Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
18 FEB, 2024 | 10:28 AM
image

மொரேனா:

மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணின் வீட்டுக்கு சமரசம் பேசுவதற்காக சென்றிருக்கிறார்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்த மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்ட மூன்று ஆண்களும் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண் மீது எரிபொருளை ஊற்றி எரித்துள்ளனர். மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சந்த்கா புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

தற்போது பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது தொடர்பான வீடியோ ஒன்றை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/176651

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் மனவருத்தமான விடயம். குற்றவாளிகள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் தண்டிக்க படணும். 

இந்த பெண்ணும் பழிவாங்கும் நிலையில் இருந்த அந்த குடும்பத்தை தனிமையில் சென்று சந்தித்ததை தவிர்த்திருக்கலாம் 😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா என்றொரு நாடு இருக்கக் கூடாது என்பதற்கு இந்த்ச் சம்பவம்  இன்னொரு சாட்சி.

😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

மிகவும் மனவருத்தமான விடயம். குற்றவாளிகள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் தண்டிக்க படணும். 

இந்த பெண்ணும் பழிவாங்கும் நிலையில் இருந்த அந்த குடும்பத்தை தனிமையில் சென்று சந்தித்ததை தவிர்த்திருக்கலாம் 😭

 

2 hours ago, Kapithan said:

இந்தியா என்றொரு நாடு இருக்கக் கூடாது என்பதற்கு இந்த்ச் சம்பவம்  இன்னொரு சாட்சி.

😏

வட இந்திய தென்னிந்திய வித்தியாசங்களை அறிந்து கொண்டால் இப்படி நோக வேண்டி யது  இல்லை .

நேரமிருக்கும் போது இந்த டியுப்பர் சொல்வதை பாருங்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

மிகவும் மனவருத்தமான விடயம். குற்றவாளிகள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் தண்டிக்க படணும். 

இந்த பெண்ணும் பழிவாங்கும் நிலையில் இருந்த அந்த குடும்பத்தை தனிமையில் சென்று சந்தித்ததை தவிர்த்திருக்கலாம் 😭

இதை தான் காலம் காலமாச் சொல்லிக் கொண்டிருக்கினம்.

சட்டத்தை அமுலாக்குபவனும் சட்டத்தை மதிப்பவனும் உருவாகினாலும்.. மனிதத்தை இனங்காணாத மிருகங்களாக மனித உருவில் மிருகங்கள் உலாவரத்தக்க சூழ்நிலைகள் களையப்படாமல்.. இவற்றைக் கட்டுப்படுத்துவது இலகு அல்ல. 

அனுமதியின்றி.. ஒரு பெண்ணை தொட்டால் கடுமையான தண்டனை என்ற மத்திய கிழக்கு நடைமுறைகள் வராமல்.. ஹிந்தியாவில்.. தெற்காசியாவில்.. பெண்களுக்கான பாலியல் பாதுகாப்பு என்பது பலவீனமாகவே இருக்கும். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாட்டில் பிஜேபி வந்தால் இதைவிட கேவலமாக நடக்கும் .



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.