Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமது கவலையை தெரிவித்துள்ளனர்.

ஒரு இலட்சம் ரூபா கூட தற்போதைய காலத்தில் போதவில்லை. வீட்டு வாடகை, நீர் கட்டணம், மின் கட்டணம், உணவு, பிள்ளைகளின் படிப்பு என எதனையுமே சமாளிக்க முடியவில்லை என கூறியுள்ளனர். 

https://tamilwin.com/article/electricity-bill-today-in-sri-lanka-1709122250

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்மையில் பாடசாலை அதிபர் பழைய மாணவர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்...மின் கட்டணம் செலுத்த பணம் தருமாறும் அல்லது சொலார் பனல் போட்டு தருமாறு கேட்டிருந்தார்....மின்சாரம் இன்றி முன்னுக்கு வந்த சந்ததியினர் என்பதை மறந்து விட்டனர் அதிபர்களும் ....மாணவர்களு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, putthan said:

அண்மையில் பாடசாலை அதிபர் பழைய மாணவர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்...மின் கட்டணம் செலுத்த பணம் தருமாறும் அல்லது சொலார் பனல் போட்டு தருமாறு கேட்டிருந்தார்....மின்சாரம் இன்றி முன்னுக்கு வந்த சந்ததியினர் என்பதை மறந்து விட்டனர் அதிபர்களும் ....மாணவர்களு

அதாவது மண் எண்ணெய் விளக்கு வைத்து படிக்க வேண்டும், மின்சாரமில்லாமல் பாடசாலை நடத்த வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?

நீங்கள் வெளி நாட்டில் வசதியாக வாழ்கிறீர்கள், பழைய மாணவர் என்ற ரீதியில் கேட்டிருக்கிறார். உங்கள் பதில் அதை ஏளனப்படுத்துவது போல இருக்கின்றது.

இப்படி ஒரு பதிலை கூறித்தான் அனமயில் மின்சார சபையின் பொறியியலாளர் ஒருவர் துண்டை காணோம் துணியை காணோம் என்று வேலையை விட்டு ஓடி போனார்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Cruso said:

நீங்கள் வெளி நாட்டில் வசதியாக வாழ்கிறீர்க

நீங்களும் வந்து வாழலாம்”  யார் மறிப்பது???. வசதியாக வாழ்கிறார்கள் என்று எப்படி தெரியும்?? இங்கேயும் ஆயிரம் பிரச்னைகள் உண்டு”  இரண்டு வேலை செய்து  கணவன்  மனைவி இருவரும் வேலை செய்து தான் வாழ்கிறார்கள் 

19 minutes ago, Cruso said:

அதாவது மண் எண்ணெய் விளக்கு வைத்து படிக்க வேண்டும்,

அது உங்கள் விருப்பம்    நாங்கள் மெழுகுதிரி பாவிக்கிறோம். ஏனெனில் மின்சார கட்டணம் மிக அதிகம்   வருமானம் குறைவு   யாரை கேட்க முடியும் பணம் அனுப்புமாறு?? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kandiah57 said:

நீங்களும் வந்து வாழலாம்”  யார் மறிப்பது???. வசதியாக வாழ்கிறார்கள் என்று எப்படி தெரியும்?? இங்கேயும் ஆயிரம் பிரச்னைகள் உண்டு”  இரண்டு வேலை செய்து  கணவன்  மனைவி இருவரும் வேலை செய்து தான் வாழ்கிறார்கள் 

அது உங்கள் விருப்பம்    நாங்கள் மெழுகுதிரி பாவிக்கிறோம். ஏனெனில் மின்சார கட்டணம் மிக அதிகம்   வருமானம் குறைவு   யாரை கேட்க முடியும் பணம் அனுப்புமாறு?? 

எப்படி  இருந்தாலும் இங்கு வாழ்வதை விட வசதியாக வாழ்கிறீர்கள் இல்லையா? இல்லாவிட்ட்தால் அங்கு சென்றிருக்க மாடீர்கள். அல்லது வேறு காரணங்களுக்காக சென்ரீர்களோ தெரியாது.

உங்கள் நாடடைவிட இங்கு மின் கடடணம் அதிகம்.

விளக்குவைத்தோ, மெழுகுதிரி வைத்தோ படிப்பது பிரச்சினை இல்லை. அவர் அந்த நாடகளில் படித்ததை பற்றி கூறினார். அதைத்தான் எழுதினேன். மடற்ப்படி உங்கள்  கருத்து அதனுடன் ஒத்துப்போக வில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, Cruso said:

எப்படி  இருந்தாலும் இங்கு வாழ்வதை விட வசதியாக வாழ்கிறீர்கள் இல்லையா?

இது தேவையற்ற கருத்துகள்  இந்த திரியில்,......நான் பல நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பற்றி அறிந்து உள்ளேன்   கோடிஸ்வராக. இருக்கும் எத்தனையோ பேர்  தங்கள் உடன்பிறப்புகள் பிச்சை எடுக்கும் போதும்  கண்டு கொள்வது இல்லை      எனவே… இலங்கையில் உள்ள மின்சார பிரச்சனை அங்கு வாழும் மக்களின் பிரச்சனை ஆகும்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kandiah57 said:

இது தேவையற்ற கருத்துகள்  இந்த திரியில்,......நான் பல நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பற்றி அறிந்து உள்ளேன்   கோடிஸ்வராக. இருக்கும் எத்தனையோ பேர்  தங்கள் உடன்பிறப்புகள் பிச்சை எடுக்கும் போதும்  கண்டு கொள்வது இல்லை      எனவே… இலங்கையில் உள்ள மின்சார பிரச்சனை அங்கு வாழும் மக்களின் பிரச்சனை ஆகும்   

நிச்சயமாக. இந்த மின்சார பிரச்சினை இலங்கை மக்களின் பிரச்சினை. அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

நான் எழுதிய கருத்தை ஆரம்பத்தில் இருந்து பாருங்கள் எதட்கு, யாருக்கு  எழுதினேன் என்று. உங்களுக்கு தேவை  இல்லாத கருதாகஇருக்கலாம். எனவே அதட்கு நீங்கள் பதில் அளித்திருக்க தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, Cruso said:

எனக்கு இல்லை உங்களுக்கு தான் தேவையற்ற கருத்து    வசதியாக இருக்கிறீர்கள் என்பது கருத்த??. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kandiah57 said:

எனக்கு இல்லை உங்களுக்கு தான் தேவையற்ற கருத்து    வசதியாக இருக்கிறீர்கள் என்பது கருத்த??. 

எதோ ஒரு மூலையில் தொங்கிக்கொண்டு கருத்து எழுதும் உங்களுக்கு வேறென்ன வேலை. sorry.com

  • Downvote 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Cruso said:

அதாவது மண் எண்ணெய் விளக்கு வைத்து படிக்க வேண்டும், மின்சாரமில்லாமல் பாடசாலை நடத்த வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?

நீங்கள் வெளி நாட்டில் வசதியாக வாழ்கிறீர்கள், பழைய மாணவர் என்ற ரீதியில் கேட்டிருக்கிறார். உங்கள் பதில் அதை ஏளனப்படுத்துவது போல இருக்கின்றது.

இப்படி ஒரு பதிலை கூறித்தான் அனமயில் மின்சார சபையின் பொறியியலாளர் ஒருவர் துண்டை காணோம் துணியை காணோம் என்று வேலையை விட்டு ஓடி போனார்.  

எதற்கு எடுத்தாலும் புல்ம்பெயர் தமிழர்களினால் பிரச்சனை என கூறுபவர்கள இதற்கு மட்டும் ஏன் எம் பணம் ?
பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என அறிவித்து விழா எடுக்கும் உங்கள் ஆடட்சியாள்ர்கள் ஏன் இப்படியான உதவிகளுக்கு எம்மிடம் பணம் கேட்பான்?
மின்சார சபை ஊழியரின் கருத்துக்கும் ..பணத்தை கொடுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு கண்டிய்ளோ..
மின்சாரசபை ஊழியர் அவர்களிடம் சம்பளம் வாங்கி அவர்களுக்கு எதிராக கருத்து சொன்னாவ்ர் 
நான் அவர்களிடம் சம்பளம் வாங்குபவன் அல்ல ...எங்களிடம் பணம்  கேட்டால் அது பற்றி நாங்கள் சிந்தைத்து தான் கொடுக்க வேணும்....
ஆயிரம் காற்றாடிகள் பூனகரியில் சுற்றுகின்றது...எங்கே அந்த மின்சாரம் போகின்றது.

அவர் ஒடலாம் ஆனால் நான் ஒட் வேண்டிய அவசியமில்லை ..

5 hours ago, Cruso said:

அதாவது மண் எண்ணெய் விளக்கு வைத்து படிக்க வேண்டும், மின்சாரமில்லாமல் பாடசாலை நடத்த வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?

வசதி இல்லை என்றால் அதை சொந்தமாக அடைய முய்ற்சி செய்ய வேண்டும் ..பாடசாலைகளில் அதிபர்களின் அறைக்கு ,மற்றும் ஆசிரியர்களின் வகுப்பறைகள் போண்ர்வற்றெளக்கு குளிஎசாதன் பெட்டிகள்,எயர்கொண்டிசன்  போன்றவற்றை போடுவதை நிறுத்தலாம், பக்ல் நேரத்தில் தான் பாடசாலி நடை பெறுகிறது ...ஆகவே மின்சாரம் வேறு உபகரண்ங்களுக்கு பாவிக்கப்படுகிறது ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Cruso said:

எதோ ஒரு மூலையில் தொங்கிக்கொண்டு கருத்து எழுதும் உங்களுக்கு வேறென்ன வேலை. sorry.com

இல்லை மூலையில் தொங்கவில்லை   ஊர் வாசிகசாலையில்   மேசையில் இரண்டு காலையும். போட்டு கொண்டு  வெளிநாட்டில் வாழும் ஊராவன். ஒவ்வொருவரும் என்ன மாதிரி வாழ்கிறார்கள் என்று வம்பு அளக்கிறேன்.   வேறு என்ன வேலை  ??  நான் ஒரு சோம்பேறியாகக்கும். என்னுடன் படித்தவை எல்லாம் வசதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள்    என்ன செய்வது என்று தெரியவில்லை   எப்படி இவன்கள் மட்டும் இப்படி வாழ்கிறார்கள்??  நாம்மால் ஏன் முடியவில்லை என்று கடந்த 20 வருடங்களாக யோசிக்கிறேன்   ஒரு அறுப்பும் விளங்கவில்லை    

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Kandiah57 அண்ணை , ஊரில உள்ள சிலர் வெளிநாட்டுகளிட்ட சிறீலங்காவே பிச்சை எடுப்பது தெரியாமல் வாழ்கிறார்கள்.

  • Haha 3
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kandiah57 said:

இல்லை மூலையில் தொங்கவில்லை   ஊர் வாசிகசாலையில்   மேசையில் இரண்டு காலையும். போட்டு கொண்டு  வெளிநாட்டில் வாழும் ஊராவன். ஒவ்வொருவரும் என்ன மாதிரி வாழ்கிறார்கள் என்று வம்பு அளக்கிறேன்.   வேறு என்ன வேலை  ??  நான் ஒரு சோம்பேறியாகக்கும். என்னுடன் படித்தவை எல்லாம் வசதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள்    என்ன செய்வது என்று தெரியவில்லை   எப்படி இவன்கள் மட்டும் இப்படி வாழ்கிறார்கள்??  நாம்மால் ஏன் முடியவில்லை என்று கடந்த 20 வருடங்களாக யோசிக்கிறேன்   ஒரு அறுப்பும் விளங்கவில்லை    

அப்படி போடு அரிவாளை???😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Cruso said:

எதோ ஒரு மூலையில் தொங்கிக்கொண்டு கருத்து எழுதும் உங்களுக்கு வேறென்ன வேலை. sorry.com

சொல்லப் போனால் இப்படி எழுதும் உங்களைப் போன்றவர்களை விட தேசம்,தேசமாக வாழும் நாங்கள் ஊருக்கு மிக கூடுதலாக தான் செய்து  கொண்டு இருக்கிறோம்..இதுக்கு மேல வாயைத் திறக்காதீர்கள்..நிர்வாகம் எனக்கு தண்டடனை தந்தாலும் பறவாயில்லை ஏற்றுக் கொண்டு  போகிறேன்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையில் உள்ள தமிழர்களும் வெளிநாட்டு தமிழர்களும்  இடையிலான  இண‌க்க‌ப்பாட்டு  முயற்ச்சிகள் உக்கிரமாக நடைபெறுகின்றது போல் தெரிகின்றது.அதில் யாயினியுமா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் உள்ள தமிழர்களும் வெளிநாட்டு தமிழர்களும்  இடையிலான  இண‌க்க‌ப்பாட்டு  முயற்ச்சிகள் உக்கிரமாக நடைபெறுகின்றது போல் தெரிகின்றது.அதில் யாயினியுமா

பிரச்சனைகளு கிளப்புபவர்களை கண்டிக்க உங்களுக்கு தைரியமில்லை…. ஏன் யாயினியை குறை கூறுகிறீர்கள்?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, யாயினி said:

சொல்லப் போனால் இப்படி எழுதும் உங்களைப் போன்றவர்களை விட தேசம்,தேசமாக வாழும் நாங்கள் ஊருக்கு மிக கூடுதலாக தான் செய்து  கொண்டு இருக்கிறோம்..இதுக்கு மேல வாயைத் திறக்காதீர்கள்..நிர்வாகம் எனக்கு தண்டடனை தந்தாலும் பறவாயில்லை ஏற்றுக் கொண்டு  போகிறேன்.

ஆமையாயிரம் முடடையிட்டுவிட்டு சத்தம் போடாமல் போகுமாம். கோழி ஒரு முடடையிட்டு விட்டு கொக்காரிக்குமாம். அதுபோலத்தான் இருக்குது உங்கள் கூப்பாடெல்லாம். எதோ நீங்களே எழுதி நீங்களே பச்சை குத்தி கொள்ளுங்கள். வலது கை செய்வதை இடது கை அறியாதிருப்பதாக. நன்றி உங்கள் உதவிகளுக்கு. 

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் உள்ள தமிழர்களும் வெளிநாட்டு தமிழர்களும்  இடையிலான  இண‌க்க‌ப்பாட்டு  முயற்ச்சிகள் உக்கிரமாக நடைபெறுகின்றது போல் தெரிகின்றது.அதில் யாயினியுமா

இலங்கை  தமிழர்களை இவர்கள் நிம்மதியாக வாழ விடடால் போதும். விட மாடடாரக்ள். அது இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு அங்கு பண மழை கொட்டும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kandiah57 said:

இல்லை மூலையில் தொங்கவில்லை   ஊர் வாசிகசாலையில்   மேசையில் இரண்டு காலையும். போட்டு கொண்டு  வெளிநாட்டில் வாழும் ஊராவன். ஒவ்வொருவரும் என்ன மாதிரி வாழ்கிறார்கள் என்று வம்பு அளக்கிறேன்.   வேறு என்ன வேலை  ??  நான் ஒரு சோம்பேறியாகக்கும். என்னுடன் படித்தவை எல்லாம் வசதியாக வெளிநாட்டில் வாழ்கிறார்கள்    என்ன செய்வது என்று தெரியவில்லை   எப்படி இவன்கள் மட்டும் இப்படி வாழ்கிறார்கள்??  நாம்மால் ஏன் முடியவில்லை என்று கடந்த 20 வருடங்களாக யோசிக்கிறேன்   ஒரு அறுப்பும் விளங்கவில்லை    

இன்னும் பாயை போட்டு யோசியுங்கள். எப்படி பிணத்தைவைத்து பணம் சம்பாதிக்கலாம் வேண்டும்  யோசியுங்கள். பாய போடடாச்சு இனி படுக்க இடம் தேட வேண்டியதுதானே. உங்களுக்கு எல்லாம் இதை சொல்லியா தர வேண்டும். 🤣

21 hours ago, Cruso said:

எதோ ஒரு மூலையில் தொங்கிக்கொண்டு கருத்து எழுதும் உங்களுக்கு வேறென்ன வேலை. sorry.com

மூலையில் தொங்கும் ஒரு கூடடம் எனக்கு நிறைய சிவப்பு குத்தி இருக்குதுகள். பாவம் என்ன செய்வது. நிலைமை அப்படி. உண்மை சுடத்தானே செய்யும். 😂

Posted
19 minutes ago, Cruso said:

ஆமையாயிரம் முடடையிட்டுவிட்டு சத்தம் போடாமல் போகுமாம். கோழி ஒரு முடடையிட்டு விட்டு கொக்காரிக்குமாம். அதுபோலத்தான் இருக்குது உங்கள் கூப்பாடெல்லாம். எதோ நீங்களே எழுதி நீங்களே பச்சை குத்தி கொள்ளுங்கள். வலது கை செய்வதை இடது கை அறியாதிருப்பதாக. நன்றி உங்கள் உதவிகளுக்கு. 

இலங்கை  தமிழர்களை இவர்கள் நிம்மதியாக வாழ விடடால் போதும். விட மாடடாரக்ள். அது இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு அங்கு பண மழை கொட்டும். 

புலம் பெயர் தமிழர்களின் பணம் எவ்வளவு நாட்டுக்குள் வருகிறது என்ற பொது அறிவாவது உள்ளதா?
2 லட்சம் பேர் நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.(இம்மாதம்) பெரும்பாலோர் யாராக இருக்கும்??? 

அந்த ஆமை முட்டை இட்டு என்ன நடந்தது என அறிய ஆவல்.?😝

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

அது ஒன்றும் புலம் பெயர்ந்தவர்கள் இல்லை. வேண்டுமென்றால் ஒரு இரண்டு வீதம் அவர்கள் வந்திருக்கலாம். உங்களுக்கு தரவு தேவை என்றால் இணையத்தளத்தில் பார்த்து கொள்ளலாம்.

மில்லியன் கணக்கில் யாரும் வந்து போகலாம். அவர்கள் தாராளமாக செலவு செய்யவில்லை என்றால் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்தியாக்காரன் மலிவான சைவ கடையில் சாப்பிடுகிறான். சப்பாத்தியை கொண்டு வந்து அயனுக்கு மேலே வைத்து சூடாக்கி சாப்பிடுகிறான். ஒரு பிரயோசனம் இல்லை.😂

இதே மாதிரிதான் புலம் பெயர்ந்தவர்களை.

நான் இங்கு முடடையை பற்றி கதைக்கவில்லை. முடடை இடடவர்களை பற்றித்தான் கதைக்கிறேன்.😜 

Posted

அந்நிய செலவாணி எப்படித்தான் வருக்கிறது என்ற பொது அறிவாவாது இருக்கா என்று பார்த்தேன். சுத்தம்.🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

அந்நிய செலவாணி எப்படித்தான் வருக்கிறது என்ற பொது அறிவாவாது இருக்கா என்று பார்த்தேன். சுத்தம்.🤣

இல்லை நீங்கள் அனுப்புவதுதான் அந்நிய செலாவணி. மற்றதெல்லாம் அந்நியமல்லாத செலாவணி. சுத்தாமா விளங்கிட்டுது.😂

Posted
1 minute ago, Cruso said:

இல்லை நீங்கள் அனுப்புவதுதான் அந்நிய செலாவணி. மற்றதெல்லாம் அந்நியமல்லாத செலாவணி. சுத்தாமா விளங்கிட்டுது.😂

கருத்து எழுத முதல் பொது அறிவை வளர்க்க முயலுங்கள்.  சிறிலங்கா அரசே எவ்வளவு வருமானம், எத்தனை பேர் சிறிலங்காவுக்குள் வந்தார்கள் என்று பட்டியலாக இடுகிறது. நாங்கள் உங்கு வந்து காத்து குடிக்கவில்லை.😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nunavilan said:

கருத்து எழுத முதல் பொது அறிவை வளர்க்க முயலுங்கள்.  சிறிலங்கா அரசே எவ்வளவு வருமானம், எத்தனை பேர் சிறிலங்காவுக்குள் வந்தார்கள் என்று பட்டியலாக இடுகிறது. நாங்கள் உங்கு வந்து காத்து குடிக்கவில்லை.😁

காத்து குடிக்காமல் சீவிக்க முடியாது. அனால் எங்கு தங்குகிறீர்கள், எங்கு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். 😭

Posted

இப்படி தான் சொல்லி சொல்லியே கடன் வாங்கியே சீவிக்கிறீர்கள். சொல்லியே

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.