Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

கனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது கருப்பு மையினால் சில எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அதிகரித்து வரும் பிரிவினைவாத போக்கை தடுக்கும் வகையில். இந்தச் செயலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அரசு கோரியுள்ளது. இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

“எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்த நாசவேலையை விஎச்பி கனடா கடுமையாகக் கண்டிக்கிறது. நாட்டில் அமைதியை விரும்பும் இந்து சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலான இந்த பிரிவினைவாத செயலுக்கு எதிராக தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம்” என விஸ்வ ஹிந்து பரிஷத் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் எட்மன்டன் சுவாமிநாராயண் கோயிலை சேதப்படுத்தியது அவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப்பை தனிநாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு காலிஸ்தான் என பெயரிட வேண்டும் என்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரி வருகின்றனர். கனடா அரசு இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்துக்கு எதிராகவும் அங்கு காலிஸ்தான் ஆதரவு தரப்பினர் இப்படி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. [எ] 

கனடாவில் இந்து கோயில் சேதம்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம். (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கையில் எத்தனையோ இந்துக் கோவில்கள் சேதப் படுத்தப் பட்டு, இல்லாது ஒழிக்கப் பட்ட போது இந்த விஸ்வ இந்து பருஷத் கண்டனம் தெரிவிக்கவில்லையே. ஏன்…???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, தமிழ் சிறி said:

கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கையில் எத்தனையோ இந்துக் கோவில்கள் சேதப் படுத்தப் பட்டு, இல்லாது ஒழிக்கப் பட்ட போது இந்த விஸ்வ இந்து பருஷத் கண்டனம் தெரிவிக்கவில்லையே. ஏன்…???

இது கனடா விஸ்வ ஹிந்து பருஷத் அதுதான்,......😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kapithan said:

இது கனடா விஸ்வ ஹிந்து பருஷத் அதுதான்,......😜

இலங்கை சிவசேனை  மாதிரியா அது.  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கை சிவசேனை  மாதிரியா அது.  😂

பவுத்த சேனை என்று பெயர் மாத்தி விடுவது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 minute ago, பெருமாள் said:

பவுத்த சேனை என்று பெயர் மாத்தி விடுவது நல்லது .

அவர்கள்.... கொஞ்ச நாள் அமைதியாக இருக்கின்றார்கள்.
எஜமானிடம் இருந்து சம்பள பாக்கி வரவில்லையோ.... 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, தமிழ் சிறி said:

கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கையில் எத்தனையோ இந்துக் கோவில்கள் சேதப் படுத்தப் பட்டு, இல்லாது ஒழிக்கப் பட்ட போது இந்த விஸ்வ இந்து பருஷத் கண்டனம் தெரிவிக்கவில்லையே. ஏன்…???

டாலருக்கும் ரூபாவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டியல் கனம் அப்படி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, பிழம்பு said:

“எட்மன்டன் நகரில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோயிலில் இந்த செயல் நடந்துள்ளது. இதில் முரணான வாசகங்கள் சிலவும் கோயிலின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இந்த நாசவேலையை விஎச்பி கனடா கடுமையாகக் கண்டிக்கிறது.

தாங்களே தங்களின் கோயிலின் மீது எழுதி துளைத்து  போட்டு அதை அரசியல் ஆக காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நந்தன் said:

டாலருக்கும் ரூபாவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டியல் கனம் அப்படி

பணத்தை வைத்தே... கொள்கைகளை மாற்றி முடிவெடுத்து 
தங்களின் சுயரூபத்தை காட்டுவது பெரும் கொடுமை. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள் மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே. பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது. பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு ஆனாலும்  தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது  என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும். இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும்  என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே. இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும்  இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.
    • கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2 பார்சிறி பார்சிறி தான். ஒரு நாளைக்கு சங்கு  இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை  இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர்  மற்ற நாள் வாகன பெர்மிட் விற்பனை  கார்த்திகையில தியாக புராணம்  போற போக்கில கமலஹாசன மிஞ்சிடுவார். தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த போலித் தமிழ் தேசியவாதி நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி.. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : ஒரு நாடு இரு தேசம்.. சுமந்திரன் : ஒன்றுபட்ட இலங்கையில் மாண்புமிக்க, சமத்துவமான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய உடனிருப்பு.. சிறிதரன் : போதையின் பாதையில் தமிழ்த்தேசியம்..  
    • மாவீரர்கள் சிந்திய குருதி எம்மண்ணிலிருந்து இன்னும் காயவில்லை. அவர்களின் எழுச்சி குரலும், தாகமும் இன்னும் அடங்கவில்லை. முள்ளிவாய்க்கால் அவலக் குரலும் தினம் தினம் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.நாம் ஏற்றிய தீபங்கள் எம் மனசாட்சியின் தீபங்களாக இருக்கட்டும். இந்த உண்மையை அனவரும் உணர்ந்தால் வெற்றி நிச்சயம்..
    • கருத்துக்கள உறவுகள் Posted 59 minutes ago வீர வணக்கம் அம்மா.  🙏 
    • வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!...இப்பதான் அசைலம் அடித்தனீங்களோ🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.