Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு

21 JUN, 2024 | 03:59 PM
image
 
இன்று (21) வெள்ளிக்கிழமை 10 ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில், 10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் 10 நாட்கள் யோகா  “மஹோத்சவ்” நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

இலங்கையின் சுற்றுலா அமைச்சுடன்  இணைந்து இந்திய உயர்ஸ்தானிகராலயம்  இந்த யோகா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யோகா நிகழ்வானது இலங்கையின் சுற்றுலாத் தலங்களான  கண்டி ஏரி, யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி கோவில் நுழைவாயில், குருணாகல், யாழ்ப்பாணத்திலுள்ள மந்திரி மனை, பத்தேகமவிலுள்ள கிறிஸ்ட் சர்ச் பெண்கள் பாடசாலை, பொரள்ளை தேசிய ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, வெல்லவாய தேசிய இளைஞர் படையணி நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்வு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பிழம்பு said:

யோகா நிகழ்வானது இலங்கையின் சுற்றுலாத் தலங்களான  கண்டி ஏரி, யாழ்ப்பாணம் நல்லூர் கந்த சுவாமி கோவில் நுழைவாயில், குருணாகல், யாழ்ப்பாணத்திலுள்ள மந்திரி மனை, பத்தேகமவிலுள்ள கிறிஸ்ட் சர்ச் பெண்கள் பாடசாலை, பொரள்ளை தேசிய ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, வெல்லவாய தேசிய இளைஞர் படையணி நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்த யோகா நிகழ்வில்… முஸ்லீம்களை ஏன் சேர்த்துக் கொள்வதில்லை.
இது முஸ்லீம்களுக்கு செய்யும் அநீதியான செயல்பாடாக… இந்திய, இலங்கை அரசுகள் கடைப்பிடிக்கின்றன போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

இந்த யோகா நிகழ்வில்… முஸ்லீம்களை ஏன் சேர்த்துக் கொள்வதில்லை.
இது முஸ்லீம்களுக்கு செய்யும் அநீதியான செயல்பாடாக… இந்திய, இலங்கை அரசுகள் கடைப்பிடிக்கின்றன போலுள்ளது.

யோகா அவர்களது மார்க்கத்திற்கு எதிரானது, ஆதலால் அது அவர்களிடையே தடைசெய்யப்பட்ட ஒன்று என்று சொல்லக்  கேள்விப்பட்டிருக்கின்றேன்...........

21 minutes ago, தமிழ் சிறி said:

இந்த யோகா நிகழ்வில்… முஸ்லீம்களை ஏன் சேர்த்துக் கொள்வதில்லை.
இது முஸ்லீம்களுக்கு செய்யும் அநீதியான செயல்பாடாக… இந்திய, இலங்கை அரசுகள் கடைப்பிடிக்கின்றன போலுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் யோகாவை இன்னும் ஹராம் என நினைத்துக் கொண்டு இருப்பவர்கள். சவூதி கூட யோகா வகுப்புகள் மீதான தடையை எடுத்த பின்னும் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அதை ஹராம் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

சவூதி, எகிப்து ஆகியன யோகா மீதான தடையை எடுத்ததுடன், அதை ஊக்குவிக்கவும் செய்கின்றன.

இலங்கை சோனகர்கள் ஒரு புதினமான இனத்தினர்!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ரசோதரன் said:

யோகா அவர்களது மார்க்கத்திற்கு எதிரானது, ஆதலால் அது அவர்களிடையே தடைசெய்யப்பட்ட ஒன்று என்று சொல்லக்  கேள்விப்பட்டிருக்கின்றேன்...........

21 minutes ago, நிழலி said:

இலங்கை முஸ்லிம்கள் யோகாவை இன்னும் ஹராம் என நினைத்துக் கொண்டு இருப்பவர்கள். சவூதி கூட யோகா வகுப்புகள் மீதான தடையை எடுத்த பின்னும் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அதை ஹராம் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

சவூதி, எகிப்து ஆகியன யோகா மீதான தடையை எடுத்ததுடன், அதை ஊக்குவிக்கவும் செய்கின்றன.

இலங்கை சோனகர்கள் ஒரு புதினமான இனத்தினர்!

உடலுக்கு ஆரோக்கியமான பயிற்சியிலும்… மதம் குறுக்கிடுவது வினோதமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

உடலுக்கு ஆரோக்கியமான பயிற்சியிலும்… மதம் குறுக்கிடுவது வினோதமாக உள்ளது.

யோக நிலை என்பது இறைவனுடன் ஒன்றாதல், உருவ வழிப்பாட்டின் சில சாயல்கள், இறைவனையே பிரதி எடுத்தல்........இப்படி பல காரணங்களைச் சொல்லி, இவை அவர்களின் இறைவன் சொல்லியவற்றுக்கு எதிரானவை என்று அவர்கள் யோகாசனத்தை நிராகரிக்கின்றனர்.

400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் 60 மீட்டர் இடைவெளியில் கடைசியாக வருபவர்களும் இருக்கின்றனர்..... பார்த்தும் இருப்போம்.......... ஆறுதலாக வந்து சேரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

---- ஆறுதலாக வந்து சேரட்டும்.

அங்கை வந்தாலும்.... ஆயிரம் சட்டங்கள் கதைத்துக் கொண்டு இருப்பது அவர்கள் குணம்.
வேலியிலை போற ஓணானை, பிடித்து வேட்டிக்குள் விட்டுட்டு...
குத்துது, குடையுது என்ற நிலையும் ஏற்படக் கூடாது அல்லவா. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அங்கை வந்தாலும்.... ஆயிரம் சட்டங்கள் கதைத்துக் கொண்டு இருப்பது அவர்கள் குணம்.
வேலியிலை போற ஓணானை, பிடித்து வேட்டிக்குள் விட்டுட்டு...
குத்துது, குடையுது என்ற நிலையும் ஏற்படக் கூடாது அல்லவா. 😂 🤣

நீங்கள் சொல்வதும் சரி.

இந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணியினருக்கு, இந்தியாவுடனான போட்டியின் முதல் நாள், ஹலால் உணவு கிடைக்கவில்லை என்று ஆப்கான் வீரர்களே சமைத்ததாக செய்திகளில் இருந்தது. அதனால் அவர்களால் போட்டிக்கு சரியாக தயாராக முடியவில்லையாம்..........😶.......... இனி ஒரு சமையல்காரரையும் கூட்டிக் கொண்டே போக வேண்டியது தான்.........

இது இந்தியாவின் கைப்பாவை என்று சொல்லப்படும் ஐசிசியின் சதியாக இருக்குமோ........🤣.

நேற்று நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கண் வைத்தியர் ஒருவர் கண்களுக்கான யோகசனப் பயிற்சியைச் செய்து காட்டினார்.

நமது கண்கள் இயற்கைக்கு மாறாகக் கண்சிமிட்ட்டுவது குறைந்து வருகிறது. பகலில் வேலையில் கணணித் திரை, பிரயாண நேரத்திலும் ஓய்வு வேளையிலும் கைத்தொலைபேசித் திரை, வீட்டுக்கு வந்தால் தொடர்படங்கள் பார்க்க தொலைக்காட்சித் திரை என்று எங்கும் எப்போது திரைகள். திரைகளை நோக்கி எமது கண்கள் அசைவின்றி வெறித்துப் பார்ப்பதினால் மூளையின் செயற்பாடும் குறையுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இந்த யோகா நிகழ்வில்… முஸ்லீம்களை ஏன் சேர்த்துக் கொள்வதில்லை.
இது முஸ்லீம்களுக்கு செய்யும் அநீதியான செயல்பாடாக… இந்திய, இலங்கை அரசுகள் கடைப்பிடிக்கின்றன போலுள்ளது.

உங்களின் குரல் எங்களின் ஜீயின் காதுகளில் விழுந்துவிட்டது..........ஜம்மு காஷ்மீரில் ஜீ சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா செய்தார்....

spacer.png 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

பார்த்தும் இருப்போம்.......... ஆறுதலாக வந்து சேரட்டும்.

அவர்கள் நீங்கள் எல்லாம் வந்து முஸ்லிம் மதத்தை தழுவி உலகத்தை அல்லாவின் சட்டம் ஆட்சி செய்யும் என்று பர்ர்த்து கொண்டிருக்கின்றார்கள்.

29 minutes ago, ரசோதரன் said:

.ஜம்மு காஷ்மீரில் ஜீ சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா செய்தார்....

அவருடன் பயிற்ச்சி செய்வது நவீன முஸ்லிம்கள். இந்திய,  இலங்கை முஸ்லிம்கள் மொழியில்   அவர்கள்  துரோகிகள்,   காபிர்களின் அடிவருடிகள்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மோடி ஜீயின் , இஸ்லாமியரின் சத்தம் சந்தடிக்கப்பால், யோகாசனம் மிகச் சிறந்த உடல் தளர்த்தி (relaxant). 30 வருடங்களுக்கு முன்னர் நல்லூருக்கு அருகில் இருந்த ஒரு மண்டபத்தில் வசித்த யோகேந்திர சரஸ்வதி சுவாமியிடம் கற்றேன். இன்னும் muscle memory இருக்கிறது. வெளியே ஓட்டம் செய்ய முடியாத நாட்களில், அல்லது ஓட்டம் கூடி கை, கால்கள் இறுகியமாதிரி உணர்ந்தால், யோகா செய்தால் அப்படியே ஒரு தளர்வான உணர்வு வந்து விடும். இதன் விஞ்ஞான அடிப்படை, தசைகளை யோகாசனம் மூலம்  மெதுவாக நீட்டிக்கும் போது, தசைகள் தளர்வாகும். மாலையில் யோகாசனம் செய்த பின்னர், அடுத்த நாள் காலையில் தெருவோட்டம் போனால், அரை மைல் தூரம் அதிகம் ஓடலாம். மூச்சு உள்ளெடுத்தல், வெளி விடுதல் பயிற்சிக்காக ஒரு பயிற்சியாளரிடம் கற்ற பின்னர் நீங்களாகவே செய்வது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

உங்களின் குரல் எங்களின் ஜீயின் காதுகளில் விழுந்துவிட்டது..........ஜம்மு காஷ்மீரில் ஜீ சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா செய்தார்.... 

448803672_868184302013210_73104720450632

இந்திய வெளிவிவகார அமைச்சர்  ஜெய்சங்கரும்,  ஜனாதிபதி ரணிலும்...
கொழும்பில் யோகா செய்தபோது..... கண்ட காட்சி. 😂
இந்தியா... எள் என்றால்,  வெ(எ)ண்ணையாக நிற்போமில்ல.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

448803672_868184302013210_73104720450632

இந்திய வெளிவிவகார அமைச்சர்  ஜெய்சங்கரும்,  ஜனாதிபதி ரணிலும்...
கொழும்பில் யோகா செய்தபோது..... கண்ட காட்சி. 😂
இந்தியா... எள் என்றால்,  வெ(எ)ண்ணையாக நிற்போமில்ல.  🤣

🤣.....

எங்க நம்ம தமிழ் கட்சிகளின் பிரமுகர்களை யோகாவில் காணவில்லையே என்று தேடினால்...........

மகாபாரதத்தில் பீமன் ஒரு ஆசனம் செய்வார். பெயர் மறந்துவிட்டது. ஆற்றுக்குள் ஒரு கூடு கட்டி, அப்படியே நீருக்குள் மூச்சை பிடித்துக் கொண்டு இந்த யோகாவைச் செய்தாராம். நம்மவர்களை ஜெய்சங்கர் அந்த பீமாசனத்தை செய்யும் படி இரணமடுவிற்குள் தள்ளி விட்டு ஓடி வந்திட்டாராம்.........

தமிழ் கட்சிகளின் ஜெய்சங்கருடனான சந்திப்பில், ஜெய்சங்கர் நடுவில் சும்மா இருக்க, இவர்கள் பொது வேட்பாளர் விவகாரத்தில் வாக்குவாதப்பட்டார்கள் என்கின்றது செய்தி.......... ஜெய்சங்கருக்கு தமிழ் வேற தெரியும்.........🫣

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரசோதரன் said:

22-62b1f697cf82b.webp

22-62b1f6980e0d0.webp

2022´ம் ஆண்டு இந்திய உயர்ஸ்தானிகராலயம்  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்திய யோகா தினத்தில் ரணிலுடன், சுமந்திரனும்  கலந்து கொண்டவர்கள். இந்த வருசமும் கலந்து கொண்டவரா என்று தெரியவில்லை. எதற்கும் இன்னும் இரண்டு மூன்று நாள் பொறுக்க படத்துடன் செய்திகள் வரும்.

நம்முடைய ஆட்கள் எங்கு வாக்குவாதப் படுவது என்ற விவஸ்தையே இல்லை.
அதுசரி... எல்லாப் பிரச்சினைகளையும் பின்னுக்கு நின்று இயக்குவது இந்தியா தானே... அங்கை சண்டை பிடித்ததும் பரவாயில்லைப் போலுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, இணையவன் said:

நேற்று நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கண் வைத்தியர் ஒருவர் கண்களுக்கான யோகசனப் பயிற்சியைச் செய்து காட்டினார்.

நமது கண்கள் இயற்கைக்கு மாறாகக் கண்சிமிட்ட்டுவது குறைந்து வருகிறது. பகலில் வேலையில் கணணித் திரை, பிரயாண நேரத்திலும் ஓய்வு வேளையிலும் கைத்தொலைபேசித் திரை, வீட்டுக்கு வந்தால் தொடர்படங்கள் பார்க்க தொலைக்காட்சித் திரை என்று எங்கும் எப்போது திரைகள். திரைகளை நோக்கி எமது கண்கள் அசைவின்றி வெறித்துப் பார்ப்பதினால் மூளையின் செயற்பாடும் குறையுமாம்.

அதை எங்களுக்கும் ஒருக்கால் செய்து காட்டுறது? 

  • கருத்துக்கள உறவுகள்

449053210_868488875316086_38358005773857

  • கருத்துக்கள உறவுகள்

448891682_869508598547447_61885065250548

  • கருத்துக்கள உறவுகள்

449040843_1050208366461831_7772321217416

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.