Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
01 JUN, 2024 | 11:27 PM
image
 

யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.

யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/185082

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்ணின் தலைக்கனத்தை குறைக்க எண்ணியிருப்பாரோ? 

  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் பெண்ணொருவர் எரித்துப் படுகொலை : சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன், பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்துப் படுகொலை செய்துள்ளார்.

சாவகச்சேரி – மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன், பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து உரையாடியிருந்தபோது இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அதனை அவதானித்த அயலவர்கள் தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1385509

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, Kapithan said:

பெண்ணின் தலைக்கனத்தை குறைக்க எண்ணியிருப்பாரோ? 

ஒரு பெண் சுயமாக வாழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ தலைக்கணம் என்று பெயர் வைக்காதீர்கள்..அவர்களுக்குள்ளும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் விருப்பு வெறுப்புக்கள் என்று எவ்வளவோ இருக்கும்.எல்லாவற்றையும் சகித்து கொண்டு தான் வெளி உலடகில் தானும் ஒரு ஜீவன் என்று வாழ முற்படுகிறார்கள்..அது சரி சக கருத்தாளரை ஒழுங்காகத் தானே மதிக்கிறீங்கள் எல்லோரும்.

Edited by யாயினி
  • Like 4
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

பெண்ணின் தலைக்கனத்தை குறைக்க எண்ணியிருப்பாரோ? 

செய்தியின் பிரகாரம் பார்க்கும்போது கொலையை செய்த சந்தேகநபரை மனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இப்படியான குரூரமான கொலையை செய்யக்கூடும் என நான் நினைக்கின்றேன். போதையை அடித்துவிட்டும் கொலை செய்யப்பட்டதோ தெரியாது. 

அதுசரி, ஒரு ஆளின் தலையில் பெற்றோலை ஊத்தி கொழுத்துவது உங்களுக்கு நகைச்சுவையாக உள்ளதோ? 😟

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : தீ மூட்டிய இளைஞன் கைது

02 JUN, 2024 | 01:36 PM
image

யாழில் இளைஞனால் தீயிட்டு எரிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை (01) பெண்ணொருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்ற இளைஞன், பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

திடீரென இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டபோது, இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் தலையின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். 

உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று தீயினை அனைத்து, பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த குற்றச்சாட்டில் இளைஞரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

https://www.virakesari.lk/article/185119

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, யாயினி said:

ஒரு பெண் சுயமாக வாழ்வதற்கோ அல்லது பேசுவதற்கோ தலைக்கணம் என்று பெயர் வைக்காதீர்கள்..அவர்களுக்குள்ளும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் விருப்பு வெறுப்புக்கள் என்று எவ்வளவோ இருக்கும்.எல்லாவற்றையும் சகித்து கொண்டு தான் வெளி உலடகில் தானும் ஒரு ஜீவன் என்று வாழ முற்படுகிறார்கள்..அது சரி சக கருத்தாளரை ஒழுங்காகத் தானே மதிக்கிறீங்கள் எல்லோரும்.

 

4 hours ago, நியாயம் said:

செய்தியின் பிரகாரம் பார்க்கும்போது கொலையை செய்த சந்தேகநபரை மனநல சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இப்படியான குரூரமான கொலையை செய்யக்கூடும் என நான் நினைக்கின்றேன். போதையை அடித்துவிட்டும் கொலை செய்யப்பட்டதோ தெரியாது. 

அதுசரி, ஒரு ஆளின் தலையில் பெற்றோலை ஊத்தி கொழுத்துவது உங்களுக்கு நகைச்சுவையாக உள்ளதோ? 😟

ஆரம்பத்தில் செய்தியின் பாரதூரத் தன்மையை உணராமல் பொறுப்பற்று கருத்துத் தெரிவித்துவிட்டேன். தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள். 

🙏

(கருத்தை நீக்கும்படி விரும்புவீர்களானால் நீக்கிவிடுகிறேன்)

Edited by Kapithan
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாகக் கூறி அழைத்து சென்று பெண்ணை தீயிட்டு படுகொலை செய்தேன் - இளைஞன் வாக்குமூலம்

03 JUN, 2024 | 04:45 PM
image
 

"தாயின் கல்லறை மீது சத்தியம் செய்கிறேன்" என பெண்ணை சேமக்காலைக்கு அழைத்து சென்றே இளைஞன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்குள் வைத்து, கடந்த சனிக்கிழமை  பெண்ணொருவரை, இளைஞன் ஒருவர் உயிருடன் தீ மூட்டி படுகொலை செய்துள்ளார். 

உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்தை மீறிய காதல் தொடர்பு சுமார் ஐந்து வருட காலமாக இளைஞனுடன் இருந்துள்ளது. இந்நிலையில் இளைஞன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு முயன்றுள்ளார். 

அதனை அறிந்து, இளைஞன் தன்னையே திருமணம் செய்ய வேண்டும் என தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். 

அந்நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த பெண்ணை மட்டுவில் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து, சேமக்காலையில் உள்ள தனது தாயின் கல்லறை மீது "உன்னையே திருமணம் செய்வேன்" என சத்தியம் செய்கிறேன் என சேமக்காலைக்குள் அழைத்து சென்று , தாயின் கல்லறைக்கு அருகில் மறைத்து வைத்திருந்த பெற்றோலை எடுத்து பெண் மீது ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ளார். 

பெண்ணை படுகொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

தாயின் கல்லறை மீது சத்தியம் செய்வதாகக் கூறி அழைத்து சென்று பெண்ணை தீயிட்டு படுகொலை செய்தேன் - இளைஞன் வாக்குமூலம் | Virakesari.lk



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.