Jump to content

இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

india.jpg?resize=750,375

இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் இன்று (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக நாட்டை  வந்தடைந்தனர்.

இந்திய டி20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ்வும் ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

அத்துடன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு சுப்மன் கில் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் .

இதேவேளை  குறித்த   டி20  தொடரில் இருந்து  கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயற்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393182

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

கால‌க் கொடுமை

இல‌ங்கை அணிக்கு புது க‌ப்ட‌ன் இந்தியா தொட‌ரில் அடிக்க‌டி க‌ப்ட‌னை மாற்றினால் இல‌ங்கை அணி வெற்றிக்கு மேல் வெற்றிய‌ குவிக்க‌ போகின‌மா

 

வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா ஒரு வ‌ருட‌மும் இல்லை இல‌ங்கை அணியின் க‌ப்ட‌னாய் இருந்து 

இப்ப‌ அச‌ல‌ங்கா என்ற‌ க‌ட்டை வீர‌ரை க‌ப்ட‌னாய் தெரிவு செய்து இருக்கின‌ம்😡

 

 

இந்திய‌ன் வீ அணியிட‌ம் தோல்விய‌ ச‌ந்திக்க‌ போகின‌ம்...................என‌க்கு தெரிந்து இல‌ங்கை அணிக்கு ப‌ல‌ வ‌ருட‌மாய் க‌ப்ட‌னாய் இருந்த‌து என்றால் அது அர்ச்சுனா ர‌ன்ன‌துங்கா..............................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/7/2024 at 21:35, வீரப் பையன்26 said:

கால‌க் கொடுமை

இல‌ங்கை அணிக்கு புது க‌ப்ட‌ன் இந்தியா தொட‌ரில் அடிக்க‌டி க‌ப்ட‌னை மாற்றினால் இல‌ங்கை அணி வெற்றிக்கு மேல் வெற்றிய‌ குவிக்க‌ போகின‌மா

வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா ஒரு வ‌ருட‌மும் இல்லை இல‌ங்கை அணியின் க‌ப்ட‌னாய் இருந்து 

இப்ப‌ அச‌ல‌ங்கா என்ற‌ க‌ட்டை வீர‌ரை க‌ப்ட‌னாய் தெரிவு செய்து இருக்கின‌ம்😡

இந்திய‌ன் வீ அணியிட‌ம் தோல்விய‌ ச‌ந்திக்க‌ போகின‌ம்...................என‌க்கு தெரிந்து இல‌ங்கை அணிக்கு ப‌ல‌ வ‌ருட‌மாய் க‌ப்ட‌னாய் இருந்த‌து என்றால் அது அர்ச்சுனா ர‌ன்ன‌துங்கா..............................

 

 

இந்திய அணி இலங்கை அணியினை பயிற்சி ஆட்டத்தில் துவைத்து எடுத்ததாக கூறுகிரார்கள், நல்ல வேளை இலங்கை அணி பந்து வீச்சாளர் நுவான் திசாரா காயமடைந்து வெளியேறியமை, வங்க தேச அணிக்கெதிராக 5 வெக்கெட்டுக்களை எடுத்த ஒரு போட்டியினூடாக பிரகாசித்தாலும் அவர் பத்திரன மலிங்க போல பந்தை வீசுபவர் ஆனால் அவருக்கு மற்றீடான தில்சான் மதுசங்க இடது கை பந்துவிச்சாளர் திறமையானவர் அவருக்கு பதிலாகவே உள்ளே வந்துள்ளார் ஆனால் அவர்  திறமையின் பிரகாரம் நுவான் துசாராவிற்கு பதிலாக வந்திருக்க வேண்டியவர் அவரது ஆரம்ப பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பொதுவாக வீசும் உள்ளே வரும் பந்து போல பந்தின் மேலாக விரல்களால் வீசும் நுணுக்கமான ஓப் கட்டர் வீரர்களை குழப்பும் திறன் வாய்ந்தது, ஆடுகளமும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகம், இலங்கை எதிர்பாரா வெற்றியினை பதிவு செய்யும் என கருதுகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசத்திற்கெதிராக நுவான் துசாராவின் 5 விக்கெட்டுகள்

டில்சான் மதுசங்கவின் பந்துவீச்சு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வசி ..........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

452891814_909406057866114_22197028549512

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை வெற்றி கொள்ள இராணுவத்தின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கெட் அணி : புதிய வியூகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு இராணுவ உயர் அதிகாரி, உளவள ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடருக்காக இந்த விசேட உளவள ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

விசேட ஆலோசனை

இராணுவத்தின் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி எம்.சீ.பி. விக்ரமசிங்கவினால் இந்த விசேட ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

தேசபற்று மற்றும் அர்ப்பணிப்பு என்பன தொடர்பல் விசேட ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் கோணத்திலிருந்து இந்த உளவள ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவை வெற்றி கொள்ள இராணுவத்தின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கெட் அணி : புதிய வியூகம் | Jaffna Commander Letcures To Sl Crickters

வெற்றி பெறும் மனநிலையை எவ்வாறு தொடர்ச்சியாக பேணுவது என்பது குறித்து ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கின் நிறைவில் கிரிக்கெட் வீரர்கள், இராணுவ அதிகாரியிடம் கேள்வி எழுப்பி தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு இராணுவ உயர் அதிகாரி, உளவள ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடருக்காக இந்த விசேட உளவள ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

 

அப்படி என்னதான் உளவள ஆலோசனை?

எதிரே விளையாடுவது தமிழர்கள் தான் என்று நினைத்து விளையாடினால் நரம்புகள் புடைத்து ஒரு வெறிவரும் அப்போது நன்றாக விளையாடலாம் என்று சொல்வார்களோ?

2 hours ago, ஏராளன் said:

இராணுவத்தினரின் கோணத்திலிருந்து இந்த உளவள ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, ஈழப்பிரியன் said:

 

அப்படி என்னதான் உளவள ஆலோசனை?

எதிரே விளையாடுவது தமிழர்கள் தான் என்று நினைத்து விளையாடினால் நரம்புகள் புடைத்து ஒரு வெறிவரும் அப்போது நன்றாக விளையாடலாம் என்று சொல்வார்களோ?

இந்த வழிகாட்டல்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஆட‌த் தெரியாத‌வ‌லுக்கு என்ன‌ தான் ந‌ட‌ன‌ம் சொல்லி கொடுத்தாலும் மேடேல‌  போய் சுத‌ப்புவா

அதே போல் தான் இல‌ங்கை கிரிக்கேட் அணியும்
இவ‌ர்க‌ளுக்கு இல‌ங்கை முன்னாள் ஜாம்பாவான் அர‌விந்த‌ டி சில்வா ஆலோச‌னை சொன்னாலும் வீர‌ர்க‌ள் உப்பு ச‌ப்பில்லாம‌ தான் விளையாடுவின‌ம்...................


இந்தியா 20 ஓவ‌ர் தொட‌ரையும்
ஒரு நாள் தொட‌ரையும் வெல்லும்
சில‌து குருட்ல‌க் வேலை செய்தால் ஏதாவ‌து ஒரு தொட‌ர‌ வெல்ல‌க் கூடும் ஈழ‌ப்புரிய‌ன் அண்ணா......................

Edited by வீரப் பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

அப்படி என்னதான் உளவள ஆலோசனை?

எதிரே விளையாடுவது தமிழர்கள் தான் என்று நினைத்து விளையாடினால் நரம்புகள் புடைத்து ஒரு வெறிவரும் அப்போது நன்றாக விளையாடலாம் என்று சொல்வார்களோ?

இந்த வழிகாட்டல்களை பகிரங்கப்படுத்த வேண்டும்.

இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ள் இந்தியாவில் இருந்து இருக்க‌னும் இவ‌ர்க‌ளுக்கு தேசிய‌ அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைச்சு இருக்காது

ஜ‌பிஎல்ல‌ இல‌ங்கை வீர‌ர்க‌ளை விட‌........அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை தான் அதிக‌ம் ஏல‌த்தில் எடுத்து விளையாட‌ விடுகின‌ம்...........................

குமார் ச‌ங்க‌க்காரா ஜெய‌வ‌ர்த்தானா இவ‌ர்க‌ளின் ஓய்வோடு இல‌ங்கை அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் விட்ட‌து

ந‌ட‌ந்து முடிந்த‌ உல‌க‌ கோப்பைக்கு முத‌ல் அங்கினேக்க‌ ந‌ல்லா விளையாடிச்சுதுக‌ள்................உல‌க‌ கோப்பையில் விளையாட்டை பார்த்திங்க‌ள் தானே.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

இந்தியாவை வெற்றி கொள்ள இராணுவத்தின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கெட் அணி : புதிய வியூகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு இராணுவ உயர் அதிகாரி, உளவள ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடருக்காக இந்த விசேட உளவள ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

விசேட ஆலோசனை

இராணுவத்தின் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி எம்.சீ.பி. விக்ரமசிங்கவினால் இந்த விசேட ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

தேசபற்று மற்றும் அர்ப்பணிப்பு என்பன தொடர்பல் விசேட ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன

சமா எங்கையிருந்து ஆரம்பிச்சிருக்கு என்று பாருங்கோ...யாழ்ப்பாண இராணுவத் தளபதி.. தேசப்பற்று ஊட்டல்... இத்தியாதி ..இத்தியாதி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
1st T20I (N), Pallekele, July 27, 2024, India tour of Sri Lanka
 
India FlagIndia                 213/7
Sri Lanka FlagSri Lanka      (3/20 ov, T:214) 26/0

Sri Lanka need 188 runs in 102 balls.

 

Current RR: 8.66
 • Required RR: 11.05
Win Probability:SL 15.63%  IND 84.37%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சொறிலங்கா வெளுக்குது.

ஆச்சு ..எல்லாமே போச்சு..யாழ்ப்பாண ஆமி கொமாண்டரின் விரிவுரை...ஆமி  பிசிக்கல் ரெயினிங்...ஊருப்பட்டது .. கடைசியில் இந்தியா 43 ஓட்டத்தால் வென்றுவிட்டது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:
LIVE
1st T20I (N), Pallekele, July 27, 2024, India tour of Sri Lanka
 
India FlagIndia                 213/7
Sri Lanka FlagSri Lanka      (3/20 ov, T:214) 26/0

Sri Lanka need 188 runs in 102 balls.

 

Current RR: 8.66
 • Required RR: 11.05
Win Probability:SL 15.63%  IND 84.37%

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

சொறிலங்கா வெளுக்குது.

 

21 minutes ago, alvayan said:

ஆச்சு ..எல்லாமே போச்சு..யாழ்ப்பாண ஆமி கொமாண்டரின் விரிவுரை...ஆமி  பிசிக்கல் ரெயினிங்...ஊருப்பட்டது .. கடைசியில் இந்தியா 43 ஓட்டத்தால் வென்றுவிட்டது..

வ‌டிவாய் வென்று இருக்க‌ வேண்டும் 

ஆனால் இல‌ங்கை அணிக்கு இப்ப‌டி தோப்ப‌து இது முத‌ல் முறை இல்லை......................

 

இல‌ங்கை க‌ப்ட‌ன் அச‌ல‌ங்கா 20ஓவ‌ர் விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்...................த‌ன‌து முத‌லாவ‌து க‌ப்ட‌ன் போட்டியில் 2ப‌ந்துக்கு 0 வெளி ஏறினார்

 

இல‌ங்கை அணிக்குள் எப்ப‌ அர‌சிய‌ல் புகுந்திச்சோ அப்ப‌வே அனுப‌வ‌மான‌ வீர‌ர்க‌ள் இப்ப‌ இருக்கும் வீர‌ர்க‌ளுக்கு ஆலோச‌னை சொல்லிக் கொடுக்கவே முன் வ‌ருவ‌தில்லை................................

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

ஆச்சு ..எல்லாமே போச்சு..யாழ்ப்பாண ஆமி கொமாண்டரின் விரிவுரை...ஆமி  பிசிக்கல் ரெயினிங்...ஊருப்பட்டது .. கடைசியில் இந்தியா 43 ஓட்டத்தால் வென்றுவிட்டது..

பிழையான ஆளிடம் ஆலோசனை எடுத்துவிட்டார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பிழையான ஆளிடம் ஆலோசனை எடுத்துவிட்டார்களோ?

இந்த ஆமிக்காரனுக்கு வெளிநாடுகள்உதவி செய்யவில்லைபோல கிடக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IND vs SL: அதிரடியாகத் தொடங்கிய இலங்கைக்கு டெத் ஓவரில் முடிவு கட்டிய ரியான் பராக்

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 28 ஜூலை 2024, 02:35 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

புதிய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர், புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வெற்றியுடன் இலங்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இளம் வீரர்களைக் கொண்டு 2026 டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட புதிய இந்திய அணிக்கு இந்த வெற்றி தார்மீகரீதியாக மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்கும்.

பல்லேகேலே நகரில் நேற்றிரவு நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இலங்கை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இது இலங்கை மண்ணில் இந்திய அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர். 214 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று நடக்கும் 2வது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி வென்றால் 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிடும்.

 

புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதம்(58), ஜெய்ஸ்வால்(40), கில்(34) ஆகியோர் அமைத்துக் கொடுத்த அடித்தளம், சூர்யகுமாருக்கு ஒத்துழைத்து ஆடிய ரிஷப் பந்தின்(49) ஆட்டம் ஆகியவைதான் இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை பெற்றுக் கொடுத்தது.

கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட நினைத்த ரியான் பராக்(7), ஹர்திக் பாண்டியா(9), ரிங்கு சிங்(1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 22 பந்துகளில் அரைசதம் அடித்து 26 பந்துகளில் 58 ரன்கள்(2 சிக்ஸர்கள், 8 பவுண்டரி) சேர்த்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

 

'இந்திய அணியின் இஞ்சின் மட்டுமே மாறியுள்ளது'

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம், ரோஹித், கோலி இல்லாத டி20 அணியின் முதல் வெற்றி குறித்துக் கேட்டபோது, “அதே ரயில்தான் பயணிக்கிறது, எந்த மாற்றமும் இல்லை. இஞ்சின் மட்டுமே மாறியுள்ளது, பெட்டிகள் மாறவில்லை” என்று தெரிவித்தார்.

புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீருடன் சேர்ந்து பணியாற்றுவது குறித்து சூர்யகுமார் கூறுகையில், “நான் கம்பீருடன் 10 ஆண்டுகளாகச் சேர்ந்து பணியாற்றுகிறேன். நான் கொல்கத்தா அணியில் இருந்தபோதே அவருடன் நல்ல தொடர்பில் இருந்தேன். அதன்பின் 2018இல் மும்பை அணிக்குச் சென்ற பிறகும் கிரிக்கெட் குறித்து இருவரும் ஏராளமாக ஆலோசித்துள்ளோம். நான் அவருடன் கடந்த 6 ஆண்டுகளாக இல்லை என்றாலும் அவரிடம் இருந்து அதிகமாகக் கற்றுள்ளேன்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த டி20 தொடர் குறித்து "இருவரும் பேசியுள்ளோமே தவிர பெரிதாக ஆலோசிக்கவில்லை. ஏனென்றால், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துள்ளோம், எங்கள் இருவரின் உடல்மொழியையும் இருவரும் அறிவோம். சில விஷயங்களை அவர் வார்த்தைகளில் சொல்லாவிட்டாலும் நான் புரிந்து கொண்டு செயல்படுவேன்" என்றார்.

தனக்கும், பயிற்சியாளருக்கும் இடையே சிறப்பான பிணைப்பு இருப்பதாகவும், இந்த பயணத்தை உற்சாகமாக அனுபவிப்பதாகவும் விவரித்தார் சூர்யகுமார். அதோடு, கேப்டன் பொறுப்பை ஏற்றாலும் தனது பேட்டிங்கில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறிய ஸ்கை, தனது வழக்கமான ஸ்டைலில் தொடர்ந்து விளையாடுவதாகவும் உறுதியளித்தார்.

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம்,GETTY IMAGES

மந்தமான பந்துவீச்சு

பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை 9 ஓவர்களாக பிரிக்க முடியாமல் சிரமப்பட்டனர். 2வது விக்கெட்டை வீழ்த்த முடியாமலும் திணறினர்.

முதல் விக்கெட்டை அர்ஷ்தீப் வீழ்த்திய நிலையில் அக்ஸர் படேல் 15வது ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சரிவுக்கு தொடக்கவுரை எழுதினார். அதன் பிறகு இலங்கை பேட்டர்கள் வரிசையாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியில் சிக்கினர்.

பவர்ப்ளே ஓவர்களுக்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்தினால்தான் எதிரணி மீது அழுத்தத்தைத் திணிக்க முடியும். ஆனால், நேற்று எந்த பந்துவீச்சாளர்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் பந்து வீசவில்லை என்பதுதான் நிதர்சனம். டெத் ஓவர்களில் ரியான் பராக் சிறப்பாகப் பந்துவீசி 1.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் சிறந்த பந்துவீச்சாகப் பார்க்கப்பட்டது.

மற்ற வகையில் முதல் இரு ஓவர்களிலும் ரன்களை வாரி வழங்கிய சிராஜ் 3வது ஓவரில்தான் கட்டுக்கோப்பாக வீசினார். அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களுக்கு குறையாமல் வாரி வழங்கினர்.

 

30 ரன்களில் 9 விக்கெட் இழப்பு

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அணியைப் பொருத்தவரை பதுன் நிசங்கா(79), குஷால் மென்டிஸ்(45), குஷால் பெரேரா(20), கமிந்து மென்டிஸ்(12) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் 84 ரன்கள்வரை விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி இலக்கைத் துரத்தியது. 140 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வலுவாக இருந்து ஆட்டத்தை நெருக்கமாகக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடைசி 30 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை மளமளவென இழந்து தோல்வி அடைந்தது மோசமான பேட்டிங்கின் வெளிப்பாடாக அமைந்தது. இலங்கை அணியின் நடுவரிசை முதல் கடைசி வரிசை வரை 6 பேட்டர்களும் டக்-அவுட்டிலும், ஒற்றை ரன்னிலும் ஆட்டமிழந்து அணியை தோல்விக் குழியில் தள்ளினர்.

அடித்தளம் அமைத்த ஜெய்ஸ்வால், கில்

ஜெய்ஸ்வால், கில் இருவருமே டி20 போட்டிக்கு புதிய தொடக்க வீரர்களாக இந்தப் போட்டியில் அறிமுகமாகினர். ஐபிஎல் போட்டியில் இருவரும் வெவ்வேறு அணிகளுக்காக ஆடியிருந்தாலும் இருவரும் சேர்ந்து ஆடுவது இது முதல்முறை.

இருப்பினும் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தைப் போன்று கில்லால் அதிரடியான தொடக்கத்தை அளிக்க முடியவில்லை. இன்னும் ஒருநாள் போட்டியைப் போன்றே நிதானமான ஆட்டத்தையே கில் கையில் எடுத்தார். இருப்பினும் ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைத்து அவ்வப்போது கட்ஷார்ட், ஃபுல் ஷாட்களில் பவுண்டரி அடித்து கில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

ஆட்டத்தின் முடிவில் பேசிய கில் “டி20 ஆட்டத்துக்கு ஏற்றார்போல் தன்னுடைய பேட்டிங்கை மாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாக” ஒப்புக்கொண்டார். இருவரும் சேர்ந்து அதிரடியாக ரன்களை சேர்த்ததால் 4 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை தொட்டது.

இருவரின் ரன்குவிப்பை கட்டுப்படுத்த இலங்கை அணி விரைவாகவே சுழற்பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், மகேஷ் தீக்சனா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசியும், ஸ்லாக் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்தும் ஜெய்ஸ்வால் வரவேற்பு கொடுத்தார். பவர்ப்ளே முடிவில் கில் 16 பந்துகளில் 34 ரன்களில் மதுசங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவர் முடிவில் இந்திய அணி 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தது.

சுப்மான் கில் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் ஜெய்ஸ்வாலும் விக்கெட்டை இழந்தார். ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 40 ரன்களுடன் ஆடி வந்த நிலையில் ஹசரங்காவின் கூக்ளி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

கேட்சுகளை தவறவிட்டதற்கு விலை

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்றாவது விக்கெட்டுக்கு கேப்டன் சூர்யகுமார், ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தனர்.

தான் சந்தித்த 2வது பந்திலேயே சூர்யகுமார் பிளிக் ஷாட்டில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். சூர்யகுமார் 15 ரன்னில் இருந்தபோது, மதுசங்கா வீசிய பந்தில் கிடைத்த கேட்சை ஃபைன் லெக்கில் நின்றிருந்த பெர்னான்டோ பிடிக்கத் தவறினார்.

அதேபோன்று ரிஷப் பந்த்தை ஆட்டமிழக்கச் செய்ய கிடைத்த கேட்சை பிடிக்க அசிதா தவறவிட்டார். இரு கேட்சுகளையும் தவறவிட்டதற்கான விலையை இலங்கை அணி கடைசியில் கொடுத்தது.

இலங்கை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் தனது 360 டிகிரி ஷாட்களில் 22 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் தனது 2வது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். 3வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தபோது ரிஷப் பந்த் 11 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். பதிரணா பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்றபோது கால்காப்பில் வாங்கி 58 ரன்களில் சூர்யகுமார் விக்கெட்டை இழந்தார்.

ரிஷப் பந்த் அதிரடி

ரிஷப் பந்த் நிதானமாக ஆடத் தொடங்கி 15 பந்துகளுக்குப் பின்புதான் முதல் பவுண்டரியை அடித்தார். 16வது ஓவரில் தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்டில் ரிஷப் பந்த் சிக்ஸர் விளாசினார்.

சூர்யகுமார் ஆட்டமிழந்தபின் இந்திய அணி பவுண்டரி அடிக்க 14 பந்துகள் எடுத்துக்கொண்ட நிலையில் ரிஷப் பந்த் அதிரடியைக் கையாண்டு அடுத்த 10 பந்துகளில் 29 ரன்களை சேர்த்தார். பதிராணா பந்துவீச்சில் பவுண்டரி அடிக்க முயன்று ரிஷப்பந்த் 49 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏமாற்றம் அளித்த ஹர்திக், ரிங்கு

அடுத்து களமிறங்கிய ஹர்திக் ஏமாற்றம் அளித்து பதிராணா பந்துவீச்சில் போல்டானார். ஸ்கை ஆட்டமிழந்த அதே பாணியில் ரியான் பராக் கால்காப்பில் வாங்கி பதிராணா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் ஒரு ரன்னில் பெர்னான்டோ பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இந்திய அணி 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் என வலுவாக இருந்தநிலையில் அடுத்த 8 ஓவர்களில் 78 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 250 ரன்களை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்திக், ரியான் பராக், ரிங்கு சிங் ஆகியோர் ஜொலிக்காத காரணத்தால் இந்திய அணியால் 250 ரன்களை எட்டமுடியாமல் போனது.

இலங்கை தரப்பில் பதிராணா 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற வகையில் அந்த அணியில் அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10 ரன்களுக்கு குறைவில்லாமல் விட்டுக் கொடுத்தனர்.

 

அதிரடியாகத் தொடங்கி, வீழ்ந்த இலங்கை

IND vs SL: இலங்கையை வீழ்த்திய 'புதிய இந்திய அணி'

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா, குஷால் மென்டில் அதிரடியாகத் தொடங்கினர். சிராஜ் வீசிய 4வது ஓவரில் நிசாங்கா 2 சிக்ஸர்களை விளாசி அதிர்ச்சியளித்தார். 31 பந்துகளில் இலங்கை அணி 50 ரன்களை தொட்டு இந்திய பந்துவீச்சுக்கு சவால் விட்டது.

இந்திய பந்துவீச்சாளர்களும் இருவரையும் பிரிக்க கடுமையாகப் போராடியும் பவர்ப்ளே ஓவர்கள் வரை பிரிக்க முடியவில்லை, விக்கெட் இழப்பின்றி இலங்கை 55 ரன்களை பவர்ப்ளேல் சேர்த்தது. நிசங்கா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அர்ஷ்தீப் வீசிய 9வது ஓவரில் மென்டிஸ் 45 ரன்களில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த குஷால் பெரேரா, நிசங்காவுடன் சேர்ந்து அணியை வலுவாக எடுத்துச் சென்றார். 10.2 ஓவர்களில் இலங்கை 100 ரன்களை எட்டி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தது. 140 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இலங்கை வலுவாக இருந்தது.

அக்ஸர் படேல் வீசிய 15வது ஓவரில்தான் திருப்புமுனை ஏற்பட்டது. ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. செட்டில் பேட்டர் நிசங்கா 79 ரன்களில் அஸ்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார், அதே ஓவரின் கடைசிப் பந்தில் குஷால் பெரேராவும்(20) விக்கெட்டை பறிகொடுத்தார்.

இலங்கையின் சரிவு 15வது ஓவரிலிருந்து தொடங்கியது. ரியான் பராக் வீசிய 16வது ஓவரில் குஷால்மென்டிஸ்(12) போல்டானார். கேப்டன் அசலங்கா டக்-அவுட்டில் பிஸ்னோய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஹசரங்காவை 2 ரன்னில் அர்ஷ்தீப் வெளியேற்றினார்.

முதல் இரு ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய சிராஜ், 3வது ஓவரில் பதிரானா விக்கெட்டை வீழ்த்தினார். அதிலும் ரன்அவுட் செய்கிறேன் என்று சிராஜ் பந்தை வீச, அது ஓவர் த்ரோவில் தேவையின்றி பவுண்டரி சென்றது. ரியான் பராக் வீசிய கடைசி ஓவரில் தீக்சனா(2), மதுசங்கா இருவரும் ஆட்டமிழக்க இலங்கையின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஒரு கட்டத்தில் வலுவான ஸ்கோருடன் வெற்றியை நோக்கி நகர்ந்த இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்த பிறகு பெரிய சரிவில் சிக்கியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷான‌க்கா வ‌ண்டு ஹ‌ச‌ர‌ங்கா 

 இர‌ண்டு பேருக்கும் மைதான‌த்தில் நிப்ப‌து பிடிக்காது போல் இருக்கு..................சுழ‌ல் ப‌ந்துக்கு தொட‌ர்ந்து அவுட் ஆகின‌ம்.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேப்டனாக முதல் தொடரையே வென்ற சூர்யகுமார்; சிறப்பாகத் தொடங்கி, மோசமாக முடித்த இலங்கை

இந்தியா - இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் பல்லேகலே நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை ஆடவர் அணியை தங்களின் சுழற்பந்துவீச்சால் வீழ்த்தி, சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி முதல் டி20 தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல், ரியான் பராக் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து 12 ஓவர்கள் வீசி 86 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையின் சரிவுக்கு காரணமாக அமைந்தனர்.

2-ஆவது டி20 ஆட்டத்திலும் ஆட்டத்தின் பிற்பகுதியில் இலங்கை பேட்டர்கள் மோசமான விக்கெட் சரிவைச் சந்தித்து தங்களுக்குதாங்களே தோல்வியை தேடிக்கொண்டனர்.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியவுடனே மழை குறுக்கிட்டதால் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

 

இதையடுத்து, இந்திய அணிக்கு டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு, 8 ஓவர்களில் 78 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்து டக்வொர்த் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டி20 தொடரை கைப்பற்றியது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. இந்திய டி20 அணிக்கு நிரந்தர புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலும்,புதிய தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தலைமையிலும் இந்திய அணி வென்ற முதல் டி20 தொடர் இதுவாகும்.

புதிய சாதனை படைத்த இந்திய அணி

இந்த வெற்றி மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிராக புதிய சாதனையைப் படைத்தது. அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணி புதிய சாதனையைப் படைத்தது. இலங்கைக்கு எதிராக மட்டும் 21 வெற்றிகளை இந்திய அணி பெற்று வரலாறு படைத்துள்ளது.

இலங்கை வீரர்களைத் திணறவைத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள்

4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 12 டாட்பந்துகளையும் வீசிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்ஸர் படேல் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ரியான் பராக் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து விக்கெட்டின்றி முடித்தார்.

இந்த 3 சுழற்பந்துவீச்சாளர்களும்தான் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை பேட்டர்களுக்கு எதிராக சிம்மசொப்னமாகத் திகழ்ந்தனர். 3 பந்துவீச்சாளர்களும் 12 ஓவர்களை வீசி 86 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.அதிலும் கடைசி 5 டெத் ஓவர்களில் இலங்கைக்கு எதிராக 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி சரிவை ஏற்படுத்தினர்.

ரியான் பராக் முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் இந்த ஆட்டத்திலும் பந்துவீசினார். விக்கெட்டின்றி பந்துவீசினாலும் அவரின் பந்துவீச்சு இலங்கை பேட்டர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முழுநேர சுழற்பந்துவீச்சாளர்களின் வீசும் பந்து திரும்பு அளவைவிட, ரியான் பராக் வீசிய பந்து நன்றாக டர்ன் ஆகியது. அக்ஸர் படேல் வீசிய பந்து 3 டிகிரியும், பிஸ்னோய் வீசிய பந்து ஒரு டிகிரியும் டர்ன் ஆகிய நிலையில் ரியான் பராக் வீசிய பந்துகள் 3.7 டிகிரி டர்ன் ஆகி திகைக்க வைத்தது. விக்கெட்டின்றி ரியான் பராக் பந்துவீசினாலும் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாகச் செய்தார்.

முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் இருவரின் பந்துவீச்சும் கடந்த 2 போட்டிகளாக சிறப்பாக எடுபடவில்லை. அதிலும் சிராஜ் பந்துவீச்சு பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அர்ஷ்தீப் 3 ஓவர்களை வீசி 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சிராஜ் விக்கெட்டின்றி 3 ஓவர்களை வீசினார்.

இந்தியா - இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாங்கள் முன்பே தீர்மானித்தோம் - சூர்யகுமார்

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், “எந்தவிதமான பிராண்ட் கிரிக்கெட் விளையாடப் போகிறோம் என்பதை இந்த தொடர் தொடங்கும் முன்பே நாங்கள் பேசினோம். குறைந்த இலக்காக இருந்தபோதிலும்கூட, நாங்கள் என்ன பிராண்ட் கிரிக்கெட்டை ஆடப் போகிறோம் என்பதை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தினோம். காலநிலை மோசமாக இருந்ததால், 150 ரன்களுக்குள் இலக்கு இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். அதற்கு ஏற்றபடி மழையும் எங்களுக்கு உதவியது. எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர், அற்புதமாக பந்துவீசினர். அடுத்த போட்டியில் புதிய ப்ளேயிங் லெவன் குறித்தும், எவ்வாறு ஆட்டத்தை எடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசிப்போம். எங்களுக்கு சிறிது அதிர்ஷ்டமும் இருக்கிறது என்பதை மழை உணர்த்திவிட்டது” எனத் தெரிவித்தார்.

கடைசி 6 ஓவர்களில் நடுங்கும் இலங்கை

இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் அருமையான தொடக்கத்தை அளித்தாலும், கடைசி 6 ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டுள்ளது. கடந்த 2 ஆட்டங்களிலும் கடைசி 6 ஓவர்களில் 68 ரன்கள் சேர்த்து 16 விக்கெட்டுகளை இலங்கை இழந்து 6 ரன்ரேட்டில் விளையாடியுள்ளது. சனிக்கிழமை நடந்த முதல் டி20ஆட்டத்தில் 30 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது, நேற்றைய ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இலங்கை பறிகொடுத்தது.

ஆனால், இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் முதல் 14 ஓவர்களில் 263 ரன்களை சேர்த்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 9.39 ரன்ரேட்டில் விளையாடியுள்ளது. கடைசி 6 ஓவர்களில்தான் இலங்கையின் பேட்டிங்கில் திடீர் சரிவு ஏற்பட்டு, தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா - இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் அருமையான தொடக்கத்தை அளித்தாலும், கடைசி 6 ஓவர்களில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டுள்ளது.

வாய்ப்பை தவறவிட்ட சாம்ஸன்

மழை காரணமாக 45 நிமிடங்களுக்குப்பின் ஆட்டம் தொடங்கியது, டக்வொர்த் விதிப்படி இலக்கு திருத்தப்பட்டு 8 ஓவர்களில் 78 ரன்கள் என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சுப்மான் கில்லுக்கு கழுத்து வலி காரணமாக அவருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்று சஞ்சு சாம்ஸன் நேற்று களமிறங்கினார். இக்கட்டான சூழலில் பேட் செய்த சாம்ஸன், தீக்சனா வீசிய முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

சூர்யகுமார், ஜெய்ஸ்வால் அதிரடி

ஆனால் ஹசரங்கா வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் சூர்யகுமார், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 16 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு இருந்த நெருக்கடியைக் குறைத்தனர். தீக்சனா வீசிய 4வது ஓவரில் சூர்யகுமார் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து 15 ரன்களை சேர்த்து ரன்ரேட் நெருக்கடியைக் குறைத்தார். இந்த இரு ஓவர்கள்தான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக மாறி, ரன்ரேட்டைக் குறைக்க உதவியது.

பதிராணா வீசிய 4வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த சூர்யகுமார், அடுத்த பந்தில் லாங்ஆனில் கேட்ச் கொடுத்து 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், சிறப்பான கேமியோவை ஆடினார்.

ஹசரங்கா வீசிய 6வது ஓவரில் ஹர்திக் ஒரு பவுண்டரி சிக்ஸரும், ஜெய்ஸ்வால் ஒரு சிக்ஸரும் விளாசினர். ஜெய்ஸ்வால் தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை மாற்றாமல் பேட் செய்து ஸ்வீப் ஷாட்டிலும், ரிவர்ஸ் ஸ்வீப்பிலும் பவுண்டரிகளை விளாசி 30 ரன்களில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பதிராணா வீசிய 7–ஆவது ஓவரில் ஹர்திக் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஹர்திக் 22 ரன்களிலும், ரிஷப் பந்த் ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியா - இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நல்ல தொடக்கம், மோசமான முடிவு - இலங்கையின் தோல்விக்கு என்ன காரணம் இதுதான்

இலங்கை அணி கடந்த 2 போட்டிகளிலும் நல்ல தொடக்கத்தை அளித்தது. முதல் போட்டியைப் போன்றே இந்த ஆட்டத்திலும் நிசங்கா, மென்டிஸ் அதிரடியாகத் தொடங்கினர். ஆனால், அர்ஷ்தீப் வீசிய 4வது ஓவரில் ஸ்லோவர் பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு மென்டிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு வந்த பெரேரா, நிசங்காவுடன் சேர்ந்து ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். பவர்ப்ளேயில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் என வலுவாக இருந்தது.

நிசங்கா முதல் போட்டியைப் போல் இந்த ஆட்டத்திலும் சீராக ரன்களைச் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளித்தார். ஆனால், பிஷ்னோய் வீசிய 10-வது ஓவரில் கால்காப்பில் வாங்கி நிசங்கா 32 ரன்னில் வெளியேறினார். 2-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர். குஷால் பெரேரா 31 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அடுத்து வந்த கமிந்து மென்டிஸ் அதிரடியாக ஆடினார், இதனால். 130 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று வலுவாக இருந்து. ஆனால், மென்டிஸ் 24 ரன்னில் ஹர்திக் பாண்டியா வீசிய 16-வது ஓவரில் ஆட்டமிழந்தார். 53 ரன்களுடன் ஆடி வந்த பெரேராவும் அதே ஓவரில் விக்கெட்டை இழக்க இலங்கை தடுமாறியது.

சரிவு தொடங்கியது

இதன்பின் இலங்கை அணியின் சரிவு தொடங்கியது.நடுவரிசை பேட்டர்களும், கீழ்வரிசை பேட்டர்களும் முதல் ஆட்டத்தைப் போன்று சொதப்பியதால், கடைசி 5 ஓவர்களில் மட்டும் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இலங்கை மளமளவென இழந்தது. பிஸ்னோய் வீசிய 17-வது ஓவரில் சனகா, ஹசரங்கா இருவருமே டக்அவுட்டில் க்ளீன் போல்டாகினர். அக்ஸர் படேல் வீசிய கடைசி ஓவரில் தீக்சனா, மென்டிஸ் இருவரும் விக்கெட்டை இழந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் இலங்கை வெல்லும் போல இருக்கிறது.

IND
137/9
SL FlagSL
(8.6/20 ov, T:138) 58/1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்ல வேண்டிய இலங்கை அணி

கடைசி 30 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து 8 பேர் அவுட்.

இப்போது சுப்பர் ஓவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர் ஓவரில் இலங்கை

6 பந்துகளில 2 விக்கட் இழந்து 3 ஓட்டங்கள்.

இந்தியா 1 பந்தில் 4 ஓட்டங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, ஈழப்பிரியன் said:

வெல்ல வேண்டிய இலங்கை அணி

கடைசி 30 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து 8 பேர் அவுட்.

இப்போது சுப்பர் ஓவர்.

என்ன‌ ஒரு அருவ‌ருக்க‌ த‌க்க‌ விளையாட்டு

 

ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளை ஒழுங்காய் விளையாட்டு வ‌ரிசையில் விளையாட‌ விடாம‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை ந‌டுவில் விளையாட‌ விட்டு

 

ரென்ச‌ன் இல்லாம‌ வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டு

 

சூப்ப‌ர் ஓவ‌ரில் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுத்த‌ர் போட்ட‌ ஓவ‌ரில் ஒரு ர‌ன்ஸ் தான் இவையால் அடிக்க‌ முடிஞ்ச‌து ஒரு வ‌யிட் வோல் மொத்த‌ம் இர‌ண்டு ர‌ன்ஸ் 

 

 

வாழ்த்துக்க‌ள் வ‌ஸ்சின்ட‌ர் சுத்த‌ர்🙏🥰..........................

Edited by வீரப் பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்குவும்...சூரியகுமாரும் ரன்னை கட்டுபடுத்திவிட்டனர்...அகமது 11 பந்து வீசியிருக்குமா...நல்ல கப்டன்  சூரியகுமார்..சிங்களா நோனாக்கள்   அட்டகாசம் மச்சைவிட நல்லாயிருந்துது..

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.