Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல தசாப்தங்களாக உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அமெரிக்க இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு நெருங்கிய கூட்டாளிக்கு இது ஒரு அசாதாரண செய்தியாகும்.

ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு காசாவில் இஸ்ரேல் தன்னிச்சையாகச் செயல்பட்டு -- அதன் இராணுவ நடவடிக்கைகள் வெகுதூரம் சென்றுவிட்டன என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு - ஈரானுக்கு எதிரான தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா பங்கேற்காது என்று பிடென் நிர்வாகம் தெளிவுபடுத்தியது. மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்கு அஞ்சுகிறது.

மேலும்: இஸ்ரேல்-காசா நேரடி அறிவிப்புகள்: இஸ்ரேலிய போர் அமைச்சரவை திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது

"இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கும் சுதந்திரம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்" என்று ஈரானின் தாக்குதல் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே ஒரு மூத்த நிர்வாக அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். "இது ஒரு நீண்டகால கொள்கை, அது இன்னும் உள்ளது."

தாக்குதல் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுமா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அந்த அதிகாரி இல்லை என்று கூறினார்.

"நாங்கள் அத்தகைய ஒரு காரியத்தில் பங்கேற்பதை கற்பனை செய்ய மாட்டோம்," என்று அந்த நபர் கூறினார்.

 

இரண்டாவது அமெரிக்க அதிகாரியின் கூற்றுப்படி, அந்த செய்தி இஸ்ரேலின் உயர் அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலன்ட் ஆகியோருக்கு இடையே ஒரு தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் நேரடியாக வழங்கப்பட்டது.

இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஆதரவை தெரிவிப்பதோடு, இஸ்ரேலின் சார்பாக ஒரு சாத்தியமான எதிர் தாக்குதலில் சேர அமெரிக்கா திட்டமிடவில்லை என்பதை ஆஸ்டின் மிகவும் "நேரடி" முறையில் தெளிவுபடுத்தியதாக அந்த அதிகாரி கூறினார்.

மூலம் : https://www.yahoo.com/news/us-israel-strike-back-iran-162024611.html

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது அமெரிக்காவில் தேர்தல் காலம் இல்லையென்றால் நிலவரங்கள் வேறு விதமாக இருக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

தற்போது அமெரிக்காவில் தேர்தல் காலம் இல்லையென்றால் நிலவரங்கள் வேறு விதமாக இருக்கக்கூடும்.

ஓம்…

ஆனால் இதில் இன்னொரு பாடமும் உள்ளது.

என்னதான் அப்பா டக்கர் இஸ்ரேலாய் இருந்தாலும்….

பெரிய பானையை உடைக்கக்கூடாது.

@விசுகு அண்ணை கவனத்துக்கு👆🏼🙏.

சிலவேளை பைடன் வெண்டதும் அடிக்கலாம் என ஒரு உத்தரவாதம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

டிரம்ப் வந்தால் எப்படியும் ஈரானுக்கு அடிதான். எப்ப என்பதுதான் கேள்வி. புட்டின் கடுமையாக கண்டிப்பதோடு சரி🤣.

ஆனால் நவெம்பர் வரை நெத்தன்யாகு தாக்கு பிடிக்கோணும் எண்ட கவலை அவருக்கு🤣.

அவனவனுக்கு அவனவன் பதவி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சிலவேளை பைடன் வெண்டதும் அடிக்கலாம் என ஒரு உத்தரவாதம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

டிரம்ப் வந்தால் எப்படியும் ஈரானுக்கு அடிதான். எப்ப என்பதுதான் கேள்வி. புட்டின் கடுமையாக கண்டிப்பதோடு சரி🤣.

ஆனால் நவெம்பர் வரை நெத்தன்யாகு தாக்கு பிடிக்கோணும் எண்ட கவலை அவருக்கு🤣.

அவனவனுக்கு அவனவன் பதவி. 

சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎

இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎

இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂

நிச்சயமாக.

குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும்,

ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும்,

டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது.

#ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣.

என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது.

அவர்களுக்கு இவை எல்லாமே just transactional.

அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣.

இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂
ஆனால்
அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது.:cool:
உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது
ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.

 

இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣

34 minutes ago, goshan_che said:

அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣

யாருக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂

இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே.

42 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது

அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான். 

ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது
ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.

 

இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.

தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே.

திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை.

ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே?

51 minutes ago, குமாரசாமி said:

யாருக்கு? 

அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா (மற்றும் வாலுகள், வாலுகள் ஒன்றும் அறிவிக்கவில்லைத் தான்) போர்வைக்கு கதை விடுவதை செய்தியாக அமெரிக்கா ஆக்க, மேற்கு ஊடகங்கள் காவுகின்றன.

மற்ற (நாடுகள்) எவரும் இதை கருத்தில் எடுக்கவில்லை. எடுப்பது (ராஜதந்திர) மடமை.

அனால், இது ராஜதந்திரத்தில் ஒன்றாக (ஐயந்திரிபுக்கு, மறுத்தலுக்கு   இடம், காலம் ஏற்படுத்தப்படுகிறது) மேற்கு கருதலாம்.

ஏனெனில், அப்பட்டமான, இரான்  தூதரக தாக்குதலை அவ்வாறே ஏய்க்காட்ட முயன்றன. ஆயினும், பாதுகாப்பு சபையில் வெட்டவெளிச்சம் போட்டு அம்மணத்தை காட்டின.   

செய்துவிட்டு, இஸ்ரேல் நன்றாக செய்து விட்டது எனறு அறிவிப்பதை எது தடுக்கிறது (ஈரானின் தாக்குதலை தடுத்தது போல, இஸ்ரேல் நன்றாக தடுத்தது விட்டது என்றது போல)?

அமெரிக்கா உள்ளேயும் செலவாகு கூடும், தேர்தலில். 
 

அனால், இது ஆழமாக போய்விடக் கூடாது எனபதற்கு, ருசியா, சீன நெருக்கப்படுகிறது, பெயராவில் பகிரங்கமாக  இஸ்ரேல் இன் பதிலுக்கு, இரான் திருப்பி அடிக்க கூடாது என்பதற்கு (மேற்கும் அதன் rule based. தூஹ்ஹரகம் அழிக்கப்பட்டதை கவலை கூட தெரிவிக்க விடாமல் முடக்கிய மேற்கு).

சீன சொல்லி இருப்பது, ஈரானுக்கு அதன் இறைமை, நிலபுல ஒருமைப்பாட்டுக்கு இணைவாக கையாளாக்கூடிய நிலையில் இருக்கிறது.  

சீனாவின் (ரஸ்சியாவினதும்,) செய்மதிகள் விமானந்தாங்கி, இஸ்ரேல், மற்றும் அரபு நாடுகளை அவதானித்து கொண்டு இருக்கும்.

மற்றது, அவை f35, எப்படி இருக்கும் என்பதிலும் குறி. (ஈரானிடமும் தொழில்நுட்பங்கள் இருக்கிறது, உண்மையான சண்டையில் வேலை செய்யுமா, செய்யா என்பதை அறிவதற்கும்).

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு சொல்வதே மிகப்பெரிய ராஜதந்திர முரண்பாடு , இஸ்ரேல் ஐ பாதுகாப்போம், (அதாவது இஸ்ரேல் எந்த நிலையில் எங்காவது, எவரையும் அடித்தால், அல்லது  அடிக்கப்பட்டவர் திருப்பி அடித்தாலும் பாதுகாப்போம்.)

இந்த பாதுகாப்போம் என்றது நிபந்தனை அற்றது.

அடிக்கப்பட்டவர், திருப்பி இஸ்ரேல் ஐ தாக்க முனைவரக்ள் (எவராகினும்), அப்போதும் பாதுகாப்பது - ஆனால், ஒருவர் தாக்கும் போது, அடிக்கப்பட்டவர் திருப்பி அடிப்பதை தடுப்பது (எவராகிலும்) என்பது act of war; (ஏனெனில் தடுப்பவருக்கும், இதில் ஈரானுக்கும் பிரச்சனை இல்லை).

எவரேனும் உள்ளே வந்து தாக்கும் போது, அவருக்கு எதிர்க்க அந்த இடத்திலும், உள் வந்தவரின்  நிலப்புலத்திலும் தாக்குதல் நடத்தப்படும் சாத் திய கூறுகள் இருக்கிறது, மேற்கு சொல்வதின் படி அந்த நிலபுலத்தில் தாக்குதலை எதிர்க்க வேண்டும்.  

ஆகவே, மேற்கு, அது செய்யபோவதை தான் சொல்கிறது, அதாவது போர்வைக்கு இஸ்ரேல்  இன் பதிலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்துவது, ஆனால் அனாமதேயமாக (மேற்கு நம்புகிறது தடயத்தை அழிக்கலாம் என்று) பங்குபற்றுவது அல்லது தலை வகிப்பது.  

அந்த நிலையில், ஈரான் திருப்பி மேற்கின் இலக்குகளுக்கு அடிக்க எத்தனிக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் என் நண்பர் ஒருவர் எனக்கு ஒரு 1900 ஆண்டு பதிப்பித்த தமிழ் புத்தகம் ஒன்றின் சில பக்கங்களை அனுப்பி - இந்த புத்தகம் எதை பற்றியது என கேட்டிருந்தார்.

நான் சும்மா தமிழ் இலக்கியம் அது, இது என உடான்ஸ் விட்டு திரிவதால் - என்னை விசயகாரர் என தப்பு கணக்கு போட்டுள்ளார் என்பது புரிந்தாலும், மானத்தை விட்டு கொடுக்க முடியாதல்லவா? சரி அப்படி என்னதான் இருக்கு என பார்ப்போம் என முயற்சித்தேன்.

எழுத்து சீர்திருத்தம் வர முந்திய பதிப்பு. அது பெரிய பாதிப்பாக இருக்கவில்லை.

ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள்….

6 பக்கம்….

95% எமக்கு தெரிந்த தமிழ் எழுத்துருக்கள்தான். ஒவ்வொரு வார்த்தையாக வாசிக்கும் போது ஏதோ ஒரு அர்த்தம் விளங்கினாலும்….

ஒரு வசனமாக சேர்த்து வாசித்தால் ஒரு அறுப்பும் விளங்கவில்லை. 

பந்தி? சான்சே இல்லை…

பக்கம்? ஒவ்வொரு பக்கத்தையும் வாசித்து முடிக்க மூளை மூக்கால் வடியாத குறை.

இதற்கு மேல் வாசித்து அர்த்தம் காண விளைந்தால் - மூளைகாய்ச்சல் நிச்சயம் என தோன்ற - என் தோல்வியை ஒப்பு கொண்டு நண்பரிடம் சரண்டர் ஆகி விட்டேன்.

# deja vu

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.