Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
20 MAR, 2024 | 04:40 PM
image

அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது. 

இலங்கையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காணும் வகையிலும், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்துக்கான முதல் செயலாளர் கலாநிதி போல் செக்கோலா தலைமையிலான குழுவினரே கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளனர். 

1Q9A1491.jpg

இதன்போது, இக்குழுவினர் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையிலான குழுவை சந்தித்து கலந்துரையாடினர். 

இந்த சந்திப்பின்போது அவுஸ்திரேலிய அதிகாரிகள் குழுவில், தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரக் கடல் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும் அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுதில்லியில் கடமையாற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியோர் அடங்கினர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சார்பில் கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் மற்றும் பொருளியல் துறைத் தலைவர் கலாநிதி (திருமதி) கே. கருணாநிதி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். 

தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் அவுஸ்திரேலிய அரசின் நலனோம்புத் திட்டங்கள் தொடர்பில் அவ்வேளை கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சட்ட விரோத புலம்பெயர்வு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சமூக மட்டச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

1Q9A1489.jpg

1Q9A1481.jpg

1Q9A1495.jpg

1Q9A1493.jpg

https://www.virakesari.lk/article/179244

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்மட ஆட் களும் தளம் அமைக்க போறாங்கள் போல இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மனி, சுவிஸ் மற்றும் அவுஸ் ஆகிய நாடுகள்தான் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கில் அதிக கவனம் செலுத்துகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kapithan said:

ஜேர்மனி, சுவிஸ் மற்றும் அவுஸ் ஆகிய நாடுகள்தான் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கில் அதிக கவனம் செலுத்துகின்றன. 

ஜேர்மனி என்ன செய்கிறது  வடக்கு கிழக்கில்  ??  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, Kandiah57 said:

ஜேர்மனி என்ன செய்கிறது  வடக்கு கிழக்கில்  ??  

வெளித் தெரியாது இருப்பதுதான் நல்லது.

கத்தரிக்காய் முற்றினால்  சந்தைக்கு வருமெல்லோ? 😉

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, Kapithan said:

வெளித் தெரியாது இருப்பதுதான் நல்லது.

கத்தரிக்காய் முற்றினால்  சந்தைக்கு வருமெல்லோ? 😉

முற்ற விட்டால் தானே? 🤪.  தெரியவில்லை என்பது நல்ல பதில்,....சும்மா எல்லாம் தெரிந்தவன் என்று படம் காட்டுதல் கூடாது   

  • Thanks 1
  • Haha 1
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

இந்த சந்திப்பின்போது அவுஸ்திரேலிய அதிகாரிகள் குழுவில், தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரக் கடல் பிராந்தியப் பாதுகாப்புசார் விற்பன்னரும் அவுஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழக தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளருமான கலாநிதி டேவிற் பிரேஸ்டர், ரோயல் அவுஸ்திரேலிய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரியும், புதுதில்லியில் கடமையாற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகருமான கப்டன் சைமன் பேட்மன், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமெண்டா ஜோண்சன் மற்றும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அத்தியட்சகர் வனேசா ரஃப் ஆகியோர் அடங்கினர். 

உவையள் இடம் மாறி வந்திட்டீனமோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, நியாயம் said:

உவையள் இடம் மாறி வந்திட்டீனமோ. 

ஏன்  -1 போட்டனீயள் ? ஏதும் கோபமோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kapithan said:

ஏன்  -1 போட்டனீயள் ? ஏதும் கோபமோ? 

இல்லை அவருக்கு விளங்கவில்லை  .... -.    +.   வை. விட்டுட்டு எண்ணிக்கையை பாருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Kapithan said:

ஏன்  -1 போட்டனீயள் ? ஏதும் கோபமோ? 

உங்கள் மீது தனிப்பட்ட கோபத்தில் சிகப்பு புள்ளி இடவில்லை. நீங்கள் இணைத்த குறிப்பிட்ட காணொளியில் தூசண வார்த்தைகள் உள்ளன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, நியாயம் said:

உங்கள் மீது தனிப்பட்ட கோபத்தில் சிகப்பு புள்ளி இடவில்லை. நீங்கள் இணைத்த குறிப்பிட்ட காணொளியில் தூசண வார்த்தைகள் உள்ளன. 

அதற்காகத்தான் Adults only என்று குறிப்பிட்டேன். 😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Kandiah57 said:

ஜேர்மனி என்ன செய்கிறது  வடக்கு கிழக்கில்  ??  

உந்த மேற்கு கோஸ்டிகள் சூரிய குளியல் குளிக்கிறோம் எண்டு போட்டு கறுத்த கண்ணாடியை போட்டு வடக்கு கிழக்கு கடற்கரையில் படுத்திருந்து உளவு பார்ப்பினமோ?

அவையளின்ட சூரிய குளியலை எங்கன்ட புரொஸ் களவா ரசிப்பினம்...

 அபிவிருத்தி என்ற போர்வையில் ஏதாவது செய்வினம்....75 களில்  CEY NOR  வந்த மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, putthan said:

75 களிலேயே வட துருவத்தில் இருக்கும் Norway இலங்கையில் கால்பதிக்கிறது. 

நாம்? 

☹️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, Kapithan said:

75 களிலேயே வட துருவத்தில் இருக்கும் Norway இலங்கையில் கால்பதிக்கிறது. 

நாம்? 

☹️

நாம்..எம் இனம் இருப்பது சிங்கள இனத்துக்கு பயமாக இருக்கின்றது ...என்றோ ஒரு நாள் இந்தியாவின் விரிவாக்கத்துக்கு துணை போகும் என சிங்கள இனம் நினைக்கின்றது.....நோர்வே தற்காலிக விருந்தாளிகள் ...ஆனால் நாம் பூர்வீக குடிகளில் ஒன்று ....இன சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவை  சிங்களவருக்கு  உண்டு...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நியாயம் said:

 உங்கள் மீது தனிப்பட்ட கோபத்தில் சிகப்பு புள்ளி இடவில்லை. நீங்கள் இணைத்த குறிப்பிட்ட காணொளியில் தூசண வார்த்தைகள் உள்ளன. 

நீங்கள் கந்தையா அண்ணைக்கு தானே  சிகப்பு புள்ளி போட்டிருக்கிறீர்கள் 🤔
கெட்ட காணொளி இங்கே இல்லை 🙏

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, putthan said:

நாம்..எம் இனம் இருப்பது சிங்கள இனத்துக்கு பயமாக இருக்கின்றது ...என்றோ ஒரு நாள் இந்தியாவின் விரிவாக்கத்துக்கு துணை போகும் என சிங்கள இனம் நினைக்கின்றது.....நோர்வே தற்காலிக விருந்தாளிகள் ...ஆனால் நாம் பூர்வீக குடிகளில் ஒன்று ....இன சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவை  சிங்களவருக்கு  உண்டு...

சிங்களத்தின் ஆதிமூலமும் புத்தர் பெருமானின் பிறப்பிடமும் இந்தியா தானே? அப்படியிருக்க கிந்தியா சிங்களத்திற்கு துரோகம் செய்யுமா?

மற்றும் படி தமிழ்நாட்டிலும்  போலி திராவிடமும் ஆரியமும் தமிழரை மெல்ல மெல்ல  ஏதோ ஒரு வகையில் இன சுத்திகரிப்பு செய்கின்றார்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்...

யாழ் பல்கலைகழக துணை வேந்தர் அண்மையில் ஒரு காணொலியில் சைவம் வெற்றி பெற்றது வாதம் வைத்து என புலம்பியுள்ளார்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, putthan said:

அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்...

உண்மைகளை ஒரு புறம் வைத்துவிட்டு  அரசியல் வெற்றிக்காக கிந்தியும் சிங்களமும் கை கோர்த்து நிற்கும்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

நாம்..எம் இனம் இருப்பது சிங்கள இனத்துக்கு பயமாக இருக்கின்றது ...என்றோ ஒரு நாள் இந்தியாவின் விரிவாக்கத்துக்கு துணை போகும் என சிங்கள இனம் நினைக்கின்றது.....நோர்வே தற்காலிக விருந்தாளிகள் ...ஆனால் நாம் பூர்வீக குடிகளில் ஒன்று ....இன சுத்திகரிப்பு செய்ய வேண்டிய தேவை  சிங்களவருக்கு  உண்டு...

நீங்கள் கூறு சிங்களத்தின் பிரச்சனை.

அந்தப் பயத்தைப் போக்க நாம்  என்ன  செய்தோம்? 

வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து  சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம். 

அடுத்த சாதிக்காரன்  எமது ஊர்களில் வீடு வளவு  வாங்கவே அனுமதிக்காத நாம் இந்தியத் தலைவர்களின் படங்களையும் சிலைகளையும் வைத்தால் சிங்களம் என்ன செய்யும்? 😩

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kapithan said:

வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து  சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம். 

அடுத்த சாதிக்காரன்  எமது ஊர்களில் வீடு வளவு  வாங்கவே அனுமதிக்காத நாம் இந்தியத் தலைவர்களின் படங்களையும் சிலைகளையும் வைத்தால் சிங்களம் என்ன செய்யும்? 😩

மணி....👍🏼

பண்ணியில் பண்ணிப்பாருமன். 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

நீங்கள் கூறு சிங்களத்தின் பிரச்சனை.

அந்தப் பயத்தைப் போக்க நாம்  என்ன  செய்தோம்? 

வீடுவீடாக இந்தியத் தலைவர்களின் படங்களைக் கொழுவி / மாட்டி சிலைகளை வைத்து  சிங்களத்திற்கு பயத்தை ஊட்டியதுதான் மிச்சம். 

அடுத்த சாதிக்காரன்  எமது ஊர்களில் வீடு வளவு  வாங்கவே அனுமதிக்காத நாம் இந்தியத் தலைவர்களின் படங்களையும் சிலைகளையும் வைத்தால் சிங்களம் என்ன செய்யும்? 😩

இந்தியா தலைவர்களின் சிலைகள் மட்டுமல்ல எமது மண்ணில் ஆக்கிரமிப்பு செய்த சகலரும் சிலைகளையும் தங்களது கருத்துக்களையும் நன்றாகவே நிலைநாட்டி சென்றுள்ளனர் .. ...இந்தியாவிலும் அதே நிலை தான் ... இருந்தும் இந்தியா ஓரளவு பூர்வீக மக்களை அங்கிகரிக்கின்றது ..

நீங்கள் கூறும் இந்தியா கருத்துக்களையும் இந்தியா சிலைகளையும் ஒர் இனம் கடைப்பிடிக்கின்றது என்ற காரணத்தால் அவர்களை இனசுத்திகரிப்பு செய்ய வேணும் என்ற வாதம் ஏற்புடையதல்ல..

உலகம் பூராவும் இது நடை பெற்று கொண்டு தான் இருக்கின்றது ..அரபிய மொழி,அரபிய மதம் தங்களது அடையாளத்தை நிலை நாட்டுகிறது,மேற்கத்தைய நாகரீகம் கிறிஸ்தவ அடையாளங்களை பரப்பி கொண்டு தான் இருகின்றனர் ...அவர்களின் அடையாளங்களும் சிறிலங்காவில் உண்டு ஆகவே இந்தியாவின் அடையாளன்களை நாம் உப யோகிப்பதால் சிங்களவர் கோபமடைகின்றனர்,இன சுத்திகரிப்பு செய்கின்றனர் என்ற வாதம் ஏற்புடையது அல்ல .. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

மற்றும் படி தமிழ்நாட்டிலும்  போலி திராவிடமும் ஆரியமும் தமிழரை மெல்ல மெல்ல  ஏதோ ஒரு வகையில் இன சுத்திகரிப்பு செய்கின்றார்கள் தானே?

உண்மை ...திராவிடம் ,ஆரியம்,இந்து,சைவம்,வைணவம்,கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற சகல கருத்துருவாக்க மையங்களும் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கின்றன..என்பது எனது பார்வை...
 திர்வள்ளுவரின் முப்பால் தத்துவதஹ்தில் வாழ்ந்த இனத்தை படிப்படியாக அழித்து  இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள்...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, putthan said:

இந்தியா தலைவர்களின் சிலைகள் மட்டுமல்ல எமது மண்ணில் ஆக்கிரமிப்பு செய்த சகலரும் சிலைகளையும் தங்களது கருத்துக்களையும் நன்றாகவே நிலைநாட்டி சென்றுள்ளனர் .. ...இந்தியாவிலும் அதே நிலை தான் ... இருந்தும் இந்தியா ஓரளவு பூர்வீக மக்களை அங்கிகரிக்கின்றது ..

நீங்கள் கூறும் இந்தியா கருத்துக்களையும் இந்தியா சிலைகளையும் ஒர் இனம் கடைப்பிடிக்கின்றது என்ற காரணத்தால் அவர்களை இனசுத்திகரிப்பு செய்ய வேணும் என்ற வாதம் ஏற்புடையதல்ல..

உலகம் பூராவும் இது நடை பெற்று கொண்டு தான் இருக்கின்றது ..அரபிய மொழி,அரபிய மதம் தங்களது அடையாளத்தை நிலை நாட்டுகிறது,மேற்கத்தைய நாகரீகம் கிறிஸ்தவ அடையாளங்களை பரப்பி கொண்டு தான் இருகின்றனர் ...அவர்களின் அடையாளங்களும் சிறிலங்காவில் உண்டு ஆகவே இந்தியாவின் அடையாளன்களை நாம் உப யோகிப்பதால் சிங்களவர் கோபமடைகின்றனர்,இன சுத்திகரிப்பு செய்கின்றனர் என்ற வாதம் ஏற்புடையது அல்ல .. 

 புத்தா 

என்ன, சுருதி மாறுகிறது? 

""அந்த புத்த பெருமானின் பெளத்த மதத்தை இந்தியாவிலிருருந்து அகற்றியவர்கள் இந்துக்கள் என்ற பயம் சிங்களவர்களுக்கு உண்டு.....ஆகவே தான் சிவனை கண்டால் துறவில்கி நிற்க வேணும் என நினைக்கிறார்கள்...""

எனது பதில் மேலே 👆 தாங்கள் கூறியதற்குரியது. 

இனச் சுத்திகரிப்பு, ஆக்கிரமிப்பு, ஐரோப்பா, கிறீஸ்தவம், சுத்திகரிப்பு என்று கூழாம்பாணியாக எல்லாவற்றையும் கொண்டுவந்கொட்டுகிறீர்கள? 

🤨

6 hours ago, putthan said:

உண்மை ...திராவிடம் ,ஆரியம்,இந்து,சைவம்,வைணவம்,கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற சகல கருத்துருவாக்க மையங்களும் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கின்றன..என்பது எனது பார்வை...
 திர்வள்ளுவரின் முப்பால் தத்துவதஹ்தில் வாழ்ந்த இனத்தை படிப்படியாக அழித்து  இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள்...

சைவம் எப்படித் தமிழை அழிக்கிறது? 

கிறீஸ்தவம் தமிழை எப்படி அழிக்கிறது? தமிழின் வளர்ச்சிக்கு கிறீஸ்தவத்தின் பங்கு அளப்பரியது. அது தங்களுக்குத் தெரியாவிட்டால் ஒருமுறை கொஞ்சம் ஆய்வு செயுங்கள். 

தாங்கள் தற்போது எழுதும் தமிழ் வீரமா முனிவர் போன்ற கிறீஸ்தவ பாதிரியார்களது கடுமையான உழைப்பின் பயனாக கிடைத்தது  என்பது தெரியாதோ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் கந்தையா அண்ணைக்கு தானே  சிகப்பு புள்ளி போட்டிருக்கிறீர்கள் 🤔
கெட்ட காணொளி இங்கே இல்லை 🙏

கபிதன். இணைத்த கெட்ட காணொளி முதலில் இருந்தது ...நிர்வாகம் அகற்றி விட்டது என நினைக்கிறேன்     நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பகுதியில் இது சம்பந்தமாக  நிழலி. ஒரு பதிவு போட்டிருந்தார்.  போய் பாருங்கள் 

  • Thanks 1
Posted
1 hour ago, Kapithan said:

சைவம் எப்படித் தமிழை அழிக்கிறது? 

சைவம் தமிழை ஒருபோதும் வளர்க்கவில்லை. தமிழை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சைவம் தமிழைத் தன்னுடன் இணைத்து உரிமை கோருவதன் மூலம் மக்களிடமிருந்து அந்நியப்பட வைக்கிறது. தமிழுக்கு மதம் கிடையாது.

  • Like 1
  • Thanks 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.