Jump to content

சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_20240614_162458.jpg?resize=750,375&s

சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!

வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்கவிற்கு சிவசேனை அமைப்பினா் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

வடக்கில் இருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தை பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், நான்கு பேரை கைது செய்யப்பட்டமையைப் பாராட்டும் முகமாகவே குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அண்மைக்காலமாக இறைச்சிக்காக மாடு, ஆடுகள் என்பன சட்ட விரோதமாக கடத்தப்படும்  செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் ஓமந்தை பொலிஸாரால் குறித்த கடத்தல் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் அ.அ.மாதவன் மற்றும் சிவசேனை அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலா் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2024/1388108

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

40 இலட்சம் பெறுமதியான ஆடுகள், மாடுகள் மீட்பு! 1711643371.jpg

வடக்கில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு நோக்கி இரு வாகனங்களில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அவை 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஓமந்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதுடன், ஆடுகளும், மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றைக் கடத்தினர், என்ற சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(ஆதவன்)

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சட்டவிரோத மாடு கடத்தல் – பொலிஸ் அதிகாாிக்கு பொன்னாடை போா்த்திய சிவசேனை!

இவங்கள்தான் தமிழரையும் கடத்திக் காணாமலாக்கியவர்களின் அணி என்பது இந்தப் பசுச்சேனாக்களுக்குத் தெரியாதா?

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

வவுனியாவில் சட்டவிரோத மாடு கடத்தல் சம்பவத்தினை முறியடித்த ஓமந்தை 

🫢.....

மாடுகளை காப்பாற்றினதுக்கு பொன்னாடை....ஆடுகளை காப்பாற்றினதுக்கு ஒரு துவாயும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்...

இலங்கையில் அவரவர் வேலையை செய்தால் பொன்னாடை கிடைக்கும் தருணங்களும் உண்டு....

ருத்ர சேனை, நீங்கள் எங்கேயப்பா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது...... ஒரு ஆட்டுப்பட்டியையே, எப்படி கடத்தியிருப்பார்கள்? அவர்களை ஒரு போலீஸ் அதிகாரி மடக்கிப்பிடித்திருக்கிறார்?  அதுக்குத்தான் எங்கள் வரிப்பணத்தில் சம்பளம் அளிக்கப்படுகிறதே. அது சரி, இந்த வாள்வெட்டுக்குழு, போதைப்பொருளை கடத்துவோரை மட்டும் கைது செய்யமாட்டார்கள், கண்ணை மூடிக்கொண்டு போக விட்டுவிடுவார்கள். வர வர சிவசேனைக்கு பொன்னாடை போத்துற வேலை அதிகரிக்கிறது. அதற்காக ஆட்களை தேடுகிறார்களாம் போர்த்துவதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

மாடுகளை காப்பாற்றினதுக்கு பொன்னாடை....ஆடுகளை காப்பாற்றினதுக்கு ஒரு துவாயும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்...

large.IMG_6574.jpeg.0846e51d4790082cab24

  • Haha 2
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.