Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

ஆனால் ஏமாற்றப்படுகிறார் என்றே நான் நினைக்கிறேன்.

யாரால் ஏமாற்றப்படுகின்றார்?

சேர சோழ பாண்டியர் வரலாறுகளையா நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்?
எல்லாம் கண் முன்னே நடந்த சம்பவங்களை வைத்து தானே பேசுகின்றோம். 😎

ஈழத்தமிழர் கேட்கும் அடிப்படை உரிமைகளை கொடுக்கக்கூடாது என்பது இந்தியாவால் எழுதப்படாத விதிபோல் பலர் சொல்கின்றனர். 🙃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

யாரால் ஏமாற்றப்படுகின்றார்?

சேர சோழ பாண்டியர் வரலாறுகளையா நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம்?
எல்லாம் கண் முன்னே நடந்த சம்பவங்களை வைத்து தானே பேசுகின்றோம். 😎

ஈழத்தமிழர் கேட்கும் அடிப்படை உரிமைகளை கொடுக்கக்கூடாது என்பது இந்தியாவால் எழுதப்படாத விதிபோல் பலர் சொல்கின்றனர். 🙃

யார் என்பது தெளிவில்லாமல் உள்ளது. ஆனால் வழமை போல் முதல் சந்தேகம் ரோவின் மீதே விழுகிறது.

ஆனால் நெடுமாறன் தெரிந்து கொண்டு, தன் நலத்தின் பால் பொய் சொல்வதாக நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியாவை பற்றி இவ்வளவு விபரமாக எப்படி கதைக்கிறீர்கள் என்பது விளங்கிவிட்டது😄

 

1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன்.

பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார். 

வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார்

கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார்.

பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார்.

தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

ஆனால் மகிந்தா தோற்க்க வேண்டும் என்பதற்காக இன்னொருவருக்கு வாக்களிப்பதானால்  தங்கள் வாக்கை சிவாசிலிங்கத்திற்கே அளித்திருக்கலாமே.நான் இலங்கை பிரசையாக இலங்கையில் இருந்தால் அப்படி தான் செய்திருப்பேன்    நான் நம்புகின்றேன் அவர்கள் விரும்பி தான் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர்
அல்லது தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.

 

இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம்.

அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

யார் என்பது தெளிவில்லாமல் உள்ளது. ஆனால் வழமை போல் முதல் சந்தேகம் ரோவின் மீதே விழுகிறது.

ஆனால் நெடுமாறன் தெரிந்து கொண்டு, தன் நலத்தின் பால் பொய் சொல்வதாக நான் நினைக்கவில்லை.

நான் நினைக்கிறேன் , 2009க்கு முன்பு வன்னியில் போராளிகள், தலைவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள செயற்பாட்டாளற்களுடன் தொடர்பில் இருந்தார். 2009 க்கு பிறகு அவர்தொடர்பில் இருந்த வன்னியில் இருந்துதப்பியவர்களில் ஒரு சிலரும்  , புலம்பெயர் நாடுகளில் உள்ள செயற்பாட்டாளராக இருந்தவர்களில் சிலரும் தெரிந்தோ தெரியாமலோ இந்திய இலங்கை உளவு அமைப்புகளினால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். இவர்கள் சொல்வதினை நெடுமாறன் அவர்கள் உண்மை என்று நம்பியிருக்கலாம்.

  • Like 1
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, கந்தப்பு said:

1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.

மற்றைய தொகுதி பெருந்துறை? மதிமுக ஆரம்பித்து களம் கண்ட முதலாவது தேர்தல்.

நீங்கள் சொல்லும் கூட்டங்கள் நடந்த இடம் மயிலை மாங்கொல்லையா?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

மற்றைய தொகுதி பெருந்துறை? மதிமுக ஆரம்பித்து களம் கண்ட முதலாவது தேர்தல்.

நீங்கள் சொல்லும் கூட்டங்கள் நடந்த இடம் மயிலை மாங்கொல்லையா?

 

பெசன்ட் நகர் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி வீடு வழியாக அடையார் போகிற வீதியில்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெருந்துறைதான் .  இதில் மதிமுக 2 ஆம் இடத்தை பெற்றது .  அதிமுக முதலிடம். திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ் கம்னியூஸ்ட் மூன்றாம் இடம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விசுகு said:

நெடுமாறன் ஜயாவின் வரலாறு தெரியாமல் இருப்பது தான் காரணம். நாமெல்லாம் வெறும் தூசி அவர் முன்னால். 

நெடுமாறன் ஜயா, வைகோ போன்ற சிலர் வெளியில் தெரியும் ஆனால் முகம் தெரியாத எத்தனையோ திராவிடர் கழக, திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பல லட்சக்கணக்கில்....?

உண்மை  சுருக்கமாக சொன்னால்  தமிழ்நாட்டு அரசியல் பற்றியும்  அரசியல்வாதிகள் பற்றியும்  தெரியாது  என்பது தான் சரியானதாகும்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, கந்தப்பு said:

பெசன்ட் நகர் பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து வாழப்பாடி ராமமூர்த்தி வீடு வழியாக அடையார் போகிற வீதியில்

நன்றி. வேளங்கன்னி ஆலயம், மீன் சந்தை இருக்கும் வீதி என்றால் MG road எனப்படும் மகாத்மா காந்தி வீதி?

எங்கே என நினைவில்லை, ஆனால் தோராயமாக இந்த ஏரியாதான் - 1998 இல் வைகோவின் கூட்டத்துக்கு போய் இருந்தேன் - அப்படியே கட்டிப்போடும் மேடைப்பேச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, கந்தப்பு said:

இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்

இதைச் சொல்லித் தான் கஜே குழுவினர் 

பொதுவேட்பாளரை நிறுத்தினால் இரண்டாவது வாக்கு எண்ணும் பட்சத்தில் அது ஏதோ ஒரு சிங்கள கட்சிக்கு போகும்.

அதனால் பகிஸ்கரிப்பே சிறந்தது என்கிறார்கள்.

இந்த முறை நடக்க இருக்கும் தேர்தல் அனேகமாக இரண்டாவது தடவை வாக்குகள் எண்ணவேண்டி வரலாம்.

7 hours ago, கந்தப்பு said:

சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம்.

சிவாஜிக்கு சொற்ப வாக்குகளும் 

இனத்தைக் கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்கு மிக அதிகமான வாக்குகளும் கிடைத்தன.

இதை ஜீரணிக்க முடியாமலே இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

அதனால் பகிஸ்கரிப்பே சிறந்தது என்கிறார்கள்.

எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம்?

1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த முறை நடக்க இருக்கும் தேர்தல் அனேகமாக இரண்டாவது தடவை வாக்குகள் எண்ணவேண்டி வரலாம்.

இது நடக்க வாய்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிவாஜிக்கு சொற்ப வாக்குகளும் 

இனத்தைக் கொன்றொழித்த சரத் பொன்சேகாவுக்கு மிக அதிகமான வாக்குகளும் கிடைத்தன.

இதை ஜீரணிக்க முடியாமலே இருந்தது.

ஆனால் மகிந்தவை தோற்கடிக்க முடியுமாயின் அதை செய்ய, குறைந்த பட்சம் மகிந்தவின் அணுகுமுறையை நிராகாரிக்கிறோம் என்பதை மக்கள் சொல்ல அந்த தேர்தலை பயன்படுத்தி கொண்டார்கள்.

2009 ற்கு பின், சத்தியாகிரகம், பகிஸ்கரிப்பு, பொது வேட்பாளர் போல வெல்ல முடியாத குதிரைகளில் பணம் கட்டுவதில்லை என் தமிழ் மக்கள் முடிவு செய்திருப்பதாக நான் கருதுகிறேன்.

இந்த முறையும் எல்லா தமிழ் தேசிய கட்சியினரும் ஒருமித்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

அதனால் பகிஸ்கரிப்பே சிறந்தது என்கிறார்கள்.

எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம்

இரண்டாவது தெரிவை சிங்கள கட்சி யாருக்கோ போடுவதற்கு கூடுதலான சந்தர்ப்பம் உள்ளது.

இதைப்பற்றி மக்களுக்கு தெளிவான விளக்கவுரைகளை யாரும் நடத்துவதாக தெரியவில்லை.

இன்னமும் தங்களுக்குள்ளேயே தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இரண்டாவது தெரிவை சிங்கள கட்சி யாருக்கோ போடுவதற்கு கூடுதலான சந்தர்ப்பம் உள்ளது.

இதைப்பற்றி மக்களுக்கு தெளிவான விளக்கவுரைகளை யாரும் நடத்துவதாக தெரியவில்லை.

இன்னமும் தங்களுக்குள்ளேயே தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நான் பொது வேட்பாளரை ஆதரித்தது இல்லை. ஆனால் இந்த முறை முயற்சிபதில் தவறில்லை என நினைக்கிறேன்.

ஆனால் எல்லாரும் உடன்பட வேண்டும்.

பகிஸ்கரிப்பால் ஒரு பலனுமில்லை. தமிழரில் 10% கூட இந்த முடிவை ஆதரிப்பது சந்தேகமே.

ஆனால் யாழில் ஒரு  எம்பி சீட்டை தக்க வைக்க இது போதுமாயிருக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏன் இந்த முறை பொது வேட்பாளரை போடலாம் என நினைக்கிறேன்?

இந்த தேர்தலில் போட்டி ரணில், அனுர, சஜித் இடையேதான்.

இதில் மகிந்த/கோட்ட போல ஒரு அதி தீவிர நேரடியான இனவாதி போட்டியில் இல்லை. ஆகவே அவர்கள் வென்றால் வரக்கூடிய அடக்கு முறை அராஜகங்கள் எம் மக்களை பாதிக்க கூடிய வாய்ப்பு குறைவு. 

ரணில்/சஜித் வந்தால் இப்போதைய நிலை தொடரும். அனுரவும் நேரடியான அராஜகத்தை தமிழர் மீது கட்டவிழ்க்க வாய்ப்பு குறைவு.

இப்படியான சந்தர்பத்தில் யாரையும் தோற்கடிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

எனவே மறைமுகமாக இனவாதமாக செயல்படகூடிய ரணில்/சஜித்/அனுரவை எதிர்த்து நம் நேரடியாக பொது வேட்பாளரை இறக்கி அரசியல் செய்யலாம். 

அனைவரும் ஓம்பட்டால்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

நன்றி. வேளங்கன்னி ஆலயம், மீன் சந்தை இருக்கும் வீதி என்றால் MG road எனப்படும் மகாத்மா காந்தி வீதி?

எங்கே என நினைவில்லை, ஆனால் தோராயமாக இந்த ஏரியாதான் - 1998 இல் வைகோவின் கூட்டத்துக்கு போய் இருந்தேன் - அப்படியே கட்டிப்போடும் மேடைப்பேச்சு.

சார் கால் வைக்காத இடமே இல்லை போல கிடக்கு? 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, கந்தப்பு said:

நான் நினைக்கிறேன் , 2009க்கு முன்பு வன்னியில் போராளிகள், தலைவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள செயற்பாட்டாளற்களுடன் தொடர்பில் இருந்தார். 2009 க்கு பிறகு அவர்தொடர்பில் இருந்த வன்னியில் இருந்துதப்பியவர்களில் ஒரு சிலரும்  , புலம்பெயர் நாடுகளில் உள்ள செயற்பாட்டாளராக இருந்தவர்களில் சிலரும் தெரிந்தோ தெரியாமலோ இந்திய இலங்கை உளவு அமைப்புகளினால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். இவர்கள் சொல்வதினை நெடுமாறன் அவர்கள் உண்மை என்று நம்பியிருக்கலாம்.

இப்ப தும்மினால் தான் சரியாக இருக்கும்.😂

நீங்கள் தமிழக அரசியலை மிக மிக பரிட்சயமானவர் புரிந்து கொண்டவர் என நான் நினைத்து உங்களிடம் ஓரிரு கேள்விகள்.

தமிழ்நாட்டு மக்களின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன? போலி அரசியல்களை நம்புவர்களா? அல்லது வாக்குக்கிற்காக அரசியலை விற்கின்றார்களா?

நிற்க...
கருணாநிதி   முள்ளிவாய்கால் உண்ணாவிரத நாடகமாடாமல் இருந்திருந்தால் அழிவுகளை நிறுத்தியிருக்க முடியுமா?
அல்லது கருணாநிதி  முயற்சி செய்திருந்தால்   முள்ளிவாய்க்கால் நிகழ்வை தடுத்திருக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, குமாரசாமி said:

சார் கால் வைக்காத இடமே இல்லை போல கிடக்கு? 😂

நாங்கள் சோசல் காசு இல்லாத காலத்திலேயே ஊருலாப் தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/4/2024 at 06:47, விளங்க நினைப்பவன் said:

தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.

இதுதான் நடந்தது, விரும்பியல்ல. மிகத்தவறான முடிவு.

12 hours ago, goshan_che said:

எல்லா தமிழர்களும் ஒரே தமிழ் வேட்பாளருக்கு முதல் தெரிவை போட்டு விட்டு, அடுத்த தெரிவை போடாமல் விடலாம்?

கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒரு விடயம். ஆனால், மீட்பன் இல்லாத மந்தைகள் போல இருக்கின்றது இன்றைய தமிழினத்தின் நிலைமை. 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, குமாரசாமி said:

 

கருணாநிதி   முள்ளிவாய்கால் உண்ணாவிரத நாடகமாடாமல் இருந்திருந்தால் அழிவுகளை நிறுத்தியிருக்க முடியுமா?
அல்லது கருணாநிதி  முயற்சி செய்திருந்தால்   முள்ளிவாய்க்கால் நிகழ்வை தடுத்திருக்க முடியுமா?

இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா?  

செப்டம்பர் 11 தாக்குதல் ,  நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை,  கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு ……

2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் ,  தமிழகத்தில்  இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா?  இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால்  ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?

Edited by கந்தப்பு
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

 

தமிழ்நாட்டு மக்களின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன? போலி அரசியல்களை நம்புவர்களா? அல்லது வாக்குக்கிற்காக அரசியலை விற்கின்றார்களா?

 

இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார். 

தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.  

இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ரஞ்சித் said:
On 26/4/2024 at 22:47, விளங்க நினைப்பவன் said:

தமிழ் அரசு கட்சி யாருக்கு வாக்களிக்கும் படி சொல்கின்றதோ அவருக்கு தான் வாக்களிப்பார்கள்.

இதுதான் நடந்தது, விரும்பியல்ல. மிகத்தவறான முடிவு.

நிச்சயமாக அண்ணா.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.