Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாதவூரான் said:

தம்பி காமடி கீமடி பண்ணேலை தானே ? ஊழலில் பெரும்பான்மையானதுநீங்களும் உங்கள் சார்ந்தவர்களும் செய்தது தானே.

அது வந்து "ஒழிப்பு கோசத்தை" தான் 3 ஆண்டுகளுக்குள் நிறுத்தப் போகிறார்!!

  • Replies 185
  • Views 9.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • நிச்சயமாக இல்லை ஏராளன். கிடைக்காத பதவி என்பதால் வெற்று கோசங்களை வைத்து ஒற்றுமையை காட்டுவதாக நடிக்கிறார்கள். அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக தகுதியான வேட்பாளர்களை ஒற்றுமையுடன் நிறுத்தி தற்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    22 திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம்; சஜித் பிரேமதாச!

03 SEP, 2024 | 11:34 AM
image
 

அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன்.      

நிறைவேற்று ஜனாதிபதி என்பது வரி செலுத்துகின்ற மக்களிடத்தில் தங்கி இருக்கின்ற ஒருவராகும். அதனால் அதில் சார்ந்திருப்பதிலிருந்து விலகி நிற்பேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் மிஹிந்தலை பிரகடனம் வெளியீட்டு வைபவம் நேற்று திங்கட்கிழமை (02) மிஹிந்தலை ரஜ மஹா விஹாராதிபதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மகா சங்கரத்தினருக்கு மத்தியில் மிஹிந்தலை நகரில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.     

அங்கு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில்,    

நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன். நிறைவேற்று ஜனாதிபதி என்பது வரி செலுத்துகின்ற மக்களிடத்தில் தங்கி இருக்கின்ற ஒருவராகும்.  

அதனால் அதில் சார்ந்திருப்பதிலிருந்து விலகி நிற்பேன். அந்த வட்டத்துக்குள் இருந்து வெளியேறி, புதிய சிந்தனையோடு வங்குரோத்தடைந்த நாட்டை வங்குரோத்து நிலைமையிலிருந்து கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நாட்டுக்கு சாதகமான விடயங்களுக்காக அந்த அதிகாரத்தை பயன்படுத்துவேன். அதன் ஊடாக நாட்டுக்கு தேவையான வளங்களையும் சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன். 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்த விதத்திலும் மக்களுக்கு சுமையாக இருக்காது.  ஒரு முன்னுதாரணமான அரசாட்சி ஒன்று நடத்தப்படும். மக்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு முன்னர் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். தசராஜ தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு முன்மாதிரியான பணிவான செவிசாய்க்கக்கூடிய அரசாட்சி ஒன்று எமது நாட்டுக்குத் தேவை. அதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். 

எமது நாட்டில் அனைவருக்கும் கிடைக்கின்ற வகையில் சுபிட்சமான, அனைவரும் அனுபவிக்க கூடிய பொருளாதார அபிவிருத்தியோடு, புத்த தர்மத்தை கேந்திரமாகக் கொண்டு ஏனைய மதங்களுக்கும் பலத்தை கொடுக்கும் வகையில் ஒழுக்கமான, நியாயமான, பண்புள்ள, நாகரீகமான விழுமியங்களை பேணக்கூடிய, சமாதான விருத்தியைக் கொண்ட, வளமான நாடொன்றை கட்டியெழுப்ப கூடிய யுகத்தை உருவாக்குவோம்.  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலோடு மக்களின் ஆசீர்வாதத்தோடு தற்காலிக பொறுப்பை வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பொறுப்பேற்று, அந்தக் காலத்தில் கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு வழங்கிய பிரேரணைகளுக்கு அமைய செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டு மக்கள் வீழ்ந்துள்ள பாதாளத்திலிருந்து மீட்டெடுப்போம்.  

எமது நாடு வர்த்தக ரீதியில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்துள்ளது. அனைவருக்கும் அபிவிருத்தியையும் சுபீட்சத்தையும் கொண்டு வருகின்ற நீர்ப்பாசன கலாச்சாரத்தின் ஊடாக, செழிப்பான வயல் நிலங்களுடன் கூடிய மகிழ்ச்சிகரமான வாழ்க்கை ஒன்றை எதிர்பார்க்கும் பிரகடனம் இந்த மிஹிந்தலை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  

நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. துன்பத்தில் இருக்கின்ற மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுத்து சுபீட்சத்தை நோக்கி செல்வோம். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமாக உருவாகின்ற ஒற்றுமையின் ஊடாக நாட்டை வெற்றியின் பக்கம் எடுத்துச் செல்வது எமது நோக்கமாகும். 

மதங்களுக்கான புனித ஸ்தலங்களை அபிவிருத்தி செய்து, நீதியும் நற்பண்புகளும் நிறைந்த பரம்பரை ஒன்றை உருவாக்கும் தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம். அதன் ஊடாக வெளிப்படுகின்ற நற்பண்புகள் சமூகத்திற்கான அறநெறி விழுமியங்களை வெளிப்படுத்தி, அந்தந்த மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்கின்ற நாட்டை கட்டியெழுப்பும் வேலை திட்டத்திற்கான அடித்தளத்தை முன்னெடுப்போம். 

மதத் தலைவர்களுடைய எச்சரிக்கைகள், ஆலோசனைகள், பிரேரணைகள், விமர்சனங்கள், என்பனவற்றுக்கு செவி சாய்த்து சிறந்த மனோநிலையுடன் அந்த பிரேரணைகளை நாட்டின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்துவோம்.  

பல்வேறுபட்ட மக்கள் பல மதங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பலத்தை உருவாக்குவோம். பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டின் அபிவிருத்திக்கான பிரதான அடித்தளமான இந்த ஒற்றுமையின் ஊடாக உருவெடுக்கின்ற மிகப்பெரிய சக்தியின் மூலம் வீழ்ச்சி அடைந்துள்ள இந்த நாட்டை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுப்போம். 

விகாரைகள், தேவாலயங்கள் என அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு பெரும்பான்மையானோரின் கருத்துக்கமைய இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படும் என்றார். 

WhatsApp_Image_2024-09-03_at_10.33.02.jp

WhatsApp_Image_2024-09-03_at_10.33.00__1

WhatsApp_Image_2024-09-03_at_10.32.54.jp

WhatsApp_Image_2024-09-03_at_10.32.53.jp

WhatsApp_Image_2024-09-03_at_10.32.52.jp

WhatsApp_Image_2024-09-03_at_10.32.54__1 

WhatsApp_Image_2024-09-03_at_10.33.04.jp

https://www.virakesari.lk/article/192712

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால்மூல வாக்களிப்பு பெறுபேறுகள் : சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி போலியானது : பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு - தேர்தல்கள் ஆணைக்குழு

05 SEP, 2024 | 09:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளோம். எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கு உரிய தபால்மூல வாக்களிப்பு நேற்று (4) ஆரம்பமானது. 1500 அதிகமான வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அரச சேவையாளர்கள் வாக்களித்துள்ளனர். தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட மூன்று தினங்கள் இன்றுடன் நிறைவடையும்.

இந்த மூன்று தினங்களில் வாக்களிக்காதவர்கள்  எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் தமது சேவை பிரதேசத்தில் உள்ள  மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும்.

தபால்மூல வாக்களிப்பு மத்திய நிலையங்களில் அமைதியான சூழல் காணப்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமாயின் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் முறைப்பாடளிக்கலாம்.

சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களால் அவர்கள்  ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.ஆகவே அனைவரும் பொறுப்புடன் தேர்தல் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டும்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை  வாக்கெடுப்பு நிறைவடைந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு பின்னரே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளோம். தவறான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/192953

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து அம்ச கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் ரணிலுக்கு ஆதரவு

adminSeptember 7, 2024
IMG_8204-1170x658.jpg

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை செயற்படுத்தி தருவதாக வழங்கிய வாக்குறுதி அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்  கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியின் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தை நேற்றைய தினம்(6)   திறந்து வைக்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

யுத்தத்திற்கு பின்னர் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் வாழ்வதாகவும் தமிழ் அரசியல் தலைவர்களோ புலம்பெயர் அமைப்புக்கள் இதுவரை அவர்களுக்கு முழுமையான வாழ்வாதார உதவிகளை வழங்க வில்லை எனவும் அதன் அடிப்படையில் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், அதே நேரம் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படக் கூடாது, அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ்வதற்கான சுகந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றை நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  உறுதியளித்துள்ளார்.

இதன் அடிப்படையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரம சிங்க விற்கு ஆதரவளிப்பதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_8188-800x450.jpgIMG_8195-800x450.jpg
 

https://globaltamilnews.net/2024/206519/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் 

08 SEP, 2024 | 04:27 PM
image
 

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (8) வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் மணிவண்ணன், முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஜதீந்திரா, யோதிலிங்கம், தமிழரசு கட்சியின் மகளிர் அணி தலைவி விமலேஸ்வரி மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

download__5_.jfif

download__4_.jfif

https://www.virakesari.lk/article/193151

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை

தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளி போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் (P.Ariyanethran) தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் (Vavuniya) இன்று (08) தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று பரவலாக பேசப்படுகின்ற மூன்று தென் பகுதி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளி கொட்டுவதற்கு சமமாகவே இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தி

இதில் சஜித் பிரேமதாச ஆயிரம் பன்சாலைகளை கட்டுவதாக தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையில் யாரோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது பன்சாலைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாக தான் இருக்கும்.

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை | Tamil Candidate Speech Vavuniya Election Campaign

அதேபோல் ரணில் விக்ரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமையும். ரணில் விக்கிரமசிங்கவே ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக ஒரு இனத்தின் விடுதலைக்காக இருந்த எம்மை சிதைத்த பெருமை அவரைத் தான் சாரும்.

அதே போல் அநுரகுமார திசாநாயக்க எமது இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தவராக இருக்கின்றார்.

இவ்வாறானவர்களை தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம் கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம்.

ஆகவே இந்த பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தியை சொல்வதற்காகவே நான் வந்திருக்கின்றேனே தவிர ஒரு ஜனாதிபதியாக வருவதற்கு அல்லது நிறைவேற்றி அதிகாரம் கொண்ட அந்த கதிரையை தட்டி படிப்பதற்காகவும் இல்லை.

விடுதலைக்கான புள்ளடி

ஈழ மண்ணில் இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும் நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தென் இலங்கைக்கு ஏன் ஒன்பதாவது ஜனாதிபதியாக வர இருக்கின்றவருக்கும் அந்தத் தகவலை நாங்கள் கொடுக்க இருக்கின்றோம்.

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை | Tamil Candidate Speech Vavuniya Election Campaign

எங்களுடைய வடக்குக் கிழக்கில் ஒரு இனமாக ஒரு தேசமாக ஒன்றிணைந்த கட்டமைப்புக்குள் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்காக எங்களுடைய இனம் ஒன்றிணைந்து தனது ஆதரவை தெரிவிக்கின்றது என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் அவர்களுக்கு சொல்லி இருக்கின்றோம்.

இந்த 13 நாட்களுக்கு பல போலியான செய்திகள் என்னை பற்றி வரலாம். இருபதாம் திகதி கூட அரியனேந்திரன் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற செய்தி கூட இந்த சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளிவரலாம்.

ஆனால் நான் எந்த விதமான மாற்றத்திற்கு உட்பட போவதில்லை. ஆகவே நீங்களும் போடுகின்ற புல்லடியானது எமது இனத்திற்கான புள்ளடி எமது விடுதலைக்கான புள்ளடி எமது மண்ணுக்கான மண் மீட்புக்கான புல்லடி என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

https://ibctamil.com/article/tamil-candidate-speech-vavuniya-election-campaign-1725803923#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாரோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது பன்சாலைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாக தான் இருக்கும்.

தமிழரசுக் கட்சிதான் கூறுகிறது. அப்படியாயின் அந்தக் கட்சிக்குள் அரியம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை | Tamil Candidate Speech Vavuniya Election Campaign

எதுவுமே ஒருவரால் தான் தொடங்கப்படுகிறது. இந்த மக்கள் கூட்டம் நிச்சயமாக நம்பிக்கை தரும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கும் அனுரவுக்கும் இடையில் ஒப்பந்தம் என்கிறார் சஜித்!

adminSeptember 10, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2ம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முதல் சுற்றிலேயே தனது கட்சி வெற்றி பெறும் என்பதால், 2வது விருப்புரிமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலைப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதிக்கு கடவுச்சீட்டு அல்லது வீசா வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசாங்கத்தினால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேமதாச, கடவுச்சீட்டு மற்றும் வீசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள கடுமையான தாமதங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கு தடையாக மாறி, ஆடைத் துறை மற்றும் சுற்றுலாத்துறையை பாதித்துள்ளது. அரசாங்கத்தின் ஊழல் ஒப்பந்தங்களே இந்த தாமதங்களுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

அனுரவுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்துமாறும், கடவுச்சீட்டு மற்றும் வீசா வழங்கும் நடைமுறைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் பிரேமதாச கோரியுள்ளார். இந்த நபர்களுக்கு நாட்டின் பொறுப்பு வழங்கப்படுமானால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என தெரிவித்த அவர், ரணில்-அநுரவின் பெரும் சதியை முறியடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

 

https://globaltamilnews.net/2024/206596/

ரணில் தனது நண்பர் இல்லை என கூறுகிறார் அனுர!

adminSeptember 10, 2024
ranil-anura-sajith.jpg

பல அரசியல்வாதிகள் கூறுவது போன்று  ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கோ அல்லது அவருடன் இணைந்து செயற்படுவதற்கோ விக்ரமசிங்கவுடன் ஏதேனும் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தால், இருவரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிட்டிருக்க தேவையில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் உண்மையில், விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தன்னை தோற்கடிக்க ஒன்றிணைந்துள்ளதாக தான் கருதுவதாகவும். விக்கிரமசிங்க தன்னை ‘அவரது நண்பர்’ என்று தொடர்ந்து அழைக்கிறார். ஆனால்  தாம்  நண்பர்கள் அல்ல, அரசியல் போரில் தாம்  போட்டியாளர்கள் என அனுரகுமார  திஸாநாயக்க கூறியுள்ளார்.

அண்மைக் காலங்களில் விக்ரமசிங்கவைச் சந்திக்கவில்லை என்றும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தனது பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் NPP தலைவர் மேலும் தெரிவித்தார். விக்கிரமசிங்க மற்றும் SJB ஆகிய இரு பக்கங்களும் தங்களுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே ஜனாதிபதி தன்னுடன் இரகசிய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்புவதாக அவர் கூறினார்.

இப்போது விக்ரமசிங்கவுடன் இருக்கும் SLPP உறுப்பினர்கள் சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டதால், அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை என்றும் திஸாநாயக்க மேலும் கூறினார். “அப்படிப்பட்டவர்களுடன் தான் எப்படி வேலை செய்ய முடியும்?” என திஸாநாயக்க கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்மைக்காலமாக விக்கிரமசிங்கவுக்கும் திஸாநாயக்கவுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கு விக்கிரமசிங்க திஸாநாயக்கவிடம் கேள்விகளை முன்வைத்துள்ளார். NPP விஞ்ஞாபனத்தில் அறிவிக்கப்பட்ட திறந்த வர்த்தக உடன்படிக்கைகளை நீக்குவதன் மூலம் திஸாநாயக்கவால் எவ்வாறு ஏற்றுமதிகளை அதிகரிக்க முடியும் என்று அவர் கேட்டார்.

“எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் திறந்த வர்த்தக சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்துள்ளார். அதே நேரத்தில், ஏற்றுமதியை அதிகரிக்க உறுதியளித்தார். FTA இல்லாமல் ஏற்றுமதியை எப்படி ஊக்குவிக்க முடியும். என் கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பின்னர் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று விக்கிரமசிங்க கூறினார்.

SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், விக்ரமசிங்கவும் திஸாநாயக்கவும் தனக்குத் தடையாக இருக்க இரகசியமாகச் செயற்படுவதாகக் கூறி இந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2024/206599/

  • கருத்துக்கள உறவுகள்

459008813_920306813467625_15758925067199

 

459079726_920858583412448_79792267290830

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் கோட்டைக்குள் மகனுக்கு கல் வீச்சு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரச்சார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் குழந்தை ஒன்று காயமடைந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்தனர். கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மஹிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹம்பாந்தோட்டையில், நாமலுக்கு இவ்வாறு கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

https://thinakkural.lk/article/309297

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஹம்மது இல்யாஸுக்கு வழங்கப்படும் வாக்குகள் என்ன ஆகும்?; தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி காலமானதையடுத்து வாக்குச் சீட்டில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் factseeker இது குறித்து ஆராய்ந்தது.

முஹம்மது இல்யாஸ் 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

அதன் பின்னர் 2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.

அதன்படி, நான்காவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இருந்த முஹம்மது இல்யாஸ் கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி காலமானார்.

முஹம்மது இல்யாஸ் காலமானதையடுத்து அவருடைய இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்ததுடன், அவருடைய இடத்திற்கு இன்னொரு பெயரை முன்மொழிவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசமும் கடந்த செப்டம்பர் ஐந்தாம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாயின் அந்த வேட்பாளர், முன்னாள் அல்லது தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 31 (1) உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

31(1) சனாதிபதி பதவிக்கெனத் தேர்ந்தெடுக்கக்கூடிய தகைமை கொண்ட எந்தப் பிரசையும்

(அ) அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியற் கட்சியினால், அல்லது

(ஆ) அவர், நடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருப்பவராயின் அல்லது முன்னர் பதவி வகித்திருந்தால், வேறேதேனும் அரசியற் கட்சியினால் அல்லது ஏதேனும் தேர்தல் இடாப்பில் தமது பெயரைப் பதிந்துள்ளவரான ஒரு தேருநரால், அத்தகைய பதவிக்கான வேட்பாளராகப் பெயர் குறித்து நியமிக்கப்படலாம்.

இதன்படி, முஹம்மது இல்யாஸின் வெற்றிடத்திற்கு முன்னாள் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக மறைந்த முஹம்மது இல்யாஸின் மனைவி முகமது இல்யாஸ் ஜமீனாவிடம் factseeker வினவிய போது, உரிய வெற்றிடத்திற்கு தனது பெயரை முன்மொழிந்ததாகவும், எனினும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய தனக்கு போட்டியிட முடியாத காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கையை நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அல்லது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எமது தரப்பில் இல்லாத காரணத்தினால் தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு யாரையும் பரிந்துரைக்கவில்லை என முகமது இல்யாஸ் ஜமீனா தெரிவித்தார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவிய போது, தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளரின் வெற்றிடத்திற்கு எவரையும் முன்னிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும், ஒரு சுயேச்சை வேட்பாளரின் வெற்றிடத்தை முன்னாள் அல்லது தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரால் மட்டுமே நிரப்ப முடியும் என்றார்.

மேலும், வாக்குச் சீட்டுகள் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளதாகவும், ஐதுரூஸ் முஹம்மட் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இருந்து நீக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்ட அவர், எவ்வாறு இருப்பினும் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸுக்கு கிடைக்கும் வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் ஊசி சின்னத்துடன் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் என்ற அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பதையும் அவருக்கான வாக்குகள் அல்லது விருப்பு வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்ட வாக்குகளாக அமையும் என்பதையும் factseeker பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகின்றது

நன்றி – factseeker

https://thinakkural.lk/article/309307

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு முழுவதும் 13,417 வாக்குச்சாவடிகள்; 18 ஆம் திகதியுடன் பிரசாரத்துக்கு தடை - தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல், 21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4:30 வரையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 13,417 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு செய்ய முடியும். தேர்தலில் வெற்றி ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு பத்து முதல் 12 நாட்களில் நாடாளுமன்றை கலைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடாளுமன்றை கலைத்து 35 முதல் 44 நாட்கள் வரையிலான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் தேர்தல் நடாத்துவதற்காக அதிகபட்சமாக 52 முதல் 66 நாட்களை எடுத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது தற்போதைய நாடாளுமன்றின் பதவிக்கால நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/309394

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம்; க.வி.விக்னேஸ்வரன்!

14 SEP, 2024 | 10:11 AM
image
 

தமிழகளின் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் செயற்பட்டுவரும் படித்த முட்டாள்களுக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளரை இழிவாகப் பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி அவரையும் நிராகரிக்க கோரும் பகிஸ்கரிப்பாளர்களுக்கும் தகுந்த பாடம் புகட்டும் வகையில் வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி காலையிலேயே சென்று சங்கு சின்னத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.         

பருத்தித்துறை - சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13)  மாலை 05.00 மணிக்கு இரா.மயூதரன் தலைமையில் இடம்பெற்ற நமக்காக நாம் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், 

எனக்கு இருதய சத்திரசிகிச்சை பொருந்துமா அல்லது Stent என்னும் உறைகுழாய் பொருத்தப்படுதல்  பொருந்துமா  என்று  மருத்துவர்கள்  ஆராய்ந்து  கொண்டிருக்கும் இந்தச்  சந்தர்ப்பத்தில்  இங்கு  உங்களுடன்  இணைந்து  பொது  வேட்பாளரை ஆதரிக்கும்  கூட்டத்தில்  பங்கு  பற்ற  வந்திருக்கின்றேன்  என்றால்  எந்த  அளவுக்கு பொது  வேட்பாளருக்கு  மக்களின்  ஏகோபித்த  ஆதரவு  கிடைக்க  வேண்டும்  என்று ஆவலாய் இருக்கின்றேன் என்பது உங்களுக்குப் புரியவரும்.  

எமது  வடகிழக்கு  மாகாணங்கள்  பறிபோய்க்  கொண்டிருக்கின்றன. இது  உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? நேற்று எனக்குக் கிடைத்த ஆய்வு விபரங்களின் படி (இன்று அவை பத்திரிகைகளிலும் வந்துள்ளன)  திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறும் காணி ஆக்கிரமிப்பின் காரணமாக தற்போது அம் மாவட்ட சனத்தொகையில் 27 சதவிகிதமானோர் சிங்கள மக்கள் என்றும் அம் மாவட்டத்தின் மொத்த  நில  விஸ்தீரணத்தில் 36 சதவிகிதத்தை அம் மக்கள்  தம்  கைவசம் வைத்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையைத்  தந்துள்ளவர்கள் கலிபோர்ணியாவில்  இருந்து  கடமையாற்றும்  ஓக்லண்ட்  நிறுவனத்தார்.  

அவர்களின் ஆய்வாளர்கள்  இங்கு  வந்து  நிலைமையை  அறிந்தே  தமது  ஆய்வறிக்கையைத் தந்துள்ளார்கள். இதைவிட  மிகவும்  ஆபத்தான  ஒரு  விடயம்  வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாணத்தையும்  கிழக்கு  மாகாணத்தையும்  இணைக்கும்  திருகோணமலையின் குச்சவெளிப்  பிரதேசம்  கடந்த  பத்து  ஆண்டுகளில்  மிக  மோசமான  மாற்றங்களைச் சந்தித்துள்ளது.   

அப்பிரதேசத்தின்  50  சதவீத  நிலங்கள்,  அதாவது  41,164 ஏக்கர் காணிகள், பல அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் பௌத்த கோயில்களைக் கட்டுவதற்காகவும்  அரசாங்க  திணைக்களங்களால்  கையேற்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்த மக்கள் விரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 3887 ஏக்கர் கையேற்க்கப்பட்ட  காணிகளில்  26  பௌத்த  விகாரைகள்  கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  

அத்துடன்  இவ்வாறான  மிகவும்  செழிப்பான  காணிகளிலும்  கரையோரப் பிரதேசங்களிலும்  இருந்து  வந்த  தமிழ்  மற்றும்  முஸ்லீம்  மக்கள்  தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. விரட்டப்பட்ட மக்கள் தமது  காணிகளுக்குப்  போக  முடியாதபடி  இராணுவம்  அங்கு  நிலை கொண்டிருக்கின்றது  என்றும்  கூறப்பட்டுள்ளது.  இராணுவத்தினரின்  நாடு  பூராகவும் உள்ள  பிராந்திய தலைமையகங்கள்  ஏழில்  ஐந்து  தலைமையகங்கள்  வடக்கு  கிழக்கில் குடிகொண்டிருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.  

இது நடைபெறுவது இன்றைய ஜனாதிபதி பதவி வகிக்கும் காலகட்டத்தில் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்ட வேண்டும் என்று  தீர்மானம்  கொண்டு  வந்தவர்  சஜித்  பிரேமதாச  அவர்கள்.  சேர்ந்திருந்த வடமாகாணத்தையும்  கிழக்கு  மாகாணத்தையும்  நீதிமன்றம்  மூலம்  பிரிக்க நடவடிக்கை  எடுத்தவர்  அனுரகுமார  அவர்கள்.  மூவருமே  ஒரே  குட்டையில்  ஊறிய மட்டைகள். 

நாமல்  பற்றிக்  கூறவே  தேவையில்லை.  ராபக்சக்களின் மோசமான  இனவாத  தோற்றத்திற்கு  அவர்  மெருகூட்டி  வருகின்றார்.  எந்த  சிங்கள வேட்பாளர்  வந்தாலும்  வடக்குக்  கிழக்கின்  நிலங்கள்  கையேற்கப்படுவதுடன் அவற்றின்  தொடர்ச்சி  துண்டிக்கப்படுவதும்,  அங்கு  சிங்களக்  குடியேற்றங்கள் தொடர்ந்து  நடைமுறைப்படுத்தப்படுவதும்  பௌத்த  கோவில்கள்  கட்டப்படுவதும் ஓயாமல்  நடக்கப்  போகின்றன.   

எமது  இளைஞர்கள்,  படித்தவர்களும்  பாமரர்களும், நாளாந்தம்  வெளிநாடுகளுக்கு  செல்ல  ஆயத்தமாகி  வருகின்றார்கள்.  எமது சனத்தொகை  இதனால்  குறையப்  போகின்றது.  ஆகவே  சிங்கள  வேட்பாளர் ஒருவருக்கு  எம்  மக்கள்  வாக்களிப்பது  இவ்வாறான  தமிழர்  எதிர்ப்பு  செயல்களை முடக்கி விடப்போகின்றது என்பதில் சந்தேகமில்லை.  

இதனால்த்தான்  எமது  தமிழ்  வேட்பாளருக்கு  உங்கள்  மேன்மையான  வாக்குகளை அளியுங்கள்  என்று  கேட்கின்றோம்.  அவரால்  இவ்வாறான  காணி  ஆக்கிரமிப்புகளை நிறுத்த  முடியுமா  என்று  கேட்பீர்கள்.  முடியும்  என்பது  எனது  பதில்.    

எமது  மக்கள் ஒன்றிணைந்து  தமது  தனித்துவத்தைக்  காட்டும்  வண்ணம்  தமிழ்  பொது வேட்பாளருக்கு  வாக்களித்தால்,  ஆறு  இலட்சத்துக்கு  மேல்  எமது  மக்களின் வாக்குகள் பதியப்பட்டால், நாம் உலக அரங்கிலே எமது தனித்துவத்தையும் எமக்கு நேர்ந்த  கதியையும்  தற்போது  எமக்கெதிராக  நடக்கும்  நடவடிக்கைகளையும் கோடிட்டு  சொல்லமுடியும்.   

 எமது  பொது  வேட்பாளரும்  அவருடன்  சேர்ந்தவர்களும் உலகநாடுகளிலே மற்றும் ஐக்கிய நாடுகளிலே தற்போதைய அவலங்கள் பற்றியும், தொடர்ந்து  வந்த  சிங்கள  அரசாங்கங்கள்  எமக்கு  செய்து  வரும்  அநியாயங்கள் பற்றியும் கூற முடியும்.   

நான் 2018ல் புதிய கட்சியைத் தொடங்கிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக வர வேண்டும்  என்ற  எண்ணம்  எனக்கு  இருக்கவில்லை.  2020ல்  எனக்கு  81  வயது ஆகியிருந்தது.  எனினும்  உலக  நாடுகளில்  உள்ள  அரச  அலுவலர்களிடம் இணையத்  தொடர்புகள்  மூலம்  எமது  நிலை  பற்றிக்  கூறி,  எம்  மக்களுக்கான சேவைகளைச்  செய்து  கொண்டு  போக  முடியும்  என்று  நினைத்திருந்தேன்.   

அப்பொழுது  எனது  நண்பர்கள்  ஒன்றைக்  கூறினார்கள்.  நீங்கள்  நீதியரசராக இருந்திருக்கலாம்.  முதலமைச்சராக  இருந்திருக்கலாம்.  ஆனால்  வெளிநாட்டு  அரச அதிகாரிகளுடன்  பேசும்  போது  இப்பொழுது  நீங்கள்  யார்  என்று  கேட்பார்கள். நீங்கள்  பாராளுமன்ற  உறுப்பினர்  என்று  கூறும் போது  மக்களின் பிரதிநிதி  நீங்கள் என்ற  ரீதியில்  உங்கள்  கூற்றுக்களுக்கு  வலு  இருக்கும்  என்றார்கள்.  ஆகவேதான் நானும் தேர்தலில் போட்டியிட்டேன்.  

அதேபோல்த்தான்  திரு.அரியநேத்திரன்  அவர்களுக்கு  எமது  மக்கள்  வெகுவாக வாக்களித்தால் அந்த வாக்குகளுக்கு ஒரு மதிப்புண்டு மாண்புண்டு! அதை வைத்து அவரை  தமிழ்  மக்களின்  ஒரு  அடையாளமாகக்  காட்டி  எமக்கு  நடந்து  வரும் அநியாயங்கள் பற்றி நாடுகளுக்குக் கூறி இலங்கை அரசாங்கம் எமக்கு தொடர்ந்தும் இன்னல்களை  விளைவிப்பதைத்  தடுக்கலாம்.    

தற்போது  வெளிநாடுகள்  எமது அரசாங்கத்திற்கு  எதிராக  பல  குற்றச்சாட்டுக்களை  சுமத்தி  வருகின்றன.  ஐக்கிய நாடுகளின்  அறிக்கைகள்  இலங்கையை  சரிவர  எடை  போடுவதாகவே அமைக்கப்பட்டு  வருகின்றன.    

இந்நிலையில்  தமிழ்  மக்கள்  ஒருமித்து  தமது ஒற்றுமையை,  தேசியத்தை,  ஒருங்கிணைந்த  குறிக்கோள்களை  இந்த  ஜனாதிபதித் தேர்தலில்  வெளிப்படுத்தியுள்ளார்கள்  என்ற  செய்தி  எமது  அரசாங்கத்தை விழித்தெழச் செய்யும். அதனால்த்தான் எமது தமிழ் பொது வேட்பாளருக்கு நீங்கள் உங்கள் வாக்கினை அளிக்க வேண்டும் என்று தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம். 

எமது  ஒற்றுமை  ஒன்றே  எம்மை  இரட்சிக்கும்.  எமது  ஒற்றுமையைச்  சிதைக்கும் வகையில்  படித்த  முட்டாள்கள்  சிலர்  நடந்து  வருகின்றார்கள்.  சிலர்  சிங்கள வேட்பாளர்களுடன்  கைகோர்க்க  வேண்டும்  என்கின்றார்கள்.  மற்றும்  சிலர் தேர்தலைப்  பகிஸ்கரிக்கக்  கோருகின்றார்கள்.    

சிங்கள  வேட்பாளர்களுடன் கைகோர்ப்பது  குறித்த  அரசியல்வாதிகளுக்கு  அமைச்சர்  பதவிகளை  வழங்க இடமளிக்கலாம்.  அதனால்  தமிழ்ப்  பேசும்  மக்களுக்கு  என்ன  இலாபம்?  நல்லாட்சி அரசாங்கத்தை  ஆதரித்து  இந்தா  தீர்வு  வருகின்றது.  அந்தா  தீர்வு  வருகின்றது என்று  திரு.சம்பந்தன்  அவர்கள்  நம்பிக்கையுடன்  கூறிவந்தார்.  

ஆனால்  தீர்வு வந்ததா?  அவருக்கு  எதிர்க்கட்சித்  தலைவர்  பதவியும்  உத்தியோகபூர்வ வாஸஸ்தலமும் கிடைத்தன. தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. எனவே பெரும்பான்மையின வேட்பாளர்களை ஆதரிப்பது தமிழ்ப்பேசும் அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நன்மைகளைத் தரும். ஆனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது.  

பகிஸ்கரிப்பவர்கள் ஏன் நாம் பகிஸ்கரிக்க வேண்டும் என்ற கேள்வியைத் தம்மைத் தாமே  கேட்க  வேண்டும்.  புலிகள்  முன்னர்  பகிஸ்கரித்தார்கள்  ஆகவே  நாமும் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் சூழலையும் கால கட்டத்தையும் மறந்து பேசுகின்றார்கள்.  அன்று  புலிகளுக்குப்  பலம்  இருந்தது.  அன்று  மலையக மக்களுக்கு  அவர்களின்  அரசியல்  போராட்டங்களின்  போது  தொழிற்சங்க  பலம்  இருந்தது.  இன்று  இவர்களுக்கு  என்ன  பலம்  இருக்கின்றது?    

இவர்கள் பகிஸ்கரித்தால்  அது  யாருக்கு  நன்மை?  எவருக்கும்  இல்லை.  யாருக்குப்  பாதிப்பு? எவருக்கும்  இல்லை.  சிங்கள  வேட்பாளர்களுக்கு  வாக்களிக்க  வேண்டாம்  என்று தொடங்கிய  இந்த  பகிஸ்கரிப்பாளர்கள்  இப்பொழுது  தமிழ்  வேட்பாளரையும் பகிஸ்கரியுங்கள்  என்கின்றார்கள்.  ஏன்  என்றால்  திரு.அரியநேத்திரன்  அவர்கள் சிங்கள  வேட்பாளர்களுடன்  கூட்டுச்  சேர்ந்துள்ளார்  என்ற  அப்பட்டமான  பொய்யை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.    

அரியநேத்திரன்  அவர்கள்  தனது  கட்சியுடன் முரண்டே  பொது  வேட்பாளராக  நிற்கின்றார்.  அவர்  தமது  வருங்கால  அரசியல் வாழ்க்கையைத்  தியாகம்  செய்தே  பொது  வேட்பாளராக  நிற்கின்றார்.  இந்தத் தேர்தலில்  அவருக்கு  தனிப்பட்ட  ரீதியில்  எந்த  நன்மையும்  கிடையாது. 

அவர் தேர்தலில்  வெல்லப்  போவதும்  இல்லை.  அப்பேர்ப்பட்ட  ஒருவரை  இழிவாகப்  பேசி சிங்கள வேட்பாளர்களுடன் கூட்டு என்று கூறி இந்த பகிஸ்கரிப்பாளர்கள் தங்களை தமிழ் மக்கள் மனதில் தாழ்த்தியே வருகின்றார்கள்.  

அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக நீங்கள் ஒவ்வொருவரும் இம் மாதம் 21ந் திகதியன்று  காலையிலேயே  நேரத்துடன்  வாக்குச்  சாவடிகளுக்குச்  சென்று  சங்கு சின்னத்திற்கு  வாக்களிக்க  வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.    

சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களுடன் வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்காக சங்குச் சின்னத்தில் வாக்களிக்க கோரி இடம்பெற்ற பரப்புரை கூட்டத்தில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த செல்வின் இரணியேஸ் மரியாம்பிள்ளை, புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர், சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூ.சங்க நிர்வாகிகள் மற்றும் அவ்வூர் மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

IMG-20240913-WA0210.jpg

IMG-20240913-WA0211.jpg

https://www.virakesari.lk/article/193641

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் படித்த முட்டாள்களுக்கு பாடம் புகட்டுவோம்; க.வி.விக்னேஸ்வரன்!

large.IMG_7011.jpeg.1e92ce74b2226dc6f13d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் - 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் விரிவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமைதியான காலப்பகுதியில் பிரசாரம் மற்றும் சமூக ஊடகங்களில் சேறு பூசுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் சமூக ஊடக வலையமைப்பை சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தயாரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரங்கள்

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதோடு, 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் அமைதியான காலகட்டமாக காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் - 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம் | Sl President Election 2024 Social Media Banned

இந்த காலப்பகுதியில் பிரச்சாரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடக குழுக்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அமைதியான காலத்தில் தேர்தல் பிரசாரம் மற்றும் அவதூறு பரப்புரைகளை நிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவதூறு பிரச்சாரங்கள்

இந்த பிரச்சாரங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் - 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம் | Sl President Election 2024 Social Media Banned

அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி சமூக ஊடகங்களில் ஏற்கனவே வெளியிடப்பட்ட அவதூறு பிரச்சாரங்கள் போன்றவற்றை நீக்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

அமைதியான காலத்தில் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் முறை ஒன்றை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://tamilwin.com/article/sl-president-election-2024-social-media-banned-1726320709#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 பேரடங்கிய குழுவை தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு

Published By: DIGITAL DESK 3   14 SEP, 2024 | 08:33 PM

image

(நா.தனுஜா)

சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

மிகமுக்கிய தருணத்தில் நடைபெறும் இம்முறை ஜனாதிபதித்தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் எனவும் அவ்வமைப்பு எதிர்வுகூறியுள்ளது.  

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் கண்காணிப்புப்பணிகளை முன்னெடுப்பதற்காக வழமைபோன்று இம்முறையும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டது. அதற்கமைய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவின் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்ததுடன், அவை நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்புப்பணிகளை ஆரம்பித்துள்ளன. அதேபோன்று சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைiயிலான 13 பேரடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு இன்றைய தினம் (15) நாட்டை வந்தடையவுள்ளது. அதுமாத்திரமன்றி பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் (சார்க்) அங்கத்துவ நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் அவர்களது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு அதன் தேர்தல் கண்காணிப்பாளர்களைக் கடந்த 11 ஆம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது. இக்கண்காணிப்பாளர்களில் தேர்தல் செயன்முறை ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் நாடளாவிய ரீதியில் 7 மாகாணங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன், 14 பிரதான நகரங்களையும், அவற்றைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களையும் இலக்காகக்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன்போது தேர்தல் செயன்முறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ள அவர்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள், வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் செயன்முறை, தேர்தலுக்குப் பின்னரான நிலைவரம் என்பவற்றைப் பரந்துபட்ட அளவில் கண்காணிக்கவுள்ளனர்.

அதன்படி இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு, 'பொருளாதார ஸ்திரமின்மை, உயர் பணவீக்கம், மக்கள் மத்தியிலான அதிருப்தி ஆகியவற்றுக்கு நாடு முகங்கொடுத்திருந்த நிலையில், தீர்மானம் மிக்கதொரு தருணத்தில் இந்த ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தல் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மிகமுக்கிய பங்காற்றும்' எனத் தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/193691

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

தேர்தலில் தாம் வாக்களிக்கும் வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிட கூடாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கும் வேட்பாளரைப் பற்றி யாரேனும் ஒருவரிடம் கேட்பதும் சட்டவிரோதமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான உத்தரவு

கடந்த தேர்தல்களிலும் இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்

தேர்தல் ஆணைக்குழு பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு | No Permission To Ask About Voting Candidate

https://tamilwin.com/article/no-permission-to-ask-about-voting-candidate-1726378271

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம் - தேர்தல் ஆணைக்குழு

17 SEP, 2024 | 10:56 AM
image
 

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் அல்லது கடைப்பிடிக்காத ஊடக நிறுவனங்களுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தாலும் அத்தகைய ஊடகங்களிடமிருந்து விலகி இருக்க முடியும்.

மின்னஞ்சல், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்கள் ஊடாக அனைத்து ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ முடிவுகள் பகிரப்பட்டு வருகின்றது. 

ஊடக நிறுவனங்களுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்கள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/193903

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இணைய ஊடகத்தில் வெளியான கணொளியும் இலங்கையர்களது கருத்துக்களும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 2   17 SEP, 2024 | 03:18 PM

image
 

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிடுகையில்,  

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தொகை 2 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் நபர்களுக்கு ஓராண்டுக்கு குறையாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு 23 ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் உரிய சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/193925

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் திரள்வோம்: யாழ்.பல்கலைக்கழக சமூகம் அழைப்பு

தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தமிழ் மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தேசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதிலிருந்து எழுச்சியடைவதிலிருந்தும் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில், தமிழ் மக்கள் நாங்கள் சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ் அரசியற்கட்சிகளையும் உதிரிகளாக்கி எங்களின் கூட்டு – மனவலுவைத் தகர்த்தெறிவதில் சிறிலங்கா அரசின் முகவர்களும் அவர்களது அமைப்புக்களும் கனக்கச்சிதமாக செய்து முடித்துள்ளன.

தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் திரள்வோம்: யாழ்.பல்கலைக்கழக சமூகம் அழைப்பு | Jaffna University Community Calling Jafna People 

பொருளாதார நல்லிணக்க மாயைகள்

பொருளாதார நல்லிணக்க மாயைகள் சூழ்ந்த இவ்வாறான சூழ்நிலைகளில் தமிழ் அரசியல் தரப்புக்கள் ஏற்ற உத்தரவாதங்களோ வாக்குறுதிகளோ இன்றி சிங்கள வேட்பாளர்களிடம் தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை அடகு வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனை பல்கலைக்கழகச் சமூகத்தினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழியென்றும், 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தினுள்ளும், ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பின் உள்ளும் தமிழ் மக்களின் அரசியலை சுருக்குவதில் சிங்கள தலைமைகளிற்கு விலைபோன தமிழ் அரசியல்வாதிகள் முயன்று வருவதையும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்த செயற்பாடுகளினையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகச் சமூகத்தினர் குறிப்பிட்டிருந்தனர்.  

https://tamilwin.com/article/jaffna-university-community-calling-jafna-people-1726587740#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் 2024 - விசேட மின்னல் - Minnal with Anura Kumara Dissanayake

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல்

Published By: VISHNU  18 SEP, 2024 | 07:21 AM

image
 

நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலாநிதி ஏ.அந்தோனிராஜன், கலாநிதி எஸ்.அறிவழகன், பேராசிரியர் பி.ஐங்கரன், கலாநிதி எஸ்.ஜீவசுதன், கலாநிதி ஏ.கதிர்காமர், பேராசிரியர் ஆர்.கபிலன், கலாநிதி என்.ராமரூபன், கலாநிதி எம்.சர்வானந்தன், என்.சிவகரன், பேராசிரியர் ஆர்.ஸ்ரீகரன், கலாநிதி ஆர்.தர்ஷன், கலாநிதி எம்.திருவரங்கன், கலாநிதி என்.வரதன், பேராசிரியர் கே.விக்னரூபன் மற்றும் எஸ்.விமல் ஆகிய 15 புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்களின் பின்னர் நாடு சந்திக்கும் முதலாவது மிகமுக்கிய தேர்தல் இதுவாகும்.

 கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்நாட்டில் வாழ்க்கைச்செலவு கடந்த இரு வருடங்களில் பன்மடங்காக உயர்வடைந்திருக்கிறது. வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது. உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியக்குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வட்டிவீத அதிகரிப்பு சிறு முயற்சியாளர்களின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  கட்டடத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப்புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைகளை நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாழும் நாட்டின் வட, கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்கலாசாரம், வன்முறைகள், இந்திய இழுவைப்படகுப் பிரச்சினை போன்றனவும் வடக்கை வெகுவாகப் பாதித்திருக்கின்றன.

இவ்வாறு நிலைமை மோசமடைந்து செல்கையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலில் ஈடுபட்டு நாட்டின் வளங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட்டவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றால் மக்கள் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இத்தகு பின்னணியில் 2022 இல் மக்கள் எழுச்சியின் அடிப்படையாகக் காணப்பட்ட 'கட்டமைப்பு மாற்றம்' என்ற கோஷம் தற்போது குறிப்பாக தென்னிலங்கையில் ஓங்கி ஒலிப்பதனைக் காணமுடிகிறது. போராட்டத்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாகவேனும் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெற்கு மக்கள் ஆர்வமாக இருப்பதை உணரமுடிகிறது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் மிகக்கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் கையாளவேண்டியது அவசியமாகும். தென்னிலங்கையில் பல தசாப்தங்களின் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தல் பிரசாரத்தினை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்துவருவதாக அறிகிறோம்.

மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறைமையில் மாற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற கோஷங்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவில் திரள்வதையும் நாம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பார்க்கிறோம்.

 எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இம்முறைத்தேர்தலில் பயணிப்பது குறித்து ஆராயவேண்டும். அதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளியவர்களைத் தோற்கடிப்பதும் அவசியம்.

 இனப்பிரச்சினைக்கான தீர்வு, மதச்சார்பற்ற அரசினை உருவாக்குதல், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பிரதான வேட்பாளர்கள் முற்போக்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமை குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றோம். அதேவேளை பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பதை மனதிலிருத்தி இம்முறைத் தேர்தலில் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியம்.

சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக உள்நாட்டில் எம்மை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.

இவ்வாறான காரணங்களால் தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல் ஏதாவதொரு வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கியிருக்கும் இவ்வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத்தன்மை மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம். 

அதன்படி தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், பொருளாதார மீட்சியில் அக்கறை கொண்டதும், முற்போக்கான அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கான கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு வேட்பாளருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/193969

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:

இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல்

குழப்பி அடிக்க தானே தமிழ் பொது வேட்பாளர் இறங்கி உள்ளார்.அவருக்கு போடுகின்ற  ஒவ்வொரு  வாக்குகளும் வீணாணவை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.