Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இந்த ஏழு நாட்கள்
-----------------------------
ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள்.
 
வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது.
 
பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன்.
 
உறுப்பினராக உள்ளே வந்து பார்த்தால்.........பெரும் பிரமாண்டம்.....👏👏
 
நல்ல ஒரு கட்டமைப்பும், வசதிகளும் உள்ள ஒரு தளம்.
 
கணினி மென்பொருள் துறையில் நீண்ட கால அனுபவம் உண்டு. நான்கு பக்கம் உள்ள ஒரு இணைய தளத்தை உருவாக்கி, அதை வெளியில் விட்டாலே, ஓராயிரம் பிரச்சனைகள் பின்னால் வரும். 
 
ஆனால் யாழ் களம் 'வேற லெவல்', தொழில் நுட்பத்திலும்......👍👍
 
பங்களிக்கும் பலரும் பெரும் விருட்சங்களாக இருக்கின்றனர். என் அப்பாச்சி வீட்டில் நின்ற இரண்டு பெரிய புளிய மரங்கள் போல. எவ்வளவு காலமாக, எவ்வளவை பங்களித்திருக்கின்றனர்.
 
இன்னும் அதே ஆர்வத்துடன் இருக்கின்றனர்......👍👍
 
எனக்கும் இன்றிருக்கும் ஆர்வம் என்றும் இருக்க வேண்டும் என்று......வேற யாரை கேட்பது......மேலே இருப்பவரை தான் கேட்கின்றேன். 
 
அவர் சிலதை கொடுப்பார். வேறு சிலதை கேட்காத மாதிரி இருந்து விடுவார்.....😀🤣
 
மிக்க நன்றி கள உறவுகளே....🙏
 
  • Like 7
  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ரசோதரன் said:

இப்ப தானே இறங்கியுள்ளீர்கள்.

இனித் தான் 

என்ன யாழுக்கை போய்க் குந்தியாச்சோ இனி இந்த மனிசன் எழும்பி வராது 

என்று குசினிக்குள்ளும் படுக்கை அறையிலும் இருந்து சத்தம் வரும்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தானே இறங்கியுள்ளீர்கள்.

இனித் தான் 

என்ன யாழுக்கை போய்க் குந்தியாச்சோ இனி இந்த மனிசன் எழும்பி வராது 

என்று குசினிக்குள்ளும் படுக்கை அறையிலும் இருந்து சத்தம் வரும்.

சும்மா  பயப்படுத்தவேண்டாம்.    அவருடைய எழுத்தும் ஒரு அழகு தான்  வாசிக்கலாம் ஆர்வமாக இருக்கிறது பொழுதும் நன்றாகவே போகிறது   உங்களுக்கு எப்படி??? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

சும்மா  பயப்படுத்தவேண்டாம்.    அவருடைய எழுத்தும் ஒரு அழகு தான்  வாசிக்கலாம் ஆர்வமாக இருக்கிறது பொழுதும் நன்றாகவே போகிறது   உங்களுக்கு எப்படி??? 

இன்னொருவர் வேதனை

இவர்களுக்கு வேடிக்கை

இதயமற்ற மனிதருக்கோ

இதெல்லாம் வாடிக்கை.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:
இந்த ஏழு நாட்கள்
-----------------------------
ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள்.
 
..96 பச்சை புள்ளடி கொடுத்திருக்கிறார்கள்.முன் வரிசையில் நிற்கிறீர்கள்  உங்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் தந்த அங்கீகாரம்.  நிகேதனம் என்றால் என்ன என்று உங்கள் மூலம் அறிந்தேன். தொடருங்கள் ...நேரம் கிடைக்கும் போதெல்லாம். 

( ஆரோக்கிய நிகேதனம்' என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம்.) 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரசோதரன் said:
வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது.
 
பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன்.

உங்களுக்கு நகைச்சுவையும் நன்றாக வருகிறது. சிரிக்காமல் இருக்க முடியவில்லை😅

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரசோதரன் said:
இந்த ஏழு நாட்கள்
-----------------------------
ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்து விட்டாய் என்று கள நிர்வாகம் ஒரு பதக்கம் கொடுத்திருக்கின்றார்கள்.
 
வெறும் ஏழே ஏழு நாட்கள் தான் ஆகியிருக்கின்றதா? ஏதோ ஒரு யுகம் இங்கே உருண்டு பிரண்டு கிடந்தது போல மனம் நினைக்கின்றது.
 
பல வருடங்களாக தினமும் பார்க்கும் 50 தளங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது, போன வாரம் வரை. அப்படியே முகப்பிற்கு வந்து, பிடித்ததை வாசித்து விட்டு போய்க் கொண்டிருந்தேன்.
 
உறுப்பினராக உள்ளே வந்து பார்த்தால்.........பெரும் பிரமாண்டம்.....👏👏
 
நல்ல ஒரு கட்டமைப்பும், வசதிகளும் உள்ள ஒரு தளம்.
 
கணினி மென்பொருள் துறையில் நீண்ட கால அனுபவம் உண்டு. நான்கு பக்கம் உள்ள ஒரு இணைய தளத்தை உருவாக்கி, அதை வெளியில் விட்டாலே, ஓராயிரம் பிரச்சனைகள் பின்னால் வரும். 
 
ஆனால் யாழ் களம் 'வேற லெவல்', தொழில் நுட்பத்திலும்......👍👍
 
பங்களிக்கும் பலரும் பெரும் விருட்சங்களாக இருக்கின்றனர். என் அப்பாச்சி வீட்டில் நின்ற இரண்டு பெரிய புளிய மரங்கள் போல. எவ்வளவு காலமாக, எவ்வளவை பங்களித்திருக்கின்றனர்.
 
இன்னும் அதே ஆர்வத்துடன் இருக்கின்றனர்......👍👍
 
எனக்கும் இன்றிருக்கும் ஆர்வம் என்றும் இருக்க வேண்டும் என்று......வேற யாரை கேட்பது......மேலே இருப்பவரை தான் கேட்கின்றேன். 
 
அவர் சிலதை கொடுப்பார். வேறு சிலதை கேட்காத மாதிரி இருந்து விடுவார்.....😀🤣
 
மிக்க நன்றி கள உறவுகளே....🙏
 
ரசோதரன்...  இந்த ஏழு நாட்களில், உங்கள் எழுத்தின் ரசிகனாகி விட்டேன். 🥰
எனக்கு என்னவோ.... நீங்கள் முன்பு வேறு பெயரில் 
யாழ்.களத்தில் எழுதியமாதிரி, ஒரு சந்தேகம். 😂சந்தேகம் மட்டுமே...
இன்னும் ஊர்ஜிதம் செய்யவில்லை.   🤣 (பகிடிக்கு சீரியஸாக எடுக்காதீர்கள்.) 🙂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, நிலாமதி said:

..96 பச்சை புள்ளடி கொடுத்திருக்கிறார்கள்.முன் வரிசையில் நிற்கிறீர்கள்  உங்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் தந்த அங்கீகாரம்.  நிகேதனம் என்றால் என்ன என்று உங்கள் மூலம் அறிந்தேன். தொடருங்கள் ...நேரம் கிடைக்கும் போதெல்லாம். 

( ஆரோக்கிய நிகேதனம்' என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம்.) 

👍👍.....

'ஆரோக்கிய நிகேதனம்' என்பது வங்காள எழுத்தாளரான  தாரசங்கர் பந்த்யோபாத்யாய அவர்களால் எழுதப்பட்ட ஒரு பெரும் நாவல். இதில் மூன்று தலைமுறைகளாக மருத்துவம் செய்யும் ஒரு குடும்பத்திலிருக்கும் ஒருவர் மையப் பாத்திரமாக வருகின்றார். இந் நாவல் இந்திய இலக்கியத்தில் மிகச் சிறந்த ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது.
 
தாகூர் அவர்களுக்கு பின்னர் தாரசங்கர் பந்த்யோபாத்யாய இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காக முன் மொழியப்பட்டு, பரிசீலனையிலும் இருந்தார். ஒரு பெரும் படைப்பாளி.
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

ரசோதரன்...  இந்த ஏழு நாட்களில், உங்கள் எழுத்தின் ரசிகனாகி விட்டேன். 

இப்படிப்பட்ட ஒருவரை கண்டு கதைத்து அளவளாவிய போதும்

அவருடன் சேர்ந்து ஒரு படம் எடுக்கவில்லையே என்று கவலையாக உள்ளது.

புகழின் உச்சத்துக்கு போகமுன் எப்படியாவது ஒரு படம் எடுத்துடணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kavi arunasalam said:

உங்களுக்கு நகைச்சுவையும் நன்றாக வருகிறது. சிரிக்காமல் இருக்க முடியவில்லை😅

நன்றி கவிஞர். நான் கவிதை என்று ஏதாவது எழுதினால், அது பெரும்பாலும் ஒரு விளக்கக் குறைவாகவே முடிகின்றது. நாலு நாட்களின் பின், நான் எழுதியதை திரும்பிப் பார்க்கும் எனக்கே அப்படித்தான் தெரிகின்றது......🤣🤣
 
சின்ன சின்ன கதைகளும், கட்டுரைகளும் சரியாக வரும் போல. 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ரசோதரன் said:

ஆரோக்கிய நிகேதனம்'

முதலில் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சமஸ் கிருதம் என்று எண்ணிவிட்டேன்.

6 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு என்னவோ.... நீங்கள் முன்பு வேறு பெயரில் 
யாழ்.களத்தில் எழுதியமாதிரி, ஒரு சந்தேகம். 😂சந்தேகம் மட்டுமே...

எனக்கும் ஒரு சந்தேகம்?

@ரசோதரன்     இத்தனை கதைகளையும் எழுதினாரா?

இல்லை முதலே எழுதி வைத்திருந்ததை எடுத்து எடுத்து கொளுவினாரா?

“வந்தான்ரா ஆறு பந்திலும் ஆறு சிக்ஸ் அடித்தான்டா”

என்ற மாதிரி இருக்கு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

ரசோதரன்...  இந்த ஏழு நாட்களில், உங்கள் எழுத்தின் ரசிகனாகி விட்டேன். 🥰
எனக்கு என்னவோ.... நீங்கள் முன்பு வேறு பெயரில் 
யாழ்.களத்தில் எழுதியமாதிரி, ஒரு சந்தேகம். 😂சந்தேகம் மட்டுமே...
இன்னும் ஊர்ஜிதம் செய்யவில்லை.   🤣 (பகிடிக்கு சீரியஸாக எடுக்காதீர்கள்.) 🙂

இதே சந்தேகம் தான் எனக்கும், நீங்கள் எல்லாம் எனக்கு முன்னரேயே மிகவும் பழக்கமான ஆட்கள் போல என்று.......😀
 
இல்லை தமிழ் சிறி, நான் இங்கு முன்னர் வரவில்லை. நண்பர்களுடன் சில வாட்ஸ்அப் குழுமங்கள் தவிர வேறு எந்த சமூக ஊடகங்களிலும், முகப்புத்தகம் உட்பட, நான் இல்லை.
 
ஈழப்பிரியனை ஒரு தடவை சந்தித்திருக்கின்றேன்.
 
நீர்வேலியான் என்னுடைய நீண்டகால நண்பன்.
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்படிப்பட்ட ஒருவரை கண்டு கதைத்து அளவளாவிய போதும்

அவருடன் சேர்ந்து ஒரு படம் எடுக்கவில்லையே என்று கவலையாக உள்ளது.

புகழின் உச்சத்துக்கு போகமுன் எப்படியாவது ஒரு படம் எடுத்துடணும்.

😀😀....

அவசரமாக ஒன்று வேண்டும் என்றால், போட்டோஷாப்பில் ஒன்றை செய்து வெளியில் விடுவம்.........
 
புகழின் உச்சியில் என்றவுடன் ஒரு சம்பவம் ஞாபகம் வருகின்றது. இங்கு வீட்டில் ஒரு பப்பாசி மரம் நிற்கின்றது. நல்ல உயரம், நிறையக் காய்கள். ஒரு நாள் என் மகன் அதைப் பார்த்து, ஏன் இந்த வாழை மரம் இப்படி காய்த்திருக்கின்றது என்று கேட்டார். அவர் பெரிய படிப்புகள் படித்தவர்.
20 minutes ago, ஈழப்பிரியன் said:

முதலில் தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சமஸ் கிருதம் என்று எண்ணிவிட்டேன்.

எனக்கும் ஒரு சந்தேகம்?

@ரசோதரன்     இத்தனை கதைகளையும் எழுதினாரா?

இல்லை முதலே எழுதி வைத்திருந்ததை எடுத்து எடுத்து கொளுவினாரா?

“வந்தான்ரா ஆறு பந்திலும் ஆறு சிக்ஸ் அடித்தான்டா”

என்ற மாதிரி இருக்கு.

பெரும்பாலும் அன்றாடம் எழுதிக் கொள்வேன். வேலை நேரத்தில் தான் அதிகமாக எழுதுவது...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

பெரும்பாலும் அன்றாடம் எழுதிக் கொள்வேன். வேலை நேரத்தில் தான் அதிகமாக எழுதுவது.....

சிறிய வயதில் படிப்பை நிறுத்தியதை நினைத்து வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறிய வயதில் படிப்பை நிறுத்தியதை நினைத்து வருந்துகிறேன்.

அண்ணை, கண்டபடி யோசிக்காதீர்கள், நானும் படித்து முடித்துவிட்டுத்தான் இருக்கிறேன், இப்படியெல்லாம் எங்களால் எழுத முடியாது, என்ன இருக்கிறதோ அதுதான் வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, கண்டபடி யோசிக்காதீர்கள், நானும் படித்து முடித்துவிட்டுத்தான் இருக்கிறேன், இப்படியெல்லாம் எங்களால் எழுத முடியாது, என்ன இருக்கிறதோ அதுதான் வரும் 

தம்பீ

எழுதுவதற்கு யோசிக்கவில்லை.

ஆபீசில இருந்து எழுதுறாங்க பாருங்க.

அது தான் கொஞ்சம் உதைக்குது.

நமக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பீ

எழுதுவதற்கு யோசிக்கவில்லை.

ஆபீசில இருந்து எழுதுறாங்க பாருங்க.

அது தான் கொஞ்சம் உதைக்குது.

நமக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.

அண்ணை, அந்த கொடுப்பினையும் எல்லாருக்கும் வாய்க்காது

  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.