Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

11111111111111111111111111111.jpg?resize

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி.

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக Keir Starmer பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1391016

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

11111111111111111111111111111.jpg?resize

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி.

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதற்கமைய புதிய பிரதமராக Keir Starmer பதவியேற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1391016

தமிழர்கள் எல்லோரும் வென்று விட்டார்களா?? மற்றைய விபரங்களையும். பதிவிடவும்.  🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Kandiah57 said:

தமிழர்கள் எல்லோரும் வென்று விட்டார்களா?? மற்றைய விபரங்களையும். பதிவிடவும்.  🙏

uma_kumaran.jpg

ஆளப் போகும்  தொழில் கட்சியில் இருந்து 
உமா குமரன் 19,145 வாக்குகளுடன்  வெற்றி பெற்றுள்ளார். 🙂

05-1.jpg?resize=750,375

பிரித்தானியாவின் புதிய பிரதமர் – யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? !

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின் ஆட்சி இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது.

இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்கவுள்ளார்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? அவரது பின்னணி என்ன?

1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார் கீர் ஸ்டார்மர்.

இவரின் தாய் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்.

பாடசாலை கல்வியை நிறைவுசெய்த கெய்ர் ஸ்டார்மர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்றுள்ள நிலையில், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகின்றார். அத்துடன் இவரொரு இசைக்கலைஞர் எனவும் குறிபப்பிடப்படுகின்றது.

கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தவர் ஆவார்.

மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் கெய்ர் ஸ்டார்மர்க்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

பிரித்தானிய பிரதமராக டோனி பிளேயர் இருந்த காலத்தில், பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த போது, கெய்ர் ஸ்டார்மர் அதனை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ர் ஸ்டார்மர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.

ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

கெய்ர் ஸ்டார்மரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.

இதையடுத்து, 2020 ஆம் ஆண்ட லேபர் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1391080

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, தமிழ் சிறி said:

பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி.

பிரித்தானியாவின் தொழிற்கட்சி பற்றி செயல்பாடுகள் பற்றி விபரம் தெரிந்த பிரித்தானிய உறவுகள் யாராவது விபரமாக விளக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஈழப்பிரியன் said:

பிரித்தானியாவின் தொழிற்கட்சி பற்றி செயல்பாடுகள் பற்றி விபரம் தெரிந்த பிரித்தானிய உறவுகள் யாராவது விபரமாக விளக்க முடியுமா?

கோஷான். ஜேர்மனி தேர்தல் பற்றி தான் பிய்த்தெடுத்துப்பார்.   ஆனால் பிரித்தானியா தேர்தல் பற்றி எதுவுமே தெரியாது   🤣🤣. ஈழப்பிரியன்    விரைவில் விபரங்கள் வரும்    

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, ஈழப்பிரியன் said:

பிரித்தானியாவின் தொழிற்கட்சி பற்றி செயல்பாடுகள் பற்றி விபரம் தெரிந்த பிரித்தானிய உறவுகள் யாராவது விபரமாக விளக்க முடியுமா?

தொழிற்கட்சி ஈழத்தமிழருக்கு ஆற்றிய கைங்கரியங்கள்..

1. விடுதலைப்புலிகள் மீதான தடை - ரொனி பிளேயர்.

2. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடையும் சொத்துப் பறிப்பும் 

3. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் பாராமுகத்துடனாக ஊக்குவிப்பு - ஹோடன் பிரவுன். 

சர்வதேசத்தில்..

1. ஈராக் மீதான பேரழிவு ஆயுத போலிக் கூச்ச போர் - ரொனி பிளேயர்.

உள்ளூரில்..

1. பல அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியது.

2. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு பிரித்தானியாவை திறந்து விட்டது.

3. சலுகை அளிப்பு என்ற பெயரில் வரி உயர்வுக்கு வழி சமைத்தது.

4. வீட்டு கடன் சுமையை அதிகரித்தது.

5. மாணவர் கடன் சுமையை அதிகரித்தது.

7. தேசிய சுகாதார சேவைக்குள் தனியார் மயப்படுத்தலை புகுத்தியதும் இன்றி காத்திருப்பு காலம் இவர்கள் காலத்தில் தான் நீடிக்க முடிந்தது.

8. மாலை 5 மணிக்கு பின்னரான வேலை நேர கூடிய ஊதியத்தை மாலை 8 மணி ஆக்கி இல்லாமல் செய்தமை.

9. தொழிலாளர்கள் நலனில் அக்கறையின்மை போக்கை கடைப்பித்ததோடு தேசிய விடுமுறை நாட்களையும் வேலை நாட்கள் ஆக்கியது.

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.

என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம். 

Edited by nedukkalapoovan
  • Like 4
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nedukkalapoovan said:

என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம். 

நல்வவை வல்லவை என்று எதுவுமே காணவில்லை.

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியன் ஒருவனை பிரதமராக்கியதுக்கு கொன்சர்வேட்டிவ் விலைகொடுத்துள்ளது. பிரித்தானிய மக்கள் சரியான செருப்படிகொடுத்துள்ளார்கள். இனியாவது கொன்சர்வேட்டிவ் திருந்தவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

எது எப்படியானாலும் இந்தியன் தோற்றது மகிழ்வே... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

britan.jpg?resize=600,375

பிரிட்டனின் ஆட்சிமாற்றம் – தமிழா்களுக்குச் சாதகமாக அமையுமென தமிழ்க்கட்சிகள் நம்பிக்கை!

பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் ஆட்சிமாற்றமானது, இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில், எதிர்வருங்காலங்களில் முன்னேற்றகரமான நிலையை நோக்கி நகருமென எதிா்பாா்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளாா்.

14 வருடங்களுக்குப் பின்னர் பிரிட்டனில் நிகழ்ந்திருக்கும் இந்த ஆட்சிமாற்றம் ஈழத்தமிழர் நலனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.

அத்துடன், ஆங்கிலேயர்கள் இலங்கையிலிருந்து வெளியேறியபோது, தமிழர்களுக்கான நியாயமானதொரு அதிகாரப்பகிர்வை வழங்காததன் காரணமாக இவ்விடயத்தில் அவர்கள் பொறுப்புக்கூறவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் எனவும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரிலும், அதன் பின்னரும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளை தொழிற்கட்சியினா் விரைந்து முன்னெடுக்கவேண்டும்’ என  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இதேவேளை, தொழிற்கட்சியைப் போன்றே கொன்சவேட்டிவ் கட்சியும் கடந்த காலங்களில் தமிழர் விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கொண்டுவருவதற்கு முழுமையான ஒத்துழைப்பை கொன்சவேட்டிவ் கட்சியும் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய சுமந்திரன்,

தொழிற்கட்சியின் வெற்றியினால் மாற்றமொன்று நிகழுமெனில் அது தமிழர்களுக்கு சிறந்த மாற்றமாகவே அமையும் எனவும் அவா்  நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.

https://athavannews.com/2024/1391217

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/7/2024 at 12:55, nedukkalapoovan said:

என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம். 

இன்னிக்கே தொடங்கிட்டார் ருவாண்டா கான்செல் .

1௦ வதாய் இன்னும் கொஞ்ச நாட்களில் முதுகில் பையுடன் சந்திகளில் கூட்டம் கூட்டமாக பியர் அருந்தியபடி கிழக்கு ஐரோப்பிய முஸ்லிம் நிப்பினம்  களவுகள் அதிகரிக்கும் .

பிரான்ஸ் கரையில் இருக்கும் அகதிகளுக்கு பிரான்ஸ் போலிசே எப்படி பிரிட்டன் போவது என்பது பற்றி பாடமே எடுக்கிறார் களாம் முழங்கால் அளவு கடல் தண்ணிக்குள் போனால் பிடிக்க கூடாது என்று ஓடர் உள்ளதாம் காரணம் பிடிக்க போலிஸ் வரும்போது தண்ணிக்குள் அகதி விழுந்து போனால் பல நேரம்களில் மரணம் ஆகி விடும் சந்தர்ப்பம் உள்ளபடியால் .

On 5/7/2024 at 13:34, தமிழ் சிறி said:

uma_kumaran.jpg

ஆளப் போகும்  தொழில் கட்சியில் இருந்து 
உமா குமரன் 19,145 வாக்குகளுடன்  வெற்றி பெற்றுள்ளார். 🙂

05-1.jpg?resize=750,375

பிரித்தானியாவின் புதிய பிரதமர் – யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? !

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அவர் விரைவில் பதவியேற்கவுள்ளார்.

அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில் கட்சியின் ஆட்சி இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதாவது, பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு படு தோல்வியையே கன்சர்வேடிவ் கட்சி சந்தித்துள்ளது.

இதேவேளையில், தொழில் கட்சி வேட்பாளர் கெய்ர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரித்தானியவின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பதிவியேற்கவுள்ளார்.

யார் இந்த கெய்ர் ஸ்டார்மர்? அவரது பின்னணி என்ன?

1962 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி லண்டனில் சர்ரே ஆக்ஸ்டெட் பகுதியில் ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார் கீர் ஸ்டார்மர்.

இவரின் தாய் செவிலியராக வேலை செய்து வந்துள்ளார். இருடன் உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்.

பாடசாலை கல்வியை நிறைவுசெய்த கெய்ர் ஸ்டார்மர், லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்றுள்ள நிலையில், சட்டத்துறையில் நிபுணத்துவம் கொண்டவராக அறியப்படுகின்றார். அத்துடன் இவரொரு இசைக்கலைஞர் எனவும் குறிபப்பிடப்படுகின்றது.

கெய்ர் ஸ்டார்மர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வழக்கறிஞராக செயற்பட்டு வந்தவர் ஆவார்.

மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரது சேவையைப் பாராட்டி, கடந்த 2014 இல் மறைந்த ராணி எலிசபெத் கெய்ர் ஸ்டார்மர்க்கு நைட்ஹுட் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

பிரித்தானிய பிரதமராக டோனி பிளேயர் இருந்த காலத்தில், பிரிட்டன் அரசு ஈராக் மீது படையெடுத்த போது, கெய்ர் ஸ்டார்மர் அதனை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்ர் ஸ்டார்மர் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்தார்.

ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்க்ராஸ் தொகுதியில் போட்டியிட்ட இவர் நடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

கெய்ர் ஸ்டார்மரின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக உடனடியாக லேபர் கட்சியில் முக்கிய பதவிகள் கிடைத்தன.

இதையடுத்து, 2020 ஆம் ஆண்ட லேபர் கட்சியின் தலைவராக கெய்ர் ஸ்டார்மர் நியமிக்கப்பட்டார். தற்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1391080

இந்த நாடுகளில் வந்து அரசியலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் கூட போக முடியும்  ஆனால் தொப்பிள் கொடி உறவாம் தமிழ்நாட்டில் அகதியா போனவன் இன்றுவரை அகதிதான் .

Posted

ஒரு உருப்படியான கட்சி இல்லையா?  பல கட்சிகள் போட்டியிட்டனவே.  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.