Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா VS பிள்ளையான் – ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் – அனைத்து உண்மைகளும் விரைவில் வௌிவரும்!

adminMarch 30, 2024
Pillayan-Karuna-1170x682.jpg

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆசாத் மௌலானா சிறந்த ஆதரங்களுடன் நிரூபித்துள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதலினை ஏவியவர்களினால் அது தொடர்பான புத்தகம் வெளியிடப்பட்டது என்பது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகவே பார்க்கப்படுகின்றது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இன்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அமைச்சர்களாக இருந்தும் மக்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு மாறாக தாங்கள் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக இந்த வேலை திட்டங்களை கொண்டு வருகின்றார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீதிகள் இன்று அமைக்கப்பட்டாலும் அதில் பத்து வீதத்திற்கு மேற்பட்ட தரகுகள் வாங்கப்படுகின்றது இவ்வாறு செயல்பட்டால் எமது கட்டுமானங்கள் எந்த அளவிற்கு இஸ்திரத்தன்மையற்ற நிலையில் இருக்கும் என்பதனை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுவரையில் மயிலத்தமடு பிரச்சனைக்கு எதிர்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. அந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருகின்றனர்.

இதே போன்று  வடமாகாணத்தை பொறுத்தவரையில் மத திணிப்புகளும் மதவாதிகளால் ஏற்படும் பிரச்சனைகள் மீண்டும் இன குரோதங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை, தேவையற்ற விதத்தில் சில மதகுருமார்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதில் வெடுக்குநாரி மற்றும் குறுந்தூர் மலை போன்ற பிரச்சனைகள் உருவாகி உள்ளன.

தமிழ் மக்களின்  ஆலயங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் இன்று அதில் பலவந்தமாக புத்த கோவில்களை கட்டி மத திணிப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சி எடுத்து வருகின்றார்கள் இது போன்ற பல நடவடிக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் தமிழர்களின் அவிலாசைகளை தீர்ப்பதற்கு தமது கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பாக  கலந்துரையாடி இருக்கின்றது.

ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ஸ இருந்த காலத்தில் நாடு ஒரு பாதாளத்தில் தள்ளி விடப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் தான் அவர் மக்களால் துரத்தி அடிக்க பட்டார் அவரின் அவ்வாறான செயற்பாட்டால் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வந்ததன் பிற்பாடு இன்று பல சிரமத்தில் மத்தியில் இருந்த எமது நாட்டை கட்டி எழுப்பியிருக்கின்றார். அதனை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று டொலரின் பெறுமதி எந்த அளவிற்கு குறைந்திருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு இன்று நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.

தமது கட்சியை பொறுத்த அளவில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக தாங்கள் தீர்மானித்து இருப்பதாகவும்,  தமது கட்சியின் செயற்பாடுகளை பரவலாக முன்னெடுத்து வருவதாகவும்,  இறுதிக் கட்டத்தில் தாங்கள் கூட்டு சேர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை இறுதி கட்டத்திலே அறிவிக்க உள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் சிவாஜிலிங்கம் போன்றவர்களும் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார்கள் தமிழ் மக்களை மற்றும் தன்னை பொறுத்தவரையில் இலங்கை நாட்டிலே ஒரு தமிழரோ அல்லது முஸ்லிமோ ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை ஏனென்றால் பெரும்பான்மை சிங்கள மக்களைக் கொண்ட நாடாக இருக்கின்ற காரணத்தினால் யாரோ ஒரு சிங்கள தரப்பினர்தான் ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

தமிழர்கள் பிரதமராக அல்லது அமைச்சர்களாக வருவது அது ஒரு வேறுபட்ட விடயம் ஆனால் ஜனாதிபதியாக வருவதற்கு அனைத்து மக்களுக்கும் அனைத்து கல்விச் சமூகங்களுக்கும் இடையிலான தெரிந்த விடயம் சிங்கள குடிமகன் தான் ஜனாதிபதியாக வருவார் ஆகவே அந்த வகையில்  அதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் தமிழர்களுக்கு நன்மை தரக்கூடிய ஜனாதிபதியை நாங்கள் தெரிவு செய்வது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம்.

“தமிழர்கள் போட்டியிடுவதை வரவேற்கின்றோம் அது இலங்கை குடிமகன் யாராக இருந்தாலும் எங்கும் போட்டியிடலாம் அதனை வரவேற்கின்றோம்.”

இது ஒரு நல்ல விடயம் ஆனால் அதனை முன் வைப்பதற்கு முன்னர் அனைத்து கட்சிகளும் கூடி கலந்தாலோசித்து அதில் ஒருமித்த கருத்தினை எடுத்து அனைத்து தமிழ் மக்களும் அந்த ஒருவருக்கு வாக்களித்து எதிர்ப்பினை காட்டுவார்களாக இருந்தால் உலக மத்தியில் பாரிய வரவேற்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது இதனை மறப்பதற்கு இல்லை.

ஆனால் அந்த அளவிற்கு எந்த கட்சி ஒற்றுமையாக இருக்கும் என்பது வேடிக்கையான விடயம் ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவிலே இன்னமும் தீர்மானம் இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தேசியம் கதைத்துக் கொண்டு தலைவர் தெரிவில் நீதிமன்றத்தை நாடி நிற்கின்றது என்றால் எவ்வளவு பிற்போக்குத்தனமாக அந்த கட்சி இருக்கின்றது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் இந்த நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றாகுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம்.

“இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றது இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு இது தொடர்பாக தெரியும் என கூறுகின்றார் அதே நேரம் இந்த விடயம் தொடர்பாக இரண்டு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றது. கோட்டபாய ராஜபக்ஸ  மற்றும் பிள்ளையானும்  புத்தகம் வெளியிட்டுள்ளனர். இதனை ஒரு முதலை கண்ணீர் வடிப்பதற்கு சமமாக தான் பார்க்கின்றோம். ஏனென்றால் அசாத் மௌலானா  சிறந்த ஆதாரங்களை நிரூபித்து இருக்கின்றார். அவர் நீண்ட காலமாக அந்த கட்சியிலே ஒரு முக்கிய உறுப்பினராக செயலாளராக அல்லது பிரதம ஆலோசகராக செயல்பட்டவர் என்பது உண்மையான விடயம். ஏனென்றால் அவர் கூறிய விடயங்களை எவரும் மறுப்பதற்கு இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏன் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்கின்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

ஏனென்றால் இன்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு புத்தகத்தையும் வெளியிடவில்லை. இதை ஏவியவர்களால் புத்தகம் வெளியிடப்பட்டது என்பது தங்களது பிரச்சினைகளை மறைப்பதற்காக அதாவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்காக எழுதப்பட்டதாகதான் பார்க்கப்படுகின்றது.

உண்மையிலே இதற்கான தீர்வு என்பது ஆண்டவரால் வழங்கப்படும். ஜனாதிபதி தேர்தல் வருகின்ற காலகட்டத்தில் அனைத்து உண்மைகளும் வெளிவருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தற்போது கடந்த கால ஜனாதிபதி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார் நான் அனைத்து ரகசியங்களையும் வெளியிடுவேன் என்று. அதனை நாங்கள் வேடிக்கையாக பார்க்க முடியாது ஏனென்றால் அவர் இலங்கையில் ஒரு பொறுப்பு வாய்ந்த ஜனாதிபதி அவர் கூறுகின்ற போது இதற்கு பின்னால் பாரிய உண்மைகள் இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் இது எதிர்காலத்தில் வெளிப்படையாக நிருபிக்கப்பட்டு இதற்குரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.” என கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

 

https://globaltamilnews.net/2024/201410/

  • கருத்துக்கள உறவுகள்

       துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, satan said:

       துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....

தமிழினம் சுழியத்தில் இருந்தே எல்லாவற்றையும் தொடரவேண்டிய நிலை. தமிழினத்தின் ஈகங்களை ஈடுவைத்து வாழும் தமிழரின் தலைமைகள் என்றுகூறும் ஈன அரசியற் கூட்டம் அழிந்தொழிந்து புதியதொரு தலைமை முன்வரும்வரை இதுபோன்ற ******* மாறிமாறிப் பிதற்றுவது தொடரும். நாமும் பெருமூச்சோடு கடந்துவிடுவதைத்தவிர எதைத்தான் செய்யப்போகின்றோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஏமாளிகளாய் இருந்தால், எத்திப்பிழைக்கும் கூட்டம் பெருகிக்கொண்டே போகும். இந்த துரோகிக்கு பின்னாலும் ஒரு கூட்டம் போகத்தான் போகுது.  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

மக்கள் ஏமாளிகளாய் இருந்தால், எத்திப்பிழைக்கும் கூட்டம் பெருகிக்கொண்டே போகும். இந்த துரோகிக்கு பின்னாலும் ஒரு கூட்டம் போகத்தான் போகுது.  

இதனை எப்படித் தமிழினம் கடந்து செல்லவேணடும் என்பதற்கான எந்த அறிவூட்டலோ தெளிவூட்டலோ இல்லை. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளோ தமக்குள் குத்திமுறிந்து கொண்டிருக்கிறார்கள். மக்களோ அன்றாடப் பிரச்சினைகளோடு போராடும் அவலநிலை. இதில் எப்படியொரு நிலைபேறான அரசியல் முனையைத் திறப்பதெனச் சிந்திக்காதவரை மாற்றங்கள் வராது. குறைந்த பட்சம் யாழ். இந்துவில் நடந்த கருத்தாடலையாவது செவிமடுப்பார்களா?
நன்றி
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

இதனை எப்படித் தமிழினம் கடந்து செல்லவேணடும் என்பதற்கான எந்த அறிவூட்டலோ தெளிவூட்டலோ இல்லை.
 

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கட்சியினரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தீவிர தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இதுதான்?

☹️

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கட்சியினரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட தீவிர தமிழ்த் தேசிய அரசியலின் நிலை இதுதான்?

☹️

சிலவற்றை மாற்றமுடியாது.  மாற்றமடையாதது குயிலின் குரலோசை.ஆண்மயிலின் நடனம். யானையின் பிளிறல்.புலியின் உறுமல், சிங்கத்தின் கர்சனை, எனப் பல உள்ளன. ஆனால் முன்னவர் செய்த அரசியல் பிழையென்றால் அதிலே தொங்குவதை விடுத்து பின்னவர் நல்லதைச் செய்யலாம் அல்லவா? 
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nochchi said:

முன்னவர் செய்த அரசியல் பிழையென்றால் அதிலே தொங்குவதை விடுத்து பின்னவர் நல்லதைச் செய்யலாம் அல்லவா? 
நன்றி

ஆம். 

மாற்றங்கள் எங்கள் சிந்தனையில் இருந்து வர வேண்டும். 

எங்கள் சிந்தனைகள் எம்மை மேலும் பலவீனப் படுத்துவதாகவே இருக்கிறது. 

ஆகக் குறைந்தது, பிறரின் கருத்துக்களைக்கூட காது கொடுத்து கேட்பதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்க தேர்தல் களத்தில் இறங்குவாராக இருந்தால் அவருக்கு எமது ஆதரவினை வழங்குவதாக நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம் எனவும் முன்னாள் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

ரணிலை ஜனதிபதியாக்க பல முனைகளில் செயல்படுகின்றனர் ....மைத்திரி முதல் கருணாவரை....

ராஜபக்ச குடும்பம் பாராளுமன்ற தேர்தலில் அதிக அக்கறை காட்டுவார்கள் போல

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2024 at 11:31, satan said:

       துரோகிகள் சமயத்துக்கு சமயம் கட்சி மாறுவதும், திட்டிய கட்சியிலேயே அமைச்சர் பொறுப்பேற்பதும், அறிக்கை விடுவதும் ஒன்றும் புதிதல்ல. கோத்தா, ராஜபக்க்ஷவை புகழ்ந்தவர் ரணிலை திட்டியவர் இன்று ரணிலை போற்றுகிறார். தமிழ் மக்கள் மேல் பாச மழை பொழிகிறது. இந்த வரிசையில் இன்னும் சிலரை எதிர் பார்க்கிறோம் .....

ஜேசுவை கொன்றவர்கள் இனி ஒவ்வொருவராக கடவுள் வேடமிட்டு வலம் வரும் நிலை தொடரும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“மூவரையும் கைது செய்தால் உண்மை வெளிவரும்”

கனகராசா சரவணன்

ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும்  கைது செய்து விசாரித்தால்  இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும். எனவே இவர்களை உடன் கைது செய்து விசாரணை நடத்துமாறு  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கருணா படையணி என்பது வழமையான செயற்பாடு. தேர்தல் நெருங்குகின்றது தேர்தலுக்கான நாடகம். கடந்த பாராளுமன்ற தேர்தலில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண அதிகாரத்துடன் மீட்டுத்தருவதாக கூறி, தமிழ் தேசிய மக்களுக்கு வாக்களிக்க இருந்த மக்கள் எல்லாம் தன்பக்கம் திசைதிருப்பி வாக்குகளை சிதறடித்து அந்த மாவட்டத்தில் தமிழ் மக்கள் பிரதி நிதி ஒருவர் வராமல் செய்து முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்க செய்த பெருமை செய்தவர்.

2019 ம் ஆண்டு இடம்பெற்ற குண்டுதாக்குதல் தொடர்பாக தற்போது பலரின் வாயில் வித்தியாசமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் ஆலோசகராக இருந்து சுவிஸ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஆசாத்மௌலான சனல் 4 ஊடகத்தில் பிள்ளையானை குற்றவாளி என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிள்ளையான் இன்று குண்டு தாக்குதலை வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார். இதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன  காலத்தில் இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றது. அவர் அப்போது வாய்திறக்காமல் ஜனாதிபதி பதவி இழந்து நீண்ட காலத்தின் பின்  தற்போது வாயை திறந்து தனக்கு சூத்திரதாரியை தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே சட்டத்தின் மத்தியில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டாலும் குற்றம். இந்த சாட்சியம் ஏற்கனவே சொல்லப்படாது இருந்தது பாரிய குற்றம். ஆகவே அவர்  மீது தீவிரமான விசாரணை நடாத்தப்பட்டு சரியான தகவலை தரவில்லை எனில் சட்டத்தின் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுதவிர ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக அசாத் மௌலான  பிள்ளையான் தொடர்பாக தெரிவித்ததையும் பிள்ளையான் புத்தக வெளியிட்டுள்ளது   தொடர்பாக கருணா கருத்து தெரிவித்துள்ளார் எனவே இவர்கள் எல்லோரும் கூட்டாக விசாரிக்கப்படவேண்டும் ஏதே ஒன்று இவர்களுக்குள் மறைந்திருக்கின்றது

எனவே இந்த கருத்;துக்களை வெளியிட்டு குற்றம் சாட்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா என்று அழைக்கப்படும்  முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன், ஆகிய 3 பேரை அரசாஙகம் கைது செய்து சரியாக விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி கைது செய்யப்படுவார்.

இது யார் என்பதை அறிய முடியும் எனவே ஜனபதிபதி விசேட குழு ஒன்றை அமைத்து அவர்களை கண்டுபிடித்து  சட்டத்தின் முன் நிறுத்துமாறு அரசையும் ஜனாதிபதியையும் கோட்டுக் கொள்கின்றேன் என்றார். 

 

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மூவரையும்-கைது-செய்தால்-உண்மை-வெளிவரும்/73-335493

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.