Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி போட்டிகளில் இளம் பெண்கள் மட்டுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

ஆனால், இங்கே அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ள அதேநேரம், அழகுப் போட்டியின் பன்முகத்தன்மை மற்றும் அனைவருக்கும் சம அளவில் வாய்ப்பு தர வேண்டும் என்ற முடிவை எடுத்த மிஸ் யுனிவர்ஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

யார் இவர்:
அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த அலெஜாண்ட்ரோ.. பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்து வரும் இவர், அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். அழகிற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இவரது வெற்றி காட்டுகிறது.
இந்த வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெறும் முதல் பெண் இவர் ஆவார். அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த அழகி போட்டியைக் காண வந்த பார்வையாளர்கள் சப்போர்ட்டும் இவருக்கு தான் அதிகம் இருந்துள்ளதாம்.
அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதையே தனது இலக்காக வைத்துள்ளதாக அலெஜாண்ட்ரா தெரிவித்துள்ளார். அதிலும் அவர் வெற்றி பெற்றால் இந்தாண்டு செப். மாதம் மெக்சிகோவில் நடைபெறும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அவரால் பங்கேற்க முடியும். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அழகுப் போட்டிகளில் இப்படியொரு மாற்றம் என்னால் நடந்துள்ளது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் உடல் அழகை மட்டுமின்றி, அவர்களின் மற்ற மதிப்புகளை வைத்தும் அவர்களை மதிப்பிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது” என்றார்.
கட்டுப்பாடு நீக்கம்
இதற்கு முன்பு வரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற ரூல்ஸ் இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதேபோல டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/300429

60-Year-Old Makes History by Being Crowned Miss Universe Buenos Aires

 

  • Like 1
Posted

அறுபது வயது மாதிரி தெரியவில்லை.

வயது ஒரு இலக்கம் என நிறுவி உள்ளார்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

அறுபது வயது மாதிரி தெரியவில்லை.

வயது ஒரு இலக்கம் என நிறுவி உள்ளார்.

தம்பி நுணாவில்! நான் என்ரை கண் டாக்குத்தரை மாத்தீட்டன். நீங்கள் எப்ப மாற்றுறதாய் உத்தேசம்? 🤣

  • Haha 1
Posted
1 hour ago, குமாரசாமி said:

தம்பி நுணாவில்! நான் என்ரை கண் டாக்குத்தரை மாத்தீட்டன். நீங்கள் எப்ப மாற்றுறதாய் உத்தேசம்? 🤣

அண்ணை 60 வயதுக்கு எப்படி அழகை எதிர்பார்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

அறுபது வயது மாதிரி தெரியவில்லை.

வயது ஒரு இலக்கம் என நிறுவி உள்ளார்.

நிச்சயமாக அது ஒரு இலக்கம் தான்   ...அழகி போட்டியில் வயதுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறதா ??  இவர் எப்படி அதிக புள்ளிகள் பெற்றார்??  அழகுக்கும். வயதிற்கும் எந்தவொரு சம்பந்தமில்லை   அது  மனத்துடன். தொடர்புடையது   நான் இளமையாக. இருக்கிறேன் என்ற  உறுதியான எண்ணம்  ஒரு வயோதிபனை   இளைஞர் ஆக்கும்    எனக்கு வயது போய் விட்டது என்ற எண்ணம் ஒரு இளைஞரை வயோதிபர்போல காட்டும்  😀

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nunavilan said:

அண்ணை 60 வயதுக்கு எப்படி அழகை எதிர்பார்கிறீர்கள்?

60 வயது மாதிரி தெரியேல்லை எண்டால் கிட்டத்தட்ட 40 வயது மாதிரியாவது இருக்கோணும் எல்லோ?😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நுணாவிலான், கந்தையா அண்ணாவின் கருத்துக்கள் நேர்மறை எண்ணம் கொண்ட கருத்துக்கள்.

10 hours ago, nunavilan said:

வயது ஒரு இலக்கம் என நிறுவி உள்ளார்

5 hours ago, Kandiah57 said:

உறுதியான எண்ணம்  ஒரு வயோதிபனை   இளைஞர் ஆக்கும்    எனக்கு வயது போய் விட்டது என்ற எண்ணம் ஒரு இளைஞரை வயோதிபர்போல காட்டும்  😀

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.