியகுமார் யாதவ்? இப்பவே கண்ணை கட்டுது.🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, nunavilan said:

கோலிக்கு பதில் சூரியகுமார் யாதவ்? இப்பவே கண்ணை கட்டுது.🙂

என்ன‌ அண்ணா கோலி நீக்க‌மோ இந்த‌ உல‌க‌ கோப்பையில்................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, கிருபன் said:

அடுத்த வாரம் பார்ப்போம். ஜூன் 2 ஆரம்பம்!

கிட்ட‌ த‌ட்ட‌ ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு

வீர‌ர்க‌ளுக்கு ஓய்வில்லாம‌ போட்டிய‌ தொட‌ர்ந்து ந‌ட‌த்துகின‌ம்

ஜ‌பிஎல் முடிந்த‌ கையோடு வீர‌ர்க‌ள் க‌ர்விய‌ன் தீவை நோக்கி ப‌ய‌ணிக்க‌னும்...........................

நியுசிலாந் Bரீம் பாக்கிஸ்தான் சென்று பாக்கிஸ்தானை வென்று விட்டின‌ம் தொட‌ரையும் வென்று விட்டின‌ம்.................சென்னை அணிக்காக‌ விளையாடும் இர‌ண்டு நியுசிலாந் வீரர்க‌ள் இதுவ‌ரை அடிச்சு ஆட‌ வில்லை இவ‌ர்க‌ளுக்கு ப‌தில் பாக்கிஸ்தான் தொட‌ரில் சிற‌ப்பாக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ளை நியுசிலாந் தேர்வுக்குழு தேர்வு செய்யுக் கூடும் என்று நினைக்கிறேன்.............................

 

Posted
12 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ அண்ணா கோலி நீக்க‌மோ இந்த‌ உல‌க‌ கோப்பையில்................................................

அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/4/2024 at 19:12, ஏராளன் said:

T20 உலகக்கிண்ண தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்

ben-stokes.jpg

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது.

முழு உடற்தகுதி பெறுவதில் முழுமையாக கவனம் செலுத்தி கடினமாக உழைத்து வருவதாகவும் பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருவதாகவும் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சகலதுறை வீரராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதால், IPL மற்றும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரை தியாகம் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

சிறப்பான சகலதுறை வீரராக எதிர்காலத்தில் விளையாட இந்த தீர்மானம் உதவும் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

முழங்கால் காயம் காரணமாக நீண்ட நாட்களாக பந்துவீசாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ், கடைசியாக இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 ஓவர்கள் மட்டும் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/297897

இவ‌ர்க‌ள் இந்த‌ முறை கோப்பை வெல்ல‌ மாட்டின‌ம்

இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை தெரிவு செய்தாலும் க‌ர்விய‌ன் மைதான‌த்தில் இவ‌ர்க‌ளால் அடிச்சு ஆட‌ முடியாது

வெஸ்சின்டீஸ் மைதான‌ங்க‌ளில் இங்லாந் அணி அதிக‌ம் தோற்று இருக்கு போன‌ வ‌ருட‌மும் 20ஓவ‌ர் தொட‌ரை வெஸ்சின்டீஸ் அணி இவ‌ர்க‌ளை வென்றார்க‌ள்

 

நாச‌மாய் போன‌ வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு சுனில் ந‌ர‌னை தேர்வு செய்தால் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருக்கும்..................ஜ‌பிஎல்ல தொட‌க்க‌ வீர‌ராய் இற‌ங்கி ப‌ல‌ விளையாட்டில் அடிச்சு ஆடி அணிக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்த‌வ‌ர்......................................................

6 minutes ago, nunavilan said:

அப்படி தான் செய்திகள் சொல்கிறது பையா. ஓட்டங்களை மெதுவாக எடுக்கிறாராம்.

கோலி அன்மைக் கால‌மாய் அடிச்சு ஆடுகிறார் இல்லை அது உண்மை தான் 

ஆனால் மைதான‌த்தில் 10ஓவ‌ர் வ‌ரை நின்று பிடித்தால் பிற‌க்கு மின்ன‌ல் வேக‌த்தில் ர‌ன் மிசின் த‌ன‌து விளையாட்டை காட்ட‌ தொட‌ங்கிடுவார்...........................ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர் இந்தியா அணியில் சேர்க்காம‌ விடுவ‌து கோலிக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுக்க‌ கூடும்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இதுவ‌ரை அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர்க‌ளில் கோலி தான் முத‌ல் இட‌ம் ஆனால் இவை பிலேஒவ்க்கு  போக‌ மாட்டின‌ம் ஆன‌ ப‌டியால் வேறு அணி வீர‌ர்க‌ளுக்கு கூடுத‌ல் விளையாட்டு இருக்கு அவ‌ர்க‌ள் சில‌து முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ முடியும்🙏🥰.............................................................. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/4/2024 at 19:06, nunavilan said:

கோலிக்கு பதில் சூரியகுமார் யாதவ்? இப்பவே கண்ணை கட்டுது.🙂

கோலி அணியில் சேர்க்க‌ ப‌ட்டு இருக்கிறார்............................

 

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற‌ வில்லை................ இந்தியா இம்முறையும் கோப்பை தூக்க‌ கூடாது...........................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.சி.சி. ஆடவர் ரி - 20 உலகக் கிண்ணத்துக்கான அணியை அறிவித்த முதல் நாடு நியூஸிலாந்து

29 APR, 2024 | 02:48 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் ரி-20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னிட்டு நியூஸிலாந்து முதலாவது நாடாக தனது உலகக் கிண்ண குழாத்தை இன்று (29) அறிவித்தது.

அனுபிவம் வாய்ந்தவரும் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து குழாத்தில் அதிரடி ஆட்டக்காரர் டெவன் கொன்வேயும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

உபாதை காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியில் பங்குபற்றுவதைத் தவிர்த்த டெவன் கொன்வே முன்வரிசை வீரராக அணியில் இடம்பெறுகிறார்.

எவ்வாறாயினும், வேகப்பந்துவீச்சாளர் அடம் மில்னே அணியில் இடம்பெறவில்லை.

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சத்திர சிகிச்சைக்குள்ளானதாலேயே அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கய்ல் ஜெமிசனும் உபாதை காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும் அனுபவசாலிகளுமான டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட் ஆகிய இருவரும் குழாத்தில் இடம்பெறுவதுடன் சௌதீ தனது 7ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் விளையாடவுள்ளார்.

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாத இளம் அதிரடி வீரர் ரச்சின் ரவிந்த்ரா, மூத்த வீரர் மெட் ஹென்றி ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

dfgdffg.gif

https://www.virakesari.lk/article/182234

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரி20 உலகக் கிண்ண இந்திய குழாத்தில் ஷிவம் டுபே, சஞ்சு சாம்சன், ரிஷாப் பான்ட்

Published By: VISHNU   30 APR, 2024 | 07:50 PM

image

(நெவில் அன்தனி)

ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இந்திய குழாம் செவ்வாய்க்கிழமை (30) அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மாவும், உதவித் தலைவராக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவிலும் கரிபியன் தீவுகளிலும் எதிர்வரும் ஜுன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை 20 நாடுகள் பங்குபற்றும் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அஜித் அகார்கார் தலைமையிலான இந்திய அணி தேர்வுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (30) கூடி ஆலோசனை நடத்தி 15 வீரர்களைக் கொண்ட ரி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய குழாத்தை தெரிவு செய்தனர்.

தற்போது நடைபெற்றுவரும் இண்டியன் பீறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணித் தலைவர் சஞ்சு செம்சன், சென்னை சுப்பர் கிங்ஸின் அதிரடி நாயகன் ஷிவம் டுபே ஆகியோருக்கு இந்திய குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கார் விபத்தில் சிக்கி நீண்ட காலம் அணியில் இடம்பெறாமல் இருந்த ரிஷாப் பான்டுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

சில கால இடைவெளிக்குப் பின்னர் யுஸ்வேந்திர சஹால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார்.

இம்முறை ஐபிஎல் இல் அசத்திவரும் ருத்துராஜ் கய்க்வாட் உட்பட இன்னும் சிலர் தெரிவாளர்களின் கண்களில் படாதது ஆச்சரியத்திற்குரியது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, ஐ பி எல் இல் பெரிதாக பிரகாசிக்காத  ஹார்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு இடம் வழங்கப்பட்டது கிரிக்கெட் விமர்சர்களை மட்டுமல்லாமல் இரசிகர்களையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

ஆனால், தொழில்முறை கிரிக்கெட்டான ஐபிஎல் இலும் பார்க்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாண்டியா, யாதவ் போன்றவர்கள் அசத்துவார்கள் என தெரிவாளர்கள் நம்புகின்றனர்.

விக்கெட் காப்பாளர் கே.எல். ராகுலுக்கும் இந்தியா குழாத்தில் இடம் வழங்கப்படவில்லை. அவர் கடந்த வருடம் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவில்லை.

இந்திய குழாத்தில் ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சஞ்சு செம்சன், சூரியகுமார் யாதவ் துடுப்பாட்ட வீரர்களாகவும்,

1_india_squad.png

ஹார்திக் பாண்டியா (உதவித் தலைவர்), ஷிவம் டுபே, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல் ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும்,

அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்த்ரா சஹால், குல்தீப் யாதவ், மொமஹத் சிராஜ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பெறுகின்றனர்.

நியூஸிலாந்து குழாம் திங்கட்கிழமை (29) அறிவிக்கப்பட்டது.

ஏனைய குழாம்கள்

இந்தியாவுடன் செவ்வாய்க்கிழமை (30) மாலைவரை நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது உலகக் கிண்ண கிரிக்கெட் குழாம்களை அறிவித்துள்ளன.

தென் ஆபிரிக்கா: ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், ரெயான் ரிக்ல்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், மாக்கோ ஜென்சன், ஒட்நீல் பாட்மன், ஜெரால்ட் கொயெட்ஸீ, பிஜோன் ஃபோச்சுன், கேஷவ் மகாராஜ், அன்ரிச் நோக்யா, கெகிசோ ரபாடா, தப்ரெய்ஸ் ஷம்சி.

2_south_africa_squad.png

இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), பில் சோல்ட், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டன், ஆதில் ராஷித், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ், டாவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், டெவிட் வில்லி, க்றிஸ் வோக்ஸ், டைமல் மில்ஸ்.

3_england_squad.png

https://www.virakesari.lk/article/182362

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, வீரப் பையன்26 said:

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற‌ வில்லை................ இந்தியா இம்முறையும் கோப்பை தூக்க‌ கூடாது...........................................

எந்த தமிழக வீரரை தெரிவு செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?  என்னைப் பொறுத்தவரையில் சரியான அணியைத்தான் அவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கந்தப்பு said:

எந்த தமிழக வீரரை தெரிவு செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?  என்னைப் பொறுத்தவரையில் சரியான அணியைத்தான் அவர்கள் தெரிவு செய்திருக்கிறார்கள்

ந‌ட‌ராஜ‌ன் தெரிவு செய்து இருக்க‌லாம்

2022 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில்
ந‌ட‌ராஜ‌னை தெரிவு செய்யாத‌து பிழை என்று முன்னாள் இந்திய‌ன் க‌ப்ட‌ன் சுனில் க‌காஸ்க‌ர் தெரிவித்து இருந்தார்
இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌ராஜ‌ன் ந‌ல்லா தானே ப‌ந்து போடுகிறார்..............................

உந்த‌ இந்திய‌ அணி கோப்பை தூக்க‌ போவ‌து கிடையாது

2007க்கு பிற‌க்கு எத்த‌னை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையை நட‌த்தி விட்டின‌ம் ஆனால் இந்தியா 1முறை தான் கோப்பை தூக்கின‌து.................................




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு. கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது. அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  
    • இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன்  பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு  தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .  
    • நீ பாதி நான் பாதி கண்ணே -- ஜோன் ஜெரோம் & ஜீவிதா  
    • உண்மையான் பையன். மிகச் சரியாக சொல்கின்றீர்கள்.  
    • பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.