Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார் இணைச்ச காணொளியில் உள்ள பாட்டுக்கள் எல்லாமே இளையராஜா பாட்டுக்கள் இல்லை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:இளம் கிளியே

படம்:சங்கர்லால்

இசை:இசைஞானி

பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம் & ஜானகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கஸ்தூரிமான் மொட்டு

படம்: சங்கர்லால் (1981)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி

நிறைய நாட்களுக்குப் பின் கேட்கிறேன்..! :) சரணத்தின் இறுதிச் சுரங்களில் பேஸ் கிற்றாரில் ஒரு பிடி பிடிப்பது சிறப்பு..! :rolleyes:

http://www.youtube.com/watch?v=F9cx_7NK7ig

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கண்டேன் எங்கும்

படம்:காற்றினிலே வரும் கீதம்

இசை:இசைஞானி

பாடியவர்:வாணி ஜெயராம்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:குளிக்கும் போதிலே

படம்:24 மணி நேரம்

இசை:இசைஞானி

பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன், ஜானகி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

:)
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவுகளை மீட்டும் இசை… ஒரு அனுபவ தொகுப்பு

ilayaraja-telugu.jpgள்ளி நாட்களில்… ஏன் கல்லூரிக்குச் செல்லத் துவங்கியபோதும் கூட, ஏதாவது ஒரு வானொலி நிலையத்தில் சேர்ந்து விட வேண்டும் என்பது என் தீராத ஆசையாக இருந்தது. காரணம் அப்போதெல்லாம், இசை கேட்க ஒரே வழி வானொலிதான். இசை என்றால்.. திரையிசை.. அதிலும் இளையராஜா – எம்எஸ்வி பாடல்கள்.

வானொலியை விட்டால் கல்யாணங்கள், திருவிழாக்களில் ரிக்கார்டு போடுவார்களே அதை சாப்பாடு தூக்கமின்றி கேட்டுக் கொண்டே இருப்பேன். அதிகபட்சம் இரண்டு நாள்தான் இந்த ரிக்கார்டு போடுவார்கள்… அப்புறம் புதிய பாடல்கள் கேட்க முடியாதே.. அதனால் உண்மையிலேயே சாப்பாட்டை மறந்து பாட்டுப் பித்துப் பிடித்துப் போய் திருவிழாக்களில் அலைந்திருக்கிறோம். அட, பாட்டு கேட்பதற்காகவே ஒரு சவுண்ட் சர்வீஸில் வேலைக்குக் கூட சேர்ந்து கொஞ்சநாள் இருந்திருக்கிறேன்!

வானொலியில் ஞாயிற்றுக்கிழமையானால் நேயர் விருப்பம் என்ற நிகழ்ச்சி போடுவார்கள். அதில் விரும்பிக் கேட்டவர்களின் பெயர்களைப் படித்துவிட்டு, அந்தப் பாடலை ஒளிபரப்புவார்கள் பாருங்கள்… அந்த வேலையில் சேர மனதில் ஒரு வெறியே இருந்தது!

ஆனால் டிடி மெட்ரோ என்ற சேனல் வந்தபிறகு, அதிலும் காம்பியரிங் என்ற பெயரில் கண்டபடி பேச ஆரம்பித்த பிறகு அந்த ஆசை போயே போச். பாட்டு கேட்கவும் நிறைய சாதனங்கள் மலிந்துவிட்டன.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. நண்பர் சரவணன் சில பாடல்களைக் குறிப்பிட்டு, அவற்றைத் தொகுத்து பதிவாக வெளியிட விரும்பினார். அவர் விரும்பிய பாடல்களை யு ட்யூபில் தேடி இந்தப் பதிவைத் தயார் செய்தபோது உண்மையிலேயே, அந்த பழைய நாட்களின் ‘வெளியில்’ கொஞ்சநேரம் மனம் அலைந்துவிட்டுத் திரும்பியது…!

அதிலும் அவர் குறிப்பிட்டிருந்த பாடல்கள்… மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்ட ராஜாவின் தேவ கானங்கள்… அவற்றை தொகுப்பதே தனி இன்பம்தான்.

இனி சரவணன் தன் ரசனையைப் பகிர்ந்து கொள்கிறார்…

-வினோ

சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!

அப்படி என் மனம் லயித்த திரைப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், ‘நினைவுகளை மீட்டும் இசை’ மூலம்…

ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!

இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..

என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.

அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.

தொடர்ந்து வரும் பல்லவி,

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…

அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்

ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.

இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.

இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…

என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.

இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா

பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி

இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்

இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். இந்தப் படத்துக்குப் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.

நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).

பாடலை எழுதியவர்: வைரமுத்து

மெல்லப் பேசுங்கள் (1983) என்று ஒரு படம். இயக்குனர்கள்: பாரதி வாசு (சந்தானபாரதி – P.வாசு )

நாயகன்: வசந்த் (பின்னர் டிவி சீரியல்களில் பிரபலமாகி, சமீபத்தில் இறந்துவிட்டார்) நாயகி: பானுப்ரியா (அறிமுகம்)

இந்த படத்தில் ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்ற பாடல் சுகமானது.

இந்த பாடல் ஆரம்பிக்கும் முன் ஒரு ஒற்றைக் குயிலின் பாட்டுச் சத்தமும்… தொடர்ந்து புள்ளினங்களின் சத்தமும், மாணிக்கவாசகரின் சிவபெருமான திருப்பள்ளியெழுச்சி வரிகளும் ஒலிக்கும்.. நமக்கோ உடல் சிலிர்க்கும்!

‘கூவின பூங்குயில், கூவின கோழி…

குருகுகள் இயம்பின.. இயம்பின சங்கம்..

யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே…’

உமா ரமணன் குரலில் இந்த வரிகள் அப்படியே ராஜாவின் இசையில் சங்கமிக்கும் அற்புதத்தை அவரைத் தவிர யாரும் நிகழ்த்த முடியாது.(பாடியது தீபன் சக்ரவர்த்தி- உமா ரமணன்) அதைத் தொடர்ந்து ‘செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…’ என்று பல்லவி வரும்.

அடடா.. அது ஒரு சுகமான அனுபவம். அந்த உற்சாகம் வார்த்தைகளுக்குள் சிக்காதது. கேட்கும் யாரையும் தொற்றிக் கொள்ளும்.. பாடலுக்கு சொந்தக்காரர்: எம்ஜி வல்லபன்

கேட்காதவர்கள் கேட்டுப் பெறுங்கள் இந்த உற்சாகத்தை!

டம்: இங்கேயும் ஒரு கங்கை (1984)

தயாரிப்பு: கலைமணி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: முரளி ,சந்திரசேகர்

நாயகி: தாரா (நாயகன் கமல் தங்கை )

இசை: இசை அரசர் இளையராஜா

அப்போதெல்லாம் மாசத்துக்கு ஒரு மணிவண்ணன் படம் வரும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இந்த படத்தில் நான்கு பாடல்கள்… இரண்டு பாடல்கள் மட்டுமே எனக்கு நன்கு அறிமுகம்.

1. தெக்குத் தெரு மச்சானே… (மிக இனிய டூயட்)

2. சோலை புஷ்பங்களே…

இந்த இரண்டு பாடல்களையும் பாடியவர்கள்: கங்கை அமரன், P.சுசீலா

‘சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்…’ பாடல் கேட்கும் போதே ஒரு மெல்லிய சோகம் மனதை நிழலாய் ஆக்கிரமிக்கும் உணர்வு. பாடல் முடிந்த பின்னும் இனம்புரியாத பாரம் மனதில்… வைரமுத்துவின் வரிகள் இவை.

இந்த படத்தின் பாடல்கள் ஊமை வெயில் என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து இசை தட்டுக்களாக வெளிவந்து அந்த காலகட்டத்தில் செம ஹிட்டானவை. ஆனால் அந்த படம் வெளிவரவில்லை.

அதற்குபின் மணிவண்ணனின் ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் அந்தப் பாடல்களை இளையராஜா பயன்படுத்தியதாகப் படித்திருக்கிறேன் (அன்றைய நாட்களில் ராஜா பயங்கர பிஸி. ஒரு வருடத்துக்கு 50 படங்களுக்கு இசையமைத்த நேரம். அதனால் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்டுகள்!)

ண்பதுகளின் ஆரம்ப வருடங்கள் அவை… ‘இன்னிசைச் சக்கரவர்த்தி இளையராவின் இசை மழையில்’ என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு ராஜாதான் இசை. பாடல்களில் இசையை அமுதமாய் பொழிந்திருப்பார் இசைஞானி. படமெங்கும் அந்த அமுதமழை தொடரும்…

அப்படி ஒரு படம்தான் இளமைக் காலங்கள்.

இந்தப் படத்தில் ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் பாடல் நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் அற்புதமான பாடல்.

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.

ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…

இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..

என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையொலியை அந்த இடத்தில் தந்திருப்பார் ராஜா. இனி இப்படியொரு பாட்டை யாராவது தர முடியுமா என்றுகூட தெரியவில்லை.

படம்: இளமை காலங்கள் (1984)

தயாரிப்பு: கோவைத்தம்பி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: மோகன், நாயகி: சசிகலா

பாடல்: வைரமுத்து

இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.

பாட வந்ததோர் கானம்..

ஈரமான ரோசாவே…

ராகவனே ரமணா ரகுநாதா…

படிப்புலே ஹீரோ …

ந்தப் பதிவின் கடைசி பாடல்…

இளையராஜாவை மட்டுமே நம்பி ஸ்ரீதர் எடுத்த தென்றலே என்னைத் தொடு படத்தில் எல்லா பாடல்களுமே மிகப் பிரபலம்.

அதிலும் தென்றல் வந்து என்னை தொடும்… பாடல் இனிமையின் சிகரம்.

http://www.youtube.com/watch?v=R8q9EsVrQDA&feature=player_embedded

இந்த பாடல் ஆரம்பிக்கும் போது ராஜாவின் இசை தென்றலாய் வருட ஆரம்பிக்கும்… தொடர்ந்து ஜேசுதாஸ் – ஜானகி குரல்கள் நம்மை இன்னோர் உலகத்துக்கு அழைத்துச் செல்லும்.

சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது… என்றெல்லாம் பெரியவர்கள் சொல்வார்களே… அந்த இனிமையை இந்தப் பாடலில் அனுபவிக்கலாம்.

வாலி எழுதிய வசீகர பாடல் இது!

இந்தப் பாடல்களையெல்லாம் கேட்ட பிறகு மனதுக்குள் ஒரு நிறைவு வரும் பாருங்கள்.. அது எத்தனை கோடிகள் செலவழித்தாலும் கிடைக்காதது… நினைவுகளை எப்போதும் இனிமைப்படுத்தும் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றிகள். வேறென்ன சொல்ல முடியும்!

-ஆர் வி சரவணன்

http://www.envazhi.com/?p=15951

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உடையார்.. அது..! :D

மணியே மணிக்குயிலிலே, மாலையிடும் ...

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மனதில் என்ன நினைவுகளோ

படம்:பூந்தளிர்

பாடியவர்கள்: பாலு & சைலஜா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வாழ்வே மாயமா

படம்:காயத்திரி

இசை:இசைஞானி

பாடியவர்:சசிரேகா

பாடல்:காலைப்பனியில்

படம்:காயத்திரி

இசை:இசைஞானி

பாடியவர்:சுஜாதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலைப்பனியில்.. :rolleyes: ம்ம்ம்.. கேட்கக் கேட்க இனிமை..! :)

இணைப்புகளுக்கு நன்றிகள் நுணா..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பருவம் உருக

படம்: ஹரேராமா ஹரே கிருஷ்ணா (1986)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பாடலைக் கேட்கிறேன். :rolleyes: இந்தியாவுக்குச் சென்று கருணாநிதி, ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு.. ச்சே.. :lol:

தமிழகத்துக்குச் சென்ற பொழுதில் கேட்ட பாடல்.. பழைய நினைவுகளை மீட்டுகிறது..! :rolleyes:

http://www.youtube.com/watch?v=5TulhDH_9Mk

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மஞ்சள் வெயில்

படம்:நண்டு

இசை:இசைஞானி

பாடியவர்:உமா ரமணன்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தேவன் திருச்சபை மலர்களே

படம்:அவர் எனக்கே சொந்தம்

பாடியவர்கள்:பூரணி & இந்திரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தேவன் திருச்சபை மலர்களே

படம்:அவர் எனக்கே சொந்தம்

பாடியவர்கள்:பூரணி & இந்திரா

வாத்தியம் இசைக்கப் பழகியபோது, பாடலின் ஆரம்பத்தில் வரும் கிற்றார் கோர்ட்ஸை கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது..! :unsure: அந்த அம்மா Frets எதையும் பிடிக்காமலே வாசிக்கிறாவே..! :rolleyes: ஆச்சரியம்தான்..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.