Jump to content

32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

article_image1

Poonam pandey

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆன இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

article_image2

கொரோனா சமயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றதால், இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இதையடுத்து காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட கோவா சென்றிருந்த பூனம் பாண்டே, அங்கு தன் கணவர் தன்னை அடித்து துன்புறித்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து திருமணமான இரண்டே வாரத்தில் பூனம் பாண்டேவின் கணவர் சாம் மும்பை போலீசாரான் கைது செய்யப்பட்டார்.

 

article_image3

 

பின்னர் சில தினங்களிலேயே தன்னுடைய கணவருடன் மீண்டும் இணைந்துவிட்டதாக பூனம் பாண்டே அறிவித்ததை பார்த்த நெட்டிசன்கள் அவர் விளம்பரத்திற்காக இதுபோன்று செய்துவருவதாக விமர்சித்தனர். இதுதவிர நிர்வாண படங்களிலும் நடித்து வந்த பூனம் பாண்டே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். சமீபகாலமாக சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் தற்போது மரணமடைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

article_image4

 

அவர் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் "இன்று காலை எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. கர்ப்பப்பை புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர். பூனம் பாண்டேவின் மறைவு பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

https://tamil.asianetnews.com/gallery/gallery/poonam-pandey-died-at-the-age-of-32-due-to-cervical-cancer-gan-s87u2c#image3

 

  • Sad 1
Link to comment
Share on other sites

32 வயதியில் மரணம்! மிக இளம் வயதிலேயே இறந்து விட்டார்.

அஞ்சலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இறக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. உண்மைத் தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. 

https://m.dinamalar.com/detail-amp.php?id=3541931

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்டதாக நேற்று செய்தி பரவியது. இந்த நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cn0njqnde39o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் உங்கள்  இதய அஞ்சலியை வாபஸ்  பெறுங்கள்...  அம்மணி தான் உயிருடன் இருப்பதாக அறிக்கை விட்டுள்ளார்...விழிப்புணர்வுக்காக தன் உயிர் போனதாக  சொன்னவராம்...விழிபுணர்வுக்கு விலை தன் உயிர்...உலகம் எங்கடாசாமி போகுது

Link to comment
Share on other sites

இவர் தான் இந்தியா வென்றால் உடை இல்லாமல் உலகுக்கு காட்சி தருவேன் என கூறியவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

”உயிருடன் தான் இருக்கிறேன்” நடிகை பூனம் பாண்டே விளக்கம்!

ManjulaFeb 03, 2024 13:45PM
bollywood actress poonam pandey

தான் உயிருடன் இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (32) ‘நஷா’ என்ற படத்தின் மூலமாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.இந்தி தவிர கன்னடம், போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பூனம் நடித்திருக்கிறார். பூனம் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ‘ஜர்னி ஆஃப் கர்மா’ பாலிவுட் படம் வெளியானது. அதற்குப்பின் அவர் நடிப்பில் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

bollywood actress poonam pandey

கடந்த 2௦11-ம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவர், 2௦2௦-ம் ஆண்டு தன்னுடைய காதலன் சாம் பாபே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நேற்று(பிப்ரவரி 2) திடீரென இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டார் என பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நன்றாக இருந்த பூனம் திடீரென எப்படி இறந்தார்? என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தனர். மேலும் அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

bollywood actress poonam pandey

இந்த நிலையில் தான் இறக்கவில்லை என இன்று(பிப்ரவரி 3) தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே அறிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ”நான் உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்தேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள்,”விழிப்புணர்வு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?” என கடுமையாக பூனம் பாண்டேவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

https://minnambalam.com/cinema/bollywood-actress-poonam-pandey-apologises-for-shocking-everyone/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

விழிப்புணர்வு என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா?


இவரது செய்தியை யாழ்களத்தில் படித்து நானும் கேன்சர் பற்றி பயந்தேன். இப்போது பொய் செய்தி என்பதால் பயமே இல்லை ஆகவே இது விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யபட்டது இல்லை. தன்னை விளம்படுத்த செய்த மோசமான செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 poonam-pandey--8-_300x533xt.jpg  Poonam-Pandey2-1706855162476_300x399xt.j

நல்ல கவர்ச்ச்ச்ச்சீ  நடிகை போலுள்ளது. 😋 🤪 😍
இவர் உயிருடன் இருந்தால்.... இவரின்
திறமையை!!! தமிழ் திரையுலகம் பயன் படுத்த வேண்டும். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானித்தினை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணையாக முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றது. தமிழ் மக்களின் "ஆணை" என்று பேசும்போது, அது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவே தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, இறைமை, பூர்வீக தாயகம் ஆகிய விடயங்களை முன்வைத்து அரசியல் ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, இந்த ஆணை என்பது எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. ஆகவே, பொதுவேட்பாளர் இந்த ஆணையினைத்தான் மீளவும் புதுப்பித்து ‍ நினைவுபடுத்த தேர்தலில் நிட்கிறார் என்றால் அது எவ்வாறு தவறாக இருக்க முடியும்?  சுமந்திரன் கூறும் "எமக்கு மட்டுமே தந்த ஆணை" என்பதற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை சுமந்திரன் ஏன் எதிர்க்க வேண்டும்? நீங்கள் செய்யவேண்டியதை, ஆனால் செய்ய மறுப்பதை சிவில் சமூகம் செய்கிறது, அவ்வளவுதான். ஆனால், பிரச்சினை அதுவல்ல. சுமந்திரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆணை ரணிலை ஜனாதிபதியாக்குவது. அது மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணை அல்ல. அது, ரணிலால் "தமிழரசுக் கட்சிக்கு இடப்பட்ட ஆணை". ஆகவே, அதனை அவரும், அவரது கட்சியினர் மட்டுமே செய்யமுடியும். வேறு எவரும் அதில் பங்கு கேட்க முடியாது. அது தமிழ் மக்களாக இருந்தாலென்ன, சிவில் சமூக அமைப்புக்களாக இருந்தாலென்ன.
    • சுமந்திரனின் பேச்சிலிருந்து .......1951 ஆம் ஆண்டு சமஷ்ட்டிக் கட்சியின் தீர்மானத்தில் தமிழினத்தை தனியான கலாசாரமும், மொழியும், பூர்வீக தாயகமும் கொண்ட இனம் என்று கண்டுகொண்டிருந்தது. தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட இனம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சிங்களக் கட்சிகளும் தமிழ் மக்கள் சமஷ்ட்டியைத்தான் வேண்டுகிறார்கள் என்பதை அறிந்தே இருக்கின்றன, அதனால் அதுகுறித்துக் கேள்வி கேட்பதில்லை. சமஷ்ட்டிக்குக் குறைவான எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 72 ஆம் ஆண்டு இறையாண்மை கொண்ட தமிழினம் தனியாகப் பிரிந்து செல்ல முடியும் என்றபோதும், அதனைச் செய்யாமல் சமத்துவ சமஷ்ட்டி முறையில் ஏனைய இனங்களுடனும் வாழ விரும்புகின்றனர்.  1977 ஆம் ஆண்டு தனிநாடு கோரி முன்வைத்த கோரிக்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆணை வழங்கினர்.  இவ்வளவும் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை. சரி, இதற்குள் ரணிலை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ அல்லது சிங்களத் தலைவர் ஒருவரை ஜனாதிபதியாக்குங்கள் என்றோ கூறப்பட்டிருக்கிறதா? பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவது தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு வழங்கிய ஆணையினை நிராகரிக்க வேண்டும் என்கிற நோக்கிலா? இல்லையே. தமிழ் மக்கள் அன்று வழங்கிய ஆதே ஆணையினை மீளவும் நிரூபிக்கத்தானே? மீளவும் நினைவுபடுத்தி தமிழ் மக்களை ஒன்றிணைக்கத்தானே? மக்கள் ஆணையினை மீளவும் புதுப்பிப்பது எப்படி அதே ஆணையினை நிராகரிப்பதாக மாறும்? இந்த ஆணையினை மீளவும் நினைவுபடுத்துவது யாருக்குத் தர்ம சங்கடமாக இருக்கப்போகிறது? தமிழர்கள் நிச்சயம் இதனை வரவேற்கத்தான் போகிறார்கள். ஆகவே, இதனை நினைவுபடுத்துவதால் கலவரப்படப்போவது சிங்கள தலைமைகள் தானே? அவர்களுக்குக் கூஜா தூக்கும் அடிவருடிகள் தானே?   சுமந்திரன் இந்த வாக்கெடுப்பு சமஷ்ட்டிக்கான வாக்கெடுப்பு இல்லையென்கிறார். ஆனால், 1977 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மட்டும் தனிநாட்டிற்கான வாக்கெடுப்பா? இல்லையே. அத்தேர்தலை தமது தனிநாட்டிற்கான ஆணையாகத்தானே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாவித்து வெற்றி பெற்றது? அபோது மட்டும் அது சர்வஜன வாக்கெடுப்பு, இப்போது அது ஜனாதிபதித் தேர்தலா? யாரை ஏமாற்றுகிறீர்? ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவரமுடியாவிட்டால் தமிழரின் இருப்பு முற்றாக அழிந்துவிடுமாம். இறைமையும், சுயநிர்ணய உரிமையும் இல்லாது போய்விடுமாம். இப்போதுமட்டும் உங்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையும், சமஷ்ட்டியும் தருவேன் என்று ரணில் சொன்னாரா? யாருக்குக் கதை விடுகிறார் சுமந்திரன்? மக்கள் தந்த ஆணை தனிநாட்டிற்கானது. 1977 இல் அது நடந்தது. இன்றுவரை அதனை பெற்றுக்கொடுக்க சுமந்திரன் என்ன செய்திருக்கிறார்?  நீர் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டதே தமிழ் மக்களுக்கான தனி அரசிற்கான கோரிக்கையினை முன்வைத்துத்தான். அதில் அங்கம் வகித்துக்கொண்டே தமிழ் மக்கள் அதே தேசியத்தினை முன்னிறுத்தி பொதுவேட்பாளரை நிறுத்த எத்தனிக்கும்போது எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என்கிறீர், நீர் யாருக்காக  வேலை செய்கிறீர் என்பது மிகவும் தெளிவாக இப்போது தெரிகிறது.  அரசியல்வாதிகள்,  தம்மைத் தெரிவுசெய்த மக்களின் நலன்களைக் கைவிட்டு, அம்மக்களின் எதிரிகளின் அரசியல் நலன்களைச் சார்ந்து முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகும்போது, அம்மக்கள் கூட்டத்தின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்ட, அம்மக்கள் கூட்டத்தில் செயற்பட்டு வரும் சமூக அமைப்புக்கள் வெளியே வந்து அம்மக்களுக்கான அரசியல்த் தலைமையினை பொறுப்பெடுக்க முயல்வது நண்மையானதே. இதில் சுமந்திரன் கேள்விகேட்க எதுவும் இல்லை, அந்தத் தகுதியை அவர் இழந்து பல வருடங்கள் ஆகின்றன.     
    • நேபாள் உட்பட 19 நாடுகள் இலங்கையை T20 தொடருக்கு அழைத்துள்ளார்களாம்.....
    • 🫢..... மாடுகளை காப்பாற்றினதுக்கு பொன்னாடை....ஆடுகளை காப்பாற்றினதுக்கு ஒரு துவாயும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்... இலங்கையில் அவரவர் வேலையை செய்தால் பொன்னாடை கிடைக்கும் தருணங்களும் உண்டு.... ருத்ர சேனை, நீங்கள் எங்கேயப்பா...
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.