Jump to content

யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில் 

24 MAY, 2024 | 01:55 PM
image
 

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார். 

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 

https://www.virakesari.lk/article/184375

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும்

ranil.jpg

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை கட்டிடத்தை நேற்று(24)  திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்திற்கு தேசிய வைத்தியசாலையை வழங்குமாறு நீங்கள் அனைவரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தீர்கள். கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அனுமதி வழங்கினோம். அத்துடன், யாழ்ப்பாண வைத்தியசாலையை அடுத்த தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அப்போது கொழும்பில் மாத்திரமன்றி தெற்கு, வடக்கு, மற்றும் மத்திய மாகாணங்களிலும் சிறந்ததொரு வைத்தியசாலைக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அத்தோடு நின்று விடாமல் அபிவிருத்தி செய்ய வேண்டிய ஏனைய பகுதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நான் அடிக்கடி யாழ். மாவட்டத்திற்கு வருகை தருவதாக இங்கு குறிப்பிடப்பட்டது. உண்மையில் நான் இந்த முறை இங்கு வைத்தியசாலைகளை திறப்பதற்காக வந்தேன். நான் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையில் வந்துள்ளேன். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.நான் கடந்த முறை இங்கு வருகை தந்தபோது, நெதர்லாந்துத் தூதுவர் இந்த இரண்டு புதிய மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இங்கு வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் இந்த வார இறுதியில் இங்கு வந்து இந்தச் செயற்பாடுகளை நிறைவு செய்யத் தீர்மானித்தேன்.

யாழ்ப்பாண மாவட்டம் நீண்டகாலமாக அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கவில்லை. வருமானம் போதியளவில் இல்லை. மக்கள் வேலைத் தேடும் நிலை காணப்படுகிறது. யாழ்.மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான அநேகமான சாத்தியங்கள் உள்ளன.

யாழ்.மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடிந்துள்ளது. தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான பிரச்சினைகளும் உள்ளன.

எங்களால் இன்னும் இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அதற்கான தீர்வுகள் தற்போதுள்ள அரசியல் பிரச்சினைகளைச் சுற்றியே உள்ளன. நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல், காணாமல் போனோர் விவகாரம், இழப்பீடுகள், உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக நாம் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே நேரம் என்று நான் நம்புகிறேன்.

அதற்கு அனைவரும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சித்து வருவதோடு, வடகிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளேன்.

முன்னைய ஆணைக்குழு அறிக்கைகள் அனைத்தையும் ஆராய்ந்து தொகுக்கப்பட்ட நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கை அண்மமையில் எமக்கு கிடைத்தது. இந்த அனைத்து ஆணைக்குழு அறிக்கைகளின் தாய் அறிக்கையாகவும், இது தொடர்பான கடைசி ஆணைக்குழு அறிக்கையும் அதுவாகவே இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதற்காக மற்றுமொரு ஆணைக்குழுவின் அவசியம் இல்லை.

காணாமல் போனோர் அலுவலகம் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்ற அவர்களின் பரிந்துரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை அப்படியே செய்ய வேண்டும். காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகள் தொடர்பான முழுப் பிரச்சினைக்கான தீர்வுகளிலும் மாற்றங்கள் செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களால் அதிகளவு இழப்பீடு தொகையை செலுத்த முடியவில்லை. எனவே அதற்காக பணம் ஒதுக்க வேண்டும். அத்துடன் எது உண்மை, என்ன நடந்தது, நல்லிணக்கத்திற்காக நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்விக்குறி காணப்படுகிறது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (TRC) கொண்டு வருவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஆனால் நீதிமன்ற அதிகாரம் குறித்த பிரச்சினைகள் அதற்குள் காணப்படுகிறது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் நீதித்துறை அதிகாரங்கள் எமக்கு இருக்க வேண்டுமா அல்லது அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீதித்துறை அதிகாரங்களைச் செயற்படுத்தும் தனி நீதிமன்றம் வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மேலும் இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனவே, இது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை சட்டமாக்குவதற்கு எமக்கு ஆதரவளித்த மூன்று தூதுவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்குமாறு இரண்டு அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளேன்.

இதன் மூலம் பல பிரச்சினைகள் தீரும் என நம்புகிறேன். எனவே, இதுபற்றி கலந்துராயடி, சாத்தியமான தீர்வுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவோம் என்று அமைச்சர்களிடம் தெரிவித்தேன்.

அத்துடன், வட மாகாணம் அபிவிருத்திக்காக சாத்தியக்கூறுகளை அதிகமாக கொண்டிருக்கிறது. இந்த மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பெருமளவில் உள்ளது. அதனால் யாழ்ப்பாணத்தை இலங்கையின் முக்கிய வலுசக்தி மையமாக கட்டியெழுப்ப முடியும். வடமாகாணத்தில் இந்த வலுசக்தியை நாம் இதுவரை பயன்படுத்தவில்லை. ஆனாலும் ஜிகாவொட்கள் அளவிலான வலுசக்தி இங்கு உள்ளது.

மேலும், நாட்டில் போட்டி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். வடக்கு மாகாணம் அதற்குள் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. இங்குள்ள விவசாயிகளுக்கு அதற்கான திறன் உள்ளது. இதன் மூலம் வடமாகாண மக்களின் வருமான மட்டத்தை பாரியளவில் மேம்படுத்த முடியும்.

மேலும், கைத்தொழில்களைப் பொறுத்த வரையில் காங்கேசந்துறையில் முதலாவது முதலீட்டு வலயத்தை அமைப்பது குறித்தும், பின்னர் பரந்தன் மற்றும் மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். மேலும் திருகோணமலையை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுகின்றோம். வடக்கில் சுற்றுலாத்துறைக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள தரைமார்க்க தொடர்பின் மூலம் யாழ்ப்பாணம் உள்ளடங்களாக முழு வடக்கு மாகாணமும் புரட்சிகரமாக மாறும். இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் வடமாகாணத்தை இலங்கையின் பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய முடியும்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் சில நடனக் அம்சங்கள் இங்கு இடம்பெற்றன. அவர்களைப் பாராட்டுகிறேன். அவர்களில் பெரும்பாலானோர் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று துணைவேந்தர் கூறினார். அதாவது 2002 மற்றும் 2003 இல் பிறந்தவர்கள். அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டும்.

அவர்களைத்தான் Gen Z என்று அழைக்கிறோம். அவர்கள் தங்கள் எதிர்காலத்திலம் குறித்து அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதன் காரணமாகவே புதிய பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் விரைவான அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கான சட்டங்களைக் கொண்டுவருவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதையும் கூற வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

https://thinakkural.lk/article/302396

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வட.மாகாணத்தில் உயர்தர சுகாதார சேவையை உறுதி செய்யும் வகையில் யாழ்ப்பாண வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

 

அவசர அவசரமாக வைத்தியசாலைகளில் இருந்து பாடசாலைகள் வரை ஏன் தேசியமயமாக்குகிறார்கள்.

நாளைக்கு வடகிழக்குக்கு  13ம் திட்டம் போல ஏதாவது தீர்வு கொடுத்தால்

தேசியமயமாக்கப்பட்டதெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதாலா?

இதைபற்றி யாருக்காவது தெளிவான விளக்கம் இருக்கிறதா?

ஏன் தேசிய மயமாக்குகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பொருளாதார நெருக்கடியால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்களால் அதிகளவு இழப்பீடு தொகையை செலுத்த முடியவில்லை. எனவே அதற்காக பணம் ஒதுக்க வேண்டும்.

 

அரசின் கையில் ஒப்படைத்தவர்களுக்கு என நடந்து என்றே கேட்கிறார்கள்.

சுட்டுக் கொன்றுவிட்டோம் என்றால் வெளிப்படையாக சொல்லுங்கள்.

அதைவிட்டு அவர்களுக்கு இழப்பீடு என்பது உலக மகா அநிஞாயம்.

அவர்கள் என்ன பணத்துக்காகவா போராட்டம் நடத்துகிறார்கள்.

4 hours ago, கிருபன் said:

எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள தரைமார்க்க தொடர்பின் மூலம் யாழ்ப்பாணம் உள்ளடங்களாக முழு வடக்கு மாகாணமும் புரட்சிகரமாக மாறும்.

 

ஆமாம் ஆமாம் 

முழு சிங்கள மயமாக மாறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

 

ஆமாம் ஆமாம் 

முழு சிங்கள மயமாக மாறும்.

அது மட்டுமில்லை..அதனுள் தமிழர் போகமுடியாது...ஏனெனில் ஆமி சொல்லும் அதற்குள்  கண்ணி வெடி இருக்கு என் றூ..

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, ஈழப்பிரியன் said:

 

அவசர அவசரமாக வைத்தியசாலைகளில் இருந்து பாடசாலைகள் வரை ஏன் தேசியமயமாக்குகிறார்கள்.

நாளைக்கு வடகிழக்குக்கு  13ம் திட்டம் போல ஏதாவது தீர்வு கொடுத்தால்

தேசியமயமாக்கப்பட்டதெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதாலா?

இதைபற்றி யாருக்காவது தெளிவான விளக்கம் இருக்கிறதா?

ஏன் தேசிய மயமாக்குகிறார்கள்?

வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதற்கே, அதன் ஊடாக அந்தப் பிரதேச மக்களின் வசதிகளை அதிகரிப்பதற்கே, தேசிய மயமாக்கம் என்று சொல்கின்றனர். இரண்டு நாட்களின் முன்னர் அமைச்சர் பந்துல குணவர்த்தனா இதைச் சொல்லியிருந்தார். இலங்கையில் இப்பொழுது இரண்டு தேசிய வைத்தியசாலைகள் மட்டுமே இருக்கின்றன, ஒன்று கொழும்பில் இரண்டாவது கண்டியில். மூன்றாவது கரப்பிட்டியாவில் வருகின்றது என்று அமைச்சர் சொல்லியிருந்தார், அவர் யாழ் என்று சொல்லவில்லை.

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவர்களுக்கு தங்களின் பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் பள்ளிக்கூடங்களிலுள்ள குறை நிநைகளையே தீர்ப்பதற்கு முடியவில்லை...அதற்குள் யாழ்ப்பாணத்திற்கு போய் விட்டார்கள்..தம்புள்ள என்று தான் நினைவு .அங்குள்ளை வைத்தியசாலையில் கறள் பிடித்த பெட் தானாம் இருக்கிறது..அந்த கறள் பிடித்த நோயளார் காவும் பெட்டில் எந்தப் பெரிய வலியோடு வந்தாலும் கர்ப்பிணி பெண்களும் போக வேணும்..மொத்தமாக 3 பெட் தான் உள்ளதே.இது நேரில் பார்த்த ஒரு உறவினர் சொன்னது..உடனுமே ஒரு பெட் வாங்கிக் கொடுக்கபட்டும் இருக்கிறது.இதை எல்லாம் தீர்த்து வைக்க முடியாத ரணில் ஏன் யாழ்ப்பாணம் போனார்.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 போன மாதம் நான் ஊரில் நின்ற போது, மந்திகை ஆஸ்பத்திரியில் பணி புரியும் ஒரு இளம் வைத்தியருடன் கதைத்திருந்தேன். சில காலம் முன் வரை தங்களின் குழுவில் எட்டு வைத்தியர்கள்  வேலை செய்ததாகவும், ஆனால் இப்பொழுது மூன்று வைத்தியர்கள் மட்டுமே அந்தக் குழுவில் இருப்பதாகவும் சொன்னார். அதனால் தாங்க முடியாத வேலைச் சுமை என்றார். எல்லோரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு சென்று விட்டதாகச் சொன்னார். இந்த இளம் வைத்தியரும் IELTS பரீட்சைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றார். இது அங்கே மருத்துவ துறையில் இன்றிருக்கும் மிகப் பெரிய பிரச்சனை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதற்கே, அதன் ஊடாக அந்தப் பிரதேச மக்களின் வசதிகளை அதிகரிப்பதற்கே, தேசிய மயமாக்கம் என்று சொல்கின்றனர்

பாடசாலைகளை ஏன் தேசியப் படுத்துகிறார்கள்?

தேசியப் படுத்திவிட்டால் இடமாற்றம் முதல் கொண்டு சகலதும் மத்திய அரசின் கைகளில் என்கிறார்கள்?

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

பாடசாலைகளை ஏன் தேசியப் படுத்துகிறார்கள்?

தேசியப் படுத்திவிட்டால் இடமாற்றம் முதல் கொண்டு சகலதும் மத்திய அரசின் கைகளில் என்கிறார்கள்?

மாகாணசபைகளின் அதிகாரத்தை படிப்படியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கின்றேன்.
சிங்களப் பகுதிகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. மாகாணத்தின் அதிகாரமும், மத்திய அரசின் அதிகாரமும் சிங்களவர்களின் கைகளில் தான் என்பதால்/ ஆனால், வடக்கு கிழக்கில் அப்படியான நிலை இல்லை என்பதுடன், இவ்வாறு தேசிய பாடசாலையானால் அப் பாடசாலைகள் மேலும் இன ரீதியிலான ஒதுக்கல்களுக்குள்ளாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

பாடசாலைகளை ஏன் தேசியப் படுத்துகிறார்கள்?

தேசியப் படுத்திவிட்டால் இடமாற்றம் முதல் கொண்டு சகலதும் மத்திய அரசின் கைகளில் என்கிறார்கள்?

 

3 minutes ago, நிழலி said:

மாகாணசபைகளின் அதிகாரத்தை படிப்படியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கின்றேன்.
சிங்களப் பகுதிகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. மாகாணத்தின் அதிகாரமும், மத்திய அரசின் அதிகாரமும் சிங்களவர்களின் கைகளில் தான் என்பதால்/ ஆனால், வடக்கு கிழக்கில் அப்படியான நிலை இல்லை என்பதுடன், இவ்வாறு தேசிய பாடசாலையானால் அப் பாடசாலைகள் மேலும் இன ரீதியிலான ஒதுக்கல்களுக்குள்ளாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.

தேசியப் பாடசாலை ஆக்கச் சொல்லி ஒற்றைக் காலில் நிற்பது வேறு யாருமல்ல! நம்மாளுங்க தான்!!

Link to comment
Share on other sites

Just now, ஏராளன் said:

 

தேசியப் பாடசாலை ஆக்கச் சொல்லி ஒற்றைக் காலில் நிற்பது வேறு யாருமல்ல! நம்மாளுங்க தான்!!

My son / daughter is studying at National school என்று சொல்வதில் அவ்வளவு பெருமை அவர்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பாடசாலைகளை ஏன் தேசியப் படுத்துகிறார்கள்?

தேசியப் படுத்திவிட்டால் இடமாற்றம் முதல் கொண்டு சகலதும் மத்திய அரசின் கைகளில் என்கிறார்கள்?

நான் பின்னால் போய் புல்லு வெட்டி விட்டு வருவதற்குள், நிழலியும், ஏராளனும் பதில் சொல்லி விட்டனர். மத்திய அரசின் அதிகாரத்திற்குள் இவை போய் விடும், ஆனால் பெருமையும், நிதியும் அதிகமாக கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நான் பின்னால் போய் புல்லு வெட்டி விட்டு வருவதற்குள், நிழலியும், ஏராளனும் பதில் சொல்லி விட்டனர். மத்திய அரசின் அதிகாரத்திற்குள் இவை போய் விடும், ஆனால் பெருமையும், நிதியும் அதிகமாக கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.

இதுக்கு தான் சொல்லுறது

யாழுக்குள் படுத்து கிடக்கணும்

பொண்டாட்டியிடம் பேச்சு வாங்கணும்.

2 hours ago, நிழலி said:

மாகாணசபைகளின் அதிகாரத்தை படிப்படியாக மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்கின்றேன்.
சிங்களப் பகுதிகளில் இது ஒரு பிரச்சினை இல்லை. மாகாணத்தின் அதிகாரமும், மத்திய அரசின் அதிகாரமும் சிங்களவர்களின் கைகளில் தான் என்பதால்/ ஆனால், வடக்கு கிழக்கில் அப்படியான நிலை இல்லை என்பதுடன், இவ்வாறு தேசிய பாடசாலையானால் அப் பாடசாலைகள் மேலும் இன ரீதியிலான ஒதுக்கல்களுக்குள்ளாகும் வாய்ப்புகள் தான் விளக்கத்துக்க

 

விளக்கத்துக்கு நன்றி நிழலி.

2 hours ago, ஏராளன் said:

 

தேசியப் பாடசாலை ஆக்கச் சொல்லி ஒற்றைக் காலில் நிற்பது வேறு யாருமல்ல! நம்மாளுங்க தான்!!

ஏராளன் யார் தான் அப்படி நிற்கிறார்கள்?

பாராளுமன்ற உறுப்பினர்களா?

பொதுமக்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

இவர்களுக்கு தங்களின் பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் பள்ளிக்கூடங்களிலுள்ள குறை நிநைகளையே தீர்ப்பதற்கு முடியவில்லை...அதற்குள் யாழ்ப்பாணத்திற்கு போய் விட்டார்கள்..

இவரும் யாழ்பாண வைத்தியசாலை குறைகளை  தீர்க்கவில்லை என்றால் வேறு யார்   மோடியா ?புதினா? ஜின்பிங்கா  ரூடோவா தீர்க்க போகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

 யார் தான் அப்படி நிற்கிறார்கள்?

பாராளுமன்ற உறுப்பினர்களா?

பொதுமக்களா?

பாடசாலை அதிபர் ஆசிரியர் தொடங்கி, பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கங்கள் வரை இதற்குள் அடங்கும். 

சில பா.உ இதன் பிண்ணனியை விளக்கியும் கூட அது கருத்தில் எடுக்கப்படவில்லை என்றுதான் கேட்ட நினைவு. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, P.S.பிரபா said:

பாடசாலை அதிபர் ஆசிரியர் தொடங்கி, பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கங்கள் வரை இதற்குள் அடங்கும். 

சில பா.உ இதன் பிண்ணனியை விளக்கியும் கூட அது கருத்தில் எடுக்கப்படவில்லை என்றுதான் கேட்ட நினைவு. 

யாழ்ப்பாண நகரில் இயங்கும் பிரபல பாடசாலைகளுக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து பெருமளவு பணம் வந்து சேர்கிறது. அரசாங்கப் பாடசாலைகளானாலும்கூட, இவை தமக்கான தேவைகளை புலம்பெயர் தமிழர்கள் (முன்னாள் மாணவ மாணவிகள்) ஊடாகவே பெற்றுவருகிறார்கள். சில பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான வசதிகள் செய்யப்பட்டும் வருகின்றன. ஆனால், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிந்தங்கிய நிலையில் இன்னும் பல பாடசாலைகள் இருக்கின்றன. அண்மையில்க் கூட வடமாராட்சி கிழக்கு, தென்மாராட்சியின் ஒரு சில பகுதிகளில் ஒரு சில பாடசாலைகள் சரியான உதவியின்றி பூட்டப்படும் நிலையில், மாணவர்கள் இருந்து படிப்பதற்கு வசதிகளற்ற நிலையில் இருப்பதைக் காண முடிந்தது. இவ்வாறே, வன்னி, மட்டக்களப்பு என்று கவனிப்பாரின்றிக் கிடக்கும் பல பாடசாலைகள் இருக்கின்றன. 

செல்வச் செழிப்புடன் நகர்களில் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு வசதிகளற்றுக் கிடக்கும் உள்ளூர்ப் பாடசாலைகள் ஒவ்வொன்றினைத் தத்தெடுத்தால் என்ன? அவர்களும் எமது பிள்ளைகளே. 

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.