Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் வர்த்தகர்

மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது.

sumandran-public-request-diaspora-tamil-traders

என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார்.

இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர்.

கொள்கை அரசியல்

அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது.

அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள்.

sumandran-public-request-diaspora-tamil-traders

அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும். 

நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள்.

தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....

இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் .

தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

நீர் தமிழருக்குரிய அரசியலை செய்தால் ஏன் உமக்கு எதிராக செயல்பட போறார்கள் சுமா .
உங்கட சித்து விளையாட்டினை நிறுத்தி சிங்களத்துக்கு மிண்டு கொடுக்கின்ற சதியினை நிறுத்தும் .
அதுவே நல்லது , அல்லது தமிழ் அரசியலில் ஒதுங்கி சிங்கள கட்சியுடன் இணையும் . ரணிலின் சேவகன் தானே .
மானம் கெட்ட பிழைப்பு நடத்துவது விபச்சாரிக்கு சமம் .

  • கருத்துக்கள உறவுகள்

பணம் சேர்க்க  வந்து விடுவார்    கருத்துகள் மட்டும் சொல்ல கூடாது   ஏனெனில் இது அவருடைய பகுதி நேர வேலை   மற்றும் படி தமிழர்கள் எப்படி போனால் அவருக்கு என்ன ?? 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஒரு உதாவாக்கரை அரசியல்வாதி. தன்னலம் தவிர வேறு எதையும் கருதாத, தன் திறமை பற்றி அதீத எண்ணம் கொண்ட, தலைமை பண்புகள் எதுவுமற்ற மனிதர்.

நிற்க,

சுமந்திரனை போலவே இன்னொரு உதவாக்கரைதான் சிறிதரன். 

சுமந்திரனை போல அல்லாது - தனது உறவினர், ஊரவர் வலையமைப்பு மூலம் புலம்பெயர் தேசங்களில் தனக்கென ஒரு கூட்டத்தை சிறிதரன் வைத்துள்ளார். இவர்களில் சிலர் சில்லறை வர்தகர்கள், சிலர் பெரிய வர்தகர்கள்.

சுருக்கமாக,

புலம்பெயர் தேசத்தில், படித்த முட்டாள்கள் சுமந்திரன் பக்கம் எண்டால், படிக்காத முட்டாள்கள் சிறிதரன் பக்கம் (பொதுப்படையாக).

 படித்த, படிக்காத முட்டாள்கள் அல்லாதோர் இந்த இரு பகுதி அடிப்பொடிகள் பற்றியும் அவதானமாக இருக்க வேண்டும்.

சுமந்திரனை போன்ற ஒரு ஊத்தைதான் சிறிதரனும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

நிற்க,

எனக்கும் எமது தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடம் ஒரு துளி நம்பிக்கையுமில்லை.
இருக்கும் அரசியலை கழுவியெடுத்து புதிய அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

இரு பகுதியையும் குற்றம் சாட்டுவது இலகுவானது ....ஆனால் தமிழரசு கட்சியை உடைக்க வேணும் என்ற கொள்கைக்கு நாங்கள் உடன்பட முடியாது ..70 வருடங்களாக பல ஊத்தைகள் வந்து போய்விட்டார்கள் அதற்காக தமிழ் தேசியத்தை அழிக்க உதவ முடியாது ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

பணம் சேர்க்க  வந்து விடுவார்    கருத்துகள் மட்டும் சொல்ல கூடாது   ஏனெனில் இது அவருடைய பகுதி நேர வேலை   மற்றும் படி தமிழர்கள் எப்படி போனால் அவருக்கு என்ன ?? 

நன்றி @Kandiah57

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

எனக்கும் எமது தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடம் ஒரு துளி நம்பிக்கையுமில்லை.
இருக்கும் அரசியலை கழுவியெடுத்து புதிய அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து.

இன்று சிறிலங்கா தேசிய கட்சிகளை தமிழ் பகுதிகளில் நிலைநிறுத்த பலர் முயற்சி செய்கின்றனர் ...சிவப்பு கோவண கட்சி ஜெ.வி.பி யும் ....பச்சை கோவணம் ஐக்கிய தேசிய கட்சியும்....இதற்காக தமிழ் தேசிய கட்சிகளை உடைக்கின்றனர் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

புலம்பெயர் தேசத்தில், படித்த முட்டாள்கள் சுமந்திரன் பக்கம்

படித்த முட்டாள்கள் நல்லதொரு பெயர் 😃 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

படித்த முட்டாள்கள் நல்லதொரு பெயர் 😃 

👇

11 hours ago, goshan_che said:

படிக்காத முட்டாள்கள் சிறிதரன் பக்கம்

இதை எழுத அவையடக்கம் விடவில்லையாக்கும்🤣

30 minutes ago, குமாரசாமி said:

எனக்கும் எமது தமிழ் தேசிய அரசியல்வாதிகளிடம் ஒரு துளி நம்பிக்கையுமில்லை.
இருக்கும் அரசியலை கழுவியெடுத்து புதிய அரசியலை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து.

எனக்கும் இதில் உடன்பாடே.

19 minutes ago, putthan said:

இரு பகுதியையும் குற்றம் சாட்டுவது இலகுவானது ....ஆனால் தமிழரசு கட்சியை உடைக்க வேணும் என்ற கொள்கைக்கு நாங்கள் உடன்பட முடியாது ..70 வருடங்களாக பல ஊத்தைகள் வந்து போய்விட்டார்கள் அதற்காக தமிழ் தேசியத்தை அழிக்க உதவ முடியாது ...

அதுவும் சரிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

இன்று சிறிலங்கா தேசிய கட்சிகளை தமிழ் பகுதிகளில் நிலைநிறுத்த பலர் முயற்சி செய்கின்றனர் ...சிவப்பு கோவண கட்சி ஜெ.வி.பி யும் ....பச்சை கோவணம் ஐக்கிய தேசிய கட்சியும்....இதற்காக தமிழ் தேசிய கட்சிகளை உடைக்கின்றனர் ....

அவர்கள் முயலாமலே உடைக்க கூடியவர்கள் இவர்கள்.

மேலே குசா அண்ணை சொன்னது போல - இவர்கள் மீதானா நம்பிக்கை மிக வேகமாக அற்று வருகிறது.

ஒரு தேர்தலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாவது உண்மையாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க தேவை.

இல்லாவிடின் சுமந்திரன்/ சிறிதரன் மீதான நம்பிக்கை இழப்பு = தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கை இழப்பு என மாற வெகுநாட்கள் ஆகாது.

அதை தெற்கு கட்சிகள் நிச்சயம் பயன்படுத்தி கொள்ளும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இதை எழுத அவையடக்கம் விடவில்லையாக்கும்🤣

ஸ்ரீதரன் சுமத்திரனை  வெண்டவர் ஆனால் ஊரும் சூழலும் ஒரு எல்லைக்கு மேல் அவரை தாண்டவிடாது  சுமத்திரன் அப்படியல்ல லண்டன் வந்தால் குழப்பம் வரும் என்று தெரிந்தாலும் வலிய  தேடி வந்து அடிவாங்கும் முட்டாள் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

ஸ்ரீதரன் சுமத்திரனை  வெண்டவர் ஆனால் ஊரும் சூழலும் ஒரு எல்லைக்கு மேல் அவரை தாண்டவிடாது  சுமத்திரன் அப்படியல்ல லண்டன் வந்தால் குழப்பம் வரும் என்று தெரிந்தாலும் வலிய  தேடி வந்து அடிவாங்கும் முட்டாள் .

ம்ம்ம்…அப்போ சும் முட்டாள்-கள்ளன், 

ஶ்ரீ - கெட்டிகார கள்ளன்?

இருவரும் எமது இனத்துக்கு கேடு எனில்,

நாம் கெட்டிகார-கள்ளனை அல்லவா மூர்கமாக எதிர்க்க வேண்டும்?

ஏன் முட்டாள்-கள்ளனை எதிர்ப்பதில் 1/10 கூட கெட்டிகார கள்ளனை எதிர்ப்பதில் செலவிடுவதில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சுமத்திரன் திறத்தப்படும்போது சிங்களவர்களுடன் வாழ்வதே  நிம்மதி என்பவர் ஏனப்பா தமிழர்களின் அரசியலுக்குள் நின்று குழப்பம் விளைவிக்கிறாய் பேசாமல் சிங்கள அரசியல் கட்சி பக்கமே சேர்ந்து அவர்களை தொல்லை பண்ணும் ஐய்யா .

9 minutes ago, goshan_che said:

அவர்கள் முயலாமலே உடைக்க கூடியவர்கள் இவர்கள்.

மேலே குசா அண்ணை சொன்னது போல - இவர்கள் மீதானா நம்பிக்கை மிக வேகமாக அற்று வருகிறது.

ஒரு தேர்தலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாவது உண்மையாக தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்க தேவை.

இல்லாவிடின் சுமந்திரன்/ சிறிதரன் மீதான நம்பிக்கை இழப்பு = தமிழ் தேசியத்தின் மீதான நம்பிக்கை இழப்பு என மாற வெகுநாட்கள் ஆகாது.

அதை தெற்கு கட்சிகள் நிச்சயம் பயன்படுத்தி கொள்ளும்.

இதைத்தான் இலங்கை இனவாத அரசு விரும்புது  நீங்களும் விரும்புகிறீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

இதைத்தான் இலங்கை இனவாத அரசு விரும்புது  நீங்களும் விரும்புகிறீர்கள் .

இல்லை….இலங்கை அரசு விரும்புவது, சிறிதரனும், சுமந்திரனும், விக்கியரும், கஜேயும் பலவாறாக பிரிந்து - தமிழ் தேசிய அரசியலை நம்பினால் - அம்போ! என மக்களை நினைக்க வைக்கும் நிலையை.

தமிழ் மக்களை கொண்டே, ஜனநாயக தேர்தல் முறையில், தமிழ் தேசிய அரசியலை அரங்கை விட்டு அகற்றுவதே இலங்கை இனவாத அரசின் end game.

தமது கதிரை ஆசையால், ஈகோவால் அதை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்கள் யாழ்பாணத்தின் தமிழ் எம்பிக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் சாமர்த்தியம் எவ்வாறு வேலை செய்கின்றது. உதவாக்கரை சம்பந்தன் மூலம் கள்ளன் சுமாவை பின் வழியால் தேசியத்தின் உள்ளெ கொண்டு வந்து , விக்கியரையும் அப்பப்ப தன் பக்கம் இழுத்து இப்ப மொத்தமாக தேசியம் உடைந்து, கடைசியில் தமிழரசன் கோவணத்தையும் உருவியாச்சு . மக்களுக்கு யாருக்கு வாக்கு போடுவதென்ற நிலையை உருவாக்கி , கடைசியில் சிங்கள கட்சிக்கு வாக்களிக்கும் நிலையை சிறப்பாக செய்துவிடடார் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.