Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
On 8/2/2024 at 09:44, நிழலி said:

ஈரான் வெறும் வாய் சவடால் அடிக்காத தான் சரி. இஸ்ரேல் காசா நோக்கி படையெடுத்தால் தாம் சும்மா இருக்கப் போவதில்லை என்று முதலில் சூளுரைத்தனர். இஸ்ரேல் படையெடுப்புத் தொடங்கி மூன்று மாதம் முடியப் போகுது, ஆனால் ஈரான் பம்மிக் கொண்ஂடு இருக்கின்றது.

அதே போல், சிரியா / ஈராக்கில் உள்ள தன் சார்பு அமைப்புகள் மீது தாக்குதல் தொடுத்தால், சும்மா இருக்க மாட்டேன் என்றது. ஆனால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் , "இந்தா அடிக்கப் போறம்" என்று கால அவகாசம் கொடுத்து தாக்குதல் செய்யும் போதும், அடியை வாங்கிக் கொண்டு இருக்கின்றது.

முழுதாக என்று சொல்லிட முடியாது...

காசாவுக்குள் எப்படியோ ஈரானிய ஆதரவு உடைய சிரியாவைத் தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் வீரர்கள் உள்நுழைந்து போரிட்டுக்கொண்டிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. 

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kapithan said:

எனது கருத்தைக் கூறும்போது அதற்குப் பைத்தியம் எனப் பூடகமாகக் கூறுவது பொருத்தமற்ற செயல். 

 

On 9/2/2024 at 12:27, Kapithan said:

ஊரில் இருந்த ஆண்டான் அடிமை முறையில்தான் அடிமை வாய் பொத்தி ஆண்டானுக்கு சேவகம் செய்தது. தாங்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை போலத் தெரிகிறது. 

இப்பொழுதெல்லாம் வலியை உணர்த்த அதே தடியை தான் எடுக்க வைக்கிறார்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரது போராட்டத்தின் நியாயமும், அவர்கள் மேல் நடத்தப்பட்ட அட்டூழியங்களையும் அறிந்திராத அற்பர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் எதையும் எழுதலாம். இப்பதர்களிடமிருந்து நான் எதிர்ப்பார்ப்பதற்கு எதுவும் இல்லை. தாம் எழுதுவதைத் தாமே வாசித்து இன்புறலாம், வாழ்த்துக்கள்!

  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

 

இப்பொழுதெல்லாம் வலியை உணர்த்த அதே தடியை தான் எடுக்க வைக்கிறார்கள். 

பைத்தியம் என்று கூறியதும், எங்களுக்கு அபயம் தந்த காரணத்தால் நீதியற்ற செயல்களையும் கைகட்டி வாய் பொத்தி ஏற்க வேண்டும் என்று கூறியதும் தாங்களே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

பைத்தியம் என்று கூறியதும், எங்களுக்கு அபயம் தந்த காரணத்தால் நீதியற்ற செயல்களையும் கைகட்டி வாய் பொத்தி ஏற்க வேண்டும் என்று கூறியதும் தாங்களே. 

நான் சொல்ல வருவது வேறு. நீங்கள் புரிந்து கொள்வது வேறு.

வாய் பொத்தி எல்லாவற்றையும் ஏற்கவேண்டும் என்று ஒருபோதும் சொன்னதில்லை.

எமக்கு தேவையான அளவு தேவையான விடயங்களை இவர்களிடம் பெற நாம் தேவையற்ற விடயங்களை தவிர்க்க வேண்டும் என்பது எனது அனுபவத்தில் இருந்து வந்த பாடம்.

பிரான்சில் வாய் பொத்தி எல்லாவற்றையும் ஏற்பவனாக இருந்தால் நான் புலிகளின் ஆதரவானாக புலிகளுக்கு உதவுபவனாக எப்படி????

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/2/2024 at 05:33, நன்னிச் சோழன் said:

முழுதாக என்று சொல்லிட முடியாது...

காசாவுக்குள் எப்படியோ ஈரானிய ஆதரவு உடைய சிரியாவைத் தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் வீரர்கள் உள்நுழைந்து போரிட்டுக்கொண்டிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. 

இவர்கள் இப்போது நுழைந்திருக்க சந்தர்ப்பமில்லை. எப்படி இருந்தாலும் இந்த பயங்கரவாதிகள் எல்லோரும் முற்றாக அழிக்கப்படுவார்கள். அது மட்டும் நிச்சயம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/2/2024 at 06:40, நிழலி said:

அந்த தொட்டிலில் தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் நிம்மதியாக வள்ர்கின்றார்கள்.

அந்த தொட்டிலை உங்கள் சுயமுயற்சியால் உருவாக்கவேண்டும். காலா காலமாக பாவப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளை சுரண்டி தொட்டிலை உருவாக்கிவிட்டு இப்போ மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். அதற்கும் செம்புதூக்க ஒரு கூட்டம் . விளங்கீடும் !!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Eppothum Thamizhan said:

அந்த தொட்டிலை உங்கள் சுயமுயற்சியால் உருவாக்கவேண்டும். காலா காலமாக பாவப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளை சுரண்டி தொட்டிலை உருவாக்கிவிட்டு இப்போ மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள். அதற்கும் செம்புதூக்க ஒரு கூட்டம் . விளங்கீடும் !!

ஐரோப்பாவின் அறிவியல், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கும், ஆசிய, அமெரிக்க கண்டத்தின் மீதான அவர்களின் ஆக்கிரமிப்பிற்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகச் சொல்ல முடியாது. ஐரோப்பியர்கள் கீழை நாடுகளின் வளங்களைக் கண்டு கொண்டதும் அவற்றை வியாபாரமாக்கியதும் உழைத்ததும் உண்மை, ஆனால் கீழைத்தேய நாடுகளில் எடுத்த  வளங்களால் தான் இன்று ஐரோப்பா அல்லது வெள்ளையர்கள் வளமாக இருக்கிறார்கள் என்பது மிகையான கருத்து - தற்காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில்  தேச பக்தியை வைத்து மக்களைத் திரட்ட முனையும் போலி வரலாற்று ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புத் தான் இந்த வியாக்கியானம் என நினைக்கிறேன்.   

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Justin said:

ஐரோப்பாவின் அறிவியல், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கும், ஆசிய, அமெரிக்க கண்டத்தின் மீதான அவர்களின் ஆக்கிரமிப்பிற்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகச் சொல்ல முடியாது. ஐரோப்பியர்கள் கீழை நாடுகளின் வளங்களைக் கண்டு கொண்டதும் அவற்றை வியாபாரமாக்கியதும் உழைத்ததும் உண்மை, ஆனால் கீழைத்தேய நாடுகளில் எடுத்த  வளங்களால் தான் இன்று ஐரோப்பா அல்லது வெள்ளையர்கள் வளமாக இருக்கிறார்கள் என்பது மிகையான கருத்து - தற்காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில்  தேச பக்தியை வைத்து மக்களைத் திரட்ட முனையும் போலி வரலாற்று ஆய்வாளர்களின் கண்டு பிடிப்புத் தான் இந்த வியாக்கியானம் என நினைக்கிறேன்.   

அவர்கள் தலைக்குள் உள்ளதை சரியாக பாவித்தார்கள். இவர்களுக்கு தலைக்குள் இருந்தாலும் எப்படி பாவிப்பதென்று தெரியவில்லை. அதுதான் முக்கிய காரணம். மற்றப்படி மேட்கு நாடுகளை குற்றம் சாடட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Cruso said:

இவர்களுக்கு தலைக்குள் இருந்தாலும் எப்படி பாவிப்பதென்று தெரியவில்லை. அதுதான் முக்கிய காரணம்

அந்த தலைக்குள் இருப்பதை பாவித்து விண்ணப்பித்தோ, எப்படியோ தங்களுக்கு பாதுகாப்பானது எல்லா சிறப்புக்களும் கொண்டது என்று மேற்குலக தொட்டிலில் குடியேற தெரிகிறது.

5 hours ago, Cruso said:

மற்றப்படி மேட்கு நாடுகளை குற்றம் சாடட முடியாது

மிகச்சரி.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
    • போர்க்ளத்துக்கும் ஊர் சண்டியர்களின் கொள்ளுபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஊடகம்கள் எங்கள் இனத்தின் சாபகேடு . கிட்ட தட்ட தமிழ் அரசியல் குரங்கு கூட்டம் பங்கு பிரிக்க வெளிக்கிட்ட கதை தான் . குறைந்தது நாலு கொலையாவது நடந்து இருந்தால் தமிழ்சனம் சந்தோசபட்டு இருக்கும் .
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.