Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

திரு. கதிர்காமர் பாலசுந்தரம்

 

(யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர், எழுத்தாளர் ,சமூக ஆர்வலர் , இலக்கியவாளர்)

கதிர்காமர்  பாலசுந்தரம்

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, புறூனை, லண்டன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமர் பாலசுந்தரம்  அவர்கள் 01-06-2024  சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர்-வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற  கனகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்,
 
Dr. கயல்விழி (கீத்தா), யாழ்கோவன் (தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
யுசிலானந்தன்,  சந்திமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
Dr. யவ்வனா, மிதுசனா (ஆசிரியர்), Dr. ருக்சன், லூக் (உதவி அதிபர்) ஆகியோரின் பாசமிகு பேரனும். 
 
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (தமிழரசு), தர்மலிங்கம், இராசலிங்கம்  மற்றும் செல்வபாக்கியம், பரமேஸ், பூமணி ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.
 

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3) என்ற முகவரியில் 12-06-2024 புதன்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், 13-06-2024 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

 

தொடர்புகளுக்கு:

தீபன்(கனடா)மகன்: +1 (416) 270 4303
ஶ்ரீவாஸ்(UK) பெறாமகன்:+44 780 155 6620

www.tamilthakaval.org

Edited by நியாயம்
  • நியாயம் changed the title to யூனியன் கல்லூரி முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் மறைவு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் அதிபராக இருந்த காலம் யூனியனின் பொற்காலம் என்று அழைப்பார்கள். 86 இல் க பொ த உயர்தரத்தில் சுகந்தன் என்ற மாணவர் கணித பிரிவில் 372 புள்ளிகள் பெற்று அகில இலங்கையில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.  

ஆழ்ந்த இரங்கல்கள்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் ......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, கந்தப்பு said:

இவர் அதிபராக இருந்த காலம் யூனியனின் பொற்காலம் என்று அழைப்பார்கள். 86 இல் க பொ த உயர்தரத்தில் சுகந்தன் என்ற மாணவர் கணித பிரிவில் 372 புள்ளிகள் பெற்று அகில இலங்கையில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.  

ஆழ்ந்த இரங்கல்கள்

 

 

நல்ல எழுத்தாளர். சுவாரசியமாக பல விடயங்கள் எழுதி உள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, கந்தப்பு said:

இவர் அதிபராக இருந்த காலம் யூனியனின் பொற்காலம் என்று அழைப்பார்கள். 86 இல் க பொ த உயர்தரத்தில் சுகந்தன் என்ற மாணவர் கணித பிரிவில் 372 புள்ளிகள் பெற்று அகில இலங்கையில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.  

ஆழ்ந்த இரங்கல்கள்

 

உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு.
அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.

 

அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.