Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா, தேவே கவுடா, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

46 நிமிடங்களுக்கு முன்னர்

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான வீடியோக்கள் அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இதுவரை ரேவண்ணா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவரது அலுவலக அதிகாரி ஒருவர் இதை மறுத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் போலியானவை என்று கூறியிருக்கிறார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்னாடக மாநிலட் தலைவரும், பிரஜ்வல் ரேவண்ணாவின் மாமாவுமான ஹெச்.டி.குமாரசாமி, இந்தச் சம்பவத்திற்காக ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட முடிவுசெய்யப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை (ஏபர்ல் 29) தெரிவித்தார்.

இந்த விஷயம் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்பிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் கர்நாடக மாநில காவல்துறை ஐ.ஜி-க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை ஹெச்.டி.ரேவண்ணா, கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரும் அக்குடும்பத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் காவல்துறையில் அளித்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால் அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அரசியல் சதி என்று கூறியுள்ளார்.

2000-க்கும் மேற்பட்ட போட்டோ வீடியோ காட்சிகள்

கர்நாடக முதல்வர் கே சித்தராமையா தெரிவித்தார், கர்நாடக மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த வழக்கை விசாரிக்கும் என்று கூறினார். கர்நாடக மாநில ஏ.டி.ஜி.பி பி.கே.சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுள்ளது.

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேவண்ணாவின் தொகுதியான ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு அவர்மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தன. பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே ஹசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` நாளிதழின் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட பென்-டிரைவ்கள் பரப்பப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோக்களில், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண்களின் முகங்கள் இருந்தன.

"இந்தப் பென்-டிரைவ்கள் பேருந்து இருக்கைகளிலும், பேருந்து நிலையங்களிலும் வைக்கப்பட்டிருந்தன. பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட்டன," என்று ஓர் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குத் தெரிவித்தார். "இந்தப் பென்-டிரைவ்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 2,000க்கும் மேற்பட்ட ஃபைல்கள் இருந்தன. சில மணிநேரங்களுக்குப் பிறகு, இவை வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டன," என்று அந்த அதிகாரி கூறியிருந்தார்.

பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா, தேவே கவுடா, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

'வீடியோக்களைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது'

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

"சில வீடியோக்களைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "ஒரு பெண் 'தயவுசெய்து வேண்டாம், தயவுசெய்து வேண்டாம்' என்று கெஞ்சுகிறாள். அதைப் பார்த்தாலே பதறுகிறது," என்று அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28), ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார்.

"நான் [அவர்கள் வீட்டில் பணிக்குச்] சேர்ந்தபோது, அங்கிருந்த மற்ற ஆறு பணிப்பெண்கள் பிரஜ்வலைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவார்கள். ஆண் ஊழியர்களும் எங்களை ஹெ.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வலிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

"அவரது மனைவி இல்லாத போதெல்லாம், ஹெச்.டி.ரேவண்ணா என்னை தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்," என்று அவர் தனது புகாரில் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட மற்ற பெண்களில் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார்.

மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். அவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது தந்தை இந்தக் கூற்றை மறுத்து விசாரணையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். "நாங்கள் பயந்து ஓட மாட்டோம். நாங்கள் இங்கேயே இருக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `இத்தகைய கொடூரமான செயலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்` எப்படி விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா, தேவே கவுடா, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம்

பட மூலாதாரம்,HD DEVE GOWDA'S X ACCOUNT

படக்குறிப்பு,பிரதமர் நரேந்திர மோதியுடன் பிரஜ்வல் ரேவண்ணா (வலது)

பா.ஜ.க மீது எழும் கேள்வி

"நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த வேட்பாளரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை அறிந்தே" பா.ஜ.க கூட்டணி ஏன் பிரஜ்வல் ரேவண்ணாவை தேர்தலில் நிறுத்தியது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோதியை கேள்வி கேட்டு ஒரு கர்நாடக மாநில அமைச்சர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு பா.ஜ.க தலைவர் ஒருவர் இந்த வீடியோக்கள் குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைமையிடம் தெரிவித்ததாக `தி இந்து` நாளிதழின் செய்தியைத் தொடர்ந்து இந்தலக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

பா.ஜ.க-வின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்.டி.டி.வி செய்தி சேனலிடம், "ஒரு கட்சியாக எங்களுக்கும் இந்த வீடியோக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விசாரணையைப் பற்றி எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை," என்று கூறினார்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளது. ஹெச்.டி.ரேவண்ணாவின் சகோதரரும், முன்னாள் கர்னாடக முதல்வருமான எச்.டி.குமாரசாமி, திங்கள்கிழமை, பிரஜ்வல் ரேவண்ணாவையும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணாவையும் `சமூகத்திற்கு அவமானம்` என்று கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “[எங்கள்] குடும்பத்தைக் குறை கூறாதீர்கள். எச்.டி. ரேவண்ணாவும் அவரது குடும்பத்தினரும் தனியாக உள்ளனர். அவரது செயல்களை நான் கண்காணிப்பதில்லை," என்றார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இருவர் மீதும் கட்சித் தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று கட்சியின் மூத்த தலைவர் தேவகவுடா தெரிவித்தார்.

இது தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இது பல்வேறு அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தலாம். இது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் பா.ஜ.க-வை சேர்த்தோ தனித்தனியாகவோ குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் பாதிக்கலாம். இது `வெட்கக்கேடான விஷயம்` என்று பா.ஜ.க தலைவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால், தற்போதைய நிலவரத்தப் பார்த்தால், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இந்தப் புயலில் இருந்து வெளியேறும் என்று தெரிகிறது.

இருப்பினும், அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, அடுத்த கட்டமாக கர்நாடகாவில் மீதமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை எவ்வாறு நடத்துகிறது என்பதைப் பொறுத்தே இந்தச் சம்பவம் ஏற்படுத்தும் என்பதைக் கூறமுடியும்.

பிரஜ்வல் ரேவண்ணா, கர்நாடகா, தேவே கவுடா, பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

கட்சியின் எதிர்காலம் என்னவாகும்?

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் இருந்து இந்த வீடியோக்களின்மீது தடை ஆணை பெற்றார். இதைத் தொடர்ந்து, உள்ளூர் பா.ஜ.க தலைவர் தேவராஜ் கவுடா, டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜேந்திராவுக்கு கடிதம் எழுதி, பிரஜ்வல் ரேவண்ணா அல்லது அவரது குடும்பத்தினர் யாரையும் கூட்டணியில் இருந்து வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்று கோரியிருந்தார்.

ஆனால், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டவுடன், யாரை வேட்பாளராக நிறுத்துவது, எ எனுஇநும் முடிவை கூட்டணி கட்சிக்கே விட்டுவிட வேண்டும் என பாஜக தலைமை முடிவு செய்திருந்தது.

ஆனால், அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் கொள்கை மற்றும் ஆளுமைப் பேராசிரியர் நாராயணா பிபிசி ஹிந்தியிடம், "இந்தச் சம்பவம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில், ஓட்டுப்பதிவு நடந்த போது, ஹசன் நகரில் மட்டுமே, வீடியோ அடங்கிய பென்-டிரைவ்கள் வினியோகிக்கப்பட்டன. இதனால் கர்நாடகாவில் முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மீதமுள்ள 14 இடங்களில் பெண்களின் வாக்குகளை ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்தால், அது பாஜகவுக்கு தார்மீக சவால் அளிக்கும்,"

என்றார்.

அரசியல் விமர்சகர் உமாபதி மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.தேவே கவுடா உயிருடன் இருக்கும் வரை, தனது கட்சியை உடைய விடமாட்டார், என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/cer382232kyo

  • கருத்துக்கள உறவுகள்

மதச்சார்பற்ற ஜனதா தளம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் உள்ளது.🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள்... ‘சிக்கிய’ தேவகவுடா பேரன் - கர்நாடகாவில் பாஜக-வுக்கு பின்னடைவா?

கர்நாடகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்த 14 தொகுதிகளுக்கு வரும் மே 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

 
 
 
மோடி
 
மோடி

பா.ஜ.க-வுக்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. அங்கு, கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி-க்கு எதிராக எழுந்திருக்கும் பாலியல் புகார், கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம், பா.ஜ.க கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

கர்நாடகாவில் ஹாசன் மக்களவைத் தொகுதி எம்.பி-யாக இருப்பவர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் என்பதும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியின் சகோதரர் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹாசன் தொகுதியின் சிட்டிங் எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, இந்த முறையும் அந்தத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாள், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான பாலியல் வீடியோக்கள் வெளியாகின. ‘பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வக்கிரங்கள்’ என்ற பெயரில் 300 பாலியல் வீடியோக்கள் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டன. இந்த விவகாரத்தால் பா.ஜ.க - ஜே.டி.எஸ் கூட்டணியினர் பேரதிர்ச்சியடைந்தனர்.

 

அடுத்த சில மணி நேரத்தில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய 2,800-க்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவின. தன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், தனது கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் என்று தொடங்கி, அரசுப் பணியில் இருக்கும் பெண் அதிகாரிகள் வரை பாலியல் ரீதியாக பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்திருக்கிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த பாலியல் காட்சிகளை அவரே வீடியோவும் எடுத்திருக்கிறார். 16 வயது சிறுமி முதல் 60 வயதுடைய பெண்கள் வரை பாலியல் அத்துமீறல்களில் பிரஜ்வல் ஈடுபட்டிருக்கிறார் என்பதை கர்நாடகா முழுவதும் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

பிரஜ்வல் ரேவண்ணா
 
பிரஜ்வல் ரேவண்ணா

பாலியல் வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார். தற்போது, அவர் ஜெர்மனியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு கர்நாடகா மாநில அரசு அமைந்திருக்கிறது. மேலும், புகார்கள் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக்கோரி கர்நாடகா முழுவதும் பெண்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

 

தேவகவுடாவின் மகனும் பிரஜ்வலின் தந்தையுமான ரேவண்ணா, முன்னாள் அமைச்சர் ஆவார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் மீதும் பாலியல் புகார் எழுந்திருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவைப் போலவே அவரது தந்தையும் தன்னை கொடுமைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார் என்று, அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் தந்தை, மகன் இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

பிரஜ்வல் ரேவண்ணாவை பா.ஜ.க பாதுகாக்கிறது என்று கர்நாடகா அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் குற்றம் சாட்டியிருக்கிறார். அவர், ‘இந்து பெண்களின் தாலி குறித்து பிரதமர் மோடி பேசிவருகிறார். ஆனால், தனது கூட்டணிக் கட்சியினரின் பாலியல் வக்கிரங்களுக்கு மோடி என்ன சொல்லப்போகிறார்? அரசியல் ஆதாயத்துக்காக பிரஜ்வல் ரேவண்ணாவை பா.ஜ.க பாதுகாக்கிறது. இது உலக அளவில் நடைபெற்றிருக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் மிக மோசமான வன்கொடுமை நிகழ்வாக இருக்கிறது. எனவே, இது தொடர்பான தனது நிலைப்பாட்டை பா.ஜ.க தெரிவிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் பா.ஜ.க-வுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டுமென்பதற்காக பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸை கடுமையாக விமர்சித்ததுடன், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தையும் கர்நாடகாவில்தான் மோடி கிளப்பினார்.

 

“ஓ.பி.சி இடஒதுக்கீட்டிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருக்கிறார்கள். மதரீதியில் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது சட்டவிரோதம்” என்றெல்லாம் பேசியதோடு, காங்கிரஸையும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார் மோடி. ஆனால், அவரது பிரசாரத்தை தவிடுபொடியாக்கிவிட்டது பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ விவகாரம்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய அமித் ஷா, ``நாட்டின் பெண்கள் சக்தியுடன் நிற்போம் என்ற பா.ஜ.க-வின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக இருக்கிறது. கர்நாடகாவில் யாருடைய அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை. மாநில அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அரசு இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆதரவாக இருக்கிறோம். எங்களின் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்)-ம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறது. இன்று இது தொடர்பான அக்கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. அதில் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்” என்றார்.

இந்நிலையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பிரஜ்வல் ரேவண்ணவை இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது, அக்கட்சி அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கை மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள்... ‘சிக்கிய’ தேவகவுடா பேரன் - கர்நாடகாவில் பாஜக-வுக்கு பின்னடைவா? | Will JDS candidate videos affect nda alliance in karnataka - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

தேவ கவுடாவின் பேரன் நடத்திய ஆபாச லீலைகள்… லீக் ஆன வீடியோக்கள்! காத்திருந்து கதை முடித்த பாஜக, குமாரசாமி

AaraApr 30, 2024 08:58AM
karnataka-protest-1.jpg

கர்நாடகாவில்  முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், ஹசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணாவை மையமாக வைத்து ஆபாச புயல் வீசி வருகிறது.  இதுபற்றி விசாரிக்க விசாரிக்க பல திடுக்கிடும் அதிர்ச்சிகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ஹசன் உள்ளிட்ட தொகுதிகள் மக்களவைத் தேர்தலை சந்தித்தன. தேர்தலுக்கு மூன்று நாள் முன்பிருந்தே… எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கான செக்ஸ் வீடியோக்கள் ஹசன் பகுதியில் சமூக தளங்களில் வெளியாயின.

இதைக் கண்டு அதிர்ந்துபோன பிரஜ்வல் ரேவண்ணாவின் தேர்தல் ஏஜெண்ட், ‘எங்களது வேட்பாளரை மையப்படுத்தி  மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரவ விடப்பட்டுள்ளன’ என்று போலீசில் புகார் அளித்தார்.

ஆனால், இந்த வீடியோக்கள் பரவிய நிலையில், ஏற்கனவே பிரஜ்வல் வீட்டில் வேலை பார்த்த ஒரு பெண் கொடுத்த புகாரில் இப்போது பிரஜ்வல் ரேவண்ணா மீதே பெண் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த அடுத்த நாள் 27 ஆம் தேதி காலை பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு பறந்துவிட்டார்.

இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் பற்றி விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

eDDaeqU7?format=jpg&name=900x900

கர்நாடகா முழுதும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் பல பெண்கள் அமைப்பு சார்பிலும் பிரஜ்வல் ரேவண்ணாவை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சர்ச்சையால் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், அதனோடு கூட்டணி வைத்துள்ள பாஜகவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன.

வரும் மே 7 ஆம் தேதி கர்நாடகாவில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமல்ல நாடு முழுதும் பாஜகவுக்கு எதிரான பிரம்மாஸ்திரமாக புறப்பட்டுள்ளது.

மோடி மௌனம் ஏன்? விளாசிய பிரியங்கா

இதற்கிடையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளார்.

modi-vs-priyanga-768x432.jpg

“இந்துப் பெண்களின் தாலி பற்றி பேசிய பிரதமர் மோடி அவர்களே… சில நாட்களுக்கு முன் நீங்கள் யாருக்காக வாக்கு சேகரித்தீர்களோ அவர்தான் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். இதுபற்றி ஏன் மௌனம் காக்கிறீர்கள்? இந்த பெண்களின் நிலை பற்றி பேச முடியாத உங்களுக்கு,   பெண்களின் தாலி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?”  என்று கிழித்தெடுத்திருக்கிறார் பிரியங்கா.

கர்நாடகாவின் உள் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது  மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு பாஜக கூட்டணி அமைத்ததை விரும்பாத, பாஜகவினர் சிலர்தான் இந்த வீடியோக்களை வெளியே விட்டிருக்கிறார்கள் என்றும் இதற்கு தேவ கவுடா குடும்பத்திலேயே சிலர் ஆதரவாக இருந்திருப்பதும்  தெரியவந்திருக்கிறது.

modi-with-revanna-768x432.jpg

யார் இந்த பிரஜ்வல்?

33 வயதே ஆன பிரஜ்வல்  இப்போதைய ஹசன் தொகுதி எம்பி.யாக இருக்கிறார்.   முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகனும்  ஹோலேநரசிபூர் தொகுதி எம்எல்ஏவுமான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல்.

ராஜா வீட்டு காளைக் கன்றுக்குட்டியான பிரஜ்வால்  2014 இல் இருந்தே தனது தாத்தா தேவ கவுடாவுக்காக அரசியல் பணிகளில் இறங்கினார். பெங்களூருவில் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி பயிலப் போன அவர் பாதியில் படிப்பை முடித்துவிட்டு அரசியலில் இறங்கினார்.

தான் 1991, 1998, 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற  ஹசன் மக்களவைத் தொகுதியை தனது பேரன் பிரஜ்வலுக்காக  2019இல் விட்டுக் கொடுத்தார் தேவ கவுடா.

வீடியோ விவகாரம் புதிதல்ல…

revanna-vedios-768x435.jpg

பிரஜ்வல் பற்றிய ஆபாச வீடியோக்கள் இன்று தேசம் முழுதும் பேசுபொருளானாலும், கர்நாடகாவில் இதுபற்றி விவாதம் முதன் முறையாக 2023 ஜூன் மாதத்திலேயே வெளி வந்திருக்கிறது.

அப்போது, பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் எம்பி. பிரஜ்வல் சார்பில் ஊடகங்கள் மற்றும் மூன்று தனியார் நபர்களுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில்,  “மேற்குறிப்பிட்டவர்களால் பிரஜ்வலுக்கு எதிராக  போலிச் செய்திகள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ ஒளிபரப்புதல், வெளியிடுதல் மற்றும் பரப்புதல் போன்ற அச்சுறுத்தல் உள்ளது” என்று அதற்குத் தடை கேட்டது பிரஜ்வல் தரப்பு.  ஜூன் 2,  2023  பிரஜ்வல் பற்றிய அவதூறுகளை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம்.

இந்த வழக்கில் பிரஜ்வல் ஊடகங்களைத் தவிர மூன்று தனி நபர்களையும் குறிப்பிட்டிருந்தார். அந்த 3 பேரில் ஒருவர் பிரஜ்வல் வீட்டில் கடந்த  15 வருடங்களுக்கும் மேலாக டிரைவராக பணியாற்றி, 2023 மார்ச் மாதம் வெளியேற்றப்பட்டவரான கார்த்திக்.

அனைத்து ரகசியங்களும் அறிந்த டிரைவர்

பிரஜ்வல் ரேவண்ணாவின் குடும்பத்தில் ஒருவராக அறியப்பட்டவர் கார்த்திக். அவர்  பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தாயார் பவானி மீதும் கடுமையான புகார்களை கூறினார்.

Prajwal-Revanna-Kidnap-768x461.webp

‘நரசிபுரா பகுதியில் இருக்கும் எனக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை என்னையும் என் மனைவியையும் கடத்திச் சென்று அடைத்து வைத்து மிரட்டி தங்களுக்குச் சொந்தமாக பிரஜ்வலும் அவரது தாயாரும் மாற்றிக் கொண்டனர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்” என்று போலீசிலும் புகார் கொடுத்தார் கார்த்திக்.

அந்த டிரைவர் கார்த்திக் தான் இப்போது இந்த ஆபாச வீடியோக்கள் வெளியீட்டுக்கு பின்னால் இருப்பார் என்று கருதுகிறது பிரஜ்வல் தரப்பு.

ஏனென்றால் பிரஜ்வல் கல்லூரி காலம் தொட்டே அவருக்கு நெருக்கமானவர் கார்த்திக்.  தாத்தா பிரதமராக இருந்தவர், சித்தப்பா கர்நாடக முதலமைச்சர், அப்பா எம்.எல்.ஏ. என்று அதிகாரம் குவிந்த குடும்பத்தில் பிறந்த பிரஜ்வல் அதற்கேற்ப எல்லா ஆட்டங்களையும் ஆடினார். அவரது எல்லா விஷயங்களையும் அறிந்தவர்தான் டிரைவர்  கார்த்திக்.

பல ரகசியங்கள் அறிந்த டிரைவர் கார்த்திக்  நில பிரச்சினையால் ரேவண்ணா குடும்பத்தின் மீது ஹசன் காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால் தேவகவுடா குடும்ப செல்வாக்கு காரணமாக பாஜக ஆட்சியில் கூட போலீஸ் நடவடிக்கை ஏதும் இல்லை.  இந்த பின்னணியில்தான் 2023  ஜூன் மாதம் தன்னைப் பற்றிய ஆபாச படங்களை கார்த்திக் வெளியிடுவார் என்று தடை கேட்டு நீதிமன்றத்தை நாடினார் பிரஜ்வல் ரேவண்ணா.

டிரைவர் மூலம் பாஜகவுக்கு வந்த ஆபாச படங்கள்!

Devaraje-Gowda-and-Prajwal-Revanna-768x4

இந்த நிலையில்தான் கடந்த பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு எதிராக ஹசன் மாவட்டத்தில் கடுமையாக கள அரசியல் செய்து வந்த லோக்கல் பாஜகவுக்கு  இந்த மேட்டர் பெரும் சாதகமாக இருந்தது.

கடந்த 2023  சட்டமன்றத் தேர்தலில் ஹோலே நரசிபுரா தொகுதியில் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்டுத் தோற்ற வழக்கறிஞரும் உள்ளூர் பாஜக தலைவருமான தேவராஜ கவுடா, ரேவண்ணா குடும்பத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அந்த டிரைவர் கார்த்திக்கை அணுகினார். பிரஜ்வல் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆபாச படங்களை பென் டிரைவில் பாஜக பிரமுகர் தேவராஜ கவுடா வாங்கியிருக்கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய தேவராஜ் கவுடா, ‘என்னை அழுக்கு மனிதன் என்று ரேவண்ணா சொல்கிறார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் எவ்வளவு அழுக்கு மனிதன் என்று அவர் வாங்கி வைத்திருக்கிற ஸ்டே ஆர்டரில் இருந்தே தெரிகிறது. ஒருநாள் அந்த அழுக்கெல்லாம் வெளியே வந்து  தேவ கவுடாவின் குடும்பமே நாற்றமெடுக்கும்” என்று கடுமையாக எச்சரித்தார் தேவராஜ கவுடா.

பாஜக -ஜேடியூ கூட்டணிக்குப் பிறகும் கூட அவர் ரேவண்ணா பற்றியும் பிரஜ்வல் பற்றியும் தொடர்ந்து விமரிசித்து வந்தார்.

இந்த பின்னணியில்தான்… பிரஜ்வலின் ஆபாச ஆட்டங்கள் அடங்கிய வீடியோக்களை அவரது முன்னாள் டிரைவர் கார்த்திக் மூலம் பெற்று… சரியாக ஹசன் தொகுதி தேர்தலுக்கு முன்பாக சமூக தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கர்நாடக அரசியல் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து தேவராஜ கவுடாவிடம் கேட்டபோது,

“ரேவண்ணாவின் மகனின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பற்றி அந்த டிரைவரிடம் இருந்து எனக்கு தெரியவந்தது. அவருக்கு எப்படி வீடியோக்கள் கிடைத்தன என்று எனக்குத் தெரியவில்லை,” என்று  ஓப்பனாக கூறியிருக்கிறார்.

இதுமட்டுமல்ல…  “பாதிக்கப்பட்ட பெண்களில் சிலரை மீடியாவின் முன் கொண்டுவர நினைத்தேன்.  ஆனால் அவர்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதை சம்பந்தப்பட்டதால்  அதைத் தவிர்த்துவிட்டோம்.  பெண்கள் மீதான மரியாதைக்காக, நான் வீடியோக்களை வெளியிடவில்லை. அது அவர்களின் வீடுகளில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். பெண்கள் தற்கொலை செய்து கொண்டால் யார் பொறுப்பு?

பாஜக -ஜேடியூ கூட்டணி அமைந்த பிறகு கூட  பிரஜ்வாலுக்கு ஹசன் லோக்சபா டிக்கெட் வழங்க வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர்  விஜயேந்திரருக்கு கடிதம் எழுதினேன்” என்று பேட்டியளித்துள்ளார் தேவராஜ் கவுடா.

gowda-768x384.jpg

குமாரசாமி- ரேவண்ணா மோதலும் ஒரு காரணம்!

தேவ கவுடாவின் குடும்பத்துக்குள் அதிகார மையங்கள் இருக்கின்றன. குறிப்பாக  மூத்த மகன் ரேவண்ணாவுக்கும், அவரது தம்பியான முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நடந்து வருகிறது. குமாரசாமியின் முயற்சியைத் தோற்கடித்துதான் 2019 இல் தேவ கவுடாவின் எம்பி தொகுதியான ஹசன் தொகுதியை தனது மகன் பிரஜ்வலுக்கு வாங்கினார் ரேவண்ணா.  இந்த நிலையில் ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து அகற்ற இதை குமாரசாமியே ஊக்குவித்திருக்கலாம் என்றும் கர்நாடக அரசியலில் பேசப்படுகிறது.

இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த வீடியோ விவகாரம் பற்றி பேசிய மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி,  “ உண்மை வெளிவரட்டும், யார் தவறு செய்தாலும், நாட்டின் சட்டப்படி அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும்.  இதில் ஏன் குடும்பப் பெயரைக் கொண்டுவருகிறீர்கள்?  சம்பந்தப்பட்ட தனி நபரைப் பற்றிப் பேசுங்கள், இது  எங்கள் குடும்பப் பிரச்சினை அல்ல…  இது ரேவண்ணாவின்  குடும்ப பிரச்சினை. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இரண்டு குடும்பங்களும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார் குமாரசாமி.

நீக்கப்படும் ரேவண்ணா,  பிரஜ்வல்?

இதற்கிடையே, “மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைக் காப்பாற்ற பிரஜ்வல் மற்றும் எச்.டி.ரேவண்ணாவை 24 மணி நேரத்தில் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சமுருத்தி மஞ்சுநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மாநிலத் தலைவர் குமாரசாமிக்கும், அகில இந்திய தலைவர் தேவ கவுடாவுக்கும் எழுதிய கடிதத்தில்,
“பிரஜ்வல் ரேவண்ணாவு தொடர்பாக ஊடகங்களில் பரவும் வீடியோக்கள் கட்சி தொண்டர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவே கவுடா, மாநில தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் உரிய முடிவு எடுக்க வேண்டும்.

revanna-son-768x476.jpg

19 ஜேடி(எஸ்) எம்எல்ஏக்கள் முக்கியமா அல்லது ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா முக்கியமா என்பது குறித்து அப்பா-மகன் இருவரும் இப்போது முடிவெடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ஜேடியூ கட்சியில் இருந்து  ரேவண்ணா, பிரஜ்வல் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

இந்த ஆபாச புயலால் கர்நாடக அரசியலும், தேவ கவுடா குடும்பத்திலும் திருப்பங்கள் அதிகரிக்கின்றன.

 

https://minnambalam.com/political-news/prajwal-revanna-sex-abuse-allegations-full-backround/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தேவ கவுடாவின் பேரன் நடத்திய ஆபாச லீலைகள்… லீக் ஆன வீடியோக்கள்! காத்திருந்து கதை முடித்த பாஜக, குமாரசாமி

வீடியோக்களைப் பார்க்காமல் கருத்தெழுத முடியாது.

எங்கப்பா வீடியோக்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

வீடியோக்களைப் பார்க்காமல் கருத்தெழுத முடியாது.

எங்கப்பா வீடியோக்கள்?

சத்திய சோதனை.....சத்திய சோதனை.....சத்திய சோதனை....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை - தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு

05 MAY, 2024 | 10:42 AM
image
 

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள‌ அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் தேடி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் மஜதவின் மூத்த தலைவருமான‌ ரேவண்ணா (66) கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

கடந்த மாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல், பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதைத்தொடர்ந்து 48 வயதான வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவரது தந்தை ரேவண்ணா மீதும், வீட்டு பணிப்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்ததால் அவர் மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புகார் அளித்த பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதும் அவரது உதவியாளர் சதீஷ் பாவண்ணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்த 2,976 ஆபாச வீடியோக்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் இடம்பெற்று உள்ள பெண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

மேலும் அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் பிரஜ்வல் மற்றும் ரேவண்ணாவை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு தங்களது வழக்கறிஞர் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/182717

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் புகார்: விமானத்தில் வந்திறங்கிய பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் கைது

பிரஜ்வல் ரேவண்ணா

பட மூலாதாரம்,FB/PRAJWAL REVANNA

படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணா
14 நிமிடங்களுக்கு முன்னர்

பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகாரில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் தேவே கௌடவின் பேரனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா வியாழக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

ஜெர்மனியிலிருந்து வியாழக்கிழமை கர்நாடகா திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கேம்பேகௌட சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வியாழக்கிழமை நள்ளிரவு 12.52 மணியளவில் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப், சிறப்பு புலனாய்வு குழு இணைந்து கைது செய்தது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

சாம்பல் நிற மேற்சட்ட அணிந்திருந்த பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான வாயிலில் நடந்துசென்ற போது கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவின் ஹசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், ஏப்ரல் 26ஆம் தேதி அத்தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அன்றிரவே ஜெர்மன் புறப்பட்டுச் சென்றார். பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பான 2,960 வீடியோக்கள் உள்ளதாக கூறப்படும் பென்டிரைவ்-கள், வாக்குப்பதிவுக்கு 5 நாட்கள் முன்னதாக, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று பல்வேறு பொது இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

 

“அரசியல் சதி”

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

கர்நாடகா திரும்புவதற்கு முன்பு, வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் முன்னர் தான் ஆஜராவேன் எனக்கூறி பிரஜ்வல் வீடியோ வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், தன் மீதான புகார் “அரசியல் சதி” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்திலிருந்து நேரடியாக, சிறப்பு புலனாய்வு குழு செயல்பட்டுவரும் குற்ற புலானாய்வு துறை அலுவலகத்திற்கு (சிஐடி) அழைத்துச் செல்லப்பட்டார்.

இவர் கைது செய்யப்படுவதை முன்னிட்டு, விமான நிலையத்திலும் சிஐடி அலுவலகத்தின் நுழைவாயிலிலும் ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் நடைபெறவுள்ளது. தன் மீது ஹோலேனரசிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளிலும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் உள்ள மற்ற இரு வழக்குகளிலும் ரேவண்ணா ஜாமீன் கோரியுள்ளார்.

பிரஜ்வாலின் தாய் பவானி ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மைசூரு மாவட்டத்தில் உள்ள கே.ஆர். நகரை சேர்ந்த பெண் ஒருவரை அவருடைய கணவர் ஹெச்.டி. ரேவண்ணா கடத்தியதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு பவானி அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த கடத்தல் வழக்கில் ஹெச்.டி. ரேவண்ணா ஏற்கெனவே ஜாமீன் பெற்றுள்ளார்.

 

பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள்

பிரதமர் நரேந்திர மோதியுடன் பிரஜ்வல் ரேவண்ணா

பட மூலாதாரம்,HD DEVE GOWDA'S X ACCOUNT

படக்குறிப்பு,பிரதமர் நரேந்திர மோதியுடன் பிரஜ்வல் ரேவண்ணா (வலது)

ஏப்ரல் 28 அன்று, ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார்.

"நான் [அவர்கள் வீட்டில் பணிக்குச்] சேர்ந்தபோது, அங்கிருந்த மற்ற ஆறு பணிப்பெண்கள் பிரஜ்வாலைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவார்கள். ஆண் ஊழியர்களும் எங்களை ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வலிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

"அவரது மனைவி இல்லாத போதெல்லாம், ஹெச்.டி.ரேவண்ணா என்னை தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்," என்று அவர் தனது புகாரில் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார்.

மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

கசிந்த வீடியோக்கள்

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

இதையடுத்து, கர்நாடக மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) இந்த வழக்கை விசாரிக்கும் என்று கர்நாடக முதலமைச்சர் கே. சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில ஏ.டி.ஜி.பி பி.கே.சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேவண்ணாவின் தொகுதியான ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒருநாளுக்குப் பிறகு அவர்மீதான குற்றச்சாட்டுகள் பல வெளிச்சத்துக்கு வந்தன. பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே ஹசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட பென்-டிரைவ்கள் பரப்பப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோக்களில், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண்களின் முகங்கள் இருந்தன.

இந்த வழக்கில் அவர் மீதும் அவரது தந்தை மீதும் குற்றம்சாட்டப்படிருக்கிறது.

முன்னதாக, "விசாரணையில் கலந்துகொள்ள நான் பெங்களூருவில் இல்லை. எனவே இதனை எனது வழக்கறிஞர்கள் மூலம் பெங்களூரு சி.ஐ.டி-இடம் (CID) தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெளிவரும்," என்று எக்ஸ் தளத்தில் பிரஜ்வல் பதிவிட்டிருந்தார்.

இப்புகாரைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தியது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகம் திரும்புவதற்கு முன்னதாக, வியாழக்கிழமை பல்வேறு மக்கள் அமைப்புகள் சார்பில் ‘ஹசன் சலோ’ (Hassan Chalo) எனும் பெயரில் போராட்டம் நடத்தப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cv2294pp9wjo

  • கருத்துக்கள உறவுகள்

3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள்… நாடு திரும்பிய பிரஜ்வல்: நள்ளிரவில் கைது!

indhuMay 31, 2024 11:40AM
Returned Prajwal: Arrested at the airport - What happened next?

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவு பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார்.

கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவில் புயலை கிளப்பியது.

வீட்டில் பணிபுரியும் பணிப்பெண், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் மீது  பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கிடையில், ஏப்ரல் 26ஆம் தேதி இரவு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

2 முறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகததால், ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவரது பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதனிடையே, பிரஜ்வல் உடனே நாடு திரும்பவேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார். தேவகவுடாவும், ‘பிரஜ்வல் உடனே நாடு திரும்ப வேண்டும், என் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாம்’ என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

அதில், “மே 31ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 31) நடைபெறுகிறது.

விமான நிலையத்தில் பிரஜ்வல் கைது

இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட பிரஜ்வல் இன்று (மே 31) நள்ளிரவு 12.39 மணிக்கு பெங்களூரு திரும்பினார்.

அங்கு விமான நிலைய தொழில் பாதுகாப்பு காவல்துறையினர் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரிக்கும் கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரிடம் பிரஜ்வல் ஒப்படைக்கப்பட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் கைது குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு காவல்துறை தரப்பில், “பிரஜ்வல் முதலில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார். நீதிமன்றம் மூலமாக அதிகாரப்பூர்வ போலீஸ் காவலில் பிரஜ்வல் வைக்கப்பட்ட பிறகு, முறையான விசாரணையை தொடங்கும்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணாவின் கைது குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “சிறப்பு புலனாய்வு பிரிவு பிரஜ்வலை கைது செய்துள்ளது. அவர்கள் நீதிமன்ற அனுமதிக்கு பிறகு பிரஜ்வலிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த பாலியல் வழக்கில் யாரேனும் சாட்சியளிப்பதாக இருந்தால் தாராளமாக முன்வரலாம். சாட்சியம் அளிக்க வருபவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/political-news/returned-prajwal-arrested-at-the-airport-what-happened-next/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.