Jump to content

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6788.jpeg.c153b3b3ac45dab3fe62

இந்த நிவாரணம் வழங்கும் செய்தியை எப்படி எடுப்பது என்றே தெரியவில்லை. அழுது தவிக்கும் குடும்ப உறுப்பினர்ளை,  சிறு பிள்ளைகள் உட்பட, பார்க்கும் போது, மனம் பரிதாப்படுகின்றது. ஆனால், பொங்கி வரும் உணர்வுகளை ஒதுக்கி விட்டு, நிதானமாக யோசித்தால், இதில் ஒரு பெரும் தவறு நடந்து கொண்டிருப்பதும் தெரிகின்றது.

அடிக்கடி நிகழும் பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் இறப்பவர்களுக்கே அரசு இந்த அளவு நிவாரணங்கள் வழங்குவதில்லை. ஒரு இலட்சம் கொடுத்தாலே அது பெரிய விசயம். குடித்து அழிந்து கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இப்படி கொடுக்க வேண்டும் என்பதும், இது என்ன முன்னுதாரணம் என்பதும் சரியான கேள்வியே.

எவருமே அவர்கள் கள்ளச்சாராயம் (என்று நினைத்து விஷச்சாராயம்) குடிப்பதை ஒரு தவிர்க்க வேண்டிய செயலாக சொல்லவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உட்பட. மருந்தென்று நினைத்து மாறிக் குடித்து விட்டார்கள், உடம்பு நோவுக்கு குடிப்பார்கள் என்பது போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. இவை ஒரு விதமான நியாயப்படுத்தல் போன்றே இருக்கின்றன.

இங்கிருக்கும் இரண்டு உண்மைகளில் முதலாவது: இவை, கள்ளச்சாரயமோ அல்லது விஷச்சாராயமோ அல்லது பொறுப்பற்ற எந்த வகை குடியுமே, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது.

இரண்டாவது உண்மை: இந்த கள்ளச்சாராய தொழிலுக்கு இருக்கும் அரசின் ஆதரவும், நடவடிக்கைகளும். தினமும் அங்கிருக்கும் மலையடிவாரத்தில் காய்ச்சிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள். இந்த வியாபாரிகள் கொடுக்கும் மாமூலை வாங்கிக் கொண்டு அரச நிர்வாகமும், காவல்துறையும் எதையும் கண்டும் காணாமலும் இருந்திருக்கின்றனர்.

ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் 60 ரூபா என்றும், அதற்கு இணையானது டாஸ்மாக்கில் 250 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்றும் குடிப்பவர்கள் சொல்லியிருக்கின்றனர்....... ஆகவே அரசின் டாஸ்மாக் தொழிலும் ஒரு காரணம் ஆகின்றது.

செந்தில் பாலாஜியை வெளியே வர முடியாதபடி உள்ளேயே பாஜக அரசு அடைத்து வைத்திருப்பதற்கு பிரதான காரணம் டாஸ்மாக் மூலம் இவர் புரட்டிக் கொடுக்கும் பெரும் தொகையான பணத்தை தடுப்பதற்காகவே என்று ஒரு செய்தியில் இருந்தது. அந்தப் பணம் இல்லாவிட்டால் திமுக தேர்தல் செலவிற்கு திக்குமுக்காடும் என்று பாஜக கணக்குப் போட்டிருந்தது.

டாஸ்மாக் வருமானம் இல்லாவிட்டால், தமிழ்நாடே இயங்காது போலிருக்குதே....... என்ன ஒரு இழிநிலை... அந்தக் குற்ற உணர்வில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் 10 இலட்சம், 5 இலட்சம் என்று ஆளுக்கு ஆள் கொடுக்கின்றார்களா.......

கடந்த வருடத்தை விட இந்த வருடம் டாஸ்மாக் வருமானம் 1734 கோடி ரூபாய்கள் அதிகரித்திருக்கின்றது.... இந்த வருட மொத்த வருமானம் 45, 855 கோடி ரூபாய்கள்.........!!

spacer.png     

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரசோதரன் said:

உடம்பு நோவுக்கு குடிப்பார்கள் என்பது போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. இவை ஒரு விதமான நியாயப்படுத்தல் போன்றே இருக்கின்றன.

இது ஒரு சகிக்க முடியாத பொய். குடிப்பதை தூண்டிவிடும் பொய்.

48 minutes ago, ரசோதரன் said:

இங்கிருக்கும் இரண்டு உண்மைகளில் முதலாவது: இவை, கள்ளச்சாரயமோ அல்லது விஷச்சாராயமோ அல்லது பொறுப்பற்ற எந்த வகை குடியுமே, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது.

முழு உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியிலேயே கள்ளச்சாராய 'நெட்வொர்க்' செயல்பட்டது எப்படி?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 21 ஜூன் 2024
    புதுப்பிக்கப்பட்டது 22 ஜூன் 2024

கள்ளக்குறிச்சியில் 50 பேரைப் பலிவாங்கிய கள்ளச்சாராய விற்பனை அங்கே பகிரங்கமாக நடந்தது எப்படி? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு?

கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் கள்ளச்சாராயத்தைக் குடித்து 50 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிரவைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதற்கு முன்பாகவும் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்திருக்கின்றன என்றாலும், நகரின் மையப் பகுதியில் மாவட்ட நீதிமன்றம், காவல் நிலையத்திற்குப் பின்புறத்தில் இருக்கும் பகுதியிலேயே வெளிப்படையாகக் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதும் அதைக் குடித்து இத்தனை பேர் பலியாகியிருப்பதும்தான் இவ்வளவு பெரிய அதிர்ச்சிக்குக் காரணம்.

கள்ளக்குறிச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது மாவட்ட நீதிமன்ற வளாகம். அதற்கு அருகிலேயே கள்ளக்குறிச்சி நகரக் காவல் நிலையமும் அமைந்திருக்கிறது. இதற்குப் பின்னால் உள்ள பகுதிகளில் ஜோகியர் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களும் வசித்துவருகின்றனர். அங்கே கள்ளச்சாராய விற்பனை தடையின்றி இருந்து வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு சார்ந்த தொழிலாளர்கள். காய்கறிச் சந்தையில் மூட்டை தூக்குவது, கொத்தனார், பெயின்டர் போன்ற வேலைகளைச் செய்துவருகின்றனர். இந்தப் பகுதியில் குடிப்பழக்கம் மிகப்பரவலாக இருந்து வந்திருக்கிறது.

இந்தப் பணியாளர்கள் ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.300 ரூபாய் வரையிலேயே சம்பாதிக்கிறார்கள். அரசின் மதுபான விற்பனை நிலையமான டாஸ்மாக் மதுபானக் கடைகளில், குறைந்தபட்ச விலையே ரூ.150 ரூபாயை நெருங்கிவிட்ட நிலையில், இவர்களுக்கான ஒரு தேர்வு ரூ.40 - ரூ.50 ரூபாய்க்கு விற்கப்படும் கள்ளச்சாராயமாகத்தான் இருக்கிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

கள்ளச்சாராய ‘நெட்வொர்க்’

தற்போது, பெரிய அளவில் மரணங்கள் நேர்ந்திருக்கும் கருணாபுரத்தைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவரும்தான் இந்தப் பகுதிக்கான சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்தனர்.

இங்கிருக்கும் தொழிலாளர்கள் எல்லா நேரங்களிலும் வேலைக்குச் செல்வார்கள் என்பதால், இந்தக் கள்ளச்சாராய விற்பனை 24 மணி நேரமும் நடந்துவந்திருக்கிறது.

இவ்வளவு மரணங்கள் நடந்த பிறகும் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள்கூட, யார் அந்தப் பகுதியில் சாராயம் விற்றது, யாராருக்கெல்லாம் தொடர்பு என்பது குறித்து ஊடகங்களிடம் பேசுவதற்கு மறுக்கிறார்கள்.

தன் மனைவியுடன் சாராயம் குடித்து இறந்துபோன சுரேஷின் தங்கை மட்டும், கன்னுக்குட்டியின் பேரைச் சொன்னார். "இந்தப் பகுதியில் சாராயம் விற்பது கண்னுக்குட்டி அண்ணன்தான். அவரும் அவருடைய தம்பியும்தான் சாராயம் விற்றார்கள். காவல்துறைக்குச் சொன்னால், அவர்கள் ரெய்டு வரும் நேரத்தில் இருக்க மாட்டார்கள். இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது இங்கே," என்று சொன்னார்.

சாராயம் விற்றுவந்த கன்னுக்குட்டியின் குடிசை அருகே வசிப்பவர்கள் வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். "இந்தப் பகுதியில் இரண்டு மூன்று இடங்களில் சாராயம் விற்கப்படுகிறது. அதில் பிரதானமாக இங்கேதான் விற்பார்கள். கன்னுக்குட்டியும் அவரது சகோதரர் தாமோதரனும் கொரோனா காலகட்டத்திலிருந்து இங்கே சாராயம் விற்கிறார்கள். இவர்கள் மீதிருக்கும் அச்சத்தால் யாரும் காவல்துறையிடம் இதுபற்றித் தெரிவிப்பதில்லை. அதுபோல புகார் தெரிவித்த ஒன்றிரண்டு தருணங்களிலும், அக்கம்பக்கத்தினரை மிரட்டுவதுபோலப் பேசுவார்கள். அதனால், இவர்களிடம் யாரும் எதுவும் வைத்துக்கொள்வதில்லை," என்கிறார் அவர்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒருவர்.

கன்னுக்குட்டி - தாமோதரன் சகோதரர்களுக்கு, சின்னதுரை என்பவர்தான் சாராயத்தை விற்பனைக்குக் கொடுத்துவந்தது தெரிந்ததும் அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் ஜோசப் என்பவரது பெயரைச் சொல்ல, அவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் மாதேஷ் என்பவரிடமிருந்துதான் சாராயம் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாதஷிடம் நடக்கும் விசாரணையின் முடிவிலேயே, எங்கே தயாரிக்கப்பட்டது, எந்த இடத்தில் மெத்தனால் கலக்கப்பட்டது என்பதெல்லாம் தெளிவாகும், என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,சுகுணாபுரத்தில் கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடம்

தொடர்ந்து நடந்துவந்த விற்பனை

இந்தப் பகுதிக்கான மதுவிலக்குக் காவல் பிரிவு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது. இருந்தபோதும் இவ்வளவு பெரிய அளவிலான விற்பனையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல, இத்தனை ஆண்டுகளாக சாராயம் விற்றுவந்தவர்கள் திடீரென அதில் மெத்தனாலைக் கலந்தது ஏன் என்பது தெளிவாகவில்லை. இதில் கலக்கப்பட்ட மெத்தனால், புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தெரிவத்திருக்கிறார். புதுச்சேரியின் எந்தத் தொழிற்சாலையிலிருந்து, யார் மூலமாக இவர்களுக்கு வந்தது என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தப் பகுதியில் கோவிந்தராஜன் மட்டுமல்ல, வேறு சிலரும் சாராயம் விற்றுவந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், மரணங்களை ஏற்படுத்திய சாராயத்தை விற்றது கோவிந்தராஜன் தரப்புதான் என்பதால், மற்றவர்கள் குறித்தே யாரும் பேசவில்லை. இந்த மரணங்கள் பரபரப்பாகும்வரை இந்தப் பகுதியில் விற்பனை தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது. விவகாரம் ஊடகங்களில் பெரிதாகவும்தான் சாராயம் விற்றவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

 
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
படக்குறிப்பு,கள்ளச்சாராய வியாபாரம் நடந்துவந்த இடத்திலிருந்து 3கி.மீ. தூரத்தில் இருக்கும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு

தமிழகத்தில் மெத்தனால் எங்கு தயாரிக்கப் படுகிறது?

இதற்கு முன்பாக கடந்த ஆண்டு மே மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில் இதேபோல மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தி குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்வத்தில் சாராயம் விற்றவர்களைப் பிடித்து விசாரித்ததில், இதில் கலக்கப்பட்ட மெத்தனால், சென்னை வானகரத்திலிருந்து செயல்பட்ட ஜெயசக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்திலிருந்து விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இப்போது நடந்திருப்பதைப் போலவே அப்போதும் மரக்காணம் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவு, மேல் மருவத்தூர், மதுராந்தகம் காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறை, மதுவிலக்குப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி வரை இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

"இந்தப் பகுதியில் சாராயம் விற்பது அரசியல்வாதிகள், காவல்துறையினர் என எல்லோருக்கும் தெரிந்துதான் நடக்கிறது. இதுபோல விபரீதம் நடந்ததும் எல்லோரும் இது குறித்துப் பேசுகிறார்கள். இதற்கு ஒரு நீண்ட காலத் தீர்வு தேவை," என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யான காமராஜ்.

இந்த விவகாரத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளை மூடச் சொல்வதற்கான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன. ஆனால், அரசின் மதுபானக் கடைகளுக்கு வெளியில் மிகப்பெரிய அளவில் சாராய விற்பனையும் நடந்துகொண்டிருக்கிறது.

மரக்காணம், கள்ளக்குறிச்சி என கள்ளச்சாராய மரணங்கள் தொடரும் நிலையில் இந்தச் சிக்கலான பிரச்னையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தமாக 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலான கள்ளச்சாராய சாவுகளுக்கு, அவற்றில் மெத்தனால் கலக்கப்படுவதே காரணமாக இருப்பதால் கடந்த 2002-ஆம் ஆண்டு மெத்தனாலின் பயன்பாடு, தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் (1937)-இன் கீழ் கொண்டு வரப்பட்டது. மெத்தனால் விநியோகத்தைக் கட்டுப்படுத்த, 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு டீ நேச்சர்ட் ஸ்பிரிட், மெத்தில் ஆல்கஹால் மற்றும் வார்னிஷ் விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இருந்தபோதும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இந்த அபாயகரமான வேதிப்பொருள் ஏதோ வழியில் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

அரசின் டாஸ்மார்க்கை மக்கள் நாடுவதற்காக திட்டமிட்ட செயலோ இது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2024 at 17:04, ரசோதரன் said:

அதிமுக ஆட்சியில் பதுங்கி இருக்கும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் திமுக ஆட்சியில் வெளியில் வந்து அராஜகம் செய்வது காலம் காலமாகவே தொடருவது. ஸ்டாலின் இந்த விசயத்தில் உசாராக இருந்து ஒரு மாற்றத்தை ஏறபடுத்துவார் என்று பார்த்தால், அவரும் அதே பழைய குதிரையில் ஏறி சறுக்கி விழுந்து கொண்டிருக்கின்றார்.

எல்லோர் மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த விஷச் சாராய மரணங்களாவது, அரசினதும், அரச நிர்வாகத்தினதும் மற்றும் முழுச் சமூகத்தினதும் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்........😔.  

அவ‌ர் பெய‌ருக்கு தான் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்ற‌ம் ப‌டி த‌மிழ் நாட்டில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ள் அவ‌ருக்கு சுத்த‌மாய் தெரியாது

உள் க‌ட்சி பூச‌ல் அதிக‌ம் அதோட‌ முத‌ல‌மைச்ச‌ரே சொல்லி இருக்கிறார் த‌ன்னால் நின்ம‌தியாய் தூங்க‌ முடிய‌ வில்லை என்று.........................ஊட‌க‌ங்க‌ளை ச‌ந்திக்க‌ இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு ப‌ய‌ம் அவ‌ர்க‌ள் ஏதும் கேட்க்க‌ இவ‌ர் க‌ண்ட‌ மேனிக்கு உள‌றி கொட்டுவார்......................இன்னும் முன்னேற்ற‌ம் இல்லை துண்ட‌றிக்கை பார்த்து மேடையில் பேசுவ‌தில்......................

 

ந‌ல்ல‌ ம‌னுஷ‌ன் ஆனால் முத‌ல‌மைச்ச‌ர‌ சுற்றி இருப்ப‌வ‌ர்க‌ளால் திமுகா க‌ட்சிக்கு கெட்ட‌ பெய‌ர்......................

 

10ல‌ச்ச‌ம் கொடுப்ப‌தில் என‌க்கு கூட‌ உட‌ன் பாடு இல்லை

 

ம‌து இல்லா த‌மிழ‌க‌த்தை உருவாக்க‌னும்.....................பல‌ பெண்க‌ள் வித‌வையா வாழுகின‌ம்

 

த‌மிழ் நாட்டை எடுத்து கொண்டால் பெண்க‌ளை விட‌ ஆண்க‌ள் தான் அதிக‌ம்.......................பெரிய‌ வ‌ய‌தாகியும் ப‌ல‌ ஆண்க‌ள் திரும‌ண‌ம் செய்ய‌மாலே வாழுகின‌ம்..........................பெண் குழ‌ந்தை பிற‌ந்தால் க‌ள்ளி பால் கொடுத்து கொல்லுகிற‌வை...................அத‌ன் தாக்க‌ம் 1980க‌ளில் பிற‌ந்த‌ ஆண்க‌ளுக்கு பெண்க‌ள் இல்லை த‌மிழ் நாட்டில்.......................எங்க‌ட‌ த‌மிழீழ‌த்தில் ம‌க்க‌ள் என்னிக்கை நாளுக்க்கு நாள் குறைந்து கொண்டு வ‌ருது என்று நாம் க‌வ‌லைப் ப‌டுகிறோம் 

ஆனால் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் த‌மிழ் நாட்டில் பெண் பிள்ளைக‌ளை பெத்த‌ பெற்றோர்க‌ள் மிக‌ பெரிய‌ த‌வ‌றுக‌ளை இழைத்து விட்டின‌ம்..........................

 

  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களுக்கு தடை செய்யப்பட்ட மது சம்பந்தமான விழிப்புணர்வுகளை அரசியல் / சட்டங்கள் ரீதியாக  ஒர் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.

இயற்கையாக கிடைக்கும் கள்ளு போன்ற  மது பானங்களை அரசு ஊக்கிவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்; சென்னையில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கைது

Published By: RAJEEBAN   23 JUN, 2024 | 12:33 PM

image
 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி சிவகுமார் என்பவரை எம்ஜிஆர் நகரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்களை காவல்துறையினது தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை சிபிசிஐடி போலீசார் 9 பேரை கைது செய்து உள்ள நிலையில், நேற்று இரவு சென்னையில் அருகே உள்ள சிவகுமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விஷ சாராயம் அருந்தியதால் தற்போதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் முன்னதாகவே விஷ சாராயத்தை விற்பனை செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டாம் தரகராக மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை விசாரணை செய்ததில் மாதேஷ் என்பவர்தான் தங்களுக்கு மெத்தனால் விற்பனை செய்பவர்என்ற தகவலை தெரிவித்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மாதேஷிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கச்சிராப்பாளையத்தில் ராமர் என்பவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

இந்தவகையில், 55 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக விஷ சாராயத்திற்கு மெத்தனால்விற்பனை செய்பவர் செய்த முக்கிய குற்றவாளி சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சிவக்குமாரை நள்ளிரவில் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இவரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற தொடர் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தவகையில், இதுவரை 10 பேரை இந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/186760

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, வீரப் பையன்26 said:

ம‌து இல்லா த‌மிழ‌க‌த்தை உருவாக்க‌னும்...................

 அப்பன்! அது அது நடக்காத காரியம்.
மக்கள் தாமாக திருந்தணும். அதை விட சினிமாக்களிலும் ,தொலைக்காட்சி நாடகங்களிலும்  மதுவை வைத்து காட்சிப்படுத்துவதை தடை செய்யவேண்டும்.
கவலைக்கும் குடி...சந்தோசத்திற்கும் குடி என்ற காட்சிகளை தடை செய்ய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது இல்லாத ஒரு மாநிலத்தை உருவாக்குவது நடக்காத காரியம். வேண்டுமென்றால் மது இல்லாத இந்தியாவை உருவாக்கினால் அது சாத்தியமே. 

Link to comment
Share on other sites

22 minutes ago, island said:

மது இல்லாத ஒரு மாநிலத்தை உருவாக்குவது நடக்காத காரியம். வேண்டுமென்றால் மது இல்லாத இந்தியாவை உருவாக்கினால் அது சாத்தியமே. 

குஜராத்தில் குடிக்க முடியாதாம். குடிக்க விரும்புபவர்கள் அயல் மாநிலங்களில் குடித்து கும்மாளமடித்து விட்டு வர முடியுமாம்.(சட்டம் அல்ல) உல்லாச பயணிகளுக்கு கோட்டல்களில் குடிக்க அனுமதி உண்டு என குஜராத்தி நண்பர் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது பாவனை என்று பார்த்தால் இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளில் தாராள மதுபாவனை அனுமதிக்கப்பட்ட நாடுகளே அதிகம். அப்படியிருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் அடிக்கடி  விஷசாரய சாவுகள் நிகழ்வுகள் அதிசயமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மது இல்லாத ஒரு நாடும் உலகில் சாத்தியம் இல்லை. தமிழக அரசியல் வாதிகளுக்கு தெரிந்தது மது இல்லாத ஒரு மாநிலம். நமது உறவும் அவர்களின் பேச்சை கேட்டு அப்படி நம்ப தொடங்கிவிட்டார். இந்த  கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிர் இழந்த நகரம் கள்ளக்குறிச்சி மிகவும் பின்தங்கியதாம்.வேலைவாய்ப்பு இல்லாமையும் வறுமை காரணம் கள்ளச்சாராயம் தாயரிக்கும் கொள்ளைகாரர்கள் தங்கள் தொழிலுக்கு மக்களை பயன்படுத்துகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

குஜராத்தில் குடிக்க முடியாதாம். குடிக்க விரும்புபவர்கள் அயல் மாநிலங்களில் குடித்து கும்மாளமடித்து விட்டு வர முடியுமாம்.(சட்டம் அல்ல) உல்லாச பயணிகளுக்கு கோட்டல்களில் குடிக்க அனுமதி உண்டு என குஜராத்தி நண்பர் கூறினார்.

குஜராத்தில் இப்படியான கள்ள சாராய மரணங்களும் அதிகம் உண்டு என்று கேள்விப்பட்டேன். 

https://en.m.wikipedia.org/wiki/2022_Gujarat_alcohol_poisoning

https://www.newindianexpress.com/amp/story/nation/2024/Jan/15/two-dead-several-hospitalized-after-consuming-alcohol-in-gujarat-cause-of-death-unclear

https://www.business-standard.com/amp/article/current-affairs/drugs-liquor-worth-over-rs-6-400-cr-seized-in-gujarat-in-two-years-123031700836_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

குஜராத்தில் இப்படியான கள்ள சாராய மரணங்களும் அதிகம் உண்டு என்று கேள்விப்பட்டேன். 

மது தடை உள்ள இடங்களில் கள்ள சாராயம் பெருக்கம் தாராளமாக நடைபெறும்.
தமிழ்நாட்டில் நடந்தது தான் அதிசயம் மதுவுக்கு அங்கே தடை இல்லை. அப்படி இருக்க கள்ள சாராயம் .

மதுவின் மீதான மோகம் தமிழ்நாட்டில் மிக அதிகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

449004629_485118400708648_66396068370091

 

 

449014982_484450697442085_84689370212102

 

449012966_484616880758800_31692244890854

 

448655727_1114162072982416_8378065967751

அது விஷம் என்று  விற்கிறவனுக்கு தெரியும்.
25 வருசமாக பொலிஸ்  பிடிக்காததும் அதிசயம்தான். 
வெள்ளி விழா கொண்டாட வேண்டியதுதான். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

448999186_484160734137748_57039942183469

 

448536977_1000793428222172_8127462452884

"சாக்லேட் பிளேவரில்"  கள்ளச்  சாராயம் காய்ச்சுவது எப்படி? 
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி கள்ளக்குறிச்சி. 😂 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

மதுவின் மீதான மோகம் தமிழ்நாட்டில் மிக அதிகம்

அங்க மட்டுமா அண்ணை?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

449086194_3179961702134007_7310140782777

குடிச்சிட்டு பாட்டில திரும்ப கொடுத்தா 10 ரூபா!
குடிச்சிட்டு உங்க பாடியவே கொடுத்தா பத்து லட்ச ரூபா!!

Anish J P

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kallakurichi: ‘Hospital-ல என் கண்ணு முன்னாடியே..’ கள்ளச்சாராயம் அருந்தி பிழைத்தவர்கள் கூறியது என்ன?

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில், 5 பேர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து, மீண்டு வந்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு நேரடியாகச் சென்று பேசினோம். கள்ளச்சாராயம் குடித்து, சிகிச்சையின் மூலம் மீண்ட அவர்கள் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்  கள்ளுக்கடையை திறக்க அரசு தயங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அண்ணா என்ன குடிக்கிறவர்? கேரளாவில இருந்து கொண்டந்த கள்ளா இல்லாட்டி பாறின் இம்போர்ட்டட் சரக்கா?👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448824109_484705997416555_14864408996914

 

448812648_484577060762782_36484018222186

 

449013274_484576847429470_51266445736532

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/6/2024 at 17:07, ஏராளன் said:

அங்க மட்டுமா அண்ணை?!

ம்....தமிழ் நாடு போன்று கள்ள சாராயம் குடித்து  இலங்கையில் மக்கள் இறந்து நான் கேள்விபடவில்லை.
இன்னொன்று கவனித்தீர்களா தமிழ்நாட்டில் மது அருந்தாமல் இருப்பது என்று ஒன்று அவர்களுக்கு தெரியாது. அங்கே உள்ள அரசியல்வாதிகள் தொடங்கி மக்கள் வரை மது அருந்தாமல் இருப்பது என்றால் மதுவிலக்கு வேண்டும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துக. இலங்கையில் தமிழ் அரசியல்வாதிள் சிங்கல அரசியல்வாதிகள் மக்கள் யாருமே மதுவிலக்கு பற்றி பேசுவதே இல்லை. மேற்குலக நாடுகள் போன்று

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள் ஒரு சக மனிதனாக மட்டும்
    • துரோகி பட்டம் வீட்டு அலுமாரி  நிறைய அடுக்கி வைத்திருக்கின்றார்கள் எடுத்து தாராளமாக வழங்குவார்கள்.
    • கட்டுரையாளரை கேட்கிறேன் இதனை எழுதும் போது உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா . இறந்தபிறகு ஒருவரை பற்றி இப்படியா துதி பாடுவது . அவரது ஆத்மா குழம்ப போகின்றது , அப்படி என்னத்த தான் செய்து இவங்கள் புளுகுகின்றார்கள் என . 
    • சிரமம் பாராமல் கருத்தோவியங்கள் பகிரும் சிறியருக்கு நன்றி....... நாட்டின் நடக்கும் பலப்பல செய்திகளை ஒரு படம் சொல்லிவிட்டுப் போகிறது........தொடருங்கள்.........!  👍
    • பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 08:34 AM   பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தீவிரஇடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான்; அனைத்துபிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187350
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.