Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ரசோதரன் said:
 
நான்கு வருடங்களின் முன் ஊர் போயிருந்தேன். என்னுடைய சில உறவினர்களின் பிள்ளைகள் இதை எனக்கு நேரடியாகவே சொன்னார்கள்: நாங்கள் வெளிநாடு போகப் போகின்றோம் அல்லது கப்பலுக்கு போகப் போகின்றோம். எவ்வளவு தான் படித்தாலும் என்ன சம்பளம் இங்கு கிடைத்து விடப் போகின்றது என்றனர்.
 
கப்பல் வாழ்க்கை கடுமையானது மட்டும் இல்லை, அது நாடாறு மாதம், காடாறு மாத வாழ்க்கை. அதில் உள்ள சிரமங்களையும் விலாவாரியாகச் சொன்னேன். படித்து விட்டு வெளிநாடுகளுக்கு போகலாம் என்றும் சொன்னேன்.
 
ஒவ்வொருவரும் நெருப்பு உண்மையிலேயே சுடும் என்று அவர்களே தொட்டுப் பார்த்து அறிந்து கொள்ளப் போவதாக பிடிவாதமாக இருக்கின்றனர்.

கப்பல் வாழ்க்கையை பலர் விரும்பி செய்கின்றனர் ...இந்த கப்பலில் வேலை தேடி செல்வது 1970 களில் மிகவும் பிரபலமாக இருந்தது....அந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்வது  என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் கப்பலுக்கு  பலர் சென்றனர்...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளசுகளுக்கு பணம் தான் குறிக்கோள் என வாழ்கிறார்கள். இலகுவாக காசு கிடைக்கும் என எண்ணுகிறார்கள். அக்கரைகள் பச்சை இல்லை. இளங்கன்றுகள் துள்ளத்தான் செய்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, putthan said:

கப்பல் வாழ்க்கையை பலர் விரும்பி செய்கின்றனர் ...இந்த கப்பலில் வேலை தேடி செல்வது 1970 களில் மிகவும் பிரபலமாக இருந்தது....அந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்வது  என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் கப்பலுக்கு  பலர் சென்றனர்...

👍👍.......

எங்களூரில் அன்று கப்பலுக்கு போகுதல் என்பது ஒரு உச்சம் மாதிரி. பல உறவினர்கள் கப்பலுக்கு போய் வருவார்கள். இறங்கி வரும் போது அவர்கள் கொடுக்கும் சூயிங்கம் போன்றவற்றுக்காகவே இவர்கள் அடிக்கடி ஏறி இறங்க வேண்டும் என்று நினைத்ததுண்டு.......😀

இன்று சில நண்பர்கள் இன்னும் கப்பல் தொழிலில் இருக்கின்றனர். பலர் கப்பல் தொழிலை விட்டு ஊரிலோ அல்லது கொழும்பிலோ அல்லது வேறு நாடுகளிலோ வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். 'வயசாயிடுச்சு கலியப்பெருமாள், முன்ன மாதிரி இல்லை....' என்ற நிலைக்கு நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம்....😀
 
கடலோடிய சோழ வம்சத்தின் பிரதிநிதிகள் நாங்களோ என்று ஒரு நினைப்பு வரும். கேரளா மக்களின் உணவுகளையும், மொழி உச்சரிப்பையும் பார்த்து சேரர்களோடும் ஒரு தொடர்பு இருக்கிறது போலவும் இருக்கும். பாண்டியர்கள் போலவே குலசாமிக்கு சித்திரை திருவிழா இன்னமும் செய்து கொண்டும் இருக்கின்றோம்.
 
மூன்றும் கலந்த கலவை நாங்கள்...........🤣🤣
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, putthan said:
1 hour ago, ரசோதரன் said:
நான்கு வருடங்களின் முன் ஊர் போயிருந்தேன். என்னுடைய சில உறவினர்களின் பிள்ளைகள் இதை எனக்கு நேரடியாகவே சொன்னார்கள்: நாங்கள் வெளிநாடு போகப் போகின்றோம் அல்லது கப்பலுக்கு போகப் போகின்றோம். எவ்வளவு தான் படித்தாலும் என்ன சம்பளம் இங்கு கிடைத்து விடப் போகின்றது என்றனர்.
 
கப்பல் வாழ்க்கை கடுமையானது மட்டும் இல்லை, அது நாடாறு மாதம், காடாறு மாத வாழ்க்கை. அதில் உள்ள சிரமங்களையும் விலாவாரியாகச் சொன்னேன். படித்து விட்டு வெளிநாடுகளுக்கு போகலாம் என்றும் சொன்னேன்.
 
ஒவ்வொருவரும் நெருப்பு உண்மையிலேயே சுடும் என்று அவர்களே தொட்டுப் பார்த்து அறிந்து கொள்ளப் போவதாக பிடிவாதமாக இருக்கின்றனர்.

கப்பல் வாழ்க்கையை பலர் விரும்பி செய்கின்றனர் ...இந்த கப்பலில் வேலை தேடி செல்வது 1970 களில் மிகவும் பிரபலமாக இருந்தது....அந்த காலகட்டத்தில் வெளி நாடுகளுக்கு செல்வது  என்பது மிகவும் கடினமாக இருந்தது ஆனால் கப்பலுக்கு  பலர் சென்றனர்..

நானும் 83 வரை ஒரு கப்பல் மாலுமியாக வேலை செய்தேன்.
 
அது ஒரு கனாக்காலம்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

நானும் 83 வரை ஒரு கப்பல் மாலுமியாக வேலை செய்தேன்.
 
அது ஒரு கனாக்காலம்.

கிரிக் கப்பலா ?

ஏனென்றால் ஆனேக யாழ்ப்பான ஆட்கள் கிரிக் கப்பலில் வேலை செய்வதை பெருமையும் கூடவே பணமும் .

கனாகாலம் அல்ல பூமியின் சொர்க்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் 83 வரை ஒரு கப்பல் மாலுமியாக வேலை செய்தேன்.
 
அது ஒரு கனாக்காலம்.

👍👍.....

உங்களிடம் கேட்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. இந்த வருட கரப்பந்தாட்டப் போட்டிக்கு வந்து விடுங்கள்.......😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, பெருமாள் said:

கிரிக் கப்பலா ?

ஏனென்றால் ஆனேக யாழ்ப்பான ஆட்கள் கிரிக் கப்பலில் வேலை செய்வதை பெருமையும் கூடவே பணமும் .

கனாகாலம் அல்ல பூமியின் சொர்க்கம் .

ஆமாம் பெருமாள்.

கிரீக் கப்பல் தான்.

வாழ்வில் எனக்கு கிடைத்த ஒரு கொடையாகவே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் பெருமாள்.

கிரீக் கப்பல் தான்.

வாழ்வில் எனக்கு கிடைத்த ஒரு கொடையாகவே எண்ணுகிறேன்.

ஆகா ..........................சொல்லி முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, ரசோதரன் said:

உங்களிடம் கேட்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. இந்த வருட கரப்பந்தாட்டப் போட்டிக்கு வந்து விடுங்கள்.

ஆடி 5ம் திகதியில் இருந்து கலிபோர்ணியாவில்த் தான் நிற்பேன்.

ஆடி 29-ஆவணி 5 வரை கவாய்.

மீண்டும் கலிபோர்ணியாவுக்கே வருவேன்.

ஆனாலும் ஆவணி கடைசிவரை நிற்க முடியாது.

1 minute ago, பெருமாள் said:

ஆகா ..........................சொல்லி முடியாது .

என்ன பெருமாள் உங்களுக்கும் அனுபவம் போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆடி 5ம் திகதியில் இருந்து கலிபோர்ணியாவில்த் தான் நிற்பேன்.

ஆடி 29-ஆவணி 5 வரை கவாய்.

மீண்டும் கலிபோர்ணியாவுக்கே வருவேன்.

ஆனாலும் ஆவணி கடைசிவரை நிற்க முடியாது.

இந்த வயோதிப காலத்தில் ஏன் இப்படி ஓடி திரிகிறீர்கள்   ஒரு இடத்தில் அமைதியாக இருக்கலாம்   இல்லையா??,..🤣🤣 இரண்டு பேருமே சந்தித்து கதைத்து. விபரங்களை யாழில் பதியுங்கள்.   மற்றும் உங்கள் நண்பன் ஒருவர் இமயமலை பிரகடனத்தில். கலந்துரையாடல் செய்தார்    அதுபற்றி ஏதாவது தெரியுமா??  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, Kandiah57 said:

இந்த வயோதிப காலத்தில் ஏன் இப்படி ஓடி திரிகிறீர்கள்   ஒரு இடத்தில் அமைதியாக இருக்கலாம்   இல்லையா

வந்த காலத்திலிருந்து 2015 வரை தொடர்ந்து வேலை.

குடும்பங்களை இலங்கைக்கு அனுப்பிய போதும் நான் வேலைக்கு போனால்த் தான் பணம் வரும் என்பதால் போகவில்லை.

வயது 68 ஆகப் போகிறது.இன்னும் எவ்வளவு காலம் பிரயாணங்கள் செய்ய முடியுமோ தெரியாது.

இப்போது பிள்ளகள் எங்கு போனாலும் எங்களைக் கேக்காமலே தங்களுடன் சேர்த்து பயண ஒழுங்குகள் செய்து விடுவார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் கல்வி விடயத்தில் என்னிடமும் ஒரு கருத்து உண்டு. ஒருவரது தாய் மொழிக்கும், தர்க்க ரீதியான கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என நினைக்கிறேன். இதுவே சீனர்களும், தமிழர்களும், ஜப்பானியர்களும் தர்க்க ரீதியான பாடங்களில் அதிகம் பிரகாசிப்பதற்கான காரணம் என நினைக்கிறேன். மூளை அமைப்பில் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. மற்றது ஒரு தேசத்தின் வளமும், மூளை வளர்வதற்கு உந்துதலளிக்கக் கூடும்…!

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 11/3/2024 at 11:16, ஏராளன் said:

தமிழர்கள் இந்த முழு நாட்டையும் கல்வியால் ஆழமுடியும். நாங்கள் சொல்வதை இந்த நாடு கேட்கும். எங்களை இந்த நாடே திரும்பிப் பார்க்கும். அவ்வாறாயின் நாம் பொருளாதாரம், மற்றும் கல்வி ஆகிய இரண்டு துறைகளில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். அவ்விரு துறைகளிலும் யாரும் தொட முடியாத உச்சத்திற்கு எமது சமூகத்தை நாம் வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்ந்தால் இந்த முழு நாடும் நாம் சொல்வதைக் கேட்கும்.

இலங்கையின் நீண்ட வரலாறு தெரிந்தும் கல்வியும்பொருளாதாரத்திலும் மேலோங்கிவிட்டால் இலங்கையை ஆள முடியும்  தமிழர்கள்  சொல்வதை இலங்கை கேட்கும் என்று எப்படித்தான் இவருக்கு பேச மனம் வந்ததோ தெரியவில்லை, அல்லது தனது  சிங்கள அரச ராஜாங்க  பதவியை  நியாயப்படுத்த  தமிழர்களுக்கு அல்வா கொடுக்கிறாரோ தெரியவிலை.

கல்வியிலும் பொருளாதாரத்திலும் எவ்வளவு உச்சம் போனாலும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களால்கூட அவர்கள் சொல்வதை இலங்கையை கேட்க வைக்க முடியாது அவற்றை வைத்து  இலங்கையை ஆள முடியாது.

ஏனென்றால் இலங்கையை ஆட்சி செய்வது அவை இரண்டுமல்ல முதலில் மதம் பின்பு அரசியல்!

 கல்வியில் மேல் நிலையில் உள்ளவனும் பொருளாதாரத்தில் நிலைபெற்றவனுக்கும் இலங்கை பணியும் என்றால் இன்றைய வங்குரோத்துக்கு இலங்கை வந்திருக்காது எப்போதோ ஆசியாவின் முதலாவது அபிவிருத்தி அடைந்த நாடு ஆகீருக்கும்,

2 முக்கால் கோடி சனத்தை வைச்சுக்கொண்டு 140 கோடி மக்கள் தொகையை கொண்டிருக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் இருந்து அரிசியும் முட்டையும் கடன் வாங்கிகொண்டிருக்காது.

83 கலவரத்தின் பின்னர் தமிழர்களில் பெரும்பான்மையினர் யுத்தத்துடனும் புலம் பெயர்வுடனும் காலத்தை ஓட்டிக்கொள்ள சிங்களவர்கள் கல்வியில் எங்கோ போய்விட்டனர்,

இன்று புலம்பெயர்நாடுகளுக்கு படையெடுக்கும் சிங்கள மாணவர்களின் தொகையில்  தமிழர்களையும் முஸ்லீம்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இனதொகை ஒப்பீட்டளவில் தமிழர்கள் கல்வியறிவில் மேலோங்கியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டாலும், அதை வைத்து நாங்கள் சிங்கள தேசம் நாம் சொல்வதை கேட்கும் நிலைக்கு கொண்டுவரமுடியாது ,

அதை செய்ய சிங்கள அரசியல் அனுமதிக்காது அதையும்மீறி அரசியல் அனுமதித்தாலும் தேரர்கள்  அந்த அரசியல்வாதிகளை ஆட்சியைவிட்டே அகற்ற பார்ப்பார்கள்.

இலங்கையில் சர்வவல்லமை பொருந்திய பெளத்த சிங்கள இனத்தை சேர்ந்த கல்விமான்கள் , பெரும் பணக்காரர்களே கல்வி பணத்தில் உச்சம் தொட்டும்  ஆளைவிடுடா சாமியென்று அப்படியே ஆயிரக்கணக்கில் நாட்டை காலி செய்துவிட்டு ஓட்டம்பிடிக்கும்போது இந்த இரண்டும் இருந்தால் நாங்கள் சொல்வதை நாடு கேட்கும் என்று இயம்புவது இந்த நூற்றாண்டின் அதி பயங்கர நகைச்சுவை.

ஒருவேளை கல்வியிலும் பொருளாதாரத்திலும் அதி பயங்கரமாக முன்னேறிவிட்டால்  அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் அதை வைத்து எப்படி மேற்குலகத்தில் நிரந்தரமாக குடியேறலாம் என்பதே அடுத்தகட்டமாக சிந்திக்கிறார்கள், சிந்திப்பார்கள்.

Edited by valavan
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, valavan said:

கல்வியிலும் பொருளாதாரத்திலும் எவ்வளவு உச்சம் போனாலும் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் முஸ்லீம்களால்கூட அவர்கள் சொல்வதை இலங்கையை கேட்க வைக்க முடியாது அவற்றை வைத்து  இலங்கையை ஆள முடியாது.

ஏனென்றால் இலங்கையை ஆட்சி செய்வது அவை இரண்டுமல்ல முதலில் மதம் பின்பு அரசியல்!

என் கருத்தும் இதுதான் வல்லவன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.