Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

நன்றி தேவையில்லை 

மாற்றங்கள் பலவகை எனக்கு தெரிந்தது இரண்டு வகை மட்டுமே 

ஒன்று இயல்பாக எற்படுவது உதாரணமாக நீங்கள் ஐந்து வயதில் எவ்வளவு முயன்றாலும் அப்பா ஆக முடியவே முடியாது 🤣ஆனால் இருபது வயதில் இயல்பாக நீங்கள் அப்பா ஆக முடியும்  இல்லையா?? இது இயற்கையான மாற்றம்   இப்படியான மாற்றங்களை எற்றுக்கொண்டு வாழ வேண்டும் 

கனடா தமிழ் பேரவை  பல நூறுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு  இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும்  இலங்கை அரசின் தமிழ் விரோத செயல்களை எதிர்த்தும். போரடா ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இயங்குகிறது இயங்கி வருகிறது  இதில் உள்ள ஒரு சிலர்  தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையுடன் கள்ள உறவுகளை பேணி  பேரவையின் இலக்குகளை  விற்பனை செய்ய முடியாது   

அப்படி நடந்தால்  பேரவையின் உருவாக்கத்துக்கு பங்களிப்புகள் வழங்கியவர்கள் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா?? 

“”1) இதில் உள்ள ஒரு சிலர்  தங்களின் சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையுடன் கள்ள உறவுகளை பேணி  பேரவையின் இலக்குகளை  விற்பனை செய்ய முடியாது   

2) அப்படி நடந்தால்  பேரவையின் உருவாக்கத்துக்கு பங்களிப்புகள் வழங்கியவர்கள் சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா?? “”

1) எந்த ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டு.  

2) வன்முறையை நியாயப்படுத்துகிறீர்கள்.  

(வன்முறையை நியாயப்படுத்துவதன் அடுத்த கட்ட வளர்ச்சி துரோகிப்பட்டம் கட்டி மண்ணடையில் போடுவதில் முடியும் என்பது எங்கள் கடந்த கால அனுபவம்) 

  • Replies 88
  • Views 9.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நான் இதுபற்றி ஒரு காணொளி பார்த்தேன் கனடா டமிழர் பேரவை சார்பில் ஒரு பெண் உட்பட்ட மூவர் சில விளக்கங்களைச் சொன்னார்கள் அதில் தாங்கள் பயணம் தொடர்பான விடையங்களை ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் தங்களுக்கு

  • வாலி
    வாலி

    இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!

  • இதையும் பார்த்து புல் சவுண்டு கொடுங்க ... 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை, எமது மக்களுக்கு வழிகாட்டக்கூடிய வகையில் பலமான நேர்மையான அமைப்பு எதுவும் இல்லை என்பது பலரது கவல

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

CTC இன அழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாமல் பயணிப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுபற்றி ஒரு காணொளி பார்த்தேன் கனடா டமிழர் பேரவை சார்பில் ஒரு பெண் உட்பட்ட மூவர் சில விளக்கங்களைச் சொன்னார்கள் அதில் தாங்கள் பயணம் தொடர்பான விடையங்களை ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் தங்களுக்கு மின்னஞ்சல்மூலம் தகவல்களைத் தந்துகொண்டே இருந்ததாகவும் மகிந்தவைச் சந்திக்காமல் இமாலயமலைக்கு ஏற முடியாது எனவும் காரணம் நாடாளுமன்றில் அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள்தான் பெருவாரி எனவும் தாங்கள் ஏதாவது பிரச்சனைக்கான உடன்பாட்டுக்கு வந்தால் மகிந்த தரப்பு குழப்பக்கூடாது எனவும் கூறியிருந்தார்கள். 

அவர்களது கூற்றுப்படி இமாலயப் பிரகடனத்தை சிங்களம் ஏற்று நாளைக்கெ தீர்வைத் தட்டில் வைத்துத் தரப்போகினம் அதுதான் மகிந்தவைத் தடவிக்குடுத்தனாங்கள் எனச்சொல்லினம்.

ஆனா ஒன்று மட்டும் தெரிகிறது கனேடியத் தமிழர் பேரவயில் உள்ள சிலரை சிங்களமும் இந்தியாவும் தங்கட கையுக்குள் கொண்டுவந்திட்டுது அந்த விடையம் ஏனையவர்களுக்கும் தெரியும் ஆனால் இதை தாங்கள் வெளியில சொன்னால் கனேடிய தமிழர் பேரவை இனிமேல் இல்லாமல் போயிடும் எண்டு பம்முகினம்.

ஆனால் உடைவு நடந்துவிட்டது நிஜம்போலத்தான் இருக்கு. இந்த விடையத்தில சுரேன் சுரேந்திரனுக்கும் ரூட் ரவியருக்கும் இந்தியா கொடுத்த கனேடியத் தமிழர் பேரவையை உடை எனும் அசைன்ட்மன் சக்சஸ்.

இந்தியாவினதும் சிங்களத்தினதும் கண்களைக்குத்திய விடையம் கனடாவின் அரசியலில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களது ஆதிக்கம் மிகவும் முக்கியமாக இருக்கு இப்படியான நிறுவனங்களை உடைத்துக் குழப்பிவிட்டால் அவங்கள் தங்களுக்குள் அடிபட்டே மற்றையதை இழந்துவிடுவார்கள் உதாரணத்துக்கு இப்போ தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரன் புகுந்து விளையாடுவதுபோலவும் ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக் கூட்டணியை முடக்கியதுபோலவும் கனடாவில் கனேடியத் தமிழர் பேரவையை உண்டு இல்லை என்றாக்கிவிட்டால் தங்களதுபாடு கொண்டாட்டம்தான் என சிங்களமும் இந்தியாவும் நினைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த தாக்குதல் என்பதை தமிழ் சமூகத்தில் ஒரு விதி விலக்கு என்று கூறுகிறார். இதற்கு முன் தமிழ் சமூகத்தில் இப்படி தாக்குவது இல்லையாம். 

கடந்த 25 வருடங்ககளில் தமிழ் சமூகத்தில் ஒரு தமிழ் அமைப்பு மீது தாக்குதல் நடந்தது இதுவே முதல் தடவை என்று சிரிக்காமல் கூறியிருப்பதில் இருந்து இவர் தமிழ் தேசியவாதியாக  இருப்பதற்கான முழுத்  தகுதியை பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, island said:

கடந்த 25 வருடங்ககளில் தமிழ் சமூகத்தில் ஒரு தமிழ் அமைப்பு மீது தாக்குதல் நடந்தது இதுவே முதல் தடவை என்று சிரிக்காமல் கூறியிருப்பதில் இருந்து இவர் தமிழ் தேசியவாதியாக  இருப்பதற்கான முழுத்  தகுதியை பெற்றிருக்கிறார் என்று நினைக்கிறேன்

அப்படி நடந்திருந்தால் அதன் ஆதாரத்தையல்லவா நீங்க வைக்க வேண்டும்?

வெறுமனே அவர் மீது குற்றம் சொல்வதில் பிரயோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி நடந்திருந்தால் அதன் ஆதாரத்தையல்லவா நீங்க வைக்க வேண்டும்?

வெறுமனே அவர் மீது குற்றம் சொல்வதில் பிரயோசனம் இல்லை.

ஈழத் தமிழ் அமைப்புகளுக்குள்  தமிழர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி தெரியாமல் இருக்கின்றீர்கள் என்றால் நீங்கள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து இப்போது தான் வந்துள்ளீர்கள் போல் இருக்கிறது. 😂

https://noolaham.net/project/55/5493/5493.pdf

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

கடந்த 25 வருடங்ககளில் தமிழ் சமூகத்தில் ஒரு தமிழ் அமைப்பு மீது தாக்குதல் நடந்தது இதுவே முதல் தடவை

1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்படி நடந்திருந்தால் அதன் ஆதாரத்தையல்லவா நீங்க வைக்க வேண்டும்?

2024 -1994=30 ஆண்டுகள்    கடந்து விட்டது……  மேலே சொல்லியது கடந்த 25 ஆண்டுகள்  எனவே  தகவல்கள் சரியானது  இல்லையா??  இந்த சரிநிகர் பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது ??  எங்கிருந்து வெளியீடு செய்தார்கள்??  

2 hours ago, Elugnajiru said:

நான் இதுபற்றி ஒரு காணொளி பார்த்தேன் கனடா டமிழர் பேரவை சார்பில் ஒரு பெண் உட்பட்ட மூவர் சில விளக்கங்களைச் சொன்னார்கள் அதில் தாங்கள் பயணம் தொடர்பான விடையங்களை ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் தங்களுக்கு மின்னஞ்சல்மூலம் தகவல்களைத் தந்துகொண்டே இருந்ததாகவும் மகிந்தவைச் சந்திக்காமல் இமாலயமலைக்கு ஏற முடியாது எனவும் காரணம் நாடாளுமன்றில் அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள்தான் பெருவாரி எனவும் தாங்கள் ஏதாவது பிரச்சனைக்கான உடன்பாட்டுக்கு வந்தால் மகிந்த தரப்பு குழப்பக்கூடாது எனவும் கூறியிருந்தார்கள். 

அவர்களது கூற்றுப்படி இமாலயப் பிரகடனத்தை சிங்களம் ஏற்று நாளைக்கெ தீர்வைத் தட்டில் வைத்துத் தரப்போகினம் அதுதான் மகிந்தவைத் தடவிக்குடுத்தனாங்கள் எனச்சொல்லினம்.

ஆனா ஒன்று மட்டும் தெரிகிறது கனேடியத் தமிழர் பேரவயில் உள்ள சிலரை சிங்களமும் இந்தியாவும் தங்கட கையுக்குள் கொண்டுவந்திட்டுது அந்த விடையம் ஏனையவர்களுக்கும் தெரியும் ஆனால் இதை தாங்கள் வெளியில சொன்னால் கனேடிய தமிழர் பேரவை இனிமேல் இல்லாமல் போயிடும் எண்டு பம்முகினம்.

ஆனால் உடைவு நடந்துவிட்டது நிஜம்போலத்தான் இருக்கு. இந்த விடையத்தில சுரேன் சுரேந்திரனுக்கும் ரூட் ரவியருக்கும் இந்தியா கொடுத்த கனேடியத் தமிழர் பேரவையை உடை எனும் அசைன்ட்மன் சக்சஸ்.

இந்தியாவினதும் சிங்களத்தினதும் கண்களைக்குத்திய விடையம் கனடாவின் அரசியலில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களது ஆதிக்கம் மிகவும் முக்கியமாக இருக்கு இப்படியான நிறுவனங்களை உடைத்துக் குழப்பிவிட்டால் அவங்கள் தங்களுக்குள் அடிபட்டே மற்றையதை இழந்துவிடுவார்கள் உதாரணத்துக்கு இப்போ தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரன் புகுந்து விளையாடுவதுபோலவும் ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக் கூட்டணியை முடக்கியதுபோலவும் கனடாவில் கனேடியத் தமிழர் பேரவையை உண்டு இல்லை என்றாக்கிவிட்டால் தங்களதுபாடு கொண்டாட்டம்தான் என சிங்களமும் இந்தியாவும் நினைக்கிறது.

அருமை மிகத் தெளிவான பார்வை மற்றும் விளக்கங்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

2024 -1994=30 ஆண்டுகள்    கடந்து விட்டது……  மேலே சொல்லியது கடந்த 25 ஆண்டுகள்  எனவே  தகவல்கள் சரியானது  இல்லையா??  இந்த சரிநிகர் பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது ??  எங்கிருந்து வெளியீடு செய்தார்கள்??  

உண்மைதான் கந்தையா அது 30 அண்டுகளுக்கு முதல் தமிழர்களால் தமிழர்களின் நூலகத்தின் மீது புரியப்பட்ட கடைந்தெடுத்த காடைத்தனம். உங்கள் கூற்று சரியானதே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

உண்மைதான் கந்தையா அது 30 அண்டுகளுக்கு முதல் தமிழர்களால் தமிழர்களின் நூலகத்தின் மீது புரியப்பட்ட கடைந்தெடுத்த காடைத்தனம். உங்கள் கூற்று சரியானதே. 

அது சரி,.....கனடா அரசும் அதன் பிரதமரும். உத்தியோக பூர்வமாக இலங்கை தமிழருக்கு சார்பாக உலகளாவிய ரீதியில் முதல் நாடாக சில நடவடிக்கைகளை எடுத்து உள்ளது  அதன் பின்னர் வரும் செய்திகள்  கனடா வாழ். தமிழர்களை மோதவிட. யாரோ செயல்படுகிறார்கள் என்று நான் உணர்கிறேன்  இது சம்பந்தமாக உங்களின் நிலைப்பாடு கருத்துகள் என்ன?? அதனை நான் அறியலாமா?? 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kandiah57 said:

நீங்கள் அப்படி உணர்வது உங்கள் பார்வை.  ஆனால் அப்படி தமிழர்கள் தமக்குள் மோத யாரோ அடுத்தவர் செயல்படத்   தேவையில்லை.  அரசியலில் சகிப்பு தன்மை அறவே இல்லாமல் போராடப் போன நோக்கத்தையே மறந்து  தமக்குள்ளேயே ஆளையாள் போட்டுத்தள்ளிய,  கும்பல்கும்பலாக கொலை செய்த அரசியல் பாரம்பரியத்தை எமக்குள்ளேயே உருவாக்கிய வரலாற்றை கொண்ட தமிழர்களை மோத விட வெளியார் செயற்படத் தேவையில்லை என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

2024 -1994=30 ஆண்டுகள்    கடந்து விட்டது……  மேலே சொல்லியது கடந்த 25 ஆண்டுகள்  எனவே  தகவல்கள் சரியானது  இல்லையா??  இந்த சரிநிகர் பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது ??  எங்கிருந்து வெளியீடு செய்தார்கள்??  

கட்டிடங்களை எரிப்பது மட்டுமல்ல வன்முறையின் வெளிப்பாடு.

புலம் பெயர் அமைப்புகளின் சகியாத்தன்மை, வன்முறை ஆதரவுப் போக்கு என்பவற்றைக் காட்டும் சம்பவங்கள் சில ஐரோப்பாவிலும், குறைந்தது ஒரு தடவை அவுசிலும் நடந்திருக்கின்றன: 25 வருடங்கள் முன்பு அல்ல, கடந்த 15 வருடங்களுக்குள்! யாழில் இவை பற்றி உரையாடப் பட்ட போதெல்லாம், வன்முறையை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் கருத்துகளும் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் திரியிலும் இது போன்ற தட்டிக் கொடுத்தல் நீங்கள் உட்பட சிலர் செய்வது புதுமையல்ல!

இப்படி வன்முறையை பூடகமாக ஆதரிப்பதன் விளைவுகள், சட்ட ரீதியாக இருக்கா விட்டாலும் சமூக ரீதியாக இருக்கும். இளையோர், வன்முறைப் போக்கு காரணமாக, தமிழ் தேசிய செயல்பாடுகளை விலக்கி வைத்து விடும் ஆபத்து இருக்கிறது.

அடுத்த தலைமுறையை அன்னியப் படுத்தி விட்டால், சிங்களவர்கள் எதிர்பார்க்கும் விளைவை நாமே வெள்ளித் தட்டில் வைத்து அவர்களுக்குக் கொடுத்து விடுவோம்!   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்தத் திரியிலும் இது போன்ற தட்டிக் கொடுத்தல் நீங்கள் உட்பட சிலர் செய்வது புதுமையல்ல!

வன்முறைகளை ஆதரிக்கவில்லை  மாறாக வன்முறைக்கான காரணங்களை ஆதரிககிறோம். மிக தீவிரமாக ஆதரிக்கிறோம் இந்த கனடா தமிழ் பேரவையில் உள்ள மிகச்சிலர். அதிகாரமிக்க சிலர்  பேரவையின் இலக்குகள். இலஞ்சியம்களுக்கு மாறாக  தன்னிச்சையாக செயல்படுகிறதை  எப்படி தடுக்க முடியும்  அல்லது தடுக்கும் வழிவகைகளையும் தயவுசெய்து சொல்லுங்கள்  அவர்கள் வன்முறைகளை பின்பற்றமால் உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் பின்பற்ற முடியும்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@Justin

வருடங்கள் முன்பு அல்ல, கடந்த 15 வருடங்களுக்குள்! யாழில் இவை பற்றி உரையாடப் பட்ட போதெல்லாம், வன்முறையை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் கருத்துகளும் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் திரியிலும் இது போன்ற தட்டிக் கொடுத்தல் நீங்கள் உட்பட சிலர் செய்வது புதுமையல்ல!

இங்கு எழுதும் கருத்துகளை வைத்து வன்முறையாளர் என எடைபோடுவது வருந்தத் தக்கது..

புலம் பெயர் தமிழன்  வானத்தில் இருந்து வந்தவன் அல்ல..அதனைவிட தனது  தேசத்தில் எத்தனை ,துன்பம் அனுபவித்தபின்பே...புலம் பெயர்ந்து இ ருப்பான்...

உதாரணம் ..யாழில்  ரஞ்ஜித் எழுதிய  இரண்டாவது பயண ம் என்ற தொட்ரை வாசித்துப் பாருங்கள்... ஒருமனிதனின்  இன உணர்வும் ஆதங்கமு ..எவ்வளவு அழ்காக சொல்லப் பட்டிருக்கிற்து...அவர்ல் ஆற்றாமையை எப்படி  வெளிப்படுத்துகிறார் என்பது புரியும்....

இதுபோல்தான் யாழ் களத்தில் உள்ள பலரும் ...இன உணர்வால் பாதிக்கப்பட்டவர் , தூண்டப் பட்டவர்...

இவர்களாள்  தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்பு பிழை விடும்போது..அறியாமலே ..கோபம் ஏற்படுவது ..தவிற்க முடியாதுதானே..இதற்காக இவர்கள்தான் எரித்தார்கள் ..தூண்டினார்கள்..என்பதெல்லாம் அபத்தம்...என்னைப் பொறுத்தவரை ரஞ்சித் போல எழுத்தாற்றல் இல்லைய்யே என்றும் கவலை யடைகின்றேன்..ஏனெனில் என்னிடமும் பல சோகங்கள்  உண்டு..எனினும் யாழ்கள இப்போதைய னிலமையில்  உண்மைகளைகொட்டி சிக்கலில் மாட்டுப்படவும்  .. வ்ரும்பவில்லை.. இதுத்ஹன் உண்மை

எனவே உணர்வு அத்துமீறிப் போகும்போது ..எழுத்தில் ..கொட்டுபவன் வன்முறையளனல்ல...உங்கள்  கருத்துக்களை .ஆழமாகப்படித்து... அதை ஏற்றுக்கொள்பவனில் நானும் ஒருவன்...நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

வன்முறையை ஆதரிக்கவில்லை ஆனால் அதற்கான காரணங்களை ஆதரிக்கிறோம். 

ஆகாகா,... என்ன ஒடு புத்திசாலித்தனம் 

😩

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் குடியேறிய நாடுகளை  போன்று மனித உரிமைகளை மதித்து சிங்கலவர்கள் நடக்க மாட்டார்கள் என்று குற்றம் சாட்டி கொண்டு தமிழர்களில் யரராவது இவர்களது கடும் போக்கு கோட்பாடுகளுக்கு எதிராக மாற வெளிகிட்டால் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை கையில் எடுப்பார்களாம் ஆனால் இவர்கள் பயங்கரவதத்தை ஆதரிக்கவில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

கேஸ் பை கேஸ் ஆக யாரும் ஆலோசனை கொடுக்க முடியாது. ஒரு கொள்கையில் இருந்து ஒருவர் மாறுகிறார் என்பதற்காக ஒருவர் மீது வன்முறையை அவிழ்த்து விடுவது சட்ட ரீதியிலும் தவறு, அதே நேரம் கொள்கையையும் வளர்க்காது (மேலே சொல்லியிருக்கிறேன் ஏன் என்று). எனவே, இதைச் செய்தோர் சாதாரண றௌடிகள் அல்ல, முட்டாப் பீசு றௌடிகள் என்பது என் அபிப்பிராயம் - இவர்களுக்கு வழி காட்டல் சட்டத்திடமிருந்து மட்டும் தான் கிடைக்க முடியும், ஏனையோர் நேரம் செலழிப்பது வீண் வேலை.  

1 hour ago, alvayan said:

இந்த தாக்குதலில் தீ மூட்டல் சம்பந்தப் பட்டிருக்கிறதென நினைக்கிறேன். அது எப்படி எதிரே நிற்பவரை உணர்ச்சி மயப்பட்டுத் தாக்குவது போல ஆகும் என்கிறீர்கள்? மேற்கு நாட்டு சட்டங்களில், தீ முட்டலுக்கு கடுமையான தண்டனை ஏன் இருக்கிறது என நினைக்கிறீர்கள்? ஏனெனில், simple arson  எனப்படும் சிறிய தீ மூட்டல் கூட ஒரு திட்டமிட்டு, நேரமெடுத்துச் செய்யும் செயல். எனவே, "உணர்ச்சி மயப்பட்ட சூழலில் செய்தது" என்று யாருக்கும் விளங்கப் படுத்தித் தப்ப இயலாது.

ஆனால், தீ மூட்டல் மட்டுமல்ல. தமிழ் தேசியத்தின் பெயரால் "கொள்கைப் பற்றில் செய்கிறோம்" என்று செய்யும் மிரட்டல்கள், புகைக் குண்டெறிதல், கூட்டம், குழப்புதல் எல்லாமே தமிழ் தேசியத்திற்கு  வைக்கிற ஆப்புத் தான்! இதை கண்டிக்காமல், தடவிக் கொடுக்கும் எவருக்கும் அந்த ஆப்பில் பங்கிருக்கிறதென நம்புகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தாங்கள் குடியேறிய நாடுகளை  போன்று மனித உரிமைகளை மதித்து சிங்கலவர்கள் நடக்க மாட்டார்கள் என்று குற்றம் சாட்டி கொண்டு தமிழர்களில் யரராவது இவர்களது கடும் போக்கு கோட்பாடுகளுக்கு எதிராக மாற வெளிகிட்டால் அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை கையில் எடுப்பார்களாம் ஆனால் இவர்கள் பயங்கரவதத்தை ஆதரிக்கவில்லை😂

அய்யா முதலில் சி.ரி.சி எனபது தனிமனித அமைப்பு  அல்ல என்பதை புரிந்து கொள்ளவும்..  இது கனடியத் தமிழர்களால்  உருவாக்கப் பாட்டது ..அதிலும் விலக்காக ஒரு  அமைப்பு   சம்பந்தப் படவில்லை..அவர்கள்  ஆரம்பமுதலே விடுதலை போராட்டத்தை எதிர்த்தவர்கள்..அப்பவும் எதிர்ப்ப்வர்கள்...  இப்பவும் எதிப்பதில் அதிசய மில்லையே

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

ஒருவர் மாறுகிறார்

ஒருவர் இல்லை கனடா தமிழ் பேரவை  என்ற  அமைப்பை சேர்ந்த சிலர்   அந்த அமைப்பில் நூற்றுக்கணக்கானவர் அங்கத்துவம் வகிக்கிறார்கள்  எனவேதான் இலகுவாக கொள்கை மாற முடியாது   தனிநபர் ஒருவர் கொள்கை மாறலாம்  அது பிரச்சனை இல்லை  வாருங்கள்… சேர்ந்து இயங்குவோம். இலங்கை தமிழருக்குகாக உழைப்போம்.  போராடுவோம்  என்று  பலரும் இணைந்து கனடா தமிழர் பேரவை என்ற பெயரில் இயங்கி வளர்ந்து  போய் கொண்டிருக்கும் போது   ஒரு சிலர்  தன்னிச்சையாக கொள்கை மாற முடியாது அதுவும் நேர் எதிராக 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

கேஸ் பை கேஸ் ஆக யாரும் ஆலோசனை கொடுக்க முடியாது. ஒரு கொள்கையில் இருந்து ஒருவர் மாறுகிறார் என்பதற்காக ஒருவர் மீது வன்முறையை அவிழ்த்து விடுவது சட்ட ரீதியிலும் தவறு, அதே நேரம் கொள்கையையும் வளர்க்காது (மேலே சொல்லியிருக்கிறேன் ஏன் என்று). எனவே, இதைச் செய்தோர் சாதாரண றௌடிகள் அல்ல, முட்டாப் பீசு றௌடிகள் என்பது என் அபிப்பிராயம் - இவர்களுக்கு வழி காட்டல் சட்டத்திடமிருந்து மட்டும் தான் கிடைக்க முடியும், ஏனையோர் நேரம் செலழிப்பது வீண் வேலை.  

இந்த தாக்குதலில் தீ மூட்டல் சம்பந்தப் பட்டிருக்கிறதென நினைக்கிறேன். அது எப்படி எதிரே நிற்பவரை உணர்ச்சி மயப்பட்டுத் தாக்குவது போல ஆகும் என்கிறீர்கள்? மேற்கு நாட்டு சட்டங்களில், தீ முட்டலுக்கு கடுமையான தண்டனை ஏன் இருக்கிறது என நினைக்கிறீர்கள்? ஏனெனில், simple arson  எனப்படும் சிறிய தீ மூட்டல் கூட ஒரு திட்டமிட்டு, நேரமெடுத்துச் செய்யும் செயல். எனவே, "உணர்ச்சி மயப்பட்ட சூழலில் செய்தது" என்று யாருக்கும் விளங்கப் படுத்தித் தப்ப இயலாது.

ஆனால், தீ மூட்டல் மட்டுமல்ல. தமிழ் தேசியத்தின் பெயரால் "கொள்கைப் பற்றில் செய்கிறோம்" என்று செய்யும் மிரட்டல்கள், புகைக் குண்டெறிதல், கூட்டம், குழப்புதல் எல்லாமே தமிழ் தேசியத்திற்கு  வைக்கிற ஆப்புத் தான்! இதை கண்டிக்காமல், தடவிக் கொடுக்கும் எவருக்கும் அந்த ஆப்பில் பங்கிருக்கிறதென நம்புகிறேன்!

சட்டம் தன் வேலையைச் செய்யும் என்பது தெரியாததல்ல... இதனை இங்கு திணிப்பதுதான் விந்தை....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, alvayan said:

அய்யா முதலில் சி.ரி.சி எனபது தனிமனித அமைப்பு  அல்ல என்பதை புரிந்து கொள்ளவும்..  இது கனடியத் தமிழர்களால்  உருவாக்கப் பாட்டது ..அதிலும் விலக்காக தேடகம் அமைப்பு   சம்பந்தப் படவில்லை..

கனேடியத் தமிழ்க்  குழந்தைகள் வன்முறையை ஆதரிப்பார்களா ? 

இதற்கான பதிலில் எல்லாமே அடங்கியிருக்கிறது. 

50 minutes ago, Kandiah57 said:

ஒருவர் இல்லை கனடா தமிழ் பேரவை  என்ற  அமைப்பை சேர்ந்த சிலர்   அந்த அமைப்பில் நூற்றுக்கணக்கானவர் அங்கத்துவம் வகிக்கிறார்கள்  எனவேதான் இலகுவாக கொள்கை மாற முடியாது   தனிநபர் ஒருவர் கொள்கை மாறலாம்  அது பிரச்சனை இல்லை  வாருங்கள்… சேர்ந்து இயங்குவோம். இலங்கை தமிழருக்குகாக உழைப்போம்.  போராடுவோம்  என்று  பலரும் இணைந்து கனடா தமிழர் பேரவை என்ற பெயரில் இயங்கி வளர்ந்து  போய் கொண்டிருக்கும் போது   ஒரு சிலர்  தன்னிச்சையாக கொள்கை மாற முடியாது அதுவும் நேர் எதிராக 

1) அவர்கள் செய்வது CTC யின் கொள்கைக்கு முரணானது என்றால்  அவர்களை அமைப்பை விட்டு வெளியேற்றலாம். 

2) CTC யை எரித்தது அந்த தனி நபர்களை பயமுறுத்துவதற்காகவா அல்லது CTC யை மிரட்டவா ? 

3) அந்தத் தனிநபர்களை மிரட்டுவதற்கென்றால் அது மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்திய கதையாகவல்லோ இருக்கிறது ? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வன்முறையை ஆதரிக்கவில்லை ஆனால் அதற்கான காரணங்களை ஆதரிக்கிறோம். 

ஆகாகா,... என்ன ஒடு புத்திசாலித்தனம் 

😩

என்ன சொல்ல வருகிறீர்கள்,.எனக்கு விளங்கவில்லை  இந்த விடயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் 

அவர்கள் கனடா தமிழ் பேரவை என்ற பெயரில்  தமிழ் இனத்துக்கு எதிராக இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு  கனடா அரசு போட்ட பயணத்தடையை  நீக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அப்படியே !   தமிழ் இனத்துக்கு எதிரான செயல்களை எதிர்த்ததில் என்ன பிழையுண்டு??  எதிர்த்த காரணங்களை ஆதரிக்கிறேன் ஆனால் எரிந்ததை ஆதரிக்கவில்லை .ஆனாலும் அவர்கள் என்ன மாதிரி,முறையில் போராட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை   உங்களுக்கு தெரியுமானால் சொல்லுங்கள்  அடுத்தவரை புத்திசாலி என்று சொல்வது உங்கள் கருத்துக்களை மலினப்படுத்திவிடும்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

உங்கள் குழந்தைகள் வன்முறையை ஆதரிப்பார்களா ? 

இதற்கான பதிலில் எல்லாமே அடங்கியிருக்கிறது. 

சி.டி.சி தொடங்கும்போதூ..கனடாவில் நீங்கள்   இருந்ததீர்களா .. என்பதில்தான் என்பதில் வரும்... ஏன் ..என்னுடைய பிள்ளைகளயும்.. போட்டுக்கொடுக்கிற எண்ணமோ...உங்கள்  கேள்விகளில் உள்ள சூட்சுமம் நான் அறியாததல்ல ...நான் அல்வாயான்... புரிந்து கொள்க..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

அவர்கள் செய்வது CTC யின் கொள்கைக்கு முரணானது என்றால்  அவர்களை அமைப்பை விட்டு வெளியேற்றலாம். 

நல்ல கேள்வி தான்  சம்பந்தன் ஐயா   சரியில்லை என்று வெளியேற்ற பார்த்தால்   முடியவில்லை காரணம் அவர் தான் தலைவர்  ..  அவர் தான் மற்றவர்களை வெளியேற்றும் அதிகாரம். கொண்டிருந்தார்   

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, alvayan said:

சி.டி.சி தொடங்கும்போதூ..கனடாவில் நீங்கள்   இருந்தநீர்களா .. என்பதில்தான் என்பதில் வரும்... ஏன் ..என்னுடைய பிள்ளைகளாஈஊ .. போடுக்கொடுக்கிற எண்ணமோ...உங்கள்  கேள்விகளிலும் உள்ள சூட்சுமம் நான் அறியாததல்ல ...நான் அல்வாயான்... புரிந்து கொள்க..

பிற சாரதிகளின் தவறான வாகன ஓட்டத்திற்கெதிராக தங்கள் பெற்றோர் Honk செய்வதையே கனேடியத் தமிழ்ப் பிள்ளைகள் விரும்புவதில்லை. அது எல்லாப் பிள்ளைகளுக்கும் பொருந்தும். உண்மை நிலைமை அப்படி இருக்கையில் பிள்ளைகளே மிகச் சாதாரண எதிர்ப்பை நாகரீகமான முறையில்  வெளிக்காட்ட விரும்பும்போது  நீங்கள் மட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனைவது முரண்நகை .

Edited by Kapithan

Guest
This topic is now closed to further replies.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.