Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

பிஞ்சுக் காதல்…

பள்ளிப்  பருவம்

துள்ளித் திரிந்த காலம்..

மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை

மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்…

 

மெதடித்த மாணவி..

மாதவி நடிகையின்

போட்டோக் கொப்பி

போற  வாற இடமெல்லாம்

துப்புத்  துலக்கியாச்சு..

என்னவென்று தொடங்குவது

அய்டியாவையும் தந்தான்

அந்தப் பாவிமகன் முதலில்

வெற்றுத்  தாளை கசக்கி

காலடியில் போடு..

எடுத்தால்  வெற்றி உனக்கென்றான்….

காலால் மிதிபட்டு

கதியால் வேலிக்குள்   கிடந்தது

காகிதக் கசக்கல்…

 

மூளையை கசக்கி பிழிந்து

எப்பிடியோ பிறந்த நாள்

கண்டு பிடிச்சிட்டம்..

பரிசு கொடுக்கும் அய்டியா..

பொடிநடையாய் நடந்து

திருமகள்   கடையில்  கே.ஜி

பேனையும் வாங்கியாச்சு…

காலடியிலும்….போட்டு

கையாலும் எடுத்துவிட்டது பிகர்

இனி லைன் கிளீயர்..

 

அடுத்து ..கைக்குட்டை

குடுக்கிற பிளான்

நல்ல லேஞ்சி வாங்க

நெல்லியடியில் அலைஞ்சு

கண்மணியின் கையிலை கொடுத்து

ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு…

பதில் சிரிப்பே தவிர….

நோ ...வாய் மொழி…

 

லேஞ்சி கொடுத்தால்

காதல் முறியும்..என்பதை

லேட்டாத்தான் வாசியாலை

பேப்பரிலை…பார்த்தம்

சாத்திரம்  உண்மைதான்..

இரண்டாம்நாள்

இன்னொருவர் மூலம்

என் கையில்

பேனாவும் லேஞ்சியும்..

 

ஏனாம்

ஏற்கனவே அவவுக்கு

லவ்வு இருக்காம்…

அப்ப ஏன்…

அவரு பசையுள்ள ஆளாம்..

நான்..

கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும்

கடன் பட்ட ஆள்தானே….

எப்படி நான் மாதவிக்கு

வலைவிரிக்க மூடியும்

காதல் தோல்வியில்

தாடி வளர்த்து

வாழ்வே மாயம் பாடுவமென்றால்

எட்டாம் வகுப்பு படிக்கிற  எனக்கு

தாடியும் வளருமோ

மீசையும் வளருமோ…

பிஞ்சுக்காதல்…இல்லை இது

பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட

நப்பாசை….

கூடா நட்பால் வந்தவினை

பூவரசம் கம்பால்

வாங்கித் தெளிந்து..

கொழும்புக்கு

பெட்டி கட்டினதுதான்…மிச்சம்

 

(கற் பனையன்றி  வேறொன்றுமில்லை)

  • Like 6
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நம்பியாச்சு நம்பியாச்சு 😂

(கற் பனையன்றி  வேறொன்றுமில்லை)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அறியாப் பருவமடா --- மலர் 

அம்பையே வீசாதடா மதனா ......!  😂

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகான ஒரு கனா காலம். லேஞ்சி மட்டுமல்ல பேனாவும் நட்ப்பை முறிக்குமாம் என்பார்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/3/2024 at 04:19, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நம்பியாச்சு நம்பியாச்சு 😂

(கற் பனையன்றி  வேறொன்றுமில்லை)

சத்தியமா (ஆர் மேலும் சொல்லாமல்) பொய்யில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/3/2024 at 04:46, suvy said:

அறியாப் பருவமடா --- மலர் 

அம்பையே வீசாதடா மதனா ......!  😂

 

என்ன செய்யுரதுசார்...சுற்றம் சூழவெல்லாம் ..காதல்பறவைகள்  சிறகடிக்க.செட்டை முளையாத குஞ்சுமாதிரி பறக்க வெளிக்கிட்டென்....நன்றி..உங்கள் ஆதரவிற்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிஞ்சுக்காதல் எல்லாருக்கும் உள்ள காதல். நெஞ்சாங்கட்டை எரியும் வரைக்கும் அந்தக்காதல் அழியாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/3/2024 at 02:11, alvayan said:

பிஞ்சுக்காதல்

ஆகா அல்வாயன்

எனக்கும் பிஞ்சுக் காதல்

பேரப் பிள்ளைகள் வரை.

இன்னமும் காதலர்கள் தான்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

பிஞ்சுக்காதல் எல்லாருக்கும் உள்ள காதல். நெஞ்சாங்கட்டை எரியும் வரைக்கும் அந்தக்காதல் அழியாது.

உண்மைதான்...மறக்க முடியத நாட்கள்.நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆகா அல்வாயன்

எனக்கும் பிஞ்சுக் காதல்

பேரப் பிள்ளைகள் வரை.

இன்னமும் காதலர்கள் தான்.

நீங்கள் கொடுத்து வைத்தவர்...வாழ்க உங்கள்  காதல் வாழ்வு....வரவுக்கு நன்றி..

On 23/3/2024 at 12:02, நிலாமதி said:

அழகான ஒரு கனா காலம். லேஞ்சி மட்டுமல்ல பேனாவும் நட்ப்பை முறிக்குமாம் என்பார்கள். 

இதனை முன்னரே..சொல்லியிருந்தால்....காதல் தப்பிப் பிழைத்திருக்கும்..

  • Haha 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.