Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

திருகோணமலையில் ஏற்கனவே இருந்த பாஉ ஆக இருந்த நேமிநாதன் எந்தவித செயற்பாடும் இல்லாதவர்... அதுபோலவே சம்பந்தனும் செயல் திறன் அற்ற மனிதர்... தான் ஆளுமையில் இருக்கும்போதே இன்னொரு தலைவரை திருகோணமலைக்கு அடையாளம் காட்டி தூக்கி விட்டிருக்கவேண்டும்.. 70 வருடங்களாக அசையாமல் இருக்கும் தலைவர்கள் சொல்வது மட்டுமே சரி என்ற சிந்தனை மட்டுமே இப்போது வரை தொடர்கிறது மாற்று சிந்தனைகள் இல்லாமே போய்விடுகிறது , புதிய இளம் தலைவர்கள் உருவாகாமலே போய்விட்டது ஆயுத போராட்டத்திலும் ஐனநாயக போராட்டத்தலும் இடம்பெற்ற மிகப்பெரிய பிழை...இதை அடுத்த தலைமுறை தலைவர்களாவது சரிசெய்ய வேண்டும்... 

போராட்ட காலத்திலும் ...... விடுதலைப்புலிகள் சம்பந்தனுக்கு தகுந்த மரியாதை கொடுத்தே வைத்திருந்தனர்.

  • Replies 328
  • Views 28.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

  • நிழலி
    நிழலி

    சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தனின் ஆரம்ப அரசியல் தொடக்கம் இன்றைய அரசியல் போக்கு  பற்றியும் எனது சந்ததிகளுக்கு மட்டுமே அனைத்தும் தெளிவாக தெரியும்.

இங்கே சாட்சிகள் இல்லாத இராவணன் வரலாறோ அல்லது சோழர் வரலாறோ பேசப்படவில்லை. கண் முன்னே நடந்த சம்பந்தனின் சோரம் போன அரசியல் பற்றியே பேசுகின்றோம்.

என்னைப்பொறுத்த வரைக்கும் சம்பந்தன் ஈழத்தமிழர் பிரச்சனையை பகடைக்காயாக வைத்து தன் அரசியல் வாழக்கையை தக்கவைத்து கொண்டாரே தவிர வேறேதும் இல்லை.

பேச்சு வன்மை குறைந்தும்  சாகும் தறுவாயில் தன் தலைமைப்பதவியை விட்டுக்கொடுத்ததும் சாகும் வரைக்கும் திருமலை பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததும் ஒரு வித சுயநல/துரோக அரசியல் தான்.

 

மக்கள் ஏன் அவருக்கு பல தடவைகள் வாக்களித்து வெற்றியடைய வைத்தார்கள்? அவர் சுயநலமானவர் என உங்களைப்போல் அவர்களால் இனம்காண முடியாமல் போய்விட்டதா?

எங்கள் சமூகம் சுயநலம் பாராமல் இயங்குகின்றது என்பதை நான் நம்பிவிட்டேன். எங்கள் சமூகத்தில் உள்ள பல்வேறு துறைசார் நிபுணர்கள் சுயநலம் பாராமல் சமூக முன்னேற்றத்தை மட்டும் முன்னிருத்தி சேவை ஆற்றுகின்றார்கள் எனவும் நான் ஊகிக்கின்றேன். 

எங்கள் சமூகத்தில் இல்லாத ஒன்றை சம்மந்தர் மூலம் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

தன்னை காப்பாற்ற முடியாதவன் சமூகத்தை காப்பாற்ற முடியுமா?

என்னைப்பொறுத்தவரை சம்பந்தர் ஐயா தலையில் வைத்து கொண்டாடப்படவேண்டிய ஒரு அரசியல்வாதி இல்லை.  அதேசமயம் தூற்றப்படவேண்டிய ஒருவரும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு தாறம் என்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்.. பிரியாணியும் 1000 ஓவாயும் கோட்டரும் குடுக்கும் திமுகா அதிமுகா மாதிரி இனப்பிரச்சினை தீர்வை சொல்லியே பேய்க்காட்டி ஓட்டு வாங்குறாங்கள்.. மனநிலை குழம்பியவர்கள் போல் கேள்வி கேட்க வேண்டாம்... கடுப்பாகுது முடியல...

அதில் என்ன பிழை உண்டு??? முயற்சிகள் செய்தார்கள்,தோல்வி கண்டார்கள்.  .....தோல்விக்கு அவர்கள் காரணம் இல்லை,......பிரபாகரன் கூட முயற்சிகள் செய்தார் தோல்வி கண்டார்   தோல்விக்கு அவர் காரணமில்லை   🙏.   

குறிப்பு,..இது கருத்து களம்.  பலரும் பல கருத்துகள் எழுதுவார்கள்   பச்சை தண்ணீர் அருந்துங்கள்.  கடுப்பு வாராது 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

ஹிட்லருக்கு  உங்களால் வெளிப்படையாக அஞ்சலி செலுத்த முடியுமா?

இது தேவையற்ற அறிவற்ற. கேள்விகள்,......ஹிட்லர்.  உலகையே ஆட்டிப் படைத்தவர்   இரண்டாவது உலகப் போர் வரக் காரணம் ஆனவர்  சம்பந்தர்   திருகோணமலையில் தான் விரும்பியதை செய்ய முடியாதவர்  இரண்டுமே எப்படி ஒப்பிட முடியும்??  ஆறு தடவைகள் தமிழ் மக்கள்  பிழை விட்டுள்ளார்கள். ...அந்த தமிழ் மக்களை திருத்த முயற்சி செய்யுங்கள்   🙏🤣

49 minutes ago, பெருமாள் said:

அவர்கள் தானே தமிழருக்கு தீர்வு வாங்கி தருவம் என்று உங்க ஆட்கள் கோதாவில் உள்ளனர் அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்க .😁

இவர் மட்டுமல்ல  எல்லோரும் தீர்வு வேண்டித் தரமுடியும்.  என்று தான் சொன்னார்கள்   ஆனால்  இவரை மட்டுமே ஏன்   ஒரு தடவையல்ல ஆறு தடவைகள் தெரிவு செய்ய வேண்டும்????  

குறிப்பு,.....விவாதத்தை நல்ல முறையில் நடக்க ஒத்துழைப்பு தருங்கள் 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kandiah57 said:

இது தேவையற்ற அறிவற்ற. கேள்விகள்,.....

Quote

நல்லவன் கெட்டவன். துரோகி ......யார் இறந்தாலும் செலுத்துவது அஞ்சலி  அது தமிழரின் குணம் பண்பு  

தங்கள் கருத்திற்கு இடப்பட்ட கேள்விகளே தவிர வேறொன்றும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

சம்பந்தன் திருகோணமலையில் இன்னொரு புதிய அரசியல் பிரதிநிதித்துவம் வருவதற்குத் தடையாய் இருந்த ஒருவர்...பத்து வருசத்துக்கு முதலே செய்திருக்கவேண்டியது...தன் மூப்பு தெரிந்து கடந்த தேர்தலில் ஆவது சம்பந்தன் போட்டியிட்டிருக்ககூடாது...திருகோணமலையில் ஏற்கனவே இருந்த பாஉ ஆக இருந்த நேமிநாதன் எந்தவித செயற்பாடும் இல்லாதவர்... அதுபோலவே சம்பந்தனும் செயல் திறன் அற்ற மனிதர்... தான் ஆளுமையில் இருக்கும்போதே இன்னொரு தலைவரை திருகோணமலைக்கு அடையாளம் காட்டி தூக்கி விட்டிருக்கவேண்டும்.. 70 வருடங்களாக அசையாமல் இருக்கும் தலைவர்கள் சொல்வது மட்டுமே சரி என்ற சிந்தனை மட்டுமே இப்போது வரை தொடர்கிறது மாற்று சிந்தனைகள் இல்லாமே போய்விடுகிறது , புதிய இளம் தலைவர்கள் உருவாகாமலே போய்விட்டது ஆயுத போராட்டத்திலும் ஐனநாயக போராட்டத்தலும் இடம்பெற்ற மிகப்பெரிய பிழை...இதை அடுத்த தலைமுறை தலைவர்களாவது சரிசெய்ய வேண்டும்... 

ஆம் உண்மை தான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Kandiah57 said:

சம்பந்தர்   திருகோணமலையில் தான் விரும்பியதை செய்ய முடியாதவர்

அப்படியாகின் ஏன் சாகும் வரைக்கும் பதவி வகித்தார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தங்கள் கருத்திற்கு இடப்பட்ட கேள்விகளே தவிர வேறொன்றும் இல்லை. 

அது உங்கள் விருப்பம்  உங்கது சுதந்திரமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Kandiah57 said:

குறிப்பு,..இது கருத்து களம்.  பலரும் பல கருத்துகள் எழுதுவார்கள்   பச்சை தண்ணீர் அருந்துங்கள்.  கடுப்பு வாராது 🤣😂

அப்படியா!!!!?
பலே...பலே  👈🏽 💐

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அப்படியாகின் ஏன் சாகும் வரைக்கும் பதவி வகித்தார்?

சரியான கேள்வி,.....ஆனால் இந்த கேள்விக்குள். இன்னொரு கேள்வி ஒளித்து  ....மறைந்து உள்ளது அதுவும் நீங்கள் கேட்ட கேள்வி தான்   ....அதாவது தமிழ் மக்கள் சாகும்வரை இவரை ஏன் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் ???  உங்களை அறியாமல்,.தெரியாமல் கேட்டு விட்டிருக்கலாம்…  பதில் சொல்லுங்கள் 🙏🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kandiah57 said:

சரியான கேள்வி,.....ஆனால் இந்த கேள்விக்குள். இன்னொரு கேள்வி ஒளித்து  ....மறைந்து உள்ளது அதுவும் நீங்கள் கேட்ட கேள்வி தான்   ....அதாவது தமிழ் மக்கள் சாகும்வரை இவரை ஏன் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் ???  உங்களை அறியாமல்,.தெரியாமல் கேட்டு விட்டிருக்கலாம்…  பதில் சொல்லுங்கள் 🙏🤣

தனிநாடு எனும் தாரக மந்திரம்.ஈழ மக்கள் மனதில் ஊறிவிட்ட தாகம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

தனிநாடு எனும் தாரக மந்திரம்.ஈழ மக்கள் மனதில் ஊறிவிட்ட தாகம்.

உண்மை  சரியான பதில்   பதிலுக்கு நன்றிகள் பல.  🙏 மீண்டும் சந்திப்போம் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

பொறுப்பு கூறவேண்டியவர்கள் ஆயுதங்களுடன் மெளனித்துவிட்டார்கள். 

மூழ்கிய கப்பலுக்கு சம்பந்தரை கப்டனாக போட்டுவிட்டு கப்பலை சரியாக ஓட்டவில்லை என குறை கூறலாமா?

நேரடியான நேர்மையான நெத்தியடி பதில். 👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

செய்யவில்லை   முடியவில்லை ஆனால் தொடர்ந்து உழைந்தார். பலதடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் ரணில் எழும்பி வெளியில் போ என்ற போதும் கூட  இருந்து பேச்சுவார்த்தை நடத்தினார்   அரசாங்கம்கள்.  தரவில்லையென்றால் என்ன செய்ய முடியும்??? உங்களை பாராளுமன்றம் அனுப்பினால்   சிங்கள குடியோற்றத்தை   நிறுத்துவிர்களா?? எப்படி?? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?? 

இங்குதான் முக்கிய .   நான் என்ன எழுதுவது என்பதை உங்களால் கிரக்கிக்க முடியாது எனும் வன்மம் .

இங்கு புலிகளோ அல்லது சம்பந்தரே இனவாத சிங்களவரிடம் தீர்வு என்பது கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும் .

ஆனால் தமிழர் இனவழிப்பு அரசுகளை காப்பாற்றினார் அந்த .......... மகனுக்கு எப்படி மரியாதை அழிப்பது ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நியாயம் said:

மக்கள் ஏன் அவருக்கு பல தடவைகள் வாக்களித்து வெற்றியடைய வைத்தார்கள்? அவர் சுயநலமானவர் என உங்களைப்போல் அவர்களால் இனம்காண முடியாமல் போய்விட்டதா?

ஆசிய அரசியல் அறிவுகள் கொஞ்சம் வித்தியாசனமானவை.அதாவது இந்தியா மற்றும் அதனை சுற்றியிருக்கும் வால் நாடுகள். இவர்களிடம் உணர்ச்சி அரசியலை தவிர எதிர்கால சிந்தனை அரசியல் அறிவு அறவே இல்லை.  அந்த அறிவு இருப்பவர்கள் கூட காலக்கட்டாயத்தின் பேரில் சேர்ந்து வாழவேண்டிய கட்டாயம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

நேரடியான நேர்மையான நெத்தியடி பதில். 👍

கனக்க குதூகலிக்க வேண்டாம் இலங்கையின் வெளிநாட்டு முதலீடு என்ற வகையில் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்கள் மூலமும் புலிகளின் பணம் வெளிநாடுகளில் முதல் இடப்பட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, island said:

நேரடியான நேர்மையான நெத்தியடி பதில். 👍

முடியா விட்டால் பொத்தி  கொண்டு இருந்திருக்கணும் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு தாறம் என்டு சொல்லி வாக்கு கேக்கிறாங்கள்.. பிரியாணியும் 1000 ஓவாயும் கோட்டரும் குடுக்கும் திமுகா அதிமுகா மாதிரி இனப்பிரச்சினை தீர்வை சொல்லியே பேய்க்காட்டி ஓட்டு வாங்குறாங்கள்.. மனநிலை குழம்பியவர்கள் போல் கேள்வி கேட்க வேண்டாம்... கடுப்பாகுது முடியல...

சம்பந்தன்ர செத்த வீட்டோட இலங்கையில உள்ள தமிழின தலைவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் ஒரு கூட்டுக்குள் வர வேண்டும்.

இது கட்டளை அல்ல.  இது தமிழின தலைவர்களினது கூத்தாட்டத்தின் விளைவாக வந்த சிந்தனை.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

முடியா விட்டால் பொத்தி  கொண்டு இருந்திருக்கணும் ?

உண்மைதான். முடியாவிட்டால் பொத்தி கொண்டு இருந்திருந்தால் முள்ளிவாய்கால் பேரழிவே நடந்திருக்காது.

இது உங்கள் கூற்று. 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2024 at 05:23, தமிழ் சிறி said:

அடுத்த தீபாவளிக்குள்  தீர்வு, அடுத்த பொங்கலுக்குள் தீர்வு என்று சொல்லிச் சொல்லி.

  சொன்ன வாக்கை நிறைவேற்றாமலேயே ஒரு சரித்திரம் மறைந்துவிட்டது. எத்தனை தாகம் இருந்திருக்கும் அவருக்குள்? இழந்தவை போக மிஞ்சியவையையும் தக்க வைக்க முடியவில்லை, தான் கொண்டுவந்த ஓணானை விரட்டவும் முடியவில்லை, அணைக்கவும் முடியவில்லை. வேறொரு தலைவரை உருவாக்கி தன் வெற்றிடத்தை நிரப்ப முயலவில்லை,  தமிழ்த் தேசியம் எனும் குதிரையில் பலதடவை சவாரி செய்து சலித்து சென்றுவிட்டார். போய் அமைதியில் இளைப்பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நாட்டிற்க்கு போயிருந்தபோது என்னோடு படித்த ஒரு முஸ்லீம் நண்பன் தற்போதைய முஸ்லீம் காங்கிரஸ் பிரச்சார பீரங்கி. படிக்கும் காலத்தில் படு மொக்கு, சாதாரண தரம் கூட குதிரையோடி சித்தியடைந்து முஸ்லீம் மந்திரிகளின் கைகளில் கால்களில் விழுந்து நீதிமன்று இலிகிதராக உள்ளான். 
எதோ ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறதே என்று சும்மா வாகனத்தை ஒடித்து எதேச்சையாக நோட்டம் விட்டேன் 
பேச்சைக்கேட்டு ஒரு நிமிடம் விதிவிதிர்த்து போய்விட்டேன். தமிழே எழுதவராத பேசவராத ஒருவனிடம் எப்படி இந்த மொழி ஆளுமை என்று. ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது எங்கே, எப்படி எப்போதெல்லாம் கோட்டைவிட்டோம் என்று. அத்துடன் கல்முனை தமிழ் பிரதேச சபை முன் வழமை போல தலையில் பட்டியை கட்டிக்கொண்டு "மாரித்தவக்கை" சான்ஸ், கூத்தமைப்பு  உபயத்தில் கூட்டமாய் உட்கார்ந்துகொண்டு பதாகை பிடித்துக்கொண்டு இருக்கினம். பிரதேசபை தரமுயர்த்தபடுகுதோ இல்லையோ கனடாவில் அசைலம் அடிக்க எடுக்கும் படங்கள் உதவும் போல.
அப்புறம் ஓட்டை விழுந்த கப்பலின் கேப்டன் தத்தா நிரந்தர ஓய்வெடுத்திருக்கிறார். அவரால் ஒன்றும் கிழித்திருக்க முடியாது என்பது ஒருபுறமிருக்க கடலில் இறங்கி தள்ளுங்கள் அடுத்த பொங்கலுக்கு தீபாவளிக்கு கரைசேர்ப்பேன் என்று வாயால் வடை சுடாமலாவது இருந்திருக்கலாம்.
தாத்தாவின் இழப்பு ஒருவகையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும், தாத்தா குத்தி குத்தி உடைத்த மேசைகளை இழப்பீடு செய்யப்போய் ஒட்டுமொத்த இலங்கையும் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டி வந்தது. இனி வெளிநாட்டு ராஜதந்திரிகளும் பயமில்லாமல் இலங்கை வந்து கூத்தமைப்பானுகளோடு கூத்தடிக்கலாம் மேசையில் குத்தி பயம் காட்ட தாத்தா இல்லை.
போய் வாருங்கள்  தாத்தா உங்களுக்கு அனுதாபம் தெரிவிக்குமளவுக்கு  அப்பாடக்கர் இல்லை நீங்கள்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இங்கு புலிகளோ அல்லது சம்பந்தரே இனவாத சிங்களவரிடம் தீர்வு என்பது கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும் .

ஆமாம் 100%    உண்மை 

5 hours ago, பெருமாள் said:

ஆனால் தமிழர் இனவழிப்பு அரசுகளை காப்பாற்றினார் அந்த .....

இதுவும் சரி  ...  எதிர்கட்சி தலைவர் பதவியும் எற்று இருக்கக்கூடாது   பலம். இல்லாதநிலையில்.  அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டு  எதிர்கட்சி தலைவராக இருந்தது தப்பு தான்   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:

உங்களை பொறுத்தவரை, சம்பந்தர் ஒரு பத்து பேரை போட்டு தள்ளியிருந்தால் அதை மன்னித்திருப்பீர்கள்.😂  

சீ அது அவரால் முடியாது என்று தெரியும். ஆனால் வாயாலாவது வடை சுட வருமே?

9 hours ago, Justin said:

சம்பந்தர் மட்டுமல்ல, இப்போது இருக்கும் தமிழ் பா.உக்கள் சிலரும் கூட சிங்கள அரசின் அநியாயங்களைப் பேசிக் கொண்டு தான் இருக்கின்றனர். பாராளுமன்றிலும் பேசினர், பேசுகின்றனர். ஒரு படி மேலே சென்று, வெளிநாட்டு அரச பிரதிநிதிகளிடமும் பேசுகின்றனர். இதைத் தேடி அறிய இயலாதவரா நீங்கள்?

புலிகள் செய்ததையும், அரசு செய்ததையும் பேசிய சம்பந்தரை தேர்தலில் தெரிவு செய்த மக்கள் கொடுத்த பதவியில் அவர் இருக்க யாருடைய அனுமதியும், ஆதரவும் அவசியமில்லை.

மக்கள் விரும்பா விட்டால் தூக்கி எறிந்திருப்பர், அவரும் பேசாமல் போயிருப்பார். கஜேந்திரன் போல பின் கதவால் வந்திருப்பாரென நினைக்கவில்லை.

 

மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இவர்களுக்கும் தொடர்ந்து வாக்களிப்பது இவர்கள் சரியாக நடப்பதால் என்று நீங்கள் நினைத்தால் என்னிடம் உங்களுக்கு பதில் சொல்ல நல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

உண்மைதான். முடியாவிட்டால் பொத்தி கொண்டு இருந்திருந்தால் முள்ளிவாய்கால் பேரழிவே நடந்திருக்காது.

அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று  தானாக தேடி வந்தது அழிவு....?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்படியா...அப்போ முடியாமல் பொத்திக்கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஏன் காலி, திகன, மாவனல்லை என்று  தானாக தேடி வந்தது அழிவு....?

56-77 காலத்தில் நடந்ததை மறந்திட்டியளோ?!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.