Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனைவியின் அறுபதாவது பிறந்தநாளை பிரான்சில் உறவுகளுடன் கொண்டாட போகிறீர்களா? வெளியே எங்காவது போவோமா என்று மக்கள் கேட்டனர். எனக்கும் ஓய்வு தேவை வெளியில் போவோம் என்றேன். கடையை பூட்டவேண்டும் என்றால் எத்தனை நாட்களுக்கு முன் உங்களுக்கு சொல்லவேண்டும் என்றபோது ஒரு கிழமை போதும் என்றிருந்தேன்.

போன கிழமை இதிலிருந்து இத்தனை நாட்கள் கடையை பூட்ட அறிவியுங்கள் 15 இலிருந்து 25 வரையான வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். 

என் மக்களுக்கு மிக மிக சவாலான விடயம் எனக்கு தெரியாமல் எதையாவது செய்வது.  தமிழிலோ பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ ஏன் சிங்களத்தில் கூட எனக்கு தெரியாமல் செய்வது கடினம். இது surprise பயணம். அதிலும் இது வெளிநாடு. (பாஸ்போர்ட் கேட்டிருந்தார்கள்) பணம் எவ்வளவு கொண்டு வரவேண்டும் என்று கேட்டேன் ஒரு சதமும் கொண்டு வரவேண்டாம் என்றார்கள்.

அந்த நாளும் வந்தது. காலையில் மக்கள் மருமக்கள் பேரன் அனைவரும் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முடிந்தவரை எங்கே போகிறோம் என்பதை கவனிப்பதை தவிர்த்து வந்தேன். விமானம் ஏற முன்னரும் வரும் அறிவித்தல்களை காதை பொத்தி தவிர்த்தேன். பிள்ளைகள் மிகவும் ஆர்வத்துடன் செய்திருப்பதை குழப்ப விரும்பவில்லை. ஆனாலும் பக்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் பன்னர்களில் சில பெயர்கள் வருவதை காண்பதை தவிர்க்க முடியவில்லை. விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன்.

சுற்றுலாவில் இருந்து தொடரும். ..

 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

விமானத்திலும் அறிவித்தல்களை கைட்பதை தவிர்த்தாலும் வந்து இறங்கியதும் கேட்டார்கள் எங்கே நிற்கிறோம் என்று. இதுக்கு மேல சொல்லாமல் இருக்க முடியாது. Palma என்றேன்.

 

ஆர்வமிக்கதாக இருக்கின்றது😄

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பார்க்கிறோம்.........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் தொடருங்கோ...அதுக்காக அன்ய்ஹநாட்டில் பாலும் தேனூம் ஓடுது என்று எழுதாதையுங்கோ....பிறகு யாழில்.. 13 பக்கம் ஓடலாம்... சும்மா சிரிப்பதற்காக மட்டுமே...கோசான்ஜி கோபிக்க வேண்டாம்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உறுப்புக்களை தயார் செய்யுங்கள் என்றனர். 

நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்?

5 hours ago, விசுகு said:

Palma 

இந்த பால்மா எங்கு தம்பி இருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்?

இந்த பால்மா எங்கு தம்பி இருக்கு?

சுற்றுலா என்றாலே புதிய இடங்கள் புதிய தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அதுதான் எல்லாவற்றிற்கும் தயாராகப் போக சொல்லியிருக்கிறார்கள்.......நீங்கள் வேற........!  😂

 பல்மா, ஸ்பெயினுக்கு அருகில் கச்சதீவின் அமைவிடம் போல் ஒரு கச்சான் அளவு தீவு.........!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Palma விமானநிலையத்தில் ஒரு மினிபஸ் எங்களுக்காக காத்திருந்தது. அதில் ஏறியதும் கிட்டத்தட்ட 40 நிமிட பயணத்தின் பின்னர் ஒரு நட்சத்திர ஹோட்டல் முன்னால் நின்றது. நாங்கள் 4 குடும்பம் மற்றும் எனது கடைசி மகள். அதற்கு ஏற்ப 5 ரூம்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அத்தனையையும் கடலில் இருந்து 50 மீற்றர். ஜன்னலை திறந்தால் முன்னால் கடல். கீழே நீச்சல் குளம் sauna hammam jacuzzi மற்றும் மூன்று நேர சாப்பாடு வொலாந்தேர்  (நூற்றுக்கும் மேற்பட்ட சாப்பாடுகள் கேக் ஐஸ்கிரீம்  மற்றும் பழ வகைகள்) அத்துடன் 24 மணிநேர ஓபன் பார். மேலும் இரவு ஏழு மணிக்கு தொடங்கி பன்னிரண்டு மணிவரை ஆடல் பாடல் விளையாட்டுக்கள். அத்துடன் காலையில் 2 வான்கள் வந்து எம்மை ஏற்றி சென்று ஒவ்வொரு நகரமாக இந்த இடத்தின் விசேடமாக பார்க்க வேண்டிய இடங்களை காட்டி மீண்டும் கொண்டு வந்து கோட்டலில் விட்டு செல்கின்றன. 

நேற்று பலநூறு பேர் முன்னால் கோட்டல் நிர்வாகத்தினால் என் மனைவியின் பிறந்த நாள் கேக் வெட்டி சம்பைன் உடைத்து கொண்டாடப்பட்டது. 

உண்மையில் மறக்க முடியாத அனுபவம். நான் எனது வாழ்க்கையில் 11 மாதங்கள் பல மணிநேர வேலை மற்றும் வேலை வீடு என்று வாழ்பவன். ஆனால் ஆவணி மாதம் மட்டும் கோடீஸ்வர வாழ்க்கை. மக்களுக்கும் அதையே பழக்கி இருந்தேன்.

இன்னொரு விடயம்: வீட்டில் நாங்கள் மேசையில் இருந்து சாப்பிடும் போது என் பிள்ளைகள் மற்றும் மனைவியின் கண்கள் என் கோப்பை மற்றும் கிளாசிலேயே இருப்பது வழக்கம். ஆனால் இங்கே அதிலிருந்தும் விதிவிலக்கு. 

நான் 4 அடி பாய்ந்தால் என் பிள்ளைகள் 16 அடி பாய்ந்ததை உணர்ந்தேன். அனுபவித்தேன். இதுவரை எனது பொக்கற்றில் இருந்து ஒரு சதம் கூட வெளியே எடுக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 

நான் இந்த தீவில் பார்த்தவை மற்றும் இந்த தீவு பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன். நன்றி.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். 

On 15/4/2024 at 02:34, ஈழப்பிரியன் said:

நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்

கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

நேற்று பலநூறு பேர் முன்னால் கோட்டல் நிர்வாகத்தினால் என் மனைவியின் பிறந்த நாள் கேக் வெட்டி சம்பைன் உடைத்து கொண்டாடப்பட்டது. 

சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

7 hours ago, island said:

 

கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 

எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.

On 14/4/2024 at 20:34, ஈழப்பிரியன் said:

நீங்கள் எந்த உறுப்பை தயார் செய்தீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளோம்?

7 hours ago, island said:

 

கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள். 

 

அண்ணர் என்னைப் போன்று ஏகபத்தினி விரதன் என்பதால், கட்டாயம் கால்களைத் தான் நீண்ட நேரம் களைத்து போகாமல் இருக்க தயார் செய்து இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அண்ணர் என்னைப் போன்று ஏகபத்தினி விரதன் என்பதால், கட்டாயம் கால்களைத் தான் நீண்ட நேரம் களைத்து போகாமல் இருக்க தயார் செய்து இருப்பார்.

எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே  மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள்  அறிய ஆவலாக உள்ளேன்.  முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும்  படங்களையும் இணைக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்)

இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.  

நாளை நாடு திரும்புகிறோம்...

இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன்.

நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடிவுரை:

நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca)

3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு 

தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே பக்கத்தில் உள்ள இன்னொரு சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்துள்ளனர். 

மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார். 

Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள். 

இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும்.

இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. கிடைக்கும் மழைத் தண்ணீரை நிலத்திற்குள் சேமித்து தங்கள் தண்ணீர் தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும்.

எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான்.

நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது.

நாங்கள் நின்ற இடம்: camp de mar

நின்ற கோட்டல்:  alua camp de mar 

நன்றி. 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.