Jump to content

கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம்,BRITISH MUSEUM

படக்குறிப்பு,குமாசியில் இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களில், முடிசூட்டு விழாக்களில் மன்றத்தினர் அணியும் ஒரு சடங்கு தொப்பியும் உள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபேவர் நுனூ மற்றும் தாமஸ் நாடி
  • பதவி, பிபிசி நியூஸ், குமாசி
  • 3 மே 2024

பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசான்டே (Asante) சாம்ராஜ்யத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள் ஒருவழியாக கானாவுக்கு மீண்டும் வந்தடைந்துள்ளன. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் அவற்றை எடுத்துச் சென்ற 150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவை கானாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அசான்டே பிராந்தியத்தின் தலைநகரான குமாசியில் உள்ள மன்ஹியா அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள 32 கலைப் பொருட்களைக் காண கானா மக்கள் அங்கு பெருங்கூட்டமாகத் திரண்டனர்.

"இது அசான்டேவுக்கு ஒரு முக்கியமான நாள். கறுப்பின ஆப்பிரிக்க கண்டத்துக்கும் முக்கியமான ஒரு நாள். நாங்கள் ஆத்மார்த்தமாக மதிக்கும் அற்புதமான ஒன்று மீண்டும் எங்களிடம் வந்துவிட்டது," என அசான்டே அரசர் இரண்டாம் ஓட்டம்போ ஓசி டுட்டு கூறினார்.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

இந்தக் கலைப்பொருட்கள் கானாவிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் கடனாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கடனை நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் இரண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகங்களுக்கும் அசான்டே மன்னருக்கும் இடையே கையெழுத்திடப்படுள்ளது. (விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம்) கானா அரசாங்கத்துக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் இல்லை.

அசான்டே அரசர், அல்லது அசான்டேஹேன் (Asantehene) என்னும் பதவி பாரம்பரிய அதிகாரத்தின் ஓர் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அவரிடத்தில் அவரது முன்னோடிகளின் ஆன்ம பலம் கடத்தப்பட்டிருக்கும் என்றும் மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் அவரது ராஜ்ஜியம் தற்போது கானாவின் நவீன ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

ஓய்வுபெற்ற காவல்துறை ஆணையரும், பெருமைக்குரிய அசான்டேவாசியுமான ஹென்றி அமங்க்வாடியா, ஆரவாரமான பறை ஓசைக்கு மத்தியில், “எங்கள் கெளரவம் மீட்டெடுக்கப்பட்டது,” என்று பிபிசியிடம் மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.

 

'கறை படிந்த வரலாறு'

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம்,BRITISH MUSEUM

படக்குறிப்பு,தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது), தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள்

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்க முலாம் பூசிய வீணை (மேல் இடது) வழங்கப்பட்டது. ஆனால் தங்க அணிகலன் (வலது) மற்றும் அரசரின் வாள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட கலைப் பொருட்கள்.

விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகம் 17 கலைப் பொருட்களை கானாவுக்கு கடனாக வழங்கியுள்ளது, மீதமுள்ள 15 கலைப் பொருட்கள் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்து பெறப்பட்டவை. கானா தேசத்திற்குள் கலைப் பொருட்கள் மீண்டும் வந்திருக்கும் அதே நேரம் அசான்டேஹேனின் வெள்ளி விழா கொண்டாட்டமும் நடக்கிறது.

"கானாவின் `அரச குடும்ப நகைகள்' என விவரிக்கப்படும் சில கலைப் பொருட்கள், 19ஆம் நூற்றாண்டின் ஆங்கிலோ-அசான்டே போர்களின்போது கொள்ளையடிக்கப்பட்டன, இதில் 1874ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்கெண்டி போரும் அடங்கும். மேலும் தங்க வீணை (சாங்குவோ) போன்ற பிற கலைப் பொருட்கள் 1817இல் ஒரு பிரிட்டிஷ் தூதருக்கு விருப்பத்துடன் வழங்கப்பட்டது.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம்,AFP

"இந்தக் கலைப் பொருட்களை காட்சிப்படுத்தயிருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றபோதிலும், இதைச் சுற்றியுள்ள வரலாறு மிகவும் வேதனையான ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஏகாதிபத்திய மோதல் மற்றும் காலனித்துவம் கொடுத்த காயங்களின் வடுக்களைச் சுமந்திருக்கும் கறை படிந்த வரலாறு அது" என்று இந்த விழாவிற்காக குமாசி வந்திருந்த விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் இயக்குநர் முனைவர் டிரிஸ்டம் ஹன்ட் கூறினார்.

கானாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கலைப் பொருட்களில் அரச வாள், தங்க அமைதிக் கோல் மற்றும் அரசரின் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தப் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அணியும் தங்கப் பதக்கங்கள் ஆகியவை அடங்கும்.

"இந்தப் பொக்கிஷங்கள் ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் வெற்றி மற்றும் போராட்டங்களுக்கு சாட்சியாக உள்ளன. மேலும் அவை குமாசிக்கு கொண்டு வரப்பட்டது கலாசார பரிமாற்றமாகப் பார்க்கப்படுகிறது. இது நல்லிணக்கத்தின் சான்று," என்று டாக்டர் ஹன்ட் கூறினார்.

 

தீராத சர்ச்சை

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாரம்பரிய உடையில் கானா பெண்கள்

கானா கொண்டுவரப்பட்டுள்ள கலைப் பொருட்களில் "இம்போம்போம்சுவோ (mpompomsuo)" என்று அழைக்கப்படும் வாள், அசான்டே மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள், அரசருக்குப் பதவிப் பிரமாணம் செய்யும்போது பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வாள்.

அரச வரலாற்றாசிரியர் ஓசெய் - போன்சு சஃபோ-கண்டங்கா பிபிசியிடம் பேசுகையில், அசான்டேவில் இருந்து கலைப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது, "எங்கள் இதயத்தின் ஒரு பகுதி, எங்கள் உணர்வு, எங்கள் முழு இருப்பு ஆகியவற்றை இழந்ததாக உணர்ந்தோம்,” என்றார்.

கானா: 150 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடித்த பொக்கிஷங்களை கடனாக கொடுத்த பிரிட்டன் - கொண்டாடும் மக்கள்

கலைப் பொருட்கள் மீண்டும் ராஜ்ஜியத்திற்குள் வந்தது எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு சர்ச்சைக்குரியதும்கூட.

பிரிட்டன் சட்டத்தின்கீழ், விக்டோரியா & ஆல்பர்ட், பிரிட்டிஷ் அருங்காட்சியகம் போன்ற தேசிய அருங்காட்சியகங்கள் தங்களுடைய சேகரிப்பில் உள்ள அபகரிக்கப்பட்ட பொருட்களை நிரந்தரமாகத் திருப்பிக் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் இத்தகைய கடன் ஒப்பந்தங்கள், கலைப் பொருட்கள் அவற்றின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது.

கானா, ஆப்பிரிக்கா, பிரிட்டன்

பிரச்னைக்குரிய கலைப் பொருட்கள் மீது உரிமை கோரும் சில நாடுகள், இதுபோன்ற கடன்கள் பிரிட்டனின் உரிமையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சுகின்றனர். கானா மக்களில் பலர் இந்தக் கலைப் பொருட்கள் நிரந்தரமாக நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இருப்பினும், இந்தப் புதிய கலைப் பொருட்களைக் கடனாக வழங்கும் செயல்பாடு, பிரிட்டிஷ் சட்டக் கட்டுப்பாடுகளைக் கடக்க ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற வரலாற்று கலைப் பொருட்கள் மீதான உரிமையை மீட்டெடுக்கும் வகையில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருமாறு ஆப்பிரிக்க நாடுகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளன.

'இருண்ட காலனித்துவ வரலாற்றை' கையாள்வதில் இது ஒரு படி என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cp4gnpnv2gpo

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் ......நடக்கட்டும் நடக்கட்டும்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையடித்த பொருட்களைக் கடனாகக் கொடுத்த பிரித்தானியா,...

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியர், குறிப்பாக ஆங்கிலேயர் கொள்ளையடித்ததை குறித்து சொல்வததற்கு ஆங்கிலத்தில்  சொல் இல்லாமல்,


ஹிந்தியில் (சமஸ்கிருதத்தில்) இருந்து (lut என்னும் சொல்) கொள்ளையடிக்கப்ட்டு, loot ஆக ஆங்கிலத்தில் மருவப்பட்டது. 

இங்கு முதலில் வேறு ஏதோ இதை  திரியில் பதிந்ததாக நினைவு.

இது ஒரு காரணம்  ஆங்கிலோ தேசங்கள் சீனாவின் எழுச்சி கண்டு பயப்படுவது (வேறு காரணங்களும் இருக்கிறது).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2024 at 01:03, ஏராளன் said:

பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அப்பிடியே மற்றைய நாடுகளிலும் கொள்ளையடித்ததையும் கொடுக்கலாமே.

மிக முக்கியமாக பல உலக நாடுகளிடம் கப்பம் வாங்குவதையும் நிறுத்த வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆகா தொடங்கிட்டாங்க ............................
    • டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை! 3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பணிப்பெண்ணாக கொடுத்ததாக கூறப்படும் முதலாம் சந்தேகநபரான பொன்னையா பண்டாரம், இரண்டாவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீனின் மாமனார் என கூறப்படும் அலி இப்ராஹிம் கிதார் மொஹமட் மற்றும் மூன்றாவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதார் மொஹமட் ஷிஹாப்தீன் ஆயிஷா அவர்கள் மீது இவ்வாறான வழக்கை தாக்கல் செய்திருந்திருந்தனர். அதன்படி சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டதுடன், நான்காவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர் பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகியோர் விடுதலை செய்தார் இந்த மூவருக்கும் எதிராக கொடுரமான வேலையாட்களை பணியமர்த்துதல், மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி, பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்திருந்த நிலையில், உடலில் தீப்பற்றியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு மரணம் நிகழ்ந்துள்ளது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு 15 வயது என்பதுடன் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். மேலும் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அவரது உடலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382881
    • யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் , பழுதடைந்த இறைச்சி கொத்தினை புகைப்படம் எடுத்தும் , , கொத்து ரொட்டிக்கான விற்பனை சீட்டையும் பெற்றுக்கொண்டவர் , அது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் குழு குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , பழுதடைந்த இறைச்சிகள் மீட்கப்பட்டதுடன் , சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் காணப்பட்டதுடன் , இறைச்சியை கொள்வனவு செய்தமைக்கான பற்று சீட்டுக்கள் இல்லாதமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , நீதிமன்ற விசாரணைகளில் உரிமையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. அதேவேளை உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் , பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தலுக்கு அமைய உணவகத்தில் திருத்த வேலைகள் செய்த பின்னர் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிக்கை கிடைக்கப்பெற்று மன்று திருப்தி படும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1382900
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வர்த்தக நிலையங்கள் பூட்டு. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை எமது பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1382941
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.