Jump to content

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

March 15, 2024
 

அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர்.

இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறஉரிமையில்லை என உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

 

https://www.ilakku.org/அகதி-முகாமில்-பிறந்தோருக/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தியா வாழ் இலங்கைத் தமிழருக்கும் பெப்பே இலங்கை வாழ் இந்தியத் தமிழருக்கும் பெப்பே,.....

@MEERA மற்றும் பல இந்திய  ஆதரவாளர்களுக்கு,...

👇

 

இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019

இந்தியாவிற்கு புலம்பெயர்பவர்கள் தொடர்பான சட்டம்
 

2019 இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம்(Citizenship (Amendment) Act 2019), பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளில் இருந்து திசம்பர் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய மதச்சிறுபான்மையோரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் 09 திசம்பர் 2019 அன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.[2][3][4] மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறிய இசுலாமியர்களுக்கு இத்தகுதி இச்சட்டத்தில் தரப்படவில்லை.[5][6][7] இந்தியச் சட்டத்தின்படிகுடியுரிமை பெறுவதற்குத் தேவையான ஒரு காரணியாக சமயம் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டது முதன்முறையாக இச்சட்டத்திருத்தத்தில்தான்.[7][a][b][c]

இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019
இயற்றியது மக்களவை & மாநிலங்களவை
இயற்றப்பட்ட தேதி 9 & 10 டிசம்பர் 2019
சம்மதிக்கப்பட்ட தேதி 12 டிசம்பர் 2019
சட்ட வரலாறு
சட்ட முன்வரைவு குடியுரிமை சட்டத் (திருத்த) மசோதா[1]
அறிமுகப்படுத்தியது அமித் சா


மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.[8][9] மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 10 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.[10][11][12]இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் 12 டிசம்பர் 2019 அன்று ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது.[13][14][15]

 

பின்னணிதொகு

1955-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது கொண்டு வரப்படும் குடியுரிமைத் திருத்த சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இக்குடியுரிமை சட்டத் திருத்த மசோதா முதன்முதலாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில்நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்து விட்டதால் இந்த மசோதா காலாவதியாகிவிட்டது. எனவே தற்போது மீண்டும் இந்த மசோதாவை மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புகள்தொகு

இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்த முன்வடிவம் சமயத்தின் அடிப்படையில் இந்தியாவை பிளவுபடுத்தும் என இந்திய தேசிய காங்கிரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டின. மேலும் இச்சட்டத் திருத்தம்  இந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 14க்கு எதிரானது என்றும், ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு மட்டும் சில விலக்களிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்திருத்திற்கு எதிராக கிளா்ச்சிகள் எழுந்திருக்கிறது. [21][22]வங்காளதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த வங்காள மொழி பேசும் இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்குவதை வடகிழக்கு மாநில மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. தங்களது மாநிலத்தில் வங்காளிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்பதுதான் அவா்களின் அச்சம். அவா்கள் வங்காளிகளை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பாா்க்காமல் வங்காளிகள் என்று கருதுகிறாா்கள்.

மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான  து. இரவிக்குமார்

 கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோரினார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய், 'இந்தியக் குடியுரிமை' என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009-இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5-இன் படி பதிவு செய்துகொண்ட புலம்பெயர்ந்த எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன்படி இயல்புரிமை அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாக இந்தியாவில் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது என்று தெரிவித்தார்.[23]மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இச்சட்டத்திருத்தற்கு எதிராக பேசினார்.[24]

https://ta.m.wikipedia.org/wiki/இந்தியக்_குடியுரிமை_(திருத்தச்)_சட்டம்_2019#:~:text=குடியுரிமை சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்,-பாகிஸ்தான்%2C வங்காளதேசம்%2C ஆப்கானித்தான்&text=தற்போது தொடர்ந்து 5 ஆண்டுகள் இடையீடுயின்றி,இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

What is CAA : சிஏஏ சட்டத்தின் புதிய விதிகள் என்ன? யார் யார் விண்ணப்பிக்கலாம்?

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆறு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தாலே குடியுரிமை வழங்க ஏதுவாக சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது பாஜக அரசு. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் மத அடிப்படையில் இன்னல்களை எதிர்கொண்டவர்களுக்கே குடியுரிமை என மசோதா வகுக்கப்பட்டது.

அதிலும், இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் அவர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்கள் என வரையறுக்கப்பட்டது. அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் இஸ்லாமியர்கள் இந்திய குடியுரிமை பெற முடியாது.

இதே போன்று, தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க இச்சட்டத்தில் இடமில்லை.

2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது

குடியுரிமை மசோதா: இலங்கை மலையக தமிழர்கள் ஏமாற்றம்

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
13 டிசம்பர் 2019
இலங்கை மலையக தமிழர்கள் ஏமாற்றம்

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பு கவலைக்குரிய விடயம் என இலங்கை தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோப்பி, தேயிலை, இறப்பர் போன்ற பயிர் செய்கைகளுக்காக 1844ஆம் ஆண்டு காலப் பகுதியில் அழைத்து வரப்பட்டவர்களே இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள். 

அந்த காலப் பகுதிக்கு முன்னரும் இந்தியாவிலிருந்து பெரும்பாலான தமிழர்கள் இலங்கை நோக்கி வருகைத் தந்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், கூலித் தொழிலாளர்களாக இந்த காலப் பகுதியிலேயே தமிழர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். 

இவ்வாறு அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் மலையகப் பகுதிகளில் லயின் குடியிருப்புக்களில் தங்க வைக்கப்பட்டனர்............

https://www.bbc.com/tamil/sri-lanka-50772671.amp

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு

March 15, 2024
 

அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர்.

இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், 2022ஆம் ஆண்டு டிசெம்பர் 14ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெறஉரிமையில்லை என உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

 

https://www.ilakku.org/அகதி-முகாமில்-பிறந்தோருக/

 

பிறழ்வான, திசைதிருப்பும் தலையங்கம். 

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan BJP இற்கு ஆதரவா? உங்களுடைய அரிப்பிற்கு என்னிடம் இடம் தேடாதீர்கள்…

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத்துவ ஆதரவாளர்கள்….?

இங்கு சிலர் “ அவர் கிறீஸ்தவர் நானும் கிறீஸ்தவன் ஆதாலால் அவரை ஆதரிக்கிறேன் “ எழுதியது போல் வேறு எவரும் தமது சமயத்தை முன்னிறுத்தி எழுதியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

இந்துத்துவ ஆதரவாளர்கள்….?

இங்கு சிலர் “ அவர் கிறீஸ்தவர் நானும் கிறீஸ்தவன் ஆதாலால் அவரை ஆதரிக்கிறேன் “ எழுதியது போல் வேறு எவரும் தமது சமயத்தை முன்னிறுத்தி எழுதியதில்லை.

மாற்றம் செய்தாயிற்று.  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சத்தத்தையே காணோம். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

குடியுரிமை மசோதா: இலங்கை மலையக தமிழர்கள் ஏமாற்றம்

இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பு கவலைக்குரிய விடயம் என இலங்கை தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இது தான் விளங்கவில்லை. இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இந்திய குடியுரிமை பெற்று இந்தியா செல்ல விரும்பினார்களா? முஸ்லிம் நாடுகளில் இருந்து துன்புறத்தபட்டு வருகின்றவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்குவதற்கு இவர்கள் ஏன் ஏமாற்றம் அடைகின்றனர், கவலை தெரிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இது தான் விளங்கவில்லை. இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இந்திய குடியுரிமை பெற்று இந்தியா செல்ல விரும்பினார்களா? முஸ்லிம் நாடுகளில் இருந்து துன்புறத்தபட்டு வருகின்றவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்குவதற்கு இவர்கள் ஏன் ஏமாற்றம் அடைகின்றனர், கவலை தெரிவிக்கின்றனர்.

தாங்கள் இலங்கையரும் இல்லை இந்தியரும் இல்லை எனும்போது அவர்களுக்கு கவலை வரத்தானே செய்யும்? 

ஆனால் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவளிக்கும் எங்கள் ஈழத்து + புலம்பெயர்ஸ், இந்தியாவில்  35 வருடங்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் ஈழத்  தமிழ் ஏதிலிகளுக்கு இந்தச் சட்டத்தில் எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படாமை கண்டு மூச்சும் வெளிவிடவில்லை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kapithan said:

தாங்கள் இலங்கையரும் இல்லை இந்தியரும் இல்லை எனும்போது அவர்களுக்கு கவலை வரத்தானே செய்யும்? 

ஆனால் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு ஆதரவளிக்கும் எங்கள் ஈழத்து + புலம்பெயர்ஸ், இந்தியாவில்  35 வருடங்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் ஈழத்  தமிழ் ஏதிலிகளுக்கு இந்தச் சட்டத்தில் எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படாமை கண்டு மூச்சும் வெளிவிடவில்லை. 😁

 ஈழத்து + புலம்பெயர்ஸ்,

அப்ப நீங்கள் ஈழத்து புலம் பெய்ர் தமிழன் இல்லையென்றால்  ஏன் யாழில் வந்து எல்லாவற்றிலும் மூக்கு நுழைக்கிறியள்.... அறியலாமா...பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாதல்லவா.

சரி விடுவம் ..நம்ம சுமா உங்கடை தோஸ்துதானே...இந்த பிரச்சினைக்கு சுமாமூலம் தீர்வுகாண ஏன் முயற்சிக்கக் கூடாது...😄

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan

எம்மவர்கள் இந்தியாவிற்கு ஏதிலிகளாக செல்லும் போது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் (இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி - வி.பி.சிங் - சந்திர சேகர் - பி.வி.நரசிம்மராவ்) .

1998 இல் அடல் பிகாரி வாஜ்பாய் (BJP)

பின்னர் 2004 இல் இருந்து 2014 வரை மன்மோகன் சிங்.

2014 இல் இருந்து இன்றுவரை BJP.

மேலும் இங்கு யாழில் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு யாருமே ஆதரவளிப்பதாக கூறவில்லை. ஆனால் சிறீலங்காவில் கிறீஸ்தவனாக கிறீஸ்தவனுக்கே ஆதரவு என்றே கூறப்பட்டுள்ளது.

 

சரி நீங்க இந்த சட்டத்திற்கு எதிராக விட்ட மூச்சு எங்கே? 

 

பிகு: சிறீலங்காவிற்கு வெளியே நடந்த பிறப்பு / இறப்புகளை அந்தந்த நாடுகளிலுள்ள சிறீலங்க தூதரகங்களூடாக பதிவு செய்யலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

 

சரி விடுவம் ..நம்ம சுமா உங்கடை தோஸ்துதானே...இந்த பிரச்சினைக்கு சுமா மூலம் தீர்வுகாண ஏன் முயற்சிக்கக் கூடாது...😄

🤦🏼‍♂️

21 minutes ago, MEERA said:

 

மேலும் இங்கு யாழில் இந்தியாவின் இந்துத்துவ கொள்கைக்கு யாருமே ஆதரவளிப்பதாக கூறவில்லை. 

ஆனால் சிறீலங்காவில் கிறீஸ்தவனாக கிறீஸ்தவனுக்கே ஆதரவு என்றே கூறப்பட்டுள்ளது.

 

 

1) இந்திய ஆதரவாளர்களும் இந்துத்துவ ஆதரவாளர்க வேறு வேறா? இல்லையே? 

2) கிறீஸ்தவன் கிறீஸ்தவனுக்கே ஆதரவு  என்று தாங்கள் கூறுவது தவறு.

கிறீஸ்தவனாக இருக்கின்ற ஒரே  காரணத்தால்  ஓரங்கட்டும்/ எதிர்க்கப்படும் செய்கைக்கே எதிர்ப்பு வெளியிடப்படுகிறது. 

3) இந்தியாவை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள்தான். ஆதலினால் இந்துத்துவாவிற்கு ஆதரவளிப்பவர்கள்தான் இந்தியாவின் இந்தத் திட்டமிடப்பட்ட ஈழத்தமிழர் வெறுப்பிற்கு காரணம் என்னவென்று கூற வேண்டும். அத்துடன் இந்துத்துவாவொற்கு ஆதரவளிப்பதற்கு காரணம் கூற வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

🤦🏼‍♂️

1) இந்திய ஆதரவாளர்களும் இந்துத்துவ ஆதரவாளர்க வேறு வேறா? இல்லையே? 

2) கிறீஸ்தவன் கிறீஸ்தவனுக்கே ஆதரவு  என்று தாங்கள் கூறுவது தவறு.

கிறீஸ்தவனாக இருக்கின்ற ஒரே  காரணத்தால்  ஓரங்கட்டும்/ எதிர்க்கப்படும் செய்கைக்கே எதிர்ப்பு வெளியிடப்படுகிறது. 

3) இந்தியாவை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இந்துத்துவ எதிர்ப்பாளர்கள்தான். ஆதலினால் இந்துத்துவாவிற்கு ஆதரவளிப்பவர்கள்தான் இந்தியாவின் இந்தத் திட்டமிடப்பட்ட ஈழத்தமிழர் வெறுப்பிற்கு காரணம் என்னவென்று கூற வேண்டும். அத்துடன் இந்துத்துவாவொற்கு ஆதரவளிப்பதற்கு காரணம் கூற வேண்டும்.  

1&3 போதுமான விளக்கம் ஏற்றகனவே தரப்பட்டுள்ளது.

2. அவர் கிறீஸ்தவன் நானும் கிறீஸ்தவன் ஆகவே எனது ஆதரவு அவருக்கே என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி வணக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் இலங்கையரும் இல்லை இந்தியரும் இல்லை எனும்போது அவர்களுக்கு கவலை வரத்தானே செய்யும்?  ]

அப்படியானால் இந்திய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட குடியுரிமை மசோதா அறிவிப்பில் முஸ்லிம் நாடுகளில் இருந்து துன்பபட்டு வருகின்ற பிற மதத்து மக்களை போன்று  எங்களையும் அந்த மசோதாவில் சேர்த்து கொள்ளாதது கவலைக்குரிய விடயம் என இலங்கை இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் கவலை தெரிவித்திருக்க வேண்டும்.
ஆனால் முன்பு இருந்தே அவர்கள் தலைவர்களினாலோ அவர்களினலோ இப்படி ஒரு வேண்டுகோள் வைக்கபட்டது இல்லையே.

அவர்களுக்கு இலங்கை குடியுரிமை உள்ளது . அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவது அரசு, அவர்கள் தலைவர்கள் செய்ய வேண்டியது அவசியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

1&3 போதுமான விளக்கம் ஏற்றகனவே தரப்பட்டுள்ளது.

2. அவர் கிறீஸ்தவன் நானும் கிறீஸ்தவன் ஆகவே எனது ஆதரவு அவருக்கே என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி வணக்கம்.

 

1) விளக்கம் கொடுக்கப்படவில்லை. அப்படி விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரம் எங்கே? 

2) அவர் கிறீஸ்தவன் நானும் கிறீஸ்தவன் ஆகவே எனது ஆதரவு அவருக்கே என்று யார்  கூறியது? 

அப்படி கூறப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

3) CAA யில் இலங்கை ஏதிலிகள் புறக்கணிப்பு தொடர்பாக ஒருவரும் மூச் - இதுதான் உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர்களுக்கு இலங்கை குடியுரிமை உள்ளது . அவர்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்துவது அரசு, அவர்கள் தலைவர்கள் செய்ய வேண்டியது அவசியமானது.

மலையகத் தமிழர் எல்லோருக்கும் குடியுரிமை உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

மலையகத் தமிழர் எல்லோருக்கும் குடியுரிமை உள்ளதா? 

இலங்கையில் எல்லா கட்சிகளும் ஒன்றுபட்டு  அவர்கள்  எல்லோருக்கும்  குடியுரிமை கொடுக்கபட்டுவிட்டதாக  2005,  2010 க்கு பின்பு  வந்தவர்கள்  சொன்னார்கள்.  யாழ்கள இலங்கை உறவு குருஸ்சோ மற்றும் சிறி அண்ணா அதை உறுதிபடுத்தினார்கள். சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர் ஒருவவரின் கேள்விக்கு  அனதாபத்தை பெறுவதற்காக இலங்கை குடியுரிமை இல்லை என்று ஒருவர் பொய் சொன்ன தகவலும் படித்தேன்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர்கள் தம்மால் முடிந்ததற்கும் அதிகமாக செய்து விட்டு போயிட்டார்கள். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது?  என்று ஏன் இதுவரை புலிகளை தூற்றியவர்களை நீங்கள் கேட்கவில்லை. ஆனாலும் நான் ஆயிரம் தடவைக்கு மேல் இதே கேள்வியை இங்கே கேட்டபோது ஏன் உங்கள் நியாயம் மௌனம் காத்தது??  
    • சண்முகம் குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராகிறார்; வர்த்தமானி வெளியீடு Published By: DIGITAL DESK 3    03 JUL, 2024 | 09:39 AM   தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்  இரா.சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனின் பெயர் வர்த்தமானியில் தற்போது வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார். அந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் காலஞ்சென்ற பெருந்தலைவர் இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு பின்னர் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றிருந்தார். பொதுத் தேர்தலில் அவர் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர் வரும் ஓரிரு சில தினங்களில் இலங்கை பாராளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமானம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/187555
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக, நாம் தமிழர் ஆகிய இரண்டில் எந்தக் கட்சிக்கு அதிமுக வாக்குகள் கிடைக்கும்? பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்த போது, இடைத்தேர்தல் போட்டியில் அதிமுக இல்லாதது எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், "அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி திமுக தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்" என்று பேசினார். அதேபோல விக்கிரவாண்டியின் சாணிமேடு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார். இப்படி பாமகவும், நாம் தமிழர் கட்சியும் தங்களுக்கு வாக்களிக்குமாறு அதிமுகவினரிடம் கோரிக்கை வைப்பது ஏன்? இது குறித்து அதிமுக கூறுவது என்ன?   பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பாமக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுகிறார். ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, "தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று அறிக்கை வெளியிட்டது. பட மூலாதாரம்,@EPSTAMILNADU விக்கிரவாண்டியில் அதிமுகவின் வாக்கு வங்கி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வன் 84,157 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா அஸ்மி 8,216 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் இருந்தார். திமுகவுக்கு 48.41 சதவீத வாக்குகளும், அதிமுகவுக்கு 43.47 வாக்குகளும் கிடைத்தன. திமுக மற்றும் அதிமுக இடையே இந்தத் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக எம்எல்ஏ புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அப்போது அதிமுக, பாமக மற்றும் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலைச் சந்தித்தது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி அடங்கியுள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 41.39%. இரண்டாம் இடத்தை அதிமுக-வின் பாக்யராஜ் (35.25% வாக்குகள்) பிடித்தார். பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் முரளிசங்கர் (15.78%) வாக்குகளைப் பெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் தங்கள் இருப்பை நிலைநிறுத்த வாய்ப்பு கிடைத்தும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற வலுவான தலைவர்கள் அம்மாவட்டத்தில் இருந்தும், இடைத்தேர்தலை புறக்கணித்ததன் மூலம் அதிமுக தனக்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.   அதிமுக வாக்குகளை குறிவைக்கும் பாமக மற்றும் நாம் தமிழர் அதிமுக தேர்தலைப் புறக்கணித்துள்ளதால், தி.மு.க, பா.ம.க மற்றும் நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம். கடந்த திங்கள்கிழமை, பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “இத்தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பியுள்ளது. பணம் கொடுத்து இக்கூட்டத்துக்கு மக்கள் வரவிடாமல் தடுக்க முயற்சித்தார்கள். ஆனால், நாம் பணத்திற்கு மயங்குபவர்களா? இத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே என்று நினைத்து வாக்களிக்காதீர்கள். ஒரு வாக்கு கூட திமுகவுக்கு விழக்கூடாது. அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்று பேசினார். பட மூலாதாரம்,@NAAMTAMILARORG படக்குறிப்பு,விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அதேபோல் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், இந்த இடைத்தேர்தல் என்பது தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்குமான போட்டி என்று கூறினார். "அதிமுக மற்றும் தேமுதிகவில் இருக்கும் உறவுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பொது எதிரி திமுகவை விரட்ட உதவுங்கள். எத்தனையோ முறை உங்கள் கூட்டணியில் இல்லாதபோதும் கூட உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். எனவே இம்முறை எனக்கு ஆதரவு கொடுங்கள்" என்று கூறினார். விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "அதிமுகவின் நிறுவனரான மக்கள் தலைவர் எம்ஜிஆர் திமுகவில் பொருளாளராக பதவி வகித்தவர். திமுக சார்பாக நின்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாங்கள் பாமக போல சாதியவாத, மதவாத கட்சி அல்ல. எனவே திராவிட சித்தாந்தத்தை பின்பற்றும் அதிமுக தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் எங்களுக்கு தான் கிடைக்கும்" எனக் கூறினார். இவ்வாறு தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று கட்சிகளும் அதிமுகவின் வாக்குகளைப் பற்றி பேசும் நிலையில், அதிமுக வாக்குகள் யாருக்கு என்பது தேர்தல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பட மூலாதாரம்,AFP பாமக மேடையில் ஜெயலலிதா புகைப்படம் இதுகுறித்து பாமக வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டபோது, "அதிமுக உருவானதே திமுகவை எதிர்க்க தானே. அவர்களின் பரம அரசியல் எதிரி திமுக தான் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அதிமுக தேர்தல் களத்தில் இல்லாதபோது, திமுகவுக்கு எதிராக நாங்கள் தான் நிற்கிறோம். எனவே தான் அதிமுகவினரிடம் ஆதரவு கேட்கிறோம். இதில் என்ன தவறு. திமுகவை எதிர்க்க அவர்கள் எங்களுக்கு நிச்சயம் ஆதரவளிப்பார்கள்" என்று கூறுகிறார். ஆனால் இதை மறுக்கும் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி, "தேர்தல் புறக்கணிப்பு என்றால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது மட்டுமல்ல, தேர்தலிலும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் தான் பொருள். ஒரு குடிமகனாக அதிமுக தொண்டனுக்கு வாக்களிக்க உரிமை உண்டு தான். அதற்காக அவர்கள் இன்னொரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள். இதை எங்கள் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் தெளிவாகக் கூறியுள்ளார்." என்கிறார். விக்கிரவாண்டியில் நடந்த பாமகவின் தேர்தல் பிரசார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மோதியுடன் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்ததும் சர்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக பேசிய பாமக வழக்கறிஞர் பாலு, "ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராக தான் நாங்கள் பார்க்கிறோம். எனவே தான் அவரது புகைப்படத்தை வைத்தோம்" என்கிறார். ஆனால் ஜெயலலிதாவை ஊழல்வாதி என அழைத்த பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பாமகவுக்கு அவரது புகைப்படத்தை பயன்படுத்த உரிமையில்லை என்கிறார் அதிமுகவின் ஜவஹர் அலி. "அம்மா ஜெயலலிதாவை எல்லோருக்குமான தலைவராக பார்ப்பது சந்தோஷம் தான், ஆனால பாமக தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே இதைச் செய்கிறது. எப்போதும் போட்டி திமுக- அதிமுக இடையே தான். அதேபோல நாங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு அளித்தார்கள். அதற்கு நன்றி, மற்றபடி அதிமுக தேர்தலை புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறது. உண்மையான அதிமுக தொண்டர்கள் மற்ற கட்சியின் பக்கம் சாய மாட்டார்கள்" என்கிறார் ஜவஹர் அலி. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் கடந்த ஜூன் 27ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஒருநாள் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தினர். இதற்கு முழு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.   'அதிமுக செய்த தவறு' படக்குறிப்பு,மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி உள்ளது என்றும் ஆனால் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் கை ஓங்கும் என்பதால் தான் தோல்வியைத் தவிர்க்க அதிமுக இத்தேர்தலை புறக்கணித்துள்ளதாகவும் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன். "அதிமுக செய்தது மிகப்பெரிய தவறு. தொடர்ந்து பல தோல்விகளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்துள்ளது உண்மைதான். ஆனாலும் அதிமுக களம் கண்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுகவுக்கு போட்டி அதிமுக தான் என்ற நிலையை அவர்களே மாற்றுவது போல உள்ளது. அதிமுகவின் சில வாக்குகள் பாமக பக்கம் செல்லவும் வாய்ப்புள்ளது" என்கிறார் குபேந்திரன். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பது இது புதிதல்ல. 2009ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தி.மு.க ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார். "வெற்றி, தோல்வி மற்றும் பிரசார செலவுகள் என்பதைத் தாண்டி தேர்தல் என்பது தொண்டர்களைச் சந்திக்கவும் கள நிலவரத்தை தெரிந்துகொள்ளவும் ஒரு தலைவருக்கு உதவும். தொண்டர்களும் உற்சாகமாக செயல்படுவார்கள். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை மற்றும் ஆளுமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவரது முடிவு தொண்டர்களை பாதிக்கும். அதிமுக தொண்டர்களின் சோக மனநிலையைப் புரிந்துகொண்டு தான் மற்ற கட்சிகள் அவர்களை குறிவைக்கின்றன." என்கிறார் குபேந்திரன். https://www.bbc.com/tamil/articles/c29dxjlynx6o
    • உங்களின் குறுங்கதைகள் நன்றாக இருக்கின்றன........கவி கூறியதுபோல் காலையில் உங்களின் கதை வந்திருக்குதா என்று பார்ப்பது வழக்கமாகி விட்டது , முன்பு ஈழநாட்டில் "கோகிலாம்பாள் வழக்கு" வாசித்ததுபோல்........!  😂 பழைய துப்பறியும் ஆங்கிலப்படங்களில் ஒருவரை கொல்லப்போகிறேன் என்று எச்சரிக்கை செய்வதற்கு ஒரு சிலந்தியை அவருக்கு பார்சலில் அனுப்பி வைப்பார்கள்.......! அப்பாடா, நான் முன்பே இந்தமாதிரி ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன் என்று எல்லோருக்கும் சொல்லியாச்சுது.......!
    • கடைசியாக இருந்த தமிழரசு கட்சியை பிளந்தததை தவிர இந்த திருவாளர் சாதித்தது என்ன? சும்மா வெறும் கதை விடக்கூடாது. புலிகளை இங்க சொல்வதற்கு என்ன முகாந்திரம் . ஐயா , சம்பந்தர் அரசியல் செய்தாரா ? அட , அந்தாள் பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புது உடுப்பு போட்டதுதான் மிச்சம் . இது அரசியலா ? அட போங்க உங்க பகிடிக்கு அளவேயில்லை .
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.