Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

viagra-tablet.jpg?resize=750,375&ssl=1

வயகரா ஏற்படுத்தும் மாற்றம் : ஆய்வில் வெளியான புதிய தகவல்.

சில்தெனாபில் (Sildenafil) என்ற ஆண்களின் விறைப்புத்தன்மைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகையான வயகரா மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வயாகரா உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த நாளங்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த நாளங்கள் தளர்வதால் மனித மூளையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வாஸ்குலார் டிமென்ஷியா (Vascular Dementia) என்று கூறப்படும் நியாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது என்றும் நியாபக மறதிக்கு வயகரா சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் நியாபக மறதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வயாகரா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நியாபக மறதி மருத்துவத்தில் இது ஒரு திருப்புமுனை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

https://athavannews.com/2024/1387217

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2024 at 03:01, தமிழ் சிறி said:

அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பலக்லைக்கழகத்தில் சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 

https://athavannews.com/2024/1387217

அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமா..............🙃........இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகத்தை ஆதவன் குரூப் இரவோடு இரவாக அமெரிக்காவிற்கு கடத்தி வந்து விட்டார்களோ......... 

ஆதவனில் வேலை செய்பவர்கள் சிலருக்கு இந்த குளிசைகளை இனாமாக கொடுத்துப் பார்க்கலாம்.....நியாபக மறதியை சீர்படுத்துகின்றதா என்று.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமா..............🙃........இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகத்தை ஆதவன் குரூப் இரவோடு இரவாக அமெரிக்காவிற்கு கடத்தி வந்து விட்டார்களோ......... 

ஆதவனில் வேலை செய்பவர்கள் சிலருக்கு இந்த குளிசைகளை இனாமாக கொடுத்துப் பார்க்கலாம்.....நியாபக மறதியை சீர்படுத்துகின்றதா என்று.

வயக்காராவ குடிச்சுட்டு இங்கிலாந்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் எண்டு எழுதுவாங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

வயக்காராவ குடிச்சுட்டு இங்கிலாந்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் எண்டு எழுதுவாங்கள்..

🤣.........

யாரு சாமி இவங்க....ஆதவன், தமிழ்வின்,..........இப்படி பலர் நாங்கள் முந்தி சின்ன வகுப்புகளில் எழுதி வாசிக்கும் சிரிப்பு செய்திகளை சீரியஸாக போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில வேளை மருந்தின் தாக்கத்தால் ஆக்ஸ்போர்ட் தானாகவே கிளம்பி அமெரிக்கா போய் இருக்குமோ?🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/6/2024 at 12:01, தமிழ் சிறி said:

நியாபக மறதி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வயாகரா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நியாபக மறதி மருத்துவத்தில் இது ஒரு திருப்புமுனை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனிமேல் நானும் வயாகரா எடுத்துப் போட்டுட்டுத்தான் யாழ்களத்துக்கு வரோணும் 😎

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இனிமேல் நானும் வயாகரா எடுத்துப் போட்டுட்டுத்தான் யாழ்களத்துக்கு வரோணும் 😎

இப்போது போடாமலா வருகிறீர்கள்??    🤣🤪😂.   

  • கருத்துக்கள உறவுகள்

வயாக்ரா (அல்லது வயாக்ராவின் குடும்பத்தில் இருக்கும் மருந்துகள்) எப்படி வேலை செய்கின்றன என்று அறிந்து கொண்டால் இந்த விளைவைப் புரிந்து கொள்ளலாம்.

ஆண்குறியினுள் எழுச்சியின் போது உட்செல்லும் இரத்தம் அதனுள் தேங்கி நிற்பதால் தான் எழுச்சி (erection) ஏற்படுகிறது. இந்த தேங்கி நிற்றலுக்கு ஆண்குறியில் இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைய (relax) வேண்டும். இந்த இரத்த நாளங்கள் விரிவடைவது குறைந்தால் (தீவிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், வேறு சில நோய்கள் காரணமாக) இரத்த தேக்கமும் குறைந்து, ஆண்குறி எழுச்சியும் பாதிக்கப் படுகிறது.

வயாக்ராவில் இருக்கும் மருந்து, இந்த இரத்த நாளம் விரிவடைவதை ஊக்குவிப்பதால் ஆண்குறி எழுச்சியை ஊக்குவிக்கிறது.

ஆனால், ஆண்குறியில் மட்டுமல்லாமல், உடலின் ஏனைய பகுதிகளான மூளை, இதயம் என்பவற்றிலும் இரத்தக் கலன்களை வயாக்ரா வகை மருந்து விரிவடையச் செய்யும் போது சில பக்க விளைவுகள் உருவாகும். ஞாபக சக்தி அதிகரிப்பிற்கு, மூளையின் இரத்தக் கலன் விரிவடைதல் காரணமாக இருக்கலாம்.

ஆனால், இதய நோய் இருப்போர் இதயத்தில் வயாக்ரா காரணமாக இரத்தக் கலன் விரிவடைவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும். இதய நோய் இருப்போரில் இரத்தக் குழாய்கள் இதயத்தில் விரிவடைந்தால் இரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம், இதனால் ஒட்சிசன் கிடைப்பது குறைந்து மாரடைப்பு ஏற்படலாம்.

https://www.health.harvard.edu/mens-health/are-erectile-dysfunction-pills-safe-for-men-with-heart-disease

வயாக்ரா இல்லாமலே ஆண்குறி எழுச்சியை சாதாரணமாக வைத்திருக்க ஒரு வழி கிரமமான உடற்பயிற்சி. ஒரு ஆய்வில்👇, ஒரு வாரத்தில் இரண்டரை மணி நேரங்கள் ஓட்டம் போன்ற பயிற்சிகளைச் செய்தோரில், ஆண்குறி எழுச்சியில் பிரச்சினைகள் வருவது 30% குறைந்ததாகக் கண்டறிந்தார்கள்.

https://www.health.harvard.edu/blog/exercise-and-erectile-dysfunction-ed-201104261574

 

 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

உடலின் ஏனைய பகுதிகளான மூளை, இதயம் என்பவற்றிலும் இரத்தக் கலன்களை வயாக்ரா வகை மருந்து விரிவடையச் செய்யும் போது சில பக்க விளைவுகள் உருவாகும். ஞாபக சக்தி அதிகரிப்பிற்கு, மூளையின் இரத்தக் கலன் விரிவடைதல் காரணமாக இருக்கலாம்.

ஆனால், இதய நோய் இருப்போர் இதயத்தில் வயாக்ரா காரணமாக இரத்தக் கலன் விரிவடைவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும். இதய நோய் இருப்போரில் இரத்தக் குழாய்கள் இதயத்தில் விரிவடைந்தால் இரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம், இதனால் ஒட்சிசன் கிடைப்பது குறைந்து மாரடைப்பு ஏற்படலாம்.

👍.........

இங்கு ஒரு உயர்தர வகுப்பு இரசாயனவியல் பாடப்புத்தகத்தில் ஒரு கட்டம் போட்டு இது விளங்கப்பட்டிருந்தது. பல வருடங்களின் முன் பார்த்திருக்கின்றேன்.

இங்கு மாணவர்கள் தரம் 10, 11 அல்லது 12 இல் அவர்களின் பாட வரிசைகளின் தெரிவிற்கு ஏற்ப இந்த பாடத்தை எடுப்பார்கள். 

பென்சீனில் ஆறு பாம்புகள், ஒன்றின் வாலை மற்றது வாயால் பிடித்திருக்கின்றது என்று ஊரில் ஒரு ஆசிரியர் சொல்லித் தந்தவர் ........... ஆனால் இது சம்பந்தமாக எதுவும் சொல்லவேயில்லை.........🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.