Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"  / பகுதி 01
 
 
[இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !]
 
 
காந்தி, ஒரு வெளிநாட்டு அதிகாரத்துக்கு எதிராக சுதந்திரம் வேண்டி போரிட்டார்
நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிராகப் போரிட்டார்
மார்ட்டின் லூதர் கிங் சமூக உரிமைக்காக போரிட்டார்
இவர்களில் இருந்தும்
 
பெண் விடுதலைக்கு எதிராக போரிட்ட பாரதியார்
சாதி, மதத்திற்கு எதிராக போரிட்ட பெரியார்
தமிழர்களின் சம அரசியல் உரிமைக்காக போரிட்ட தந்தை செல்வா
இவர்களில் இருந்தும்,
 
மற்றும் இதனுடன் தொர்புடைய மற்றும் பலரிடம் இருந்தும், அதேவேளை வரலாற்று செய்திகளிலும் இருந்தும்
 
உதாரணமாக சமயத்தை எடுத்துக் கொண்டால்,
 
மேல் பழைய கற்காலப் பகுதியில் [Upper Palaeolithic Revolution] தோன்றிய முதலாவது சமய அமைப்பு ஒரு வாய்வழியாக ஒவ்வொரு இனக் குழு உறுப்பினர்களிடமும் அவர்களின் புதிய தலைமுறைக்கும் பரப்பபட்டன. அதன் பின் பல காலங்கள் கடந்து, எழுத்து முறை கண்டு பிடிக்கப்ப ட்டதும் அவை முதலில் எழுத்துருவில் பதியப்பட்டன. இதனால் அவை கால, சூழ்நிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் அடையக் கூடிய நெகிழ்வுத் தன்மையை இழந்தன. பொதுவாக வாய்வழி மரபுகள் காலப்போக்கில்- அவர்களின் அறிவு அனுபவத்திற்கு ஏற்ப- விட்டுக்கொடுப்புகளுடன் விரிவுபடுத்தக் கூடியவை, ஆனால் எழுத்துருவில் பதியப்பட்டவை அப்படியல்ல. இது ஒரு துரதிருஷ்டவசமே.
 
ஏனென்றால், வெவேறு இடங்களில் அந்த அந்த காலக், சூழ்நிலைக்கு ஏற்ப, அவர் அவர்களின் ஒரு ஊகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட வெவேறு சமயங்கள் தனித்துவமாக விட்டுக் கொடுப்பு செய்ய முடியாத நிலையில் அவை வெவ் வேறாகவே இருக்கவேன்டியதாயிற்று. அவைகளின் போதனைகள், சிந்தனைகள் மாறுபட்ட வையாக இருந்தன. அது மட்டும் அல்ல, தமது மத அறிவுறுத்தல்கள், சடங்குகள், நம்பிக்கைகள் தமது ஆண்டவனே தமக்கு நேரடியாக தந்தவை என திடமாக நம்பினர். ஆகவே வெவ்வேறு மதங்களுக்கிடையான சமரசம் அல்லது இணக்கம் அடைவது கடினமாகவும் அதிகமாக முடியாத ஒன்றாகவும் இருந்தது.
 
உலகின் சமாதானத்திற்கு எதிரான போர், முதல் முதலில் அதிகமாக தமது சமயங்களை, நம்பிக்கைகளை பரப்புவதற்கான போராகவே ஆரம்பித்ததாக உள்ளது. அது இன்றுவரை பலவழிகளில் தொடர்கிறது. இன்று அது போராக இல்லாவிட்டாலும், பரப்புரை, சிலவேளை பொய்களும் கலந்து மற்றும் உதவி போன்றவற்றால் தொடர்கிறது. ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொண்டால் ... 
 
போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி,பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை. - பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராமவாசிகளை, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது.
 
இப்படித்தான் தமிழர் மதம் மாற்றப்பட்டார்கள். விரும்பியோ அல்லது ஒருவரின் தனிப்பட்ட சம்மதத்துடனோ அல்லது இரு சமயத்தையும் ஒப்பிட்டு பார்த்தோ இது நடைபெறவில்லை. முழுக்க முழுக்க பணத்தாலும் பதவியாலும் அதிகாரத்தாலும் இது நடந்தது. இது மேலும் மேலும் பிளவையே வளர்த்தது. சமாதான வாழ்வு சுக்கு நூறாகியது சமயத்தின் அல்லது ஆண்டவனின் பெயரால்!!
 
இன்னும் ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் 20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும்.
 
எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது.
 
இவர்கள் இனமாற்றம் செய்வதற்கு தமிழர் என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல மத மாற்றத்தால் இழந்ததும், மற்றும் தமிழர் பெருவாரியாக உள்ள நிலத்தை விட்டு அகன்றதும் ஒரு முக்கிய இலகுவான காரணமாக அமைகிறது ? இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!
 
பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese]
 
ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன்.
 
அதேவேளை எம் குழந்தை / இளைஞர் பாட திட்டம் கட்டாயம் இவைகளை கடந்ததாக உதாரணங்கள் மூலம் கற்பிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள். அது தான் இன்னும் இலங்கையில் உள்நாட்டு சமாதானம் ஏற்படாததற்கு ஒரே ஒரு காரணமாகும்.
 
எனவே, நாம் இன்று அறிவியலில் மிக மிக முன்னேறி இருந்தாலும் சமாதானம் ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.
 
எனவே பொருள்முதல்வாத வளர்ச்சி [materialistic development] மனிதனுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தாலும், சமாதானம் அதனால் வந்துவிடும் என்று சொல்லமுடியாது. அதற்க்கு கலாச்சார ஞானம் / அறிவு உள்ளத்தில் முழுமையாக வரவேண்டும். இங்கு தான் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்கள் துணை நிற்கின்றன என்று நம்புகிறேன்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
தொடரும் பகுதி : 02
 
296744628_10221399046668396_3680566970017818669_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=3nyZPX6PTfwQ7kNvgHDzqHF&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYA_HnnSbznShIYpvDUJjH72NSKxLUXNZ3_lvXRAFW3cqg&oe=66A6AB74  296647525_10221399045828375_6478114649038365261_n.jpg?stp=dst-jpg_p600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=TCplp6X7LqMQ7kNvgEH0FRl&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYA5iQGZKBG-yBQZ4UaNBDNpzfXlEV7bHce8uaOwPk679g&oe=66A6A49A
 
No photo description available.
  • Like 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, kandiah Thillaivinayagalingam said:

ஆகவே சமயத்தை, சாதியை, நிறத்தை, இனத்தை, பொருளாதாரம் / வசதி அல்லது ஆண் பெண் வேற்றுமைகள் கடந்தால் தான் சமாதானம் கிடைக்க வழிவரும் என்று நம்புகிறேன்.

👍

10 hours ago, kandiah Thillaivinayagalingam said:

நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக் கொண்டால், இன்னும் புராணக் கதையான, உண்மைக்கு புறம்பான மகாவம்சத்தின் அடிப்படையிலேயே இலங்கை வரலாற்றை போதிக்கிறார்கள்.

அய்யா, இப்பொது தமிழர்களும் இதே போன்று  எங்களை ஆண்ட  தமிழ் மன்னன் இராவணன் அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சீரும் சிறப்பும் செல்வங்களும் வழிந்தோடியது என்று புராண அடிப்படையில் புழுக தொடங்கி உள்ளார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை" / பகுதி 02 
 
 
[இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !]
 
 
நாம் எம் பண்டைய அனுபவங்கள் மற்றும் இலக்கியங்ககளை கவனத்தில் எடுத்தால், உதாரணமாக
 
'அன்பே சிவம்' அதாவது அன்புதான் கடவுள் என்று பறைசாற்றுகிறது
'எம்மதமும் சம்மதம்', அதாவது எல்லா சமயமும் எமக்கு ஒன்றே என்கிறது
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' , அதாவது அனைத்து மக்களும் நமது உறவினர்களே
'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு'
'உண்பது நாழி, உடுப்பவை இரண்டே'
 
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்
 
உதாரணம்: செல்வத்தை நியாயமான அளவில் பிரி, ஆயுத விற்பனையை கட்டுப்படுத்து,
உண்மையை சரியாக, ஆராந்து புரியாமல், நாங்கள் நம்பும் உண்மையே உண்மை என அடம்பிடிப்பது ... இப்படி பல.
 
உதாரணமாக ஒரு நாள் அரசன் ஒருவன் மூன்று அறிஞர்களை, தன் அரசவைக்கு கூப்பிட்டு, பாண் [ரொட்டி] என்றால் என்ன என்று கேட்டான். அதற்கு முதலாவது அறிஞர் ரொட்டி என்பது ஜீவனாம்சம் கொடுக்கும் ஒரு உணவு என்றான்,
 
இரண்டாவது அறிஞன் ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்து, நெருப்பின் வெப்பத்தில் சுட்ட ஒன்று என்றான்,
 
மூன்றாவது அறிஞனோ ஆணடவனின் கொடை என்றான் .
 
இப்படி ஒரு சாதாரண உணவுக்கே கருத்து வேறுபாடு இருப்பதை இங்கு காண்கிறோம்.
 
இங்கு தான் எம் கல்வி / அறிவு / நம்பிக்கைகள் சரியாக ஒழுங்கு படுத்தப் படவேண்டும். இல்லாவிட்டால் முரண்பாடுகள் அதிகரித்து சமாதானத்தை குழப்பலாம்? 
 
இன்றைய சூழலை உற்று நோக்கின் பலர்
 
'மதக் கருத்தை உணராமல், மதம் தோற்றிவித்தவனை வணங்க ஆரம்பிக்கிறார்கள் / ஆரம்பித்துள்ளார்கள் '
 
உதாரணம் புத்த சமயம்,
 
தமிழர் வரலாற்று நிலங்களில் அத்துமீறி புத்தரை ஒரு பட்டாளத்துடன் குடியேற்றிக் கொண்டு, சமாதானத்துக்கு எதிராக புத்தரை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்?
 
புதிது புதிதாக மதம் / மத பிரிவு வந்து கொண்டே இருக்கிறது சமாதானம் வேண்டுமாயின் திட்டம் வகுக்கலாம்.
 
ஆனால் அதற்க்கு , அதை ஒரு சமயமாக / நம்பிக்கையாக பெயரிடும் பொழுதே , அது சமாதானத்துக்கு ஆப்பு வைக்கிறது?
 
பிறகு அதை வளர்க்க, பரப்ப, முன்பே இருந்த சமயங்களுக்குள் நுழைந்து மக்களை பிரித்து எடுக்கிறார்கள். அங்கு தான் பிரச்சனை எழுகிறது?
 
உதாரணமாக, அண்மையில் , 1844 ஆண்டில் தொடங்கிய பஹாய் நம்பிக்கையை / Baha’i Faith எடுத்தால், அதன் முக்கிய கோட்பாடுகள்
கடவுள் ஒருவரே. மனிதர்கள் அவரை எப்பெயரிட்டு அழைத்தபோதிலும், அவர் ஒருவரே
 
சமயங்கள் ஒன்றே. மனிதகுலத்தைப் படைத்த கடவுள், அவர்களுக்குக் காலம் காலமாக தமது அவதராங்களின் மூலமாக வழிகாட்டி வந்துள்ளார். மனிதர்கள் வாழும் காலம் மற்றும் சூழ்நிலையைப் பொருத்து இந்த அவதராங்கள் போதனைகளை வழங்கி வந்துள்ளனர். சமயங்கள் அனைத்துமே ஒரே புத்தகத்தின் தொடர்ந்துவரும் அத்தியாயங்களே.
 
மனிதகுலம் ஒன்றே மனித குலத்தைப் படைத்தவர் ஒரே கடவுள். மனிதர்கள் அவரிடமிருந்தே தோன்றியுள்ளனர். மனித ஆன்மா இறைவனிடமிருந்தே தோன்றியுள்ளது மற்றும் எல்லாருக்குள்ளும் ஒரே விதமாகவே படைக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள், ஒரே குடும்பத்தினர் என்கிறது
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் சமயம் / தமிழரின் சைவ தத்துவத்தை மற்றும் இலக்கியத்தை எடுத்தால்
 
'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற பொன்னான வாக்கியத்தை காண்கிறோம்
 
'வாழு வாழவிடு' என்ற தோரணையில், மணிமேகலையில் ஒரு காட்சி அமைகிறது. அதில் தமிழரின் அன்றைய மனப்பான்மையை, சில முக்கிய வரிகள் எமக்கு இன்றும் எடுத்து காட்டுகிறது.
 
“ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்
பற்ற மாக்கள் தம்முட னாயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்”
(மணிமேகலை,1. விழாவறை காதை - 60-63)
 
யாமே வெல்வேம் எனச் சூள் மொழிந்து பல்வேறு சமயங்களை சாரந்தவர்கள் சொற் போரில் வென்று நிலை நாட்ட ஆங்காங்குள்ள பட்டிமண்டபங்களிலே ஏறும் மரபறிந்து ஏறக் கடவீர் எனவும்; விவாதம் செய்யும்பொழுது மற்றவருடைய சமயக்கருத்தை ஏற்க முடியவில்லை யென்றால் பகைமையும் பூசலும் கொள்ளாமல் விலகிச் செல்லுங்கள் எனவும் கூறுகிறது.
 
அதாவது எம் மதமும் சம்மதம் என்ற பெருந் தன்மையுடன் தமிழர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற தோரணையில், அறிவு பூர்வமாக பட்டி மன்றத்தில் விவாதித்து அதன் பெறுபேறுகளை கொண்டு ஏற்றுக்கொண்டதுடன், எல்லோரையும், எல்லா மத பிரிவினரையும் சமஉரிமை கொடுத்து அனைத்து வாழ்ந்தனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம். சகிப்புத்தன்மையின் இலட்சியத்தை இங்கு காண்கிறோம்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
தொடரும் பகுதி : 03
 
296915874_10221402676839148_6987035134782789368_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=uv3beh7lp2kQ7kNvgHux7Qo&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAQKQIrw7AzAvHHV_S41F1kEeaFbIR3El7hTlUbwTPnTw&oe=66A810B4 296859529_10221402676439138_838196288936524953_n.jpg?stp=dst-jpg_p552x414&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=85Wz3P249xcQ7kNvgG0fX3q&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCyPXyGjqX4r6_TwTzpMpNuyYd0RbuXsHGNgsWCif5Hvw&oe=66A816F5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
மதக் கருத்தை உணராமல், மதம் தோற்றிவித்தவனை வணங்க ஆரம்பிக்கிறார்கள் / ஆரம்பித்துள்ளார்கள் '
 
உதாரணம் புத்த சமயம்,
 
தமிழர் வரலாற்று நிலங்களில் அத்துமீறி புத்தரை ஒரு பட்டாளத்துடன் குடியேற்றிக் கொண்டு, சமாதானத்துக்கு எதிராக புத்தரை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்?
 

மிகவும் நல்லதொரு கருத்து.

நன்றி தில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"  / பகுதி 03
 
 
[இது என் சிறிய சிந்தனை. இதில் பிழையும் இருக்கலாம் சரியும் இருக்கலாம். இதை சமாதான விரும்பிகளிடம், அவர்களின் கருத்துக்காக சமர்ப்பிக்கிறேன். உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் !]
 
நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள், உயிர், அண்டம், இவைகளின் இயல்பு என்ன? உலகத்துடனும், கடவுளுடனும் எனது தொடர்பு என்ன?ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம், எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன? எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க, வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது.
 
மக்களின் சுதந்திரம், விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும், கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை. சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடைய வர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்த வர்களாகவும் இருந்தார்கள்.
 
"அன்பே சிவம்", "தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்றே! இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது.
 
அதாவது அன்பு தான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன. "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று எம்மை அது வழி காட்டுகின்றது.
ஆகவே சமாதான வழிகள் அன்றே ஆரம்பித்துவிட்டன, ஆனால் இன்று வரை [பஹாய் நம்பிக்கை] அவை திருப்ப திருப்ப எதிரொலிக்கின்றன ஒழிய இன்னும் நிறைவேறியதாக காணவில்லை?
 
எனவே, முதலில் மனித மனம் மாறவேண்டும் / பக்குவமடைய வேண்டும். அதை கலந்து, அலசி ஆராய்ந்து யாரையும் தாழ்த்தாமல், பக்குவமாக உரையாடுதன் மூலம் அறிவை / சிந்தனையை பரவலாக்கவேண்டும் என்று நம்புகிறேன்!
 
இப்ப இவை தொடர்பாக எனக்கு ஞாபகம் வரும் ஆறு பாடல்கள் கிழே தருகிறேன். அவை பொருத்தமான பாடல்களாக எனக்கு தோன்றுகிறது.
 
 
"When there is righteousness in the heart, there is beauty in the character;
When there is beauty in character, there is harmony in the home;
When there is harmony in the home there is order in the nation;
When there is order in the nation, there is peace in the world."
[A.P.J. Abdul Kalam]
 
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
[கணியன் பூங்குன்றனார்]
 
"'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்'என்பது, புணர்ந்தாரை பிரியாமை;
'பண்பு'எனப்படுவது, பாடு ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்;
'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை;
'நிறை'எனப்படுவது, மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்."
[கலித்தொகை 133]
 
"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் குமே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே , தப்புந பலவே"
[மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்]
 
Imagine there is no heaven
no hell below us
[Above us, only sky]
all men are even
and God is with us
[Imagine there's no countries
It isn't hard to do]
Imagine there are no boundaries
One is a human
not a countrymen
And all people are living life in peace.
[You may say I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will be as one]
[Imagine no possessions
I wonder if you can
No need for greed or hunger
A brotherhood of man]
[Imagine all the people
Sharing all the world]
I am a poet and i write
but i hope someday
everybody will come together as one
and the world will change forever
[John Lennon]
 
"I many times thought Peace had come
When Peace was far away —
As Wrecked Men — deem they sight the Land —
At Centre of the Sea —
And struggle slacker — but to prove
As hopelessly as I —
How many the fictitious Shores —
Before the Harbor be" —
[Emily Dickinson ]
 
அதே நேரத்தில் சமயம், காலம் கடந்த திருக்குறளில் இருந்து ஒரு சில உதாரணத்தை சான்றாக தருகிறேன்.
 
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
 
முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.
 
குறள் 851:.
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
 
மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.
 
குறள் 853:.
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
 
மனமாறுபாடு என்னும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.
 
குறள் 856:.
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
 
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
தொடரும் பகுதி : 04
297011046_10221406568496437_6442965777364614202_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jfpbI1qRv64Q7kNvgFszi_u&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYD7P9IgBs25VK1IO6FUXEfCYegj9W5td3gIj56dXJmySA&oe=66A90E78  297099203_10221406569136453_1875037301929985049_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=oErzu-3uhH4Q7kNvgEqSUzZ&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDvasZIN0ifJIe68wZOdL-EzKY7EOv6FBQ_MR3lD8KaWw&oe=66A93687  
 
297125638_10221406569616465_54587898061368292_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ycl5VfgDkXAQ7kNvgEDYEkz&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAlcXQsCmqkVUkilZ6euXfUajjG8iY6eHQA4pFn9-K4vg&oe=66A91148
 
 
  • நியானி changed the title to "உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/7/2024 at 22:33, விளங்க நினைப்பவன் said:

அய்யா, இப்பொது தமிழர்களும் இதே போன்று  எங்களை ஆண்ட  தமிழ் மன்னன் இராவணன் அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சீரும் சிறப்பும் செல்வங்களும் வழிந்தோடியது என்று புராண அடிப்படையில் புழுக தொடங்கி உள்ளார்கள்.


இதை நீங்கள் இங்கு சொல்வது நகைசுவைக்காவே.

அனால், சோழன் பூர்வ பட்டயம் - உலோக ஏடுகளில் 1 - 3 ம் நூற்றாண்டு அளவில் (carbon dating வழியாக கண்டறிந்தது) எழுதப்பட்ட ஏடுகளில், இராவணன் இராச்சியம் பற்றி சொல்லப்பட்டு உள்ளது.

(சோழன் பூர்வ பட்டயம்  நூல் வடிவில் உள்ளது, google இல் தேடி, தரவிறக்கம் செய்யலாம். உலோக ஏடுகள் தமிழ்நாடு தொல்பொருள், வரலாறு காட்சியகத்தில் உள்ளது).

அதில் உள்ளத்தின் படி, இப்போதைய திருச்சிராப்பள்ளி, இராவண இராச்சியத்தின் வடக்கு எல்லை என்றும், இராவணனுக்கு சகோதரன்  உறவு முறைகொண்ட, திருச்சிரன் என்ற சிற்றரசன் அந்த வடக்கு 
எல்லையை ஆண்டபடியால் தான் , காலப்போக்கில் மருவி, திருச்சிராப்பள்ளி என்று வந்தது என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

இதை (சோழன் பூர்வ பட்டயம் ) இங்கு பல இடத்தில சொல்லி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கற்காலம் தொடக்கம் இன்று வரைக்கும் மனிதன் ஏதோ ஒரு வகையில் போர் செய்துகொண்டுதான் இருக்கின்றான். இன்றைய செய்திகளின் படி உலகசமாதானம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியவில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/7/2024 at 23:33, விளங்க நினைப்பவன் said:

அய்யா, இப்பொது தமிழர்களும் இதே போன்று  எங்களை ஆண்ட  தமிழ் மன்னன் இராவணன் அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சீரும் சிறப்பும் செல்வங்களும் வழிந்தோடியது என்று புராண அடிப்படையில் புழுக தொடங்கி உள்ளார்கள்.

இதில் எந்த   மாற்று கருத்து கிடையாது. சிங்களவர் புழுகுவதை போன்றே தமிழர்களும் இப்போது புராணத்தை வைத்து புழுகிறார்கள்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.