Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jk-1-623x375.jpg

மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன்.

மறைந்த  நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக விஜயகாந்தின் நினைவிடம் போற்றப்படுகிறது.

விஜயகாந்த் மறைந்த நாள் முதல் இப்போது வரையிலும் தினம்தோறும் கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மேலும் இவ்வாறு வருகை தரும் மக்களுக்கு அங்கு நாளாந்தம் உணவளிக்கப்பட்டு வருகின்றது.

விஜயகாந்த் மறைந்து 125 நாட்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380958

  • கருத்துக்கள உறவுகள்

செத்தும் கொடுக்கும் சீதக்காதி கேப்டன் விஜயக்காந்த்❤️.

#தெலுங்கண்டா

என யார் கூறினாலும்

#தமிழண்டா ❤️

என செயலால் நிருபிக்கிறார். இறந்த பின்பும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

செத்தும் கொடுக்கும் சீதக்காதி கேப்டன் விஜயக்காந்த்❤️.

#தெலுங்கண்டா

என யார் கூறினாலும்

#தமிழண்டா ❤️

என செயலால் நிருபிக்கிறார். இறந்த பின்பும்.

தெலுங்கர்கள் செயல் ஆல் எதையும் நிரூபிக்கவில்லையா? 😎

அவர் திடகாத்திரமாக இருக்கும் போது தமிழ்நாட்டை ஒரு தரம் ஆட்சியில் அமர்த்த வக்கில்லாததவர்கள் இன்று அவர்களை புகழ்கின்றார்களாம்.

அவர் வருத்தமாக இருக்கும் போது எவ்வளவு நக்கலடித்து திட்டியிருப்பார்கள்?

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

தெலுங்கர்கள் செயல் ஆல் எதையும் நிரூபிக்கவில்லையா? 😎

அவர் திடகாத்திரமாக இருக்கும் போது தமிழ்நாட்டை ஒரு தரம் ஆட்சியில் அமர்த்த வக்கில்லாததவர்கள் இன்று அவர்களை புகழ்கின்றார்களாம்.

அவர் வருத்தமாக இருக்கும் போது எவ்வளவு நக்கலடித்து திட்டியிருப்பார்கள்?

மெய்தான்… விஜயகாந்த்துக்கு இந்த நாட்டை ஆளும் ஆசை வந்தது தமிழராகிய எமக்கு அவமானம் என்று மேடையில் தொண்டை புடைக்க பேசியவர் கூட….அவர் இறந்ததும் அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு, பாட்டெல்லாம் படிச்சு சீன் போட்டார் எண்டால் பாருங்கோவன்😎.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

மெய்தான்… விஜயகாந்த்துக்கு இந்த நாட்டை ஆளும் ஆசை வந்தது தமிழராகிய எமக்கு அவமானம் என்று மேடையில் தொண்டை புடைக்க பேசியவர் கூட….அவர் இறந்ததும் அப்படியே பிளேட்டை மாத்தி போட்டு, பாட்டெல்லாம் படிச்சு சீன் போட்டார் எண்டால் பாருங்கோவன்😎.

கேட்டதுக்கு பதில் சொல்ல வக்கில்லை.
ஆச்சு ஊச்சு எண்டால் சீமானின் உள்ளாடையை தேடுவீர்களாக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

சைக்….மேடையில் மூக்கையே அந்த தோண்டு தோன்ற மனிசன்🤣

3 hours ago, குமாரசாமி said:

கேட்டதுக்கு பதில் சொல்ல வக்கில்லை.
ஆச்சு ஊச்சு எண்டால் சீமானின் உள்ளாடையை தேடுவீர்களாக்கும்?

மெரினா கடற்கரையிலும் தமிழகத்தை ஆட்சி செய்த சிலர் அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் சமாதியில் ஈ காக்காவுக்கு கூட உணவு போட யாரும் இல்லை.

ஆனால் ஏழைகளின் மனசை கவர்ந்த கப்டனின் சமாதியில் பல்லாயிரக்கணக்கானோர் பசியாறுகின்றனர்.

மீம்ஸ்களில் அதிகம் நையாண்டி செய்யப்பட்டவர்களில் ஒருவர் விஜயகாந்த். ஆனால் அவர் தான் பலரின் பசியை ஆற்றி இருக்கின்றார். அதை அவர் வாழ்ந்த காலத்தில் கொண்டாட எவரும் இருக்கவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சைக்….மேடையில் மூக்கையே அந்த தோண்டு தோன்ற மனிசன்🤣

இதுவும் ஒருவகை உருவக்கேலிதான். அவரது மீசை அவருக்கு மூக்கரிப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

விஜயகாந்த்துக்கு இந்த நாட்டை ஆளும் ஆசை வந்தது தமிழராகிய எமக்கு அவமானம் என்று மேடையில் தொண்டை புடைக்க பேசியவர் கூட

அது மானத் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான போராம்.
அவர் வாழ்ந்த காலத்தில் வளவன் யாழ் களத்தில் அவரைபற்றி நன்றாக ஏழுதி நான் படித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நிழலி said:

மெரினா கடற்கரையிலும் தமிழகத்தை ஆட்சி செய்த சிலர் அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் சமாதியில் ஈ காக்காவுக்கு கூட உணவு போட யாரும் இல்லை.

ஆனால் ஏழைகளின் மனசை கவர்ந்த கப்டனின் சமாதியில் பல்லாயிரக்கணக்கானோர் பசியாறுகின்றனர்.

மெரினாவில் இருக்கும் கலைஞர் சமாதி முன்னால் ஒரு சிறிய  மடத்தை திறந்து வைத்து அன்னதானம் வழங்கிப்பாருங்கள்.அப்போது  வரும் வரலாறு காணாத சனம்.

இந்த தேர்தலில் பிரேமலதா தரப்பு எத்தனை வாக்குகள் பெறுகின்றன என்பதை வைத்து அன்னதானத்தின்/ மகிமையை கணக்கிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

இதுவும் ஒருவகை உருவக்கேலிதான். அவரது மீசை அவருக்கு மூக்கரிப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.

நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வில் இன்னொரு படிமுறைக்கு போய் விட்டீர்கள்🤣🤣🤣.

படு பயங்கர தம்பிகள் கூட இப்படி ஒரு முட்டு கொடுத்ததில்லை🤣. நடுநிலையாளராக காட்டி கொள்ளும் உங்களுக்கு இது புதிசு…கண்ணா….புதிசு.

பிகு

பொது வெளியில் மூக்கை தோண்டி, திரவியத்தை தூவக்கூடாது என்பது அடிப்படை சுகாதாரம். வேணும் எண்டால் அண்ணனுக்கு ஒரு டிரிம்மர் வாங்கி அனுப்பி விடுங்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

தெலுங்கர்கள் செயல் ஆல் எதையும் நிரூபிக்கவில்லையா? 😎

நேற்று பார்ட்டியில் நிண்டதால் கேள்விக்கு உடனே பதில் போடவில்லை, மன்னிக்கவும்.

கருணாநிதி ஈழத்தமிழரை கருவறுத்தார். மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை வைத்து விஜயகாந்த் உட்பட ஏனைய தெலுங்கு வம்சாவழிகள் மீது வன்ம அரசியல் செய்ய வேண்டியதில்லை.

11 hours ago, குமாரசாமி said:

அவர் திடகாத்திரமாக இருக்கும் போது தமிழ்நாட்டை ஒரு தரம் ஆட்சியில் அமர்த்த வக்கில்லாததவர்கள் இன்று அவர்களை புகழ்கின்றார்களாம்.

அவர் வருத்தமாக இருக்கும் போது எவ்வளவு நக்கலடித்து திட்டியிருப்பார்கள்?

இங்கே நீங்கள் தமிழ் நாட்டு தமிழரை குற்றம் சாட்டுவதாக நினைக்கிறேன். ஆனால் விஜயகாந்த் ஆட்சியில் அமராமைக்கு மக்கள் மட்டுமே காரணம் இல்லை. அவரின் கூட்டணி முடிவுகளும், பிரேமலதா+சுதீசின் அப்பட்டமான “பெட்டி” டீல்களும் முக்கிய காரணம்.

மனநிலை மோசமானபின் யாரும் அவரை சீ எம் ஆக்க விரும்பமாட்டார்கள் - அந்த வகையில் அது சரியான முடிவே.

அவரின் மனநிலையை கேலி செய்தது தப்புத்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

அது மானத் தமிழர்களுக்கும் தெலுங்கர்களுக்குமான போராம்.

விஜயகாந்தை கேலி செய்தமைக்கு நிகரான குற்றம் தான் தமிழன் என உணர்ந்து, செயலால் காட்டிய மனிதனை “நீ வந்தேறி, வாழலாம் ஆள முடியாது, நீ எல்லாம் சி எம் கனவு காண்பதே தமிழ் பிள்ளைகளுக்கு அவமானம்” என இன ஒதுக்கல் செய்தது என்பது என் அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, goshan_che said:

சைக்….மேடையில் மூக்கையே அந்த தோண்டு தோன்ற மனிசன்🤣

 ஐயகோ கோசானிடம் கருத்துப்பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.🤣

இன்று தமிழக  முக்கிய ஊடகங்களே தங்கள் நிகழ்சிகளுக்கு விசேட விருந்தினராக சீமானை அழைத்து கருத்து கேட்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் எனும் போது மண்டையோடு,ஆமையோடு கனவில் திரியும் உங்களைப்போன்றோர்களுக்கு நிச்சயம் கசப்பாகத்தான் இருக்கும்.:cool:

இப்படியான கேவல கருத்துக்களை எழுதி இங்குள்ள ஒரி சிலரிடம் வெற்றி வாகை சூடவேண்டியதுதான் 😛

11 hours ago, goshan_che said:

நேற்று பார்ட்டியில் நிண்டதால் கேள்விக்கு உடனே பதில் போடவில்லை, மன்னிக்கவும்.

இதுக்கெல்லாம் மன்னிப்பு எதுக்கு? அதுவும் என்னட்டை.😎
நானும் நேற்று இரவு பார்ட்டியோடை தான் நிண்டனான்....🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

கருணாநிதி ஈழத்தமிழரை கருவறுத்தார். மாற்று கருத்து இல்லை. ஆனால் அதை வைத்து விஜயகாந்த் உட்பட ஏனைய தெலுங்கு வம்சாவழிகள் மீது வன்ம அரசியல் செய்ய வேண்டியதில்லை.

ஈழத்தமிழர் அழிவிற்கும் கருவறுப்பிற்கும் கருணாநிதி காரணமல்ல எனும் தொனியில் கந்தப்பு ஓரிடத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

@கந்தப்பு

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

விஜயகாந்த் உட்பட ஏனைய தெலுங்கு வம்சாவழிகள் மீது வன்ம அரசியல் செய்ய வேண்டியதில்லை.

தெலுங்கானவிலும் கன்னடாவிலும் கேரளாவிலும் வன்ம அரசியல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்?????
அதிலும் பாலிவூட் சினிமாவில் மதராசிகள் என்ற வன்மம் உண்டு. இதையெல்லாம் கடந்து தமிழ்நாட்டவர் மட்டும் சாதுக்களாக இருக்க வேண்டுமாம்.😋

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

விஜயகாந்தை கேலி செய்தமைக்கு நிகரான குற்றம் தான் தமிழன் என உணர்ந்து, செயலால் காட்டிய மனிதனை “நீ வந்தேறி, வாழலாம் ஆள முடியாது, நீ எல்லாம் சி எம் கனவு காண்பதே தமிழ் பிள்ளைகளுக்கு அவமானம்” என இன ஒதுக்கல் செய்தது என்பது என் அபிப்பிராயம்.

இரண்டும் குற்றம் தான். தமிழன் என தன்னை உணர்ந்த விஜயகாந் மீதான விரோதமும் வெறுப்பும் நிறைந்த பேச்சு..
அவர் இறந்த பின்பு வேறு பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர் அழிவிற்கும் கருவறுப்பிற்கும் கருணாநிதி காரணமல்ல எனும் தொனியில் கந்தப்பு ஓரிடத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

@கந்தப்பு

நீங்கள் கலைஞர் உண்ணாவிரதம் இருந்து நாடகமாடாவிட்டால் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து இருக்குமா என்று கேட்டதற்குதான் இவ்வாறு பதில் அளித்தேன். 

இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா?  

செப்டம்பர் 11 தாக்குதல் ,  நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை,  கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு ……

2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் ,  தமிழகத்தில்  இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா?  இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால்  ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனதுஇலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?’
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தெலுங்கானவிலும் கன்னடாவிலும் கேரளாவிலும் வன்ம அரசியல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்?????

அங்கே அப்படி இருப்பதால்,  விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போது தெலுங்கன் என அவர் மீது இன ஒதுக்கல் செய்து மனம் நோகடித்தது சரி? இதுவா உங்கள் வாதம்?

3 hours ago, குமாரசாமி said:

ஐயகோ கோசானிடம் கருத்துப்பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.🤣

இன்று தமிழக  முக்கிய ஊடகங்களே தங்கள் நிகழ்சிகளுக்கு விசேட விருந்தினராக சீமானை அழைத்து கருத்து கேட்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் எனும் போது மண்டையோடு,ஆமையோடு கனவில் திரியும் உங்களைப்போன்றோர்களுக்கு நிச்சயம் கசப்பாகத்தான் இருக்கும்.:cool:

இப்படியான கேவல கருத்துக்களை எழுதி இங்குள்ள ஒரி சிலரிடம் வெற்றி வாகை சூடவேண்டியதுதான் 😛

அது சீமானின் உள்ளாடையை சக கருத்தாளர் தேடுகிறார் என்று வந்த  மிக கேவலமான கருத்துக்கு வந்த பதில்.

கே(அ)வலத்தை தந்தவனுக்கே (ருக்கே) அதை திருப்பி கொடு 😎

3 hours ago, குமாரசாமி said:

இதுக்கெல்லாம் மன்னிப்பு எதுக்கு? அதுவும் என்னட்டை.😎
நானும் நேற்று இரவு பார்ட்டியோடை தான் நிண்டனான்....🤣

👍

Edited by goshan_che

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

விஜயகாந்திற்கு பட்டம் விருது இந்திய அரசு தற்போது வழங்கியுள்ளதாம் . அதற்கு  சீமான் கட்சி வேட்பாளர்  வித்யா வீரப்பன் வாழ்த்து சொல்கின்ற வீடியோ ஒன்று  நண்பர் காட்டி பார்த்தேன். அவா  சீமான் போன்று இனவெறி பிடித்தவராக இல்லாமல் நியாயமாகவே பேசியிருந்தா. ஒரு தமிழன் எப்படி ஒரு கொடைவள்ளலாக வாழ்ந்தார் என்பதற்கு ஒரு அடையாளமாக விஜயகாந் வாழ்ந்தார் என்றும் மனித கடவுள் என்றும் பேசியிருந்தா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.