Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
02 FEB, 2024 | 07:53 PM
image

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார். இதையடுத்து ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலத்தை வழங்குவதற்காகவே கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் (1)  குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (2) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் (1) உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று காலை ஆஜராகினார்.

இவ்வாறு இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175418

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கே அமைச்சருக்கு    காட்  அட்ராக் வந்து ஆசுப்பத்திரிக்கு போய்விடுவார்....

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, alvayan said:

இன்றைக்கே அமைச்சருக்கு    காட்  அட்ராக் வந்து ஆசுப்பத்திரிக்கு போய்விடுவார்....

அங்க வைத்து ஐயாவுக்கு பழுதான மருந்துகளை ஏற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

இன்றைக்கே அமைச்சருக்கு    காட்  அட்ராக் வந்து ஆசுப்பத்திரிக்கு போய்விடுவார்....

அப்படி எல்லாம் அவருக்குவாராது. அங்கு ராஜா மரியாதையுடன் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படும். இன்னும் அவரை சிறைக்கு அனுப்பவில்லை என்பதை தெரிவிப்பதுடன் மேலும் சில நடைமுறைகளில் அவர் பிணையிலும்வரலாம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Cruso said:

அப்படி எல்லாம் அவருக்குவாராது. அங்கு ராஜா மரியாதையுடன் வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படும். இன்னும் அவரை சிறைக்கு அனுப்பவில்லை என்பதை தெரிவிப்பதுடன் மேலும் சில நடைமுறைகளில் அவர் பிணையிலும்வரலாம்

அவுஸ்திரேலியாவில் யன்னல்லால் பாய்ந்த மாவீரன் அவரல்லோ...அவருக்கு இராசமரியாதை கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு ..விரைவில் 5 நட்சத்திர கோட்டல் பணியாளைகளுடன் ..ந்துபோன்ற் அறையில் விடப்படுவார்...அப்புறம் மர்ந்துச் சிட்டை, ஆபரேசன் ஏதும் செய்யாமலே...சுகப்பட்டு வெளியில் வருவார்...சிறைமீண்ட செம்மலுக்கு சனம் கொடுக்கும் ஆரவார வரவேற்பைப்பரர்த்து..சனாதிபதியே பொது மன்னிப்பு வழங்குவார்...இது தாண்டா சிரீலங்கா ஸ்டைலு..😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல

Published By: DIGITAL DESK 3   03 FEB, 2024 | 10:43 AM

image

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை  காலை குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கெஹலிய ரம்புக்வெல்ல வாக்கு மூலம் அளித்திருந்த நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைதுசெய்தனர்.

இந்நிலையிலேயே அவர் இன்று சனிக்கிழமை (03) காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/175433

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2024 at 20:32, alvayan said:

இன்றைக்கே அமைச்சருக்கு    காட்  அட்ராக் வந்து ஆசுப்பத்திரிக்கு போய்விடுவார்....

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில்!

03 FEB, 2024 | 05:36 PM
image

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிந்துரையின்பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/175486

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யும் புரட்டும் பேசி தமிழரின் பேச்சு வார்த்தையை குழப்பியவன் எம் கண் முன்னே அனுபவிப்பது ஆறுதல் தரும் விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, alvayan said:

அவுஸ்திரேலியாவில் யன்னல்லால் பாய்ந்த மாவீரன் அவரல்லோ...அவருக்கு இராசமரியாதை கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு ..விரைவில் 5 நட்சத்திர கோட்டல் பணியாளைகளுடன் ..ந்துபோன்ற் அறையில் விடப்படுவார்...அப்புறம் மர்ந்துச் சிட்டை, ஆபரேசன் ஏதும் செய்யாமலே...சுகப்பட்டு வெளியில் வருவார்...சிறைமீண்ட செம்மலுக்கு சனம் கொடுக்கும் ஆரவார வரவேற்பைப்பரர்த்து..சனாதிபதியே பொது மன்னிப்பு வழங்குவார்...இது தாண்டா சிரீலங்கா ஸ்டைலு..😁

அத்துடன் அவரது மின்சார கட்டணத்தையும் கட்ட மாட்டார்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

பொய்யும் புரட்டும் பேசி தமிழரின் பேச்சு வார்த்தையை குழப்பியவன் எம் கண் முன்னே அனுபவிப்பது ஆறுதல் தரும் விடயம். 

உண்மை. ராஜபக்சேக்களின் அழுக்குகளை எல்லாம் அந்த நாட்களில் நன்றாக சவர்க்காரம் போட்டு கழுவினார். இன்று அவருடைய அழுக்குகளை கழுவுவதட்கு யாருமே இல்லை. பாவம் மனுஷன். இதைத்தான் ஊழ் வினையென்பதோ? 

உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான். எப்படி இருந்தாலும் இந்த ஆளை உள்ளே தள்ளுவதட்கு போராடியவர்களை பாராட்ட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

🚨மருந்து மோசடி! | ஆவணங்கள் மாயம்! | அனல் பறந்த வழக்கு விசாரணை! 

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

 

🚨மருந்து மோசடி! | ஆவணங்கள் மாயம்! | அனல் பறந்த வழக்கு விசாரணை! 

 

மக்கள் சேவை  என்று வரும்பொழுது இப்படி எல்லாம் துன்பங்கள், அவமானங்களை சந்திக்கத்தான் வேண்டும். கெஹெலிய ரம்புகவெல்லா அவர்கள் எத்தனையோ வியாதிகள் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதட்காக அரசியலை தொடர்ந்தவர். அவுஸ்திரேலியாவில் கூட தனது நோய்க்காக எத்தனையோ நாட்கள் வைத்தியம் செய்தார். பாவம், அவரை போய் இப்படியான பொய் குற்றசாட்டுகள் சுமத்தி உள்ளே தள்ளியிருப்பது ஏற்க கூடியதல்ல. இப்போது வைத்தியசாலையில் இருந்து கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார். மக்கள் சேவை என்றால் எவ்வளவு கஷடம் பாருங்கள். 😜

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Cruso said:

மக்கள் சேவை  என்று வரும்பொழுது இப்படி எல்லாம் துன்பங்கள், அவமானங்களை சந்திக்கத்தான் வேண்டும். கெஹெலிய ரம்புகவெல்லா அவர்கள் எத்தனையோ வியாதிகள் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதட்காக அரசியலை தொடர்ந்தவர். அவுஸ்திரேலியாவில் கூட தனது நோய்க்காக எத்தனையோ நாட்கள் வைத்தியம் செய்தார். பாவம், அவரை போய் இப்படியான பொய் குற்றசாட்டுகள் சுமத்தி உள்ளே தள்ளியிருப்பது ஏற்க கூடியதல்ல. இப்போது வைத்தியசாலையில் இருந்து கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார். மக்கள் சேவை என்றால் எவ்வளவு கஷடம் பாருங்கள். 😜

ஓம்.விளங்கி விட்டது.😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கமறியல் கைதியான கெஹலிய ரம்புக்கலவுக்கு தினமும் வெளியிலிருந்து உணவு!

Published By: DIGITAL DESK 3   07 FEB, 2024 | 12:24 PM

image

மருந்து  மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு தினமும்  வெளியிலிருந்து உணவு வழங்கப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு   விசேட வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

மேலும், குறிப்பிட்ட மருந்துகள்  தொடர்பிலோ அல்லது அத்தகைய மருந்துகளுக்கான கோரிக்கைகளோ இதுவரை கிடைக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மருந்துகள் தொடர்பான அனைத்து முடிவுகளும் சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவரால் எடுக்கப்படுவதாகவும் ஆணையாளர் கூறுகிறார். 

முன்னாள் அமைச்சருக்கும் ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

https://www.virakesari.lk/article/175783

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று மீண்டும் நீதிமன்றுக்கு..

keliya-2.jpg

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அவரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கடந்த 2ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்

இதனையடுத்து அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

https://thinakkural.lk/article/291929

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்.. பழிக்கடா ஆகிட்டார். ஆனால் பங்கு போட்டுக் கொண்ட மிச்சப் பேர்.. எஸ்கேப். மகிந்த குடும்பம் உட்பட. ஏனெனில்.. அணிலார் அவையள்ள கை வைக்க விடமாட்டார். எல்லாம் ஒரு புரிந்துணர்வு தான். 😛

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட நிதியில் தரம் குறைந்த மருந்துகள் கொள்வனவு - நீதிமன்றில் தகவல்

Published By: RAJEEBAN  16 FEB, 2024 | 03:00 PM

image

ஒக்சிசன் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி  தரம்குறைந்த மருந்து கொள்வனவு செய்யப்பட்டமை  தெரியவந்துள்ளது.

ஒக்சிசன் கொள்வனவிற்காக வழங்கப்பட்ட 14.5 மில்லியன் ரூபாயினை தரம்குறைந்த இம்யுனோகுளோபுலின் ஊசியை கொள்வனவு செய்வதற்காக குறிப்பிட்ட விநியோகஸ்தரிடம் சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக பிரதிசொலிசிட்ட ஜெனரல் லக்மினி கிரிஹாகம மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சராக பணியாற்றியவேளை 8வது சந்தேகநபர்  மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் சுகாதாரதுறை வீழ்ச்சியடையும் என தெரிவித்து  அவசர அவசரமாக மருந்துகளை கொண்டுவருவதற்காக சில கட்டுப்பாடுகளை ஏன் தளர்த்தினார் என்பது குறித்து விசாரணைகளை சிஐடியினர் முன்னெடுத்துள்ளனர் எனவும் பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்துக்களுடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் கையெழுத்துக்கள் பொருந்துகின்றனவா என ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/176540

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட 7 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

Published By: VISHNU    29 FEB, 2024 | 08:22 PM

image

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் 5 பேரை எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் இவர்கள் இன்று (29) நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/177628

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி விடயத்தில் நாட்டு மக்களுக்குப் பொய்யுரைத்த கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போது நீதிமன்றத்தையும் ஏமாற்ற முனைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாத அளவுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை எனவும், சிறைச்சாலை வைத்தியசாலையினால் பொய்யான மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பான விசாரணைகளின் பிரகாரம், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் 02ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய | Keheliya Tried To Cheat The Court

அதனையடுத்து. பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி மாளிகாகந்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹெலியவை, பெப்ரவரி 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் சுகவீனமடைந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி 14 அன்று கெஹெலியவுக்கு எதிரான வழக்கு மாளிகாகந்தை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை.நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத கடுமையான நோயினால் கெஹெலிய பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நேரம், கெஹெலிய ரம்புக்வெல்ல இரவு நேரங்களில் சுவாசிப்பதற்கே சிரமப்பமடுவதாகவும், செயற்கை சுவாசம் அளிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கும் மேலதிகமாக பல்வேறு கடுமையாக வியாதிகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற உத்தரவிடுமாறு கெஹெலியவின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அம்பலமான தகவல்

கெஹெலியவின் நோய்கள் தொடர்பில் சிகிச்சை அளிப்பதற்குப் போதுமான வசதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் சிறைச்சாலை மருத்துவமனையின் மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயவும், அவரை தேசிய மருத்துவமனைக்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்து ஆராயவும் நீதிமன்ற உத்தரவின் பேரில், சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்ற கெஹெலிய | Keheliya Tried To Cheat The Court

தற்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையான நோய் எதுவும் இல்லை என்பது நிபுணர்குழுவின் அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கெஹெலியவை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

நேற்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கெஹெலிய ரம்புக்வெல்லவும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

அதனையடுத்து நீதிமன்றத்தில் போலி மருத்துவ அறிக்கை சமர்ப்பித்த சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம கோரிக்கை விடுத்த போதும், நீதிமன்றம் அதற்கு இணங்கவில்லை.

சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவர்களால் சமர்ப்பிக்கப்படும் மருத்துவ அறிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதவான் லோசனா அபேவிக்கிரம அறிவுறுத்தியுள்ளார்.

https://tamilwin.com/article/keheliya-tried-to-cheat-the-court-1709282665

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் - வாங்கல் : ஆரம்பகட்ட விசாரணைகள் 14 நாட்களுக்குள் நிறைவடைய வேண்டும் : மாளிகாகந்த நீதவான் அதிகாரிகளுக்கு உத்தரவு

01 MAR, 2024 | 07:10 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பெப்ரவரி 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் இருக்கும் அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என உடல்நலக்குறைவு தொடர்பில் பரிசீலனை மேற்கொண்ட 9 பேர் அடங்கிய வைத்தியக் குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறும், மேலும் இந்த மருந்து கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கின் 8ஆவது சந்தேக நபரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,  உடல் நலம் தொடர்பில் பொய்யான காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு, கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாவதை அவர் தவிர்த்திருப்பதாக வாதங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அவரது உடல்நலக்குறைவு தொடர்பில் நீதிமன்றத்துக்கு போலியான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியர்  தொடர்பில் கட்டளையை பிறப்பிக்குமாறும் குறிப்பிட்டார்.

தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்து கொள்வனவு விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (29) மாளிகாகந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபயவிக்கிரம முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, “எனது சேவை பெறுநர் நின்று கொண்டிருக்க முடியாத அளவுக்கு இருக்கிறார். அவர் ஆசனத்தில் அமர்வதற்கு அனுமதியளியுங்கள்" என கோரிக்கை விடுத்திருந்தார். 

இதற்கு பதிலளித்த நீதவான் “நின்றுகொண்டிருக்க முடியாத எந்த சந்தேக நபரும் குற்றவாளிக் கூண்டில் அமர முடியும்” என குறிப்பிட்டார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் இருந்த காரணிகளாக குறிப்பிடப்பட்ட உடல்நலக்குறைவு தொடர்பில் பரிசீலனையை மேற்கொண்ட 9 பேர் அடங்கிய வைத்திய குழுவின் அறிக்கையை அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம திறந்த மன்றில் முன்வைத்தார்.

".....கனம் நீதவான் அவர்களே, இதுவரையில் எனது கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள விசேட வைத்திய அறிக்கையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் இருக்கும் அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்படவில்லை என மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு மூச்சு விடுவதற்கும்,  மார்பின் வலது புறத்தில் வருத்தம் காணப்பட்ட போதிலும், அது நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கவில்லை என நியமிக்கப்பட்ட விசேட வைத்திய குழு குறிப்பிட்டுள்ளது."

அத்துடன் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“சந்தேக நபரை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றத்துக்கு பொய்யான தகவல்களை முன்வைத்த சிறைச்சாலை வைத்தியருக்கு உரிய கட்டளை பிறப்பிக்குமாறு உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”

இதற்கு பதிலளித்த நீதவான், இதுபோன்ற வழக்குகளில் ஏனைய சந்தேக நபர்களை போன்று அறிக்கை வழங்கக் கூடாது என சிறைச்சாலை வைத்தியர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், இவ்வாறான அறிக்கை நீதிபதிகளின் தீர்மானங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். 

எனவே, சட்டமா அதிபர் தலையிட்டு வைத்திய சபையுடன் ஒன்றிணைந்து சிறைச்சாலை வைத்தியர் நீதிமன்றத்துக்கு உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்கும் வகையில் தயார்ப்படுத்த வேண்டும்' என குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த சர்ச்சைக்குரிய மருந்து கொள்வனவு விவகாரத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் தலையீடு எவ்வாறு இருந்தது என நீதவான் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரியாகம ...கனம் நீதவான் அவர்களே “முன்னாள் சுகாதார அமைச்சரால் போலியான முறையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்தை வைத்தியர் சமன் ரத்நாயக்கவின் கீழ் உள்ள மருத்துவ உற்பத்தி மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல் பிரிவே தயார்ப்படுத்தி இருக்கிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பில் மேலதிக வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ள சி.ஐ.டிக்கு முன்னிலையாகுமாறு அவரது நிரந்தர முகவரிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தோம். அதனை அவரது மனைவி பொறுப்பேற்றுக்கொண்டார்.

எவ்வாறாயினும், அவரது தொலைபேசி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தற்காலிகமாக வசிப்பதாக அதிகாரிகளுக்கு குறிப்பிட்டுள்ள முகவரியும் போலியானது.

இவ்வாறான நிலையில் அவர் நேற்றுமுன்தினம் பகல் விசாரணை அதிகாரிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டு நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளதாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பியிருக்கிறார்.

மேலும் வனாத்துவில் பகுதியில் இருப்பதாகவும் பிறிதொரு நாளில் வருகை தந்து வாக்குமூலம் வழங்குவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டபோது இரண்டு நாட்கள் விடுமுறை எனக் கூறிய போதிலும் அவர் காரியாலயத்தில் கடமையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. ஆகவே இந்த காரணங்களை ஆராய்ந்து நாளை காலை 9 மணிக்கு சி.ஐ.டி.,க்கு ஆஜராகுமாறு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்”

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான் நபர் ஒருவர் விசாரணைகளை தவிர்ப்பாராயின்  அதற்குரிய விடயதானங்களுக்கு அமைய உரிய  அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுங்கள் என்றார்.

சர்ச்சைக்குரிய இந்த மருந்து கொள்வனவு மற்றும் விநியோகப் பிரிவின் உறுப்பினராக செயற்பட்ட வைத்தியர் ஜெயனாத் புத்திக்க,  விசாரணைகளை புறக்கணித்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் சந்தேக நபருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்து அவரை  நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அரச சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதவான் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பித்தார்.

இந்நிலையில், விடயங்களை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளையும் அனைத்தையும் நிறைவு செய்யுமாறும் மேலும் இந்த மருந்து கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏனைய  சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 பேரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிபதி லோசினி அபேவிக்கிரம உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/177699

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கைது

Published By: VISHNU   01 MAR, 2024 | 09:58 PM

image
 

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக வைத்தியர் சமன் ரத்நாயக்க வெள்ளிக்கிழமை (01) பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார்.

சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/177712

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் ஏ.டி சுதர்ஷன கைது!

arr-300x200.jpg

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.டி சுதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் நேற்றிரவு வருகைத் தந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக வழக்கு இன்று மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/295681

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய உட்பட்டோருக்கு வழக்கு விசாரணைகள் முடியும்வரை விளக்கமறியல்!

14 MAR, 2024 | 03:46 PM
image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும்  நால்வருக்கு எதிரான தடுப்பூசி விவகார வழக்கு நிறைவடையும் வரை அவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் இன்று (14) மறுத்துள்ளது.

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமே பிணைக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளது.

இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி போட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்சன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதிப் பணிப்பாளர் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட  நீண்ட விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/178726

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை!

19 MAR, 2024 | 11:08 AM
image
 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/179097

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

keheliya-rambukwella-300x200.jpg

தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/297480

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.