Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

 

2015 இன் பின் கோடை விடுமுறைகளுக்கு வீட்டில் நிற்பது இல்லை என்றே சொல்லலாம்.

தற்சமயம் கோடையிலும் நிற்பதில்லை குளிர் காலங்களிலும் நிற்பதில்லை.

அப்படி என்றால் நன்றாக உலகம் சுற்றுகிறீர்கள் போல தெரியுது. 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Cruso said:

அப்படி என்றால் நன்றாக உலகம் சுற்றுகிறீர்கள் போல தெரியுது. 

முடிந்தவரை கஸ்டப்பட்டு வேலை செய்தேன்.
இப்போ ஓவ்வூதியம் எடுக்கிறேன்.
பிள்ளைகள் மூவர் வேறு வேறு மாநிலங்களில் குழந்தைகளுடன் இருக்கிறார்கள்.
மாறிமாறி அவர்களிடம் போய் வருகிறோம்.
நியூயோர்க் வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கருகில் வருமாறு அழைக்கிறார்கள்.
இன்னமும் முடிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

முடிந்தவரை கஸ்டப்பட்டு வேலை செய்தேன்.
இப்போ ஓவ்வூதியம் எடுக்கிறேன்.
பிள்ளைகள் மூவர் வேறு வேறு மாநிலங்களில் குழந்தைகளுடன் இருக்கிறார்கள்.
மாறிமாறி அவர்களிடம் போய் வருகிறோம்.
நியூயோர்க் வீட்டை விற்றுவிட்டு தங்களுக்கருகில் வருமாறு அழைக்கிறார்கள்.
இன்னமும் முடிவில்லை.

அப்போ இலங்கைக்கு வாற எண்ணமில்லை போல? எப்படியோ குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Cruso said:

அப்போ இலங்கைக்கு வாற எண்ணமில்லை போல? எப்படியோ குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள். 

கடந்த வருடம் பிள்ளைகளுடன் வந்து போனேன்.

கூடிய நாட்கள் சுகயீனமாக இருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மருதனார் மடம் விலை நிலவரம்கள்..

 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

420989631_769559591875682_75592698299888

 

 

spacer.png

 

spacer.png

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறி விலையில் வீழ்ச்சி

veg.jpg

அண்மைக்கால மரக்கறி விலைகளுடன் ஒப்பிடுகையில், இன்று பேலியகொட புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 700 ரூபா , போஞ்சி 500 ரூபாவாக உள்ள நிலையில், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் விலை முறையே 1,000 ரூபா மற்றும் 1,100 ரூபாவாக உள்ளது.

https://thinakkural.lk/article/291010

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 2 ஆயிரம் ரூபா !!

09 FEB, 2024 | 11:04 AM
image

நாட்டில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (8) ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை  2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் முருங்கைக்காயின் மொத்தவிலை 1980 ரூபாவாக காணப்பட்டது.

மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கறிமிளகாய் 1,200 ரூபாவாகவும்  ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,100 ருபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக 2,000 ரூபாவாக அதிகரித்து வந்த ஒரு கிலோ கரட்டின் விலை நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (8) 650 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/175954

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காய் மலிவு

மரவள்ளிக்கிழங்கு மலிவு

உள்ளூர் கத்தரிக்காய் (புழுக்கடிச்சது) மலிவு

கீரை மலிவு

வல்லாரை பிடி 80 ரூபா தான்.

வாழைப் பூ மலிவு.

போஞ்சி மலிவு.

தங்காளி வாங்கக் கூடிய விலை தான்.

இதரை வாழைப்பழம் மலிவு.

ரம்புட்டான் (6) 100 ரூபா. கொழும்பில் 10 (100 ரூபா)

பப்பாளிப் பழம்- 200 ரூபா.

இவை எல்லாம் ஒப்பீட்டளவில்.. மலிவாக இருக்கும் போது..

எதுக்கு சந்தையில் வரவு குறைந்த விலை கூடிய மரக்கறிகளை நாடினம்..???!

மக்கள் விலை கூடியதை வாங்காமல் விட தன்பாட்டில் விலை குறைக்கப்படும்.

 

(இது யாழ்ப்பாணம்... மற்றும் திருநெல்வேலி சந்தைகளின் விலை அடிப்படையில்.)

யாழ்ப்பாணத்தில் இல்லாத முருங்கை இலை.. கொழும்பில் கிடைக்கிறது. கொழும்பில்... பெட்டாவில்.. ஓரளவு மரக்கறி மலிவு.. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி.. தெகிவளை பகுதிகளை காட்டிலும். 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

குறைவடைந்த மரக்கறிகளின் விலைகள்!

12 MAR, 2024 | 04:04 PM
image
 

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று (12) குறைவடைந்துள்ளது.

இதன்படி , சந்தைகளில் ஒரு கிலோ கரட் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீன்ஸ் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 450 ரூபாவாகவும் , ஒரு கிலோ  தக்காளி 320 ரூபாவாகவும், ஒரு கிலோ  லீக்ஸ் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ கறி மிளகாய் 600 ரூபாவாகவும் ,ஒரு கிலோ கத்தரிக்காய் 250 ரூபாவாகவும், ஒரு கிலோ  பீட்ரூட் 500 ரூபாவாகவும் ,ஒரு கிலோ புடலங்காய் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ பாவற.காய் 450 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டிக்காய் 160 ரூபாவாகவும், ஒரு கிலோ  பச்சை மிளகாய்  600 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 200 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.

மேலும் , கொழும்பு மெனிங்சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ முட்டைக்கோஸ் 320 ரூபாவாகவும் , ஒரு கிலோ  தக்காளி 300 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 250 ரூபாவாகவும்,  ஒரு கிலோ தேசிக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய்  300 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.

குறைவடைந்த மரக்கறிகளின் விலைகள்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கோதரி பிடிச்ச சிறிலங்கா இளசுகளே 
ஆள்களை வெட்டாதீர்கள் மண்னை வெட்டுங்கோடா...
மோபைலில் கட் அன்ட் பெஸ்ட் பண்ணாமல் 
மண்னை கட் பண்ணுங்கோடா
கெக் வெட்டி யூ டியுப் படம் காட்டாமல்
மண்ணை வெட்டுங் கோடா...

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு என்னதான் விலை போடுங்க லண்டன் கனடாவுக்கு வரும் மரக்கறிகள் விலை மாற்றம் இல்லையே ? என்ன மரக்கறி என்றாலும் ஒரு தமிழ் கடை வாசலுக்கு வரும் அடக்க விலை கிலோ ஆறு பவுன்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2024 at 10:06, nedukkalapoovan said:

வாழைக்காய் மலிவு

மரவள்ளிக்கிழங்கு மலிவு

உள்ளூர் கத்தரிக்காய் (புழுக்கடிச்சது) மலிவு

கீரை மலிவு

வல்லாரை பிடி 80 ரூபா தான்.

வாழைப் பூ மலிவு.

போஞ்சி மலிவு.

தங்காளி வாங்கக் கூடிய விலை தான்.

இதரை வாழைப்பழம் மலிவு.

ரம்புட்டான் (6) 100 ரூபா. கொழும்பில் 10 (100 ரூபா)

பப்பாளிப் பழம்- 200 ரூபா.

இவை எல்லாம் ஒப்பீட்டளவில்.. மலிவாக இருக்கும் போது..

எதுக்கு சந்தையில் வரவு குறைந்த விலை கூடிய மரக்கறிகளை நாடினம்..???!

மக்கள் விலை கூடியதை வாங்காமல் விட தன்பாட்டில் விலை குறைக்கப்படும்.

 

(இது யாழ்ப்பாணம்... மற்றும் திருநெல்வேலி சந்தைகளின் விலை அடிப்படையில்.)

யாழ்ப்பாணத்தில் இல்லாத முருங்கை இலை.. கொழும்பில் கிடைக்கிறது. கொழும்பில்... பெட்டாவில்.. ஓரளவு மரக்கறி மலிவு.. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி.. தெகிவளை பகுதிகளை காட்டிலும். 

விலை குறைவோ இல்லையோ தற்போது சிங்கள இனவாத சொறிலங்கா வுக்கு டாலர் பவுன்ஸ்  ஐரோ வேணும் அதனால் சொந்த நாட்டு மக்கள் பட்டினி கிடந்தாலும் கவலையில்லை மறுபடியும் புலம்பெயர் காலை அவர்களுக்கு தெரியாமலே தொட்டு கும்பிட்டு டாலர் கறக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை நிலவரம்

Published By: DIGITAL DESK 3

13 MAR, 2024 | 12:56 PM

 

நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று புதன்கிழமை (13)  விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், (முட்டைகோஸ்) கோவா 425 ரூபாவாக விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நுவரெலியா கரட் கிலோ ஒன்றின் விற்பனை விலை 395 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல லீக்ஸ் 210 ரூபா, ராபு 80 ரூபாய், பீட்ரூட் (இலையுடன்) 220 ரூபாவாகவும், இலை வெட்டப்பட்ட பீட்ரூட் 270 ரூபாவாகவும் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உருளை கிழங்கு (வெள்ளை) 355 ரூபாவாகவும், உருளை கிழங்கு (சிவப்பு) 375 ரூபாவாகவும், நோக்கோல் 170 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் அதிக உச்ச விலை கண்ட நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர மரக்கறிகளின் விலைகளும் கணிசமாக சரிவு கண்டுள்ளது.

அந்தவகையில் தக்காளி (பச்சை) 800 ரூபாவாகவும், கறிமிளகாய் 555 ரூபாவாக மொத்த விலையில்  விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், சிவப்பு கோவா 2100 ரூபாவாகவும், காலிஃப்ளவர் (நுவரெலியா) 650 ரூபாவாகவும், புரக்கோலி 550 ரூபாவாகவும் வில்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் விலை நிலவரம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்

14 MAR, 2024 | 07:29 PM
image

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (14) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்பட்டன.

இதன்படி , ஒரு கிலோ கரட் 400 ரூபாவாகவும் , ஒரு கிலோ பயற்றங்காய் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பீட்ரூட் 220 ரூபாவாகவும் , ஒரு கிலோ  பீர்க்கங்காய் 120 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் , ஒரு கிலோ கத்தரிக்காய் 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ தக்காளி 300 ரூபாவாகவும் , ஒரு கிலோ பச்சை மிளகாய் 300 ரூபாவாகவும் ,ஒரு கிலோ புடலங்காய் 160 ரூபாவாகவும் , ஒரு கிலோ பூசணிக்காய் 160 ரூபாவாகவும் , ஒரு கிலோ வாழைக்காய் 200 ரூபாவாகவும் , ஒரு கிலோ தேசிக்காய் 180 ரூபாவாகவும் ,ஒரு கிலோ இஞ்சி 1,800 ரூபாவாகவும் , ஒரு கிலோ  உருளைக்கிழங்கு 180 ரூபாவாகவும் , ஒரு கிலோ பாவக்காய் 180 ரூபாவாகவும்  காணப்பட்டன.

https://www.virakesari.lk/article/178746

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண விலை நிலவரம்கள்  20/3/2024

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்தன!

06 APR, 2024 | 05:57 PM
image
 

தம்புள்ளை பொருளாதார மையத்தில் மரக்கறிகளின் விலை 10 வருடங்களின் பின்னர் குறைவடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது . 

தினசரி காய்கறிகளின் வருகை  அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகப்  வியாபாரிகள் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் , 

ஒரு கிலோ போஞ்சி 40 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலும், கோவா மற்றும் வெண்டக்காய் கிலோ 100 ரூபாவாகவும், கரட் 200 ரூபாவாகவும், வெள்ளரிக்காய் 15 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

https://www.virakesari.lk/article/180590

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சடுதியாக உயர்ந்த தேசிக்காயின் விலை…!

3-6.jpg

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1000 ரூபா முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், ஒரு கிலோ பச்சை இஞ்சி தற்போது 3,000 ரூபா முதல் 3,200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுதாக தெரிவிக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ள போதிலும் நுகர்வோர் அவற்றை கொள்வனவு செய்வதற்கு அங்கு வராத நிலை காணப்படுவதாக பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/300586

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபா

Published By: DIGITAL DESK 7

16 MAY, 2024 | 09:00 AM
image
 

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை  (15) 01 கிலோ கிராம்  எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது.

சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம்  கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/183653

  • கருத்துக்கள உறவுகள்

எலுமிச்சை, இஞ்சியின் விலை சடுதியாக உயர்வு!

Lemon-ginger.jpg

சந்தையில் எலுமிச்சை மற்றும் இஞ்சியின் விலை இன்றைய தினம் (18) சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் சில்லறை விலை 2,000 ரூபாவை எட்டியுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைக் கடந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/301947

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

Published By: DIGITAL DESK 3

27 MAY, 2024 | 12:05 PM
image
 

இஞ்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் இஞ்சியின் விலை 5,000 ரூபாவை எட்டியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 4,800 ரூபாவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, ஒரு கிலோ கிராம் போஞ்சிக்காயின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் எலுமிச்சையின் விலை  1,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

https://www.virakesari.lk/article/184586

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

1000 ரூபாவை எட்டிய பச்சை மிளகாய் , எலுமிச்சை விலை!

ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது.
ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாயை விட அதிகம் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக சற்றே குறைந்திருந்த மரக்கறிகள் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளன.

காய்கறிகளின் சில்லறை விலைகள் வருமாறு!

ஒரு கிலோ கறி மிளகாயின் சில்லறை விலை 900 ரூபாவாகும்
ஒரு கிலோ போஞ்சி ரூ.800 இற்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் சில்லறை விலை 560 ரூபாவாகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் சில்லறை விலை 300 ரூபாவாகும்

மேலும் ஒரு கிலோ முருங்கைக் காய் 800 முதல் 1000 ரூபாய் வரை உள்ளது. ஒரு கிலோ பீட்ரூட் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெண்டைக்காயின்  விலை ரூ.600 ஆகவும் ஒரு கிலோ தக்காளி விலை 600 ரூபாய் ஆகவும் ஒரு கிலோ கேரட்டின் விலை ரூ.480 முதல் ரூ.500 வரையும் உள்ளது

ஒரு கிலோ கோவா ரூ.500 இற்கும் ஒரு கிலோ பாகற்காய் சில்லறை 450 ரூபாவுக்கும் ஒரு கிலோ புடலங்காய் ரூ.400 இற்கும் விற்கப்படும் அதேவேளை ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 3600 ரூபாவாக உள்ளது.

https://thinakkural.lk/article/306659

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியான தகவல்

கடந்த நாட்களை விட இந்த நாட்களில் மரக்கறியின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை அதிகரிப்பின் காரணமாக மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்வது குறைவடைந்துள்ளதாக வர்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரக்கறியின் விலை

இதனடிப்படையில், மெனிங் சந்தையில் கரட் 1Kg ரூபாய் 250.00, போஞ்சி 1Kg ரூபாய் 250.00 , கோவா 1Kg ரூபாய் 150.00 , தக்காளி1Kg ரூபாய் 150.00 , பூசணி 1Kg ரூபாய் 300.00 மற்றும் லீக்ஸ் 1Kg ரூபாய் 200.00 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியான தகவல் | The Price Of Vegetables Has Increased In Sri Lanka

மேலும், லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/the-price-of-vegetables-has-increased-in-sri-lanka-1724490207?itm_source=parsely-api

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.