Jump to content

சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு சோலார் மின்சாரம் | Solar Power for House

சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? அதன் நன்மை தீமைகளைப் பற்றி கள உறவுகள் தாங்கள் அறிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்களுடைய வீட்டிலும் தம்பியின் தீவிர முயற்சியில் சோலார் பனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? அதன் நன்மை தீமைகளைப் பற்றி கள உறவுகள் தாங்கள் அறிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
எங்களுடைய வீட்டிலும் தம்பியின் தீவிர முயற்சியில் சோலார் பனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய மின்சக்க்தியினை பாவிக்கிறார்கள், இந்த  மின் தகடுகளின் ஆயுள்காலம் சராசரியாக 15 ஆண்டுகள்,நேரோட்டமின் சக்தியினை ஆடலோட்டம் மின்சக்தியாக மாற்றும் மின் மாற்றியின் ஆயுள் காலம் கிட்டதட்ட 10 வருடங்கள்.

தனிப்பட்ட முறையில் நானும் பயன்படுத்துகிறேன், மிகவும் உபயோகமானது.

2007 இல் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு ஆட்சிக்கு வந்த போது பல சலுகைகளை வழ்ங்கி ஆதரித்தமையால் பலர் இந்த மின் சக்தியினை நாடியிருந்தார்கள், அந்த மின் தகடுகள் காலாவதியாகும் நிலையில் அவற்றினை மீழ்சுத்திகரிப்பு செய்வது கடினமான பணியாக இருப்பதால் அவற்றினை இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்), எனது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவர் அதனை இறக்குமதி செய்து அங்குள்ள மக்களின் தலையில் கட்டி விடுகிறார் இரண்டாம் உபயோக மலிவான மின் தகடாக.

இந்த மாதிர்யானவர்கள் தொடர்பாக விழிப்பாக இருங்கள், உங்கள்காணொளியினை பின்னர் பார்க்கிறேன்.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சோலார் பனல்கள்

உங்கள் சோலர் பனல்கள் பயன் பெறட்டும்.

மின்சார கட்டணங்கள் இனிமேல் குறைய சாத்தியமில்லை.

கோடை அனல் காரணமாக இன்னும் பிரச்சனைகள் வரலாம்.

அதைவிட தேர்தல்கள் முடிய கட்டணங்கள் மேன்மேலும் அதிகரிக்கலாம்.

17 minutes ago, vasee said:

இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்)

உலக நாட்டு குப்பைகளைப் போடத் தானே இலங்கை போன்ற நாடுகள் உள்ளன.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உலக நாட்டு குப்பைகளைப் போடத் தானே இலங்கை போன்ற நாடுகள் உள்ளன.

எனது உறவினர் இந்தியாவில் உள்ளார், இலங்கையிலும் இவ்வாறு குப்பைகளை மக்களின் தலையில் கட்டிவிடலாம் என்பதாலால் குறிப்பிட்டேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

மின்சார கட்டணங்கள் இனிமேல் குறைய சாத்தியமில்லை.

ஜேர்மனியில் எங்கு பார்த்தாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாடிகள் சுற்றிக்கொண்டிருப்பதை காணலாம். அத விட வெட்ட வெளியெங்கும் சோலார் தகடுகள் காட்சியளிக்கும். இருந்தாலும் மின்சார கட்டணம் குறைவதற்கு பதிலாக 5 மடங்கு விலை கூடியிருக்கின்றது.
உலகத்திலேயே மிக பாதுகாப்பான அணுமின்சார நிலையங்களை மூடி விட்டு உலக சூழல் சுற்றாடல் சுகாதாரம் என மக்களை வாட்டி எடுக்கின்றார்கள்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உலகத்திலேயே மிக பாதுகாப்பான அணுமின்சார நிலையங்களை மூடி விட்டு உலக சூழல் சுற்றாடல் சுகாதாரம் என மக்களை வாட்டி எடுக்கின்றார்கள்.

அண்ணை தடித்த எழுத்து இது உண்மையா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

அண்ணை தடித்த எழுத்து இது உண்மையா?!

ஒரு சில வருடங்களுக்கு முன் அணுமின் நிலையங்களை இழுத்து மூடும்போது பத்திரிகையில் வந்த செய்தி அது.
மற்றும் படி யாமறியோம் பராபரமே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

அண்ணை தடித்த எழுத்து இது உண்மையா?!

அவர் பல விடயங்களை அறியாமல் தானே வலுவான கருத்துக்களை வைத்திருக்கிறார்😂?

மேலே சூரிய மின் தகடுகளின் அலுமினியம் கழிவாகச் சேர்வதையே பெரிய விடயமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள் (அலுமினியம் போன்ற உலோகங்கள் எண்ணற்ற தடவைகள் மீள் சுழற்சி செய்யக் கூடியவை என்பதையும் மறந்து விட்டார்கள்). 

 அணு சக்தி மின் நிலையத்தில் பயன்படுத்திய யுரேனியம் கழிவை அலுமினியத்தின் இடத்தில் வைத்துப் பாருங்கள். அதை மீள் சுழற்சி செய்யப் பெரிய வழிகள் இல்லை. எங்காவது பூமியின் அடியில் புதைத்துத் தான் வைக்க வேண்டும். இந்த ஆழப் புதை குழிகளை அமைக்க பெரும் செலவாகும் என்பதால், சில நாடுகளில் நிலத்தின் மேலேயே வைத்திருக்கிறார்கள். ஒரு பாரிய இயற்கை அனர்த்தம் வந்தால், இந்த யுரேனியம் கழிவு சூழலில் கலந்து பெரும் அனர்த்தங்களை விளைவிக்கும். 

இதை விட மிகக் குறைவான வாய்ப்புள்ள ஒரு ஆபத்து, அணு உலையை குளிர்விக்கும் தண்ணீர் சூழலில் கலக்கும் ஆபத்து. பிரான்சில் நடந்திருக்கிறது. 

இன்னொரு அணு உலை தொடர்பான பேராபத்து ஜப்பானில் பூகம்பத்தினால் நடந்தே விட்டது. Fukushima நகரில் அணு உலையும், அதன் குளிர்விக்கும் பொறிமுறையும் சுனாமியால் சேதமாகி இன்னும் 50 ஆண்டுகளுக்கு சுத்தமாக்கும் வேலைகள் செய்ய வேண்டிய நிலை. 

இந்த ஆபத்துக்கள் எல்லாம் கணக்கிலெடுத்துத் தான், அணு உலை மின்சாரத்தை நாடுகள் குறைக்க முயல்கின்றன.  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்திற்கு எதிராக அவ்வூர் மக்கள் அதன் ஆபத்து கருதியே அவ்வளவு போராடினார்கள். உதயகுமார் என்னும் ஒரு பேராசிரியர் என்று ஞாபகம். அமெரிக்காவில் பல்கலை ஒன்றில் இருந்தார். அவர் தமிழ்நாடு திரும்பி, இந்தப் போராட்டத்தில் முன்னால் நின்றார். அந்த அணு உலையில் விபத்து ஏதும் ஏற்பட்டால், இலங்கையின் கடற்கரை பக்கம் கூட பாதிக்கப்படும்.

ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தின் தாக்கம், 38 வருடங்களின் பின், இன்றும் வீரியம் குறையாமலேயே இருக்கின்றது. ரஷ்யா - உக்ரேன் போரிலும் அந்த இடத்தை தொடாமல் விட்டே வைத்திருக்கின்றார்கள். அங்கிருக்கும் சில விலங்குகள் மிக அதிகமான கதிர் வீச்சுக்கு எப்படி இயல்பாகி வாழ்கின்றன என்ற விவரணம் இங்கு போன வாரம் ஒரு தொலைக்காட்சியில் போனது. கூடங்குளத்திலும் ரஷ்யாவின் இதே தொழில்நுட்பமே என்று சொன்னார்கள்.

சூரிய ஒளி மின்கலங்கள் இங்கு இப்பொழுது கூரை ஓடுகளின் வடிவிலும் வந்துவிட்டன. என் அயலவர் ஒருவர் அதைப் போட்டிருக்கின்றார். இங்கு இந்த வருடம் சரியான மழை. சூரிய மின்கல ஓடுகள் போட்ட பின், அவரின் வீட்டில் மழை நீர் ஒழுகத் தொடங்கி, இப்பொழுது திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்றிரவில் இருந்து திரும்பவும் நல்ல மழை.........😌

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

செர்னோபில் அணு உலை விபத்து சகல வழிகளிலும் தனித்துவமானது. உலையின் உள்ளே அழுத்தம் அதிகரித்து வெடிப்பு ஏற்பட்டது, யுரேனிய குச்சிகளை மூடி மேலே இருந்த கொங்கிரீட் சிம்னி தூளாகியது. ஓர் வால்வு சரியாக வேலை செய்யாமையால் ஏற்பட்டது.

இதோ போன்ற ஒரு நிலை 1979 இல் பென்சில்வேனியாவின் 3-Mile Island என்ற இடத்தில் இருந்த அமெரிக்க அணு உலையிலும் ஏற்பட இருந்து, சரியான தொழில் நுட்ப வழிகாட்டல் இருந்தமையால் பேரனர்த்தம் தவிர்க்கப் பட்டது.

பகிடி என்னவென்றால், செர்னோபில் அணு உலை வெடித்து மத்திய ஐரோப்பா வரை காற்றில் கதிர் வீச்சு மூலகங்கள் அதிகரித்ததை ஏனைய நாடுகள் கண்டு கொண்டன. சோவியத் அரசோ, தொழிலாளர் தின பேரணியை செர்னோபிலில் மக்களை வைத்து கட்டாயமாக நடத்தி முடித்த பின்னர் தான் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. 

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

ஆபத்துமிக்க அணு உலைக் கழிவுகள்: அதிர்ச்சியளிக்கும் கிரீன்பீஸ் ரிப்போர்ட்

153089.jpg
 
அணு மின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நச்சுத்தன்மையுடன் இருக்கக்கூடிய  எரிபொருள்களை வெளியேற்ற முடியாமல் பல நாடுகளும் விழித்துவரும் நிலையில் அணுசக்திக் கழிவின் பெருக்கம் உலகம் முழுவதும் பெருகிவருவதாக கிரீன்பீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் தொடங்கப்பட்ட கிரீன்பீஸ் அமைப்பு தற்போது நெதர்லாந்திலிருந்து இந்தியா உள்ளிட்ட உலகின் பல பெரிய நாடுகளிலும் ஒரு முக்கியமான அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பாக இயங்கி வருகிறது.

கிரீன்பீஸ் அமைப்பு நேற்று ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு சுற்றுச்சூழல் சார்ந்த ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

ஏழு நாடுகளில் மட்டும்தான் அணுசக்தி நிலையத்தின் அருகிலேயே மக்களுக்கு கெடுதல் நேராத வகையில் முறையான கழிவு சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்த ஆலைகளில் முழுமையடையாத பல தேவைகளால்  தீ ஆபத்து, கதிரியக்க வாயுக்கள் வெடிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, கொள்கலன்களின் தோல்வி, பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அதிகரிக்கும் செலவுகள் என பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன.

26137569

"இந்த அணு சக்தி மின் நிலையங்கள் உள்நாட்டுப் பயன்பாடுகளுக்கென்றே தொடங்கி 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியுள்ளது. இதன் கடும் ஆபத்து விளைவுகளை ஏற்படுத்தும் இதன் கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்துவதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களுக்கு ஏதோ ஒரு நாட்டை மட்டும் குற்றம் சாட்ட முடியாது'' என்கிறார் கிரீன்பீஸ் ஜெர்மனியைச் சேர்ந்த அணுசக்தி நிபுணர் ஷாவுன் புர்ணி

குறிப்பாக, அணு சக்தி மின் உலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்கள் பூமிக்கடியில் சேகரிக்கப்படுகின்றன. நீண்ட கால சேமிப்பு தொழில்நுட்பம் போன்றவை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதில் பல பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, கிட்டத்தட்ட 14 நாடுகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட உயர்தர கதிரியக்கச் செலவுக்கான எரிபொருள் சுமார் 2,50,000 டன்கள் உலகளாவிய அளவில் கையிருப்பு உள்ளது.

இந்த எரிபொருள் சேகரிக்கப்படும் பெரும்பாலான உறைவிப்பான் தளங்கள் குளிரூட்டும் குளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இப்படி இரண்டாவது முறை சேகரிப்பதில் உள்ள குறைபாடுகளால் குளிர் இழக்கும் ஒரு பெரும்பாதிப்பைப் பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அணுசக்தியை மீண்டும் மீண்டும் சேமித்து வைப்பதினால் ஏற்படும் சிக்கல்கள் இவை.

ஜப்பான் நாட்டின் புகுஷிமா அணு சக்தி ஆலை 2011-ல் ஏற்பட்ட சுனாமியில் பகுதியளவு பெரும் சேதத்துக்குள்ளானது. எனினும் இதில் இருந்த எரிபொருள் குளங்களின் அதிக வெப்பம் அபாயகரமானதாக இல்லை என்று தெளிவுபடுத்தியது.

அணு சக்தி வல்லுநர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட 100 பக்க ஆய்வறிக்கை, பிரான்சில் மிகப்பெரிய ஏற்படும் கழிவுப்பொருட்களை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகள் அகற்றப்பட்டு விட்டன. பிரான்ஸ் அணுமின் நிலையம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாவது மிகப்பெரிய அணுசக்தி மின்நிலையம் ஆகும்.

அதேநேரம் "பிரான்ஸில் அணுசக்திக் கழிவுகளை நீண்டகாலப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான நம்பகமான தீர்வு எதுவுமில்லை" என்று அறிக்கை கூறியுள்ளது.

பிரெஞ்சு மேற்பார்வை அதிகாரிகள் குழு ஒன்று லா ஹேக் தளத்தில் நார்மண்டியில் ஆய்வு செய்தது. அங்குள்ள பெரிய குளிரூட்டும் குளங்களின் தன்மையைப் பற்றிய கவலையை அக்குழு தெரிவித்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, "லா ஹேக்கில் உள்ள குளங்கள் 2030 ஆம் ஆண்டு வரை எந்தவித ஆபத்தும் இல்லை" என்று தளத்தை நிர்வகிக்கும் எரிசக்தி நிறுவனமான ஓரானா, ஓர் அறிக்கையில் தெரிவித்தது. அமெரிக்காவில், ''பில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் பத்தாண்டு கால திட்டமிடல்கள் புவியியல் கழிவுகள் அகற்றும் தளத்தை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் இதில் கூறப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள யூக்கா மலையின் பூமிக்கடியிலான அணுசக்தி கழிவு சேமிக்கும் வசதியைக் கட்டமைக்கும் பணி பல பத்தாண்டுகளாக நடந்தது. ஆனால் கடைசியில் 2010-ல் ஒபாமா நிர்வாகத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் 70 சதவீதம் செலவிடப்பட்ட எரிபொருளானது பலவீனமான குளிர்ந்த குளங்களில்தான் உள்ளது. இதற்கு முதன்முதலாக இருந்த நோக்கம் பின்னர் பல மடங்கு அதிகரித்தது.

யுரேனியம் சுரங்கத்திலிருந்து உருவாகும் அணு சக்திக் கழிவு என்பது ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினை ஆகும்.

உலக அளவிலான யுரேனியம் ஆலைச் சரக்குகள், சேமித்து வைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கசியும் மணல் கழிவுப் பொருட்கள் மட்டுமே 2011 வரை இரண்டு பில்லியன் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் உள்ளடங்கிய மற்ற நாடுகள் பெல்ஜியம், ஜப்பான், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகியவை ஆகும்.

https://www.hindutamil.in/news/world/153089-.html

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாக எழுதுவதால் சில புரிந்துணர்வு சிக்கல் ஏற்படுகிறது என்பதனை ஜஸ்ரின் கருத்தின் மூலம் உணர்கிறேன், சூரிய மின் தகடு மீழ்சுத்திகரிப்பில் கண்ணாடியும் அலுமினியமும் முற்றாக சுத்திகரிக்க முடியும் அதில் அலுமினியம் பொருளாதார ரீதியில் சாதகமானது அதனடிப்படையில் கருத்து வைக்கப்பட்டது.

லீட், கட்மியம் போன்ற சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தும் மூலகங்களும் அதில் அடங்கியுள்ளது.

சூரிய மின் தகடுகளுக்கு 15 வருட உத்தரவாதம் வழங்குகிறார்கள் அதன் பின்னர் அதன் செயற்பாடு குறைவடையத்தொடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

ஈயம், சூரிய மின் தகட்டிலிருந்து மட்டுமல்ல, printed circuit board-PCB உடைய எல்லா சாதனங்களிலும் இருக்கும் ஒரு ஆரோகியத்திற்குக் கேடான உலோகம். அதனால் தான் e-waste என்பதை தனியாக நகரங்கள் சேகரிக்கின்றன. இந்த e-waste இல் இருந்து ஈயத்தை பிரித்தெடுக்கும் முறைகள் இருக்கின்றன. மேற்கு நாடுகளில் செய்கிறார்கள். கீழைத்தேய நாடுகள் பின்பற்றும் வழிகள் இருக்கின்றன, ஆனாலும் செய்ய மாட்டார்கள். அது அவர்களின் பிரச்சினை.

ஆகவே, பசுமைத் தொழில் நுட்பத்தினால் கிடைக்கும் நன்மைகளோடு ஒப்பிடுகையில் e-waste ஒரு பெரிய மறைக்காரணி அல்ல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, Justin said:

நன்றி ஜஸ்ரின் உங்கள் கருத்திற்கு,

ஏராளன், இன்னும் உங்கள் காணொளியினை பார்க்கவில்லை ஆனாலும் சூரிய மின் தகடு பொருத்துதல் தொடர்பான சில சொந்த அனுபவங்களை பகிற்கிறேன்.

தற்போது உள்ள ஒரு தகடு கிட்டதட்ட 390W வலுவை கொண்டது, எனது வீட்டில் பொருத்தும் காலத்தில் 190W ஆக இருந்ததாக நினைவுள்ளது.

11 தகடுகள் 2.1KW மின் வலுவினை கொண்டதாக பொருத்தப்பட்டது ஆரம்பத்தில் நாளொன்றிற்கு 12KW சக்தியினை பிறப்பித்தது, இலங்கை போன்று பூமத்திய ரேகையில் அவுஸ்ரேலியா இல்லை, அதனால் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப அதன் வலுப்பிறப்பிக்கும் சக்தி வேறுபடும்.

நாளொன்றிற்கு உங்கள் சூரிய மின் த்கடுகள் அதனை விட சராசரியாக 4 மடங்கு மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் என கூறுகிறார்கள் ஆனால் நடைமுறையில் அது சற்று கூடுதலாக இருக்கும். 

ஆண்டொன்றிற்கு 0.5% -0.8% அதன் மின் உற்பத்திதிறன் குறைவடைவதாக கூறுகிறார்கள்.

inverter 10 ஆண்டு காப்புறுதியும் சூரிய மின் தகடு 15 ஆண்டு காப்புறுதியும் வழங்குகிறார்கள், எனது inverter காலாவதியாகிவிட்டது ஆனாலும் தொடர்ந்து இயங்கிறது, உறவினர் ஒருவரது inverter சில வருடங்களிலேயே பழுதாகிவிட்டதாக கூறினார்.

இரண்டாம் தர மிந்தகடுகள் 15 ஆண்டுகளின் பின்னர் 80% இயங்குதிறனுடன் காணப்படும் அது அடுத்த 10 வருடங்கள் வரை இயங்கும் ஆனால் உத்தரவாதம் இல்லை.

அதனால் இரண்டாந்தர மின் தகடு இலாபமா என்பதனை பார்த்து வாங்கலாம் ஆனால் அது உத்தரவாதம் இல்லை.

எனது சூரிய மின் தகட்டினை இன்வேட்டர் செயலிழக்கும் வரை (10 வருட உத்தரவாதம், தற்போது 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது) அதனது செயற்பாட்டு காலமான 25 வருடங்கள் வரை உபயோகிக்க உத்தேசித்துள்ளேன், காரணம் சுற்று சூழல் ஆர்வத்தினால் அல்ல அதனை மாற்றீடு செய்வதால் இலாபம் ஏற்படாமல் மேலதிக பணவிரயம், ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை மாற்றீடு செய்கிறார்கள் அதன் இயங்குநிலையிலேயே.

அவஸ்ரேலியாவிலிருந்து வரும் இரண்டாம் தர சூரிய மின் தகடுகளின் அதிக பட்ச உபயோகிக்கப்பட்ட காலம் 17 வருடங்கள், ஆனால் பெரும்பாலான சூரிய மின் தகடுகள் அந்த காலத்தினை விட குறைவாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது.

இங்கு விக்ரோரியா மானிலத்தில் மட்டும் சூரிய மின் தகடு மீழ் சுத்திகரிப்பு தடை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் தனியார் பணம் பெற்று பழைய மின் தகடுகளை எடுத்து செல்வார்கள், இலங்கையில் அவ்வாறான பிரச்சினை வராது என கருதுகிறேன்.

இங்கு ஒரு அலகு மின்சாரம் 0.42 சதத்திற்கு வழங்குகிறார்கள், நாளொன்ற்றிற்கு சேவைக்கட்டணமாக 0.98 சதம் பெறிகிறார்கள் உங்களது மேலதிக சூரிய மின்சாரம், மின்சார சபை மின்சாரத்திற்கு செல்லும் அதற்கு மின் அலகொன்றிற்கு 0.05 சதம் வழங்குகிறார்கள்.

மின்சாரம் தடைப்பட்டால் சூரிய மின் தகட்டின் மூலம் வரும் மின்சாரம் உடனடியாக நின்றுவிடும், காரணம் அது திருத்த வேலைகளில் ஈடுபடும் மின்சார சபை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, சூரிய மின் தகட்டுடன் பற்றரி பொருத்தினால் மின் தடைப்பட்டாலும் மின்சார வழங்கலை தொடர்ந்து பெறலாம் மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதில் சேமிக்கப்படும்.

புதிய சூரிய மின் தகடும் இன்வேட்டரும் பொருத்தும் செலவை இங்குள்ள மின் கட்டணத்தினடிப்படயில் அந்த செலவினை இரண்டு ஆண்டுகளிலேயே உங்களுக்கு வழங்கிவிடும் இந்த சூரிய மின் தகடுகள், பற்றரி இணைப்பு (10 வருட உத்தரவாதம் 80% செயற்திறன்) இலாபம் இல்லை, இந்த தரவு அவுஸ்ரேலிய மின்சார கட்டணத்தினடிப்படையில் (சிலர் மின்சார கார் வைத்திருப்பவர்கள் இலாபகரமானது என கூறுகிறார்கள் அதன் உண்மைத்தன்மை தெரியாது).

இலங்கை மின் கட்டணத்திற்கு இந்த மின் தகடு பொருத்துவது இலாபமா என்பதனை நீங்கள் கணிக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் நீங்கள் மின் திருத்த வேலையில் ஈடுபடும்போது பிரதான ஆழியின் இணைப்பை துண்டிப்பதுடன் சூரிய மின் தகட்டின் பிரதான ஆழியின் (சுவிட்ச்) இணைப்பையும் துண்டிக்கவேண்டும்.

Edited by vasee
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன் உங்களுக்க எவளவு செலவு ஆனது மற்றும் யார் முலம் செய்தீர்கள் என்ற விபரம் தர முடியுமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

ஏராளன் உங்களுக்க எவளவு செலவு ஆனது மற்றும் யார் முலம் செய்தீர்கள் என்ற விபரம் தர முடியுமா.

முழு விபரமும் தம்பியிடம் கேட்டு எழுதுகிறேன் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

உங்கள் தகவல்களுக்கு நன்றி அண்ணா.
காணொளி சோலார் சம்பந்தமான அடிப்படைத் தகவல்களைக் கொண்டுள்ளது.

இங்கு மேலதிகமாக சோலார் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சாரசபை வாங்குகிறது. தற்போது வாங்கும் மின்சாரத்திற்கு அலகிற்கு 37ரூபா நிலையான கட்டணமாக வழங்குகிறது, மாறுகின்ற கட்டணமாக 57ரூபாவை வழங்குகிறது.
எனது கேள்வி நிலையானதற்கா மாறுகின்ற கட்டணத்திற்கா ஒப்பந்தம் செய்வது நீண்டகால நன்மை தரும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2024 at 09:31, சுவைப்பிரியன் said:

ஏராளன் உங்களுக்க எவளவு செலவு ஆனது மற்றும் யார் முலம் செய்தீர்கள் என்ற விபரம் தர முடியுமா.

அண்ணை எங்களுடைய வீட்டில் சோலார் பொருத்திய நிறுவனம் கிறீன் சண்பவர் எனர்ஜி https://greensunpowerenergy.com/contact/ . JA பனல், 550 Watts. 10Kw மொத்தமாக 20 பனல்கள் பொருத்தவேண்டுமாம். ட்ரான்ஸ்போமருக்கு கிட்டவாக(100-300மீற்றர்களுக்குள்) பொருத்தும் இடம்(வீடு) இருந்தால் கூடுதல் Kw பொருத்த மின்சாரசபை அனுமதிப்பார்கள். 5Kw மேல் எடுப்பதென்றால் 3பேஸ் இணைப்பு எடுக்கவேண்டும். 

10Kw சோலார் பொருத்த ஏறத்தாழ 20லட்ச ரூபா தேவைப்படும். பற்றி பக்கப் செய்வதென்றால் கூடுதல் செலவாகும். ஹைபிரிட் இன்வேட்டர் பொருத்துவதற்கும் கூடுதல் செலவாகும்.

30/40Kw பொருத்தும் போது சராசரிச் செலவு குறைவு.

இது தான் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட விபரங்கள். மேலே இணையப் பக்கத்தில் தொடர்பிலக்கம் உள்ளது, மேலதிக விபரங்களை கேட்கலாம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

இந்த நிறுவனத்தின் சூரிய மின் தகடுகள் இங்கும் பொருத்துகிறார்கள், நல்ல தரமான சூரிய மின் தகடு, அவுஸ்ரேலியாவினை விட இலங்கையில் உள்ள சூரிய மின் தகடு பொருத்துனர்கள் புதிய சூரிய மின் தகடுகளை பொருத்துகிறார்கள், ஆனாலும் விலை கிட்டதட்ட ஒரே அளவில் உள்ளது. (தற்போதும் அதிக பட்சமாக 400W வினத்திறன் கொண்ட மின் தகடுகளே இங்குள்ள நிறுவனங்கள் பொருத்துகிறார்கள் என கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்), இங்கு பெரும்பாலும் இந்தியர்கள் இந்த வகை நிறுவனங்களை பெரும்பாலும் நடத்துகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Solar மூலம் நம்பவே முடியாத மாத வருமானம் | 40 KW System

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி.ஆனால் மின்சார சபையிடம் அனுமதி எடுப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விட சிரமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி.ஆனால் மின்சார சபையிடம் அனுமதி எடுப்பது என்பது கல்லில் நார் உரிப்பதை விட சிரமம்.

உண்மைதான் அண்ணை.

  • மின்சார சபையின் அனுமதி கிடைக்க வீட்டிற்கும் ட்ரான்ஸ்போமருக்கும் இடையிலான தூரம் பிரதான பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.
  • அடுத்தது ட்ரான்ஸ்போமரின் கொள்ளளவு/ஏற்றுக்கொள்ளும் அளவு.(நிறையப்பேர் எடுத்திருந்தால் இடமில்லை என்று சொல்வார்கள்)
  • அனுமதி தருபவரை நேரில் சந்திப்பதென்றால் கடவுளைக் காண்பது போலவாம்!
  • சில நிறுவனங்கள் ஓய்வுபெற்ற எந்திரிகளை பணிக்கமர்த்தி மிக இலகுவாக அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்கின்றன.
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.