Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ளது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நடக்கும் நிலையில் அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை.

இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் முப்பது வருடங்களுக்கும் மேலாக அயோத்தியுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் ராமர் கோவில் பணிகளை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், தற்போது ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ராமர் கோவில் கட்டுமானங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள், ராமர் சிலை தேர்வு குறித்து பிபிசியிடம் பேசியுள்ளார் கோடீஸ்வர ஷர்மா.

 
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,SHRI RAM JANMBHOOMI TEERTH KSHETRA

படக்குறிப்பு,

சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர்.

கேள்வி : அயோத்தி ராமர் கோவிலின் கட்டிடக்கலை வடிவமைப்பின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்க முடியுமா?

கோடீஸ்வர ஷர்மா : ராமர் கோவில் கட்டுமான பணிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மத்திய அரசால் அமைக்கப்பட்ட அறக்கட்டளையால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளையே கட்டுமான பணிகளுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் பொறுப்பு.

கோவில் வடஇந்திய பாணியில்(style) கட்டப்பட்டுள்ளது. சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய கோவில்களும் இதே பாணியில்தான் கட்டப்பட்டுள்ளன.

சோம்நாத் கோவிலை வடிவமைத்த ஸ்தபதி சோம்புராவின் பேரன்தான் அயோத்தி கோவிலை வடிவமைத்தவர்.

1991 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்த கோவிலின் மாதிரி உருவாக்கப்பட்டது. அதன் படியே சிற்பங்கள் செதுக்கப்பட்டன. அதற்கு பிறகு, அறக்கட்டளை பொறுப்பேற்று, முதலில் உருவாக்கப்பட மாதிரியில் சிறிய மாற்றங்கள் செய்து கோவிலை கட்டியுள்ளது.

மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பிறந்த இடத்திற்கு அருகில் சராயு நதி ஓடியது. அந்த நதி இன்றும் பூமிக்கு அடியில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

நிலநடுக்கங்களை தாங்கும் வகையிலும், 1000 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் அளவிலும் இந்த கோவிலின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

 
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்?
படக்குறிப்பு,

8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர்.

கும்பாபிஷேக நிகழ்வில் எத்தனை மக்கள் பங்கேற்பார்கள்? அதற்கான ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது?

கோடீஸ்வர ஷர்மா : அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர்.

அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்கள் தங்குவதற்கு அயோத்தி மற்றும் ஃபைசாபாத் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், ஆசிரமங்கள் மற்றும் விருந்தினர் இல்லங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு 30 - 35 உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கோவிலில் 19ஆம் தேதி மாலையோடு தரிசனம் நிறுத்தப்பட்டு சிலைகளை அங்கிருந்து புதிய கோவிலுக்கு மாற்றுவதற்கான சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதனால் 20, 21, 22 ஆகிய தேதிகள் தரிசனம் கிடையாது.

22ஆம் தேதி சிலை பிரதிஷ்டை செய்த பிறகு, விருந்தினர்களுக்கு மட்டும் தரிசனம் அனுமதிக்கப்படும்.

23ஆம் தேதி காலை முதல் பொது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

 
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,CHAMPAT RAI

படக்குறிப்பு,

72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது.

ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையிடம் 72 ஏக்கர் இருந்தபோதிலும், கோவில் 2.7 ஏக்கரில் ஒரு மூலையில் கட்டப்பட்டுள்ளது ஏன்?

கோடீஸ்வர ஷர்மா : ஒட்டுமொத்த காலியிடத்தில் கட்டுமான பணி நடக்கவில்லை. இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது. அதோடு சேர்த்து பிற கோவில்கள் மற்றும் உபகோவில்களும் இங்கு கட்டப்படும்.

முதலில் கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

மீதி இருக்கும் இடத்தில் யாத்திரைக்கான அமைப்புகள், அன்னதான மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை அறக்கட்டளையின் மூலம் கட்டப்படும்.

சிலை பிரதிஷ்டைக்கான தினமாக ஜனவரி 22 தேர்வு செய்யப்பட்டது ஏன்?

கோடீஸ்வர ஷர்மா : ஜோதிடம் மற்றும் ஆகம சாஸ்திரங்களின் படி சிறந்த முகூர்த்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

22ஆம் தேதி 12.22 முதல் 12. 40 வரை நல்ல நேரம் என்பதை நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

 
அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது.

பால ராமரின் சிலையை நிறுவது ஏன்?

கோடீஸ்வர ஷர்மா : முற்காலத்தில் இருந்தே பால ராமரின் சிலை உள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பகுதியாக கருதப்படுவதால், அங்கு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

தரைத்தளத்தில் 5 வயது பால ராமரின் சிலை நிறுவப்படுகிறது.

அந்த சிலையின் தோராயமான உயரம் நான்கரை அடி இருக்கும்.

முன்பு வழிபாடு செய்யப்பட்டு வந்த ராமர் மற்றும் அன்னதம்முவின் சிலைகளும் இங்கு உள்ளன.

முதல்தளத்தில் ராம்தர்பார் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நாம் வழிபடும் படங்களில் இருப்பது போன்று ராமர், சீதா, லக்ஷ்மணன், ஹனுமான், பரதன் மற்றும் சத்ருகன் ஆகியோரை வழிபடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூரிய திலகத்தை கருத்தில்கொண்டு, ராம நவமி நாளில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரியனின் கதிர்கள் படும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் சிமெண்ட் மற்றும் இரும்பு பயன்படுத்தப்படாமல் கட்டப்பட்டுள்ளதாக அறக்கட்டளை சொல்கிறதே, அதற்கான காரணங்கள் என்ன?

கோடீஸ்வர ஷர்மா : அனைத்து புராதன கோவில்களும் கற்களால் தான் கட்டப்பட்டுள்ளன. 1,000, 1,200, 1,500 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட கோவில்கள் கூட இன்றும் உறுதியாக நின்று கொண்டிருக்கின்றன.

ஸ்ரீரங்கம், ஸ்ரீசைலம் மற்றும் ராமப்பா ஆகிய கோவில்களும் கற்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. கற்களின் ஆயுள் நீடித்து கொண்டே இருக்கும்.

இரும்பு துருப்பிடித்து கெட்டு போய்விடும். இதனால், கோவில் கட்டுமானத்தில் சிமென்ட், இரும்பு பயன்படுத்தக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு, அதற்கேற்றவாறு கட்டப்பட்டுள்ளது. சோம்நாத், துவாரகா மற்றும் ராமேஸ்வரம் கோவில்களும் கூட கல்லால் ஆனவை.

கட்டுமானம் முடிக்கப்படுவதற்கு முன்பே கோவில் திறக்கப்படுவதாக விமர்சனம் எழுகிறதே, விஎச்பியின் சார்பில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கோடீஸ்வர ஷர்மா : 1951ஆம் ஆண்டு கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே சோம்நாத் கோவிலை ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார்.

நமது நாட்டில் இவை அனைத்தும் வாஸ்து மற்றும் கோயில் சாஸ்திரங்களின்படியே நடக்கிறது. எதுவும் அறிவியலற்ற முறையில் செய்யப்படுவதில்லை. அனைத்துமே முறைப்படி மட்டுமே செய்யப்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு கோவில் தொடர்பானவர்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cv27rddn21do

  • கருத்துக்கள உறவுகள்

ஜெய் ராம் ஸ்ரீ ராம்......!   💐 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GEa-Afq-Obc-AAVSBl.jpg

இன மானம் காத்த அரணே போற்றி!
பெண் மாண்பு காத்த மாண்பாளனே போற்றி!
பன்முகத்தன்மை கொண்ட பன்முகனே போற்றி!
ஆரிய குடி கெடுத்த தமிழ் மகனே
போற்றி போற்றி!!
போற்றி போற்றி!! 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இந்த 72 ஏக்கரில் தென்மேற்கு திசையில் கடவுள் ராமர் பிறந்ததாக கூறப்படுகிறது. அங்கு கோவில் கட்டப்படுகிறது

இவர் சீதையை மீட்ட இராமரோ அல்லது வேறொருவரோ?

🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தி ராமர் கோவில்: நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த மோதி

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,ANI

22 ஜனவரி 2024, 03:34 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜன. 22) கோலாகலமாக நடைபெற்றது.

இன்று மதியம் 12.30 மணி அளவில் இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டு கோவிலில் வைக்கப்பட்டிருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பாலராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார். சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் அச்சிலையின் கண்களை மூடியிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கடந்த 18-ம் தேதி மதியமே, 1.28 மணியளவில், 51 அங்குல ராமர் சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டது.

முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலுக்கு பூஜை பொருட்கள், பட்டு வஸ்திரங்களுடன் வந்த பிரதமர் மோதி, அங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இந்த வழிபாட்டில் மோதிக்கு அருகே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

மேலும், இவர்கள் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 15 பேரும் கலந்துகொண்டனர்.

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம்,ANI

நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த மோதி

ராமர் சிலை பிரதிஷ்டைக்குப் பிறகு கோவில் வளாகத்தில் குழுமியிருந்தவர்களை நோக்கிப் பேசிய பிரதமர் மோதி, “பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு, துறவு, தவம், தியாகம் முடிந்து ராமர் இங்கு வந்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மக்கள் இந்நாளை நினைவில் வைத்துக்கொள்வார்கள்” என தெரிவித்தார்.

அயோத்தி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன என்று குறிப்பிடாமல், நீதித்துறைக்கு மோதி நன்றி தெரிவித்தார். இந்திய நீதித்துறை நீதியின் மாண்பை காத்ததாக அவர் கூறினார்.

பாலராமரின் கண்கள் திறந்து வைக்கப்பட்ட பின்னர் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, அயோத்திக்கு வரவழைக்கப்பட்டுள்ள இசைக்கலைஞர்கள் இந்நிகழ்வை முன்னிட்டு இசைக்கருவிகளை வாசித்தனர்.

ஜனவரி 23 ஆம் தேதிக்கு பின், அயோத்தியில் உள்ள ராமரை அனைவரும் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

 
அயோத்தி ராமர் கோவில்

கோவிலின் சிறப்பம்சங்கள்

நிகழ்வுக்கு முன்னதாக, பிரபலர் இசைக்கலைஞர்கள் சோனு நிகம், சங்கர் மகாதேவன், அனுராதா பட்வால் உள்ளிட்டோர் ராம பஜனை பாடினர்.

பின்னர், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் அயோத்தி ராமர் கோவில் குறித்து பல தகவக்களை வழங்கினார்.

அதன்படி,

  • கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லைக் கொண்டு ராமர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை வடிவமைத்தவர் மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ்.
  • இந்த கோவிலின் அடித்தளம் 14 மீட்டர் ஆழம் கொண்டது. ஆயிரம் ஆண்டுகளானாலும் கோவில் வலுவாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
  • கோவிலில் சுமார் 25,000 பேர் தங்கள் காலணிகள், மொபைல் போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கென மையம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
  • கோவில் கட்டமைப்புக்காக பல்வேறு நிபுணர்களும் உதவியுள்ளனர்.
 
அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம்,ANI

இந்நிகழ்வுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நாட்டின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பல்வேறு துறை பிரபலங்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் மத சடங்குகள், யாகங்கள், ஹோமங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

அயோத்தியில் ரஜினிகாந்த்

யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் கலந்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு அவர் அயோத்தி சென்றடைந்தார். அதேபோன்று, நடிகர் தனுஷும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கங்கனா ரனாவத், விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினர், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகவுடாவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மத்திய அமைச்சர்கள் பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவில்கள், பொது இடங்களில் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கங்கனா ரனவத்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

கங்கனா ரனவத்

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்த விழாவை முன்னிட்டு அயோத்தியில் தீவிர பாதுகாப்புப் பணிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பாதுகாப்புப் பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

10,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் ஆகியவை கண்காணிப்புப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கோவிலை சுற்றி முக்கியமான இடங்களில் முள்கம்பி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்துள்ள உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

கூடார நகரம்

அதிகளவிலான துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை.

இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு விஷ்வ இந்து பரிஷத்தின் இணை செயலாளர் கோடீஸ்வர ஷர்மா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, அவர் கூறுகையில், “அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். இன்னமும் கோவில் கட்டுமானம் முழுமையடையாததால், இங்கு இருக்கும் இடத்திற்கு ஏற்ப 8000 விருந்தினர்கள் மட்டுமே இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்னர்.

அதில் 4000 துறவிகளும் அடங்குவர். கோவில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களோடு சேர்த்து, நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் இந்நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

துறவிகள் மற்றும் அவர்களோடு வருபவர்களுக்கென்று கூடார நகரம் என்ற பெயரில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ராமர் கோவில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனவரி 23 ஆம் தேதிக்குப் பிறகு அதிகளவில் மக்கள் வரத்தொடங்குவார்கள் என்பதால், அயோத்தியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளை 120 படுகைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும், 350 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

அதேபோல, அயோத்திக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இருந்து அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்க உள்ளதாகவும் உத்தரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் முகேஷ் மெஷ்ராம் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

அயோத்தி பகுதியில் மக்களுக்குத் தேவையான சுகாதார கட்டமைப்பையும் வலுப்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்நிகழ்வை நேரலை செய்ய தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது. அப்போது, இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பவோ, பூஜைகள், அர்ச்சனைகள், பஜனைகள் மேற்கொள்ளவோ, அன்னதானம் வழங்கவோ எவ்வித கட்டுப்பாடுகளும் தடையும் இல்லை எனவும் இந்த மனுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட இடங்களில் வேறு பல சமூகத்தினர் வசிப்பதாகக் கூறி அனுமதி மறுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை விதித்த வாய்மொழி உத்தரவை யாரும் கடைபிடிக்க வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 
அயோத்தியில் உள்ள ராமர் கோவில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஞ்சிபுரத்தில் மீண்டும் எல்.இ.டி திரை

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இந்நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதற்கு எல்.இ.டி திரைகள் மீண்டும் பொருத்தப்பட்டு நேரலையாக ராமர் கோவில் நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

முன்னதாக, காமாட்சி அம்மன் கோவிலில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட எல்.இ.டி திரையை "அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது" என கூறி அதை காவல்துறையினர் அகற்றியிருந்தனர்.

இதனை நிர்மலா சீதாராமன் கண்டித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cyejnlynex4o

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுக்கு ஒருத்தி எனச்சொல்லும் ராமரின் இதிகாசத்தில் சீதையைத் தீக்கிளிக்கச்செய்தார் ராமன் ஆனால் அவரது கோவிலின் கவிழாவுக்கு இந்திப்படங்களின் நடிகை கங்கணா ரணவதைக் கூப்பிட்டிருக்கிறார்கள். 


அதை விடுங்கோ

இந்தச் சிலையை வடிவமைத்தவர் ஒரு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிற்பியாவார்.

சிலையின் நெற்றியிலுள்ள நாமத்தை நீக்கிவிட்டுப்பார்த்தால். அச்சு அசலாக பால முருகன் போலவே காட்சிதருகிறது. 

இஙு தமிழ்க்கடவுள் வென்றுவிட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Elugnajiru said:

சிலையின் நெற்றியிலுள்ள நாமத்தை நீக்கிவிட்டுப்பார்த்தால். அச்சு அசலாக பால முருகன் போலவே காட்சிதருகிறது. 

    spacer.png

1705908939-2667.jpg&w=&h=&outtype=webp

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இன்னும் ஒருத்தரும் இராவணேசனுக்கு கோயில் கட்டத் துவங்கேல்லை?😂

இந்தமுறை அயோத்தியில பெரிய டிவாளி கொண்டாட்டம் இருக்கு. இங்க தான் மோடிஜியின் மூன்றாவது பதவியேற்பு விழா நடக்கும்.

அது சரி செந்தமிழன் சீமான் அண்ணவுக்கு ஏன் அழைப்பு குடுக்கேல்லை?!👀

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, ஏராளன் said:

அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ளது.

GEamzPUbwAAaKiv?format=jpg&name=small

 

ஒன்றை அழித்து இன்னுமொன்றை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவில் அயோத்தியில் புதிய இராமர் கோவிலில் சங்கிகள் திரண்டிருக்க திறப்பு விழா கோலாலமாக நடந்து கொண்டிருக்கிறது
அதே நேரத்தில் நம்ம இராவணன் யாழ் ஆகாய பரப்பில் அவசரமாக எங்கோ விரைவாக சென்று கொண்டிருப்பதை பலர் கண்டதாக யாழிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன
421877062_7345542405485508_6628153761531
 
 
420072023_7345544192151996_6150789930491
 
 
421973679_7345550642151351_5876095741343
 
 
420064749_7345585908814491_8972985380672
 
 

Sinnakuddy Mithu (நன்றி)

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடங்கள் அனுமதி; Inside The Ayodhya Ram Temple - கோவில் உள்ளே எப்படி இருக்கிறது?

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.