Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

சிறப்பாக எழுதி உள்ளீர்கள்   நன்றி    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 பொறுமையாக உங்கள் மன ஒடடத்தை  உடனுக்குடன் கள  உறவுகளுடன் பகிர்ந்தமைக்கு நனறி. உங்கள் மனச்சுமை சற்று இறங்கியிருக்கும். வாசிக்கும் போது இறுதிக் கட்ட்த்தை நெருங்க கண்கள் அந்த ஒரு இதயத்துக்காக பனித்தன.  
palliative care  இந்த   சொல்லை சில வருடங்களுக்கு முன் தான் அறிந்தேன். பலியாக போகும் களமா என்று எண்ணத்தோன்றியது .மரணம் கொடிது ..எல்லோரும் சந்திக்க வேண்டிய ஒன்று. யார் தடுத்தாலும்   அழுதுபுலம்பினாலும்  வந்தே  தீரும். இளம் வயது பாவம் .அவனைப்பற்றிய  உங்கள் ஆரம்ப கால  மன நிலையை மாற்றிய பதிவு. அவனுக்காக பிராத்தியுங்கள் அதிகம் யோசிக்காதீர்கள். உங்கள் நலனைப்பார்த்துக் கொள்ளுங்கள். கள  உறவுகளின் அஞ்சலி அவரை சேரும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி ரஞ்சித் அண்ணை.

இயற்கையின் விடை காணமுடியாத கேள்விகளில் மனம் தொலைகிறது.

உங்கள் பதிவும் ஒவ்வொருவருக்கும் பாடமாகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான. ஒருவருடன் கூடவே பயணித்திருக்கிறீர்கள் என்று வாழ்நாளில் சந்தோசப்படுங்கள்.

ஒரு விளையாட்டு வீரன் மிகவும் பரந்த மனப்பான்கும் எல்லோருடனும் சேர்ந்து பழகும் தன்மையும் வெற்றி தோல்விகளை தாங்கக் கூடியவனாகவும் இருப்பார்கள் என்பதை உங்கள் நண்பன் நிரூபித்துள்ளான்.

அதேநேரம் விளையாட்டு வீரர்கள் பலர் சிறிய வயதில் ஆங்காங்கே அடிபட்ட பழைய காயங்களால் இளமையிலோ முதுமையிலோ இப்படியாக சுகவீனமடைகிறார்கள்.

உங்களுடன் எங்களையும் சேர்த்து வேலைத் தளத்திலிருந்து கடைசி ஊர்வலம்வரை அழைத்து சென்றுவிட்டீர்கள்.

   HATS OFF.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுடன் பயணம் செய்த சக தொழிலாழனை நண்பனாக ஏற்று அவரை எங்களுக்கு அறிமுகமாக்கி உருவகம் கொடுத்து  இறுதியில் எம்மையும் அவருக்காகப் வேண்டுதல் செய்ய வைத்துவிட்டீர்கள் அவரது ஆன்மா வீடுபேறடைய மனமார வேண்டுகிறேன். 

யாரோ கண்காணாத ஒருவருக்காக மனங்கலங்கினால் அங்கு மனிதம் வெல்கின்றது என அர்த்தப்படும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ரஞ்சித் said:

அவன் வாழ்ந்தது வெறும் 44 வருடங்கள் மட்டும்தான். ஆனால், வாழ்ந்தால் இப்படி வாழுங்கள் என்று எமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்

‘’எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்

என்பது கேள்வியில்லை

அவன் எப்படி வாழ்ந்தான்

என்பதை உணர்ந்தால்

வாழ்க்கையில் தோல்வியில்லை..”

இந்த சினிமா பாட்டு நினைவுக்கு வந்தது

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பதிவில் கருத்துப் பகிர்ந்து, உணர்வுகளை இங்கு வெளிக்காட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

எனது இனத்தில் லட்சக்கணக்கானோரை இழந்திருக்கிறோம். ஆனால், அவர்களது இறப்பில் வராத துயர‌ம் ஒரு வேற்றினத்தவன் இறக்கும்போது வருவது எப்படிச் சாத்தியம் என்று பலர் இதனைக் கருதலாம் என்கிற தயக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. 

உண்மையென்னவென்றால், எனது இனம் அழிக்கப்பட்ட வலி எனக்கு எப்போதும் அப்படியே இருக்கும். அது  மறையாது. அதற்கான வடிகால்கள் தேடித்தான் இன்றுவரை இனம் சார்ந்தும், போராட்டம் சார்ந்தும் எதையாவது எழுதவேண்டும் என்று மனம் விரும்புகிறது. நாம் நடந்து வந்த பாதைகளில் எம்மைப் பாதித்த ஒரு சில வேற்றினத்தவர்களையும் நாம் சந்தித்திருப்போம். அவர்களில் ஒருவன் தான் இவனும். அவன் குறித்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த தப்பபிப்பிராயமும் இதனை எழுத என்னைத் தூண்டியிருக்கலாம். 

மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள் !

  • Like 3
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஞ்சித்துடன் வேலை செய்தவர் இள வயதில் குணப்படுத்தமுடியாத நோயால் இறந்தது மிகவும் கவலையானது. அவர் தொழில் நுணுக்கங்களை துரிதமாகக் கற்று முன்னுக்கு வந்து, எல்லோருடனும் நட்பாக பழகி, அவர்களின் அன்பைப் பெற்றதையும், அவரின் துயரமான இறுதி நிகழ்வையும் கண்முன்னே கொண்டுவந்த ரஞ்சித்துக்கு நன்றி.

  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.