Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும்  ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை பற்றி  விசேட கவனம் செலுத்துவதாக  ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர்,  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இன்று (22) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இது தொடர்பான உரையாடல் பின்வருமாறு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச –

2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த மசோதாவின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக வயது குறைந்த சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அது போல தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும்  முன்வைக்க மிகவும் முக்கியமான விஷயங்களாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.

மேலும், குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 

அவரது விளக்கத்தை நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்தரையாட  வேண்டிய விஷயம். எனவே, அதைச் செய்வதில் இரண்டு கதைகள் இல்லை.

Tamilmirror Online || பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு

படு முட்டாள்தனமான தட்டத் திருத்தம் இது. 14 வயது கொண்ட ஒரு சிறுமி என்னதான் ஒத்துக் கொண்டாலும் அவர் மீது இடம்பெறும் பாலியல் உறவு என்பது பாலியல் வல்லுறவே. ஏனெனில் அந்த சிறுமியால் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல் அளவிலும் பாலியல் உறவுக்கு தயாராக இருப்பாரோ என்பதும் சந்தேகத்துக்குரியவை. 

இலங்கை அரசு இனி பாலியல் வல்லுறவையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் செயற்பாட்டுக்காக சிறுமிகளின் வயதெல்லையை குறைக்கும் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளை மீளப்பெற வேண்டும் - சஜித்

Published By: DIGITAL DESK 3   22 MAR, 2024 | 05:37 PM

image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை வடுத்தார்.

பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை (22)  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை ஆளும் கட்சி பிரதமகொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த சட்டமூலத்தின்   மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக  சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அதேபோன்று தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும்  முன்வைப்பது மிகவும் முக்கியமான விடயங்களாகும்.

அதனால் குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.  

இதற்கு அமைச்சர்   பிரசன்ன ரணதுங்க  பதிலளிக்கையில்,

எதிர்கட்சித்தலைவரின் கோரிக்கையை   நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபசாரத்தை சட்ட பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்துரையாட  வேண்டிய விடயம். எனவே, அதைச் செய்வதில் இரண்டு நிலைப்பாடுகள் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/179443

  • கருத்துக்கள உறவுகள்

உடலுறவு கொள்ளும் வயதை 14 ஆக குறைக்கும் திருத்த வர்த்தமானியை இடைநிறுத்துங்கள் - பாராளுமன்ற பெண் உறுப்பினர் ஒன்றியம்

Published By: DIGITAL DESK 3   22 MAR, 2024 | 09:55 PM

image

(எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்)

1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயதெல்லை 14 வயதாக குறைக்க  உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திருத்தத்தை உடன் நிறுத்துமாறு பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ள ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  (வைத்திய கலாநிதி) சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம் முன்வைப்பதாக அறிவித்துள்ளார்.

தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீதியை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பில் மேலதிகத் தகவல்கள் அல்லது மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது ஒன்றியம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளதாக கடிதம் மூலம் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/179445

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலக்காட்டாறு என்று பார்த்தால் பதின்ம வயது பாலியல் விடுதலையும் சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்

சஜீத் முசுலிம் வாக்குக்கு...வலை வீசுகிறாரோ..

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மீள பெறப்படும்

wijeyadasa-rajapakshe-300x200.jpg

குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மீள பெறப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ இன்று (23) தெரிவித்துள்ளார்.

தண்டனை சட்டக்கோவைக்கு அமைவாக, 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருந்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்படும். எனினும், 14 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட சிறுமிகள் தங்களின் விருப்பத்துடன் தொடர்புகளை பேணிய தகவல்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க அமைச்சுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், நீதிபதியினால் தண்டணை உத்தரவை பிறப்பிக்கும் வகையில், தண்டனை கோவையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனினும், சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை இரத்து செய்யுமாறு சிவில் அமைப்புகளும் மகளிர் அமைப்புகள் சிலவும் கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய தரப்பினருக்கு மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. கலந்துரையாடலுக்கு பிறகு திருத்தம் அவசியமா, எவ்வாறான திருத்தம் மெற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/296900

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை வாபஸ்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் - நீதி அமைச்சர்

24 MAR, 2024 | 09:09 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது என உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம் பாராளுமன்றத்திலும் அதனை வாபஸ்பெற்றுக்கொள்ள  நடவடிக்கை எடுப்போம் என  நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

14 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள் தொடர்பான புதிய சட்ட திருத்தம் தொடர்பில் குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,    

தண்டனைச்சட்டக்கோவை ஏற்பாடுகளுக்கு அமைவாக 16 வயதுகுட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்வது அல்லது உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருந்த ஒருவருக்கு பெற்றுக்கொடுக்கப்படும் குறைந்த கட்டாய தண்டனைகள் காணப்படுகின்றன.  சில சந்தர்ப்பங்களில் 14 வயதுக்கு மேற்பட்ட  16வயதுக்கு குறைந்த சிறுமிகள் அவர்கள் தொடர்புகளை வைத்துக்கொண்டிருப்பவர்களுடன் இவ்வாறான நிலைமைக்கு முகம்கொடுத்து வருவதான அறிக்கைகள் காரணமாக  கடந்த 3, 4 வருடங்களாக ஆராய்ந்து நீதி அமைச்சுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

தண்டனைச் சட்டக் கோவையில் தண்டனை வழங்கும் முறைமையில்  ஏதோவொரு வகையில் திருத்தம் மேற்கொண்டு நிலைமையை கருத்திற்கொண்டு பொருத்தமான  தண்டனை ஒன்றை வழங்கும் வகையில் நீதிபதிகளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என தெரிவித்தோம். 

எனினும் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை இரத்துச் செய்யுமாறு சிவில் அமைப்புகள்,  மகளிர் அமைப்புகள் என்னிடம் கேட்டுக்கொண்டன. அதன் பிரகாரம்  இந்த சட்டமூலத்தை உயர் நீதிமன்றில்  சவாலுக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் இந்த சட்டமூலத்தை தொடர்ந்து கொண்டு செல்லப்போவதில்லையென நான் சட்டமா அதிபருக்கு ஆலாேசனை வழங்கினேள்

அதேநேரம் இது தொடர்பாக அடுத்தவாரம் கலந்துரையாட வருமாறு குறித்த தரப்பினர்களுக்கு அறிவுவுறுத்தியுள்ளோம். கலந்துரையாடலுக்கு பின்னர், திருத்தம் அவசியமா? எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். எனவே  சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படமாட்டாது என உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம். பாராளுமன்றத்திலும் அதனை வாபஸ்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

இந்த சட்டமூலம் என்னால் ஆராயப்பட்டதன் பிரகாரம் சமர்ப்பிக்கப்படவில்லை. நீதிபதிகள் உள்ளிட்ட விசேட நிபுணர்கள் குழுவொன்றினாலே சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவோம். எதிர்காலத்தில் மேலும் 60 சட்டமூலங்களை கொண்டுவர இருக்கிறோம். அனைத்து சட்டமூலங்களும் சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்து, அது அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கொண்டுவரப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/179604

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சிறுமிகள் மீதான தவறான நடத்தை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான தவறான நடத்தை  சம்பவங்களில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்மதத்துடனேயே இடம்பெற்றுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பொலிஸ் திணைக்களத்திடம் கோரப்பட்ட தகவல்கள், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரத்னவால் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள்

வடக்கு மாகாணத்தில் தவறான நடத்தைகள் தொடர்பில் 131 பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 90 சம்பவங்கள் சிறுமிகளின் இணக்கத்துடன் இடம்பெற்றுள்ளதுடன் 33 சம்பவங்கள் மாத்திரமே அவர்களின் இணக்கமில்லாது நடந்துள்ளன.

வடக்கில் சிறுமிகள் மீதான தவறான நடத்தை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Shocking Information Release Misbehavior Girls

மேலும், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 143 சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://tamilwin.com/article/shocking-information-release-misbehavior-girls-1711334315

  • கருத்துக்கள உறவுகள்

தண்டனை சட்டக் கோவை திருத்தத்தை மிளப் பெறாவிட்டால் தொடர் ஆர்ப்பாட்டங்கள் - அரசாங்கத்தை எச்சரிக்கும் எதிர்க்கட்சி தலைவர்

Published By: VISHNU    01 APR, 2024 | 01:08 AM

image

(எம்.மனோசித்ரா)

பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையை 16இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கான தண்டனை சட்டக் கோவை திருத்தத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இவ்வாரம் பாராளுமன்ற அமர்வின் போது இந்த திருத்தத்தை அரசாங்கம் மீளப்பெறாவிட்டால் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (31) பதுளையில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை, அடிப்படை உரிமைகளில் உள்ளடக்குவதற்கான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளிக்கின்றேன். 'நவீன பெண்கள்' என்பதே எமது இலக்காகும். நவீன பெண்களை நாட்டில் உருவாக்குவதற்காக மக்கள் சக்தி பெண்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.

தொழிற்துறையில் பெண்களின் பங்கேற்பு 33 சதவீதமாவே காணப்படுகிறது. அதனை நாம் 40 சதவீதமாக உயர்த்துவோம். அரச துறைகளில் மாத்திரமின்றி தனியார் துறைகளிலும் சம்பளத்துடனான பிரசவ கால விடுமுறையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாடுபடுவோம். பெண்கள் வீடுகளில் ஆரம்பித்து, போக்குவரத்து, வேலைத்தளங்கள் என அனைத்து இடங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாகின்றனர்.

இவற்றிலிருந்து பெண்களை முழுமையாக பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 17 910 ஆரம்ப பாடசாலைகள் இலங்கையில் உள்ளன. இவற்றில் 21 557 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதற்கமைய ஆரம்ப மாணவர்களிலுள்ள மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை அரச கொள்கையாக நாம் நடைமுறைப்படுத்துவோம். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் வீட்டுப்பணிப்பெண்ணாக மாத்திரமே எமது பெண்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலைமையை மாற்றி தாதி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை துரிதப்படுத்துவோம். இலங்கையிலுள்ள 16 இலட்சம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கென விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். நுண்கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை அந்த நெருக்கடிகளிலிருந்து முற்றாக பாதுகாப்போம். பெருந்தோட்டத் துறைகளிலுள்ள பெண்களை 'பெருந்தோட்ட தொழிலாளிகள்' என்று அடையாளப்படுத்தாமல் 'மேல்நாட்டு பெண்கள் சமூகம்' என்று அடையாளப்படுத்துவோம்.

அரசாங்கம் செய்ய முனைகின்ற மிக முட்டாள் தனமான செயல் ஒன்று தொடர்பில் தற்போது வெளிப்படுத்தவுள்ளேன். அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ள தண்டனை சட்டக் கோவை திருத்தத்தில், குற்றங்களை தடுப்பதற்கன்றி அவற்றை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுக்கிறது. பாலியல் உறவுகள் தொடர்பான விருப்பத்தை வெளிப்படுத்தும் வயதை, 16 இலிருந்து 14ஆகக் குறைப்பதற்கான திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இதற்கான விருப்பத்தைத் தெரிவிக்க முடியும். இன்று நாடளாவிய ரீதியில் பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல், சீண்டல்கள் வானளவு உயர்வடைந்துள்ளன. இவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் பதில் யாதெனில், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதெல்லையைக் குறைப்பதாகும். பாலியல் துஷ்பிரயோகங்களை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது?

அது மாத்திரமல்ல. 22 வயதுக்குட்பட்ட ஆணொருவர் ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் அல்லது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த தண்டனை சட்டக் கோவை திருத்தத்தின் ஊடாக தளர்த்தப்பட்டுள்ளது. இது சரியா என்று நான் கேட்கின்றேன்? எம் நாட்டு பெண்களை நாம் இவ்வாறு தான் பார்ப்பதா? 363ஆம் உறுப்புரைக்கமைய பெண்கள் துஷ்பிரயோகம் என்ற விடயத்தில் ஆண்கள் துஷ்பிரயோகமும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான உறுப்புரையை வலுவிழக்கச் செய்வதற்காகவும் அர்த்தமற்றதாக்குவதற்கும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் துஷ்பிரயோகத்தைப் போன்றே ஆண்கள் துஷ்பிரயோகத்துக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் அதற்காக வெ வ்வேறாக உறுப்புரைகள் தயாரிக்கப்பட வேண்டும். தற்போது 365 பீ உறுப்புரையின் ஊடாக, இதற்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும். ஆனால் அதனை செய்யாமல், தண்டனை சட்டக் கோவை திருத்தத்தின் ஊடாக பெண்களின் உரிமைகளை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு எமது கடும் எதிர்ப்பினை வெளியிடுவோம். பாராளுமன்றம் கூடும் போது, மனசாட்சி இருந்தால் உடனடியாக இந்த திருத்தத்தினை மீளப்பெறுங்கள். அவ்வாறில்லை எனில் அதனை மீளப்பெறும் வரை பாராளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இதற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/180096

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14 ஆக குறைக்கும் சட்டமூலத்தை மீளப்பெற்றார் நீதியமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14ஆக குறைக்கும் வகையில் தண்டனை சட்டகோவையின் 364 ஆம்  பிரிவை திருத்துவதற்கான இரண்டாம் மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட  உத்தேச சட்டமூலத்தை  நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி  விஜயதாச ராஜபக்ஷ மீளப்பெற்றுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு அரசியல் மற்றும் சிவில் தரப்பு மத்தியில் கடும் விமர்சனமும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே 'தண்டனைச் சட்டக் கோவையின் 364ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டு 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம்  நீதியமைச்சுக்கு அறிவித்திருந்தார்.

தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சட்டமூலத்தின் பாரதூரத்தன்மையை சுட்டிக்காட்டி  சட்டமூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை மீளப்பெற்றுக்கொண்டார்.

பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14 ஆக குறைக்கும் சட்டமூலத்தை மீளப்பெற்றார் நீதியமைச்சர் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.