Jump to content

லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பிரமுகருடன் தொடர்பு – நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், NIA அதிகாரிகள் சோதனை!

February 2, 2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணி குறித்த தகவல்கள்  வெளியாகி உள்ளன.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இன்று நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று அதிகாலை முதல் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை என்ஐஏ மேற்கொண்டு வரும் நிலையில் இந்த ரெய்டு என்பது பெரும் அதிர்ச்சியை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்தது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் இன்று சென்னை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும் சென்னை கொளத்தூரில் பாலாஜி, கோவையில் ஆலாந்துறை ஆர்ஜி நகர் நாம் தமிழர் கட்சியில் ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் , சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்கு முன்னிலையாகக் கோரி என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி என்ஐஏ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி முக்கிய நிர்வாகிகள் மீது என்ஐஏ அதிகாரிகள் கண்வைத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி சிக்கலில் சிக்கலில் சிக்கி  உள்ளது.

இந்நிலையில்  நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்வதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருப்போரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லண்டன் பிரமுகர் ஒருவருடன் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்கள் பிரத்யேக செயலி ஒன்றின் மூலம் லண்டன் பிரமுகருடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த தகவலை தொடர்ந்து  என்ஐஏ அதிகாரிகள் நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சோதனைக்கு முக்கிய காரணம் என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் சிக்கிய 2 பேர் எனவும் கூறப்படுகிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காவற்துறையினர்  சோதனை நடத்தினர். அப்போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்பயப்ட்டனர். இவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தான் நாம் தமிழர் கட்சி குறித்த தகவலை என்ஐஏ அறிந்ததாகவும், அதனடிப்படையில் அவர்கள் இன்று நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது தெரியவந்தது.
 

https://globaltamilnews.net/2024/200289/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை
2 பிப்ரவரி 2024, 05:00 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது.

சட்டவிரோதமாக ஆயுதம் தயாரிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு தொடர்பாகவே இந்த சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் பிப்ரவரி இரண்டாம் தேதி அதிகாலை முதல் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் விஸ்வநாதபேரியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.இவர் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.

திருச்சி சண்முகா நகரில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனின் வீட்டிற்கு அதிகாலையில் வந்த என்ஐஏ அதிகாரிகள், சில மணி நேரம் சோதனை நடத்திவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

 
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை

பட மூலாதாரம்,SAATTAIDURAI/X

படக்குறிப்பு,

'சாட்டை' துரைமுருகன்

அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகரான விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் அதிகாலை ஐந்து மணி முதல் என்ஐஏ சோதனை நடத்திவருகிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். யு டியூப் சானல் ஒன்றையும் நடத்திவருகிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் ஆலாந்துறை ஆர்.ஜி. நகரில் வசிக்கும் ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. காளப்பட்டியில் முருகன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதேபோல, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி கட்சி அலுவலக முகவரிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை
படக்குறிப்பு,

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்

இந்தச் சோதனைகள் எதற்காக?

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரில் துப்பாக்கி தயாரித்ததாக சிலர் கைதுசெய்யப்பட்டனர். அந்த வழக்குத் தொடர்பாகத்தான் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ஓமலூர் காவல்துறையினர் புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்திலிருந்து ஓமலூர் நோக்கிவந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை இட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரி பாகங்கள், கத்தி, தோட்டா, வெடிமருந்து, முகமூடி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் சேலம் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சஞ்சய் பிரகாஷ், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி என அடையாளம் காணப்பட்டனர்.

இவர்கள் சேலம் செட்டிச்சாவடியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரிய வந்தது. இவர்களுக்கு உதவியதாக சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கபிலர் என்பவரையும் காவல்துறை கைதுசெய்தது. இந்த வழக்கை முதலில் சேலம் மாவட்ட 'க்யூ' பிரிவு காவல்துறை விசாரித்து வந்தது.

அந்த விசாரணையில், பணத்திற்காக இயற்கையைச் சீரழிப்பவர்களை அழித்தொழிப்பதற்காக ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்த அந்த இளைஞர்கள் முடிவெடுத்திருந்ததாகவும் இதற்காக கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளைச் சேகரித்ததாகவும் தெரியவந்தது. இதற்குப் பிறகு இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

இப்போது இந்த வழக்கு தொடர்பாகத்தான், சோதனைகளும் விசாரணைகளும் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.bbc.com/tamil/articles/ceqjyqw74gxo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனை

IMG-5741.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்? சீமான்

02 FEB, 2024 | 03:20 PM
image

தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது என சீமான் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதை எதிர்த்து நீதிமன்றில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அறிவித்துள்ளார்.

இந்நிலைலையில் இது குறித்து சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; தேர்தல் நேரத்தில் இதெல்லாம் நடக்கும் என்று ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் முயற்சியாக என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. நியாயப்படி என்ஐஏ அதிகாரிகள் என்னிடம் தான் விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.

அச்சுறுத்தலுக்கு அஞ்சும் நபர்கள் நாங்கள் இல்லை. சிறிய யூடியூப் சேனல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எப்படி நிதி திரட்ட முடியும்? விடுதலைப் புலிகள் அமைப்பு எங்கிருக்கிறது? அதற்கு எப்படி பணம் திரட்ட முடியும்?

தேர்தல் சமயத்தில் என்னையும் கட்சியையும் முடக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு நான் தடையாக இருப்பதால் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. நாட்டை கொள்ளையடித்தவர்கள் அச்சமின்றி இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும். சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். பிப்.5ம் தேதி நிர்வாகிகளுடன் சேர்ந்து நானும் ஆஜராகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/175395

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NTK ஐ பெரிய ஆட்களாக்கி விட்டனர்  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஜாக பி டீம் யாரென்பதை காலம் நிரூபிக்கும்.. திமுகா எத்தனைகாலம் ஏமாத்த முடியும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் பின்னணி குறித்த தகவல்கள்  வெளியாகி உள்ளன

வளர்ந்துவிட்டார்கள் என்று எண்ணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

என்ஐஏ சோதனையின் மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது; நான் சரியான பாதையில் செல்கிறேன். 

அப்படி என்றால் இஸ்லாமிய  பயங்கரவாதிகளும் சரியான பாதையில் செல்கிறார்களா? கடந்த வருடம் நிறைய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இருப்பிடங்களில் NIA இன் தேடுதலுடன் கைதும் இடம் பெற்றது. 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.