Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்முவாகிய நான் திரைவிமர்சனம்!!

Featured Replies

ஜம்மு பேபி ஒவ்வொருகிழமையும் படம் பார்கிறது ஆனா படம் காமெடியா இல்லாட்டி அரைவாசியில "ஓவ்" பண்னி போட்டு போடுவேன்!!இறுதியாக கடைக்கு போய் "அம்முவாகிய நான்" என்ற படத்தை பார்தவுடன் என்ன ஜம்மு மாதிரி அம்மு என்று இருக்கு நம்ம பெயர் அவ்வளவு பேமஸ் ஆகிட்டோ என்று படத்தை எடுத்து கொண்டு வந்தேன் :P வந்து பார்த்தா தான் தெரியும் படம் வந்து பார்தீபனின் என்று நான் நினைத்தேன் படம் அரைவாசியில நிற்பாட்டவேண்டும் போல என்று ஆனா பேபிக்கு படம் நல்லா பிடித்து கொண்டது!!இறுதிவரை பார்தேன் அந்த திரைபடத்தை!!சோ நம்ம யாழ்கள மெம்பர்சிற்காக ஜம்மு பேபி +குமுதத்தில் இருந்தும் எடுத்து விமர்சனம் இதோ உங்களுக்காக!!!! :)

ஜம்மு பேபி திரைவிமர்சனம் இன்று "அம்முவாகிய நான்"

அம்பு என்ற விலை மாதுவை மனைவியாக்கிக் கொண்டு,அவரது பிண்ணணியை -விளைவுகளை நாவலாக எழுதி இலக்கிய விருது பெறுகிறார் எழுத்தாளர் கவுரிசங்கர்.இதை படத்தின் கதையாகவும் எடுத்துகொள்ளளாம்,விளிம்பு நிலை மக்களின் வாழ்கையாகவும் எடுத்து கொள்ளளாம்.பிறந்ததும் தாயை இழந்த பெண் குழந்தையை,தந்தயே விபசாரியிடம் விலைக்கு விற்கும் அவலம் :angry: ,விபச்சாரத்திற்கு வந்த ஆண்கள்,வரிசையில் நிற்கும் விலைமாதுகளை அழைத்துக் கொண்டு அறைகுள் போக,தன்னை மட்டு இந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மறுப்பதாக வளர்ப்புத் தாயிடம் அழும் சிறுமி :wub: ,விபசாரதிற்காக ஏலம் எடுக்கபட்ட பெண்,வாடிக்கையாளரின் கொடுமைகளைத் தாங்கி கொள்ள முடியாமல் கத்துவதும் "எனக்கு இது புதுசு தானம்மா.போகப் போக பழகிறேன் என்று,வளர்ப்புதாயின் மனம் நோககூடாதென்ச் சொல்லும் :D இளம்பெண்,இப்படி விலைமாதுகளின் வளர்ப்புப் பிண்ணணியில் இருக்கும் ரணங்களை நம்முன் காட்டும் ஒவ்வொரு பிரேமும் நம்மை கொள்ளசெய்கிறது.சமூகத்தின் மேல் ஒரு விதமாக நகரும் படம் என்றாலும் "எல்லாவற்றையும் நாகரிகமாக சொல்லி இருப்பது பாரட்டதக்க வேண்டிய விடயம்!!

விலைமாதுகளின் ரணங்களை மருந்தாக எழுத்தாளர் கவுரி சங்கர் வருகிறார் -அதாவது பார்தீபன்.விலைமாதுவை நேரடியாக சந்தித்து பேசி.நாவல் எழுத வந்தவர்,அம்மு என்ற விபசாரியை தேடி வரும் ஒவ்வொரு ஆணும் இப்படி செய்தால்.........(ஏட்டுசுரைக்கைய் கறிக்கு உதாவது கதைதான்.. :P .)

பார்தீபன் எழுத்தாளர் வாழ்கை கனகசிதம்,அம்முவை மனைவியாக்கிய பின்னர்,முதல் ராத்திரி "யாரும் உன்னைத் தொந்தரவு செய்யாம தூங்கும் முதல் ராத்திரி இது" போன்ற புது அர்த்தம் கொடுப்பது என்று பல ட டச் பார்தீபனுக்கு இரியது நடிகிறார்.(முந்திய படங்களை விட) அலட்டல் இல்லாமல்!மனைவியை அனுப்பினால் தான் விருது என்று இலக்கிய தலைவர் கேட்கும் இடத்தில் பார்திபன் கோபம் வழக்கமான கோபம்,இன்னும் ஆக்ரோசம் காட்டி இருக்கலாம்.

அம்முவாக வரும் பாரதி அறிமுகமாக?யார் சொன்னது?விலை மாதுவாக இருக்கும் போதும் சரி,மனைவியாக மாறிய பின்னும் சரி,அச்சு அசல்...(ஆபாசம் இல்லாமல் அசத்தல் பாரதி)தன் உடலை மீண்டும் இழந்தால் தான் தன் கணவருக்கு விருது கிடைக்கும் என்று உடலை இழக்க தயாராகும் இடத்தில் கொலை செய்து திருப்பத்தை ஏற்படுத்துகிறார்.

சபேஷ்முரளி இசை சபாஷ் ஒளிபதிவும் ஒகே!படம் முழுவதும் பார்தீபம்,பாரதி ஆதிக்கம் அதிகம்,மற்றவர்கள் ஊறுகாய் உபயோகம் காமெடி மிஸ்சிங்!

இவ்வாறு படம் நகர்கிறது வழமையை போலவே பார்தீபன் படதிற்குரிய அதே சுலோவான பாணியிலே படம் நகர்கிறது!!மொத்தத்தில் குடும்பமாக இருந்து பார்க்கும் படம் என்று ஜம்மு பேபி சர்டிவிக்கட் தராது :icon_idea: ஏன் என்றா எல்லாருக்கும் முன்னால படத்தை போட்டுவிட்டு இடையில ஜம்மு பேபி கண்ணை மூடிட்டு என்றா பாருங்கோ சத்தியமா ஒரகண்ணால கூட பார்க்கவில்லை!! :P

படம் கதை போகும் விதம் நன்றாக இருந்தாலும் இறுதியாக இலக்கிய தலைவர் அம்முவை ஒரு நாள் இரவிற்கு கேட்பது அவள் அதற்கு சம்மதித்து விட்டு பிறகு கொலை செய்கிறது எல்லாம் வழமையான தமிழ்பட பாணியில் எடுத்து கதையை வழமையான படம் மாதிரி முடித்தது பேபிக்கு பிடிக்கவில்லை!! :icon_idea:

அம்முவாகிய நான் ஜம்மு பேபி போல் சுறுசுறுப்பாக இல்லாட்டியும் பார்க்கலாம்!!ஜம்மு பேபி இந்த படதிற்கு 65 புள்ளிகளை வழங்கி மீண்டும் நல்ல படம் பார்த்தா அதை பற்றிய விமர்சனத்துடன் வருகிறேன்!!ஜம்முவாகிய நான் அம்முவாகிய நான் விமர்சனத்தை சொல்லி விடைபெறுகிறேன்!! :P

ஜம்மு பேபி பஞ்-வாழ்கையில் ஒருவருமே கெட்டவள் என்று இல்லை சந்தர்பமும் சூழ்நிலையும் தான் அவர்களை மாற்றுகிறது!!

அப்ப நான் வரட்டா!!

நன்றி குமுதம்....

அப்ப அம்மு கெட்டவளா?

  • தொடங்கியவர்

சிநேக் அக்கா அம்முவை தானே கேட்கிறீங்க ஜம்முவை இல்லை தானே ஜம்மு நல்ல பிள்ளை அம்முவை பற்றி சொல்ல போனா!! :P

அம்முவை எந்த கட்டகரிகுள் சேர்பது என்பது பிரச்சினையான விசயம் :) !!அந்த பிள்ளை அவ்வாறு மாறியதிற்கு காரணம் அம்முவுன் தகப்பன் என்று சொல்லலாம் ஆனா பிறகு பாருங்கோ பார்தீபன் கடற்கரையில வைத்து உன்னை கல்யாணம் பண்ண போகிறேன் என்று கேட்க அம்முசொல்லுவா "தினம் தினம் நான் எத்தனையோ பேரோட குடும்பம் நடத்துகிறேன் உங்களோடு தனிய குடும்பம் நடத்துவது என்னால் முடியாது என்று சிரிபாள் :icon_idea: அந்த நிலையில் நாம் பார்த்தால் அவளை கெட்டவள் போல் தான் தோன்றும் அவள் நிலையில் இருந்து பார்த்தா உலகம் வேறு ஒரு கோணத்தில் தான் தெரியும்!! :wub:

இறுதி கிளைமாக்சில் தன் கணவருக்கு விருது கிடைக்க வேண்டும் என்று தன்னையை கொடுக்க துணிந்தமை ஆனாலும் அவளாள் அது முடியாம அந்த இலக்கிய தலைவரை கொலை செய்கிறா அதில் இருந்து அவள் கெட்டவள் என்ற முத்திரையை வழங்கமுடியாது B) !!ஆனாலும் சமூகம் அவளை அங்கீகரிக்குமா நல்லவள் என்று!! :(

நீங்கள் படம் பார்த்திருந்தா தெரியும் பார்தீபனின் நண்பண் தான் பார்தீபனை கதை எழுத இந்த இடதிற்கு கூட்டி செல்வார்!!இறுதியாக பார்தீபன் மணம் முடித்த பின் பார்தீபன் தன் நண்பனை வீட்ட வர சொல்ல அவர் சொல்லுவார் என்னால் முடியாது உனக்கு வேண்டும் என்றா அவள் மனைவியாக இருப்பா என் கண்களுக்கு அப்படி தெரியாது என்று இது ஒவ்வோர் பார்வையை பொறுத்தும் வித்தியாசபடும்!! :icon_idea:

என்பார்வைக்கு அம்மு நல்லவள் ஆனா சந்தர்ப்பம்,சூழ்நிலையால் இவ்வாறு தள்ளபட்டு மீண்டும் கரை அடைந்திருகிறா என்று கூறலாம்!! :D

ஆனா நெடுக்ஸ் தாத்தாவின் பார்வையில்!! :P

யம்மு, பட திரை விமர்சனம் வரை வந்தாச்சா? சந்தோசம். அடுத்த முறை நீங்களே விமர்சனம் எழுத இப்போதோ வாழ்த்து சொல்லிக்கின்றேன்.

நல்லாகத்தான் படம் பார்க்கிறியள் போல.

உந்தப்படத்தின் விமர்சனமும் நல்லா இருக்கு. படம் பார்த்துட்டு மிகுதி சொல்லுறன் பேபி

  • தொடங்கியவர்

யம்மு, பட திரை விமர்சனம் வரை வந்தாச்சா? சந்தோசம். அடுத்த முறை நீங்களே விமர்சனம் எழுத இப்போதோ வாழ்த்து சொல்லிக்கின்றேன்.

ஆமாம் தூயிஸ் எல்லா இடமும் அவுஸ் வரவேண்டும் அல்லவோ அது தான் திரைவிமர்சனமும் செய்து பார்தேன் வாழ்த்துகளிற்கு நன்றி :) !!ஆமாம் வெகு விரைவில் முக்கிய புள்ளி ஒருவரை விமர்சிக்க தான் இப்படி எல்லாம் பயிற்சி எடுகிறேன் :lol: !!அடி விழுந்தா அவுஸ் குழுமத்தில இருகிற எல்லோரும் சேர்ந்து அடி வாங்க வேண்டும் பேபியை மட்டும் தனிய விட கூடாது!! :P

நல்லாகத்தான் படம் பார்க்கிறியள் போல.உந்தப்படத்தின் விமர்சனமும் நல்லா இருக்கு. படம் பார்த்துட்டு மிகுதி சொல்லுறன் பேபி

ஆமாம் பேபி நல்லா படம் பார்க்கும் ஆனா சில சீன் இந்த படத்தில வரும் போது பேபி கண்ணை பொத்திட்டு என்றா பாருங்கோ :P !!பேபி கண்ணை திறக்கவே இல்லை!!சரி படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கோ அக்காவிற்கு பிடிக்கு என்று நினைகிறேன்!! <_<

Edited by Jamuna

"அம்முவாகிய நான்" இப்படம் இலங்கையில் தடை போல இருக்குதே

கிறுக்குத்தனமான படங்களைத்தேர்ந்தெடுக்கும்..ப

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா நெடுக்ஸ் தாத்தாவின் பார்வையில்!!

விபச்சாரிகளுக்கு நியாயம் கற்பித்தல் என்பது நெடுக்ஸ் தாத்தாவின் பார்வையில் பாடசாலையில் "கோம் வேர்க்" தந்தும் செய்யாமல் போயிட்டு அது "கோம் வேர்க்" தானே "கோமிலையே" செய்திட்டன் என்று நியாயம் தேடுவது போன்றது.

நெடுக்ஸ் தாத்தாவின் பார்வையில் அனைத்து விபச்சார நிலையங்களையும்.. அவற்றின் பின்னணியில் இயங்குபவர்களையும் பயங்கரவாதமாகக் கருதி ஒடுக்க வேண்டும். ஈவு இரக்கம் மனிதாபிமானம்.. என்பது விபச்சாரிகளிடம் கூடாது. விபச்சாரத்தை ஒழிச்சிருந்தா அம்மு.. விற்கப்பட்டிருப்பாளா..??! விற்க இடந்தான் கிடைச்சிருக்குமா..??! விபச்சார வியாபாரம் இல்லையேல்.. வாடிக்கையாளர்கள் தான் உருவாகுவாரா..???!

யாரும் நஞ்சை வியாபாரம் செய்தால்.. தேடிப் போய் வாங்குவாரா.. இல்லை அல்லவா. அந்த வககயில்.. இந்த விபச்சார விசத்தை.. விசமா கருத வைக்கனும். விபச்சாரமும் அதன் இயங்கு தளமும் குற்றங்கள் பெருகவும்.. விபச்சாரிகள் தொடர்ந்து உருவாகவும் வகை செய்திட்டு இருக்கிறது. இது ஒரு கொடிய சமூகத் தொற்றுநோய்.

காதலிக்கிறது ஏமாத்திறது.... பிறகு இன்னொருவர் கூட சுத்துறது.. இவையும் ஒரு வகையில் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு தான். இப்படிப்பட்ட விபச்சாரிகள் தொடர்பில் சமூகம் அறிவுறுத்தப்பட வேண்டும். தனி மனித ஒழுக்கம் என்பதை நிலைநிறுத்த வழிகாட்டுவதும் விபச்சாரம் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதுவுமே இவற்றை ஒழித்து வளமான சமூகத்தை உருவாக்க உதவும். :P <_<

Edited by nedukkalapoovan

அம்முவைக்கொண்டு வந்து வித்தது ஒரு ஆண் . அங்க இருந்த மற்றாக்களைக் கொண்டு வந்து விட்டது அவரவர்களுடைய கணவர்மார்கள். அப்ப பேசமா இப்பிடியான ஆண்களை இல்லாமல் செய்யலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

அம்முவைக்கொண்டு வந்து வித்தது ஒரு ஆண் . அங்க இருந்த மற்றாக்களைக் கொண்டு வந்து விட்டது அவரவர்களுடைய கணவர்மார்கள். அப்ப பேசமா இப்பிடியான ஆண்களை இல்லாமல் செய்யலாமே.

அம்முவை விற்கவும் வேண்டவும் சமூகம் கட்டிக்காத்து வரும் விபச்சார வியாபார இயங்குதளம் இருந்ததுதான் தான் காரணம். அதைத் தகர்க்கும் போது.. விற்றல் கடத்தல் விரும்பல் வாடிக்கையாளர் என்று எல்லாம்.. இல்லாமல் போகும். விற்றிட்டுட்டார்.. மனிசனோட விரக்தி.. ஆண்களால கொடுமைப்படுத்தப்பட்டன்.. என்று சாட்டுச் சொல்லிக் கொண்டும் பெண்கள்.. காசுக்காக விபச்சாரம் செய்யப் போகிறார். அம்மு கணவனுக்கு விருது வாங்கித் தரக் கூட விபச்சாரத்தைப் பயன்படுத்த முனைகிறார். இவை தவறு செய்பவனை தூண்டி.. தானும் தவறை செய்தலாகும். ஒரு விபச்சாரி.. நினைத்தால் தவறு செய்யாமல் தவிர்க்க ஆயிரம் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால்.. பெண்கள் அப்படிச் செய்ய முயல்வதில்லை. எங்கையாவது ஆண்களை விபச்சாரிகளாக பெண்கள் பாவிக்க ஆண்கள் அனுமதிக்கினமா..??! ஏன் பெண்களால அப்படி இருக்க முடியல்ல. பெண்கள் இந்த விடயத்தில் பலவீனத்தை மறைக்க ஆண்களைப் பயன்படுத்தி.. பணம் பார்க்கின்றனரா என்று கேட்கவே வைக்கிறது.

சமூக அக்கறை உள்ள எவரும் விபச்சாரத்தின் இயங்குதளத்தை இருக்க அனுமதிக்கமாட்டார்கள். விபச்சார இயங்கு தளம் இல்லையேல்.. விபச்சார வியாபாரமும் இல்லை பெண்கள்.. ஆண்கள் பாதிக்கப்படப் போவதும் இல்லை. இப்படி திரைப்படங்கள் எடுத்து ஆயிரம் சோடிப்புகளைச் சொல்லி.. விபச்சாரிப் பெண்களுக்கு அனுதாபம் தேட வேண்டிய தேவையும் இருக்காது. :P <_<

Edited by nedukkalapoovan

என்ன தாத்தா சொல்றீங்கள்?? அம்மு எங்க விருது வாங்கிக் கொடுக்க விபச்சாரத்தைப் பயன்படுத்தினவா?? கிழவன் வந்து வழிஞ்சிட்டுப் போக வேறவழியில்லாமல் அம்மு அங்க போறா ஆனால் கடைசியில கொலையும் செய்யுறா...

அப்புறம் ஆண்கள் விபச்சாரம் செய்யுறேல்ல என்றீங்கிளா? எவ்வளவு பெரிய அறிவாளி நீங்கள். ஊர் உலக நடப்பெல்லாம் தெரிஞ்சனீங்கள். நீங்கள் இப்பிடிச் சொல்றது ஆச்சரியமா இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தாத்தா சொல்றீங்கள்?? அம்மு எங்க விருது வாங்கிக் கொடுக்க விபச்சாரத்தைப் பயன்படுத்தினவா?? கிழவன் வந்து வழிஞ்சிட்டுப் போக வேறவழியில்லாமல் அம்மு அங்க போறா ஆனால் கடைசியில கொலையும் செய்யுறா...

அப்புறம் ஆண்கள் விபச்சாரம் செய்யுறேல்ல என்றீங்கிளா? எவ்வளவு பெரிய அறிவாளி நீங்கள். ஊர் உலக நடப்பெல்லாம் தெரிஞ்சனீங்கள். நீங்கள் இப்பிடிச் சொல்றது ஆச்சரியமா இருக்குது.

ஒரு ஆண் வழியிறான் என்பதற்காக ஏன் பெண் அவனுடைய வழிச்சலுக்கு வழியனும்..???! நாங்க எங்க பாட்டைப் பார்த்திட்டுப் போறது. தவறான நடத்தையை ஊக்குவிக்கும் பெண்ணும் சரி ஆணும் சரி தண்டனைக்குரிய குற்றவாளிகள் தான். அதற்கான தண்டனையை ஆண் அந்தப் பெண்ணின் மூலம் பெற்றான் என்றால் அதற்காக பாராட்டலாம். ஆனால் அந்த ஆணை தவறான வழியில் நடத்திச் சென்று கொலை செய்ய முற்பட்டிருந்தால் அது மன்னிக்கப்பட முடியாதது.

ஆண்கள் பெண்கள் அளவுக்கு விபச்சாரம் எல்லாம் செய்யுறது கிடையாது. சில பெண்களின் தூண்டலால் சில ஆண்கள் தவறான வழியில் செல்ல முற்படுகின்றனர். அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடியது. ஆனால் பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்த முனையாதவரை.. விபச்சாரிப் பெண்கள் மீது தீவிரவாத வழியைப் பிரயோகித்தேனும் பெண்கள் மத்தியில் இருக்கும் விபச்சார நாட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதைக் காணும் ஆண்கள் ஒரு சிலரும் தானாக விபச்சாரத்தில் இருந்து ஒதுங்கிடுவாங்க. பெண்கள் நல்லா விபச்சாரம் செய்து வாழப்பழகிட்டார்கள். ஆண்களை பாவிச்சுப் பழகிட்டார்கள். ஆண்களை தங்கள் தேவைகளுக்காகப் பாவிச்சிட்டு.. சூழல்.. சூழ்நிலை.. ஆணாதிக்கம்.. ஆண் வழிதல்.. என்று கதையளந்து கொண்டிருக்கிறாங்க பெண்கள். இதற்கெல்லாம் ஒரே முடிவு.. விபச்சாரத்தை ஊக்குவிக்கும்.. ஈடுபடும்.. பெண்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்து ஒழிச்சுக் கட்டுறதுதான் இல்ல தீவிரவாத அடிப்படையில் ஒழிப்பதுதான். விசக் கிருமிகளை நஞ்சு மூலம் கொல்லும் போது ஜீவகாருணயம் பாக்கிறமா இல்லையே.. அப்படித்தான் விபச்சாரிகளை ஒழிக்கும் போது மனிதாபிமானம்.. தயவுதாட்சண்னியம்.. ஈவு இரக்கம் பார்க்கக் கூடாது.

***

வயல்களில் பூச்சி கொல்லி.. பீடை கொல்லி பாவிக்கும் போது.. எதிரியுடன் சண்டை இடும் போது... மனித உயிர்களின் மற்றும் உயிர்களின் அழிவைப் பற்றி மனிதன் கவலைப்படுவதில்லைத்தானே.

அப்படிச் செய்யும் போது எதிர்காலத்தில் பெண்கள் விபச்சாரிகளாவது தவிர்க்கப்படுவது மட்டுமன்றி... ஆண்களும் தவறான பாதைகளுக்கு பெண்களால் இட்டுச் செல்லப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெறுவர். ஆண்கள் வழமையாகவே திடமானவர்கள். இருந்தாலும் சில பெண்களால் அவர்கள் பலவீனர்களாக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றனர். அது ஒழிய வேண்டும். அதுதான் ஆண்களுக்கும் பாதுகாப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு. :P

..............................................

தமிழீழம், தமிழீழ அரசு தொடர்பில் ஒரு கருத்தை வைக்கும்போது சரியாக உறுதிப்படுத்தி விட்டு (முடிந்தால் ஆதாரத்துடன்) முன்வைப்பது நல்லது. பிழையான தகவல் எனின் ஒரு தவறான கருத்து பரவ யாழ் இணையம் வழிகோலியதாக அமையும். - வலைஞன்

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்கள் வழமையாகவே திடமானவர்கள். இருந்தாலும் சில பெண்களால் அவர்கள் பலவீனர்களாக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றனர். அது ஒழிய வேண்டும். அதுதான் ஆண்களுக்கும் பாதுகாப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு. :P

நெடுக்ஸ் அண்ணை!! நீங்க மேலே சொன்ன கருத்துக்கள் யாவும் ஏற்புடையதாக இருந்தாலும்!! " ஆண்கள் திடமானவர்கள் என்று சொல்றது " எங்க அப்பன் குதிருக்குள்ள இல்ல" என்பது போன்றிருக்கிறது!! <_<

இப்படிச்சொல்லிச் சொல்லித்தான் பல ஆண்கள் பெண்களைச் சீரழிக்கிறது! !

பெண்களுக்கு விழிப்பு உணர்வு நிச்சயம் தேவை. அதை எப்படிக்கொண்டுவர வேண்டும் என்பது பெற்றோர்களுடைய கடமையும் கூட.

ஆண்கள் எல்லோரும் கெட்டவர்களும் அல்ல! பெண்கள் எல்லோரும் நல்லவர்களும் அல்ல!

சந்தர்ப்பம், சூழ்நிலைகள் ஒருவனின் நிஜமான குணத்தை தீர்மானிக்கிறது என்பது உண்மை! அந்த சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் கூட "சுயம் "இழக்காதவனே 'மனிதன்"...!!..(ஆண்/பெண்)!

  • கருத்துக்கள உறவுகள்

அன்மையில் பிரகாஷ்ராஜ் ஒரு சஞ்சிகையில் சொல்லியிருந்தார், ஒரு கதை விவாதம் நடந்த போது ஒவ்வொருவராக நழுவிப்போய் அரைமணிகழித்து வந்தார்களாம். என்னென்று பார்த்தால் அந்த நேரத்தில் எல்லோரும் புதிதாக நடிக்க வந்த பெண்னோடு இருந்திட்டு வந்திருந்தார்கள். இதுகூட ஒருவகையான விபச்சாரம்தான். வடிவம்தான் மாறுதே தவிர எல்லாம் ஒரே குட்டைதான். ஆதிகாலத்திலிருந்தே பலவித வடிவங்களில் இருந்து வரும் ஒரு தொழிலாகவே போய் விட்டது. இப்பொழுது ஆண்களும் கனிசமான அளவு இதை ஒரு தொழிலாகச் செய்து கொண்டு வருகிறார்கள். (இது ஒரு தொழிலா? இதுவும் ஒரு தொழிலா? என்றால் அது வேறு விடயம்.) ஆயினும் யதார்த்தம் இதுதான். தேயிலைச் செடி போல் ஒரு பக்கத்தால் இதைமுறித்தால்(தடுத்தால்) இன்னொரு பக்கத்தால் அது தலையை நீட்டி சிரித்துக் கொண்டு நிற்கும்.

மேலும் இந்தச் சாக்கடை இல்லாது போனால் சமூகமே நாறிப் போகும் அபாயமுமுண்டு. சம்பந்தப் பட்டவர்களில் ஏதோ ஒரு வகையில் பிச்சனை வரும்போதுதான் இது வெளிவருகிறது. இல்லையெனில் அது தன் பாட்டுக்கு ராஜபாட்டையில் கம்மென்று சென்று கொண்டிருக்கும். இதுதான் கசப்பான உண்மை. <_<:lol:

ஆண்கள் பெண்கள் அளவுக்கு விபச்சாரம் எல்லாம் செய்யுறது கிடையாது. சில பெண்களின் தூண்டலால் சில ஆண்கள் தவறான வழியில் செல்ல முற்படுகின்றனர். அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடியது. ஆனால் பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்த முனையாதவரை.. விபச்சாரிப் பெண்கள் மீது தீவிரவாத வழியைப் பிரயோகித்தேனும் பெண்கள் மத்தியில் இருக்கும் விபச்சார நாட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதைக் காணும் ஆண்கள் ஒரு சிலரும் தானாக விபச்சாரத்தில் இருந்து ஒதுங்கிடுவாங்க. பெண்கள் நல்லா விபச்சாரம் செய்து வாழப்பழகிட்டார்கள். ஆண்களை பாவிச்சுப் பழகிட்டார்கள். ஆண்களை தங்கள் தேவைகளுக்காகப் பாவிச்சிட்டு.. சூழல்.. சூழ்நிலை.. ஆணாதிக்கம்.. ஆண் வழிதல்.. என்று கதையளந்து கொண்டிருக்கிறாங்க பெண்கள். இதற்கெல்லாம் ஒரே முடிவு.. விபச்சாரத்தை ஊக்குவிக்கும்.. ஈடுபடும்.. பெண்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வந்து ஒழிச்சுக் கட்டுறதுதான் இல்ல தீவிரவாத அடிப்படையில் ஒழிப்பதுதான். விசக் கிருமிகளை நஞ்சு மூலம் கொல்லும் போது ஜீவகாருணயம் பாக்கிறமா இல்லையே.. அப்படித்தான் விபச்சாரிகளை ஒழிக்கும் போது மனிதாபிமானம்.. தயவுதாட்சண்னியம்.. ஈவு இரக்கம் பார்க்கக் கூடாது.

ழூழூழூ

வயல்களில் பூச்சி கொல்லி.. பீடை கொல்லி பாவிக்கும் போது.. எதிரியுடன் சண்டை இடும் போது... மனித உயிர்களின் மற்றும் உயிர்களின் அழிவைப் பற்றி மனிதன் கவலைப்படுவதில்லைத்தானே.

அப்படிச் செய்யும் போது எதிர்காலத்தில் பெண்கள் விபச்சாரிகளாவது தவிர்க்கப்படுவது மட்டுமன்றி... ஆண்களும் தவறான பாதைகளுக்கு பெண்களால் இட்டுச் செல்லப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெறுவர். ஆண்கள் வழமையாகவே திடமானவர்கள். இருந்தாலும் சில பெண்களால் அவர்கள் பலவீனர்களாக்கப்பட்டு பாவிக்கப்படுகின்றனர். அது ஒழிய வேண்டும். அதுதான் ஆண்களுக்கும் பாதுகாப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு -நெடுக்காலபோவான்

----------------------------------------------------------------------

1)ஆண்கள் பெண்கள் அளவுக்கு விபச்சாரம் எல்லாம் செய்யுறது கிடையாது.

---------------------------------------------------------------------------------------------

எத்தனை பெண்கள் பாலியல்தொழிலில் ஈடுபடுகின்றார்களோ அத்தனை ஆண்களும் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பது உண்மை. மேலும் இதில் சம்மந்தப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் கூறமுடியும் காரணம் ஒரு பாலியல் தொழிலாழியிடம் பல ஆண்கள் நுகர்வோராக இருக்கின்றனர்

-------------------------------------------------------

2)சில பெண்களின் தூண்டலால் சில ஆண்கள் தவறான வழியில் செல்ல முற்படுகின்றனர். அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடியது.

இது பெண்களின் தூண்டுதல் என்னும் அளவுகோலால் அளக்க கூடிய ஒன்றல்ல. அதற்கு பல நூறு காரணங்கள் இருக்கின்றன.

அழகு என்பது வெள்ளை நிறம் வரிசையான பற்கள் கண்கள் என்று இந்த உலகம் பல்லாயிரம் கோட்பாட்டை வைத்திருக்கின்றது. இன்றைய சினிமாக்களில் காதலுக்காக நாக்கை அறுப்பது. கிட்னியை விற்பது. தற்கொலை செய்வது. என்னும் எத்தனையோ வெளிப்பாடுகளை செய்கின்றார்கள். அது எப்படியான காதல் என்பதை கடந்து எந்த இடத்துக்குள் காதல் என்று பார்க வேண்டும். இவ்வாறான கடுமையான காட்சிகள் கண்ணீர் காவியங்கள் எல்லாம் ஒரு அழகானவளுக்கும்(அழகு என்று சமூகம் ஏற்படுத்திய கோட்பாடுகளுக்குள்) ஆணுக்கும் ஏற்படும் காதலில்தானே தேடுகின்றார்கள். உதாரணமாக எங்கும் தமிழ் கீரோக்கள் கறுப்பு நிறத்தையும் தெத்திப்பல்லையும் உடைய (அழகில்லை என்று சமூகம் ஏற்படுத்தும் கோட்பாடுகளுக்குள்) பெண்களிடம் காதல் கொள்கின்றார்களா? மண்மணம் மாறாத படங்கள் கிராம வாசனை உள்ள படங்கள் என்று எதை எடுத்தாலும் கதாநாயகி மும்பாயில் இருந்தோ கேரளத்தில் இருந்தோ தானே வரவேண்டியிருக்கின்றது.

கிராமத்தில் வாழும் ஒரு பெண் தனது இயல்பான வாழ்கை சுழலுடன்இருக்கும் போது அவள் தோற்றம் அழகில்லை என்று பிரகடனப்படுத்தப்படுகின்றதே. சமயத்தில் கறுப்பு நிற பெண்களை கதாநாயகிக்கு அருகில் பார்வை பொருளாக வைத்து கதாநாயகியின் அழகை மேலும் பிரகாசிக்க செய்கின்றார்களே. இப்படியான நிகழ்வுகளில் பாதிக்கப்படும் மனதை பற்றி யாராவது கவலைப்படுகின்றார்களா? சித்தரிக்கப்படும் காதல் என்பது அழகிற்குள் இருந்தே தேற்றப்படுத்தப்படுகின்றது.

இதுதான் அழகு இதன்பின்னால் ஓடு என்று சினிமா தொடக்கம் விளம்பரம் சஞ்சிகைகளின் அட்டைப்படங்கள் வரை ஒரு வரைமுறையை செய்கின்றது. இந்த விடயம் இன்று தோன்றியதல்ல பண்டைய கவிகள் நிலவின் முகத்துடன் பெண்ணை பிழிந்தெடுத்து குன்றோடு கொங்கைகளை ஒப்பிட்டு அன்றும் செய்துள்ளனர். கடவுள் களும் உலக அழகிகள் போல் தான் சித்தரிக்கப்பட்டனர்.

தூண்டுதல் என்பதை தீர்மானிப்பது சில பெண்களின் நடவடிக்கை அல்ல. அது ஆழமான பின்னணியை கொண்டது. அதை கட்டுப்படுத்துவது என்பது அவ்வாறான பெண்களை ஒழித்துகட்டுவதால் நிகழும் ஒரு காரியம் இல்லை.

----------------------------------------------------------------------

3)பெண்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்த முனையாதவரை.. விபச்சாரிப் பெண்கள் மீது தீவிரவாத வழியைப் பிரயோகித்தேனும் பெண்கள் மத்தியில் இருக்கும் விபச்சார நாட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்.

---------------------------------------------------------------------------

பாலியல் தொழில் என்பது உங்கள் பார்வையில் பெண்கள் தனியே சம்மந்த பட்ட விடயமாக தெரிவது பரிதாபத்துக்குரியது. இது தீவிரவாத வழியை பிரயோகித்து ஒழித்துக்கட்டும் நடவடிக்கையும் அன்று. அந்தகாலத்தில் அந்தப்புரங்கள் தேவதாசிகள்என்று இருந்தது இன்று பாலியல் தொழில் என்று ஒரு நியாயமான பெயருடன் அதன் தேவைகளை கருத்தில் கொண்டு அழைக்கப்படுகின்றது.

பலருக்கு ஆட்டு இறைச்சி வேணும் அதனால் ஒருவன் ஆட்டை கொன்று அவர்களுக்கு விற்கின்றான். இருவருக்கும் தேவை இருக்கின்றது. என்னுமொரு தரப்பு அது பாவம் என்று சொல்லலாம் அல்லது புண்ணியம் என்று சொல்லலாம். இங்கே ஆட்டை கொல்பவனை தண்டிப்பதா அல்லது வேண்டுபவனை தண்டிப்பதா. வேண்டுபவன் இல்லாட்டி ஏன் விற்பனை செய்பவன் ஆட்டை கொல்ல போறான்? இதில் ஆடுகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டுமானால் விற்பவனின் தேவையும் வாங்குபவனின் தேவையும் கருத்தில் கொள்ளப்பட்டு மாற்று வழிபற்றி சிந்திப்பதே பிரச்சனைக்கு வழிவகுக்கும். தவிர தீவிர வாதம் கொண்டு பாலியல் தொழிலை ஒழிப்பது அதுவும் பெண்களை ஒழிப்பது என்பது தவறான கண்ணோட்டம் மட்டுமல்ல பக்கச்சார்புடையது.

-----------------------------------------------------------------------------------

விசக் கிருமிகளை நஞ்சு மூலம் கொல்லும் போது ஜீவகாருணயம் பாக்கிறமா இல்லையே.. அப்படித்தான் விபச்சாரிகளை ஒழிக்கும் போது மனிதாபிமானம்.. தயவுதாட்சண்னியம்.. ஈவு இரக்கம் பார்க்கக் கூடாது.

ழூழூழூ

வயல்களில் பூச்சி கொல்லி.. பீடை கொல்லி பாவிக்கும் போது.. எதிரியுடன் சண்டை இடும் போது... மனித உயிர்களின் மற்றும் உயிர்களின் அழிவைப் பற்றி மனிதன் கவலைப்படுவதில்லைத்தானே.

அப்படிச் செய்யும் போது எதிர்காலத்தில் பெண்கள் விபச்சாரிகளாவது தவிர்க்கப்படுவது மட்டுமன்றி... ஆண்களும் தவறான பாதைகளுக்கு பெண்களால் இட்டுச் செல்லப்படுவதில் இருந்து பாதுகாப்புப் பெறுவர்.

-------------------------------------------------------------------

4) இந்த கருத்து தவறானது மட்டுமல்ல கண்டிக்கவேண்டியது. ஒரு பெண்பாலியல் தொழிலில் ஈடுபடுவதன் பின்னணி பற்றி உள்ள கேள்விகளை நிராகரித்து அவளை பூச்சி புளுக்களை கொல்வது போல் கொல்ல வேண்டும் என்று எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள். நான் அறிய ஒரு அகதி தமிழ் பெண் தனது குழந்தையின் இருதய நோய்கு மருந்து வாங்குவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டார். அவளிடம் போன எந்த ஆணும் அவள் குழந்தைக்குரிய ஒரு நாள் மருந்தை வாங்கி கொடுத்ததில்லை. போரில் கணவனை இழந்து வீடு வாசலை இழந்து இறுதியில் தன் குழந்தையை காப்பாற்ற போரடுகின்றாள் அவளை கொல்ல சொல்கின்றது உங்கள் வாதம். உங்களை இப்படி எழுத தூண்டும் பின்புலம் என்ன? நாகரீகமா அல்லது கலாச்சாரமா அல்லது என்ன உங்களை இப்படி எழுத தூண்டுகின்றது? மனித நேயமில்லாத நாகரீகம் கலச்சாரம் ஆன்மீகம் எல்லாம் பாலியல் தொழிலை விட மோசமானது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிய ஒரு அகதி தமிழ் பெண் தனது குழந்தையின் இருதய நோய்கு மருந்து வாங்குவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டார். அவளிடம் போன எந்த ஆணும் அவள் குழந்தைக்குரிய ஒரு நாள் மருந்தை வாங்கி கொடுத்ததில்லை. போரில் கணவனை இழந்து வீடு வாசலை இழந்து இறுதியில் தன் குழந்தையை காப்பாற்ற போரடுகின்றாள் அவளை கொல்ல சொல்கின்றது உங்கள் வாதம். உங்களை இப்படி எழுத தூண்டும் பின்புலம் என்ன? நாகரீகமா அல்லது கலாச்சாரமா அல்லது என்ன உங்களை இப்படி எழுத தூண்டுகின்றது? மனித நேயமில்லாத நாகரீகம் கலச்சாரம் ஆன்மீகம் எல்லாம் பாலியல் தொழிலை விட மோசமானது.

ஒரு பெண் தனக்குப் பணம் தேவை என்றதும்.. தனது உடலை விற்க முனைவதும்.. அதனைப் பாவிக்க ஆண்களைத் தூண்டுவதும்.. உங்களின் பார்வையில் நாகரிகம்.. மனித நேயம் என்றால்.. இதை விட மோசமான... சமூக சிந்தனையை.. காண்பது கடினம்.

பெண்கள் தங்களின் பதவிகளை தக்க வைக்கக் கூட.. பணத்துக்கும் பதவிக்கும் தங்கள் திறமைகளை காட்டுவதை விடுத்து... உடலை கவர்ச்சிப் பொருளாக்கி ஆண்களைக் கவர்ந்து.. அதனைப் பாவிக்க அனுமதிப்பதை நாகரிகம் எனலாமா...??! நான் இவற்றை மிகக் கீழ்த்தரமான மிருகங்களை விட கீழான சிந்தனையின் வெளிப்பாடாகவே காண்கிறேன்.

மனிதனைத் தவிர உலகில் எந்த பெண் உயிரியாகட்டும்.. தனது குட்டிக்கு உணவில்லை என்று தனது உடலை விற்று.. உணவு தேடிக் கொடுக்கிறதா...???! :o:rolleyes:

மனிதன் தானாக வரையறுத்துக் கொண்ட பொருளாதார உலகில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு தீர்வு பெண்களைப் பொறுத்தவரை விபச்சாரமாக இருக்கவே கூடாது என்பதைச் சொல்ல வேண்டிய நீங்கள்.. இல்ல அவள் ஏன் விபச்சாரம் செய்தாள் என்று பார்த்து அதற்கு அனுதாபம் தேட முனைவது மோசமான சமூகச் சீரழிவுச் சிந்தனை.

உலகில் 80 கோடி மக்கள் தினமும் உணவின்றி.. வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரையும் உணவுக்காக விபச்சாரம் செய்யச் சொல்வீர்களா...???! விபச்சாரம் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில் என்று படித்துப் பட்டம் பெற்று தொழில் இன்றி உள்ளவர்களை அதில் ஈடுபடுத்துவீர்களா...???!

பொருளாதார நெருக்கடி.. உணவு நெருக்கடி.. சமூக நெருக்கடி.. இவற்றை அணுகப் பல வழிமுறைகள் இருக்கும் போது.. சமூகத்தைச் சீரழித்து வரும் விபச்சாரத்தை அதற்குத் தீர்வாகத் தேடுவதை அங்கீகரிப்பது போன்ற நிலை வருந்தத் தக்கது மட்டுமன்றி வன்மைத்தனமானது.

சந்தைக்கு ஒரு பொருள் வரவில்லை என்றால் வாங்க வாடிக்கையாளன் உருவாக மாட்டான். 1900ம் ஆண்டு கணணிகள் வாங்க சந்தைக்கு ஆட்கள் வந்திருப்பார்களா..??! நிச்சயம் இருக்காது. காரணம்.. சந்தையில் கணணி இருக்கவில்லை. அதேபோல் தான் விபச்சாரம் செய்ய ஆட்கள் முன்வராவிட்டால்.. வாடிக்கையாளன் தோன்றி இரான். கணணி வந்ததன் பின் தான் வாடிக்கையாளன் உருவாகினானே தவிர.. வாடிக்கையாளன் கேட்கவில்லை கணணி தா என்று.

இதேபோன்றதுதான் விபச்சாரம்..

இன்று விபச்சாரம் பெண்கள் சலுகைகள் பெறக் கூட பயன்படுத்தப்படுகிறது..

பணம் இல்லையென்றால் ஆண்களிடம் உள்ள பணத்தைப் பிடுங்க.. உடலைக் கவர்ச்சிப் பொருளாக்கி விற்றல்.

பதவி தேவையென்றால் மேலதிகாரிகளுக்கு உடலை விற்றல்...

பாலியல் தேவைகள் அளவுக்கு அதிகமாக பல ஆண்களை தேடி.. உடலை கவர்சிப் பொருளாக்கல்..

இப்படி.. பெண்கள் தங்கள் உடலை கவச்சி மூலதனமாக்கி ஆண்களை தவறான வழியில் கொண்டு செல்ல முற்படுகின்றனர்.

இயற்கையாகவே ஆண் - பெண் இனக்கலப்புக்கான இனக்கவர்ச்சி என்பது உண்டு. அது ஆண் - பெண் இனக்கலப்பின் மூலம் சந்ததிகளை உருவாக்க என்று அமைந்தது. ஆனால் அது இன்று வியாபாரம் செய்யும் நிலைக்கு மனிதனில் விகாரமடைந்து நிற்கிறது.

ஒரு பெண் தனக்கு பணம் தேவையென்றால்.. உதவி வழங்க பல சமூக சேவை நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவற்றைத் தேடிச் செல்ல முனையாமல்.. அவள் தன் உடலை மூலதனமாக்கி விற்று பணம் சம்பாதிக்க முடியும் என்ற சிந்தனை ஓட்டத்தை இந்த மனித சமூகம் நிறுவி உள்ளதைத் தகர்க்க வேண்டும் அதேபோல்.. பணம் இருந்தால் செல்வாக்கு இருந்தால் ஒரு பெண்ணின் உடலை வாங்கலாம் என்ற சிந்தனை விதைப்பு ஆண்கள் மத்தியிலும் சமூகத்தில் இருப்பது தகர்க்கப்பட வேண்டும். அப்போது தான் விபச்சாரத்தின் அழிவுக்கு வழிவகுக்கும்.

மன்னர்கள் விபச்சாரம் செய்தனர் என்ற சாக்குப் போக்குகள் அவசியமில்லை. மன்னர்கள் பலர் சமூகக் குற்றவாளிகளாகவே வாழ்ந்து மடிந்துள்ளனர். அவர்களை உதாரணம் காட்டி.. இன்றைய சமூகத்திலும் விபச்சாரம் போன்ற சமூகவிரோத செயல்களின் இருப்புக்கு நியாயம் தேடுதல் நன்றன்று.

இந்த விபச்சாரத்தின் சமூகப் பாதிப்புக்கள் சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.. அதன் பின்னாவது.. விபச்சாரத்தின் இருப்பை... பாதுகாக்க முனைவதன்.. ஆபத்தை உணர்வீர்களாக...

1. பால்வினை நோய்ப்பரம்பல் ( எயிட்ஸ் போன்ற நோய்களின் பெருக்கத்தில் விபச்சாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது)

2. கருக்கலைப்பு போன்ற அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயற்பாடுகளின் பெருக்கம்.

3. சட்டவிரோத கருக்கலைப்புகளும் மரணங்களும்.

4. குடும்பப் பிரச்சனைகள். ( மனைவியை விட்டு விபச்சாரிகளின் இருப்பை நம்பி குடும்பம் நடத்தும் ஆண்களால்.. விபச்சாரத்தின் இருப்பை நம்பி கணவனை விட்டு வாழ்வைக் கொண்டு செல்லும் பெண்களால்.. மனித சமூக அமைப்பின் அடிப்படை அலகான குடும்பம் அல்லாடி நிற்கிறது)

5. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஊக்குவித்தல்.

அ. ஆட்கடத்தல்.

ஆ. தவறான பணப்புழக்கம்

இ. ஆட்களை தவறான திசைக்கு இட்டுச் செல்லல்

ஈ. கொலைகள்.. பணயம் வைத்தல்

உ. மனிதத் துன்புறுத்தல்களுக்கு இடமளித்தல்

6. பயன்படு மனித வலு விரயமாதல். ( விபச்சாரத்தின் மூலம் இலகுவாக பணம் கிடைக்கும் என்பதால்.. மனித வலுவை தேவையான துறைகளில் பயன்படுத்தி அதன் இலாபத்தின் மூலம் பணம் பெறும் வழிமுறைக்கு இடமில்லாமல் போதல்)

7. வறுமை பெருகுதல். ( விபச்சாரிகள் பணத்தை பெறுகிறார். ஆனால் விபச்சாரிகளிடம் பணத்தைக் கொடுப்பவர்கள் பலர் அடிப்படை கல்வி அறிவற்ற கடின வேலை செய்யும் ஏழைக்குடும்பத்தைச் சார்ந்த ஏழை ஆண்கள். இதனால் ஏழ்மை அதிகரிக்கிறதே அன்றி.. நெருக்கடிகள் கூடுகின்றனவே அன்றி.. பிரச்சனைகள் தீர்வாகவில்லை)

8. தவறான உப பழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல். ( விபச்சாரிகள்.. போதைப் பொருள் மற்றும் மதுபானங்களை வழங்கி வாடிகையாளர்களை தங்கள் அடிமைகளாக்க முனைவதால்... அவர்கள் இவற்றின் பாவனை மூலம் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகி விபச்சாரிகளின் அடிமைகளாக்கப்படுகின்றனர்)

9. இளைய தலைமுறையின் சிந்தனை திறன் தவறான பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டு சிதைக்கப்படுதல்.

10. பாலியல் மற்றும் உடல் நோய்களால் நாடுகள்.. சமூகங்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளும்..பெரிய மனித அவலங்களும். ( ஆபிரிக்க நாடுகளை உதாரணமாகக் காட்டலாம். சியராலியோன் போன்ற நாடுகளின் மொத்த சனத்தொகையில் 50% எயிட்ஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இது நாட்டின் பொருளாதார இருப்பையே.. ஆட்டம் காணச் செய்கிறது)

11. பணம் சம்பாதிக்க என்று உடலை ஆபாசப் பொருளாக்கிக் காட்டும் நிலை பெருகுதல். இது சமூகத்தில் தவறான நாகரிக ஒழுங்கை வளர்க்க உதவும். அது சமூகத்தை பாதிக்கும் வகையில் அமைதல்.

இப்படியான இன்னும் தொடரும் பல காரணங்களின் அடிப்படையில் தான் எனது நிலைப்பாடு இருக்கிறது. பெண்களை எதிர்க்க வேண்டும் என்பதல்ல எனது நிலை. வளமான சமூகத்தை உருவாக்க பல வழிகளில் நாம் நகர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அந்த அளவுக்கு மனித சமூகம் பல சீர்குலைவுகளை உள்வாங்கி வைத்துள்ளது.

Edited by nedukkalapoovan

அட உங்கள் கருத்துக்களை பார்த்தால் "அம்முவாகிய நான்" பார்க்கத்தான் வேணும் போல இருக்கு. நெடுக் அண்ணா நீங்கள் சொல்லுங்கோ வெண்ணிலா உந்தப்படத்தைப் பார்க்கலாமா வேணாமா னு?

  • கருத்துக்கள உறவுகள்

அட உங்கள் கருத்துக்களை பார்த்தால் "அம்முவாகிய நான்" பார்க்கத்தான் வேணும் போல இருக்கு. நெடுக் அண்ணா நீங்கள் சொல்லுங்கோ வெண்ணிலா உந்தப்படத்தைப் பார்க்கலாமா வேணாமா னு?

நீங்கள் விரும்புவதை பார்க்கும் உரிமை உங்களது. ஆனால் நீங்கள் பார்ப்பவை உங்கள் மூலம் சமூகத்தைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வகையில்.. அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் இருந்து பாருங்கள். :P

Edited by nedukkalapoovan

நீங்கள் விரும்புவதை பார்க்கும் உரிமை உங்களது. ஆனால் நீங்கள் பார்ப்பவை உங்கள் மூலம் சமூகத்தைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வகையில்.. அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் இருந்து பாருங்கள். :P
:rolleyes: சரி நெடுக் அண்ணாஏன் கேட்டேன் னா முந்தி ஒருக்கா "நியூ" படம் பார்த்ததுக்கே எனக்கு யாழில் ஏசினார்கள், என்ன நிலா "ஏ" படம் பார்க்கிறாய் னு. நீங்கள் அறிந்திருப்பீங்கதானே. :P

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கருத்தாடலுடன் பொருத்தி விவாதிக்க வேண்டிய செய்தி தட்ஸ் தமிழ் இணையத்தில் கண்டேன். அதை நன்றியுடன் இணைக்கிறேன். இது மக்கள் வாழ்வின் நடைமுறை பற்றிய கருத்துக்கணிப்பு.

'செக்ஸ்': முதலிடத்தில் மெக்சிகோ; 3வது இடத்தில் இந்தியர்கள்!!!

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007 RSS

- சென்னை:

'செக்ஸ் 'வைத்துக் கொள்வதில் உலகிலேயே மெக்சிகர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இந்தியர்களுக்கு இதில் 3வது இடம் கிடைத்துள்ளது. ஆனால் பார்ட்னர்களை திருப்திப்படுத்துவதில் உலக சராசரியை விட இந்தியர்களின் சராசரி அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

ஆணுறைகள் உள்ளிட்ட கருத் தடுப்பு சாதனங்களைத் தயாரிக்கும் பிரபல டியூரக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. செக்ஸ் வைத்துக் கொள்வதில் உலக அளவில் யார் நம்பர் ஒன், பார்ட்னர்களைத் திருப்திப்படுத்துவதில் யார் சிறந்தவர்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அடங்கிய கருத்துக் கணிப்பை இது நடத்தியது.

26 நாடுகளில் 26,000 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் உலக அளவில் செக்ஸ் வைத்துக் கொள்வதில் சிறந்தவர்களாக மெக்சிகோ நாட்டினர் உருவெடுத்துள்ளனர். 80 சதவீத மெக்சிகர்கள் செக்ஸில் திருப்தியுடன் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

2வது இடம் கிரேக்கர்களுக்குக் கிடைத்துள்ளது. இவர்களின் சராசரி அளவு 76 சதவீதமாகும். இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளனர். 74 சதவீத இந்தியர்கள் செக்ஸில் பூரண திருப்தியுடன் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனராம்.

அதேசமயம், செக்ஸில் பூரண திருப்தியுடையவர்களின் உலக சராசரி 58 சதவீதம்தான். அதை விட இந்தியர்களின் திருப்தி சராசரி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றுக்கும் மேற்பட்டோரிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதில் இந்தியர்கள் சற்று தயக்கம் காட்டுகிறார்களாம். சராசரியாக ஒரு இந்திய ஆண், அதிகபட்சம் 6 பெண்களை காதலியாக வைத்திருக்கிறாராம் (லியாகத் அலி போன்றவர்கள் இதில் விதி விலக்கானவர்கள்!!).

இதுவே இங்கிலாந்தில், ஒரு ஆணுக்கு குறைந்தது 16 காதலிகளும், பெண்ணுக்கு குறைந்தது 10 காதலர்களும் இருக்கிறார்களாம்.

உலக அளவில் ஒரு ஆண் 13 பெண்களுடனும், ஒரு பெண் 7 ஆண்களுடனும் உறவு கொள்வதாக தெரிய வந்துள்ளது.

ஒரே பார்ட்னருடன் உறவு கொள்பவர்கள், உறவில் படு திருப்தியாக ஈடுபடுகிறார்களாம். 19 சதவீதம் பேர் வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்கிறார்களாம்.

இந்தியாவில் 9 சதவீதம் பேர் வைப்ரேட்டர்களை பயன்படுத்துகிறார்கள். 13 சதவீதம் பேர் உபயோகித்துப் பார்க்கலாம் என நினைத்துள்ளார்களாம்.

- http://thatstamil.oneindia.in/news/2007/09...eats-india.html

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆய்வல்ல. கருத்துக்கணிப்பு. 26 நாடுகளில் இருந்து.. ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேரைத் தெரிவு செய்து வியாபார உற்பத்திப் பொருட்களின் சந்தைக்கான வாய்ப்பை அறியும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இதை ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக நோக்க முடியாது.

இங்கும் கூட இதை வலியுறுத்தத் தவறவில்லை.

"ஒரே பார்ட்னருடன் உறவு கொள்பவர்கள், உறவில் படு திருப்தியாக ஈடுபடுகிறார்களாம்." :o:rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

"அம்முவாகிய நான்" இப்படம் இலங்கையில் தடை போல இருக்குதே

நிலா அக்கா அப்படி இருகாது என்று நினைகிறேன்!!நல்ல படம் அக்கா நிச்சயம் வரும் வர தான் நாள் எடுக்கும் என்று நினைகிறேன்!!ஆனா பேபி கண்ணை பொத்தின மாதிரி நீங்களும் கண்ணை பொத்த வேண்டும் சொல்லிட்டேன் அக்கா!! :P

கிறுக்குத்தனமான படங்களைத்தேர்ந்தெடுக்கும்..ப

??ர்த்திபன் திரையுலக சாதனைகள் பள்ளத்தைநோக்கி...

விருதை நோக்காக வைத்து எடுக்கப்படுகின்ற படம் போல இருக்கிறது...

இந்த படத்திற்கு பேபி விமர்சனம் எழுதியதை(சுட்டொட்டியதை) நான் வன்மையாக கண்டிக்கிறேன்

ஆமாம் மாமா கிறுக்குதனமான படமா தான் எல்லாம் படமும் எடுபார் அவர் குறிப்பா குடைகுள் மழை என்ற படம் எடுத்தார் கடைசி மட்டும் விளங்கவில்லை என்ன கதை என்று பேபிக்கு என்றா பாருங்கோ மாமா :D !!இந்த படம் மிகவும் நல்ல படம் மாமோய்!!என்ன வன்மையாக கண்டிகிறீங்களோ பேபி சும்மா ஜென்ரல் நொலேஜை வளர்க தான் மாமா இதுக்கு எல்லாம் கண்டிகாதையுங்கோ மாமா!! :P

விபச்சாரிகளுக்கு நியாயம் கற்பித்தல் என்பது நெடுக்ஸ் தாத்தாவின் பார்வையில் பாடசாலையில் "கோம் வேர்க்" தந்தும் செய்யாமல் போயிட்டு அது "கோம் வேர்க்" தானே "கோமிலையே" செய்திட்டன் என்று நியாயம் தேடுவது போன்றது.

நெடுக்ஸ் தாத்தாவின் பார்வையில் அனைத்து விபச்சார நிலையங்களையும்.. அவற்றின் பின்னணியில் இயங்குபவர்களையும் பயங்கரவாதமாகக் கருதி ஒடுக்க வேண்டும். ஈவு இரக்கம் மனிதாபிமானம்.. என்பது விபச்சாரிகளிடம் கூடாது. விபச்சாரத்தை ஒழிச்சிருந்தா அம்மு.. விற்கப்பட்டிருப்பாளா..??! விற்க இடந்தான் கிடைச்சிருக்குமா..??! விபச்சார வியாபாரம் இல்லையேல்.. வாடிக்கையாளர்கள் தான் உருவாகுவாரா..???!

யாரும் நஞ்சை வியாபாரம் செய்தால்.. தேடிப் போய் வாங்குவாரா.. இல்லை அல்லவா. அந்த வககயில்.. இந்த விபச்சார விசத்தை.. விசமா கருத வைக்கனும். விபச்சாரமும் அதன் இயங்கு தளமும் குற்றங்கள் பெருகவும்.. விபச்சாரிகள் தொடர்ந்து உருவாகவும் வகை செய்திட்டு இருக்கிறது. இது ஒரு கொடிய சமூகத் தொற்றுநோய்.

காதலிக்கிறது ஏமாத்திறது.... பிறகு இன்னொருவர் கூட சுத்துறது.. இவையும் ஒரு வகையில் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு தான். இப்படிப்பட்ட விபச்சாரிகள் தொடர்பில் சமூகம் அறிவுறுத்தப்பட வேண்டும். தனி மனித ஒழுக்கம் என்பதை நிலைநிறுத்த வழிகாட்டுவதும் விபச்சாரம் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதுவுமே இவற்றை ஒழித்து வளமான சமூகத்தை உருவாக்க உதவும்.

நெடுக்ஸ் தாத்தா உங்கள் பார்வை நல்லா தான் இருக்கு :P !!நிச்சயமாக நீங்க சொல்லுற கருத்தை ஏற்கிறேன் தாத்தா ஆனாலும் பாருங்கோ!!விபசாரத்தை ஒழித்து இருந்தா அம்மு விற்கபட்டிருப்பாளா என்று கேட்டீங்க ஏற்று கொள்ள கூடிய கேள்வி அம்முவை நாடி ஆண்கள் செல்வதாலே தானே விபசாரம் தோற்றுவிக்கபடுகிறது :o !!ஆண்கள் அந்த இடங்களை தவித்தால் விபசார நிலையம் தான் வருமா!!அம்மு மாதிரி குழந்தைகள் விற்கபடுமா தாத்தா?? :rolleyes:

நஞ்சை யாரும் தேடி போய் வாங்கமாட்டார்கள் ஆனா சிலர் அதையும் தேடி சென்று வாங்குபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள் தாத்தா!! :P

விபசாரி என்று சிலரை ஒதுக்கும் சமூகம் ஏன் அவர்களை நாடி செல்பவர்களுக்கு ஒரு பெயரை கொடுத்து ஒதுக்குவதில்லை தாத்தா B) !!நீங்கள் குறிபிட்டது போல ஒருவரை காதலித்து விட்டு இன்னொருவருடன் சுற்றும் பெண்களை நிச்சயமாக இந்த கட்டகரிகுள் கொண்டு வரலாம்!!ஆனால் அம்மு மாதிரி சந்தர்ப்பம் சூழ்நிலையால் இவ்வாறு ஆகியவர்களை பிழை என்று சொல்ல முடியாது நெடுக்ஸ் தாத்தா!! :)

ஜம்மு பேபி தத்துவம்-

ஊசியும்,நூலும் தேவை சட்டை தைக்க!!(மாபெரும் தத்துவம் 1932) :P

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

]

அன்மையில் பிரகாஷ்ராஜ் ஒரு சஞ்சிகையில் சொல்லியிருந்தார், ஒரு கதை விவாதம் நடந்த போது ஒவ்வொருவராக நழுவிப்போய் அரைமணிகழித்து வந்தார்களாம். என்னென்று பார்த்தால் அந்த நேரத்தில் எல்லோரும் புதிதாக நடிக்க வந்த பெண்னோடு இருந்திட்டு வந்திருந்தார்கள். இதுகூட ஒருவகையான விபச்சாரம்தான். வடிவம்தான் மாறுதே தவிர எல்லாம் ஒரே குட்டைதான். ஆதிகாலத்திலிருந்தே பலவித வடிவங்களில் இருந்து வரும் ஒரு தொழிலாகவே போய் விட்டது. இப்பொழுது ஆண்களும் கனிசமான அளவு இதை ஒரு தொழிலாகச் செய்து கொண்டு வருகிறார்கள். (இது ஒரு தொழிலா? இதுவும் ஒரு தொழிலா? என்றால் அது வேறு விடயம்.) ஆயினும் யதார்த்தம் இதுதான். தேயிலைச் செடி போல் ஒரு பக்கத்தால் இதைமுறித்தால்(தடுத்தால்) இன்னொரு பக்கத்தால் அது தலையை நீட்டி சிரித்துக் கொண்டு நிற்கும்.

மேலும் இந்தச் சாக்கடை இல்லாது போனால் சமூகமே நாறிப் போகும் அபாயமுமுண்டு. சம்பந்தப் பட்டவர்களில் ஏதோ ஒரு வகையில் பிச்சனை வரும்போதுதான் இது வெளிவருகிறது. இல்லையெனில் அது தன் பாட்டுக்கு ராஜபாட்டையில் கம்மென்று சென்று கொண்டிருக்கும். இதுதான் கசப்பான உண்மை. :rolleyes::o

சுவி பெரியப்பா சரியா சொன்னீங்க :) மேல்வர்கத்தில பல பெண்கள் ஒழுக்கம் குறைந்தவர்களாக இருந்தாலும் சமூகம் அவர்களை தூக்கு வைத்து ஆடும்,ஆனா ஒரு ஏழை பெண்ணாக இருகட்டும் உடனே சமூகம் அவர்களுக்கு ஒரு பெயரையும் கொடுத்து ஒதுக்கிவிடும் இப்படி தான் நம்ம சமூகம் பெரியப்பா! :angry: !

ஜம்மு பேபி சிட்டுவேசன் சோங்- B)

இருகுமிடத்தில் இருந்து விட்டா எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது!! :)

:lol: சரி நெடுக் அண்ணாஏன் கேட்டேன் னா முந்தி ஒருக்கா "நியூ" படம் பார்த்ததுக்கே எனக்கு யாழில் ஏசினார்கள், என்ன நிலா "ஏ" படம் பார்க்கிறாய் னு. நீங்கள் அறிந்திருப்பீங்கதானே. :P

"நீயூ" படம் பார்ததிற்கு ஏச்சா அது யார் அக்கா நான் கூட "நீயூ" படம் 3 தரம் பார்தேன் அக்கா!!எதையும் பார்பது செய்வதும் நமது விருப்பம் ஆகவே மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று யோசிக்க தேவையில்லை B) என்று நினைகிறேன் அக்கா!!பேபி அப்படி தான் பேபிக்கு சரி என்றா செய்யும் அக்கா!! :D

நிலா அக்கா அப்படி இருகாது என்று நினைகிறேன்!!நல்ல படம் அக்கா நிச்சயம் வரும் வர தான் நாள் எடுக்கும் என்று நினைகிறேன்!!ஆனா பேபி கண்ணை பொத்தின மாதிரி நீங்களும் கண்ணை பொத்த வேண்டும் சொல்லிட்டேன் அக்கா!! :P
:o கண்ணை பொத்தினியளா? அட நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் உந்தப்படம் வந்தாலும் நாம கண்னைப் பொத்துற அளவில் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படியான காட்சிகள் கட் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். :D
"நீயூ" படம் பார்ததிற்கு ஏச்சா அது யார் அக்கா நான் கூட "நீயூ" படம் 3 தரம் பார்தேன் அக்கா!!எதையும் பார்பது செய்வதும் நமது விருப்பம் ஆகவே மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று யோசிக்க தேவையில்லை B) என்று நினைகிறேன் அக்கா!!பேபி அப்படி தான் பேபிக்கு சரி என்றா செய்யும் அக்கா!! :rolleyes:
:) ஓ அப்படியா? ஆனால் நானும் அப்படித்தான் செய்வேன். ஆனால் தெரியாதோ சில நேரத்தில் சிலர் திட்டும்போது கவலையாக இருக்கும். அதுதான் :lol: அதுசரி அம்முவாகிய நான் பார்த்திபனோடு எந்த நடிகை நடிச்சிருக்கினம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.